அத்தியாயம்--19
பாரதியாரின் பத்தாண்டு காலப் புதுவை வாசம் தமிழ் கவிதை உலகிற்கு பெரும் பங்களிப்பைச் செய்த காலமாகும். பெண்களின் விடுதலைக்கான பாடல்கள், சக்தி பாடல்கள், ஒப்பற்ற சித்தக்கடல், வேதாந்தப்பாடல்கள், அவரின் சுயசரிதைப் பாடல்கள் மட்டுமல்ல, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று படைப்புலகின் பேரழகுகள் அத்தனையும் அவரிடமிருந்து வெளிப்பட்டது அவரது புதுவை வாச காலத்தில் தான். அவரது தத்துவ, ஞானத் தேடல்களுக்கு களமாக அமைந்தது புதுவை மண் தான். இந்தியா, சூர்யோதயம், விஜயா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளோடு அவர் ஆத்மார்த்த தொடர்பு கொண்டிருந்த காலமும் அது தான். ரிக் வேதப்
பாடல்களை முறையாக அரவிந்தரிடம் அவர் பாடம் கேட்க வாய்த்த காலமும் அது தான். அரவிந்தரும் பாரதியிடம் தமிழ் பயின்றார். பிற்காலத்தில் திருக்குறள், ஆழ்வார் பாசுரஙகள் போன்றவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யும் அளவுக்கு பாரதி கற்றுக் கொடுத்த தமிழ் ஞானம் அரவிந்தரிடம் செயல்பட்டிருக்கிறது.
பாரதியின் அருமை மகள் சகுந்தலா தம் தந்தையாரிடமிருந்து தமிழ்ப்பாடல் பிறக்கும் நேர்த்தியைப் பற்றிச் சொல்கிறார், கேட்போம்:
"என் தந்தை பாட்டு இயற்றுகையில் அதற்கு ராகம், மெட்டு அமைக்க ஒரு உதவியையும் நாடுவதில்லை. ஏதேனும் ஒரு மெட்டில் தாமே பாடிப்பார்ப்பார். அந்த மெட்டு அவருக்குப் பிடித்திருந்தால் அந்த இசை எந்த ராக ஸ்வரஙளுக்குப் பொருத்தமாக இருக்கின்றதோ அந்த ராகத்தின் பெயரை மட்டும் எழுதி வைத்திருப்பார். தாள கதி தானே வந்து அமைந்து கொள்ளும். தாம் எழுதிய பாடல்களை என் தந்தை தம் ஆப்த நண்பர்கள் சிலரிடம் பாடிக் காண்பிப்பார். ஸ்ரீ வ.வே.சு. அய்யர், கண்ணன் பாட்டுக்கு எழுதித் தந்துள்ள முகவுரையில் கற்பனா பாவத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியர் தம் பாடல்களைப் பாடுவதைக் கேட்டிருப்பவர்கள் அவற்றை அட்சர லட்சம் பெறுமானமுள்ளதாக மதிப்பர் என்றார். என் தந்தை தம் குயில் பாட்டில் "காதல், காதல், காதல்.." என்று குயில் பாடியதாகக் கூறும் போது 'அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன்; விந்தைக் குரலுக்கு மேதினியீர் என் செய்வேன்' என்றார். ஆனால் அந்த அவரது கற்பனைக் குயில்க் காதலிக்குள்ள குரலினிமை ஒரு வேளை அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவரது கம்பீரமான குரலினிமையை-- அந்த அற்புதமான உச்சரிப்பை-- ஒரு கிராம்போன் இசைத்தட்டு மூலமாகப் பல நாள் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் நானும் எங்கள் குடும்பத்தாரும்-- ஏன் தமிழ் நாட்டாரும் பெறவில்லையே!" என்று ஏக்கத்துடன் சொல்கிறார்.
'செந்தமிழ் தென்புதுவை என்னும் திருநகரின் மேற்கே
சில தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை' என்று குயில் பாட்டில் புதுவை நகரின் செளந்தரியத்தைத் தந்தையார் வர்ணித்திருக்கிறார். ஆனாலும் அத்தகைய புதுவை நகரை விட்டு வெளி வரக்கூடாதென்று அரசாங்க ஆக்ஞையினால் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல என் தந்தை தவித்து மறுகினார். 'இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும். தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்; தனுவுண்டு; காண்டீபம் அதன் பேர் என்றான்' -- இவ்வாறு பாஞ்சாலி சபதத்தில் அர்சுனன் கூறியதாக என் தந்தையார் எழுதியுள்ள பாடலைப் பற்றி ஸ்ரீ வ.வே.சு. அய்யர் பாஞ்சாலி சபத்திற்கான தம் முகவுரையில் பரவசத்துடன் எழுதியிருப்பதைக் காணலாம். அந்த வரிகளுக்கு அவர் அத்தனை பெரிய மதிப்பு அளித்ததன் காரணம், என் தந்தையின் பாவன்மைக்காக மட்டுமல்ல; புதுவையில் அவர்கள் அடைபட்டுக் கிடந்தபோது அந்தப் பாட்டு அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாயிருந்து என்பது தான் அந்தப் பாடலை ஸ்ரீஅய்யர் தனிமையில் தமக்குள் பாடிப்பாடி மகிழ்வதை நான் கேட்டிருக்கிறேன்...." என்று சகு ந்தலா பாரதி சொல்லும் பொழுது புதுவையில் பாரதியார் கட்டுண்டு கிடந்த அவலமும் சுதந்திரத்திற்கான அவரது தாபமும் புரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் சகுந்தலா.
பாரதியாரின் முதல் புத்தகத் தொகுதி 'சுதேச கீதங்கள்' என்ற பெயரில் வெளி வந்தது புதுவையில் தான். இது நடந்தது 1908-ம் ஆண்டில். 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சர்வ உயிர்களையும் நேசிப்பவனாய் பாரதி பாடிக் களித்தது புதுவை குயில் தோப்பில் தான்; பள்ளி ஆசிரியர் கனக சுப்புரத்தினம் பாரதியை சந்திக்கும் வாய்ப்பு பெற்று பிற்காலத்தில் பாரதிதாசன் ஆனதும் புதுவையில் தான்.
பாரதிக்குக் கிடைத்த பிரெஞ்சு மொழிப் புலமை புதுச்சேரியில் தான். அவரது பிரஞ்சு மொழி ஞானம் பிரஞ்சு மொழியில் இயற்றப்பட்ட நூல்களை வாசித்தறியவும், அவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்யவும், பிரஞ்சு அதிகாரிகளுடன் சரளமாகப் பேசவும் உதவியது. ஏற்கனவே அவர் ஆழ்ந்து அறிந்திருந்த சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு இப்பொழுது பிரன்சும் சேர்ந்து கொண்டது.
என்ன இருந்தும் பாரதியின் அருமைத் திருமகள் சகுந்தலா குறிப்பிட்டபடியே புதுவை வாழ்க்கை கூண்டில் அடைப்பட்ட சிங்கம் போலவே பாரதிக்கு இருந்திருக்கிறது. பக்கத்து தழிழகத்தில் வீர சுதந்திரம் வேண்டி செயல்பட்டோர் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை அனுபவிக்க தான் அவர்களிடமிருந்து விடுபட்டதே போல அன்னிய மண்ணில் வாசம் செய்வது அவருக்கு உறுத்தலாக இருந்தது. தமிழகம் சென்று அவர்களோடு தோளோடு தோள் சேர்ந்தாற் போல போராட உள்ளம் தவித்தது.
எப்படியாவது பிரிட்டிஷ் எல்லைக்குள் சென்று விடத் தவித்த பாரதியார் அதற்கான உபாயம் ஒன்றை மேற்கொண்டார். சென்னை கவர்னருக்கும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுபிப்பினரும், பிரபல தொழிற்கட்சித் தலைவருமான ராம்ஸே மக்டானல்டுக்கும் {Ramsay Macdonald} புதுவையில் வேவு பார்க்கும் பிரிட்டிஷ் காவல்துறையினரின் அத்துமீறல்கள் பற்றி கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதம் பிறகு இந்து பத்திரிகையிலும் வெளிவந்தது. அரசிடமிருந்து எந்தச் சலனமு;ம் இல்லை என்பதினால் பாரதியார் தாமே இந்திய எல்லைக்குள் நுழைந்து விடுவது என்று துணிவாக முடிவெடுக்கிறார்.
1918 நவம்பர் 20-ம் நாள்.
ஒரு ஜட்கா வண்டியை அமர்த்திக் கொண்டு கடலூர் வந்து விடலாம் என்பது பாரதியின் திட்டம். திட்டமும் எந்தத் தடையும் இல்லாமல் அமுலாகிறது.
பாரதியின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த பிரிட்டிஷ் போலிசார் புதுவை-- கடலூர் எல்லையில் அவரைக் கைது செய்கின்றனர். அந்நாளைய கடலூர் சப்-மாஜிஸ்ட்ரேட் சக்ரவர்த்தி என்பார் முன் நிறுத்துகின்றனர். பாரதி கைது பற்றிய விவரம் அறிந்த கடலூர் வழக்குரைஞர்கள் சடகோபாச்சாரியாரும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் எடுக்க முயன்றனர். ஆனால் சப்-மாஜிஸ்ட் பாரதியை வெளியில் விட்டால் தன் பதவி சுகத்திற்கு ஏதேனும் பஙகம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பாரதியை இரண்டு நாட்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டு சிதம்பரத்தில் முகாமிட்டிருந்த தென்னாற்காடு ஜில்லா நீதிபதி ஸ்டோடார்டின் முன் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்ததின் மூலம் ஒரு ஆங்கில நீதிபதியே பாரதியாரின் விடுதலை பற்றித் தீர்மானிக்கட்டும் என்று சாமர்த்தியமாக நழுவிக் கொள்கிறார்.
சென்னை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாய் இருந்த ஹானிங்டன் என்பவர் பாரதியாரின் மேல் கருணை கொண்டு டிசம்பர் 14-ம் தேதி நேரில் பாரதியைச் சந்திக்கிறார். பாரதி பத்திரிகை பிரசுரத்திற்கென்று எது எழுதினாலும் தன்னிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகு அவை பிரசுரமாக வேண்டும் என்ற நிபந்தனையை முக்கியப்படுத்தி பாரதியின் விடுதலைக்கு வழிகோலுகிறார். ஏறத்தாழ 25 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு சில நிபந்தனைகளை எதிர்கொண்டு பாரதி !4-12-1918 அன்று விடுதலையாகிறான்.
இந்த 25 நாட்களிலும் பாரதியின் சிறைவாசத்தை அந்நாளைய சென்னை மாகாண தமிழறிஞர்களும், அரசியல்வாதிகளும் வாய்மூடி மெளனிகளாய் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். பாரதி விடுதலையாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருச்சியிலே தமிழ்ப் பண்டிதர்களில் மாநாடு ஒன்று நடந்திருக்கிறது. அதில் ஒரு தமிழ்க் கவிஞன் என்ற அளவில் கூட பாரதியின் விடுதலை பற்றி பிரஸ்தாபிக்கவே இல்லை. டிசம்பர் எட்டாம் தேதி தஞ்சை மணிக்கூண்டிற்கு அருகே தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியும், இந்திய ஹோம் ரூல் இயக்கத்தினரும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பாரதியின் கைதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாரதியின் விடுதலைக்குப் பின் 17-12-1918-ல் தஞ்சையில் கூடிய தஞ்சை நகரவாசிகள்--ஜில்லா காங்கிரஸ் கமிட்டியினரின் கூட்டத்தில் பாரதியின் விடுதலையை வரவேற்று மகிழ்ச்சி பொங்க தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இது ஒன்றே அன்றைய தமிழகம் பாரதி பற்றிக் கொண்டிருந்த அக்கறையாகத் தெரிகிறது.
'நாம் அச்சுக்குப் போகும் சமயத்தில் சென்னை கவர்ன்மெண்டார் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாரை விடுதலை செய்யும் படி உத்தரவு செய்து விட்டதாகத் தெரிகிறது' என்று பாரதியின் விடுதலை குறித்த முதல் அச்சுச் செய்தியாக சுதேசமித்திரன் நாளேட்டின் தகவல் சொல்கிறது.
விடுதலையான பாரதி அடுத்த நாளே 15-12-1918 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடையம் வந்து சேர்ந்தார்.
{வளரும்}
படம் அளித்தவர்களுக்கு நன்றி.

13 comments:
தொடர்கதையா நண்பரே,முந்தைய பதிவின் இணைப்பை
இப்பதிவில் கொடுத்திருக்கலாமே?
கதைகளைத் தொடர்கிறேன் நண்பரே..
// ரிக் வேதப் பாடல்களை முறையாக அரவிந்தரிடம் அவர் பாடம் கேட்க வாய்த்த காலமும் அது தான்.
அவர் வேதம் அதுவோ? வேதம் கற்ற பாரதி அதைத் தனது பாணியில், பாடலில் எதுவும் கொண்டுவரவில்லையோ?
வாழும்போது அவர் புகழை முழுவதும் அறிந்தவர்கள் வழக்கம்போல குறைவுதான் போலும்.
கடந்த சில நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன் ஜீவி சார் ஒருதலைப்பில் எழுதத்துவங்கி மீண்டும் எப்போதாவதுதான் துவங்குவார் பாரதியார்படிவுகளும் அப்படித்தானோ என்று நினைத்தேன் நல்ல வேளை மீண்டும்பாரதியார் வந்து விட்டார் பழையதை நினைவு கூற மீண்டும்பழைய பதிவுகளைமேய வேண்டும்
அழகாகப் போகிறது தொடர்.. இன்னும் பாரதியார் பற்றி அறிய ஆவல்..
பாரதியைப் பற்றி எத்தனை தகவல்கள்? நன்றி.
// அவரது கம்பீரமான குரலினிமையை-- அந்த அற்புதமான உச்சரிப்பை-- ஒரு கிராம்போன் இசைத்தட்டு மூலமாகப் பல நாள் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் நானும் எங்கள் குடும்பத்தாரும்-- ஏன் தமிழ் நாட்டாரும் பெறவில்லையே!" என்று ஏக்கத்துடன் சொல்கிறார்.//
உண்மைதான், நிஜமாகவே ஏக்கம் வருகிறது.
பாரதி பற்றி கொஞ்சம் தெரிந்த விஷயங்களையும், நிறைய தெரியாத விஷயங்களையும் தங்கி வரும் இத்தொடர் புத்தகமாக வர வேண்டும்.
@ ஸ்ரீராம்
4-1-1919 சுதேசமித்திரன் பத்திரிகையில் பாபநாசம் என்ற பெயரில் பாரதியின் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது.
2-3-19 விக்டோரியா ஹால் சொற்பொழிவு
17-3-19 சென்னை கோகலே ஹாலில் 'நானே கடவுள்' என்ற தலைப்பில் பேசியுள்ளார்.
1919-ல் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் திரு. ரங்கசாமி ஐயங்கார் தலைமையில் Women's place in Society என்ற தலைப்பில் பேசியுள்ளார்.
உபரித் தகவல்:
15-2-19-ல் சுதேசமித்திரன் பத்திரிகையில் 'சூச்சூ' என்ற சிறுகதை {இந்த 'சூச்சூ' தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த்திருக்கிறது|
22-3-19-ல் சுதேசமித்திரனில் 'ஸத்யாநந்தர்' என்ற சிறுகதை.
@ க.சி.க
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு.
தொடர்ந்து வாசித்து வாருங்கள். பாரதியைப் பற்றி நீங்கள் இது வரை அறிந்திராதத் தகவல்கள் பல தட்டுப்படும்.
க.சி.க.
பதிவின் இடது பக்க சைடு பாரில் பாருங்கள். இது வரை வெளிவந்த பகுதிகள் பூராவற்றையும் வாசித்து முடிக்கலாம்..
தொடர்ந்து வாருங்கள், நண்பரே!…
@ ஶ்ரீராம்
இன்று கூட பலரின் பெருமைகளைப் புரிந்து கொள்ள தவறுகிறோமோ நாம் என்று தோன்றுகிறது.
பாரதியாரைப் பொறுத்தமட்டில் அவரைத் தெரிந்தவராகக் காட்டிக் கொண்டாலே ஆபத்திருந்தது. போலீசாரின் கண்காணிப்பு.
சிலர் அவரைத் தவிர்த்திருக்கிறார்கள். சிலர் அவரை கேலிக்குரியவராக்கியிருக்கிறார்க்ள்.
இன்று கூட இணையத்தில் அவருக்குரிய மரியாதையைத் தர மனமில்லாமல் இருக்கிறார்கள்.
அப்படியானவர்களைப் பார்த்த பிறகு தான் இந்தத் தொடரை எழுதியே ஆக வேண்டும் என்ற உத்வேகமே எனக்கேற்பட்டது.
@ G.M.B
தளராத ஆர்வம் இருந்தும் தொடர்ந்து எழுத முடியாமைக்கு பல காரணகள்.
பலவற்றை நான் வெளிப்படப் பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் தெரிவதில்லை.
அனுசரித்து வாசித்து வர வேண்டுகிறேன்.
@. ஞானி
அட! ஞானியா? சும்மா அதிருதில்ல... தேம்ஸ் நதித்தீரத்து சாரல் வேறு!..
நீங்கள் வாசித்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி.
Post a Comment