Sunday, May 25, 2008
ஒப்பில்லாத அப்பன்
ராகமாலிகை
தாளம்: ஆதி
பிலஹரி
பங்குனி சிரவணம் பரிசுத்தம்
விண்ணகரப்பன் விஸ்வரூப தரிசனம்
கோடி சூர்யப் பிரகாசம்
ஹம்ஸாநந்தி
ஒப்பில்லாத அப்பன் நம் ஒப்பிலியப்பன்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பன் என் விண்ணகரப்பன் என்று
நம்மாழ்வார் துதித்த செல்லப்பன் இவன்
சாருகேசி
வலக்கரம் காட்டும் தாமரைப் பூம்பாதம்
இடக்கரம் தொடும் தொடை அலங்காரம்
ஸ்ரீவைகுண்டம் இதுதான் என்ற துளசிஷேத்திரம்
பூலோக வைகுண்டம்; புரிந்து கொண்டோம்
சாரங்கா
உப்பில்லாத உணவு விரதமோ? வரதா!
உன் விளையாட்டோ? கொண்டல் வண்ணா!
மார்க்கண்டேயர் வளர் மகளை மணக்க வழியோ?
மகாலஷ்மி மனம்கவர் செல்வா! சொல்வாய்!
ஹிந்தோளம்
ஐப்பசி சிரவணம் ஐயனின் திருமணம்
பூமிதேவி கைத்தலம் பற்றும் கல்யாண கோலம்
வைகானஸ ஆகமம்; ஆத்மானந்த வைபவம்
வித்தாக நெஞ்சில் விழுந்து விழுதான வேதம்!
ஆனந்தபைரவி
ஆளவந்தாயோ? அடியார் ஆளவந்தார் தொண்டரடி
அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ?
பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்
பூரண சந்திர வதனா! வரதா! வைகுண்டநாதா!
(பங்குனி சிரவணம்)
ஒப்பிலியப்பன் திருக்கல்யாண அசைபடம்:
நன்றி: ஒப்பிலியப்பன்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
”உப்பில்லாமல் உண்பேன்
அந்த உத்தமியை மணப்பேன் “
என்று சிறுவயதில் அடிக்கடி கேட்ட அந்த உப்பிலியப்பன் பாடல்தான் எனக்கு ஞாபகம் வந்தது
நன்றிகளுடன்...
ஆஹா நேற்று போயிருந்திருக்க வேண்டியது சில காரணங்களால் வார நடுவிற்கு தள்ளிப்போட்டிருக்கிறோம்.. இன்று படிக்கும் போது அவரே கூப்பிடுவது போல் உள்ளது...
"மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என் ஒருவனையே சராணாகதி பண்ணு நான் உன்னைக்காப்பேன் என்று சொன்னவனல்லவா......
ஆகா, ஒப்பில்லாத அப்பனை தாங்கள் ராகமாலிகை என்னும் கதம்ப மாலையினால் அலங்கரித்துள்ளது அழகாக உள்ளது.
//பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்//
முதலில் பொடியாகும் என்று சொல்லி - பின்னர், அதாவது துயரம் தூளாகும் என்று சொன்ன பாங்கு அழகு!
முடிவில் ஆனந்தபைரவியில் முடிப்பது அருமை, ஆனந்தம்!
திருக்கல்யாண திவ்ய தரிசனமும், ஒப்பிலியப்பன் படமும், பாடலும் மிக அருமை! மிக்க நன்றி!
இரத்தின சுருக்கமாக ஒப்பிலியப்பன் தல வரலாறு இராக மாளிகையில் அருமை.
வளர்க உங்கள் தொண்டு.
நன்றி
ஆயில்யன். said...
//”உப்பில்லாமல் உண்பேன்
அந்த உத்தமியை மணப்பேன் “
என்று சிறுவயதில் அடிக்கடி கேட்ட அந்த உப்பிலியப்பன் பாடல்தான் எனக்கு ஞாபகம் வந்தது
நன்றிகளுடன்...//
வாருங்கள், ஆயில்யன்!
சிறுவயது ஞாபகம் கிளர்ந்து வந்ததா?
எல்லாம் அந்த ஒப்பில்லாத அப்பனின் அருள்.
வருகைக்கும் நினைவுகளுக்கும் நன்றி.
கிருத்திகா said...
//ஆஹா நேற்று போயிருந்திருக்க வேண்டியது சில காரணங்களால் வார நடுவிற்கு தள்ளிப்போட்டிருக்கிறோம்.. இன்று படிக்கும் போது அவரே கூப்பிடுவது போல் உள்ளது...
"மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என் ஒருவனையே சராணாகதி பண்ணு நான் உன்னைக்காப்பேன் என்று சொன்னவனல்லவா......//
இந்த மாத சிரவண நட்சத்திரதன்று
பதிவிட்டேன்...அன்றே அவன் அருளால் படித்து விட்டீர்கள்..
அவன் அருளால் திட்டமிட்ட பயணமும் கைகூடி தரிசனமும் கிடைக்கட்டும்..
வருகைக்கு நன்றி பல.
ஜீவா (Jeeva Venkataraman) said...
//ஆகா, ஒப்பில்லாத அப்பனை தாங்கள் ராகமாலிகை என்னும் கதம்ப மாலையினால் அலங்கரித்துள்ளது அழகாக உள்ளது.
//பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்//
முதலில் பொடியாகும் என்று சொல்லி - பின்னர், அதாவது துயரம் தூளாகும் என்று சொன்ன பாங்கு அழகு!
முடிவில் ஆனந்தபைரவியில் முடிப்பது அருமை, ஆனந்தம்!//
வாருங்கள், ஜீவா!
ஒப்பில்லாத அப்பனுக்கு பாமாலை
சூட்டிய மகிழ்ச்சி உங்களையையும்
பற்றியிருக்கிறது.
இசை மெய்மறக்கச் செய்யும் சக்தி படைத்ததல்லவா?..
சங்கீத ரசனை கைகூடியோருக்குக் கேட்கவே வேண்டாம்..
மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..
Kailashi said...
//இரத்தின சுருக்கமாக ஒப்பிலியப்பன் தல வரலாறு இராக மாளிகையில் அருமை.
வளர்க உங்கள் தொண்டு.
நன்றி//
கைலாஷி சார்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி...சரியாகச் சொன்னீர்கள்..
நான் எண்ணியதும் அதுதான்..தலவரலாற்றை சொல்லிவிட வேண்டுமென்றே முயன்றேன்..அகோராத்தர புஷ்கரணி போன்ற சில செய்திகள் விடுபட்டு போனதைப் பின்னால் சேர்க்கவேண்டும்.
எல்லாம் அப்பனின் அருள்..
நான் அனுப்பிய பின்னூட்டத்தைக் காணும் :(
கவிநயா said...
திருக்கல்யாண திவ்ய தரிசனமும், ஒப்பிலியப்பன் படமும், பாடலும் மிக அருமை! மிக்க நன்றி!
கவிநயா said...
நான் அனுப்பிய பின்னூட்டத்தைக் காணும் :(
சாரி கவிநயா,
ஒரேயடியாக மறுமொழி கொடுத்ததில் கவனிக்காமல் தவற விட்டிருக்கிறேன், போலிருக்கிறது!
நல்ல வேளை, நினைவூட்டினீர்கள்!
உங்களுக்கு இராகத்துடன் இப்பாடலையும் இது போன்ற என் பதிவிலிருக்கும் மற்ற பாடல்களையும் பாடமுடிந்தால், பாடிப் பார்த்துச் சொல்லுங்களேன். விமரிசனமாக இருப்பின் இது போல இன்னும் நிறைய எழுதவிருப்பதால், அது உதவும்.
தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த ரசனைக்கும் மிக்க நன்றி.
எனக்கு பாடத் தெரியாதுங்க ஜீவி :( ஆனா பாடத் தெரிஞ்சவங்களை தெரியும். நிச்சயம் அவங்களுக்கு அனுப்பி உங்களுக்கும் தெரிவிக்கிறேன்..
கவிநயா said...
//எனக்கு பாடத் தெரியாதுங்க ஜீவி :( ஆனா பாடத் தெரிஞ்சவங்களை தெரியும். நிச்சயம் அவங்களுக்கு அனுப்பி உங்களுக்கும் தெரிவிக்கிறேன்..//
ஆடலும், பாடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கலைகள் மட்டுமல்ல, ஒன்றில் ஒன்று உள்ளடங்கியது என்கிற அர்த்தத்தில், அடக்கமாகக் கூறினாலும், ராகங்களின் வகைகளையும் அவற்றின் நிரவல்களையும் சிரமமில்லாமல் புரிந்து கொள்வதில் நீங்கள் ஓரளவு ஞானம் கொண்டவராகத் தான் இருப்பீர்கள்.. நான் இப்பொழுது தான் இவற்றின் அரிச்சுவடிப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். தேறுவதற்க்கு நிச்சயம், கொஞ்ச காலம் ஆகும் என்பது சர்வ நிச்சயம்.
தங்கள் ஆர்வத்திற்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி, கவிநயா!
இந்தப் பதிவு அடியேன் கண்ணில் படாமல் இம்புட்டு நாள் எப்படித் தப்பித்ததோ ஜீவி சார்?
கைலாஷி ஐயா இப்போது வலைச்சரத்தில் காட்டிக் கொடுக்க...
கைலாசம் சுட்டிக் காட்டும் திருவிண்ணகர் என்று ஆகத் திருவுளமோ! :)
//ஆளவந்தாயோ? அடியார் ஆளவந்தார் தொண்டரடி
அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ?//
அருமையான வரிகள்!
மானசா(சா)ம்ராஜ்யம்!
அகத்தரசு ஆண்டான்!
//பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்//
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும்! என்ற திருமங்கை வரிகள் ஓடி வந்து விட்டன!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இந்தப் பதிவு அடியேன் கண்ணில் படாமல் இம்புட்டு நாள் எப்படித் தப்பித்ததோ ஜீவி சார்?
கைலாஷி ஐயா இப்போது வலைச்சரத்தில் காட்டிக் கொடுக்க...
கைலாசம் சுட்டிக் காட்டும் திருவிண்ணகர் என்று ஆகத் திருவுளமோ! :)//
வாருங்கள், கே.ஆர்.எஸ்.,
மிக்க மகிழ்ச்சி.
கைலாஷி சாருக்கு இருவரும் நன்றி சொல்வோம்.
அந்தக் காலத்து 'ஆற்றுப்படுத்துதல்' போல் அமைந்து விட்டது.
மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இரண்டுமே பூலோக கைலாசம் தாம்.
அந்தக்காலத்தில், மலையேறி திருவேங்கடவனை தரிசிக்க முடியாதவர்கள், வேங்கடவனுக்கு நேர்ந்து கொண்டதை, பூலோக கைலாசமான திருவிண்ணகரில் சமர்பித்து திருப்தி அடைவார்கள் என்று சொல்லுவார்கள். அதுபோல், இமயமலை ஏறி கைலாசம் அடைந்து அம்மையப்பனை தரிசிக்க இயலாதவர்கள், பூலோக வைகுண்டத்தில் விண்ணகர அப்பனை தரிசித்து மகிழலாம் அல்லவா?..
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆளவந்தாயோ? அடியார் ஆளவந்தார் தொண்டரடி
அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ?//
அருமையான வரிகள்!
மானசா(சா)ம்ராஜ்யம்!
அகத்தரசு ஆண்டான்!
//பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்//
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும்! என்ற திருமங்கை வரிகள் ஓடி வந்து விட்டன!//
மானசா ராஜ்யம்-
மனசாம்ராஜ்யத்தை ஆள்பவன் -
அகத்தரசு ஆண்டான்!
சொல்லின் செல்வனாய் நன்று சொன்னீர்கள்!
"நிலம் தரும்; செல்வம் தந்திடும்
அடியார் படும் துயரெல்லாம்..."என்று
வித்துவக்கோட்டம்மானை
பரவிப்பாடும் திருமங்கை ஆழ்வாரின்
என்றோ படித்த வரிகளே மனசில் ஓடி, மாறி மாறி வந்து மயக்கம் காட்டியிருக்கின்றன..
இளமையில் கற்ற கல்வி,
க்ல்லெழுத்து போல், நினைவில் படிந்துவிடுமென்பதும் எவ்வளவு உண்மை! 'தொண்டரடிப் பொடியாழ்வாரின்' திருநாமமும் நெஞ்சில் பதிந்திருக்கிறது!
எல்லாமும் கலந்து கட்டி வார்த்தைகளாக வடிவெடுத்திருக்கின்றன.
தங்கள் நினைவுகள் மிகச் சரியே
கேயாரெஸ்!
கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனைப் பற்றி நான் இட்ட பதிவு பின்னூட்டங்களுடன் http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu(#11168674346665545885) said...
திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனைப் பற்றி நான் இட்ட பதிவு பின்னூட்டங்களுடன் http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் பதிவையும் பார்த்தேன்; படித்தேன்; படித்ததை மனத்தில் இருத்தியும் கொண்டேன்.
பெருமானின் கருணை நினைத்து
மனம் நிறைந்து மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.
ஒப்பில்லா அப்பன் திருமணக்கோலம் கண்டு களித்தேன்.
பாடல் பகிர்வு அருமை.
அடியார் படும் துயரை துடைக்கட்டும் ஒப்பில்லா அப்பன்.
Post a Comment