பரிந்துரைக்கும் ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி
எடுப்பு
மஹாதேவன் அருள் புரிவான்
மனமெலாம் நிறைந்தவன் அவன்
ஜனமெலாம் காத்திடுவான்
(மஹாதேவன்)
தொடுப்பு
கைலாசநாதன் கபாலி முக்கண்ணன்
காஞ்சி ஏகாம்பரன்; ஜொலிக்கும் கனக சொரூபன்
உமையொரு பாகன் ஊர்த்துவத் தாண்டவன்
நமைக்காக்கும் நஞ்சப்பன்; தேவாதிதேவன்
(மஹாதேவன்)
குஞ்சிதபாத தில்லை சிதம்பரநாதன்
நெஞ்சம் கவர்ந்த சிவகாமி நேசன்
ஐயா என்றழைக்க அருளும் ஐயாரப்பன்
தயாநிதீஸ்வரன்! கங்காதரன்! வைத்தீஸ்வரன்!
(மஹாதேவன்)
முடிப்பு
தில்லை சிவசிதம்பர சபாநாயகன்
முல்லை சிரிப்பு மோகன சுந்தரன்
தூக்கிய பத பொன்னம்பல நடராஜன்
தேக்கிய கருணையாய் தெய்வமாய் வந்தவன்
(மஹாதேவன்)
6 comments:
அருமையா பாடல் வந்திருக்கு ஐயா!
"தூக்கிய பாதம் தேக்கிய கருணை"
என்ன அருமையாய் எதுகை/மோனைகள் வந்திருக்கு பாடல் முழுதும்!
ஆம் ஐயா. ஜீவாவை நானும் வழிமொழிகிறேன். அருமையான பாடல்!
ஜீவா (Jeeva Venkataraman) said...
//அருமையா பாடல் வந்திருக்கு ஐயா!
"தூக்கிய பாதம் தேக்கிய கருணை"
என்ன அருமையாய் எதுகை/மோனைகள் வந்திருக்கு பாடல் முழுதும்!//
வாருங்கள், ஜீவா!
என் முயற்சி என்று எதுவுமில்லை.. தங்களுக்கும் இந்த அனுபவம் புரியும் என்று எனக்குத் தெரியும். வருகைக்கும் அனுபவத்தின் அடிப்படையிலான ரசனைக்கு மிக்க நன்றி, ஜீவா!
கவிநயா said...
//ஆம் ஐயா. ஜீவாவை நானும் வழிமொழிகிறேன். அருமையான பாடல்!//
அப்படியா, கவிநயா!
ஆடல அரசனைப் பற்றிய பாடல் அல்லவா?..
உங்கள் ரசனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..
ஜீவி,
அழகான பதிப்பு....
அப்படியே மஹாதேவன் அருளால, "ஆத்மாவைத் தேடி" தொடரை தொடர மாட்டீங்களா?
நான் ரொம்ப ஆர்வமாக படித்து வந்த தொடர். :(
தில்லை நடராஜன் தரிசனமே ! தேடகிடைக்காத த்ரிசனமே என்று டி.எம்.எஸ் அவர்கள் பாடல் நினைவுக்கு வருது.
நல்ல பாடல் பகிர்வு.
Post a Comment