Saturday, February 27, 2016

மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம்
எழுத்தில்  புதுமை!!                                              எண்ணத்தில் புதுமை!!


                                    சந்தியா பதிப்பகம்

                                                            சென்னை

               வெளியிட்டிருக்கும் புத்தம் புதிய புத்தகம்!


                         ந. பிச்சமூர்த்தியிலிருந்து

                                            எஸ்.ரா. வரை


               மறக்கமுடியாத தமிழ்  எழுத்துலகின்

     ஒரு நூற்றாண்டு நினைவுகளின் வெளிப்பாடு...


ந. பிச்சமூர்த்தி **  கு.ப.ராஜகோபாலன்  ** பி.எஸ்.ராமையா  **  புதுமைப்பித்தன்   **  மெளனி  **  சி.சு.செல்லப்பா  **  விந்தன்  ** லா.ச.ரா  ** ஆர்வி  **    :கரிச்சான் குஞ்சு  **  எம்.வி. வெங்கட்ராம்  **  தி. ஜானகிராமன் ** மீ.ப. சோமு  **  நகுலன்  **  அகிலன்  **  கு. அழகிரிசாமி  **  எஸ்.ஏ.பி  **  ஜெகசிற்பியன்  **  ராஜம் கிருஷ்ணன் **  ஆர்.சூடாமணி  **  அசோகமித்திரன் **  சுந்தர ராமசாமி  **  கிருஷ்ணன் நம்பி  **  நா. பார்த்தசாரதி  **  ஜெயகாந்தன் **    சுஜாதா  **          சா. கந்தசாமி  **  ஆதவன் **  விட்டல் ராவ்  **  சிவசங்கரி  **  அம்பை  **  பாலகுமாரன்  **  வண்ணதாசன்  **
நாஞ்சில் நாடன்  **  வண்ணநிலவன்  **  கலாப்ரியா  **  எஸ். ராமகிருஷ்ணன்


      ==  ஆகியோர்  படைப்புகள் பற்றிய அலசல்!
     
           எழுத்தாளர் பற்றி,  அவர்தம் எழுத்தின் மாறுபட்ட சிறப்புகள் பற்றி,,
   
           விமரிசனமாக நீளும் ஆக்கபூர்வமான தெளிவான எழுத்தாக்கம்!!

                                                    நூலாக்கம்:  ஜீவி            
பக்கங்கள்:  264                              விலை:  ரூ. 225/=


சந்தியா பதிப்பகத்தின் இணைய தளம்:

http://www.sandhyapublications.com

  

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மிகவும் இனிமையான செய்தியாகச் சொல்லியுள்ளீர்கள்.

தங்களின் தனிப்பார்வையில் பல்வேறு பிரபல எழுத்தாளர்களைப்பற்றி தங்களால் எழுதப்பட்டுள்ள இந்த நூலினைப் படித்து அறிந்துகொள்ள பதிவுலக எழுத்தாள வாசகர்களாகிய நாங்கள் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியளிக்கும் செய்தியினை தாங்கி வந்துள்ள இந்தப்பதிவுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

பிரியமுள்ள கோபு

ரூபன் said...

வணக்கம்

நூல் பற்றி தகவலுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ramani S said...

என்னைப் போன்ற வளரும் நிலையில் இருப்பவர்கள்
நிச்சயம் வாங்கிப் படித்து
பாதுகாக்கவேண்டிய புத்தகமாகத்தான் இருக்கும்

பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்களுடன்...

ஸ்ரீராம். said...

பாராட்டுகளும், வாழ்த்துகளும் ஸார்.

புத்தகம் வாங்கி விட்டேன்.

ஜீவி said...

@ வை.கோ.

எல்லா எழுத்தாளர்களும் வாசகராய் இருந்தவர்கள் தான். ஆனால் பல எழுத்தாளர்கள் தொடர்ந்து வாசகர்களாய் இருக்க முயற்சிப்பதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

வாசக உள்ளம் இருந்தால் தான் நல்ல எழுத்தாளராய் சோபிக்க முடியும் என்பதும் இன்னொரு உண்மை.

மனம் நிறைந்த தாங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் நன்றி, சார்!

ஜீவி said...

@ ரூபன்

வணக்கம் ரூபன். புத்தகத்தைப் படித்து கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்.

வருகைக்கு நன்றி, ரூபன்.

ஜீவி said...

@ S. Ramani

சபை அடக்கத்திற்காகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் விமரிசன எழுத்துச் சிறப்பையும் அறிவேன். கற்கண்டு கவிதைகளையும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

புதுக்கவிதை பிதாமகர் பிச்சமூர்த்தியிலிருந்து வாசிப்பு உலகின் முடிசூடா மன்னர் எஸ்.ரா. வரை முப்பத்து ஏழே எழுத்தாளர்கள் ஆயினும், 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்கிற ஜெயகொண்டாரின் வாக்கை மெய்ப்பிப்பவர்களாய் இந்த நூலில் இவர்கள் திகழ்கிறார்கள். தமிழ் எழுத்துலக கங்கையை செம்புக்குள் அடக்க முடியாது தான்! இருப்பினும் ஒரு குறுக்கு வெட்டுத் தோன்றத்தில் தமிழ் எழுத்துலகை தரிசிக்க முயன்றிருக்கிறேன். நீங்கள் உங்கள் தளத்தில் இந்த நூலுக்கு விமரிசனமும் செய்யதால் பிரமாதமாக இருக்கும்.

தங்கள் அன்பிற்கு நன்றி, ரமணி சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அட! வாங்கி விட்டீர்களா?..

எது வரை வாசித்திருக்கிறீர்கள்?..

'எங்கள் பிலாக்'க்கில் வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளப் போவது எப்போது?..

பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் நன்றி, ஸ்ரீராம்!

G.M Balasubramaniam said...

நானும் இவர்களில் பலரையும் வாசித்திருக்கிறேன் ஆனால் என்ன வித்தியாசம் என்றால்இன்ன எழுத்து இன்னாருடையது என்று சொல்லத் தெரியாது. இதில் மு/ வ எழுத்து பற்றி இல்லை என்று நினைக்கிறேன் மு.வ வின் புதினங்களில் கரித்துண்டு, நெஞ்சில் ஓர் முள் பாவை விளக்கு என்பன போன்றவை படித்த நினைவு.

ஜீவி said...

@ G.M Balasubramanaiam

மு.வ. இந்த செட்டில் சேர மாட்டார். நல்ல வேளை நினைவு படுத்தினீர்கள். மு.வ.வின் மண்குடிசை பற்றி எனது வேறொரு பதிவான 'அழகிய தமிழ் மொழி இது'வில் குறிப்பிட வேண்டும். நீங்கள் அவரின் மண்குடிசை படித்திருக்கிறீர்களா?

'பாவை விளக்கு' அகிலன் எழுதியது. இந்தப் புத்தகத்தில் அகிலன் இருக்கிறார்.

அசோகமித்திரனைப் படித்திருக்கிறீர்களோ?.. அவரது 'எலி' என்ற ஒரு சிறுகதையை எடுத்துக் கொண்டு அசோகமித்திரனின் எழுத்தை இந்த நூலில் பல்வேறு கோணங்களில் பார்த்திருக்கிறேன்.

ரசனையுடன் வாசிப்பது என்பது அலாதியானது. அதை நம்மில் பழக்கப்படுத்துவதற்கும் அதற்கான பயிற்சி பெறுவதற்கும் இந்த நூல் துணையாக இருக்கும் என்றும் சொல்லலாம்.

வருகைக்கு நன்றி, ஐயா!

KABEER ANBAN said...

வாழ்த்துகள் ஜீவி ஐயா. பல ஆண்டுகளின் உழைப்பு எங்களை மகிழ்வித்தது அல்லாமல் இணை யத்திற்கு வெளியே உள்ளவர்களையும் சென்றடைவது மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக நூலகங்களில் இது நல்ல எழுத்தாளர்களைத் தேடிப் படிக்கவும் தமிழ் சிறுகதை வரலாறு ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும்.
தாெடரட்டும் தங்கள் சிறப்பான பணி.

V Mawley said...

எங்கள் திருசியில் தற்பொழுது BOOK FAIR நடந்து கொண்டிருக்கிறது ..
இன்று மாதங்கி தங்களு டைய --- ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை புத்தகத்தை வாங்கி வந்து எனக்குப் பரிசளிதிருக்கிறள் என்ற மகிழ்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ..

மாலி

ஜீவி said...

@ Kabeer Anban

வாருங்கள், கபீரன்பன்! இந்த நூல் உருவான வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ப்பான யோசிப்புகளுக்கு நன்றி. நீங்கள் சொல்கிற மாதிரி கையடக்கமான ஒரே ஒரு புத்தகம் தமிழின் சிறந்த 37 எழுத்தாளர்களைக் கண்டடைந்து அவர்கள் படைப்புகளை வாசிக்க வழிகாட்டுவதாக அமைந்திருக்கிறது. தங்கள் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டதற்கு மிக்க நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ மாலி

மிக்க சந்தோஷம், மாலிஜி! உங்கள் மூலமாக மாதங்கி அவர்களுக்கும் நன்றி. இந்த நூல் உருவாகத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் இந்த நூலின் உள்ளடக்கம் பற்றி மாதங்கி அவர்களும் அறிவார்கள். அவர்களும் இதை வாசிக்க வேண்டும். இரண்டு பேருமே நூல் பற்றிய கருத்துக்களைச் சொல்ல வேண்டும். நானே சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதை மாதங்கி அவர்கள் செயல்படுத்தி விட்டார்கள். இத்தனை நேரம் நீங்கள் படிக்கத் தொடங்கியிருப்பீர்கள் என்றூ நினைக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் பகுதியிலேயே நூல் பற்றிய உங்கள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்கள் என் அடுத்த நூலை செழுமைபடுத்த எனக்கு உதவும்.

அன்புடன்,
ஜீவி

Related Posts with Thumbnails