நீயே எல்லாம் அல்லவோ--என்
நெஞ்சில் இசையின் நிலை நீயல்லவோ?--தாயே
(நீயே எல்லாம்)
தொடுப்புகூத்தனூரில் கோயில் கொண்டவள் அல்லவோ?
கூத்தனுக்கு வரம் கொடுத்தவள் அல்லவோ?
தக்கயாகப் பரணி தலைவி அல்லவோ?
தஷிண திரிவேணி தெய்வம் அல்லவோ?
விஜயதசமி தரிசனம் தவப்பயன் அல்லவோ?
ஜெயமுண்டு பயமில்லை நினது கருணை அல்லவோ?
அட்சரமாலை அமிர்த கலசம் அழகல்லவோ?
அன்னை சரஸ்வதி அறிவுக் கடவுள் அல்லவோ?
முடிப்பு
கலைமகள் தாயே கலைகளுக்குத் தாயே
நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
சகலகலாவல்லி சதுர்முகதேவி
சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி
நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
சகலகலாவல்லி சதுர்முகதேவி
சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி
(நீயே எல்லாம்)
4 comments:
ஆகா, கலைமகள் புகழை அழகாக எடுத்துரைக்கும் அருமையான பாடல்.
தமிழிசை செழிக்கின்றது, மிக்க நன்றி.
ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஆகா, கலைமகள் புகழை அழகாக எடுத்துரைக்கும் அருமையான பாடல்.
தமிழிசை செழிக்கின்றது, மிக்க நன்றி.//
வாருங்கள், ஜீவா!
தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.
சஹானா ராகத்தை இப்பாடலுக்குப் பரிந்துரைக்கிறேன்.
இசைத்தாயின் புகழ் அல்லவா?பாடுவோர் பாடினால், பாலுடன் தேன் கலந்தாற் போலிருக்கும்.
சமீபத்தில் கூத்தனூர் சென்றிருந்தபோது, அருகிருக்கும் ஒரு பள்ளியின் நிர்வாக அலுவலகர் அந்த பள்ளியின் மொத்த ஹால் டிக்கெட்டுக்களையும் பையில் போட்டு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தார், பார்த்தவுடன் மனதிற்கு வெகு நிறைவாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. அவள் சகலகலாவல்லித்தாயல்லவோ...
கிருத்திகா said...
//சமீபத்தில் கூத்தனூர் சென்றிருந்தபோது, அருகிருக்கும் ஒரு பள்ளியின் நிர்வாக அலுவலகர் அந்த பள்ளியின் மொத்த ஹால் டிக்கெட்டுக்களையும் பையில் போட்டு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தார், பார்த்தவுடன் மனதிற்கு வெகு நிறைவாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. அவள் சகலகலாவல்லித்தாயல்லவோ...//
அப்படியா?..கேட்க சந்தோஷமாக இருக்கிறது. முயற்சிகளைத் திருவினையாக்கும் தெய்வம் சரஸ்வதி. அந்த மாணவர் மனத்தில் 'தெய்வம் துணையிருக்க தீங்கு வராது' என்கிற நல்லெண்ணம் கெட்டிப் பட்டிருக்கும் என்பது திண்ணம் .
தகவலைப் பரிமாறிக் கொண்டமைக்கு நன்றி, கிருத்திகா!
Post a Comment