மின் நூல்

Monday, June 6, 2016

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை



                   சென்னை  புத்தகத்  திருவிழாவில்







                            இதோ சந்தியா பதிப்பகம்:


  




         மறக்க முடியாத தமிழ் எழுத்துலகில்  
          ஒரு  உலா:




           வாசிப்பு உலகில் தடம் பதிக்கும் நூல்


21 comments:

Geetha Sambasivam said...

வாழ்த்துகள். புத்தகம் அமோகமாக விற்பனை ஆகப் பிரார்த்தனைகள்.

வே.நடனசபாபதி said...

புத்தக திருவிழாவிற்கு இரண்டொரு நாளில் செல்ல இருக்கிறேன். அங்கு போய் தங்களின் நூல் கிடைக்கும் இடத்தை தேடும் சிரமத்தை தவிர்க்க சந்தியா பதிப்பகம் இருக்கும் கடை எண்ணை தந்து உதவியமைக்கு நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

அடடா! நேற்று புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தேன். உங்கள் புத்தகத்தை மிஸ் செய்துவிட்டேனே! பரவாயில்லை! மீண்டும் ஒரு தரம் வரும் எண்ணம் இருக்கிறது! அப்போது வாங்கி வாசிக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

சென்னையில் நான்கு நாள் இருந்தும்
கண்காட்சி செல்ல முடியாத சூழல்
செல்ல இருக்கிறவர்களுக்கு
பயன்படும் பகிர்வு
வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

சென்று வந்தீர்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். :)

”தளிர் சுரேஷ்” said...

ஹைக்கூ சென்ரியுவிற்கு என் சென்ரியூ கவிதைகள் பதிவில் விளக்கம் சொல்லிவிட்டேன் சார்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

இந்த நூல் இது போல் இனி வர வேண்டிய நூல்களுக்கு ஒரு தொடக்கம். அதனால் தங்கள் பிரார்த்தனைகள் செயல் வடிவம் கொண்டு சிறக்கட்டும். மிக்க நன்றி, கீதாம்மா.



ஜீவி said...

@ வே, நடனசபாபதி

வாருங்கள், நண்பரே! சென்று புத்தகத்தை உடைமையாக்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து நூல் பற்றிய உங்கள் விமரிசனம் அழகான தமிழில் வர வேண்டும். அதான் பாக்கி. நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

நண்றி நண்பரே! உங்கள் நூலகத்தில் என் புத்தகமும் ஒன்றாகச் சேரட்டும். தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி. புத்தகம் பற்றிய உங்கள் கருத்துக்களை ஒரு பதிவாகச் சொல்ல வேண்டுகிறேன். நகைச்சுவைக்கு பெயர் பெற்ற உங்கள் எழுத்தில் அந்த கருத்துக்கள் பதிவாவது அற்புதமாக இருக்கும் என்பது என் எண்ணம். மீண்டும் நன்றி.

ஜீவி said...

@ S. Ramani

புத்தகத்தை வாங்கி விட்டுப் பதியும் உங்கள் கருத்துக்கு நிச்சயம் மரியாதையும் மதிப்பும் உண்டு. புத்தகத்தை வாங்கி வாசிக்கவிருக்கும் அன்பர்களுக்கான உங்கள் பரிந்துரைக்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சென்று வந்தால் மட்டும் போதாது, ஸ்ரீராம். வென்றும் வர வேண்டும்.. சந்தியா பதிப்பக இதர வெளியீடுகளையும் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. நீண்ட பதிவு போடும் அளவுக்கு விஷயங்கள் தேங்கியிருக்கின்றன. புத்தகத் திருவிழா பற்றி பத்திரிகைகளில் வரும் கருத்துக்களை பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கள் Blog-ல் புத்தகத் திருவிழா பற்றி பதிவு எப்போ?.. நானும் திருநாளைப்போவார் மாதிரி காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

நன்றி, கோமதிம்மா. மதுரையில் மல்லிகைப் பதிப்பகத்தில் கிடைக்கிறது. அரசு சாரிடமும் (அவ்வளவு தீர்க்கமாக கோவை ஸ்டேன்ஸ் மில் என்று நினைவில் வைத்திருந்து குறிப்பு கொடுத்தவர்) சொல்லுங்கள். தங்கள் வாழ்த்துக்கள் மேலும் இது மாதிரி நிறைய படைப்புகளைப் படைக்க எனக்கு உற்ச்சகம் ஊட்டுகிறது. மீண்டும் நன்றி.

ஸ்ரீராம். said...

போனால்தானே பதிவிட! புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளை செய்தித் தாள்களில் பார்க்கிறேன். ஆனால் படிப்பதில்லை. ஏனோ சுவாரஸ்யம் இல்லை. இந்த வருடம் அது ஜனவரியில் வைக்காததாலா, அல்லது தூரம் காரணமா தெரியவில்லை. மனம் ஈடுபடவில்லை. அலுவலக அலுவல் டென்ஷன் உள்ளிட்ட சொந்தக் காரணங்களும் காரணம். நீங்கள் சென்று வந்தீர்களா என்ற என் கேள்விக்கு நேரிடையான பதில் இல்லை அல்லது எனக்குப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை!!

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷணன்

ஆஹா, இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் போட்டு விட்டமின் குளிகைகள் கொடுக்கிற மாதிரி உற்சாகமூட்டியவர். இந்தப் புத்தகத்திற்கு தங்களின் அறிமுகம் தான் ஆரம்ப அறிமுகம். தங்களின் புத்தக அறிமுக நேர்த்திப் பதிவுகளை மறக்கவே மாட்டேன். அது தான் தொடக்கமாகி இப்பொழுது வாசித்தவர்களின் பரவலான அனுபவமாய் வெளியுலகிற்கு வந்திருக்கிறது.

தங்கள் அன்பான இனிய நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கோபு சார்.

அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ தளிர் சுரேஷ் (2)

'சென்ரியு' பற்றி நிறைய அறிந்தேன். தங்கள் அன்பான நீண்ட தகவல்களுக்கு நன்றி. இனி சென்ரியு' என்றாலே உங்கள் ஞாபகம் தான் வரும். உங்கள் பின்னூட்டம் பற்றிப் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. விரைவில் அங்கு வருகிறேன். நன்றி, சுரேஷ் சார்!

மோகன்ஜி said...

பயணத்திலே தொடர்ந்து இருந்ததால் இந்தப் பதிவை இப்போதே பார்த்தேன். சென்னையில் கொஞ்சம் நேரம் ஏற்படுத்திக்கொண்டு புத்தகத்திருவிழாவும் சென்று வந்தேன். உங்கள் புத்தகத்தை வம்சி, கிழக்கு ஆகிய ஸ்டால்களில் தேடிவிட்டு இல்லையென திரும்பி விட்டேன். சந்தியாவை தவறவிட்டுவிட்டேன். செல்போன் சார்ஜ் தீர்ந்து போயிருந்ததால் தொடர்பும் கொள்ள இயலவில்லை. உங்கள் புத்தகத்துக்கு ஒரு விமரிசனம் எழுதும் அவா இன்னும் நிறைவேறவில்லை. என் புத்தக வெளியீட்டுக்கான அலைச்சலும் இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ளவில்லை. வாழ்ததுக்கள் சார்!

Bhanumathy Venkateswaran said...

தங்கள் புத்தகத்தை வாங்கி விட்டேன் ஐயா! இன்னும் படிக்கவில்லை. யாரையெல்லாம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று பட்டியல் பார்த்தேன் ! வாசந்தியை ஏன் விட்டு விட்டீர்கள்?

Bhanumathy Venkateswaran said...

தங்கள் புத்தகத்தை வாங்கி விட்டேன் ஐயா! இன்னும் படிக்கவில்லை. யாரையெல்லாம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று பட்டியல் பார்த்தேன் ! வாசந்தியை ஏன் விட்டு விட்டீர்கள்?

ஜீவி said...

@ மோகன்ஜி

அப்படியா மோகன்ஜீ?..

வானவில் மனிதனைப் பார்த்து எவ்வளவு நாளாகி விட்டன என்று ஏக்கமாக இருந்தது. உங்கள் பின்னூட்டம் மனசுக்கு ஆறுதலைத் தந்தது. சென்னை வந்தும் சந்திக்க முடியாது போனது வருத்தம் தான். எல்லாவற்றிற்கும் ஏதோ காரணம் இருக்கலாம் என்று இப்பொழுதெல்லாம் நினைக்கும் பக்குவம் வந்து விட்டது.

எனது 'அழகிய தமிழ் மொழி இது' பகுதி--14 -ல் கடைசி பாராவிற்கு முன் பாராவைப் பார்க்கவும். எல்லாமே நாம் நினைக்கிறபடி நடப்பது இல்லை. ஆனால் எதனாலோ அப்படி நடக்கிறது என்பது மட்டும் நிச்சயம். உங்கள் நாவல் பற்றிய தொகுப்பு நூலுக்கு எனது 'ந.பி-யிலிருந்து எஸ்.ரா. வரை' ஒரு ஆக்கபூர்வமான உந்து சக்தியை கொடுத்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். அதனால் என்ன?.. வேண்டும் பொழுது அதை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

வா.ம. -னில் சந்திக்கலாம். பகிர்ந்து கொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன. நன்றி.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

ஆஹா.. இன்பத் தேன் வந்து காதினில் பாய்ந்தது. நன்றி. அடுத்து, நூல் பற்றிய உங்கள் பகிர்தல் தான் பாக்கி.

வாசந்தி?.. ஆரம்ப காலம், அப்புறம் 'இந்தியா டுடே' காலம், 'கல்கி'யில் வந்த அவரது 'நிற்க நிழல் வேண்டும்' நாவல் பற்றியெல்லாம் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஒருவிதத்தில் அவரை இந்த 'குரூப்'பில் சேர்க்க முடியாது போயிற்று. அதே மாதிரி தான் இந்துமதி, மாலன் போன்றவர்களும்.. ஆனால் பாலகுமாரன் அவரது வேறுப்பட்ட தகுதிகளால் சேர்க்க முடிந்திருக்கிறது. இதான் விஷயம்.

தமிழில் எழுதி சாதித்தவர்களையும் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளுக்கு சொந்தமானவர்களாய் தேர்வு செய்ததும் ஒரு காரணம். அவர்களில் ஆரம்பித்தது இன்று வரை ஏதோ ஒருவிதத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது அதற்கான காரணம்.

இதோடு எழுத்து நடையில் புதுமை செய்த எஸ்.ஏ.பி. போன்றவர்கள் சேர்ந்து கொண்டார்கள். இவர்களோடு கொள்கைச் சார்பாய் எழுதிய ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களும் சேர்ந்து கொள்ள நிகழ்கால எழுதுலகைச் சார்ந்தவர்களும் இருந்தால் நல்லது என்று இன்னும் சிலர் சேர்க்கப்பட்டார்கள். பக்க எண்ணிக்கை ஏற ஏற தேறியவர்களில் யாரையும் விட்டு விடாமல் உள்ளடக்கியதே பெரும் சாகசமாய் போய்விட்டது.

உஷா சுப்ரமணியம் விட்டுப் போனதும் எனக்கு வருத்தம் தான்.

Related Posts with Thumbnails