Sunday, February 24, 2008

அங்கீகாரம்

"எல்லோருக்குமான சிறந்த அங்கீகாரம் தருவது மனச்சாட்சிதான். சிறந்த ஒரு செயலைச் செய்துவிட்டதாக ஒருவருடைய மனச்சாட்சி மாத்திரம் சான்றிதழ் தந்துவிட்டால், ஏற்படும் நிறைவுக்குப் பிறகு எவருடைய பாராட்டும் சரி, தூற்றுதலும் சரி, எந்த விளைவையும் ஏற்படுத்தாது. எனவே மனச்சாட்சியின் அங்கீகாரத்திற்கே ஏங்குங்கள்..."

-பதிவர் நண்பர் ரத்னேஷ், தனது "அங்கீகாரமும் வெகுமதியும் படுத்தும் பாடு" பதிவில்
=========================================================
"நேர்மை..நேர்மை..நேர்மையா இருந்து என்னத்தைச் சாதிச்சிட்டே?" என்று எரிந்து விழுந்தான் தங்கராஜ், ம்னைவியைப் பார்த்து.

சத்யா ப்திலே பேசவில்லை.

விஷயம் இதுதான். அவள் பணிபுரியும் மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியர் குழந்தைகள் கல்வி உதவிநிதியாக வருடத்திற்கு ரூபாய் மூவாயிரம் தருகிறார்கள். ஊழியரின் கணவ்ரோ அல்லது மனைவியோ ப்ணிபுரிந்தால் அவர்கள் இருவரின் அடிப்படைச்சம்பளம் ரூபாய்
ஏழாயிரத்துக்கு மேல் இருப்பின், இந்த உதவி பெறத்தகுதியில்லை என்பது விதி.
தங்கராஜ்மாநில அரசு ஊழியன். இருவர் அடிப்படைச் சம்பளமும் சேர்த்து ரூபாய் ஏழாயிரத்துக்கு மேல் இருப்பதால் சத்யா இந்த உதவிநிதிக்கு விண்ணப்பிக்கவில்லை.

இதுதான் இன்றைக்கு தங்கராஜை உசுப்பி விட்டுவிட்டது. இது என்று இல்லை. சத்யாவிற்கு நேர்மையற்ற வழிகள் எதுவும் கட்டோடு பிடிக்காது. அவளின் இந்தக் குணத்திற்காக தங்கராஜ் பலதடவைகள் இப்படி உசுப்பப்படுவதுண்டு.

"புருஷன் வேலைலே இல்லேன்னு 'க்ளீனா'ச் சொல்லிடறதுதானே?..நீ நேர்மையை தலைலே தூக்கிண்டு ஆடினதாலே, மூவாயிரம் போச்சு...சேச்சே..மூவாயிரம் ரூபாய்...எவன் தருவான் இந்தக் காலத்திலே?"-- தங்கராஜ் துடித்தான்.

"அதுக்கில்லீங்க..நீங்க அரசாங்க வேலைலே இருக்கீங்க..எப்படி இல்லேன்னு, மன்ச்சாட்சியை வித்திட்டு பொய் சொல்லியானும்..."

அவள் முடிக்கக்கூட இல்லை; த்ங்க்ராஜ் சீறினான்: "ஆ! பெரிய சத்யத்திலகம்! நாலுபேர் புகழ்ந்தா உனக்குப் போதுமே, உனக்குத் தலைகால் புரியாதே!..இதுதான் போகட்டும்.. போனவாரம் பக்கத்து வீட்டுக்காரர் காரியம் முடியுமான்னு உன்னைத்தானே கேட்டார்?.. படியேறி வந்த ஸ்ரீதேவியை நீ சீந்த்லே..உன்னோட வேலைசெய்யறவ்ங்க தானே, அந்த் கஸ்தூரி?..அவங்க கிட்டே தள்ள வேண்டியதைத் தள்ளி அவர் உங்க ஆபிஸிலே தனக்கு வேண்டிய காரியத்தைச் சாதிச்சிக்கலே?..அவங்க புத்திசாலி...நோகாம சம்பாதிக்கறாங்க.."

"கஸ்தூரியைப் பத்தி எங்கிட்டே சொல்லாதீங்க..இங்கே அங்கே வாங்கறதை பாவம்,அவங்க ஆஸ்பத்திரிக்கு அழறது எனக்குத்தானே தெரியும்?"

"எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?..உன்னை மாதிரி வாய்ப்பு ம்ட்டும் எனக்கு இருந்திச்சின்னா...அட்டா!.."

சத்யா பதில் சொல்வதற்குள் வாசலில், "சார்..போஸ்ட்.." என்று குரல் கேட்டது.

கடித்ததை வாங்கிப் படித்த சத்யாவின் முகத்தில் சந்தோஷம்.. கணவனைப் பார்த்து நொடித்தாள்.

தங்கராஜ் கடிதத்தைப் பிடுங்கிக்கொண்டான்.

த்னியார் டி.வி. நிறுவனம் ஒன்றிலிருந்து அந்தக் கடிதம். அவளது அலுவலக சிபாரிசில், அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி விசேஷ ஒலிபரப்பு பேட்டி நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்திருந்தார்கள்.

"ப்பூ.." என்று உதட்டைப் பிதுக்கினான் அவன். "உனக்கு இது போதும்னு அவங்களுக்கு ந்ல்லாவே தெரியும்; உன்னை 'நேரமைத்திலகம்'ன்னு புகழ்ந்திண்டே அவங்க ரெண்டு கையாலேயும் வாங்கிப் போட்டிண்டு இருக்காங்க...தெரிஞ்சிக்கோ.."

'சின்னத்திரை'க்காரர்களுக்கே சந்தேகம்...."ஆத்மதிருப்திக்காக நேர்மையா?" என்றார்கள்..."இல்லை, பயமா?" என்றார்கள்.

நேரடி ஒளிபரப்பு...தயாரிப்பு எதுவுமில்லாமலேயே, எந்த்க்கேள்விக்கும் தயாராயிருந்தாள் சத்யா.

"இரண்டும் இல்லை. என் மனச்சாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்து நேர்மைக்காக நேர்மையாய் இருக்கிறேன்" என்றாள் சத்யா.

"புரியவில்லையே?"

"நேர்மையாய் இருப்பதில் வாழ்க்கையில் எனக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, அதற்கு சோத்னை வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,என் மகிழ்ச்சிதான் பன்மடங்கு கூடியிருக்கிறது."

"என்ன மேடம் சொல்றீங்க?" என்று மடக்கினார்கள், டி.வி.காரர்கள். "நேர்மையாய் இருப்பதில் இழ்ப்பில்லையா? உங்கள் அலுவலகத்தில் கூடச்சொன்னார்களே?..'புருஷன் வேலைலே இருக்காரு..இவ்வளவு சம்பாதிக்கிறாரு'ன்னு நேர்மையா உண்மை சொனனதினாலே, உங்கக் குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை கூடக் கிடைக்கலேன்னு?..அது உங்களுக்கு இழப்பு தானே?"

"சத்தியமாய் இல்லை" என்று சிரித்தாள் சத்யா.

"பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், பண சமாச்சாரத்தில் கூட எந்த இழ்ப்பும் இல்லை. என் நேர்மைக்காகத்தானே என் அலுவலகம் சொல்லி என்னை இங்கே அழைத்திருக்கிறீர்கள்?.. இங்கே வந்ததும் தான் எனக்குத் தெரியவந்தது. இந்த நேரடி ஒளிபரப்புக்கு வெகுமதியாக எனக்கு ஐயாயிரத்திற்கு செக் தரப்போகிறீர்களென்று..இது என் நேர்மைக்குக் கிடைத்த
பரிசு இல்லையா?..ஆக, பண சமாச்சாரத்தில் கூட எனக்கு இழப்பு இல்லை.."

கரகோஷம்.. நேரடி ஒளிபரப்பு பார்வையாளர் பகுதியிலிருந்து தங்களை மீறி பலத்த கரகோஷம்...

வீட்டில், டி.வி.யில், இந்த நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த தங்கராஜூம் த்ன்னை மீறிப் புன்முறுவல் பூத்தான்.
Related Posts with Thumbnails