மின் நூல்

Sunday, December 18, 2011

பார்வை (பகுதி-17)

                      அத்தியாயம்--17

வெளியே வாசல்பக்கம் கேட்ட சுசீலாவின் வரவேற்புக் குரலிலிருந்து வந்திருப்பது டாக்டர் சாந்தி தான் என்று தெரிந்து கொண்டேன்.

அந்த ஃபர்ப்யூம் வாசனை, டாக்டர் உள்ளே நுழைந்து ஹாலுக்கு வந்து விட்டதைச் சொன்னது. "எப்படியிருக்கீங்க, அங்கிள்?.." என்று டாக்டரின் குழைவான குரல் என் அருகில் கேட்கிறது.

வெகு நாட்கள் கழித்து டாக்டர் சாந்தியின் குரலைக் கேட்டதில், ரொம்ப சந்தோஷம்."டாக்டர்! நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?.. நீங்கள் என்னைப் பார்த்து ஒரு மாசத்திற்கு மேலிருக்குமா?.. ஜெர்மனி போயிருந்தீர்கள், இல்லையா? எப்போ திரும்பினீர்கள்?" என்று கேள்விகளை அடுக்குகிறேன்.

"ஜெர்மனி போயிருந்தது ரொம்பவும் உபயோகமாக இருந்தது அங்கிள்! அந்த உபயோகத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுக்குப் பார்வை திரும்புவதில் சில புது நம்பிக்கைகள் ஏற்பட்டிருக்கிறது. அங்கே ஒரு செமினாரில் கலந்து கொள்ற பாக்கியம் கிடைச்சது. அங்கு விவாதிச்ச விஷங்களிலிருந்து கிடைச்சது தான் இந்த நம்பிக்கை."

"அப்படியா, டாக்டர்! ரொம்ப சந்தோஷம். எங்கே போனாலும், எந்த புது வைத்தியம் உங்களுக்குத் தெரிய வந்தாலும், அதை எப்படி எனக்கு உபயோகப்படுத்தலாம்னு நீங்க யோசிக்கறதுக்கு பிரதி உபகாரமா இந்த எளியவனால் என்ன செய்ய முடியும்னு தான் தெரியலே.." என்று சொன்னதற்கு மேல் தொடர முடியாமல் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டு நன்றியில் பரிதவிக்கிறது.

"பார்வை கிடைச்சதும் பாருங்கள், இதற்கெல்லாம் சேர்த்து வைச்சு நிறையச் செய்யப் போகிறீங்க, பாருங்கள்!" என்று இரண்டு தடவைகள் தன்னை அறியாமலேயே அந்தப் 'பாருங்களை' டாக்டர் உச்சரித்த பொழுது, எல்லாவற்றையும் பழையபடி பார்க்க முடியுமா; அப்படி முடிய வேண்டுமே' என்கிற ஆசை மனசில் ஊற்றெடுத்துச் சுரந்தது.

மனசில் கொள்ளும் ஆசைகள் புதிய நம்பிக்கைகளை விதைக்கும் என்பது எவ்வளவு உண்மை? 'விஸ்வநாதன் வந்து சேர்வதற்கு முன்னிருந்த என் மனநிலை வேறே; இப்பொழுது இருக்கும் நிலை வேறே' என்று எனக்கே நன்றாகத் தெரிந்தது. முன்பெல்லாம் 'இப்படியே இன்னும் இருக்கிற காலத்தை கழித்தால் சரி'ன்னு இருந்தது. இப்போவோ நானே உணர்ற சில பொறுப்புகள் சேர்ந்த மாதிரி இருக்கு. மனசில் என்னன்ன செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு வைத்திருக்கிறேன். 'முதலில் சுசீலாவை அல்லாட வைத்து அவஸ்த்தைப்படுத்தாமல் உட்காரவைத்து இத்தனை காலம் அவள் எனக்குச் செஞ்சதற்கு சேர்த்து வைத்து செய்யணும்னு ஆசை. சங்கரிக்கு நல்லபடி திருமணத்தை முடிக்க வேண்டும். அப்புறம் டாக்டர் சாந்தி கொடுக்கற பணிகளை....'

"இவர் தான் உங்களுக்கு இந்த புதிய ட்ரீட்மெண்ட்டைச் செய்யப் போகிற புரொபசர் மித்ரா!" என்று டாக்டர் சொன்ன போது தான் என் சிந்தனை இழை அறுபட்டது. டாக்டர் சாந்தி இன்னொரு டாக்டருடன் வந்திருக்கும் விஷயமே அப்பொழுது தான் தெரிந்தது... காதில் கேட்ட செய்தி மனசில் தைத்ததும், "ஓ! சாரி.. புரொபசரும் கூட வந்திருப்பது தெரியாமலேயே இருந்திருக்கிறேன்.. ஓ, சாரி! டாக்டர் சார், இந்த எளியவனின் இல்லத்திற்கே வந்திருக்கிறீர்களே! ரொம்பவும் நன்றி, ஐயா" என்று நெகிழ்ந்து போனதில் என் குரல் எனக்கேக் கேட்காமல் தழைந்தது.

அந்த புரொபசர் தான் போலிருக்கு."நைஸ் டு மீட் யூ.." என்று என் கைப்பற்றிய கை அவரது குரலைப் போலவே மிகவும் மிருதுவாக இருந்தது. "உங்களைப் பற்றி டாக்டர் சாந்தி நிறைய சொன்னார். உங்கள் குடும்பமே இசைக் குடும்பம் இல்லையா?.. உங்க குடும்பத்தைப் பற்றியும் டாக்டர் சாந்தி எனக்கு டீடெயில்டாக நிறையச் சொல்லியிருக்கிறார். இந்த டீரீட்மெண்ட்டுக்கு இப்படிப் பட்ட குடும்ப சூழ்நிலை அமைவது ரொம்ப அரிதானது. அது நாம் எல்லோரும் சேர்ந்து 'ஒர்க்' பண்ணுவதற்கு ரொம்ப செளகரியமாக இருக்கும்" என்கிறார்.

புரொபசர் மித்ரா சொன்னது அரைகுறையாகத் தான் எனக்குப் புரிந்தது. எல்லோரும் சேர்ந்து 'ஒர்க்' பண்ணனுமா?.. அப்படின்னா என்னன்னு தெரியலே. பின்னாடி அது பற்றி கேட்டுக் கொள்ளலாம்-அவர்களே சொல்வார்கள் என்று பேசாமல் இருக்கிறேன்.

"அங்கிள், ஒண்ணு செய்யுங்கள். ஆறு மாதம் உங்களுக்கு லீவ். நீங்கள் ப்ரெயில் கிளாஸ் பக்கமே வரவேண்டாம். சுசீலாக்கும் அதே மாதிரித் தான். அவளும் சங்கீதப் பள்ளிக்குப் போகவேண்டாம். சமையல், உங்களைப் பார்த்துக் கொள்றதுன்னு இப்போ இருக்கற வேலைகள் மட்டுமில்லை, அவளுக்கு இன்னும் சில பொறுப்புகள் இப்போ சேர்ந்திருக்கு. சுசீலா மட்டுமில்லை, உங்கள் தம்பி, சங்கரி எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவையாயிருக்கிறது. ட்ரீட்மெண்ட் இந்த வீட்டில் தான். ஆஸ்பத்திரி இல்லை, வீடு தான் இதற்கு ரொம்ப செளகரியமானது. அதுவும் நீங்க புழங்குகிற வீடாயிருப்பதால் இன்னும் செளகரியமாக இருக்கப்போகிறது. புரொபசர் காலை பத்து மணி வாக்கில் இங்கு வந்தார் என்றால் சாயந்தரம் ஆறுக்கு கிளம்பிவிடுவார்.உங்க தம்பியும், அவர் பெண்ணும் அந்த நேரத்திற்கு இங்கு இருந்து ட்ரீட்மெண்ட்டுக்குத் துணையா இருக்கட்டும். ஆறு மணிக்கு மேலே அவர்கள் வீட்டுக்குப் போகட்டும். என்ன, நான் சொல்றது புரியறதா?" என்று டாக்டர் சாந்தி கேட்டபொழுது, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி என்று சொல்வார்களே, அந்த மாதிரி எனக்கு இருக்கிறது. என்ன, கண்ணைக் கட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதான் வித்தியாசம்.

நான் பேசாமல் இருப்பதைப் பார்த்தோ என்னவோ, "என்ன யோசனை? எஸ்ஸூன்னு சொல்லுங்க, அங்கிள்! ஜெர்மனியிலேயே நானும், புரொபசர் மித்ராவும் இந்த ட்ரீட்மெண்ட்டுக்கான பிளானெலாம் பண்ணிட்டோம். இதெல்லாம் அங்கேயே யோசிச்சு வைச்சது தான். உங்க கிட்டே சொல்றத்துக்காக இப்போ சொல்றேன். மற்றபடி, பிளான் படி தான் எல்லாம் நடக்கப்போறது; அதிலே எந்த மாறுதலும் இல்லை. என்ன சரியா?.. சுசீலா நீயும் கேட்டுண்ட்டியா?.. என்ன சொல்றே?" என்கிறார்.

"சொல்றதுக்கு என்ன இருக்கு, டாக்டர்?.. திருவையாறிலிருந்து என்னைக்கு சென்னைக்கு வந்தோமோ அன்னைக்கே, எங்க ரெண்டு பேரையும் உங்க கிட்ட ஒப்படைச்சிட்டோம். நாங்க ரெண்டு பேருமே உங்க கேர் ஆஃப் தான். தெய்வம் தான் சகல காரியங்களிலும் உங்களுக்குத் துணையா இருந்து வழிநடத்தறதுன்னு நான் பூரணமா நம்பறேன். அதனாலே நீங்க சொல்றது தான் வேதவாக்கு. நீங்க நினைக்கிறபடியே நடக்கட்டும்.." என்று தீர்மானமாகச் சொல்கிறாள்.
"அப்போ, நாளைக்கே டீரிட்மெண்ட்டை ஆரம்பிச்சிடலாம். இதிலே வேடிக்கை என்னன்னா, இதெல்லாம் உங்களைப் பொருத்த மட்டில் டீரிட்மெண்ட்டே இல்லை; குஷியாக எல்லாரும் சேர்ந்து கொட்டமடிக்கப் போகிறீர்கள், பாருங்கள்!" என்று சொல்லி 'கலகல'வென்று சிரிக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் அந்த 'பாருங்களை'ச் சொல்லும் பொழுது, அந்த வார்த்தை மற்றவர்களுக்காகச் சொல்கிறார் என்றும், எனக்கு சம்பந்தப்படாதது மாதிரியும் இருக்கிறது.

"அப்போ புரொபசர் நாளைக்கு இங்கே வந்திடுவார். சுசீலா! எல்லாருக்கும் மத்தியான சமையலுக்கும், ஈவினிங் சம் ஸ்நாக்ஸுக்கும், காப்பிக்கும் நீ அரேன்ஞ் பண்ணிடணும். எனக்கு செளகரியப்பட்ட பொழுதெல்லாம் நானும் வந்து கலந்துக்கறேன். ஆனா, புரொபசர் மித்ரா தான் இந்த ட்ரீட்மெண்ட்டை வெற்றிகரமா நடத்தி முடிக்கிறார், என்ன?" என்று கேட்ட பொழுது, "ஓ.கே. டாக்டர்! ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்வரிதிங்!" என்கிறார் புரொபசர்.

"அப்புறம். இன்னொண்ணு சொல்லணும். இந்த ட்ரீட்மெண்ட்டுக்கு ஆகும் அத்தனை செலவையும் 'இமைகள் மருத்துவமனை' ஏற்றுக் கொள்ளப் போகிறது. நாங்கள் நோயாளிகளின் அத்யாவசிய நலன்களுக்காக ஒரு ஜெனரல் ஃபண்ட் கிரியேட் பண்ணி வைச்சிருக்கோம்லாயா?.. அதிலேந்து மீட் பண்ணிக்கலாம். மற்றதெல்லாம் உனக்கு நான் சொல்றேன், சுசீலா! சரியா?"

சுசீலாவிடமிருந்து பதிலே காணோம். கண் கலங்கி நிற்கிறாள் போலும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

"ஏய்! என்ன இதெல்லாம்.. பீ, ச்சீர்! நான் யார்?.. வேற்று மனுஷியா?.. உனக்குச் செய்யாம யாருக்குச் செய்யப்போறேன்.. கண்ணைத் தொடச்சிக்கோ.. அங்கிளைப் பார்! இந்த டீரீட்மெண்ட்டோட எவ்வளவு இன்வால்வ் ஆகப்போறார், பார்! நீ மட்டும் என்ன?.. ஆறே மாசம் தான்; என்னல்லாம் நடக்கப்போறது, பார்!" என்று சுசீலாவை டாக்டர் தேற்றிக் கொண்டிருந்த பொழுது, அந்த 'பார்..பார்' என்கிற வார்த்தையே அதுவே எல்லாமுமாய் பிர்மாண்டமாய் எழுந்து என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

வாசல் காலிங் பெல் மீண்டும் கணகணக்கிறது. தம்பி குடும்பத்தோடு வந்து விட்டான் போலிருக்கு என்று நினைத்துக் கொள்கிறேன்.


(இன்னும் வரும்)

26 comments:

G.M Balasubramaniam said...

முதலில் வந்து கருத்திட முயன்றபோது கமெண்ட் பெட்டி வரவே இல்லை. கமஎண்டை ஒரு மாற்றத்துக்கு என் கமெண்ட் பெட்டியில் எழுதினேன். மறுமுறை முயற்சி வெற்றி. கதையில் திருப்பங்கள் நிகழ இருக்கிறது என்னும் எதிர்பார்ப்பு கூடிவிட்டது. பாருங்கள் பாருங்கள் என்று சொல்பவர்கள் பார்க்க வைத்துவிடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை எழுகிறது. ஆனால் இந்த கதாசிரியர்களை நம்பலாமா.?ட்விஸ்ட் என்னும் பெயரில் எதையும் செய்யலாமே இந்த எழுத்துலக பிரம்மாக்கள்.நீங்கள் எப்படி.?

ஸ்ரீராம். said...

ப்ரொபசர் மித்ரா....பி வி ஆர் கதைதானே அது? ரா கி ரவோ என்றும் சந்தேகம். அவர் பெயரைக் கேட்டதும் குமுதத்தில் வந்த தொடர் கதையும், படம் வரைந்தவர் மாருதிதானே, அதுவும் ஞாபகம் வந்து விட்டது!

ஜி எம் பி சார் சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. முதலில் பார்வை வேண்டாம் என்று தோன்றிய மன நிலை தம்பி வந்த பிகு மாறிய மன நிலையாவதும் மாறும் மன நிலைகளைக் காட்டுகிறது.

கோமதி அரசு said...

"அப்போ, நாளைக்கே டீரிட்மெண்ட்டை ஆரம்பிச்சிடலாம். இதிலே வேடிக்கை என்னன்னா, இதெல்லாம் உங்களைப் பொருத்த மட்டில் டீரிட்மெண்ட்டே இல்லை; குஷியாக எல்லாரும் சேர்ந்து கொட்டமடிக்கப் போகிறீர்கள், பாருங்கள்!" என்று சொல்லி 'கலகல'வென்று சிரிக்கிறார்.//

டாகட்ர் சொல்லும் சிகிட்சை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் போல! எல்லோரையும் பாடச் சொல்வாரோ. இசையால் முடியாதது எதுவும் உண்டா?
இசை அற்புதங்கள் செய்யும்.

பார்வை வந்து எல்லோரையும் பார்த்து
மகிழ்ந்தால் நன்றாக இருக்கும்.

ஜீவி said...

கீதா சாம்பசிவம் has left a new comment on your post "பார்வை (பகுதி-16)":

அடுத்தது பார்வை 17 படிச்சேன்; ஆனால் பின்னூட்டப் பெட்டி திறக்கலை! :(

நான் எதிர்பார்த்த திருப்பம் வந்திருக்கு. ஓரளவுக்குப் புரியுது. ம்யூசிக் தெரபியா? சீக்கிரம் "பார்"க்க ஆரம்பிக்க வாழ்த்துகளுடன்

சிவகுமாரன் said...

பாருங்கள் பாருங்கள் என்றும் பார் பார் என்றும் வார்த்தைகள் இந்தப் பதிவில் விளையாடுகின்றன

Geetha Sambasivam said...

அப்புறம் இப்போத் தான் வர முடிஞ்சது. ப்ரொபசர் மித்ரா ரா.கி.ர. எழுதின கதையிலே வருபவர் தான். கொஞ்ச நாட்கள் முன்னர் கூடப் படிச்சேன். எதிர்பாராத் திருப்பங்கள்; இந்தத்திருப்பம் ஓரளவு யூகித்தேன்.

என் முதல் பின்னூட்டத்தை வெளியிட்டதுக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

இன்னும் சுவாரசியமான திருப்பங்கள் காத்திருப்பது தெரிகிறது.....
ஒவ்வொரு விஷயத்தையும் பிறர் சொல்வதன் மூலமே புரிந்து கொள்ள வேண்டிய கஷ்டம்...

இதைப் படிக்க் ஆரம்பித்ததும் மீண்டும் ஒரு முறை ராஜபார்வை இணையத்தில் தேடிப்பிடித்துப் பார்த்தேன்...

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

பின்னூட்டப் பெட்டி திறக்காவிட்டாலும் சளைக்காது, இதற்கு முந்தைய பதிவில் வந்து இந்தப் பதிவிற்குப் பின்னூட்ட மிட்ட முதல் வருகைக்கு நன்றி.

இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்து இந்தப் பதிவின் ஜாக்பாட் பரிசைத் தட்டிச் சென்றமைக்கு வாழ்த்துக்கள், கீதாம்மா!

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

பெரும் முயற்சிக்குப் பிறகு பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி. அவருக்குள்ளேயே ஒரு நம்பிக்கை நெம்புகோல் ஊன்றி அவர் இழந்ததை மீட்டெடுக்க அப்படிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது.என்ன நடக்கிறது என்று நாமும் பார்க்கலாம்.

இந்த 'ட்விஸ்ட்' சமாச்சாரம் உங்களுக்கும் பிடித்துப் போய் விட்டது போலும். ஆனால் அளவுக்கு மீறிய 'ட்விஸ்ட்' முறுக்கலில் இயல்புத் தன்மை அறுந்து விடும் அபாயமும் இருக்கிறது. அதையும் கவனத்தில் கொள்ளலாம்.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

//"இவர் தான் உங்களுக்கு இந்த புதிய ட்ரீட்மெண்ட்டைச் செய்யப் போகிற புரொபசர் மித்ரா!" என்று டாக்டர் சொன்ன போது தான் என் சிந்தனை இழை அறுபட்டது.//

//"பார்வை கிடைச்சதும் பாருங்கள், இதற்கெல்லாம் சேர்த்து வைச்சு நிறையச் செய்யப் போகிறீங்க, பாருங்கள்!" என்று இரண்டு தடவைகள் தன்னை அறியாமலேயே அந்தப் 'பாருங்களை' டாக்டர் உச்சரித்த பொழுது, எல்லாவற்றையும் பழையபடி பார்க்க //

//சுசீலாவிடமிருந்து பதிலே காணோம். கண் கலங்கி நிற்கிறாள் போலும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
//

கதாபாத்திரத்தின் வழியே உங்கள் பார்வை கதைக்கு கனமான இதமான இழையாய் தொடர்கிறாது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வாருங்கள், ஸ்ரீராம்!

ஒரு வேடிக்கை தெரியுமா? புரொபசர் என்று நினைத்தவுடனே, 'மித்ரா' என்கிற பெயர் ஞாபகத்திற்கு வந்த காரணமே, ரா.கி.ரங்கராஜனின் அந்த பெயர் கொண்ட நாவல் தான்! 'மித்ரா'வை 'மிஸ்ரா'வாக்கலாம் என்கிற மறு யோசனையையும் புறக்கணித்து, 'மித்ரா'வாகவே இருக்கட்டும் என்று தீர்மானித்தேன்.

'படக்'கென்று ரா.கி.ர.வின் அந்த நாவல் பெயரே உங்கள் நினைவுக்கும் வந்ததிற்குக் காரணம் நம் இருவரின் ஞாபகங்களுமே அந்த ஒன்றிலேயே குவிந்தது தான். இதைப் பின்னூட்டத்தில் பகிர்வதற்குள், நீங்கள் இருவர் மட்டுமில்லை, அந்த நாவல் பற்றித் தெரிந்த மூன்றாவது நபராக நானும் இருக்கிறேன் என்று நம் அம்பத்தூர்காரரும் அடுத்துப் பின்னூட்டமிட்டு விட்டார். இது மட்டுமில்லை, இன்னொன்றையும் மிகச் சரியாக அவர் சொன்னது தான் எந்த அளவுக்கு மனம் ஒன்றி அவர் இந்தக் கதையைப் படிக்கிறார் என்று சொல்லாமல் சொல்லிற்று.

'பாடுவோர் பாடினால், ஆடத் தோன்றும்' என்பது கவியரசரின் வரி. 'படிப்போர் இப்படி ஒன்றிப் படித்தால், இன்னும் இன்னும் எழுதத் தோன்றும்' என்று சொல்லத் தோன்றுகிறது.

உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ சிவகுமாரன்

அந்த நம்பிக்கை தான் மாமருந்தாகப் போகிறது போலும்! பார்வை மீண்டு மீண்டும் பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலும், ஆசையும், ஏக்கத்தின் பீறிடலும் நெஞ்சத்தில் முட்டி மோத அந்த ஆழ்ந்த பிடிப்புகளே ஆற்றலுடன் உள்ளுக்கு உள்ளே ஒளியாய் செயல்பட..

புரொபசர் மித்ரா ஒரு மனோதத்துவ நிபுணர் கூட. எப்படிச் செயல்படப் போகிறார் என்று பார்க்கலாம்.

தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி, சிவகுமாரன்!

ஜீவி said...

@ பாசமலர்

//ஒவ்வொரு விஷயத்தையும் பிறர் சொல்வதன் மூலமே புரிந்து கொள்ள வேண்டிய கஷ்டம்...//

எஸ்.. இதுவே ஆதாரனமான விஷயம். ஒரே விஷயத்தை இருவர் பார்த்துப் புரிந்து கொள்வதிலேயே, வெவ்வேறு போக்கில் பார்வைகள் அமைந்து விடுகின்றன. இதில் பிறர் சொல்வதின் அடிப்படையில், அப்படிக் கேட்பதை ஒட்டியும் மறுத்தும், தான் வேறு தனியாக யூகித்து முடிவுக்கு வருவது என்றால்..

நல்ல காரியம் செய்தீர்கள்.. 'ராஜபார்வை' பார்த்தது, விஷூவலாக பார்த்ததின் அனுபவத்தில் இன்னும் கனமான உணர்வுகளை கிளறிச் சென்றிருக்குமே.. அந்த 'அந்திமழை..' முந்திக் கொண்டு நினைவில் பொழிகிறது!..

தொடர்வதற்கு நன்றி, பாசமலர்!

Geetha Sambasivam said...

சரிதான்! ஜாக்பாட் பரிசெல்லாம் அறிவிச்சிருக்கீங்களா? எத்தனை லக்ஷம்? :))))))

உங்களோட இன்னொரு கேள்விக்கு விடை எனக்கு ஒரு இன்ட்யூஷனாக சிந்தசைசர் பதிவிலே தோன்றியது. முக்கியமாக அதை நடத்தும் ஆன்மிகப் பெரியவர் ஒருவர் நினைவில் வந்தார். அது குறித்துச் சொன்னால் சிரிப்பாங்களோ என்னமோ! ஆனால் அதையே ஊகித்தேன். தம்பி வந்ததும் அதுக்குத்தான் என நினைத்தேன். அப்படியே நடந்து வருகிறது. இதை என்னனு சொல்றதுனு புரியலை.

Thoduvanam said...

முதலில் பூவனம் என்பதும் ஜீவி என்பதுமே தங்கள் பகிர்வின் பக்கம் இழுத்தது மென்மையாய் வெகு எதார்த்தமான நடை...
மீண்டும் வருகின்றேன்...
வாழ்த்துக்கள்..
அன்புடன்

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//..தம்பி வந்ததும் அதுக்குத்தான் என நினைத்தேன். அப்படியே நடந்து வருகிறது. இதை என்னனு சொல்றதுனு புரியலை.//

'ம்யூசிக் தெரபி'யா என்று சம்சயித்த உங்கள் உடனடிப் பின்னூட்டத்தைப் படித்ததும் 'அட!' என்று அடைந்த வியப்பைத் தெரிவிக்க சட்டென்று 'ஜாக்பாட்' நினைவு தான் வந்தது.
ஜாக்பாட் தான் இப்போதெல்லாம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறதே!

பலவித முயற்சிகள் செய்தும், சில விஷயங்கள் நினைக்கிற படி நடக்காமல் போகும். அந்த சமயங்களில் அது பற்றி ஏற்படும் சலிப்பு மேற்கொண்டான முயற்சிகளுக்கு தடையாய் இருக்கும். ஒரு விட்டேர்த்தியான மனநிலை.

இந்த சமயத்தில், நடைமுறை வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் சில ஈடுபாடுகள், அந்த விட்டேர்த்தியான போக்கில் இருக்க விடாது, செயல்படச் செய்து விடும். தம்பிக்காக போன கண் தம்பி வந்தும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை;
அவர் இருந்து நடத்தி வைக்க வேண்டிய தம்பியின் கல்யாணம், காலத்தின் கோலத்தில் முடியாமல் போகிறது. தம்பியின் பெண்ணை தன் பெண்ணாய் நினைக்கும் மனவேகம்
அவள் திருமணத்தை நல்லபடி நடத்தி வைக்க அவாவுகிறது.அந்த அவாவே அவர் கொள்ளும் விரக்தியைத் துறத்தியடிக்கிறது. அடுத்து நடக்க வேண்டியவைக்கு உந்தித் தள்ளுகிறது.

கதை என்றாலும் கூட 'மாயமாய்' எதுவும் நடந்துவிட்டதாகச் சொன்னால், படிப்பவர்கள் அதிலிருந்து அன்னியப்பட்டுப் போய்விடுவார்கள். யதார்த்தம் சித்தியாக யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஞ்ஞானப் பூர்வமாக அமைத்தால், விஷயத் தெளிவு கிடைக்கும். அதற்காகவே யோசித்த பொழுது, 'ம்யூசிக் தெரபி' நினைவில் தட்டுப்பட்டது. அதையே நீங்களும் சொல்லிவிட்டீர்கள். அப்படி நீங்களும் வழிமொழிந்ததே மேற்கொண்டான கதை போக்குக்கு
சரி சொல்லி, மனத்தில் 'டிக்' அடிக்க வைத்தது.

சரி. அதை எப்படி விவரமாய்ச் சொல்வது என்பது தான் இப்பொழுது வேலையாகிப் போயிருக்கிறது.

//டாகட்ர் சொல்லும் சிகிட்சை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் போல! எல்லோரையும் பாடச் சொல்வாரோ. இசையால் முடியாதது எதுவும் உண்டா?
இசை அற்புதங்கள் செய்யும்.//

..இதையே கோமதியம்மா கூட எவ்வளவு அழகாத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள், பாருங்கள்!

பகிர்தலுக்கு நன்றி.

ஜீவி said...

@ Kalidoss Murugaiya

தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சார்!

இந்தப் பக்கம் இழுத்த காரணமும் ரொம்பவும் இதமாகத் தான் இருக்கிறது. 'பூவனம்' தங்களுக்குப் பிடித்துப் போனது பற்றி ரொம்பவும் சந்தோஷம்.

அடிக்கடி வாருங்கள், சார்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//..தம்பி வந்ததும் அதுக்குத்தான் என நினைத்தேன். அப்படியே நடந்து வருகிறது. இதை என்னனு சொல்றதுனு புரியலை.//

'ம்யூசிக் தெரபி'யா என்று சம்சயித்த உங்கள் உடனடிப் பின்னூட்டத்தைப் படித்ததும் 'அட!' என்று அடைந்த வியப்பைத் தெரிவிக்க சட்டென்று 'ஜாக்பாட்' நினைவு தான் வந்தது.
ஜாக்பாட் தான் இப்போதெல்லாம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறதே!

பலவித முயற்சிகள் செய்தும், சில விஷயங்கள் நினைக்கிற படி நடக்காமல் போகும். அந்த சமயங்களில் அது பற்றி ஏற்படும் சலிப்பு மேற்கொண்டான முயற்சிகளுக்கு தடையாய் இருக்கும். ஒரு விட்டேர்த்தியான மனநிலை.

இந்த சமயத்தில், நடைமுறை வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் சில ஈடுபாடுகள், அந்த விட்டேர்த்தியான போக்கில் இருக்க விடாது, செயல்படச் செய்து விடும். தம்பிக்காக போன கண் தம்பி வந்தும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை;
அவர் இருந்து நடத்தி வைக்க வேண்டிய தம்பியின் கல்யாணம், காலத்தின் கோலத்தில் முடியாமல் போகிறது. தம்பியின் பெண்ணை தன் பெண்ணாய் நினைக்கும் மனவேகம்
அவள் திருமணத்தை நல்லபடி நடத்தி வைக்க அவாவுகிறது.அந்த அவாவே அவர் கொள்ளும் விரக்தியைத் துறத்தியடிக்கிறது. அடுத்து நடக்க வேண்டியவைக்கு உந்தித் தள்ளுகிறது.

கதை என்றாலும் கூட 'மாயமாய்' எதுவும் நடந்துவிட்டதாகச் சொன்னால், படிப்பவர்கள் அதிலிருந்து அன்னியப்பட்டுப் போய்விடுவார்கள். யதார்த்தம் சித்தியாக யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஞ்ஞானப் பூர்வமாக அமைத்தால், விஷயத் தெளிவு கிடைக்கும். அதற்காகவே யோசித்த பொழுது, 'ம்யூசிக் தெரபி' நினைவில் தட்டுப்பட்டது. அதையே நீங்களும் சொல்லிவிட்டீர்கள். அப்படி நீங்களும் வழிமொழிந்ததே மேற்கொண்டான கதை போக்குக்கு
சரி சொல்லி, மனத்தில் 'டிக்' அடிக்க வைத்தது.

சரி. அதை எப்படி விவரமாய்ச் சொல்வது என்பது தான் இப்பொழுது வேலையாகிப் போயிருக்கிறது.

//டாகட்ர் சொல்லும் சிகிட்சை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் போல! எல்லோரையும் பாடச் சொல்வாரோ. இசையால் முடியாதது எதுவும் உண்டா?
இசை அற்புதங்கள் செய்யும்.//

..இதையே கோமதியம்மா கூட எவ்வளவு அழகாத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள், பாருங்கள்!

பகிர்தலுக்கு நன்றி.

ஜீவி said...

@ Shakthi Prabha

தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, ஷக்தி!

பதியும் பார்வை வழியே, இந்தண்டை அந்தண்டை வழுவி விடாமல் தீர்க்கமாய்ப் பார்த்துத் தொடர்வதற்கு மிக்க நன்றி. நீங்கள் பார்த்த பார்வையும் மேற்கொண்டு தொடர்வதற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.

தொடர்ந்து வருகை தாருங்கள்..

Geetha Sambasivam said...

நன்றி. இவ்வளவு தூரம் வந்த பிறகு என்னோட சம்சயத்தையும் சொல்லிடறேன். சிந்தசைசர் பதிவிலேயே எனக்குக் காரணமே இல்லாமல் கணபதி சச்சிதாநந்த சுவாமிகளும், அவருடைய ம்யூசிக் தெரபியும் நினைவில் வந்தது. அதைச் செய்யலாமோ இந்தத் தம்பி என்றும் தோன்றியது. இந்தப் பதிவைப் படித்ததும் என்னோட வியப்பை அடக்க முடியவில்லை. :))))))))

கணபதி சச்சிதாநந்த சுவாமிகளை நேரில் கண்டதில்லை; ஆனால் பொதிகை/தூர்தர்ஷன் பாரதி எப்போது ஒளிபரப்பினாலும் தவறாமல் பார்த்துவிடுவேன். அந்தச் சமயம் மனதில் ஏற்படும் ஓர் ஆனந்தம் அனுபவிச்சாலே புரியும்.

கோமதி அரசு said...

கண்பதி சச்சிதானந்த சுவாமிகள் இசை மூலம் நோயைக் குணப்படுத்தலாம் என்பார்.(தன் வந்திரி பெயர் தான் அவர் ஆசிரமத்திற்கு வைத்து இருக்கிறார்) நானும் அவர் நிகழ்ச்சியை வெகு நாட்களுக்கு முன் விஜய் டீவி என்று நினைக்கிறேன் அதில் casio வாசித்து அதைப் பற்றி அவர் பேசியதை கேட்டு இருக்கிறேன். கீதா அவர்கள் சொல்வது போல் தம்பி விடாமல் வயலின் வாசிப்பாரா !

நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே!
என்ற பாரதியாரின் வரிகளை மெய்பட வைப்பது போல
இசை நோன்பால் கண்கள் உயிர்ப்பு பெறும் என நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

தன்வந்திரி பெயர் இல்லைனு நினைக்கிறேன் கோமதி அரசு. தத்த பீடம் என்ற பெயரிலேயே நான் பார்த்திருக்கிறேன். தத்தாத்ரேயரைத் தான் குருவாகக் கொண்டிருக்கிறார்.

ஜீவி said...

சுவாமிகளைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி, கீதாம்மா.

இந்தக் கதையின் 'அவருக்கு'ப் பார்வை திரும்ப வேண்டுமென்று மனமொப்பி நினைத்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள். இந்தக் கதையும் ஒரு இசைக்குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இசையை சம்பந்தப்படுத்திய சிகிச்சை முறை சுவாமிகளது. ஆக, இரண்டையும் சேர்த்துப் பார்த்து மனசின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த சுவாமிகளின் 'மியூசிக் தெரபி'யே வைத்தியமாக உங்கள் மனசில் பளிச்சிட்டிருக்கிறது. முன்பு டிவியில் பார்த்த விஷுவல் காட்சிகளும் இந்த எண்ண வேகத்திற்கு துணை புரிந்திருக்கின்றன. ஆக, எல்லாவற்றிற்கும் ஏதோ காரணம் உண்டு. அது இருக்கவே தான் நினைவுகளும் அதைப் பற்றிக் கொண்டு சுழல்கின்றன.

தங்கள் மீள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

சுவாமிகள் பற்றிய தங்கள் தகவல்களுக்கும் மிக்க நன்றி, கோமதிம்மா.

புரொபசர் மித்ரா 'ம்யூசிக் தெரபி' சிகித்சை அளிக்கவே வந்திருக்கிறார்.
இசையின் மேல் மோகம் கொண்டோருக்கு இந்த தெரபி மிக சீக்கிரத்தில் பலனளிக்கும் என்பதாலேயே டாக்டர் சாந்தி, இந்த வைத்தியத்தில் தேர்ந்த புரொபசரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வைத்தியம் எப்படி சித்தியாகிறது என்பதை மேற்கொண்டு பார்க்க முயல்வோம்.

கோமதி அரசு said...

தன்வந்திரி பெயர் இல்லைனு நினைக்கிறேன் கோமதி அரசு. தத்த பீடம் என்ற பெயரிலேயே நான் பார்த்திருக்கிறேன். தத்தாத்ரேயரைத் தான் குருவாகக் கொண்டிருக்கிறார்.//

கீதா நீங்கள் சொல்வது சரிதான்.

dondu(#11168674346665545885) said...

//அந்த 'பார்..பார்' என்கிற வார்த்தையே அதுவே எல்லாமுமாய் பிர்மாண்டமாய் எழுந்து என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.//
வரவிருக்கும் நிகழ்வின் கட்டியமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails