மின் நூல்

Thursday, May 3, 2018

சமீபத்திய வெளியீடு

து  இ-புத்தகக் காலம்.

புத்தகங்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளே இ--மேகஸின்களாக வெளிவரும் காலம் இது.  அச்சடித்த புத்தகங்களின் காலத்திற்கு அடுத்த வளர்ச்சியாக இந்த இ-யுகத்தில்  புத்தகங்களுக்கான வளர்ச்சியின் இன்றைய கால கட்ட மேம்பாடு இது. 

இ-புத்தகங்களாக வெளிவந்திருக்கும் எனது நூல்கள் சிலவற்றை அவ்வப்போது வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.

புஸ்தகா டிஜிட்டல் மீடியா  (  www.pustaka.co.in  )   புத்தக வாசிப்புக்கான உருவெடுத்திடுத்திருக்கும் பிரத்தேயக புத்தகப் பிரபஞ்சம்.  பல்வேறு மொழிகளில் புத்தகங்களை வாசிக்கும் பெரும் பேறும் இந்தப்   புஸ்தகா பிரபஞ்சத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.  www.pustaka.co.in  தளத்திற்குப் போய்  புத்தக  ஆசிரியர்களின் பெயர்கள் தொகுப்பில்  ஜீவி என்று தேடினால்   பிரசுரமாகியிருக்கும் என் நூல்களின் தொகுப்பு உங்கள் வாசிப்பு ரசனைக்குக் கிடைத்து விடும்.

ரு.99/- செலுத்தினால் ஒரு மாத காலத்திற்கு unlimited- ஆக எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப வாசித்துக் கொள்ளலாம் என்பது புத்தகப்  பிரியர்களுக்காகவே ஜனித்த ஏற்பாடாகத் தெரிகிறது.  இந்த எளிய ஏற்பாட்டில் எனது நூல்களையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே எனது  படைப்புகள் சிலவற்றை இந்த இ-நூலகத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

மேற்கண்ட புத்தகங்கள்  AMAZON  KINDLE  பதிப்புலகிலும் வாசிக்கவும்  வாங்கவும் கிடைக்கின்றன.   KINDLE  தளத்திற்குப் போய்  KINDLE  உலகில்  jeevee  என்று குறிப்பிட்டுத் தேடினால் கிடைத்து விடும்.

இன்று வெளிவந்திருக்கும் எனது மின் நூல் 'எங்கள் தோழி கமலி'..  



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் சரி, இப்பூவுலகில் பெரியோர்களாலும் இஷ்ட மித்திர பந்துக்களாலும் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் சரி, காதல் கடிமணமாய் இருந்தாலும் சரி,  திருமணத்திற்கு பின்னான வாழ்க்கை எனபது  ஆண்--பெண் இரு பாலாருக்கும் எப்படி அமையும் என்பது தீர்மானிக்க முடியாமல் தான் இருக்கிறது.

பெண் என்பவள் நாற்றங்கால் போல என்கிறார்கள்.  ஓரிடத்தில் வளர்க்கப்பட்டு இன்னொரு இடத்தில் ஊன்றப்படுபவள் அவள்.   பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற இரு வேறு பட்ட வாழ்க்கை பெண்களுக்குத் தான் உண்டு.  ஒத்துப் போதல், விட்டுக் கொடுத்தல், அன்பு, அனுசரணை என்று அடுக்கப்படும் உபதேசங்கள் எத்தனையோ அவளை நோக்கிய நீளுகிறது.

இந்தக் கதையின் நாயகிக்கு ஏற்பட்ட திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை அனுபவங்களோ வேறு மாதிரியானவை.  அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பது தான் இந்த நாவல் ரூபம் கொண்டுள்ளது.

வாசித்துத் தான் பாருங்களேன்....  கமலி நிச்சயம் உங்களுக்கும் தோழியாகி விடுவாள்...


அன்புடன் உங்கள்,

ஜீவி





6 comments:

ஸ்ரீராம். said...

அமேஸான் கிண்டிலிலும் கிடைக்கிறதா? வாழ்த்துகள். கமலி கொஞ்ச காலம் என்னிடமும் இருந்தாள் இல்லை?!!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//கமலி கொஞ்ச காலம் என்னிடமும் இருந்தாள் இல்லை?!!!!!//

ஆமாம், ஸ்ரீராம். கமலி சிறு குழந்தையாய் (சிறுகதையாய் ) இருந்த பொழுது நம்ம வூட்டு (எங்கள் பிளாக்) தாழ்வாரத்தில் தவழ வந்திருந்தாள். பின்னாடி தான் அவள் வளர்ந்து பெரியவளானாள். (நாவலானாள்)

இன்னும் சில நாட்களில் கிண்டிலில் கிடைக்கும். எனது மற்ற புத்தகங்கள் அமெஸான்
கிண்டிலில் கிடைக்கின்றன. புத்தக செக்ஷனுக்குப் போய் jeevee பெயர் போட்டுத் தேடிப் பாருங்களேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஜீவி said...

@ கரந்தை ஜெய்க்குமார்

@ கோமதி அரசு

நன்றி, நண்பார்களே!

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

வாழ்த்துகள். விரைவில் வாசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

Related Posts with Thumbnails