மின் நூல்

Sunday, June 8, 2008

அழகன் முருகன் ஆறுமுகன்

பரிந்துரைக்கும் ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி


எடுப்பு:

எந்தத் துன்பம் வந்தாலும் எனைக் காக்கும்
இவன் தாள் பணிவேன்; மறவேன் கருணையை
கந்தன் கதிர்காம வேலன் அழகு பாடுவேன்

(எந்தத் துன்பம்)


தொடுப்பு

நெஞ்சே நீ அறிவாய் சிங்காரவேலனை
அஞ்சேல் என்றென்னை ஆட்கொண்ட கதையை
எட்டுக்குடி முருகன் தட்டாமல் அருள்வான்
விட்டு விலகாமல் அவன் தாள் சரணம்

(எந்தத் துன்பம்)



வயலூர் முருகன் திருமால் மருகன்
மயில்வாகனன் கைவேல் காணீரோ?
வள்ளி தெய்வானை வலமும் இடமுமாக
சொல்லி மாளாதய்யா சொக்கநாதன் மகன் அழகை

(எந்தத் துன்பம்)

தணிகைச் செல்வனை தண்டாயுத பாணியை
தகப்பனுக்கு உபதேசித்த சுவாமிமலை சுவாமியை
எண்கண் சண்முகனை முத்துக் குமரனை
பண்ணால் பாட்டால் பாடிப் பரவி
(எந்தத் துன்பம்)

முடிப்பு
செந்தில் வேலவனை சேவல் கொடியோனை
முந்தி வந்த வினையறுக்கும் வள்ளி மணாளனை
பன்னிரு கையனை சூரபத்ம சம்ஹாரனை
உமையம்மை செல்வனை சிவகுமாரனை

(எந்தத் துன்பம்)

17 comments:

Kavinaya said...

வரவேண்டியவங்க வந்துட்டாங்களான்னு பார்த்தேன்.. எனக்கு தெரியல :( மன்னிச்சிடுங்க!

முருகன் என்றாலே அழகன் அன்றோ! அவன் பெருமைகளை அருமையாக அடுக்கியிருக்கிறீர்கள் ஐயா! இது ஒன்று மட்டும் விளங்கவில்லை -

//எண்கண் சண்முகனை//

விளக்குவீர்களா??

ஜீவி said...

கவிநயா said...
//வரவேண்டியவங்க வந்துட்டாங்களான்னு பார்த்தேன்.. எனக்கு தெரியல :( மன்னிச்சிடுங்க!

முருகன் என்றாலே அழகன் அன்றோ! அவன் பெருமைகளை அருமையாக அடுக்கியிருக்கிறீர்கள் ஐயா! இது ஒன்று மட்டும் விளங்கவில்லை -

//எண்கண் சண்முகனை//

விளக்குவீர்களா??//

வாருங்கள், வாருங்கள்!..
இன்று திங்கட்கிழமை சஷ்டி.
சரியாக வந்து பின்னூட்டமும் இட்டு விட்டீர்கள்..மெத்த மகிழ்ச்சி..
அப்புறம்...'அழகன் முருகன்' என்பதற்கு அழகழகன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. அந்த அழகனுக்கு எத்தனை அழகன் போட்டாலும், நிறைவடையாமல் பாக்கி இருக்கும், இல்லையா?..
அடுத்து எண்கண் சண்முகனைப் பற்றி... எண்கண் என்பது ஓர் ஊரின் பெயர்...இந்த இடத்துக் கோயிலில் கொஞ்சும் அழகுடன் மூலவராக முருகபெருமான் வீற்றிருக்கிறார்!
இந்த சிலையை வடித்த சிற்பி சில்பாவைப் பற்றி உருக்கமான கதை ஒன்று உண்டு.. நெஞ்சைப் பிழிய வைக்கும் கதை..

நெகிழ்சியான அந்தக் கதை சொல்ல இந்த இடம் போதாதென்பதால், தனிப்பதிவிட்டுச் சொல்கிறேன், கவிநயா!

அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்..

Kavinaya said...

//எண்கண் என்பது ஓர் ஊரின் பெயர்//

அப்படியா? தெரிவித்தமைக்கு நன்றி, ஐயா.

//நெகிழ்சியான அந்தக் கதை சொல்ல இந்த இடம் போதாதென்பதால், தனிப்பதிவிட்டுச் சொல்கிறேன், கவிநயா!//

விரைவில் இட்டு விடுங்கள்! ஆவலுடன்...

கிரி said...

முருகனின் எந்த படமும் அழகு படமே :-) அழகென்றால் முருகனே....உண்மை உண்மை :-)

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்கு...அப்பன் முருகனை என்ன சொல்லிப் புகழ்ந்தாலும் இனிக்கிறது.

jeevagv said...

பாடல் வரிகளும் அழகு, படங்களும் அழகு, இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் பரமன் முருகனும் அழகு. எல்லாம் நன்றாய் இணைந்த தோது, இதற்கு வேறென்ன ஈடு.

ஜீவி said...

கவிநயா said...
//எண்கண் என்பது ஓர் ஊரின் பெயர்//

அப்படியா? தெரிவித்தமைக்கு நன்றி, ஐயா.

//நெகிழ்சியான அந்தக் கதை சொல்ல இந்த இடம் போதாதென்பதால், தனிப்பதிவிட்டுச் சொல்கிறேன், கவிநயா!//

விரைவில் இட்டு விடுங்கள்! ஆவலுடன்...

அடுத்த பதிவு அதுவாக இருக்க முயலுகிறேன். நன்றி

ஜீவி said...

கிரி said...
முருகனின் எந்த படமும் அழகு படமே :-) அழகென்றால் முருகனே....உண்மை உண்மை :-)


வாருங்கள், கிரி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இதுவே அதுவாக அதுவே இதுவாக
என்பார்களே அதுபோலத்தான் போலும்! அழகுடன் வீரம் கலந்தது, முருகனின் தனிச்சிறப்பு!

அடிக்கடி வாருங்கள்..

ஜீவி said...

மதுரையம்பதி said...
//நல்லாயிருக்கு...அப்பன் முருகனை என்ன சொல்லிப் புகழ்ந்தாலும் இனிக்கிறது.//

அடேடே! மெளலியா!
பார்த்து நெடுநாளாயிற்று என்கிற உணர்வு மட்டும் எழுந்தது, பெயரைப் பார்த்ததும்!

'சொல்லச் சொல்ல இனிக்குதடா, முருகா!'--என்று சும்மாவா பாடியிருக்கிறார்கள்!

வருகைக்கு மிக்க நன்றி, மெளலி!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//பாடல் வரிகளும் அழகு, படங்களும் அழகு, இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் பரமன் முருகனும் அழகு. எல்லாம் நன்றாய் இணைந்த தோது, இதற்கு வேறென்ன ஈடு.//

பாராட்டுக்களுக்கு நன்றி, ஜீவா!
அதுவும் அழகைக் குழைத்தெடுத்த பாராட்டுக்கள் அந்த அழகுக்குச் சொந்தக்காரனான அந்த முருகனுக்கே நமது துதிகளாகப் போய்ச்சேரட்டும்..

S.Muruganandam said...

வேலுண்டு விணையில்லை, மயிலுண்டு பயமில்ல்லை.

சிக்கல், எட்டுக்குடி, எண்கண் மூன்று தலத்து முருகன் அழகையும் அதை வடித்த சிற்பியின் வரலாற்றையும் எழுதுங்கள் ஜீவி அவர்களே.

ஓம் முருகா சரணம்

ஜீவி said...

Kailashi said...
//வேலுண்டு விணையில்லை, மயிலுண்டு பயமில்ல்லை.

சிக்கல், எட்டுக்குடி, எண்கண் மூன்று தலத்து முருகன் அழகையும் அதை வடித்த சிற்பியின் வரலாற்றையும் எழுதுங்கள் ஜீவி அவர்களே.

ஓம் முருகா சரணம்//

வாருங்கள், கைலாஷி!
'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' என்று சிற்பி ஓவியா வரலாற்றை பதிவிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்..
வருகைக்கு மிக்க நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Super Sir!

http://keerthananjali.blogspot.com/search?updated-max=2010-12-23T07%3A02%3A00-08%3A00&max-results=7

ஜீவி said...

@ ஆரண்ய நிவாஸ் ஆர்.ராமமூர்த்தி

தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, ஆர்.ஆர்!

அற்புதமான தங்கள் பதிவுகளை பார்த்த பொழுது, நிறைய பகிர்ந்து கொள்ள இருப்பதாக உணர்ந்தேன். நிதானமாக வருகிறேன்.

தங்கள் அன்பிற்கு நன்றி.

அன்புடன்,
ஜீவி

அப்பாதுரை said...

கேள்விப்படாத ராகம். தேடிப் பார்த்துக் கேட்க வேண்டும்.

ஜீவி said...

வாருங்கள், அப்பாத்துரை சார்!

மணிரங்கு கரகரப்பிரியாவின் ஜன்ய ராகம்.

பாடிப்பார்க்கும் செளகரியத்திற்காக இந்த ராகத்தில் ஒரு திரைப்படப் பாடலைத் தேடினேன். 'கன்னிராசி' படத்தில், மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம் பாடிய 'சுகராகமே' பாடல் கிடைத்தது.

இப்பொழுது பாடிப்பாருங்கள். பாடும் பொழுது இசைக்கு இடிக்கும் இடங்களில் இழுத்தும் மடக்கியும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

மேலதிகத் தகவல்களைக் கேட்டமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

எந்த துன்பம் வந்தாலும் கந்தன் துணை இருந்தால் கவலை இல்லைதான்.
பாடல் பகிர்வு அருமை.

Related Posts with Thumbnails