Friday, March 3, 2017

சாபம்

சென்ற பகுதி:  http://jeeveesblog.blogspot.in/           

பகுதி--2

ம்ப்யூட்டர் திரையில்---

ஒரு பஸ் எரிந்து கொண்டிருந்தது.  சுற்றிலும்  'காச் மூச்' என்ற ஆக்ரோஷமிக்க ஜனத்திரள்.  மூலையில் ஒருவன் தன் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டுவது தெரிகிறது..  சட்டென்று திரையில்  அங்கேயும் இங்கேயும் ஓடி பதற்றத்துடன் ஓடும் அவனின் தலைக்கு நேரே ஒரு சிவப்பு அம்புக்குறி பளீரிடுகிறது.

டேவிட் அந்த அதிசயக் கணினியின் வயிற்றுப் பகுதியிலிருந்த ஒரு பட்டனைத் தட்டியவுடன்  ஒரு பிளாஸ்டிக் அட்டை வெளிப்படுகிறது. அதில் பொறித்திருந்த எழுத்துக்களை வேகமாக மேய்ந்து விட்டுச் சொல்கிறான்:  "மிஸ்டர் ஸ்மித்!   திரையில் ஒற்றையாய் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை சிவப்பு அம்புக்குறி சுட்டிக் காட்டுகிறது, பாருங்கள்,  அவன் தான் நீங்கள்!  அதாவது இந்த ஜென்ம ஸ்மித்தின் போன ஜென்மத்திற்கு முந்திய ஜென்ம உருவம்!  பை த பை அவன்-- ஸாரி, இந்த ஜென்ம உங்களின் அந்த ஜென்ம ஆசாமி--  எதற்காக இப்படி கையை உயர்த்தி உயர்த்திக் காட்டுகிறார், என்ன  சொல்கிறார் என்று கேட்கலாமா?" என்று டேவிட் சொல்லி முடிப்பதற்குள் மொத்தக் கூட்டமும் ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்தது.

அவர்களை அமைதிபடுத்தி விட்டு அந்த அதிசயக் கணினியின்  கீழ்ப்பகுதியிலிருந்த 'ஸ்பீக்' பட்டனை  டேவிட் அழுத்தியதும்  உரத்த ஓசையாய் குரல் வந்தது. "வேண்டாண்டா.. வேண்டாண்டா.
அரசாங்கத்தின் மேல் உங்களுக்கு ஆத்திரம்ன்னா பஸ்ஸை ஏண்டா கொளுத்திறீங்க..  நம்ம சொத்துடா, அது!..  அது தெரியலையா, ஒங்களுக்கு?  இந்த  அக்கிரமத்தைக் கேட்பாரில்லையா?..நிறுத்துங்கடா.. நிறுத்துங்க.."

இப்பொழுது திரையில் பஸ்ஸைக் கொளுத்தும் கூட்டத்திலிருந்து ஒருவன் ஓடிவந்து ஓலமிடும் அந்த ஒற்றை மனிதனை நையப்  புடைத்து ஓரம் தள்ளினான்.  மொத்த பஸ்ஸூம் சொக்கப்பனை.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்மித்தின் முஷ்டி இறுகுகிறது.  "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்..  பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்.." என்று ஆவேசத்துடன்  அவர் கத்துவதைப் பார்த்து  திகைத்தபடி 'ஸ்பீக்' பட்டனை 'ஆஃப்' செய்தான்  டேவிட்.

அந்தக் காலக்கணினித் திரையை இத்தனை நேரம் பார்த்துக்  கொண்டிருந்த கூட்டம், "என்ன, என்ன?""  என்று ஆவலுடன் நெரிபட்டது.

டேவிட் உடனே கணினியின்   வயிற்றுப் பகுதி விளக்க பட்டனைத் தட்டி, பிளாஸ்டிக் அட்டையை உருவி அதில் பொறித்திருந்த விளக்கக் குறிப்பை வாசித்து விட்டுச் சொன்னான்: "ஒன்றுமில்லை!./      நம்து சென்ற தலைமுறைக்கு முந்தைய தலைமுறை ஜனங்கள் அவர்கள்.  எதற்காகவோ தங்களை ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அவர்களுக்குக் கோபம்.  அந்த அவர்களது ஆத்திரத்தை வெளிக்காட்ட,  தங்களது கோபத்தை அரசாங்கத்திற்குப்  புரிய வைக்க  பொதுச் சொத்தான பஸ்ஸைக் கொளுத்துகிறார்கள்..."                                                  

"பஸ் என்றால்?"  என்று உட்கார்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஒரு குரல் விளக்கம்  கேட்டது.

"விளக்கக் குறிப்பிலிருந்து அது பயணம் செய்வதற்கான ஒரு வாகனம் என்று தெரிந்தது.   ரயில், பஸ், விமானம் போன்றவற்றை அந்தக் கால மனிதர்கள் தங்கள் பயணத்திற்காக உபயோகப்படுத்தினார்கள் என்று நானும் அறிந்திருக்கிறேன்.." என்றான் டேவிட்.

"தங்கள் பயண வாகனத்தைக் கொளுத்தினார்களா?..   அட... புத்திசாலிகளே!'  என்று இரண்டாம் வரிசை ஆரம்பத்தில் அமர்ந்திருந்த விஸ்வநாதன் கேலியாக உரக்கச் சொன்னான்.

"ஆமாம், புத்திசாலிகள் தான்.. தங்களது வரிப்பணத்தில் உருவாக்கிய தங்களின் சொத்துக்களையே அழிக்கிற புத்திசாலிகள்!" என்று சொல்லி விட்டு  டேவிட் தொடர்ந்தான்...  "இதைத் தான் அந்த  ஒற்றை ஆசாமி-- ஸ்மித் சாரின் போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்ம உயிர்-- தடுக்கிறது.  ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் உயிர்களின் தொடர்பும்  எனக்கு ஆச்சரிய மூட்டுகிறது.  கொஞ்ச  நேரத்திற்கு முன்பு  பஸ் எரியும் அந்தக் கணினிக் காட்சியைப் பார்த்து  விட்டு  அந்த ஜென்ம-- இந்த  ஜென்ம   உயிர்கள்  தொடர்பு கொண்டதே போல ஸ்மித் சாரும்  நிறுத்துங்கள்   , நிறுத்துங்கள், பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்!..' என்று பதறித்  துடித்ததைப்  பார்த்து நான் அசந்து போய் விட்டேன்..  என்ன அதிசய அனுபவம் அது நமக்கு1'  என்று டேவிட் வியந்து போனான்.

"இதில் இன்னொரு  ஆச்சரியமும்  இருக்கிறது" என்றார் புவியியல்  அறிஞ்ர் சர்மா. "அந்த பஸ் என்ற வார்த்தையையும்   இந்த ஜென்ம மிஸ்டர் ஸ்மித் உபயோகப்படூத்தினார், பாருங்கள்.   நமக்கெல்லாம் -- மிஸ்டர் ஸ்மித் உட்பட- அறிமுகமில்லாத  பஸ் என்ற வார்த்தையையே  பதற்றத்தில் துடிக்கும் பொழுதும் மிஸ்டர் ஸ்மித் உபயோகப்படுத்தியிருப்பது இன்னொரு ஆச்சரியம்.  இதிலிருந்தும் நீங்கள் சொன்ன அந்த ஜென்ம உயிர்களீன் தொடர்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.   அதாவது இந்த ஜென்ம அவர் உணர்வுகளில் முந்தைய ஜென்ம  உணர்வு  அவர் பதறித் துடித்த அந்த ஷண நேரத்தில் புகுந்து கொண்டு அவரை ஆட்டுவித்ததாக நான் கருதுகிறேன்.." என்று சர்மா அங்கு குழ்மியிருந்த அத்தனை பேரும் திகைத்துப் போயினர்.

"எதற்காக  அப்படி ஒரு நிகழ்வு நடந்ததென்று எனக்குப் புரியவில்லை.  அரசாங்கத்தை எதிர்த்து எதற்கு  ஜனங்கள் இப்படியான செயல்களில் ஈடுபட வேண்டும்?..  அப்போ,  அரசாங்கம் வேறே,  ஜனங்கள் வேறே என்ற நிலையா அந்த ஜென்ம காலகட்டத்தில் இருந்தது?..  இந்த அதிசயக் கணினி குறிப்புகளிலிருந்து அது பற்றி ஏதாவது  தெரிந்து கொள்ள முடியுமா?" என்று ஆவலுடன் கேட்டார்  நாலாவது வரிசை ரங்கசாமி.

"ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்..." என்று இழுத்த டேவிட்  'சரித்திர நிகழ்வுகள்' என்ற குமிழைத் திருப்பி,  அந்த ஜென்மக் கால பிரதேங்களின் சரித்திர நிகழ்வுகளைத் தேடிப் பார்த்து சொன்னான்.. " இந்த குறிப்புகளீன் படி பார்த்தால்  குறிப்பிட்ட இந்த நென்ம காலத்தில் மக்களால்    தேர்ந்தெடுக்கப் பட்ட  அரசாங்கங்கள் தாம் மக்களை ஆளும் அதிகாரத்தைப் பெற்றன    என்று தெரிகிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கங்கள்,  மக்களின்  நலன் களைப் பேணிக்காக்காத பொழுது,   மக்களுக்கான  அரசாங்கமாக செயல் படாத போது இந்த மாதிரியான நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தன என்ற முடிவுக்கு வரலாம்.. " என்றான்.

"எனக்கு இன்னொரு  சந்தேகம்.." என்றான்  இளங்குமரன்.  "தொடர் ஜென்மங்கள் கொள்ளும் உயிர்த்  தொடர்பு பற்றிச் சொன்னீர்கள்.   அப்படியான உயிர்த் தொடர்புகள் எப்படி சாத்தியமாகும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது..  உயிர்கள் பிறந்து இறந்ததும்  அவற்றின் உடல்களான சடலங்கள்  எரிக்கப் பட்டோ அல்லது புதைக்கப்பட்டோ அவற்றின் பெளதீகக் கூறுகள்  மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகின்றன.      அப்படியிருக்க மண்ணோடு மண்ணாக மக்கிக் கலந்து  போன எந்த ஜென்மத்து உயிரோ   இன்னொரு ஜென்மத்து உயிருடன்  ஜென்மாந்திரத் தொடர்பு  கொண்டிருக்கிறது என்றால்...  எனக்கு இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.. ஆனால் உணர்கிறேன்..  நான் உணர்வதை நீங்களும் உணர முடியும் என்று நம்புகிறேன்.. இல்லையா,  டேவிட்?"  என்றான்.

"எஸ்.. நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. அந்த விஷயத்தில்  நாம் எரிப்பதும் புதைப்பதும்  உடல்களாகிய  சடலங்களைத் தானே தவிர உயிரை அல்ல..  அல்லவா?..  அதனால் உடல்கள் தாம் மண்ணோடு மண்ணாக மக்கி கலந்து போகிறன்றனவே தவிர உயிர் அல்ல என்று  தெரிகிறது.." என்றான் டேவிட்.

"அப்போ  உயிர் வேறு.. உடல் வேறா?"  என்று சடக்கென்று கேள்வியைப்  போட்டார்  கருணாகரன்.

"சந்தேகமில்லாமல்...  இந்த அதிசய காலக்கணின்க  ஆராயாச்சிக்கே அந்த  கோட்பாடு தான் அடிப்படை."  என்றான் டேவிட்.

"அப்படிப் பார்த்தால் உடல்கள் தாம் இறக்கின்றன.  உயிர்கள் இல்லை என்று தெரிகிறது..  ஆம் ஐ கரெக்ட்?.."  என்றார்  ஸ்மித்.

"அப்படித் தான் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்  அடிப்படையில் தெரிகிறது" என்றான்  டேவிட்.  "உயிர் என்ற ஒன்றை உடலை இயக்கும் சக்தியாக நாம் கொள்ளலாம்.   இயற்கையின் கொடையாகிய வெளிசக்தி     உடலின் உள்ளே போய்  உள்சக்தியாக மாறுவதை உயிராகக் கொள்ளலாம். சுலபமாகச் சொல்ல வேண்டுமானால்,  உடலை இயக்கும் ஆற்றல் கொண்ட உள்சக்தியை உயிர் என்கிறோம்.  அவ்வளவு தான்." என்றான் டேவிட்.

"அப்போ  இந்த புவியில் பிறந்தது எதுவும் இறக்கும் பொழுது அதன் உயிர் என்னவாகிறது?"  என்ற் கேள்வியைப் போட்டார்  ராமசாமி.

"வெளியிலிருந்து  பெறப்பட்டது  உள்சக்தியாய் செயல்படுவதற்குரிய ஆற்றலை இழந்ததும்  எங்கிருந்து அந்த சக்தி பெறப்பட்டதோ அந்த பரந்த வெளி சக்தியுடனேயே கலந்து விடுவதாகக் கொள்ளலாம்.   அப்படிப் பேராற்றலான வெளிச்சக்தியுடன் கலப்பதால் ஆற்றல் மிக்க புத்தம் புது சக்தியாக  உருமாற்றம் கொள்கின்றன.  இருந்தாலும் இந்த நேரத்து நான் கொண்டிருக்கும் இந்த கருத்து அறிவியலின் புது வாசல்களைத் திறக்கும் பொழுது மாற்றம் கொள்ளலாம்.  அதைப் பற்றிய  ஆராய்ச்சிகள் தாம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று உங்களுக்கே தெரியும்" என்றான் டேவிட்.

"என்னால் என் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  அடுத்து நான் மேடைக்கு வரலாமா?' என்ற குரல் பரபரப்புடன் ஒரு மூலையிலிருந்து வெளிப்பட்டது.

டேவிட் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த பொழுது  கையை உயர்த்தியபடி புவியியல் பேராசிரியர் துரைசாமி எழுந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

(வளரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.

22 comments:

ஸ்ரீராம். said...

தலைமை விஞ்ஞானி நசிகேத் எப்போது வருவார்?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நசிகேத்-- சுஜாதா பாணி நல்ல பெயராகத் தெரிகிறது.. நசிகேதனை நினைவு படுத்தவும் செய்கிறது. இந்தக் கதைக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் எப்படியாவது இந்தப் பெயரை சம்பந்தப்படுத்தி விடலாம் என்று எண்ண வைக்கும் பெயர். இந்த பெயர் கொண்டவர் இந்தக் கதையில் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். எதற்கும் க்டைசி பகுதி வரை காத்திருங்கள்.

சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்ல வேண்டிய விஷயத்தைக் கதையாக்குபவர்கள் ஒருவகை. இவர்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை ஆழ உழுது கொண்டு போவார்கள். இப்படியான எழுத்தாளர்களுக்கு கதை அம்சங்களை விட வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம் முக்கியமாகிப் போகும். (உ-ம்) ஜெயகாந்தன்.

வாசிப்புக்கு இடையே வாசகர்களின் புன்முறுவலுக்காக கதைக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் பொருத்தமான ஏதாவது ஒன்றை எடுத்தாண்டு அடுத்த கட்டதிற்கு நகர்ந்து விடும் எழுத்தாளர்கள் இன்னொரு வகை. இவர்களுக்கு சொல்ல வந்த விஷயத்தை விட வாசிக்கும் வாசகரை எப்படியாவது கவர வேண்டும் என்பது தான் முக்கியமாகிப் போகும். அதனால் எந்த விஷயத்தையும் ஆழ உழாது மேம்போக்காக எல்லா விஷயங்களையும் தொட்டுச் செல்வதாக இவர்கள் எழுத்து அமையும். (உ-ம்) சுஜாதா.

கோமதி அரசு said...

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்மித்தின் முஷ்டி இறுகுகிறது. "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்.. பஸ்ஸைக் கொளுத்தாதீர்கள்.." என்று ஆவேசத்துடன் அவர் கத்துவதைப் பார்த்து திகைத்தபடி 'ஸ்பீக்' பட்டனை 'ஆஃப்' செய்தான் டேவிட்.//

முன் ஜென்மத்தில் அந்த பஸ்ஸில் வந்து இருப்பாரோ ஸ்மித்?

தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...

அறிவியல் கதையை வெகு சுவரஸ்யத்துடன் எடுத்து செல்லும்போது இடையே நம் மக்கள் போராட்டதின் போது பொதுச்சொத்தை அழிக்கும் செயலை ‘ஆமாம், புத்திசாலிகள் தான்.. தங்களது வரிப்பணத்தில் உருவாக்கிய தங்களின் சொத்துக்களையே அழிக்கிற புத்திசாலிகள்!’ என்ற வரிகள் மூலம் சாடியிருப்பதை இரசித்தேன்.

‘உயிர் வேறு உடல் வேறா?’ என்ற கேள்விக்கான இறுதி பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிவியல் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் தங்களின் கதை மூலம் அதற்கு பதில் கிடைக்குமோ என்று காத்திருக்கிறேன்.

இரண்டு ஜென்மங்களுக்கு பிறகு நடக்கும் கதை என்பதால் கதை மாந்தர்களுக்கு பழைய பெயர்களை வைக்காமல் புதிய பெயர்களை வைத்திருக்கலாமோ?

கதையில் சுவாரஸ்யம் கூடி வருவதை உணர்கிறேன். புவியியல் பேராசிரியர் துரைசாமி மேடைக்கு வந்த்பின் என்ன நடக்க இருக்கிறது என அறிய தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

மிகவும் சுவாரசியமாகச் செல்கிறது. இப்படி நடந்தாலும் நடக்கலாம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//முன் ஜென்மத்தில் அந்த பஸ்ஸில் வந்து இருப்பாரோ ஸ்மித்?//

ஹ,,ஹா.ஹ. ஹா. சரியான ஏற்றுக் கொள்ள வேண்டிய கற்பனை. அந்த பஸ்ஸில் வராவிட்டாலும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்போரைப் பார்த்து உணர்வுபூர்வமாக கொதிக்கும் மனநிலை கொண்டவராக ஸ்மித் இருப்பவராகக் கொண்டால் இன்னும் விசேஷம்.

பல்ருக்கு அரசு என்பது அன்னியப்பட்ட சமாச்சாரமாய் போய் விட்ட காலம் இது. சுயலாபத்திற்காக அரசையும் அரசியலையும் அரசாட்சியையும் உபயோகப்படுத்திக் கொள்பார்கள் பெருகி வருவதால் விளையும் அனர்த்தம் இது. வெகுஜன மக்களை வேண்டாத தளைகளாக நினைக்கும் அரசும், ஆட்சியாளர்களும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

தொடர்ந்து வாசித்து வ்ருவதற்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இரசித்த ரசனைக்கு நன்றி. மனோபாவங்கள் ஒன்றாய் இருப்பதால் அந்த இரசிப்பு சாத்தியமாகியிருக்கிறது.

உயிர் வேறு, உடல் வேறு என்ற கூற்றில் உங்கள் யோசனையையும் சொல்லியிருக்கக் கூடாதா என்று தோன்றியது.

//இரண்டு ஜென்மங்களுக்கு பிறகு நடக்கும் கதை என்பதால் கதை மாந்தர்களுக்கு பழைய பெயர்களை வைக்காமல் புதிய பெயர்களை வைத்திருக்கலாமோ? //

கூர்மையான வாசிப்புணர்வுக்கு மிக்க நன்றி, ஐயா. முதல் பகுதியை பிரசுரித்த பிறகு என்னையும் இந்த 'வைத்திருக்கலாமோ?' எண்ணம் வாட்டிக் கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு தெளிவு. ஒரு வேடிக்கை பார்த்தீர்களா?.. எது மாறினாலும் பொதுவாக தலைமுறைகள் தாண்டியும் சில பெயர்கள் மாறாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன.. என்ன அதிசயமோ தெரியவில்லை, எந்தக் காலத்திலோ கொண்டிருந்த பெயர்கள் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக கடவுளர் பெயர்களை பெற்றோர் வைப்பதாலோ, இல்லை தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று மூதாதையர்களின் பெயரை வைப்பதாலோ எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எந்தத் தலைமுறையிலோ வாழ்ந்த அரசர்களின், இறைத் தொண்டர்களின், மனதுக்குப் பிடித்த மக்கள் தலைவர்களின் பெயர்கள் வழிவழியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்ற வெளிச்சம் கிடைத்ததும் மனம் சமாதானம் ஆனது.

சட்டென்று நினைவுக்கு வருகிற சில உதாரணங்கள்: இராஜராஜன், இராஜேந்திரன், மணிமேகலை, க்ண்ணகி, வானதி, ஆதித்தன், திருநாவுக்கரசர், சம்பந்தர், குலோத்துங்கன் போன்ற பெயர்கள்.

செட்டியார்கள் சமூகத்தில் தலைமுறை முன்னோர்கள் பெயர்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. (உ.ம்) லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார். லெ-- லெஷ்மணன், ப-- பழனியப்பன், கரு- கருமுத்து -- இந்தத் தலைமுறை பெயர்: இராமநாதன். அவர் மகன் பெயர் லெ.ப.கரு.இராம. என்று தொடரும்.

ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி, ஐயா.எழுதுவோரின் மனநிலையிலேயே வாசிப்போர் இருப்பதுவும், வாசிப்போரின் மனநிலையில் எழுதுவோர் அமைவதும் பாக்கியம்.

ஜீவி said...

@ Geetha Samhasivam

//இப்படி நடந்தாலும் நடக்கலாம்..//

பல விதங்களில் இதையெல்லாம் நாம் விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதைக் கதை ரூபமாக ஆக்கிய முயற்சி இது.

வாசித்து வருவதற்கு நன்றி, கீதாம்மா.

Dr B Jambulingam said...

விறுவிறுப்பான ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதுபோல உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"வேண்டாண்டா.. வேண்டாண்டா. அரசாங்கத்தின் மேல் உங்களுக்கு ஆத்திரம்ன்னா பஸ்ஸை ஏண்டா கொளுத்திறீங்க.. நம்ம சொத்துடா, அது!.. அது தெரியலையா, ஒங்களுக்கு? இந்த அக்கிரமத்தைக் கேட்பாரில்லையா?..நிறுத்துங்கடா.. நிறுத்துங்க.."//

ஆஹா, இந்த பஸ்ஸைக் கொளுத்தும் அராஜகம் நேற்று இன்று என்று இல்லாமல், ஜென்ம ஜென்மமாகவேத் தொடரும் செயல் போலிருக்குது.

கதையின் இடையே இதனையும் புகுத்திக் கொண்டு வந்திருப்பது தனிச்சிறப்பாக உள்ளது.

தொடரட்டும் .....

நெல்லை நாயகன்... said...

கதை, அறிவியல் சார்ந்து ஆரமித்திருந்தாலும், இப்போது வெவ்வேறு காலகட்டங்களில் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை ஆராய்வதாக இருக்கிறது. இந்த கணினி இரண்டு ஜென்மங்கள் தான் பின்னால் காட்டுமா, இல்லை இன்னும் பின்னால் சென்று சுதந்திர போராட்டம், மகாராஜாக்கள் வாழ்ந்த காலம், கற்காலம் போன்ற காலங்களில் மனிதனின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யுமா?

கற்பனைக்கே...

'நெல்லைத் தமிழன் said...

ரசித்துப் படிக்கிறேன். இது மாதிரி தொடர்கதை வாசிக்கும்போது, சென்ற பகுதியையும் ஒரு முறை வாசித்தபின்பு இந்தப் பகுதியை வாசிக்கவேண்டி வருகிறது. வயதாவதால் இழந்த பொறுமையா என்று தெரியவில்லை.

பழைய ஜென்மங்களைத் தெரிந்துகொள்வது ஒரு சுவாரசியம்தான். ஆனால், நிச்சயம் இது படிப்பினையாக இருப்பதைவிட, சாபமாக அமைவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

உடல் வேறு, உயிர் வேறு என்பது உண்மைதான். ஆனால், சில சமயங்களில், அடுத்த ஜென்மா எடுக்கும்போது, பழைய ஜென்மாவில் இருந்த அடையாளங்களும் புதிய உடலில் சேர்ந்துகொள்கிறது என்று உதாரணத்துடன் படித்துள்ளேன். (தீக்காயத்தினால் இறக்கும் ஒரு ஆன்மா, அடுத்த ஜென்மத்திலும் கழுத்தில் தீக்காயத் தழும்புகளோடு பிறப்பதுபோன்று).

ஒரு ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 200முதல் 500 வருடங்களாகிறது. இதற்கு நிறைய விதிவிலக்குகள் உண்டு. ஆன்மாவுக்கேற்ற சூழ்'நிலை அமையும்போது, அது அந்த இடத்தில் மறுபிறப்பு எடுத்துக்கொள்ளும் என்றும், இன்னொரு புத்தகத்தில், நமக்கான தலைவர் (லீடர்), சில சில வாய்ப்புகளைச் சொல்லி, அதன் சாதக பாதகங்களை உணர்த்தி, அடுத்த ஜென்மாவைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார் என்றும் (அதாவது, திருனெல்வேலியில் இந்தக் குடும்பத்தில், இந்தச் சூழலில், இன்னொன்று, பீகாரில் இந்தக் குடும்பத்தில் இந்தச் சூழலில் என்பதுபோல்) படித்துள்ளேன் (ரொம்பச் சந்தேகப் படாதீங்க. என் கால் தரைலதான் இருக்கு. படித்ததைச் சொல்கிறேன்). சுவாமி யோகானந்தர், தன் வரலாற்று நூலில், அப்படி ஒரு ஆத்மா (இறந்தவர்) மறுபிறப்பெடுப்பதையும், அதைத் தேடிக் கண்டுபிடித்ததையும் எழுதியுள்ளார்.

அரச பரம்பரையினர், பதவி ஏற்கும்போது, தனக்கான பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். ராஜராஜன்-2 போன்ற பெயர்கள் அதனால்தான் வருகின்றன. பிரிட்டிஷ் பரம்பரையிலும், அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் (ஜார்ஜ் 5 போன்ற மாதிரி. அதன் காரணம், அவர்கள் புகழ் பெற்றதுபோல் தாமும் புகழ் பெறவேண்டும் என்று). போப்பின் பெயரும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நம்மைப்போன்ற சாதாரணர்கள், தன் தந்தையை அல்லது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதுபோல் பெயர் வைப்பது சகஜம்.

கதையினூடே, சமூக அவலங்களான, தன் சொந்தக் கோபத்துக்குப் பிறர் சொத்தை அழிப்பது என்ற நோயைச் சொல்லிச் சென்றவிதம் நன்றாக இருக்கிறது.

ஜீவி said...

@ Dr. B,J,

நறுக்கான தங்கள் ரசனைக்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ நெல்லை நாயகன்

அறிவியல் என்பதை விட இந்திய தத்துவவியலை (இந்துத்வா) சார்ந்த கதை என்று சொல்லலாம்.

நான் கூட ஒரு பரபரப்புக்காக 'ஒரு இந்துத்வா கதை' என்று தலைப்பிடலாம் என்று நினைத்துப் பின்பு அந்த நினைப்பைக் கைவிட்டேன். :))

வெற்றுப் பரபரப்பு நம் வேலை அல்ல அல்லவா?..

//இன்னும் பின்னால் சென்று சுதந்திர போராட்டம், மகாராஜாக்கள் வாழ்ந்த காலம், கற்காலம் போன்ற காலங்களில் மனிதனின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யுமா?//

ஓரளவு தங்களின் யூகம் சரியே. ஆராய்ச்சி என்று கொள்ளக் கூடாது. நாம் ஏற்கனவே அறிந்திருந்த ம.ராஜா கதை ஒன்று சாமர்த்தியமாக இந்தக் கதைக்குள் கதையாக நுழைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்றாம் பகுதியோடு கதை நிறைவுறுகிறது. விரைவில் அந்த மூன்றாம் பகுதி பிரசுரமாகும். படித்து விட்டுச் சொல்லுங்கள்.

தங்கள் வருகைக்கும் யூகங்களுக்கும் நன்றி.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அண்ணன்--தம்பு போல நெல்லைத் தமிழனும் நெல்லை நாயகனும் பின்னூட்ட ஆராய்ச்சிகளில் ஜொலிக்கிறார்கள். நெல்லை மண்ணைப் பற்றி நிறைய அனுபவங்கள் எனக்கும் உண்டு. உங்கள் யூகங்களில் மண் வாசனை கமகமக்கிறது. இருவரும் ஒருவரேயாகவும், ஒருவரே இருவராகவும் பின்னூட்ட கருத்தாக்கங்களில் கலந்து திகழ்கிறீர்கள்.

//ஆனால், நிச்சயம் இது படிப்பினையாக இருப்பதைவிட, சாபமாக அமைவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.//

சாபங்களும் படிப்பினைகளே.

//ஒரு ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 200முதல் 500 வருடங்களாகிறது.//

இது என்ன புதுக்கணக்கு? ஒரு பிறப்புக்கும் அடுத்ததான் அதன் பிறப்புக்கும் இவ்வளவு கால இடைவெளியா?..

தங்கள் (படித்த) ஜென்மாக்கள் பற்றிய விவரிப்பு சுவாரஸ்யம்.

அடுத்த பகுதியில் கதை நிறைவுறுகிறது. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
தொடர்ந்து வருவதற்கு நன்றி.

'நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்... விஜய் தொலைக்காட்சியில், ஒரு பெண், தான் முற்பிறப்பில் ஜோதாபாய் அக்பராகப் பிறந்ததாகச் சொன்னார். அதற்காக, விஜய் தொலைக்காட்சி, அந்தப் பெண்ணின் ஜாதகத்தை ஜோதிட வல்லுனர்களிடம் கொடுத்து ஆராயச் சொன்னது. அவர்களும் இந்த ஜாதகர் முற்பிறப்பில் அரச பரம்பரையைச் சார்ந்தவர் என்று சொன்னார்கள். அப்புறம் விஜய் தொலைக்காட்சி இந்தப் பெண்ணை அக்பர் அரண்மணை, அந்தப் புரம் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அவரும் சில இடங்களைப் பார்த்து, நான் இங்கு இருந்திருக்கிறேன், இதில்தான் நான் வாழ்ந்தேன் என்றெல்லாம் சொன்னார். (விஜய் தொலைக்காட்சி, அங்குதான் ஜோதாபாய் வாழ்ந்தார், இதுதான் அவருடைய அரண்மனை என்றெல்லாம் சொன்னது)

முற்பிறப்பு என்பது ஆச்சர்யங்களை உள்ளடக்கியதுதான்.

ஜீவி said...

@ வை.கோ.

//ஆஹா, இந்த பஸ்ஸைக் கொளுத்தும் அராஜகம் நேற்று இன்று என்று இல்லாமல், ஜென்ம ஜென்மமாகவேத் தொடரும் செயல் போலிருக்குது. //

அராஜகம் தான். ஆனால் அதையையும் நகைச்சுவையாகச் சொல்லிய தங்கள் பாணி தனித்தன்மை கொண்டது. சரித்திர நிகழ்வுகளை அலசினாலும் சரி, ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றைக் கொளுத்தியிருக்கிறார்கள். இப்படி எதையாவது கொளுத்துவதில் என்ன ஆனந்தமோ தெரியவில்லை. அதனால் என்ன சாதனை என்றும் தெரியவில்லை. கொளுத்தின தீர்மும் 'அடடா, நான் அதைக் கொளுத்தவெ இல்லையே! இதைத் தானே கொளுத்தினேன்' என்று பல்டி அடிக்கவும் பட்டில்ருக்கிறது.

ஆனால் கதைப்படிப் பார்த்தால் நாம் வாழும் இந்தத் தலைமுறை அந்த பஸ் கொளுத்துதல்
அராஜகத்தை இரண்டு ஜென்மங்கள் தாண்டிய அந்த அதிசய காலக்கணினி கண்டுபிடித்த காலத்தில் எரிச்சலுடன் கிண்டலுடன் பார்க்கிறார்கள்.

தொடர்ந்து இந்தத் தொடரைத் தாங்கள் வாசித்து வருவதில் மகிழ்ச்சி.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

மீள் வருகைக்கு நன்றி, நெல்லைத் தமிழன்.

இந்த தொடர் பிறவி சமாச்சாரம் ஆச்சரிய விஷயமாகத் தான் இருக்கிறது. மதுமதி, நெஞ்சம் மறப்பதில்லை-- திரைப்படங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். யோசிப்பது 'முற்பிறவியில் நாம் என்னவாக இருந்தோம்?' என்பதாக இருக்கட்டும்.

தொடர்ந்த யோசனை ஏதையாவது தெரியப்படுத்தலாம். தட்டுப்பட்டால் சொல்லுங்கள்.

ஒரு யோகி சொன்ன வழிகாட்டல் இது.

அதைத் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்கிறீர்களா? சரி, விட்டுத் தள்ளுங்கள்.

தெரிந்து கொள்வதில் ஒரு 'த்ரில்' இருக்கிறது என்கிறீர்களா?.. நீங்க நம்ம கட்சி.

Geetha Sambasivam said...

@நெல்லைத் தமிழன், http://packirisamy.blogspot.com/2013/08/12.html#comment-form

இந்த வலைப்பக்கம் சென்று இந்தத் தொடரை ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள். இப்போது இவர் அதிகம் எழுதுவது இல்லை! என்றாலும் இந்தத் தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஆங்கிலத்தில் கிடைத்தாலும் படித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல கற்பனை. அண்மையில் நீங்கள் எழுதிய சிலப்பதிகாரக் கதையின் (ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்) சிந்தனைத் தாக்கம் என்று நினைக்கிறேன்.

ஜீவி said...

@ தி, தமிழ் இளங்கோ

இல்லை, ஐயா! ஏற்கனவே எழுதி ஒரு வார இதழில் பல ஆண்டுகளுக்கு முன் பிரசுரமான கதை. பழைய செல்வங்களைக் கிளறும் பொழுது கிடைத்தது. பிரசுரித்திருக்கிறேன்.

'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சொன்னால் ஏற இறங்கப் பார்த்து விட்டு,
'ஊழாவது?.. வினையாவது?.. எந்தக் காலத்தில் ஐயா இருக்கிறீர்?' என்று கெக்கலி கொட்டிச் சிரிப்பாரும் உண்டு.

எதையும் யாரையும் சொல்லிக் குற்றமில்லை. காலம் அப்படிக் கனிந்து இருக்கிறது.

Related Posts with Thumbnails