12. மனம் என்னும் தொடர்புச் சாதனம்
மாலு பாட்டைப் பாடி முடித்ததும் அவையே கரகோஷத்தில் அதிர்ந்தது.
அந்த கரகோஷ ஒலி அடங்கும் வரை காத்திருந்து விட்டு, மாலுவைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டே மேகநாதன் கேட்டார். "அற்புத்மாகப் பாடினீர்கள், மாலு! இப்படி இராகத்தோடு இந்தப் பாட்டைப் பாடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை நான் தெரிவ்து கொள்ளலாமா?"
மாலு பலமாகச் சிரித்தே விட்டாள். "என்னவோ தோணித்து, பாடணும்னு. எதுவும் மனசிலே தோணித்துன்னா, உடனே அதைச் செஞ்சிடறது என்னோட வழக்கம். அத்னால் தான் உங்கள் அனுமதி கேட்டு உடனே செஞ்சிட்டேன்."
"ஓ.. வெல். மன்சிலே தோணித்துன்னு சொன்னீங்களே.. அதான் இங்கே முக்கியம். தப்பா நினைக்க மாட்டீங்கன்னா, இன்னொரு கேள்வி. நான் உங்களைப் பாட வேண்டாம்னு சொல்லி இருந்தா, என்ன செஞ்சிருப்பீங்க?.."
"என்ன செஞ்ச்சிருப்பேன்?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டு, "என்ன செஞ்ச்சிருப்பேன்னா, சபைலே நாலு பேருக்கு கேக்கறமாதிரி தானே நீங்கப் பாடக் கூடாதுன்னு சொல்லியிருபபீங்க.. எனக்குள்ளேயே பாடிக்க எந்த ஆட்சேபணையும் இல்லே தானே.. அதனாலே, லேசா முணுமுணுக்கற மாதிரி எனக்குள்ளேயேப் பாடிண்டிருப்பேன்."
"அற்புதம், மாலு! நீங்க உணர்றதை அழகாச் சொல்லீட்டீங்க" என்று மன்சார சிலாகித்தார் மேகநாதன். "மாலு சொன்ன இதைத்தான் நானும் சொல்ல வந்தது. மாலுவுக்கு முன்னாலேயே ப்ழக்கப்பட்டப் பாடல் இது. பல தடவை முன்னாலேயே அவங்க பாடி ரசிச்ச பாடல்! சங்கீத ஞானத்தோடு பாடக்கூடியப் பழக்கம் இருக்கறதினாலே, முன்னே பலதடவை அவங்களும் இந்தப் பாட்டைப் பாடி இருக்கிறதினாலே, இந்தப் பாட்டைப் பத்தி நாம இங்கே பிரஸ்தாபிக்கிற பொழுது இராகத்தோடு அந்தப் பாட்டை அலங்கரிக்கணும்ன்னு அவங்க மனசு விரும்பறது. டெக்னிக்கலாக ச் சொல்லணும்னா, இராகம் மூலமா அந்தப் பாட்டோடு தொடர்பு கொள்ள் அவங்க மனசு விரும்பறது.
" மனசு! மனசு! மனசு! இங்க இந்த மனசோட அழகு அற்புதமாப் பிரகாசிக்கிறது! விருப்பப் பட்டதைச் செய்யப் பழகிய மனசு, பாட வேண்டாம்னு நான் தடுததிருந்தாலும், எனக்குள்ளே
பாடியிருப்பேன்னு அவங்க சொல்றாங்களே, அதான் ஒண்டர்புல்! அதான் ஆட்டமேட்டிக்கா நடக்கும்! நாட்டியம் ஆடறவங்களா இருந்தா அவங்க பாதங்கள் ஜதி போட்டிருக்கும்! மன்சின் விருப்பும், வெறுப்பும், வலியும், வேதனையும், குஷியும், கொண்டாட்டமும், அவலமும், ஆனந்தமும்அளவில் கொள்ளமுடியாத விஸ்தாரமானவை. இவற்றை எல்லாம் பின்னால் பார்க்கலாம்.
"இப்போதைக்கு வெளியே வியாபித்திருக்கிற பிரபஞ்ச காந்தசக்தி, நமக்குள் இருக்கிற வெளிகாந்த சக்தியின் எச்சமான உள்காந்தசக்தி, இரண்டையும் தொடர்பு படுத்துகின்ற மனசு--இந்த மூன்று விஷயங்க்களை கவனமாக நினைவில் கொள்ளுங்கள். பிரபஞ்ச சக்தியை தலைவனாகக் கொண்டு, 'தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று சொன்னானே, கம்பன், அந்தக் கம்பனும் தன் உள்காந்த சக்தியைச் சரணாக்கி தலைவனிடத்து சமர்ப்பித்துத் தான் தனது காவியத்தை தொடர்ந்து பாடத் தொடங்குகிறான். மனமாகிய இணைப்புத் தொடர் மூலம், பிரபஞ்ச சக்தியை விரும்பி வேண்டிப்பெற்று, உள்காந்த சக்தியின் வலிமையை மேலும் கூட்டிப் பிரகாசிக்கச் செய்கிறான். இதுதான் வெளிப்பிரபஞ்ச சக்தி இறை சக்தியாய் நம்முள் தேங்கி வெளிப்படும் ரகசியம்.
"'உள் போந்தவை எல்லாம் வெளிப்பட வேண்டும்; வெளிப்பட்டவை எல்லாம் உள்வாங்க வேண்டும்' என்பது விஞ்ஞான உண்மை. மனமாகிய தொடர்புச் சாதனத்தைப் பிரயோகித்து
வெளிப் பிரபஞ்ச சக்தியை நாம் உள்வாங்க வேண்டும்.. அது ஒன்றே நம் வேலையாகிப் போகும்.. பிரபஞ்ச சக்தியை மனசால் தொடர்பு கொண்டு வேண்டிப் பெறுதலை, இறை வழிபாடு என்று சொன்னால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?" கைகளை மார்புக்கு நேராகக் குவித்து அபிநயத்துக் காட்டினார் மேகநாதன்.
மேகநாதனின் நீண்ட உரையை உள்வாங்கிக் கொண்ட உற்சாகத்தில் அவையே ஸ்தம்பித்து நின்றது.
(தேடல் தொடரும்)
4 comments:
ப்ரமாதம்! ப்ரமாதம்! அவையோடு சேர்ந்து நானும் மெய் மறந்து விட்டேன்.
மனசு என்பது "இறை" அல்ல என்றால்
"bliss or consciousness" ஐ, ப்ரபஞ்ச காந்த ஷக்தி என்று சொல்லலாமா? அல்லது..... "இருத்தல்" என்பது இந்த காந்த ஷக்தியை எல்லாம் இயக்கும் இன்னொன்றா?
@ ஷக்திபிரபா..
வாருங்கள், ஷக்தி! ஒன்றிய ரசனைக்கு மிக்க நன்றி.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம். கோடிக்கணக்கான நட்சத்திரத்திரங்களை, கிரங்கங்களை உள்ளடக்கியது பிரபஞ்சம். சூரியனே ஒரு துணுக்கு நட்சத்திரம் என்றால், பிரபஞ்சத்தின் விரிந்த பரப்பு நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இப்படிப்பட்ட பிர்மாண்ட பிரபஞ்ச் வெளியே, காந்த வெளியாகத் திகழ்கிறது.
மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு துக்காணித் துணுக்குக்கும் துணுக்கான பிண்டம். ஆக, அவனிடத்தும் இயல்பாகவே காந்த சக்தி நிரம்பியிருககிறது. நமது நரம்பு மண்டலத்தின் தலைமைச் செயலகம் மூளை முழுக்க முழுக்க காந்தசக்தியின் கேந்திரமாகத் திகழ்கிறது. அதனால் தான் ஆணையிட்டு நரம்பு மண்டலத்தின் தூண்டுதலாகிய செயல்பாட்டின் மூலம் உடல் அங்கங்களை இயக்க முடிகிறது. இன்னொருவிதத்தில் இதைச் சொலவதானால், அதனால் தான் நீங்கள் சொல்கிற 'இருப்பு'--நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆக, நமது இருத்தலுக்கு (Existense) காரணம், நமது உடல் செயல்படுவதற்கான ஆதார கேந்திரமான உள் காந்தசக்தி. இந்த காந்த சக்தி எப்படி நிலைபெற்று உயிர்ப்புடன் நம்மில் தங்கியிருக்கிறது என்பதைத் தனியாகப் பார்ப்போம்.
எல்லா சக்திகளின் மூலம் பரப்ரம்மம். அந்த பரப்ரம்மத்திலிருந்து விடுபட்டதே, அதன் அம்சமே பிரபஞ்ச சக்தி எனில், அந்த பிரபஞ்ச
சக்தியே அரணிக்கட்டையில் அக்னி போல ஜீவாத்மாவில் ஜீவகாந்தச் சுடராய் தெறிக்கிறது.
இன்னும் விவரமாகப் பார்க்கையில், இன்னும் விளக்கமாய்ச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.
//பிரபஞ்ச சக்தியை மனசால் தொடர்பு கொண்டு வேண்டிப் பெறுதலை, இறை வழிபாடு என்று சொன்னால்//
perfect. வெகு அழகாக விளக்கியிருக்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி.
வாருங்கள், க்விநயா!
நீண்ட இடைவெளியானாலும், நேற்று விட்ட
செய்தியைத் தொடர்ந்தது போல இருக்கிறது.
உங்கள் தொடரும் வருகைக்கு நன்றி. இனி தொடர்ந்து செல்வோம்.
Post a Comment