அத்தியாயம்-- 11
பத்திரிகைகளின் பதிவு பற்றிய விவரங்களை (Particulars of Registration of Newspapers) சம்பந்தப்பட்ட பத்திரிகையிலேயே அரசாங்கத்திற்குத் தெரிவிக்கும் முறையில் வெளியிட வேண்டுமென்று பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலேயே 1867-ல் சட்டமியற்றப் பட்டிருக்கிறது. அவ்வப்போது பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாற்றம் இருந்தாலும் அப்படியான தகவல்களை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் தான் இந்தியா பத்திரிகையில் அதன் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன.
3-6-1907 அரசு வெளியிட்ட பத்திரிகை சட்டக் குறிப்புகளின் படி பத்திரிகைகளில் பிரசுரமாகும் கட்டுரைகளில் ராஜதுரோகமான தகவல்கள் இருக்குமெனில் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மாநிலம் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மேல் மட்ட அளவில் இருந்த அதிகாரம் கீழ் மட்டங்களுக்கு பரவலாக விரிவாக்கம் கொண்டதும் பத்திரிகைகளின் மீது போடப்படும் வழக்குகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாயிற்று. அதனால் தான் 'இந்தியா' பத்திரிகை சம்பந்தப்பட்ட எந்த வழக்கு வந்தாலும் தானே எதிர்கொள்ளலாம் என்ற துணிவில் தான் 15-8-1908-ல் எஸ்.என். திருமலாச்சாரியாரே பத்திரிகையின் உரிமையாளர், ஆசிரியர் என்று முழுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். திலகர் கைது, அவர் பர்மாவிற்கு நாடு கடத்தப்படுதல் என்ற பல அரசியல் பரபரப்புகளுக்கு உள்ளான கால கட்டம் அது.
'இந்தியா' பத்திரிகையின் திருமலாச்சாரியாருக்கும், சீனிவாசனுக்கும் வாரண்ட் வந்தவுடனேயே அடுத்து பிரிட்டிஷாரின் நடவடிக்கைகள் பாரதி மேல் தான் பாயும் என்று நண்பர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். சொல்லப் போனால் பாரதி தான் அவர்களின் குறி என்று அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பத்திரிகையின் உரிமையாளர், ஆசிரியர் என்று கைது ஆரம்பித்து பாரதியில் தான் அது முடியும் என்பது அவர்களின் தீர்மானமான முடிவாயிற்று.
'என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்; பார்த்து விடலாம்' என்பது பாரதிக்கு திலகரை சந்தித்த பின் ஏற்பட்ட துணிவு. வாரண்டிற்குப் பிறகு பாரதி சென்னையில் தான் இருந்தார். @ பாரதி சென்னையில் இருந்தால் அது பேராபத்தில் முடியும் என்று தீர்மானித்த நண்பர்கள், சென்னை மட்டுமல்ல பிரிட்டிஷ் இந்தியாவின் எந்தப் பூபாகத்தில் அவர் இருந்தாலும் பிரிட்ஷாரின் அடக்குமுறைகளுக்கு காவு கொடுத்த பரிதாபத்தைச் செய்து விட்டவர்கள் ஆவோம் என்று தீர்மானிக்கிறார்கள்.
சென்னைக்கு வெகு அருகில் பிரன்ச் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி தான் அவர்களுக்கு பாரதியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தகுந்த இடமாக புலப்பட்டது. அதனால் புதுவைக்கு செல்ல பாரதியை அறிவுறுத்தினர்.
முதலில் பாரதி இந்த ஏற்பாட்டிற்கு இணங்கவில்லை. தம் எழுத்து வன்மைக்கு சூலாயுதமாய் கிடைத்த இந்தியா பத்திரிகையை இழந்து விட்டு நிற்பது அவரைப் பெரும் வேதனைக்குள்ளாகியது. 'இந்தியா' தானே, அதை புதுவைக்கே உங்களிடமே கொண்டு வந்து சேர்த்து விடுகிறோம்' என்று நண்பர்கள் அளித்த உறுதியின் பேரில் பாரதியார் புதுவைக்கு 'தப்ப'
உடன்படுகிறார்.
ஆனால் பாரதி சென்னையிலிருந்து நேராக புதுவை செல்லவில்லை என்று தெரிகிறது. கருவுற்றிருந்த தனது மனைவி செல்லம்மாவை கடையத்தில் சொந்தக்காரர்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு புதுவை செல்கிறான். புதுவை மண்ணை பாரதி 26-8-1908-ல் மிதிக்கிறான். ** 28-8-1908 தேதியிட்ட 'This individual left Madras with his family for his native place in Tinnelvely (Police Archives Vol.xxx 1908) என்ற ஸி.ஐ.டி. குறிப்புகளிலிருந்து இத்தனையும் போலிசுக்குத் தெரிந்து தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.
அடுத்து 'இந்தியா' பத்திரிகை புதுவையிலிருந்து வெளிவருகிற ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். எப்படியும் இந்தியா வெளிவந்தாக வேண்டும் என்று பத்திரிகையின் நிறுவனர் எஸ்.என்.திருமலாச்சாரியார் உறுதியுடன் இருந்தார். அதற்கு என்ன செய்யலாம் என்று வெகு சாமர்த்தியமாக திட்டம் தீட்டப்படுகிறது.
'தண்ணீர் விட்டா வளர்த்தோம்?-- சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ'
--என்ற பாரதியாரின் வரிகள் தாம் என் நினைவில் இந்த சமயத்தில் நிழலாடுகிறது. தங்கள் உயிரினும் பெரிதாக அந்தப் பத்திரிகையை ஓம்பியவர்கள் பாரதியாரை வைத்துக் கொண்டு புதுவையில் பத்திரிகையை வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்தியா பத்திரிகையின் நிறுவனர் எஸ்.என். திருமலாசாரியாரின் சித்தப்பா பிள்ளை * எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரியார். இவர் சென்னையில் அச்சு இயந்திரங்கள் விற்பனை வியாபாரத்திலும் இருந்தது ரொம்பவும் செளகரியமாகப் போய்விட்டது. ஸ்ரீனிவாச்சாரியாரின் தகப்பனார் புதுவையில் வாழ்ந்தவர் மட்டுமில்லை, அங்கு 'இந்தியன் ரிபப்ளிக்' என்ற ஆங்கில ஏட்டை நடத்தியவர். புதுவையில் இந்தக் குடும்பத்திற்கு சில சொத்துக்களும் உண்டு. ஸ்ரீநிவாச்சாரியார் புதுவையிலிருந்த சிட்டி குப்புஸ்வாமி ஐயங்கார் என்ற தமது உறவினருக்கு கடிதம் கொடுத்து பாரதி புதுவையில் யாரைச் சந்திக்க வேண்டும், பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் ஏற்பாடுகள் செய்கிறார்.
'இந்தியா' பத்திரிகை சம்பந்தப்பட்ட அச்சு இயந்திரம் உட்பட எல்லாவற்றையும் புதுவையில் இருந்த 'யாருக்கோ' விற்று விடுவது போல ஏற்பாடு. பாரதி புதுவை போய்ச் சேர்ந்த சில நாட்களில் 'இந்தியா' பத்திரிகையை புதுவையில் 'ரிஸீவ்' செய்வதற்கு தயார் என்று செய்தி சென்னைக்கு வருகிறது. 'இந்தியா'வின் அச்சு இயந்திரம், அச்சக சமான்கள், அலுவலக ரிஜிஸ்டர்கள் உட்பட அத்தனையையும் மூட்டை கட்டி புதுவைக்கு இங்கிருப்போர் அனுப்பி வைக்கின்றனர். இப்படியாக 'இந்தியா' சம்பந்தப்பட்ட அத்தனையும் சப்ஜாடாக பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டி விட்டு புதுவை போய்ச் சேருகிறது. அத்தனையும் போய்ச் சேர்ந்த சில வாரங்களில் புதுவையில் பதிவு செய்யப்பட்டப் பத்திரிகையாக 'இந்தியா' தனது வழக்கமான கியாதிகளுடன் வெளிவரத் தொடங்குகிறது.
ஆனால் 'இந்தியா' பத்திரிகையின் அச்சுக்கூடம் புதுவைக்கு இடம் பெயர்ந்ததும், பிரிட்டிஷ் காவல் துறையினருக்கு நன்கு தெரிந்து தான் இருந்திருக்கிறது...** 'These individuals has removed all the plant from INDIA office in Madras and have opened an office at Pondicherry in 72, Ambulataru Aiyar Street. The press has been set up and a staff engaged. (Police Archive Vol.XXI, 1908. Page 754) என்று பிரிட்டிஷ்
ஸி.ஐ.டி போலிசாரின் குறிப்புகள் தெரியப்படுத்துகின்றன.
எனக்கென்னடாவென்றால், சென்னையில் பிரசுரமான 'இந்தியா' பத்திரிகையின் ஆரம்ப இதழிலேயே, பிரஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற வார்த்தைகள் எப்படிப் பொருத்தமாக பத்திரிகையின் குறிக்கோளாகப் பதிக்கப்பட்டது என்பது.
நம்மைக் கேட்டுக் கொண்டு எதுவும் நடப்பதில்லை.. இந்தப் பத்திரிகை பிற்காலத்தில் பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் பிரசுரமாகப் போவது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டது போலும்.
பகவத் கீதையின் இதய வாசகங்கள் தாம் நினைவுக்கு வருகின்றன.
" எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.."
===================================================================
* எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார் -- 'S' stands for Sri Ranga Pattinam. மண்டயம் ஸ்ரீனிவாசாச் சாரியாரும் இவரே. மண்டயா என்ற ஊர் மைசூரில் ஸ்ரீரங்கப் பட்டினம் அருகில் உள்ளது. சென்னையில் இருந்த மைசூர் ஐயங்கார்களை அந்நாட்களில் மண்டயத்தார் என்று சொல்வது வழக்கம்.
** டாக்டர் ஜி. கேசவன் அவர்கள் தொகுத்த "Bharathi and Imperialism -- A Documentation" என்ற தொகுப்பில் காணப்படுபவை. -- சிவகெங்கை பாரதி மண்டலம் வெளியீடு.
@ திரு. சீனி விசுவநாதன் (திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஹரிசுவடி கட்டுரையிலிருந்து)
படங்கள் உதவியோருக்கு நன்றி.

18 comments:
ஜிவி சார் இது ( இதிகாச புராண கதைகள் என்ற தலைப்பில் ) நான் எழுதி வரும் கதைகள் .அதனால்தான் என் ப்லாகில் பகிர்கிறேன் :)
போலீஸ் குறிப்புகளும் நீங்கள் தந்திருக்கும் ரெஃபரென்ஸ் புத்தகங்களில் கொடுக்கப் பட்டிருக்கிறதா? பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகை யாருக்கெல்லாம் அனுப்பப் பட்டதோ அவர்களை எல்லாம் குறி வைத்திருக்கும்!
@ ஸ்ரீராம்
ஆமாம், ஸ்ரீராம். இதெல்லாம் பற்றி திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களும் ஒரு நீண்ட தொடர் எழுதியிருக்கிறார். அது பற்றி போன பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
பாரதி என்னன்ன பத்திரிகைகளை -குறிப்பாக என்னன்ன வெளிநாட்டு பத்திரிகைகளை-- படித்தார் என்பதைக் கூட தீவிரமாக பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையினர் கண்காணித்திருக்கின்றனர். அதெல்லாம் பற்றி கூட குறிப்புகள் உண்டு.
பாரதியார் பற்றி அறிந்து கொள்ள எவ்வள்வோ விசயங்கள் இருக்கிறது என்பதனைப் புரிந்து கொண்டேன்.. இப்பகுதியில்.
'தண்ணீர் விட்டா வளர்த்தோம்?-- சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ' //
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் கண்ணீர் வந்து விடும் எனக்கு.
பாரதியார் பற்றி சினிமா, புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொண்டாலும் மேலும் செய்திகள் உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது. நன்றி.
தொடர்ந்து படித்தாலும் முந்தைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முடியவில்லை. சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதுகிறீர்கள்.
'நல்ல உழைப்பு உங்கள் எழுத்தில் தெரிகிறது. இந்தியா பத்திரிகை சென்னையிலிருந்து புதுவைக்குச் சென்றதை நல்லாச் சொல்லியிருக்கீங்க. அப்போ பிரிட்டிஷார் இந்த விஷயத்தைப் பெரியதாக எடுக்கவில்லை போலிருக்கு (அதுவும் நல்லதுக்குத்தான். பாரதியார் பெரிய ஆளுமையாகணும் என்று இருக்கும்போது வேறு எப்படி நடந்திருக்கமுடியும்?)
ஆவலுடன் தொடர்கிறேன்.
பாரதியைப் பற்றிய ஒவ்வொரு செய்திகளும் ஆர்வத்தை தூண்டுகின்றன. நன்றி
பாரதியாரைப் பற்றி அறியாதன அறிந்தேன். நன்றி.
@ athira மியாவ்
நம் தொடரைப் பொறுத்தவரை பாரதியார் இப்பொழுது தானே புதுவைக்குப் போயிருக்கிறார். இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
@ கோமதி அரசு
//இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் கண்ணீர் வந்து விடும் எனக்கு.//
எனக்கோ நெஞ்சு தழுதழுக்கும். கவிஞனின் உணர்வே வார்த்தைகளாய் பாகாய் உருகி ஓடும் வரிகளாகியிருக்கின்றன. பாரதி நெகிழ்த்திய அதே உணர்வு அதே அலைவரிசையில் நம்மையும் பற்றிக் கொள்ளும் பொழுது இந்த உருகுதல் அதற்கேற்பவான எந்த முயற்சியும் நம்மைக் கேட்காமலேயே அனிச்சை செயலாய் நம்மில் நிகழ்கின்றன. அதான் இவ்வளவு நெகிழ்ச்சி.
தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.
@ Bhanumathy Venkateswaran
சரித்திர புருஷன் பட்ட பாட்டை வாசித்து படித்தறிந்து கேள்விப்பட்டுத் தானே சொல்கிறோம்.. நாம் எழுதுவதை நிகழ்த்தியவனுக்கு எப்படி இருந்திருந்திருக்கும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
@ நெல்லைத் தமிழன்
//அப்போ பிரிட்டிஷார் இந்த விஷயத்தைப் பெரியதாக எடுக்கவில்லை போலிருக்கு (அதுவும் நல்லதுக்குதான்) //
பிரிட்டிஷாருக்கு சில விஷயங்களில் சட்ட வரிகள் தெய்வ வாக்கு போலப் படும். எல்லா நேரங்களிலும் அவர்கள் நியாயமாகத் தான் நடக்கிறார்கள் என்ற உணர்வு மக்களிடம் படிய வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதே என் எண்ணம். அதனால் 'ஒரு நாயைச் சுடுவதானாலும் நன்கு தீர விசாரித்துத் தான் அதைச் செய்வோம்' என்ற பாசாங்கு வாதத்தை அந்நாட்களில் தங்களுக்குப் பலமாகக் கொண்டிருந்தார்கள்.
அதுவும் தவிர உடனடியாகக் கைது செய்வதற்கான தடயங்கள் இல்லாமலிருந்ததால் விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம். அதில் அவர்கள் வெற்றி பெறவும் செய்தார்கள் என்பது தான் காலத்தின் வேதனை.
@ சிவகுமாரன்
நேரமிருப்பின் தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன், சிவா. கவிஞர்கள் உணர்வு மிக்கவர்கள். எளிதில் அவர்கள் மொழி மற்றவர்களில் வினையாற்றும் என்பதினால்.
தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி.
@ Dr.B. Jambulingam
தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவது எழுதுவதற்கு உற்சாகத்தை ஊட்டுகிறது, ஐயா.
நன்றி.
எவ்வளவு விஷயங்களை ஆய்ந்து எழுதி வருகின்றீர்கள். பிரமிப்பாக இருக்கிறது.// 'This individual left Madras with his family for his native place in Tinnelvely (Police Archives Vol.xxx 1908) என்ற ஸி.ஐ.டி. குறிப்புகளிலிருந்து இத்தனையும் போலிசுக்குத் தெரிந்து தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.//
பின்னே பிரிட்டிஷாரின் கண்களில் எப்படி படாமல் போகும் அவர்கள் கண்கொத்திப் பாம்பாய்த்தானே பார்த்துவந்தார்கள். ஆனால் அதே சமயம் தெரிந்தாலும் சிலவற்றிற்கு அவர்கள் ஆக்ஷன் எதுவும் எடுக்காமல் உதாரனமாக இந்தியா பத்திரிகை பாண்டிச்சேரிக்கு மாறியது பதியப்பட்டிருந்தாலும் அவர்கள் ஆக்ஷன் எடுக்காததத்ன் காரணம் ஒன்று பாண்டிச்சேரியில் இருந்த ஃப்ரென்ச் ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேயர்கள் எதுவும் செய்ய முடியாது என்பதாக இருக்கலாம் மற்றும் ஆங்கிலேயர்களின் இது ஒரு வகை டாக்டிஸ் என்றும் கூடச் சொல்லலாம்...அதாவது இப்போது கூட நம்மில் பலர்..."ம்ம் ஆங்கிலேய ஆட்சியில் கூட அவன் நியாயமா நடந்தான் எவ்வளவு கரெக்டாக இருந்தான்...அவன் சட்டம் அப்படி....என்று இப்போதும் வெள்ளையரை நாம் பாராட்டுவதில்லையா..அப்படியான ஒரு எண்ணத்தை விதைக்கும் டாக்டிஸாகவும் இருந்திருக்கலாம்...
நிறைய அறியாத விஷயங்கள் தெரிய வருகிறது. தொடர்கிறோம்
துளசிதரன், கீதா
அருமை சார் ...
வாழ்த்துக்கள் ..பணி தொடர வாழ்த்துக்கள்
திருநாவுக்கரசு
அரசு சார்!
வாசித்து கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
Post a Comment