மின் நூல்

Tuesday, April 5, 2016

சும்மா சுவாரஸ்யத்திற்காக...



1)  உங்கள் பதிவுகளை எதற்காக எழுதுகிறீர்கள்?

1. சும்மா வெட்டி அரட்டைக்கு

2. பொழுது போக்குக்காக

3. எதற்காக என்று  இதுவரை யோசித்ததில்லை

4. தெரிந்ததைப்  பகிர்ந்து கொள்வதற்காக


2)  வழக்கமாக நீங்கள் பதிவுகளை வாசிக்கும் முறை

1.  ஆழ்ந்து படிப்பதுண்டு.

2.  மேலோட்டமாக

3.  முதலும் கடைசியும் பார்ப்பேன்

4.  படங்கள் இருந்தால் தான் படிப்பேன்.


3)  ஒரு பக்க நீண்ட பதிவை படிக்க எடுத்துக்  கொள்ளும் நேரம்

1.   அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள்.

2.   10-லிருந்து  15  நிமிடங்கள் வரை

3.   ஐந்து நிமிடங்களே அதிகம்

4..  மேலோட்டமாகப் பார்வை.  பிடித்தால் சில நிமிடங்கள். அதற்கு மேல் இல்லை.


4)  எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கப் பிடிக்கும்?

1.  சினிமா சம்பந்தப்பட்டவை.  அல்லது அரசியல்.

2.  கனமாக விஷயங்கள்

4.  பொழுது போக்கு பதிவுகள்.

5.  வளவள் இல்லாத எல்லா பதிவுகளும்


5)  பின்னூட்டம் போடுவீர்களா?

1.  பெரும்பாலும் இல்லை

2.  படித்தால் அவசியம் போடுவேன்

3.  என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுபவர்களுக்கு  மட்டும்

4.  வருகையைத் தெரியப்படுத்த 'அருமை' மாதிரி ஒரு வார்த்தை போதும்


6)  பின்னூட்டம் போடுமுன்

1.  நிறைய  யோசிப்பேன்

2.  எதிர் கருத்தை தேடுவேன்

3.  வாசித்ததை பாராட்டுவேன்

4.  மனசுக்குத் தோன்றியதைப் பதிவேன்


7)  இணையப் பதிவுகளைப் பற்றி

1.   உருப்படியாக எதுவும்  இல்லை

2.  தேடிப்  படித்தால் நிறைய உண்டு

3.  பெரும்பாலும் மேலோட்டமானவை

4.  எதிர்காலத்தில் பத்திரிகைகளுக்கு மாற்று இது தான்.


8)  பதிவுகளில் நகைச்சுவை அவசியமா?

1. நகைச்சுவை இருந்தால் வாசகர்களை சுலபமாக வாசிக்க வைக்கலாம்.

2. அவசியம்  இல்லை.

3. பல நேரங்களில் தப்பாகப் புரிந்து கொள்ளப் படுவதால் தவிர்க்கிறேன்

4. சாப்பாட்டிற்கு உப்பு வேண்டுமா என்று கேட்கிறீர்களே?


9)  எய்படிப்பட்ட பதிவுகள் எழுதப் பிடிக்கும்?

1. மற்றவர்கள் கையாளாத விஷயங்களை

2.  அந்த நேரத்தில் பரபரப்பான விஷயம்

3.  கதை, கட்டுரை, கவிதை இப்படி ஏதாவது ஒண்ணு.

4. ஜனரஞ்சகமான பொதுவான விஷயங்களை


10)  பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது உண்டா?

1.   நிச்சயம் உண்டு.

2.  இல்லை என்றால் தான் பதிவுக்கு மதிப்பு

3.  அதற்காகத்தானே எழுதுகிறோம்?

4. வாசிப்பவர் சைகாலஜி தெரியும்.  அதுவே பின்னூட்டங்களை அள்ளும்.


11)  பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் அளிப்பீர்கள்?

1.  விளக்கமாக

2. பின்னூட்டம் இட்டவர்கள் விரும்பும் விதத்தில்

3.  அவர்கள் அடுத்த தடவை பின்னூட்டம் இடுவதற்கு ஏற்றவாறு

4.  பின்னூட்டத்திற்கு மாற்று கருத்து இருந்தாலும் அதை மறைத்து அவர்களைப் புகழ்ந்து.


=========================================================================
(பதிவுகளை எழுதுவது,  வாசிப்பது,  பின்னூட்டங்கள் இடுவது எல்லாமே பதிவர்கள் தான்.   அதனாலேயே  இந்தக் கேள்விகள் பதிவர்களுக்கு மிகவும் நெருக்கமானவையாகத் தோன்றும்.  பலரால் பதிலளிப்பதைத் தவிர்க்கமுடியாது.   சிலரால் சில காரணங்களுக்காக தவிர்க்க முடியும்.  அதான் இந்தப் பதிவின்  விசேஷம். )

=========================================================================



  

20 comments:

sury siva said...

1.) (1+2)/2,
2) 1. 40% 2. 50 4. 10%
3.3
4.(2+4) / (1+2)
5.2 *85 %
6.மாற்றுக் கருத்தை நாசூக்காகப் பகிர்வேன்.
அதைப் புரிந்துகொள்ள மாட்டார் என்று எனக்குத் தோன்றுகையில்
பின்னூட்டம் இடுவதைத் தவிர்ப்பேன்.
7. 2,20% 3.60%
8.சுவை அவசியம்
9.1.
10.இல்லை Mostly I write just for recording what I feel about things .
11.1.mostly.

subbu thatha.

வை.கோபாலகிருஷ்ணன் said...

1) உங்கள் பதிவுகளை எதற்காக எழுதுகிறீர்கள்?

2. பொழுது போக்குக்காக +

4. தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வதற்காக

வை.கோபாலகிருஷ்ணன் said...

2) வழக்கமாக நீங்கள் பதிவுகளை வாசிக்கும் முறை

1. ஆழ்ந்து படிப்பதுண்டு

(ஆனாலும், என் மனதுக்குப்பிடித்தமான சில பதிவர்களின் பதிவுகளை மட்டுமே, இவ்வாறு நான் ஆழ்ந்து படிப்பதுண்டு)

வை.கோபாலகிருஷ்ணன் said...

3) ஒரு பக்க நீண்ட பதிவை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம்

2. 10-லிருந்து 15 நிமிடங்கள் வரை (எனக்குப் பிடித்தமான ஒருசிலரின் பதிவுகளுக்கு மட்டுமே)

4. மேலோட்டமாகப் பார்வை. பிடித்தால் சில நிமிடங்கள். அதற்கு மேல் இல்லை. (இது பொதுவாக மற்ற அனைத்துப் பதிவர்களின் பதிவுகளுக்கும் பொருந்தும்)

வை.கோபாலகிருஷ்ணன் said...

4) எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கப் பிடிக்கும்?

4. பொழுது போக்கு பதிவுகள்.

5. வளவள இல்லாத எல்லா பதிவுகளும்

ஓரளவாவது நகைச்சுவையாக உள்ள பதிவுகளாக இருக்க வேண்டும். புரியாத, புரிந்துகொள்ளவும் முடியாத, DRY SUBJECT ஆக இல்லாமல் இருக்க வேண்டும்.

உதாரணமாக நாம் இறந்தபிறகு என்ன நடக்கும்? நம்பிக்கை அடிப்படையிலான ஆன்மா, மறுபிறப்பு போன்ற சமாசாரங்கள் அவ்வளவாகப் பிடிப்பது இல்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

5) பின்னூட்டம் போடுவீர்களா?

2. படித்தால், அதுவும் ஓரளவுக்காவது எனக்குப் பிடித்தால் மட்டுமே, அவசியம் போடுவேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

6) பின்னூட்டம் போடுமுன்

1. நிறைய யோசிப்பேன்

3. வாசித்ததை, அதில் என்னைக் கவர்ந்தவற்றைச் சொல்லிப் பாராட்டுவேன்

4. அப்போது என் மனசுக்கு என்ன தோன்றுகிறதோ, தோன்றியதை அப்படியே பதிவேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

7) இணையப் பதிவுகளைப் பற்றி

2. தேடிப் படித்தால் நிறைய உண்டு

3. இருப்பினும் பெரும்பாலும் மேலோட்டமானவைகள்தான்

4. எதிர்காலத்தில் பத்திரிகைகளுக்கு மாற்று இதுவாகவும் இருக்கக்கூடும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

8) பதிவுகளில் நகைச்சுவை அவசியமா?

மிகவும் அவசியமாகும்.

1. நகைச்சுவை இருந்தால் வாசகர்களை சுலபமாக வாசிக்க வைக்கலாம்.

4. சாப்பாட்டிற்கு உப்பு வேண்டுமா என்று கேட்கிறீர்களே?

வை.கோபாலகிருஷ்ணன் said...

9) எப்படிப்பட்ட பதிவுகள் எழுதப் பிடிக்கும்?

எந்தத்தலைப்பிலும், எதைப்பற்றியும், எனக்குத் தெரிந்ததை, பிறர் படிக்க சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுத என்னால் முடியும் என்றாலும்கூட ......

3. கதை, கட்டுரை, கவிதை இப்படி ஏதாவது ஒண்ணு.

4. ஜனரஞ்சகமான பொதுவான விஷயங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

10) பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது உண்டா?

1. நிச்சயம் உண்டு.

3. அதற்காகத்தானே எழுதுகிறோம்?

4. வாசிப்பவர் சைகாலஜி தெரியும். அதுவே பின்னூட்டங்களை அள்ளும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

11) பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் அளிப்பீர்கள்?

1. மிகவும் விளக்கமாகவே .....

2. பின்னூட்டம் இட்டவர்கள் விரும்பும் விதத்திலும் .....

3. அவர்கள் அடுத்த தடவை பின்னூட்டம் இடுவதற்கு ஓடி வரும் வகையிலும்.

ஸ்ரீராம். said...

பதில்களைப் படிக்க, ஆராய நானும் ஆர்வமாய்!

கோமதி அரசு said...

நல்ல ஆராய்ச்சி.
நல்ல சுவாரஸ்யம்.

Bhanumathy Venkateswaran said...

1. எதற்காக எழுதுகிறீர்கள்?
எழுத பிடித்திருக்கிறது, எழுத வருகிறது.

2. வழக்கமாக நீங்கள் பதிவுகளை வாசிக்கும் முறை
ஆழ்ந்து படிப்பதுண்டு.

3.ஒரு பக்க நீண்ட பதிவுகளை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம்
5 - 10 நிமிடங்கள்.

4.எப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கும்?
வள வள இல்லாத எல்லா பதிவுகளும்.

5. பின்னூட்டம் போடுவீர்களா?
பெரும்பாலும் இல்லை.

6. பின்னூட்டம் போடும் முன்
மனசுக்கு தோன்றியதை பதிவேன்.

7. இணைய பதிவுகளை பற்றி
தேடிப் பார்த்தால் சுவாரஸ்யமாக கிட்டும், அப்படி கிடைததுதானே உங்கள் பதிவு!!! ;)

8.பதிவுகளில் நகைச் சுவை அவசியமா?
Why not?

9. எப்படிப் பட்ட பதிவுகள் எழுத பிடிக்கும்?
அழுத்தமான விஷயங்களை ஜன ரஞ்சகமாக எழுத விருப்பம்.

10. பின்னூட்டங்களை எதிர் பார்பதுண்டா?
இல்லை.

11. பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் அளிப்பீர்கள்?
நன்றி என்று ஒற்றை வார்த்தையில்.

Ajai Sunilkar Joseph said...

(1) மனதில் பாரம் குறைய எழுதுகிறேன்....
(2) புரியும் வரை படிப்பேன்....
(3) எனக்கு புரிந்து கொள்ள எவ்வளவு நேரம் ஆகின்றதோ அவளவு நேரம்....
(4) இயல்பான வார்த்தைகளில் கவிதைகள் படிக்க பிடிக்கும்...
(5) புரிந்தால் பின்னூட்டம் கட்டிப்பாக போடுவேன்...
(6) அந்த பதிவின் கருத்துக்களை சொல்வேன்...
(7) தேடிப் படித்தால் நிறைய உண்டு...
(8) நகைச்சுவை அவசியமில்லை மனதில் பதியும்படி இருந்தாலே போதும்
(9) இயல்பான வார்த்தைகளில் கவிதைகள்...
(10) பின்னூட்டங்கள் வேண்டும் தவறுகள் இருந்தால் திருந்தி கொள்ளலாம்...
(11) பின்னூட்டம் இடுபவர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில்
அவர்களுக்கு புரியும்படியும்....

sury siva said...

/மனதில் பாரம் குறைய எழுதுகிறேன்....//

ரெஸ்பான்ஸ் யதார்த்தம்.

இதான் உண்மை.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

பதிவர்கள்,நட்புகளுடன் எழுத்து வழியாக பந்தம்
ஏற்படுகிறது. இந்த ஒரே ஒரு காரணத்துக்காகவே எழுதுகிறேன்.
அதுவும் அதிகம் இல்லை.

நிஜமாக இந்தப் பதிவு பிடித்திருக்கிறது . பதில் எழுத பரீட்சை நினைவு வருவதால் ஒதுங்குகிறேன்.

ஜீவி said...

பின்னூட்டம் இட்டிருப்பவர்களுக்கு நன்றி.

பின்னூட்டங்களும் பொழுது போக்கிற்காக என்றால் ஸ்ரீராம் சொல்வது மாதிரி இதில் ஆராய ஒன்றுமில்லாது போகும். இருந்தாலும் வந்திருக்கிற/இனி வரப்போகிற பின்னூட்டங்களை வைத்துக் கொண்டு உருப்படியாக இன்னொரு பதிவு போட முடியுமா என்று பார்ப்போம்.

மிக்க நன்றி.

அன்புடன்,
ஜீவி

நெல்லைத் தமிழன் said...

2. வழக்கமாக நீங்கள் பதிவுகளை வாசிக்கும் முறை - ஆழ்ந்து. நான் நிறையபேருடையதைப் படிக்கும் வாய்ப்பில்லை. நான் தொடருகிற பதிவர் எழுதியுள்ளதை (அது நல்லா எழுதியிருக்கும் பட்சத்தில்.. சும்மா பக்கம் நிரப்புவதற்காகவோ, வெறும் பதிவு எண்ணிக்கைக்காகவோ எழுதியிருந்தால் அவ்வளவு விருப்பம் காண்பிக்கமாட்டேன்)
3. ஒரு பக்க நீண்ட பதிவை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம்- 5-10 நிமிடங்கள்.
4. எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கப் பிடிக்கும்? - அது என் நேரத்தைச் செலவழிக்கும் மதிப்புள்ளதாக இருக்கவேண்டும். சினிமா, நகைச்சுவை, கிசுகிசு, அரசியல், பக்தி, உணவு என்று எந்தத் தலைப்பாகவும் இருக்கலாம். முதலில் உங்களது 'அழகிய தமிழ்' இடுகை ஒன்றைப் படித்தபோது ரொம்ப கனமாக இருப்பதாகத் தோன்றியது. தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் படிக்க ஆரம்பித்தேன். அது வெறும் light readingக்குக்கானது அல்ல. இதைப் படிக்க 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்டாலும், சிந்திக்க அதைவிட அதிக நேரம் தேவைப்படும் (இல்லாட்டா படிக்கறத, நேரம் செலவழிப்பதை நியாயப்படுத்தமுடியாது). அந்த இடுகையும், அதன் பின்னூட்டங்களும், அதற்கு உங்கள் பதிலும், என் நேரச் செலவழிப்பை justify செய்தன.
5. பின்னூட்டம் போடுவீர்களா? - சாதாரணமான இடுகைகளுக்குச், சமயத்தில் வருகையைத் தெரியப்படுத்த சாதாரணமான பின்னூட்டம். contentஐப் பொறுத்துப் பின்னூட்டம் மாறும். இடுகை should be thought provoking to justify lengthy பின்னூட்டம்.
6. பின்னூட்டம் போடுமுன் - நல்ல பதிவுகளுக்கு, அது ஏற்படுத்தும் எண்ண அலையைப் பொறுத்துதான் பின்னூட்டம் அமையும். சமயத்தில் justify பண்ணும் அளவு நீண்ட பின்னூட்டம் இட நேரம் இல்லாதுபோகும்.
7. இணையப் பதிவுகளைப் பற்றி - எதிர்காலத்தில் பத்திரிகைகளுக்கு மாற்று இதுதான். நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பொழுதுபோக்கு, ஆழ்ந்த அறிவு, உற்சாகத்துக்கு என்று பலவித ஜன்னல்கள் பதிவுகளில் இருக்கின்றன.
8. பதிவுகளில் நகைச்சுவை அவசியமா? - இது பதிவினைப் பொறுத்தது. தாங்கள் எழுதுவதுபோன்ற 'அழகிய தமிழ்' அறிவுசார் இடுகைகளுக்கு நகைச்சுவை வலிந்து திணிப்பதுபோலாகி, மூலக்கருத்தைச் சிதைத்துவிடும். பின்னூட்டமிடும்போது, lighter veinல எழுதுவது, எழுதுபவரைப் பற்றிய அனுமானக் குறைவினால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடும்.
9. எப்படிப்பட்ட பதிவுகள் எழுதப் பிடிக்கும்? - எழுதினால்.. ஜனரஞ்சகமான. சட்டில இருக்கறதுதானே அகப்பைல வரும்? நல்லா படித்து அதில் துறைபோகியவர்கள் அறிவுசார் இடுகைகளையும் எழுதலாம். அப்போதுதான் படிப்பவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் நேரத்திற்கு, கொஞ்சம் return கொடுத்ததுபோல் மனதுக்கு இருக்கும்.
10/11 பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது உண்டா? பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் அளிப்பீர்கள்? - நான் பின்னூட்டமிட்டதற்கு, கட்டுரையாளரின் பதிலை எதிர்பார்ப்பேன். எனக்குத் தெரிந்து, பின்னூட்டமிடுவதற்கு அதன் வீச்சுக்குத் தகுந்த பதில் எழுதுவது வை.கோ சார். உங்களுடைய (ஜீவி சார்) பதில்களையும் பார்த்திருக்கிறேன். முன்னரே சொன்னபடி, நான் நிறைய பிளாக்குகள் படிப்பவனல்லன்.

Related Posts with Thumbnails