அத்தியாயம்--22
நல்ல கூட்டம்.
பிரபல இசைக்கலைஞர்கள் பலரை முன்வரிசையிலேயே பார்க்க முடிந்தது. நேற்றைய கல்யாண ரிஷப்ஷனுக்கு நிறைய டாக்டர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பலரை எனக்குத் தெரியாது என்றாலும், என்னிடம் வந்து விசாரித்து விட்டுப் போனார்கள். 'ம்யூசிக் தெரபி' வைத்தியத்தின் ஒரு நடமாடும் வெற்றிச் சின்னம் போல நான் ஆகியிருப்பது ஒருவாறு எனக்குப் புரிந்தது. 'இப்பொழுது தொந்தரவு ஒண்ணும் இல்லையே?.. பார்வையெல்லாம் நன்னாத் தெரியறதா?.. கண்ணாடி போட்டுக்கலையா? இல்லை, போட்டுக்கணும் னு சொல்றாங்களா?' போன்ற கேள்விகள். ' முன்னாடி நீங்க பார்த்ததுக்கும், இப்போ பாக்கறத்துக்கும் ஏதாவது வித்தியாசம் தெரியறதா?'ன்னு ஒருத்தரே ஒருத்தர் கேட்டார். முன்னாடி பார்த்ததெல்லாம் வெற்றுப் பார்வை; இப்போ பாக்கறது நிறைய விஷயம் தெரிந்து கொண்ட பார்வை'ன்னு அவருக்கு பதில் சொன்னேன். புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டார். என்ன புரிந்ததுன்னு நான் கேக்கலை.
தம்பி கல்யாண சத்திர வாசலில் பெரிய போர்டு வைத்திருந்தான். அதில் ஹரிஹரன் பெயரையும் என் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் இல்லத் திருமணம் என்கிற மாதிரி இருவீட்டார் அழைப்பாக எழுதியிருந்தது. மணமக்கள் விவேகாந்தன்-சங்கரி பெயர்கள் ஜிலுஜிலுவென்று ஜிகினா எழுத்துக்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
'இமைகள் மருத்துவமனை' ஸ்டாஃப்கள் வரவேற்பு குழு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். 'இமைகள்' மருத்துவமனையின் பக்கத்துக் கட்டிடம் இப்பொழுது ம்யூசிக் தெரபி வைத்திய சென்ட்டராக மாறியிருக்கிறது. புரொபசர் மித்ரா தான் அதன் தலைமை மருத்துவர். அந்த வைத்திய நிலையத்தின் 'ம்யூசிக் டிபார்ட்மெண்டை' கவனித்துக் கொள்ளும் மேற்பார்வையாளர் பொறுப்பு எனக்கு. என் தம்பி, சங்கரி, சுசீலா இன்னும் இரண்டு மூன்று இசைக் கலைஞர்கள் விசிட்டிங் ஆர்ட்டிஸ்ட்டுகள். பொதுவாக மனநல மருத்துவத்திற்குத் தான் இந்த 'ம்யூசிக் தெரபி' என்று அறியப்பட்டு இருந்த நிலையில், அந்த வைத்தியத்தை வேறுபட்ட கோணத்தில் அணுகி சோதனை மேற்கொண்டு புரொபசர் வெற்றியும் பெற்றதினால், இந்த சிகித்சை முறையைப் பற்றி அறிய பலரும் ஆர்வம் காட்டினர். இந்த ஆர்வம் புரொபசருக்கும், டாக்டர் சாந்திக்கும் மருத்துவத் துறையில் மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் அளித்திருந்தது. ஆனால் எனக்கென்னவோ என் மன ஈடுபாட்டைக் கிளறச் செய்து அதை சரியான முறையில் தூண்டி அந்தத் தூண்டலையே நோய் தீர்க்கும் மருந்தாக ஆக்கிய புரொபசரின் திறமையும், டாக்டர் சாந்தியின் அயராத முயற்சிகளுமே வெற்றிக்கான காரணமாகத் தெரிகிறது. இந்த ம்யூசிக் தெரபி வைத்தியம் தான் என்றில்லை, வேறு ஏதாவது பெயர் கொண்டு இதே மாதிரியான ட்ரீட்மெண்ட்டை எனக்குச் செய்திருந்தாலும், இந்த வெற்றி இவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று தான் நினைக்கிறேன்.
பார்வை இருந்தது பின்பு அது போனது மீண்டும் வந்ததுன்னு என் வாழ்க்கை யிலும் தான் இந்த பார்வை விஷயத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள்.ஆரம்பத்தில் அது இருந்த பொழுது எல்லாவற்றிலும் எனக்கு இருந்த தன்முனைப்பு ,அது இல்லாத போது இல்லாது போனது என்பது பார்வையில்லாத நேரத்தில் நான் தரிசித்த தரிசனம்! பார்வை கிடைத்து விட்ட இந்த நேரத்தில் அந்த அவலம் மீண்டும் வந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
எனக்கேற்பட்ட பார்வை இழப்பால் இன்னொன்றையும் தெரிந்து கொண்டேன்.. டாக்டர் சாந்தி, புரொபசர் மித்ரா போன்றவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், ஆகப்பெரும் சக்தியின் ஊற்றாக, உறைவிடமாக, கேந்திரமாகத் தெரிகிறார்கள். அப்படிப்பட்ட மானுடர் கூட்டத்தின் செயல்பாடுகளின் மேன்மையிலிருந்து ஆயிரக்கணக்கானவர் பெறும் போதமும் ஞானமும் தான் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தக் கல்யாணம் நடக்க வேண்டுமென்று மனசார நான் விரும்பினேன். சங்கரியின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் விருப்பமாயிற்று. என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது தம்பியின் விருப்பமாயிற்று. தம்பியின் விருப்பமே அவர்கள் குடும்பத்தின் விருப்பமாயிற்று. 'வரப்புயர' என்கிற மாதிரி எல்லாம் ஒன்று தொட்டு ஒன்று. மனிதர்கள் என்றுமே தனித்தனி யூனிட்டுகள் இல்லை என்று தெரிகிறது. எல்லாருமே எல்லாமுமே ஒன்றைத் தொட்டு ஒன்று தான். இந்த ஒன்றைத் தொட்டு ஒன்று தான் ஆகப்பெரிய நம் மேன்மைக்கான சக்தியாக உருவாகிறது என்று நினைக்கிறேன்.
இதோ கெட்டி மேளம் கொட்டும் நேரம் நெருங்குகிறது. கையில் மங்கல அட்சதையுடன், அவர்கள் எல்லா நலங்களும் பெற்று வாழட்டும் என்று மனசார நினைத்துக் கொள்கிறேன்.
"ஊர்மிளா!" என்று உரக்கக் கூவினான் லஷ்மணன்.
"இங்கே தானேங்க, இருக்கேன்; அதுக்கேன் அப்படி கத்தறீங்க?" என்று முணுமுணுப்புடன் வந்தாள் ஊர்மிளா.
"இந்தக் கதை படிச்சையா?" என்று அந்த பிரபல பத்திரிகையின் தீபாவளி மலரை பிரித்த நிலையில், "பார்வை" என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டிருந்த அந்தக் கதை அச்சிட்டிருந்த பக்கத்தைக் காட்டினான் லட்சுமணன்.
"இப்போத் தான் இதைப் படிச்சீங்களா?"
"நான் உன்னைக் கேட்டா, நீ என்னைக் கேக்கிறீயா?.. படிச்சிட்டியா, படிக்கலையா, அதைச் சொல்லு, முதல்லே.."
"கேக்கற கேள்விக்கு நேரிடையா பதில் சொன்னாத்தான் உங்களுக்குப் புரியுமா?.. 'இப்போத் தான் இதைப் படிச்சீங்களா?'ன்னு நான் கேட்டதிலேந்தே தெரியலே, நான் எப்பவோ இதைப் படிச்சிட்டேங்கறது.."
"சே! சரியான இதுடி நீ!"
"நீங்க மட்டும் என்னவாம்?.. சரி, போகட்டும்.. கதை எப்படிங்க?"
"பாத்தையா?.. அதைக் கேக்கத் தான் நான் உன்னைக் கூப்பிட்டா, நீ கேள்வியை எனக்கே திருப்பறயே?"
"இதே வழக்கமா போயிடுச்சி, உங்களுக்கு! எதைப் படிச்சாலும், அது எப்படின்னு என் வாயைக் கிளர்றது.. அப்புறம், நான் கூட அப்படித் தான் நெனைச்சேங்கறது! இந்த வாட்டி, வழக்கத்தைப் போல இல்லே! நீங்க தான் முதல்லே உங்க ஒப்பீனியனைச் சொல்றீங்க.. பின்னாடி தான் நான்! அப்பத் தான் படிச்சீங்களா, சும்மா பக்கத்தை திருப்பிக்கிட்டுப் போனீங்களான்னு தெரியும். ஆமா!"
"சரியான...."
"'இதுடி' தானே?.. அது எதுன்னு கேட்டா பேச்சை மாத்திடுவீங்க!.. சொல்லுங்க.. கதை எப்படி?"
"அதை எப்படி ஒத்தை வார்த்தைலே சொல்றது! இருபத்திரண்டு அத்தியாயம்!
பத்துக்கு படிக்க ஆரம்பிச்சேன்; இப்பத்தான் முடிச்சேன்! இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பலே.. "
"இப்படில்லாம் ஜகா வாங்குவீங்களே! எனக்காத் தெரியாது? எப்படின்னு கேட்டேன்லே?"
"அதைத் தான் சொல்ல வர்றேன்.. அதுக்குள்ளாற நீ.." என்ற லஷ்மணன், படித்த கதையை மனசுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தான்.
(இன்னும் வரும்)

22 comments:
அருமை.
ஆஹா, இந்த மாதிரியான ஒரு ட்விஸ்டைத் தான் எதிர்பார்த்தேன். :)))))
என்னமோ ஒரு முடிச்சு இருக்குனு புரிஞ்சது.
நல்ல ட்விஸ்ட்....இன்னும் காத்திருக்கிறோம்....
//ஆரம்பத்தில் அது இருந்த பொழுது எல்லாவற்றிலும் எனக்கு இருந்த தன்முனைப்பு ,அது இல்லாத போது இல்லாது போனது என்பது பார்வையில்லாத நேரத்தில் நான் தரிசித்த தரிசனம்! பார்வை கிடைத்து விட்ட இந்த நேரத்தில் அந்த அவலம் மீண்டும் வந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.//
பார்வையற்ற வனுக்குக் கிடைத்த பாடம். இது எல்லோருக்கும் பொருந்தும். எதுவும் இருக்கும்போது உணரப் படுவதில்லை. இது சொத்து, சுகம், உறவு, பந்தம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கதையில் இனிமேல்தான் ட்விஸ்டா,?
தொடருகிறேன்.
முன்னாடி பார்த்ததெல்லாம் வெற்றுப் பார்வை; இப்போ பாக்கறது நிறைய விஷயம் தெரிந்து கொண்ட பார்வை'/
நிறைந்த பார்வைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
திரு. இரத்னவேல் அவர்களுக்கு,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
@ கீதா சாம்பசிவம்
இத்தனை நாள் நாம் படித்து வந்த 'பார்வை' நெடுங்கதையை ஒரு பத்திரிகையின் சமீபத்திய தீபாவளி மலரில் வெளிவந்த கதையாக மாற்றியாகி விட்டது. அந்தக் கதையைப் பற்றி கலந்துரையாட ஒரு தம்பதியினரும் தயாராகி விட்டார்கள். இனி எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்.
தொடர்ந்து வந்து கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு மிக்க நன்றி.
@ கீதா சாம்பசிவம்
முடிச்சு?.. இதுவும் 'உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை' கதை தான்!
@ Shakthiprabha
ஊர்மிளை - லட்சுமணன் என்கிற வாசக தம்பதியினர் கதையை அலசத் தயாராகி விட்டார்கள். அவர்கள் ரசனையும் அவை பற்றிய பின்னூட்ட ரசனைகளும்..
போகிற போக்கைப் பார்த்தால், இப்போதைக்கு இந்தத் தொடர் முடியாது போலிருக்கே!
தங்கள் தொடர் வருகைக்கு நன்றி.
@ G.M. Balasubramanian
வள்ளல் பாரியின் பறம்புமலைப் பெருமை அங்கு வாழ்ந்தோருக்குத் தெரியாது என்று சொல்வார்கள்.
நான் குன்னூரிலும், உதகையிலும் வசித்த பொழுது அனுபவபூர்வமாக இதனை உணர்ந்தேன். அந்த இடங்களை விட்டு 'கீழே' வந்ததும் தான் அவற்றின் பெருமையும், அருமையும் தெரிந்தது. 'எதுவும் இருக்கும் பொழுது உணரப்படுவ தில்லை' என்கிற தங்கள் வாக்கியம் இதையும் நினைவுபடுத்தியது.
//டிவிஸ்ட்டா?//
இந்த அலசல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
@ இராஜராஜேஸ்வரி
'நிறைந்த' என்ற நிறைவான பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க.
வித்தியாசப்படுத்தப்பட்ட பார்வைகள்...பார்வை இருந்த போது..போனபோது...மீண்டும் வந்த போது...கோணங்கள்...தெளிவான விளக்கங்கள்....பாராட்டுகள்...
எங்கள் கைகளிலும் அட்சதைகள்...
கதையில் வரும் இன்னுமொரு கதை என்ன கூறப்போகிறது....
காத்திருப்போம்...
முன்னாடி பார்த்ததெல்லாம் வெற்றுப் பார்வை; இப்போ பாக்கறது நிறைய விஷயம் தெரிந்து கொண்ட பார்வை'//
பார்வை இருந்தது பின்பு அது போனது மீண்டும் வந்ததுன்னு என் வாழ்க்கை யிலும் தான் இந்த பார்வை விஷயத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள்.ஆரம்பத்தில் அது இருந்த பொழுது எல்லாவற்றிலும் எனக்கு இருந்த தன்முனைப்பு ,அது இல்லாத போது இல்லாது போனது என்பது பார்வையில்லாத நேரத்தில் நான் தரிசித்த தரிசனம்! பார்வை கிடைத்து விட்ட இந்த நேரத்தில் அந்த அவலம் மீண்டும் வந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.//
தன் முனைப்பு ஒரு மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு போகும்.
தன்முனைப்பு அற்ற நிலை தெய்வீகம்.
// 'வரப்புயர' என்கிற மாதிரி எல்லாம் ஒன்று தொட்டு ஒன்று. மனிதர்கள் என்றுமே தனித்தனி யூனிட்டுகள் இல்லை என்று தெரிகிறது. எல்லாருமே எல்லாமுமே ஒன்றைத் தொட்டு ஒன்று தான். இந்த ஒன்றைத் தொட்டு ஒன்று தான் ஆகப்பெரிய நம் மேன்மைக்கான சக்தியாக உருவாகிறது என்று நினைக்கிறேன்.//
மக்கள் சக்தி மகேசன் சக்தி அல்லவா!
கூட்டு சக்தி தான் நம்மை வழி நடத்தி செல்கிறது.
இதோ கெட்டி மேளம் கொட்டும் நேரம் நெருங்குகிறது. கையில் மங்கல அட்சதையுடன், அவர்கள் எல்லா நலங்களும் பெற்று வாழட்டும் என்று மனசார நினைத்துக் கொள்கிறேன்.//
எல்லா நலங்களும் பெற்று வாழ நாங்களும் வாழ்த்துகிறோம்.
//இதே வழக்கமா போயிடுச்சி, உங்களுக்கு! எதைப் படிச்சாலும், அது எப்படின்னு என் வாயைக் கிளர்றது.. அப்புறம், நான் கூட அப்படித் தான் நெனைச்சேங்கறது! இந்த வாட்டி, வழக்கத்தைப் போல இல்லே! நீங்க தான் முதல்லே உங்க ஒப்பீனியனைச் சொல்றீங்க.. பின்னாடி தான் நான்! அப்பத் தான் படிச்சீங்களா, சும்மா பக்கத்தை திருப்பிக்கிட்டுப் போனீங்களான்னு தெரியும். ஆமா!"//
கதை விமர்சனத்தை கேட்க தயார் ஆகி விட்டோம்.
கதை மனதுக்கு நிறைவாய் இருந்த்தது.
கண் பார்வை வந்தபின் தான் திருமணம் என்றார் தம்பி. அது போல் க்ணபார்வை வந்து திருமணமும் முடிந்து நிறைவானது.
வாழ்த்துக்கள்.
அடுத்த கட்ட அலசல் ஆரம்பமாகிறதா....திடீரென இதுவரை நடந்தது எல்லாமே ஒரு சம்பவமாய் பெட்டிக்குள் அடங்க, அதிலிருந்து புதிய பார்வைகள்....இன்னும் எப்படி எப்படி விரிகின்றன என்று பார்க்கக் காத்திருக்கிறேன்.
@ கோமதி அரசு
இந்தக் கதையை வாசித்த அன்பர்களின் பார்வை தொடர்ந்த பின்னூட்டங்களில் பிரதிபலித்தது. இருந்தும், இக்கதை பற்றி எனக்கென்று ஒரு பார்வை உண்டல்லவா? அதைச் சொல்வதற்காக தொடர்கின்ற பகுதிதான் கதையாய்த் தொடர்கிறது.
இந்த முடிவு எனக்கும் நிறைவாய்த் தான் இருக்கிறது. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.
@ பாசமலர்
வாருங்கள், பாசமலர்!
தொடர்ந்து இந்தக் கதையைப் படித்து வந்து மனத்தில் உணர்வதைப் பின்னூட்டமிட்டுத் தெரிவித்து எழுத ஊக்கமளித்த உங்களுக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து வந்து வாசித்து தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.
@ ஸ்ரீராம்
வாருங்கள், ஸ்ரீராம்!
தொடங்கி வைத்தமைக்கும், இனித் தொடரப் போவதைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
விலகியிருந்து ஒரு விமரிசனத்தைச் செய்தால் என்னவென்று தோன்றிற்று.
அதற்காகத் தான் இப்படியான ஒரு முயற்சி. எப்படிப் போகப்போகிறது என்று எனக்கும் தெரியாது. பார்க்கலாம். ஒரு காரணத்திற்காக கொஞ்சம் இடைவெளி. அதுவரை பொறுத்திருக்க வேண்டுகிறேன்.
சில காலம் இணைய வாசிப்பு பக்கம் வரமுடியவில்லை, வந்து பார்த்தால் ஒரு நெடுங்கதை எழுதியிருக்கீங்க....
முதல்லேர்ந்து படிச்சுட்டு வரேன்...
@ கிருத்திகா
வாருங்கள், கிருத்திகா!
'பார்வை'யைப் படித்து முடித்திருப்பீர்கள் என்று நினைத்திருக்கிறேன். உங்கள் விமரிசனங்களை, ஊர்மிளை-லட்சுமணன் விமர்சனத்திற்கு முன் பதிந்து விடுங்கள். அவர்கள் முந்திக் கொண்டு விடப்போகிறார்கள்.
பேஷ் சாதாரணமாக வெளிக்கதையிலிருந்துதான் உள்கதைக்கு செல்வார்கள். இங்கோ தலைகீழ். இதுவும் நல்லாத்தான் இருக்கு.
பை தி வே விவேகானந்தன், சுசீலா பற்றிய வம்பை இக்கதையின் எந்த இடத்தில் பொருத்துவதாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ Dondu
உள் மனசிலேந்து வெளிவந்ததை, நல்லா இருந்ததுன்னு சொன்னதற்கு நன்றி.
அந்த வம்பெல்லாம் காத்தோடு போயாச்சு!
Post a Comment