போன ஞாயிற்றுக்கிழமை.
'வசந்தா கேப்' அருகில் அவனைப் பார்த்ததும் துணுக்குற்று நின்று விட்டேன்.
என்னால் நம்பவே முடியவில்லை.'கைரேகை பார்க்கப்படும்' என்று சொல்கிற ஒரு சின்ன போர்டுக்கு அருகில், இரண்டு கல்லிடுக்கில் நட்ட குடையின் கீழே உட்கார்ந்திருப்பது, அச்சு அசல் கிருஷ்ணகாந்தே தான்! மூக்கு, முழி, அந்த கன்னக் கதுப்புகள், ஒரு பக்கம் சாய்த்தப் பார்வை, ஓ, இது கிருஷ்ணகாந்தே தான்!
'இது எப்படி?..கிருஷ்ணகாந்த்தான்..அப்போவே..' என்னால் நம்பவே முடியவில்லை. 'எல்லாம் சரி..ஆனால், கொஞ்சம் சின்ன வயசு மாதிரித் தெரிகிறதே' என்று அப்பொழுதுதான் அந்த வித்தியாசம் நெஞ்சில் உறைத்தது.
பின்னே என்ன? அந்த ஆக்ஸிடெண்ட் நடந்து கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேலே ஓடிப் போச்சு. அப்போவே கிருஷ்ணகாந்துக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் இருபது வயசு இருக்கும்..ஆகிப் போன இந்த இருபது வருஷத்தைக் கூட்டிப்பார்த்தால், இப்பொழுது நாற்பது வயசாவது இருக்க வேண்டும், இல்லையா? ஆனால், இவன் சின்னப் பையனாய், இருபது இருபத்திரண்டு வயசுத் தோற்றத்தில் இருக்கிறானே?..
சொல்லப் போனால், கிருஷ்ணகாந்த்தோடு நானும் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியது.இருபது வருஷம் ஆகிப்போயும், அந்த லாரி விபத்தை நினைத்துப் பார்க்கையில் இப்பொழுது கூட ஒரு நிமிடம் உடம்பில் ரோமங்கள் குத்திட்டு நின்று அடங்கின. என்ன கோரமான விபத்து?
நடு ரோடில் அதுபாட்டுக்கச் சென்று கொண்டிருந்த லாரி, சடாரென்று திரும்பி, வீட்டுக்குள் பாயும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?.. மொத்தம் மூணு பேர், கிருஷ்ணகாந்தைச் சேர்த்து.
மனசில் ஏற்பட்ட வடுவாய் இன்னும் அழியாமல் நினைவிருக்கு.
அநியாயம் சார்! எது எப்போது ஏற்படும் என்று யாருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது?..ஒண்ணும் பிடிபடாத இந்த வாழ்க்கைக்கு இத்தனை அடிதடியா?..
லேசாக இருட்டு கவிந்த சாயந்திர வேளை. வீட்டு வாசலில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து விடலைத்தனமா அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். எல்லாம் மல்லாரி ராவ் வீட்டு வாசலில் தான். மல்லாரி ராவ் மகன் ராம்பிரசாத், எதிர்வீட்டு கிருஷணகாந்த், நாலு வீடு தள்ளீயிருந்த விஸ்வேஸ்வரன்; மூணே மூணே பேர் தான்.
ஸ்கூல் பைனல் முடித்துவிட்டு ஒரு தட்டச்சு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் உதவியாளனாக இருந்தேன். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த நேரம்.
மல்லாரி ராவ் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளிதான் நாங்கள் குடியிருந்தோம்.
நான் பாட்டுக்கு என்னுள் ஏதோ யோசித்துக்கொண்டு, அந்த நண்பர்கள் ஜமாவைத் தாண்டும் பொழுது தான் என் பெயர் சொல்லி கிருஷ்ணகாந்த் கூப்பிட்டது என்னில் உறைத்துத் திரும்பிப் பார்த்தேன். "என்னடா?"
"ஏண்டா..நாங்க தான் ஊரைச் சுற்றிச் திரியறோம்னா, ஒரு வார்த்தை நின்னு எங்களோடப் பேசிட்டுப் போகக்கூடாதா? பார்த்திண்டே போற அளவுக்கு எங்களை கட் பண்ணிட்டயா?"
"சாரிடா. ஏதோ நினைப்பு. உங்களை பாக்கலை." என்று நிஜமாலும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
"அதை விடு. கமல் படம் ரிலீஸ் நாளைக்கு. உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்திடலாமா? சொல்லு."
"நாளைக்கா? எனக்கு முடியாதேடா. இன்ஸ்ட்டியூட்டைப் பாத்துக்கணம். ஓனர் வெளியூர் போறார்டா"
விஸ்வேஸ்வரன் என் தோளில் கைபோட்டுச் சிரித்தான்."உங்க இன்ஸ்ட்டியூட்டைக் காக்கா தூக்கிண்டு போயிடப் போறது! யார்கிட்டேயாவது பொறுப்பை ஒப்படைச்சுட்டு இதான் சான்ஸ்ன்னு கிளம்புவையா?"
"................"
"ரொம்ப யோசிக்காதே. என்னைக்கேட்டா யோசிக்கறதே தப்பும்பேன். ஓக்கேவா? சொல்லு" என்றான் ராம்பிரசாத்.
"இல்லைடா. இன்னொரு நாளைக்குப் பாக்கலாம்.. வீட்டுக்குப் போய் கைகால் அலம்பிண்டு நான் வரேன்.." என்று அவர்களிடமிருந்து பிய்த்துக்கொண்டு கிளம்பினேன்.
"டேய்..வரும்போது அப்படியே ஒரு செம்பிலே கொஞ்சம் நீர் மோர் எடுத்திண்டு வாடா..."என்று கிருஷணகாந்த் உரக்கக் கேட்டது, தெளிவாக எனக்குக் கேட்டது. நண்பர்களிடையே, எங்கள் வீட்டு நீர்மோர் மிகவும் பிரசித்தம். எங்கள் வீட்டில் காப்பி கிடையாது. அதற்குப் பதில், யார் வந்தாலும் மோர்தான்.
என் வீட்டு வாசல்படி மிதித்து, "சரிடா.." என்று அவனுக்குச் சொல்லி நான் வாய் மூடவில்லை...'டமார்'ன்னு எதன் மேலோ ஏதோ மோதிய சப்தம், என்னையே.. அந்தத்தெருவையே நிலைகுலைய வைத்தது.
சப்தம் வந்த திசையில் அனிச்சையாய் திரும்பிப் பார்க்கையில், அங்கேயே என் கண்கள் நிலைக்குத்தி என்ன நடந்தது என்று மூளைக்குப் புரிபடாத ஒரு பரிதாபத்தில் திடுக்கிட்டு நின்று விட்டேன். சுதாரித்துக் கொண்டு பார்க்கையில், ராம்பிரசாத் வீட்டு வாசல்ப்படி ஏறித் திண்ணை மோதிக்கொண்டு, பிர்மாண்டமாய் ஒரு லாரி நின்று கொண்டிருப்பது தான் தெரிந்தது. மின்சாரம் போன இருட்டுக்கிடையே ஒன்றுமே புரியவில்லை.
மொத்த தெருவும் ஓடிவந்தது.
மூலைக்கு ஒருவராக லாரி மூன்று பேரையும் தூக்கி எறிந்து உயிரைக் குடித்திருந்தது. யாரோ, போலீஸுக்கும், ஆம்புலன்ஸுக்கும் போன் செய்தார்கள்.
என் நடையில் ஒரு நிமிடம் தொய்வு ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் தான், நான் தாமதித்திருந்தாலும், என்ன நேர்ந்திருந்திருக்கும் என்கிற நினைப்பைவிட, அந்த நேரத்தில் அடடா, இப்படியா நேர்ந்திருக்க வேண்டும் என்று கைவேறு கால்வேறாகப் பிய்ந்திருந்த நண்பர்களைக் கண்டு பரிதாபம் தான் மிஞ்சியது. கண்களில் என் உத்திரவு கேட்காமலேயே தாரை தாரையாகக் கண்ணீர்!.. கொஞ்சம் நின்று நிதானித்து அந்தப் பரிதாபத்தைப் பார்க்கையில், அந்த நேரத்தில் அங்கு என்னை நிறுத்தி வைக்காமல் எந்த சக்தி என் பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு வந்து என் வீட்டு வாசலில் நிறுத்தியது என்று பிரமிப்பாக இருந்தது.
ஒரு மாதம் என் நினைவில் நான் இல்லை. நீர்மோரைப் பார்க்கையில் எல்லாம் கிருஷணகாந்த் நினைவு வரும். "எனக்கு இனிமேல் மோர் வேண்டாம்" என்று வீட்டில் சொல்லி விட்டேன். கொஞ்சகாலத்திற்கு அதற்குப் பதிலாகக் காப்பி குடித்தேன். இப்பொழுது அதையும் விட்டுவிட்டேன்.
"என்ன சார்..என்ன யோசனை..கைரேகை பாக்கிறீங்களா?" என்ற அழைப்பு கவனத்தைத் திருப்பியது. அவன் தான் கூப்பிட்டது. அந்த இருபது வயது இளைஞன், கிருஷணகாந்த் போலவேதான் இருந்தான். இன்னும் நெருக்கத்தில், அவன் பக்கத்தில் வந்து பார்க்கையில் என்னாலேயே நம்ப முடியவில்லை. அதே அச்சு; அதே வார்ப்பு, இம்மி பிசகாமல். என்ன, இவன் இளைஞன் தோற்றம்; அவ்வளவுதான்.
அவனோடு பேசவேண்டுமென்று நெஞ்சில் உணர்வு பீரிட்டுக்கொண்டு வந்தது. அவனுக்கு மிக நெருக்கத்தில் போய் நின்று கொண்டேன்.
"இப்படி இந்தக் கோணிலே உக்காந்துகங்க, ஸார்.." அவன் சொல்லியபடி, இனம்புரியாத ஒரு சந்தோஷத்துடன் அமர்ந்து கொண்டேன்.
"கை நீட்டுங்க,ஸார்..அந்தக்கை இல்லே..அது பொம்பளைங்களுக்கு..வலது கை காட்டுங்க.." என்று என்னைத் திருத்தி அவன் லேசா சிரித்தான்.
சுவாரஸ்யத்தோடு அவனிடம் கை நீட்டினேன். பெரிய வட்ட லென்ஸைத் துடைத்து எடுத்துக்கொண்டு, பரக்க நீட்டிய என் உள்ளங்கை ரேகைகளைப் படிக்கத் தொடங்கினான்.
"அப்பாடா, தப்பிச்சிங்க...இனி அவன் கூப்பிட்டுக்கற வரைக்கும் ஒண்ணும் கவலை இல்லை."
"என்னப்பா, என்ன சொல்றே?"
எனக்குப் பதில் சொல்லாமல், "ஸாருக்கு என்ன வயசு? தெரிஞ்சிக்கலாமா?" என்று கேட்டான்.
"இந்த ஐப்பசி வந்தால், நாப்பத்திரண்டு."
"ஆங்.. ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த கண்டம், பெத்தவங்க செஞ்ச புண்ணியத்தாலே போயிடுச்சு..இனிமே கவலை இல்லே.."
இம்மி இழையில் நான் தப்பித்த அந்த லாரி விபத்துதான், இவனைப் பார்த்ததிலிருந்தே என் நினைவில் நிழலாடிக்கொண்டிருக்கிறதே!.. பதட்டத்துடன்,"அப்படியா?.." என்று மட்டும் கேட்க முடிந்தது என்னால்.
"சும்மாவா சொல்றேன்..தாய் பண்ணிய புண்ணியம்..குறி தப்பிடுச்சு.."
நெஞ்சில் சுவாசம் சீராக இழையோட, அம்மாவை நினைத்து கண்களில் நீர் மல்க, "அப்புறம்?...." என்று தொண்டைகுழறக் கேட்டேன்.
"மத்ததெல்லாம் அமோகம் ஸார்..காசு பணம் சேரும்..இப்பவே சேர்ந்திருக்கணுமே?.. குழந்தை குட்டிகளை நல்லா பாத்துப்பீங்க..அதெல்லாமா முக்கியம்..எல்லாரும் செய்யறது தான். வந்த ஆபத்து போச்சே..அதைச் சொல்லுங்க.. இனிமே, நீங்க ராஜா தான்.." அவன் என் கையை விட்டு விட்டான். 'பயப்படாதீங்க..இனிமேல் உங்களுக்குக் கவலை இல்லை' என்கிற ஒரு சேதியை என்னிடம் சொல்வதற்காகவே, அவன் என்னை அழைத்து என் கைபார்த்த மாதிரி உணர்வேற்பட்டது எனக்கு.
நெற்றியில் படிந்த வியர்வையைத் தோள்த்துண்டால் துடைத்துக் கொண்டேன். தேவன் வந்தது மாதிரி வந்து நல்ல சேதி சொன்ன அவனை இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
உலர்ந்த நா எச்சில் கூட்டி, வாஞ்சையுடன், "உன் பெயர் என்னப்பா?.." என்று கேட்டேன்.
"பேர்ல என்ன ஸார் இருக்கு..எல்லாம் அந்த கிருஸ்ண பரமாத்மா பேரு தான். ரோகிணி நட்சத்திரத்திலே பொறந்ததாலே அவரு பேரையே வைச்சிட்டாங்க, பெரியவங்க" என்று சொல்லிச் சிரித்தான்.
என் சர்வநாடியும் நடுங்கியது. அவனைக் கைதூக்கித் தொழ வேண்டும் போலிருந்தது. கைரேகை பார்த்திருக்கிறானே? அதற்கு என்ன பணம் தர வேண்டும் என்று எப்படி கேட்பேன்?..சாதாரண மனுஷனா இருந்தா கேட்கலாம்.. இவனோ, மனுஷ ரூபத்தில்...
சமாளித்துக் கொண்டு, அதையும் அல்ப மனுஷன், நான் கேட்டேன்.
"நான் என்ன ஸார், அந்த குசேலர்கிட்டே அவன் கேட்டமாதிரி அவலா கேக்கப்போறேன்?.. வெயில் சுட்டெரிக்குதலே?..தோ..அந்த ஓட்டல்லே கொஞ்சம் நீர் மோர் வாங்கித் தர்றீங்களா.."
பளாரென்று அந்த நினைவு மூளையில் வெட்டிவிட்டுப் போனது..இருபது வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச தப்பை இப்போ செய்யக்கூடாது..இவனை இங்கேயே விட்டு விட்டு, நான் மட்டும் ஓட்டலுக்குள் போய், இங்கே இவனுக்கு ஏதாவது..
'அடே,மனுஷா..பரமாத்மாவுக்கு நீ பாதுகாப்பா?' என்று மனசு ஒரு பக்கம் ஏளனம் செய்தது.
எல்லா நினைப்புகளையும் விழுங்கிக்கொண்டு, "ஒண்ணு செய்யேன்..ரெண்டு பேரும் ஓட்டலுக்குச் சேர்ந்து போய், சாப்பிடலாம்.. என்ன?" என்று அவன் என்கூட வரவேண்டும் என்று மனசார இறைஞ்சி அவனிடம் கேட்டேன்.
கிருஷணநாமம் கொண்ட அவன், எல்லாம் கிருஷ்ணார்ப்பணம் என்பது போல என்னை விநோதமாகப் பார்த்தான்.

14 comments:
சோதனை ஓட்டம்
ஜீவி - கதை அருமை. எளிமை - உணர்வு பூர்வமாக எழுதப் பட்டிருக்கிறது. சில சமயங்களில் செய்திகள் நமக்கு அதுவாக வரும். புரிந்து கொள்ள வேண்டும். அது இயலாத செயல். என்ன செய்வது.
ரொம்ப நல்லா வந்திருக்குங்க.
அருமையான ஓட்டம்..நல்ல கதை..
//ஜீவி - கதை அருமை. எளிமை - உணர்வு பூர்வமாக எழுதப் பட்டிருக்கிறது. சில சமயங்களில் செய்திகள் நமக்கு அதுவாக வரும். புரிந்து கொள்ள வேண்டும். அது இயலாத செயல். என்ன செய்வது.//
எல்லாமே ஏதோ காரண காரியத்தோடு தான் நடப்பதாக நினைக்கிறேன். நடப்பனவற்றைப் பார்த்து,ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டுப் பார்த்து,'ஓகோ. இதுக்காகத் தான் இதுவா?' என்று ஏதோ ஒரு விதத்தில் புரியும் போது, பிரமிப்புதான் ஏற்படுகிறது.
வருகைக்கும், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கும் நன்றி,நண்பரே!
//ரொம்ப நல்லா வந்திருக்குங்க.//
தோய்ந்த உங்கள் ரசிப்பிற்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி, இலவச கொத்தனார் அவர்களே!..
//அருமையான ஓட்டம்..நல்ல கதை..//
வாருங்கள், பாசமலர்.. உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.
ஜீவி,
எப்படி....... எப்படிப்பா இப்படி அட்டகாசமா......
ஹைய்யோ.............
என்ன ஒரு நடை!!!!
இப்பத்தான் கிருஷ்ணன் கோயிலுக்குப் போய்வந்து இங்கே கணினி திறந்தா.....
அடடடா......
எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.
மனமார்ந்த பாராட்டுகள்.
எ
" "ஒண்ணு செய்யேன்..ரெண்டு பேரும் ஓட்டலுக்குச் சேர்ந்து போய், சாப்பிடலாம்.. என்ன?" என்று அவன் என்கூட வரவேண்டும் என்று மனசார இறைஞ்சி அவனிடம் கேட்டேன்" இந்த கடைசி வரிகள் மிகவும் உண்மையாக மனதை தொடும் விதமாக இருந்தது.. வாழ்க்கையில் எத்தனையோ முறை வந்து சென்ற இது போன்ற மவுன இரஞ்சல்களை ஞாபகப்படுத்தி விட்டது.. வாழ்த்துக்கள்...
துளசி கோபால் said...
//ஜீவி,
எப்படி....... எப்படிப்பா இப்படி அட்டகாசமா......
ஹைய்யோ.............
என்ன ஒரு நடை!!!!
இப்பத்தான் கிருஷ்ணன் கோயிலுக்குப் போய்வந்து இங்கே கணினி திறந்தா.....
அடடடா......
எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.
மனமார்ந்த பாராட்டுகள்.//
'இப்பத்தான் கிருஷ்ணன் கோயிலுக்குப் போய்வந்து இங்கே கணினி திறந்தா..'--என்கிற வரிகளைப் படித்து அப்படியே கொஞ்ச நேரத்திற்கு மெளனமாகி விட்டேன்.
உங்கள் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்களுக்கு நன்றி.
கிருத்திகா said...
//" "ஒண்ணு செய்யேன்..ரெண்டு பேரும் ஓட்டலுக்குச் சேர்ந்து போய், சாப்பிடலாம்.. என்ன?" என்று அவன் என்கூட வரவேண்டும் என்று மனசார இறைஞ்சி அவனிடம் கேட்டேன்" இந்த கடைசி வரிகள் மிகவும் உண்மையாக மனதை தொடும் விதமாக இருந்தது.. வாழ்க்கையில் எத்தனையோ முறை வந்து சென்ற இது போன்ற மவுன இரஞ்சல்களை ஞாபகப்படுத்தி விட்டது.. வாழ்த்துக்கள்...//
வாழ்க்கையின் சில அனுபவங்கள் தாம் வார்த்தைகளாக எப்படி எப்படி தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி அப்படி வெளிப்படுத்திக் கொள்கின்றன என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
பாராட்டுகளுக்கு நன்றி.
பாசமலர் தொடுத்த வலைச்சரத்துல இருந்து இங்க வந்தேன். நல்ல கதை. நீர் மோர்.... சாப்பிட வாப்பான்னு கெஞ்சுறப்போ....அந்தப் பாசமும் தழுதழுப்பும். அடடா!
//சாப்பிட வாப்பான்னு கெஞ்சுறப்போ....அந்தப் பாசமும் தழுதழுப்பும். அடடா!//
வாங்க, ஜி.ரா!..உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
வர, வழிகாட்டிய பாசமலருக்கும்
நன்றி.
'அடே,மனுஷா..பரமாத்மாவுக்கு நீ பாதுகாப்பா?' என்று மனசு ஒரு பக்கம் ஏளனம் செய்தது.
எல்லா நினைப்புகளையும் விழுங்கிக்கொண்டு, "ஒண்ணு செய்யேன்..ரெண்டு பேரும் ஓட்டலுக்குச் சேர்ந்து போய், சாப்பிடலாம்.. என்ன?" என்று அவன் என்கூட வரவேண்டும் என்று மனசார இறைஞ்சி அவனிடம் கேட்டேன்.//
மனதை தொட்டு விட்டது.
கதை மிகவும் நன்றாக இருக்கிறது.
Post a Comment