மின் நூல்

Thursday, February 2, 2012

பார்வை (பகுதி-25)

                    அத்தியாயம்--25       

திர்பார்த்த மாதிரியே எல்லாம் அமைந்ததில் ஊர்மிளாவுக்கு ஏக குஷி.

பரிட்சையின் 'கதை அலசல்' பேப்பருக்கு 'பார்வை' கதையைத்தான் எடுத்துக் கொண்டிருந்தாள்.  முதல் நாள் கணவனோடு அந்தக் கதை பற்றி விவாதித்தது பரிட்சை எழுத சுலபமாக இருந்தது.    அந்தக் கதையின் நிகழ்ச்சிப் போக்குகள் ஒன்று மாற்றி ஒன்று நினைவுக்கு வந்து ஒரு மணி நேரத்தில் மனசுக்குத் திருப்தியாய் பரிட்சை எழுதி விட்டு ஹாலை விட்டு வெளியே வந்த பொழுது பெருமையாக இருந்தது.

வெளியே வந்ததும் இந்த சந்தோஷத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று துடிப்பாக இருந்தது.  அவளுக்குத் தெரிந்த ஓரிரண்டு பேரை தேர்வு எழுதப் போவதற்கு முன்னாடியே மரத்தடிகளில் உட்கார்ந்து ஆளுக்கொரு புத்தகத்தை அவர்கள் புரட்டிக் கொண்டிருக்கும் பொழுது பார்த்தாள்.  அவர்களில் யாரும் இன்னும் தேர்வை எழுதி முடித்து விட்டு வெளியே வரவில்லை.  சுற்று முற்றும் பார்த்த பொழுது சுற்றுப்புறம் பூராவுமே வெறிச்சோடிக் கிடந்தது.  பார்வைக்குத் தட்டுப்படும் கொஞ்ச தூரத்தில் வயசான ஒருத்தர் நியூஸ் பேப்பர் ஒன்றில் ஆழ்ந்திருந்தார்.
அவர் தன் பெண்ணை பரிட்சைக்குக் கொண்டு விட வந்தவராய் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள். இல்லாமலும் இருக்கலாம்.  அடுத்த கணம் இதையே கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் ஒரு கதை கிடைக்கும் போலிருந்தது. கிடைத்தால் லஷ்மணன் ரொம்பவே மகிழ்ந்து போவார்.

அந்த மரத்தடி நண்பி சொன்ன ஒன்று இப்பொழுது ஊர்மிளாவின் நினைவுக்கு வந்தது.  தனக்குத் தெரிந்தவளைப் பார்த்த உற்சாகத்தில், "ஹாய், உஷா! நீயும் இந்த பரிட்சைக்கு வந்திருக்கையா? சர்ப்ரைஸா இருக்கே!" என்றாள்.

"நான் கேட்க நினைத்ததை நீ கேக்கறையா?" என்றாள் உஷா.  ஊர்மிளாவுக்கு அந்த பதில் சொரேல் என்றிருந்தது.  தான் எழுத வந்ததில் அவளுக்கு என்ன ஆச்சரியம் என்று தெரியவில்லை. இவள் இப்படி பதில் சொல்லும் அளவுக்கு தானும் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அடுத்த நிமிஷமே அதை மறந்து விட்டு, "உன் பிரப்ரேஷன்லாம் எப்படிடீ?" என்று அவள் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தைப் பார்த்தாள்.  அது, டாக்டர் மு.வ.வின் 'கரித்துண்டு'.

"என்னடி, அரதப் பழசா இருக்கே?.. சமீபகால புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கலாமிலே" என்றாள்.

"எல்லாம் காரணத்தோடத் தான்.." என்று சொன்ன உஷா, சொன்ன காரணம் தான் ஊர்மிளாவுக்குத் திகைப்பாய் இருந்தது.  'ஊர்மிளா! இந்த பரிட்சை பேப்பர் திருத்தறவங்களுக்கு,  பரிச்சயம் உள்ள சப்ஜெக்ட்டா நாம எழுதப் போறது இருக்கணும்னு நான் நெனைக்கறேன்.  புதுசா எதையாவது எழுத எடுத்திண்டா நாம சொல்ல வர்றது அவங்களுக்குப் புரியாமப் போகலாம்..  அதுனாலே தான் மு.வ. என்னோட செலக்ஷன்..." என்றாள்.  "இன்னொண்ணும் தெரிஞ்சிக்கோ.." என்று அவளே தொடர்ந்தாள். "மு.வ. ஒரு பேராசிரியாய் இருந்தவர் இல்லையா?.. அதனாலே அவர் கிட்டே இவங்களுக்கு ஒரு மரியாதை, சாஃப்ட் கார்னர் எல்லாம் உண்டு.  இவங்களும் அவரை நிறையப் படிச்சிருக்க வாய்ப்பு இருக்கு.  அதான் என்னோட செலக்ஷன், மு.வ!.  எப்படி என்னோட சாய்ஸ்?..  நான் என்ன எழுதினாலும், நான் எழுத எடுத்திண்டவருக் காக மார்க் கிடைச்சிடும்.. என்ன சொல்றே?" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு ஊர்மிளாவுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படில்லாம் யோசிக்கறாங்கன்னு அவளுக்குத் திகைப்பா இருந்தது.  'ஒரு வேளை உஷா சொல்ற மாதிரியே இருந்து விட்டால்?..   பட்ட சிரமம், தயாரிப்பு அத்தனையும் அவ்வளவு தானா?.. ஏன் இந்த மாதிரி கோணத்தில் சிந்திக்க லஷ்மணனால் கூட முடியாது போயிற்று?'--என்று எண்ணுகையிலேயே, கணவன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.  செல்லிலாவது அவனைக் காண்டாக்ட் பண்ணி இந்த விஷயத்தைச் சொல்லி அவன் ஆறுதலைப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்ட தருணத்திலேயே, 'அசடே! இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கிறையா?  உன் ப்ரப்பரேஷன் எக்ஸலண்ட்! கோ அஹெட்!' என்று அவன் தன்னை உற்சாகப்படுத்துவது போல அவள் நினைவில் படிந்தது.  அந்த உற்சாகம் கொடுத்த தெம்பில் தான் தேர்வு தொடங்குவதற்கு கால்மணி முன்னாலான முதல்மணி அடித்ததும் பரிட்சை ஹாலுக்குள்ளேயே அவள் போனாள்.

வீட்டிற்குப் போனால் கணவன் இருப்பானா என்று தெரியவில்லை.  செல்லில் தொடர்பு கொள்ளலாமா என்ற எண்ணத்தைத் தவிர்த்தாள். காலம்பற விடியறத்தேயே கன்னிமாரா போக வேண்டும் என்று சொல்லியிருந்தான்.  'காந்தளூர் சாலை' சரித்திர நாவலில் பல்லக்கில் அந்த இளவரசி வேறு மயங்கிக் கிடக்கிறாள். அவளுக்கும் ஒரு வழி பண்ண வேண்டும்.  அதற்காகத் தான் கன்னிமாரா என்று அவளுக்கும் தெரியும்.

நேரே கன்னிமாராவிற்கே போய் லஷ்மணனைப் பார்த்து விட வேண்டுமென்று ஊர்மிளாவிற்குத் தோன்றிய சமயத்தில் அந்தத் தேர்வு மையத்தின் மணல்வெளிப் பிரதேசத்தில் வேகமாக நுழைந்து ஸ்கூட்டர் பார்கிங்கில் வண்டியை விட்டு விட்டுத் திரும்பிய லஷ்மணனைப் பார்த்த சந்தோஷத்தில் "இப்போத் தான் நெனைச்சேன்; உடனே வந்திட்டீங்களே?" என்று மலர்ந்தாள்.

"நினைத்தேன்; வந்தாய்!  நூறு வயது'ன்னு பாடினாக் கூட ஓக்கே தான்! கூடற வயசை ஞாபகப்படுத்தின மாதிரியும் இருக்கும்!" என்று அவன் சொன்ன போது,  "வவ்வே.." என்று அழகு காட்டியவளைக் கண்டு லஷ்மணன் சிரித்தான்.
"இந்த ஆக்ஷன் எப்படி வந்தது தெரியுமா?"

"எந்த ஆக்ஷன்?"

"இந்த வவ்வே தான்."

"அது எப்படி வேணா வந்திருக்கட்டும்.  ஆனா, இதுக்கு 'வவ்வே'ன்னு இந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா?"

"முதல்லே ஆக்ஷன்.  அப்புறம் தான் அதுக்கேத்த பேர். இல்லையா?"

"இதுக்கு மட்டும் பேருக்கு ஏத்த ஆக்ஷன்னு இருக்கக் கூடாதா, என்ன?"

"போதும்மா, தாயே! எனக்குத் தலைக்கு மேலே வேலை கெடக்கு. ஒரு கிரைம், ஒரு சோஷியல், ரெண்டு ஹிஸ்டாரிகல்னு வண்டி ஓடிகிட்டிருக்கிருக்கு.  கிரைம்லே கதாநாயகி பெருநிலச்செல்வி அந்த திருட்டு கும்பல் கிட்டே மாட்டிண்டிருக்கா.  ஹிஸ்டாரிக்கல் காந்தளூர் சாலையிலோ கந்தர்வ கன்னியாய் மோஹனா பல்லக்கில் மயங்கி கிடக்கறா.."

"என்ன கரிசனம்?.. அவளைத் தண்ணி தெளிச்சு எழுப்ப வேண்டியது தானே?" என்று வெகுண்டாள் ஊர்மிளா.  "அதுசரி, கிரைம் கதாநாயகியும், சரித்திரக் கதாநாயகியும் இண்டர்சேஞ்ச் ஆயிட்டாங்களா,  என்ன?.. நேத்திக்கு கிரைம் கதாநாயகி பேர்னா மோஹனான்னு சொல்லியிருந்தீங்க?" என்று அவள் பேச்சில் குறும்பு கொப்பளித்தது.

"ஏதோ ஒண்ணு.  இதெல்லாம் பெரிய விஷயமில்லை.  தனித்தனியா ரெண்டு கதைக்கும் அடுத்து வர்ற அத்தியாயத்தை யோசிச்சாலும் பின்னாடி ஒண்ணுக்கு ஒண்ணு வெட்டி ஒட்டி கனெக்ட் பண்ணிக்கலாம்.  நான் அதைப் பாத்துக்கறேன்."

"கன்னிமாரா போகணும்னு சொல்லியிருந்தீங்களே?"என்று கேட்ட பொழுது ஊர்மிளாவின் புருவங்கள் உயர்ந்தது அவனை வெகுவாக டிஸ்டர்ப் செய்தது.

இருந்தாலும் ஒருவழியாய் மனசை சமனப்படுத்திக் கொண்டு சொன்னான். "கன்னிமாரா போனேனா?..  போய் நிறைய குறிப்பெல்லாம் எடுத்திண்டிருக்கேன்.  இராஜராஜசோழன் மெய்க்கீர்த்தி ஒண்ணு.  'தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜத் தேவர்' ன்னு முடியும். இந்த ஒத்தை வரிலே தான் கதையோட அத்தனை அழுத்தமும் குவியறது.  நீயே பாரேன். இந்த 'காந்தளூர் சாலை' என்ன அருமையா டெவலப் ஆகப் போறதுன்னு."

"அப்போ நம்பிக்கை கிடைச்சாச்சு.  இப்பவே பெருநிலச் செல்வியை மயக்கத்லேந்து எழுப்பிடலாம்னு சொல்லுங்க."

"ஹஹ்.. இந்தக் குறும்பு தானே வேண்டாங்கறது?.."

"பின்னே என்னங்க?.. அவளும் எத்தனை காலம் தான் மயக்கத்லே கிடப்பா.. சரியா போன மாசம் ஒண்ணாம் தேதி அவளை மயக்கத்தில் ஆழ்த்தினது. அதுக்கு மேலே ஒரு வரி எழுதலே.  ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போறது.."

"ஒண்ணும் ஆகாது... தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி..... கவசம் மாதிரி அந்த மெய்க்கீர்த்தி இருக்கு..  நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே. அவளை மயக்கத்திலிருந்து எழுப்பினதும் மறுவேலையா..."

"அதையெல்லாம் வீட்டுக்குப் போய் வைச்சிக்கலாம். அதுக்கு முன்னாடி ஒண்ணு."

"சொல்லு." என்று அவன் சொன்ன போதுதான் அந்த எக்ஸாம் எழுதிவிட்டு அவளுக்குப் பின் வந்த முதல் ஆளாய் ஒருத்தர் வெளியே வந்து கொண்டிருந்தார்..  உஷா வருகிறாளா என்று பார்த்தாள்.  ஊஹூம்.  'கரித்துண்டு' மட்டுமில்லை, 'கள்ளோ காவியமோ',  'அகல் விளக்கு' என்று எல்லாத்தையும் ஒருகை பார்க்கிறாளோ என்று நினைத்துக் கொண்டாள்.

"இந்த எக்ஸாம் பேப்பர்லாம் திருத்தறவங்க டேஸ்ட் பத்தி என் ப்ரண்ட் ஒருத்தி ஒரு ஒப்பீனியன் சொன்னா. அப்போ, மு.வ. பத்தி பேச்சு வந்தது." என்று அவள் சொன்ன போது, லஷ்மணனின் முகம் பிரகாசமடைந்தது.

"ஓ. ஃபைன்.. மு.வ.வோட 'கரித்துண்டு' படிச்சிருக்கையா?.."

"சரியாப் போச்சு! நீங்களும்.."

"பின்னே?.. மு.வ.ன்னா மு.வ. தான்.  ஹி இஸ் கிரேட்! ஒரு காலத்தில் காலேஜ் ஸ்டூடன்ஸ் எல்லாருக்கும் அவர் எழுத்துன்னா ஒரு கிரேஸ்.." என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் லஷ்மணன்.

"அதான் விஷயமே.  அந்தக் காலத்திலே ஸ்டூடன்ஸா இருந்தவங்க, இப்போ பேப்பர் திருத்தறவங்களா இருந்தாங்கன்னா..."

"இருந்திட்டுப் போகட்டுமே! நீ என்ன சொல்ல வர்றேன்னு தெரியலை.  மு.வ.வைப் பிடிச்சவங்களுக்கு பண்பட்ட எல்லா எழுத்தையும் பிடிக்கும்.  அப்படிப்பட்டவங்க எக்ஸாம் பேப்பரைத் திருத்தினா, உன்னைப் பொருத்த மட்டில் அது ஒரு அட்வான்ட்டேஜ் தான்.  இந்த 'பார்வை' சப்ஜெக்ட் நிச்சயம் அவங்களைக் கவரும்."

"எதுன்னாலும் அசர மாட்டீங்களே! இப்படி ஏதாச்சும் ஒண்ணு ரெடியா கைவசம் வைச்சிருக்கறதல்ல ஒண்ணும் கொறைச்சலில்லை" என்று வெளிக்குச் சொன்னாலும்  ஊர்மிளாவுக்கு அவன் சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்குக் கிடைத்த நிம்மதியில், வழக்கத்தை விட இன்று லஷ்மணன் அழகாகத் தெரிவதாக மனசுக்குப் பட்டது.

"இன்னிக்கு என்ன முழுநாளும் ஆபிசுக்கு டேக்கா கொடுத்திட்டே தானே?"

"ஏறக்குறைய அப்படித்தான்."

"அது என்ன ஏறக்குறைய?"

"ஒண்ணுமில்லே.  ஒரு முன்னேற்பாடா அப்படிலாம் சொல்லிக்கறது தான்."

"வர வர நீ பேசறதெல்லாம் ஒண்ணும் புரியவே மாட்டேங்கறது. ஏதோ யட்சிணி உள்ளிருந்து பேசறது மாதிரி."

"யட்சிணி! ஹை! பேரு நன்ன இருக்கே! அடுத்த கதை நாயகி பேர் இது தான்."

"போனாப் போறதுன்னு விட்டுக் கொடுக்கறேன். அப்போ ஒண்ணு செய்."

"அந்த 'பார்வை' கதை இன்ஷ்பிரேஷனா நமக்குத் தோணின கதையை நம்ம பார்வைலே வேறே மாதிரி டெவலப் பண்ணணும்.  அவ்வளவு தானே?"

"நீதான் வெட்டிண்டு வான்னா, கட்டிண்டு வருவேயே, கண்ணு! கோ ஆன் வித் யுவர் ஒர்க்..  நடுவிலே 'காவேரி' ஆசிரியரோட பேசி கதை ரெடிங்கற நியூஸை கன்ஃபர்ம் பண்ணிடறேன்."என்று செல்லை பாக்கெட்டிலிருந்து எடுத்தான் லஷ்மணன்.

"கதையின் அவுட்லைனே ரெடியாகலே.  அதுக்குள்ளாற கன்ஃபர்மேஷனா?.. என்ன கதையா, இருக்கு?.."

"எதுக்குன்னா இப்பவே கஃன்பர்ம் பண்ணிட்டா அடுத்த இதழில் விளம்பரம் கொடுக்க தொடர்கதைக்குத் தலைப்பு கேப்பாங்க.. அப்படி தலைப்பு கேக்கறது தான் நம்மை உசுப்பி விடற மாதிரி! அப்படி கேக்கற நேரத்லே மனசிலே என்ன படறதோ, அதான் தலைப்பு. தலைப்பு கொடுத்து கமிட் ஆனாத்தான் கதையே தோணும். இதானே வழக்கம். என்ன புதுசா கேக்கறே?"

"அந்த விஜி என்னமாய் எழுதியிருக்கார் பாருங்க.. அந்த மாதிரி இந்தப் புதுத் தொடர்கதைக்காவது ஏதாவது புதுசா யோசனை பண்ண மாட்டீங்களா.."

"எல்லாத்துக்கும் நான் ரெடி.  நீ ரெடியான்னு சொல்லு."

"நான் என்னத்துக்கு ரெடியாகணும்?.."

"விஜி மாதிரி எழுத முயற்சித்தா மாசத்துக்கு ஒண்ணு தான் எழுத முடியும்.  இப்ப மாதிரி நாலு பத்திரிகைலே நாலு தொடர்கதை எழுத முடியாது. வர்ற இன்கம்லே முக்காவாசி கட்டாயிடும். இப்போ சொல்லு. இதுக்கா, அதுக்கா எதுக்கு ரெடியாகணும் சொல்லு."

"............................."

"'ஆகாசகங்கை'லே சினிமாச் செய்திலாம் எழுதறாரே உத்தமபுத்திரன், அவர் நேத்திக்குச் சொன்னார்.  டைரக்டர் சந்திரமோகன் என் கதை ஒண்ணை எடுத்து வைச்சிண்டு ரொம்ப சிலாகிச்சாராம்.  சினிமாக்கேத்த அவுட்பிட்ன்னாராம்.  'இந்த எழுத்தாளர் எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர் தான். நான் வேணா அவர் கிட்டே சொல்லி கதையை வாங்க ஏற்பாடு செய்யட்டுமான்'னு அவர் கிட்டே உத்தமபுத்திரன் கேட்டாராம்."

"அடிசக்கை.  அதுக்கு சந்திரமோகன் என்ன சொன்னாராம்?"

"வகையா ஏதாவது தயாரிப்பாளர் கிடைச்சதும் சொல்றேன்னு சொல்லியிருக்காராம்."

"உம்? வகையா அவருக்குக் கிடைக்க என்ன செய்யறது?"

"அவர் அப்படி சொல்லிட்டாரேன்னு உத்தமபுத்திரனும் இந்த மேட்டரை விட்டுடலையாம்.  வர்ற இதழ் 'ஆகாசகங்கை'லே ஒரு தயாரிப்பாளரைப் பேட்டி காணப் போறாங்களாம்.  ஒரு வித்தியாசமா, அந்தத் தயாரிப்பாளரைப் பேட்டி காண்றது டைரக்டர் சந்திரமோகனாம்.  அந்த சமயத்தில் என் கதையை பிரஸ்தாபித்து ரெண்டு பேரும் விவாதிக்கறதா உத்தமபுத்திரன் ஏதோ அரேன்ஜ் பண்ணியிருக்காராம்.  எப்படிப் போர்றதுன்னு பாக்கலாம்."

"எது எப்படிப் போனாலும் அந்த விஜியை பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச நாலு பத்திரிகைகாரங்ககிட்டே சொல்லி வையுங்க.. நன்னா எழுதறார்; அவருக்கும் ஒரு வழி கிடைக்கட்டும்."

"டன்" என்றான் லஷ்மணன்.  வருங்காலத்தின் வயிற்றில் இருப்பதைத் தெரியாது சொன்ன வார்த்தையாக அது இருக்கப் போவது அந்த நேரத்தில் அந்த இரண்டு பேருக்குமே தெரியாது.

(இன்னும் வரும்)

21 comments:

கோமதி அரசு said...

//ஊர்மிளாவுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படில்லாம் யோசிக்கறாங்கன்னு //

ஒரு விஷயம் ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொரு மாதிரி தெரியும் அது உண்மைதான்.

அதுக்கு தான் கலந்துரையாடல் செய்கிறார்கள். நல்ல கருத்துக்கள் யாரிடமிருந்தாவது கிடைத்து விடும்.

கோமதி அரசு said...

மு.வ.வைப் பிடிச்சவங்களுக்கு பண்பட்ட எல்லா எழுத்தையும் பிடிக்கும். அப்படிப்பட்டவங்க எக்ஸாம் பேப்பரைத் திருத்தினா, உன்னைப் பொருத்த மட்டில் அது ஒரு அட்வான்ட்டேஜ் தான். இந்த 'பார்வை' சப்ஜெக்ட் நிச்சயம் அவங்களைக் கவரும்."

//"எதுன்னாலும் அசர மாட்டீங்களே! இப்படி ஏதாச்சும் ஒண்ணு ரெடியா கைவசம் வைச்சிருக்கறதல்ல ஒண்ணும் கொறைச்சலில்லை" என்று வெளிக்குச் சொன்னாலும் ஊர்மிளாவுக்கு அவன் சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்குக் கிடைத்த நிம்மதியில், வழக்கத்தை விட இன்று லஷ்மணன் அழகாகத் தெரிவதாக மனசுக்குப் பட்டது.//

லக்ஷ்மணன் சொல்வது போல் பார்வை சப்ஜெகட் அவர்களை கவர்வது உறுதி.

தனக்கு சார்பாய் பேசியதில் ஊர்மிளை லக்ஷ்மணனின் அழகை நினைப்பது
பெண்களின் மனநிலையை எடுத்து காட்டுகிறது.

கோமதி அரசு said...

"எது எப்படிப் போனாலும் அந்த விஜியை பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச நாலு பத்திரிகைகாரங்ககிட்டே சொல்லி வையுங்க.. நன்னா எழுதறார்; அவருக்கும் ஒரு வழி கிடைக்கட்டும்."

"டன்" என்றான் லஷ்மணன். வருங்காலத்தின் வயிற்றில் இருப்பதைத் தெரியாது சொன்ன வார்த்தையாக அது இருக்கப் போவது அந்த நேரத்தில் அந்த இரண்டு பேருக்குமே தெரியாது.//


நல்ல வழி கிடைத்து விட்டது.
அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
அறிய ஆவலை தூண்டுகிறது.

G.M Balasubramaniam said...

அலசல் ஒரு புதுக் கதையின் ஆரம்பமா.? தொடர்கிறேன். கண்வன் மனைவி ( லக்ஷ்மணன், ஊர்மிளா )இருவரும் ஜர்னலிஸ்ட்களா.?

Geetha Sambasivam said...

பார்வைக்குத் தட்டுப்படும் கொஞ்ச தூரத்தில் வயசான ஒருத்தர் நியூஸ் பேப்பர் ஒன்றில் ஆழ்ந்திருந்தார்.
அவர் தன் பெண்ணை பரிட்சைக்குக் கொண்டு விட வந்தவராய் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள். இல்லாமலும் இருக்கலாம். அடுத்த கணம் இதையே கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் ஒரு கதை கிடைக்கும் போலிருந்தது. கிடைத்தால் லஷ்மணன் ரொம்பவே மகிழ்ந்து போவார்.//

முடிச்சு இவர் கிட்டேத் தான் இருக்கோனு நினைச்சேன். பார்க்கலாம்; நல்ல திருப்பம். கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் செல்கிறது கதை.

நல்ல கருத்துக்கள் யாரிடமிருந்தாவது கிடைத்துவிடும் என கோமதி அரசு சொல்வதை ஆமோதிக்கிறேன்

ஸ்ரீராம். said...

மு.வ பற்றிய பார்வை அருமை. அதற்கு லக்ஷ்மணன் சொல்லும் பதிலும் அருமை. இரண்டுமே சரிதான். எல்லாப் பார்வைகளுமே (அவரவர் பார்வையிலும்) சரியாகவே இருக்கின்றன.

என்னதான் கதையில் வந்தாலும் 'விஜி' என்னமா எழுதியிருக்கார் பாருங்க'ன்னு வர்றது எல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுவதைச் சொன்னால் தவறாகப்படுமோ! அல்லது அது 'விஜி'க்கு ஏதோ 'நிஜமாக' வரப் போகும் 'ஒரு வாய்ப்பு'க்கான வெளிப்பாடோ....!

//பார்வைக்குத் தட்டுப்படும் கொஞ்ச தூரத்தில் வயசான ஒருத்தர் நியூஸ் பேப்பர் ஒன்றில் ஆழ்ந்திருந்தார்//

'விஜி'யோ...?

பாச மலர் / Paasa Malar said...

சரித்திர, சோஷியல், க்ரைம்...காந்தளூர்ச்சாலை, பெருநிலச்செல்வி, மோகனா.....பாத்திரக்கலவை அனுபவம்...ரசித்தேன்...

ரசித்தேன்..

//"ஏதோ ஒண்ணு. இதெல்லாம் பெரிய விஷயமில்லை. தனித்தனியா ரெண்டு கதைக்கும் அடுத்து வர்ற அத்தியாயத்தை யோசிச்சாலும் பின்னாடி ஒண்ணுக்கு ஒண்ணு வெட்டி ஒட்டி கனெக்ட் பண்ணிக்கலாம். நான் அதைப் பாத்துக்கறேன்."//

ரசித்தேன்..


//பின்னே என்னங்க?.. அவளும் எத்தனை காலம் தான் மயக்கத்லே கிடப்பா.. சரியா போன மாசம் ஒண்ணாம் தேதி அவளை மயக்கத்தில் ஆழ்த்தினது. அதுக்கு மேலே ஒரு வரி எழுதலே. ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போறது.."//

ரசித்தேன்..

அடுத்து என்ன நடக்கும்? ஆவலுடன்...

Shakthiprabha (Prabha Sridhar) said...

கணவன் மனைவியின் ஊடே நடக்கும் பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு. இயல்பான அன்பு வெளிப்பட்டிருக்கு. பார்வை கதையின் தொட்ர்ச்சியா வேற ஒரு கதைக்குள் அனுபவிச்சு எங்களையும் கூட்டிச் செல்ல உங்களால தான் முடியும்.... excelelnt.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஒருவிதத்தில் பார்க்கப் போனால், பதிவுக்கு இடும் பின்னூட்டங்கள் கூட கலந்துரையாடல் போலத்தான். சிந்தனையைக் கிளப்பும் விதமாக அமையும் பின்னூட்டங்கள், மேற்கொண்டு எழுதித் தொடர்வதற்கு பல நேரங்களில் எனக்குத் துணை புரிந்ததுண்டு.

தங்கள் கருத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

பாத்திரங்களின் மனநிலையை மாறி மாறிக் கொள்ளும் பொழுது மனிதர்களைப் படிப்பது சுலபமாக இருக்கும். சரியாகக் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்து ரசித்தமைக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு (3)

விஜியும் இந்தக் கதையின் கதாபாத்திரங்களில் ஒருவராகி விட்டார்.
அதற்கான தொடங்கல் தான், ஊர்மிளாவின் இந்த வார்த்தைகளாகத் தெரிகிறது.

தாங்களும் தொடர்ந்து வந்து ரசித்துச் சொல்ல வேண்டுகிறென்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

'பார்வை' கதை ஒரிடத்தில் முடிவதாகத் தோற்றம் கொடுத்துத் தொடர்கிறது.
அந்த தொடர்ச்சிக்குப் பாலமாக இந்த 'அலசல்' அமைந்து விட்டது. லஷ்மணன் ஒரு ஜர்னலிஸ்ட் என்று தெரிந்து விட்டது. ஊர்மிளா?.. கதையின் போக்கிலேயே சொல்கிறேன்.

தாங்கள் தொடர்ந்து வருவதில் மிக்க மகிழ்ச்சி ஜிஎம்பி சார்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தாங்கள் சொன்ன பிறகு அந்தப் பெரியவரை பின்னாடி எப்படியாவது உபயோகித்துக் கொள்ளலாமா என்றும் தோன்ற வைத்திருக்கிறது. பார்க்கலாம்..

தொடர்ந்து படிந்து பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ரெண்டு பேருக்கும் சரியாய் இருப்பது எல்லாமே சரிதான்.

மாறுப்பட்டிருப்பதற்கு மட்டும் வருவோம். விஜியிடமிருந்து விலகியே இருக்கிறேன். ஆனால், ஊர்மிளாவின் தூண்டுதல் விஜியையும் இந்தக் கதையின் ஒரு கதாபாத்திரமாக ஆக்கியது தான் விசித்திரம். அதற்கு அச்சாரமாகத் தான் அந்த வரிகளைக் கொள்ள வேண்டும். சில நிகழ்ச்சிகளும் நினைவுகளும் கதாபாத்திரங்கள் வாயிலாக நினைவு கொள்ளப் படுகின்றன. அவையே எழுத்துக்களாய் உருகொண்டு அந்தப் பாத்திரங்கள் உலா வருவதற்கு காரணமாகிப் போகின்றன. கதாபாத்திரங்கள் மூலமாக வாழ்ந்ததையும், வாழ அவாவி முடியாமல் போனதையும் சொல்லலாம். அவ்வளவு தான்.
மற்றபடி குறிப்பாக வேறொன்றுமில்லை.

'விஜியோ?'-- இந்தப் பார்வை கூட நன்றாகத் தானே இருக்கிறது.
பார்க்கலாம்.

தொடர்ந்து வந்து வாசிக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன், ஸ்ரீராம்!

G.M Balasubramaniam said...

ஒன்றைப் படிக்கத் துவங்கி விட்டால் அதைத் தொடர்வது என் சுபாவம்.படிப்பதும் மகிழ்வதும் எனக்கும்தானே. குறைகளே நிறைந்திருந்தாலும் எங்காவது நிறைவு தரும் விஷயம் இருக்கும் என்று நம்புபவன் நான். உங்கள் எழுத்தில் ஒரு வித்தியாசமான பரிமாணம் காண்கிறேன். தொடருங்கள் தொடருகிறேன். வாழ்த்துக்கள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஜீவி,

உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.

சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.html

ஜீவி said...

@ ஜிஎம்பி

தொடர்கிறேன். தாங்களும் தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்வது குறித்து மகிழ்ச்சி. மேலும் தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ Shakthiprahha

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி, ஷக்தி.

தங்கள் பதிவிலும் பதிலிட்டிருப்பதைப் பார்க்க வேண்டுகிறேன்.

மிக்க அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ Shakthiprabha

//பார்வை கதையின் தொட்ர்ச்சியா வேற ஒரு கதைக்குள் அனுபவிச்சு எங்களையும் கூட்டிச் செல்ல..//

தங்கள் ரசனைக்கு நன்றி, ஷக்தி.

இந்த வேற ஒரு கதைக்குள் இன்னும் நிறைய நிறையக் கதைகள் வரப் போவது தான் கூடுதல் போனஸ்!

தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களை பதிய வேண்டுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

//ஊர்மிளாவுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படில்லாம் யோசிக்கறாங்கன்னு //

இதைத்தான் ரூம் போட்டு யோசிக்கறதுன்ன் சொல்லுவாங்களா, அவ்வ்வ்வ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

ரூம் போட்டுத் தான் யோசிக்கணும்ன்னா, யோசிக்கும் போதெல்லாம் இருக்கற இடத்தை ரூமா நினைச்சிண்டாக் கூட போதும்!

Related Posts with Thumbnails