மின் நூல்

Saturday, November 1, 2014

கோபம்

A. எப்பொழுதெல்லாம் உங்களுக்குக்  கோபம் வருகிறது?

1. பிறர் உங்களை குற்றம் சொல்லும் பொழுது.

2. உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும் பொழுது.

3. நீங்கள் பிறரால் அலட்சியப் படுத்தப்படும்  பொழுது


B. கோபப்படுதல் உடல் நலத்திற்கு  தீங்கு என்று தெரியுமா?

1.  தெரியும்

2. தெரியாது

3. அப்படீன்னா சொல்றீங்க?

C.  கோபத்தை தவிர்க்க  முயன்றிருக்கிறீர்களா?

1.  இல்லை

2.  முயன்றதுண்டு

3. அதெல்லாம் வேலைக்கு ஆகாது.


D.  கோபப்பட்டு ஜெயித்ததுண்டா?

1.  இல்லை

2.  சிலசமயம் உண்டு

3.  ஹிஹி.. அதுக்காகத்தாங்க கோபமே


E,  கோபம் வந்தால் என்ன நிகழும்?

1.  பிபி எகிறும்.

2. படபடப்பா இருக்கும்.  கைகால் உதறும்.

3.  கண்ணைக் கட்டிவிட்ட மாதிரி.  என்ன நடக்குதுனே தெரியாது


F. வீட்லே, வெளிலிலே எங்கே அதிகமா கோபப்படுவீங்க?

1.  எல்லா இடத்திலேயும்

2.  வீட்லே நிறைய;  வெளிலே கொஞ்சம்

3.  வீட்லே தாங்க.  வெளிலே பெட்டிப்பாம்பு

G.  கோபத்திற்கும்  சொரணைக்கும் சம்பந்தம்  உண்டா?

1.  சொரணான்னா என்னங்க?

2.  உண்டு.  அதுனாலே தாங்க  கோபமே

3.  நீங்க கேக்கறதே சரியில்லை.  கோபமூட்டாதீங்க


H.  கோபம்  எப்படி வரும்?

1.  டக்குனா?

2.  நிதானிச்சு ஆற அமரவா?

3. முதல்லேயே தீர்மானம்  பண்ணியா?

I.  கோபத்தை தவிர்ப்பதற்கு  ஏதாவது  யோசனை  உண்டா?

1.  தெரியாதுங்க.

2.  உண்டு.   கோபம் வந்தா  1,2, 3,4,-ன்னு எண்ணிக்கிட்டே சமாளிச்சுப்  பாப்பேன்.

3.  பின்னாடி வருந்தியிருக்கேன். அதுனாலே இப்போ  எவ்வளவோ  பரவாயில்லை.


J. மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பான்னு  பாரதி சொல்லியிருக்கறதைப்  பத்தி  என்ன நினைக்கிறீங்க?

1.  நீங்க சொல்லித் தான் பாரதி அப்படி சொல்லியிருக்கார்ன்னு தெரியும்.

2.  பாப்பாக்கு தானே சொல்லியிருக்கார்.  நமக்கில்லை தானுங்களே?..

3.  அவரே சொல்லியிருக்கார்.  அப்ப என்னங்க கோபப்படாம இருக்க முடியுங்களா?


H.  கோபம்ன்னாலே எந்த முனிவர் நினைவு உங்களுக்கு வருகிறது?

1.  வசிஷ்டர்

2.  துர்வாசர்

3. ஜமதக்னி


-- எப்பவோ அசாத்திய கோபத்தில் இருந்த பொழுது  ஒரு காகிதமெடுத்து கிறுக்கின questionnaire  மேலே காண்பது.  பழைய காகிதங்களையெல்லாம்  குடைந்து கொண்டிருந்த போது கிடைத்தது.

சரியான  விடையோ, இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி என்று பார்த்துக் கொள்வதோ உங்கள் விருப்பம்.

கோபத்தை அடக்கக் கூடாது.  கக்கிவிடவேண்டும் என்பது சிலரது கணிப்பு.  கோபமாவது வந்த சுவடு தெரியாமல் போய் விடுமாம்;  அடக்கினால் அதுவே இரண்டு மடங்கு தீமை தரும் என்பது அவர்கள் கட்சி.

கோபப்படற மாதிரி நடிக்கறது, கோபப்படறது மாதிரி சம்பந்தப்பட்டவருக்கு அவ்வளவு  கெடுதல் விளைவிக்காதாம்.  பெரும்பாலும் குழந்தைகள் இடத்தில் இது செல்லுபடியாகுமாம். இப்படி நடிக்கறதிலே நாம விரும்பற பலனும் கிடைக்கும்;  உடல் நிலை பாதிப்பும் இந்த விஷயத்தில் இல்லைங்கறது அனுபவப்பட்டவர் ஒருவரது அபிப்ராயம்.  இதிலே இன்னொரு எதிர்மறை விஷயம் என்னன்னா,  குழந்தைகளும் இந்த மாதிரி கோபப்படறதுக்கு சின்ன வயசிலேந்தே பழகிக்குமாம்.  இதுனாலே இந்த விஷப்பரிட்சை வேண்டாம் என்கிறார் ஒரு மனநல  ஆலோசகர்.

கோபத்திற்கு எதிர்நிலை சாந்தமாம்.  எப்பவும் சாந்தமா இருக்கறது எப்பவும் ஸ்வீட் சாப்பிடற மாதிரியாம்.  அளவோட ஸ்வீட்டும்  காரமும் இருந்தால் மந்தத்தன்மை இல்லையாம்.  அதனாலே கோபத்தையும் சாந்தத்தையும் மிக்ஸ் பண்ணி சமநிலையில் அவ்வப்போது அனுசரித்துப் பாக்கலாமாம். அறவே கோபம் இல்லாமலும் அறவே சாந்தம் இல்லாமலும் இருப்பது ஒரு வாழ்க்கை அனுபவம் என்கிறார் அனுபவப்பட்ட ஒரு ஆசாமி.

ஆயிரம் சொல்லுங்கள், ஒவ்வொருத்தர் குணமும் அவர்களின் ஏற்றுக்கொள்ளலும் ஒரு மாதிரி என்பதால் அவரவருக்கு ஒத்து வர்றதை  கைக்கொள்ளலாமாம். இதுவே இக்கால வேத நெறியாம்.

ஒருத்தர் கோபம் ஒருத்தரோட போகாதாம்.  நாம யாரிடம் கோபப்படுகிறோமோ அவருக்கும் பத்திக்குமாம்.  கோபத்திற்கு எந்தக் காலத்திலேயோ யாரோ கொடுத்த சாபம் இது என்கிறார்கள் புராண ஞானம் கொண்டவர்கள்.

அந்த சாபத்தைச் செயலிழக்கச் செய்ய சில உபாயங்கள் உண்டு. கோபப் படுகிறவர் கோபத்தில் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிராளி எதுவும் பேசாமல் மெளனத்தைக் காப்பது கோபப்படுகிறவரை நிலைகுலையச் செய்ய பெரிதளவு துணை நிற்குமாம்.  ஒரு கை ஓசையில்  கொஞ்ச நேரத்தில் அவர் கோபமும் தணிந்து விடுமாம்.

எப்பப்பார்த்தாலும் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் அது செல்லாக்காசாகி விடுமாம்.  அதனாலே அளவு தெரிஞ்சு  அப்பப்போ இல்லை எப்பவோன்னு கைக்கொள்றது புத்திசாலித்தனம் என்கிறார் ஒரு விவேகி.

கோபிப்பது வேறே கோபத்திற்கு ஆளாவது வேறே என்று லெக்சர் எடுத்தார் ஒருவர்.  அதைக் கேட்கிற பாக்கியம் கிடைத்தது எனக்கு.  ஆரம்பத்தில் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது;  போகப்போக கோபிப்பவரின்  மனநிலை, கோபத்திற்கு ஆளாகுபவரின்  மனநிலைன்னு  அதை ரெண்டாப்  பிரிச்சார் அவர்.  கடைசியில்  கோபிப்பவர் நிலை, கோபத்திற்கு ஆளானவர் நிலை, இதைப் பார்ப்பவரின்  நிலை என்று மூன்றாக ஒவ்வொருவர் நிலையையும் பிரிச்சப்போ அவர் மேல் கோபம்  கோபமாக வந்தது.  இந்த மூணு நிலைலே எந்த நிலை என் நிலைன்னு நினைச்சதாலே வந்த   கோபம் அது.


கோபம் ஒரு தீ
தீக்கும் கோபம் பற்றும்
பற்றினால் பரவும்
பரவினால் சாம்பல்
சாம்பல் அழிதல்
அழிதலால் அறிதல்
அறிதலால் புரிதல்
புரிதலின் வினை தெரிதல்
தெரிதலின்மை கோபம்


-- வண்ணம் பூசி வெளிவந்த  ஒரு பத்திரிகைக் கவிதை.

(ஒரு வரியின் கடைசி வார்த்தையும், அடுத்த வரியின் ஆரம்ப வார்த்தையும்
ஒன்றாக இருக்குமாறு புனையப் பட்ட கவிதை என்று  ஒரு குறிப்பு வேறே!)


36 comments:

ஸ்ரீராம். said...

1. மூன்றுமே எனக்கு (சரியாக) ஒத்து வரவில்லை. ஆனால் கோபம் வரும்.

2. நல்ல்ல்ல்ல்ல்லாத் தெரியும்!

3. முயன்றதுண்டு. நிறைய. எனக்கு கோபம் எப்போதாவதுதான் வரும்!

4. கோபத்தால் ஜெயிக்க முடியாது என்பது என் கட்சி! அறச்சீற்றம் எல்லாம் ரொம்ப ரேர்!

5. ம்ம்ம்.... ரெண்டாவதைச் சொல்லலாம்!

6. வீட்ல, வெளில ரெண்டுமே கொஞ்சம்தான்.

7. ம்ம்ம்.... ரெண்டாவதைச் சொல்லலாமே...

8. இதற்கு 1, 2

9. ம்ம்ம்... மூன்றைச் சொல்லலாம். எதிராளியின் கோணத்தில் நம்மைப் பொருத்தி யோசனை செய்து பார்ப்பேன்.

10. சில சமயங்களில் - சில சந்தர்ப்பங்களில் அது செய்ய வேண்டும்! எப்பப் பார்த்தாலும் இல்லை! :)))

11. துர் வாசர்!!!!



ஓ... இதற்கெல்லாம் பதில் கேட்கவில்லையா? இருந்தாலும் தந்து விடுகிறேன்! தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கலந்து கொள்கிறேன்! :)))

இராஜராஜேஸ்வரி said...

(ஒரு வரியின் கடைசி வார்த்தையும், அடுத்த வரியின் ஆரம்ப வார்த்தையும்
ஒன்றாக இருக்குமாறு புனையப் பட்ட கவிதை என்று ஒரு குறிப்பு வேறே!)

அந்தாதி?

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு பகிர்வு. பிறகு கோபம் வராத நேரமாகப்பார்த்து பொறுமையாகப் படித்து சிந்திக்க வேண்டும் என எண்ணியுள்ளேன்.:)
- கோபு

G.M Balasubramaniam said...


கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். என்னை கோபக்காரன் என்பார்கள்.ஹி ஹி ஹி. கோபம் என்பது உணர்வின் ஒரு வடிகால். தேவைப்படும் இடத்தில் கோபப்பட வேண்டும் அதனால்தானோ ரௌத்திரம் பழகு என்று பாரதி சொன்னான். இதையே நாம் சொன்னால் எடுபடாது.கோபம் எல்லை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கோபப்படும்போது நாம் கோபப்படுகிறோம் என்று தெரியும் போது அடக்கிக் கொள்ளவும் தெரிய வேண்டும்

G.M Balasubramaniam said...

பல கருத்துக்களை யாரோ சொல்வது போல் எழுதி இருக்கின்றீர்கள். உங்களுக்கு அவற்றில் உடன் பாடு இல்லையா

Geetha Sambasivam said...

A.1. இல்லை

2. இல்லை

3. கோபம் வராது; வருத்தமாய் இருக்கும். நொந்து போயிடும்.


B. 1. தெரியுமே

C. 2. முயன்றது உண்டு. ஆனால் முடியலை. :)

D. 1. இல்லை.

E. 2. படபடப்பு வரும். முன்னால் எல்லாம் கைகால் நடுங்கும்; இப்போ இல்லை. :)

F. 1. எல்லா இடத்திலேயும் கோபப்பட முடியாதே

2. வீட்டிலே தான் கோபப்படவே முடியும்.

G. 1. சொரணைங்கறது வேறே; கோபம் வேறே. என்னைப் பொறுத்தவரை அறச்சீற்றம் தான் ஜாஸ்தியா வரும்.

H. மூணுமே இல்லை. எதிர்பாராத ஒரு சில சொற்கள், செய்கைகள் கோபமூட்டலாம். நேர்மையைச் சந்தேகித்தலும் கோபமூட்டும்.

I. அலட்சியம் செய்வது தான் ஒரே வழி. இப்போல்லாம் அதைத் தான் கடைப்பிடிக்கிறேன்.

10. பாரதி சொல்லி இருப்பது அறச்சீற்றத்தை. சும்மாவானும் இன்னிக்கு இட்லிக்குச் சாம்பார் வைக்காமல் சட்னி ஏன் அரைச்சேனு கோபப்படறதோ, சட்னியில் உப்பு கம்மினு கோபப்படறதோ இல்லை. ஆகவே அந்த அறச்சீற்றம் நிறையவே இருக்கு! குறைய மாட்டேங்குது.

J. என் அப்பா தான் நினைவில் வருவார். துர்வாசர், ஜமதக்னி எல்லாம் ஒண்ணுமே இல்லை அவர் முன்னால்! :)

msuzhi said...

யார்யா அது? எனக்கு கோபம் வராதுனு ஒரு தடவை சொன்னா புரிய வேணாம்?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கேட்கலேனாலும் அந்தக் கேள்விகளையும் உங்கள் பதிலையும்
ஒரு ஆர்வத்தில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

வாசித்ததின் நினைவில் பின்னூட்டம் போடுவது என்றால் என்னை மாதிரி விலாவரியா பின்னூட்டம் போடுகிறவர்கள் பாடு பரிதாபம்.
இரண்டு பக்கங்களையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

'உங்கள் எங்கள் பிலாக்'குக்கு பின்னூட்டம் போடுவது ரொம்ப ஈஸி. பின்னூட்ட பாக்ஸ் மட்டும் தனியாத் தெரியும் என்பதால் குஷியாக இருக்கும். நானும் இந்த
முறையைக் கைக்கொள்ள வேண்டும் எகிற சொரணை இப்போத்தான் வந்தது. நன்றி.

கேள்வி-பதில் தயாரிப்புக்கு நீங்கள் தான் எனக்கு மார்க் போடவேண்டும்!

கேள்வி-பதில், அதைத்தாண்டி பார்க்கவேயில்லையா?

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகள் பற்றி பகடிங்க அது.

கரெக்ட். அந்தாதித் தொடை அது.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்.

'கோபம் வராத நேரம் பார்த்து' என்று ஆரம்பிக்கும் பொழுதே புரிந்து விட்டது, ஸார். :))

ஜீவி said...

//என்னைக் கோபக்காரன் என்பார்கள்.ஹி ஹி ஹி.//

நம்புவதற்கில்லை.

இவ்வளவு விஷயத்தெளிவோடு கோபம் பற்றி எடுத்துரைப்பவர் கோபக்காரராய் இருப்பதற்கில்லை என்பது என் அனுமானம்.

ஜீவி said...

@ G.M.B --2

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை என் தயாரிப்பு தான்.(கவிதை மாதிரியான அதையும் சேர்த்து)

எழுதறதிலே இது ஒரு டெக்னிக்.
உளவியல் சார்ந்த ஒன்று.

வாசிக்கிறவர்களுக்கு, 'நீ என்ன பெரிய பிஸ்தாவா' என்கிற நினைப்பு
வந்து விட்டால் ஆபத்து.

யாரோ சொன்ன மாதிரி எதையும் சொன்னால் அதற்கு இருக்கிற மரியாதையே தனி தான்! :))

அதுக்காகத் தான் இந்த 'யாரோ' வேஷம். (என்ன, கொஞ்சம் சுயத்தை தியாகம் செய்ய வேண்டும். அவ்வளவு தான்)

உங்கள் உன்னிப்பான கவனிப்புக்கு நன்றி.

உங்கள் பதிவுகளுக்கு எப்படியான பின்னூட்டம் வரவேண்டும் என்று ஆவலோடு நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர் களோ, அந்த மாதிரியான ஒரு பின்னூட்டத்தை இன்னொருவர் பதிவுக்கு போடுவதில் மகிழ்ச்சி.

பதிவர்கள் மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளில் இந்தப் பின்னூட்டங்கள் பற்றியெல்லாம்
நிறைய எடுத்துச் சொல்லி பதிவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
எல்லோரும் ரசிக்கக் கூடிய ரொம்ப தமாஷான விஷயம் இந்தப் பின்னூட்ட சமாசாரம். :))


ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஸ்ரீராமை கம்ப்பேர் பண்ணியபடியே வரிசை கட்டிருப்பீர்கள் போலிருக்கு.:)) அந்த 'அறச்சீற்றம்' காட்டிக் கொடுத்து விட்டது! :))

எல்லாவற்றிலும் 'தன்னை' வைத்துப் பார்ப்பவர்களுக்கு
இந்த கேள்வி-பதில் சமாசாரம் அல்வா சாப்பிடற மாதிரி இருக்கும் தான்! ஒப்புத்துக்கறேன். தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் நன்றி.

'அறச்சீற்றம்' என்பதினால் பிபி எகிறாது என்றில்லை..அறச்சீற்றமும் கோபத்தில் அடக்கம் தான்!

அறச்சீற்றம் என்பது ரொம்ப விசேஷமானது. ரொம்ப புனிதமானது. அரிதானது. நமக்குத் தெரியவந்த அறச்சீற்றங்களில் எதிராளி எதிரே நிற்கவே அஞ்சி துடித்துப் போயிருக்கிறார்கள்.

பெரும்பாலான அறச்சீற்றங்கள் எல்லாம் தனக்காக ஏற்படுவதில்லை! தான் சம்பந்தப்படாத ஒரு விஷயத்திற்கு ஏற்படும் பொழுது சும்மா பாம்பு சீறுகிற மாதிரி வெளிப்படும்! அதனால் தான் அதற்கு சீற்றம் என்று பெயர் வந்தது.

தனக்காக சீறுவது தனக்கான நியாயம் கேட்பது. இதில் சுயம் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒரு மாற்று குறைச்சல் தான்..

அதுசரி, அப்பாக்கள் மாதிரி பையர்கள் தான் இருப்பார்களோ?
பெண்கள் இல்லையோ? :))

ஜீவி said...

@ அப்பாதுரை

//யார்யா அது? எனக்கு கோபம் வராதுனு ஒரு தடவை சொன்னா புரிய வேணாம்?//

அதுயாரு?.. ஓ! துரை சாரா?

என்ன கிணத்துக்குள்ளிருந்து கேட்கற மாதிரி, டெஸிபல் குறைச்சலா இருக்கு?..

"யார்யா,அது?"ன்னு அலறும் பொழுதே சத்தம் சும்மா எகிற
வேண்டாமா?..

'யார்யா,அது'வைத் தொடர்ந்து
"எனக்குக் கோபம் வராதுனு ஒரு தடவை சொன்னா புரிய வேணாம்?"-ன்னு ரயில் வண்டி நீளத்திற்கு
நீ...ள..மா.. வார்த்தைகள் வந்தா, அதைச் சொல்லி முடிக்கறதுக்குள்ளே
வந்த கோபம்ல்லாம் புஸ்வாணம்
மாதிரி பிசுபிசுத்தல்லவா,போகும்?

ஜம்முனு நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையாய் ஒரு சவுண்டு விட்வீங்களா?.. இப்படியா சுரத்தில்லாம...

ஸ்ரீராம். said...

பின்னூட்டம் இடும்போதே யோசித்தேன்தான். ஆனால் பின்னூட்டங்களை நீங்கள் உங்கள் மெயில் பாக்சிலேயே படித்தால் அந்நேரம் உங்கள் ப்ளாக்கை வேறொரு ஜன்னலில் திறந்து வைத்திருக்கலாம். அப்போது சட்டென ஒரு கிளிக்கில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன்! :)))

அதைத் தாண்டியும் படித்தேனே...

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அதைத் தாண்டியும் படிச்சேனே..//

முன்னதின் சுவாரஸ்யம் பின்னதை
அமுக்கி கொண்டு விட்டது போலும்.

எனக்கு என்னவோ உல்ட்டா.

ஸ்ரீராம். said...

கேள்வி பதில்களை ஒரு பகுதியாகவும், பிற்பகுதியைத் தனிப் பகுதியாகவும் கொடுத்திருக்கலாமோ!

Geetha Sambasivam said...

//ஸ்ரீராமை கம்ப்பேர் பண்ணியபடியே வரிசை கட்டிருப்பீர்கள் போலிருக்கு.:)) அந்த 'அறச்சீற்றம்' காட்டிக் கொடுத்து விட்டது! :))//

இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் கேள்விகளைக் காப்பி செய்து கொண்டு ஒவ்வொன்றின் கீழும் பதில்களை எழுதியது நோட்பேடில். பின்னர் கேள்விகளை மட்டும் அழித்துவிட்டு பதில்களை இங்கே அளித்தேன். அதுக்கு அப்புறமாத் தான் மற்றப் பின்னூட்டங்களைப் படித்ததோ, ஶ்ரீராமும் அறச்சீற்றத்தைக் குறித்திருப்பதோ காண நேர்ந்தது. :))))) ஏனெனில் மற்றவர்கள் எழுதி இருப்பதைப் படித்தால் இம்மாதிரியான கேள்விகளுக்கு அவங்களோட எண்ணத்தின் தாக்கம் வந்துடுமோனு யோசிப்பேன். ஆகவே பதில்களைப் படிக்காமலேயே தான் என் கருத்துகளை எழுதினேன். அபூர்வமாக மற்றவர் கருத்தோடு ஒத்துப் போவதுண்டு. இதை வைகோ சாரின் விமரிசனக் கட்டுரையில் கண்டிருக்கிறேன். அப்பாதுரை எழுதிய பாணி வேறாக இருந்தாலும் ஓரிரண்டு விமரிசனங்களில் அவர் கருத்தும் என் கருத்தும் ஒத்துப் போயிருந்தது. :))

Geetha Sambasivam said...

வேர்ட் வெரிஃபிகேஷன் இங்கேயும்???????

Geetha Sambasivam said...

//எல்லாவற்றிலும் 'தன்னை' வைத்துப் பார்ப்பவர்களுக்கு
இந்த கேள்வி-பதில் சமாசாரம் அல்வா சாப்பிடற மாதிரி இருக்கும் தான்! ஒப்புத்துக்கறேன். தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் நன்றி.//

நீங்க என்ன சொல்ல வரீங்கனு புரியலை! பொதுவாக அனைவருக்குமே அவரவர் அனுபவங்கள் நினைவுக்கு வரத் தான் செய்யும். அதைச் சொல்லாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம். அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லி இருக்கலாம். இதில் "தான்" எங்கிருந்து வந்தது? பேருந்துப் பயணத்தின் போது சில்லறை கிடைக்காததைப் பதிவாக்கினால் கூட அதிலும் தங்கள் அனுபவங்களைப் பதிபவர்கள் உண்டு. மற்றவர் அனுபவம் நமக்கு எப்படித் தெரியவரும்? அது தெரியாமல் அதைக் குறித்து எழுத முடியாது அல்லவா?

Geetha Sambasivam said...

மேலும் இந்தக் கேள்வி--பதில் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஒன்று என்றே நினைத்தேன். அப்படி இல்லையோ?

ஜீவி said...

ஒரு பக்கத்திற்குள் அடக்க வேண்டுமென்பதால் இரண்டையும் ஒன்றாக்க வேண்டியிருந்தது. எழுத ஆரம்பித்து ஒரு பக்கத்திற்கு மிகும் என்று நினைத்ததினால் பலதைக் குறைக்க வேண்டியிருந்தது.

ஹெவியாக இருக்கப் போகிற 'குடும்ப நலம்' தலைப்பின் இலகுவான ஆரம்ப
பகுதி இது.

Geetha Sambasivam said...

பெரும்பாலான அறச்சீற்றங்கள் //எல்லாம் தனக்காக ஏற்படுவதில்லை! தான் சம்பந்தப்படாத ஒரு விஷயத்திற்கு ஏற்படும் பொழுது சும்மா பாம்பு சீறுகிற மாதிரி வெளிப்படும்! அதனால் தான் அதற்கு சீற்றம் என்று பெயர் வந்தது.//

அறச்சீற்றத்தின் அர்த்தம் புரிந்தே எழுதி இருக்கிறேன். :) அதனால் தான் அம்பத்தூர் வீட்டில் இருக்கையில் எங்கள் தெருவுக்குச் சாலைப்பராமரிப்பு இல்லை என்பதற்கு தொடர்ந்து எங்களால் அம்பத்தூர் நகராட்சியை வற்புறுத்த முடிந்தது. சலிக்காமல் நகராட்சிக்குப் போய் நின்றிருக்கிறார். சாலையில் குப்பை போடுபவர்களைக் கண்டித்திருக்கிறோம். அநியாயம் செய்பவர்களைக் கண்டித்திருக்கிறோம். இது மாதிரி எத்தனையோ! இப்படியான சமூகம், ஊர், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக எத்தனையோ முறை கோபப்பட்டிருக்கிறோம். பட்டியல் இட்டுக் கொண்டிருக்கவா முடியும்? அல்லது நாம் செய்வதை, செய்ததை விளம்பரப்படுத்த முடியுமா? அதற்கான தேவையே இல்லையே! :)))))

//தனக்காக சீறுவது தனக்கான நியாயம் கேட்பது. இதில் சுயம் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒரு மாற்று குறைச்சல் தான்..//

இதை அறச்சீற்றம் என்றெல்லாம் நான் சொன்னதே இல்லை; சொல்லவும் மாட்டேன். எனக்காகச் சீறினேன் என்று அதை அறச்சீற்றம் எனச் சொன்னதும் இல்லை. "சிறுமை கண்டு பொங்க"ச் சொன்னதும் நமக்கு ஏற்படும் சிறுமைகளுக்கு மட்டுமல்ல; பொதுவாக மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்தப்படும் சிறுமைகளுக்கும் சேர்த்தே என்பதைப் பள்ளி நாட்களிலேயே கற்றுக் கொடுத்திருக்கின்றனர். :)))))))

கரந்தை ஜெயக்குமார் said...

கோபம் தவிர்க்கப்படல் வேண்டும்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல அலசல்.. நிறைய கேள்விக்கு பதில் சொல்லும் போதுதான் தெரியுது எவ்வளவு அபத்தமா இருக்கோம்னு. இனிமே கோபம் வரும்போது இதுல பாதி கேள்வியாவது கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.

ஸ்ரீராம். said...

எல்லா ப்ளாக்குகளிலும் சிலரை மட்டும் கூகிள் தானாக வர்ட் வெ'றி'ஃபிகேஷன் கேட்கிறது என்று நினைக்கிறேன். கடவுள் ச்சே... கூகிள் புண்ணியத்தில் என்னை இதுவரை கேட்கவில்லை! எங்கள் ப்ளாக்கிலும் இதே கம்ப்ளெயின்ட் இருக்கிறது. ஆனால் நாங்கள் செட்டிங்க்ஸ் மாற்றவில்லை.

ஜீவி said...

@ Kiruthika Sridhar

ஆஹா.. நெடுநாட்கள் கழித்து உங்களை இங்கு பார்த்தில் மகிழ்ச்சி.
நலம் தானே?..

எல்லோரும் +க்குப் போய் விட்டதை
சமீபத்தில் தான் அறிந்தேன். இனிமே அங்கேயும் இங்கேயும்ன்னு பாலம் போடணும்.

அதுசரி, உங்கள் 'மொழி எப்படி சரிசெய்யப் போகிறோம்' பதிவுக்கு
என் பின்னூட்டத்திற்கு ஆதரவாக
ஒரு புகைப்படம் அனுப்பி வைச்சிருந்தேனே, கிடைத்ததா?..

தொடர்ந்து வாருங்கள். 'குடும்ப நலம்' பகுதியில் கலந்து பேசி உருவாக்க வேண்டிய கருத்துக்கள் நிறைய உள்ளன.

Geetha Sambasivam said...

@ஶ்ரீராம், "வெறி:ஃபிகேஷன்??? :)))) ஹிஹிஹி, இம்பொசிஷன்! எழுதுங்க! :)

ஜீவி said...

@ Geetha Sambhasivam

கீதாம்மா, ஈஸி..ஈஸி..

கேள்விகளுக்கு பதில்கள் தயாரிப்பதில் மேற்கொண்ட சிரமங்களுக்கு நன்றி.பட்ட சிரமமும் வீண் போகவில்லை. பின்னாடி எப்போவாது இந்தக்கேள்விகளையும், பதில்களையும் உபயோகப்படுத்திக் கொண்டு தொடரலாம். பின்னால் வரும் விவாதிக்க வேண்டிய பகுதிகளுக்காக, ஆரம்பப் பகுதியை கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக்கினேன். அவ்வளவு தான். சரியா?..

ஸ்ரீராம். said...

எதற்கு இம்போசிஷன்? அந்த 'றி' யை வேணும்னேதான் போட்டிருக்கேன்னு காட்ட ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கேனே, கவனிக்கலையா?

:)))))

ஜீவி said...

@ கரந்தை ஜெயக்குமார்

ஒன்பான் சுவைகளுக்குள் கோபமும் ஒன்று. ஒன்றின் இருப்புக்கான அவசியம் இன்றி எதுவும் இருக்க
முடியாது என்பது சயின்ஸ் இல்லையா?

கோபத்தை அறவே தவிர்க்க வேண்டுமா,இல்லை அப்பப்போ கைக்கொள்ள வேண்டுமா என்பதையெல்லாம் இந்தப் பகுதியின் வேறொரு தொடர்வில் பார்க்கலாம்.

இந்தப் பகுதி பல விஷயங்களை விவாதிக்கப் போகிற ஆரம்பப்
பகுதி. நுழைவாயில். அவ்வளவு தான்.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,
கரந்தையாரே!

கோமதி அரசு said...

கோபம் கெடுதல் என்றுதான் முன்னோர்களும், ஞானிகளும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்,
கோபத்தை தவிர்க்கவேண்டும் என்று பாடமாக நடத்தினாலும், தவிர்க்கும் வழிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தாலும் கோபம் வருகிறதே!

அதற்கு நொண்டி சமதானம் வேறு, கோபம் இருக்கும் இடத்தில் குண்ம் இருக்கும், உன்னிடம் கோபபடாமல் வேறு யாரிடம் கோபப்படுவது என்றெல்லாம்.

வெளியில் நல்ல மனுஷர், நல்ல மனுஷி என்று பெய்ர் வாங்கியவர்கள் எல்லாம் வீட்டில் கோப்படுவது சகஜமாய் இருக்கிறது.
அடக்க பட்ட கோபம் அணைகடந்து வருவது வீட்டார் இடம் தான்.
நாளொல்லாம் நமக்காக படுபடுவர்களிடம் தான்.

உரிமை, பாசம், அன்பு இருக்கிறவர்களிடம் எதிர்ப்பார்ப்பு கொண்டு அது நடைபெறவில்லை என்றால் கோபம்.

நீங்கள் எழுதிய கவிதை கோபத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடிவது.

கோபத்தை விட முடியாது கோபத்தை விட முயற்சிக்கலாம் என்று தான் தெரிகிறது.
குடும்பநலம் பகுதியா?

இனி கதை எப்போது?

ஊருகளுக்கு சென்று கொண்டே இருக்கிறேன். அதனால் தாமதமாய் வந்து படிக்கிறேன்.






ஜீவி said...

@ கோமதி அரசு

//இனி கதை எப்போது?//

Google+ மற்றும் முகநூல் வாசகர்களுக்காகவும் 'இனி' முதல் அத்தியாயத்திலிருந்து மறுபிரசுரம்
காண்கிறது. விரைவில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து விடலாம்.


//ஊருகளுக்கு சென்று கொண்டே இருக்கிறேன். அதனால் தாமதமாய் வந்து படிக்கிறேன்.//

வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திடல்களுக்கும் நன்றி, கோமதிம்மா.

இராஜராஜேஸ்வரி said...

கொட்டினால்தான் தேள் ..
இல்லாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்று புத்திரபாக்கியம் வேண்டி வாழைப்பழத்தில் வைத்து முழுங்கிவிடுவார்கள்.. !

ஆகவே கோபம் என்னும் குணமும் காரமும் சமையலுக்குத் தேவை போல
அவசியம் தான்..

தட்சிணாமூர்த்தியின் காலில் இருக்கும் அசுரனை சுவாமி அழிக்காமல் அடக்கி வைத்திருப்பதைப் போல கட்டுக்குள் கோபத்தை வைத்திருக்கப் பழகவேண்டும்.

கோபத்தைச் சாகடித்துவிட்டால் சீறாத பாம்பை அடித்துக்கொன்று போடுவதைப்போல் உலகம் அழித்துவிடும்..!

msuzhi said...

கீதா சாம்பசிவம் உங்கள் பின்னூட்ட exchange படிக்க சுவாரசியம்.

msuzhi said...

அறச்சீற்றம் என்றால் என்னவென்று தெளிவானது.

Related Posts with Thumbnails