3
பாரதியாரின் அத்தை குப்பம்மாளுக்கு ருக்மணி என்று இன்னொரு பெயரும் உண்டு. அவரைப் பற்றிய பல குறிப்புகளில் ருக்மணி என்றே காணப்படுவதால் பெயர்க் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நாமும் ருக்மணி என்றே பாரதியாரின் அத்தையை இனி குறிப்பிடுவோம். பாரதியின் அத்தை ருக்மணியின் கணவர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் சிவன்.
பாரதியாருக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லஷ்மி. லஷ்மியின் கணவர் பெயர் கேதர்நாத் சிவன்.
கேதர் நாத் சிவனின் அண்ணன் விஸ்வநாதன் சிவன். இவரின் மனைவி பார்வதி. இந்தப் பார்வதி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் சகோதரி.
1897-ம் வருடம் ஜூன் மாதம் 27-ம் தேதி. இந்தத் திருநாள் தான் சுப்பிரமணிய பாரதியாருக்கும் செல்லம்மாவுக்கு திருமண நன்னாள்.
அதே நன்னாள் அன்று பாரதியாரின் தங்கை லஷ்மி-- கேதர்நாத் சிவன் திருமணமும், விஸ்வநாதன் சிவன்-- பார்வதியின் திருமணமும் நடந்திருக்கின்றன.
பாரதியாரின் தங்கை கணவரின் அண்ணன் பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் தமக்கையை மணந்து கொண்டார்.
ஒரே நாளில் ஒரே மேடையில் குடும்ப உறவுகளுக்குள்ளேயே நடைபெற்ற மூன்று திருமணங்கள்.
அக்காலத்தில் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை போகும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யும் கைங்கரியத்தை பாரதியாரின் தாத்தா புலி சுப்பையரும், கிருஷ்ண சிவனின் தந்தை மீனாட்சி வல்லபரும் செய்து வந்தனர். அவர்களின் தருமச் செயல்களை மெச்சும் காரியமாக அந்நாளைய ராமநாதபுரம் சேதுபதி ராஜா தன் ராஜாங்க பிரதிநிதிகளை அனுப்பி வைத்து இந்த மூன்று திருமணங்களையும் சிறப்பாக நடத்தி வைத்தார்.
தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள சின்ன கிராமம் மாகுளம். இந்த கிராமத்தில் கிருஷ்ண சிவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து அவர்களுக்குச் சொந்தமான நிறைய நிலபுலன்கள் இருந்தன. 1857- 58 காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் நீர் வற்றிப் போய் பயிர் நிலங்கள் எல்லாம் தரிசுகளாகி மிகப் பெரிய வறட்சியில் அந்தப் பகுதியே சிக்கிக் கொண்டது. இனிமேல் இங்கிருந்து வாழ முடியாது என்ற சூழலில் மீனாட்சி வல்லபரின் தமையனார் வெங்கடேஸ்வர சிவன் கடுமையான வழிப்பயணங்களை மேற்கொண்டு ஒரு வழியாக காசிக்கு வந்து சேர்ந்தார்.
காசியில் காலூன்றி அவர் காலத்தில் வாங்கிப் போட்ட மனைகளில் சங்கர மடமும் சிவ மடமும் கட்டப்பட்டன. பிரிட்டிஷார் காலத்தில் கூட கோயில் சார்ந்த மனைகள், மடங்கள் இவற்றிற்கு வரி விலக்குகள் அளித்திருந்தார்கள். அதனால் வீட்டோடு சேர்ந்து கோயிலும் உருவாகின. சிவ மடத்திலும் சித்தேஸ்வரன், சித்தேஸ்வரி என்று மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தனர். இன்றும் இக் கோயில்களை சிவ மடத்தில் காணலாம். காஞ்சிப் பெரியவர் இந்த மடத்திற்கு வந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறார். இக்கோயிலில் நந்திகேஸ்வரர் மீது நாகம் இருப்பது இன்னொரு அதிசயம்.
பாரதியின் தகப்பனார் சின்னசாமி அய்யர் இறந்த பொழுது காசியிலிருந்த சின்னசாமி அய்யரின் சகோதரி ருக்மணி தம்பியின் இறுதிச் சடங்குகளுக்காக எட்டையபுரம் வந்தவர், காசி திரும்பும் பொழுது தன்னுடன் பதினாறு வயது பாரதியையும் அழைத்துச் செல்கிறார். பாரதி மட்டுமல்ல, பாரதியாரின் பாட்டி, கிருஷணன் சிவத்தின் தாயார், பாட்டி என்று அத்தனை பேரையும் கூட்டிச் செல்கிறார். ருக்மணி அம்மையாரின் அன்பையும் விட்டுக் கொடுக்காத குடும்ப பாசத்தையும் இந்தக் காலப் பார்வையில் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
பாரதிக்கு காசியில் புத்தகங்களில் மேல் இருந்த காதலைத் தீர்த்து வைத்தது தியாசாபிகல் சொசைட்டி தான். ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் என்று எல்லா எழுத்துச் சிற்பிகளின் நூல்களும் பாரதியாருக்கு அங்கு வாசிக்கக் கிடைத்தன. அதற்காகவே தினமும் மாலை வேளைகளில் நாள் தவறாமல் பாரதி காசி தியாசாபில் சொசைட்டிக்குச் செல்வார். சொசைட்டியும் பாரதியார் வீட்டுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது.. சொசைட்டிக்கு போகும் வழியிலேயே அன்னி பெசண்ட் அம்மையார் தங்கியிருந்த வீடு இருந்தது. கோட்டு, வேஷ்டி, தலைப்பாகை என்று வித்தியாசமான உடை அலங்காரத்துடன் தன் வீட்டைக் கடந்து செல்லும் அந்த இளைஞன் அன்னிபெசண்ட் அம்மையாரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறான்.
ஒரு நாள் தன் வீட்டு ஜன்னல் அருகே அமர்ந்திருந்த அம்மையார் அவர் வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தலைப்பாகை இளைஞனைப் பார்த்ததும் தன்னை மீறிய ஆவலில், "ஹலோ.. " என்று உரக்கக் கூவி அழைத்திருக்கிறார். திரும்பிப் பார்த்த பாரதியை, 'இங்கே வா' என்று சைகை காட்டி அழைத்து, "நீ யார்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார்.
"நான் சுப்பிரமணிய பாரதி..." என்று நெஞ்சை நிமிர்த்தி தன்னை அம்மையாருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். "எனக்கு வரலாற்று நாயகர்களையும், ஷெல்லி போன்ற கவிஞர்களையும் மிகவும் பிடிக்கும். அவர்கள் எழுத்தைப் படிக்கவும், அவர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவும் தான் தினசரி தியாசாபிகல் சொசைட்டிக்கு செல்கிறேன். இங்கே அருகில் என் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறேன்." என்று பாரதி தன்னைப் பற்றிச் சென்னனும் அவரை வீட்டுக்குள் அழைத்து அம்மையார் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.;
"எனக்கு ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் ஒன்றும் சுத்தமாகப்
பிடிக்கவில்லை. அவர்களை எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் துரத்தி விட வேண்டும் என்று அல்லும் பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக என் பள்ளித் தோழர்கள் எட்டு பேரைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை அமைத்திருக்கிறேன். ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு விரட்டுவதில் நாம் பயம் கொள்ளலாகாது. துணிந்து ஏதாவது செய்தாக வேண்டும்.." என்று பாரதியார் தன் மனத்தை உறுத்தும் சிந்தனைகளை அம்மையாரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பாரதியார் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மத்திய இந்துக் கல்லூரி (Central Hindu College) அன்னிபெசண்ட் அம்மையார் நிறுவியது. தான் அந்த அம்மையாருடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த பாரதியாருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை..
"நான் மதன் மோகன் மாளவியா அவர்களைச் சந்திக்க வேண்டுமே.. அந்த சந்திப்புக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.
இந்த இடத்தில் மதன் மோகன் மாளவியா எப்படி பாரதியாரின் உள்ளத்தைக் கவர்ந்தவராய் இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும். பாரதியார் காசி மத்திய இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காசியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ மதன் மோகன் மாளவியா வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிக் கொண்டிருந்தார். அவர் நிதி திரட்டிய பட்டியலில் பெரும் பணக்காரர்களும் உண்டு; பரம ஏழைகளும் உண்டு. அவரது அயராத அந்த முயற்சியால் தான் காசி பல்கலைக் கழகம் (Banaras Hindu University) உருபெற்றது.
அன்னி பெசண்ட் அம்மையார் மாளவியாவிடம் சொல்லி பாரதியார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்.
அந்த நாளும் வந்தது.
(வளரும்)
உசாத்துணை: பாரதியாரின் அத்தை ருக்மணி அம்மாளின் பேரன் பெரியவர் கே.வி. கிருஷ்ணன் நினைவிருக்கிறதா?.. அவர் ஒரு பேட்டியில் சொன்ன தகவல்களைத் துணையாகக் கொண்டு.
படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.

14 comments:
ஏகப்பட்ட அறியாத தகவல்கள். உள்ளுக்குள்ளே மணந்துகொண்ட குடும்பம். விட்டுக்கொடுக்காத சொந்தம். ஆவலுடன் தொடர்கிறேன்.
அன்னிபெசன்ட் அம்மையாரும் ஜே.கிருஷ்ணமூர்த்தி தொடர்புகளும் பின்னால் நிகழும்.
பாரதியின் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் படித்ததில்லை சில சம்பவங்களும் குணங்களும் அதிகம்பேசப்படுவதில்லை உங்கள் தொடரில் எந்த பையாசும் இல்லாமல் எழுதுங்கள்
@ நெல்லைத் தமிழன்
//ஏகப்பட்ட அறியாத தகவல்கள். உள்ளுக்குள்ளே மணந்துகொண்ட குடும்பம். விட்டுக்கொடுக்காத சொந்தம்.. //
இப்படிப்பட்ட பாசவலையை அறுத்துக் கொண்டு வெளியேறுவது எவ்வளவு கடினம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். முழுமையான பாரதி உருவான வரலாற்றை இந்தக் கோணத்திலிருந்து யோசித்துப் பாருங்கள்.
தொடர்கின்றேன். பின்னாளில் இந்த தொடர் ஒரு நூலாக பதிப்பிக்கப் பட வேண்டும்.
@ GMB
//பாரதியின் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் படித்ததில்லை..//
அறியாச் சிறுவன் காலத்தைத் தவிர பாரதியாருக்கென்று சொந்த வாழ்க்கை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் வாழ்க்கை இந்த தேசத்தின் சுதந்திரப் போராட்ட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று.
//சில சம்பவங்களும் குணங்களும் அதிகம்பேசப்படுவதில்லை..//
பொதுபுத்தி என்பது விசித்திரமானது. தனக்கு வேண்டியதை பிரபலமானவர்களிடமிருந்து உருவி எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது பொதுபுத்தியின் விசேஷ அம்சம். இதனால் எத்தனையோ பெரும் தலைவர்களின் அரிய வாழ்க்கை வரலாறுகள் பரவலாகத் தெரியாமலேயே போயிருக்கின்றன.
// எந்த பையாசும் இல்லாமல் எழுதுங்கள்..//
பையாசாக எழுதும்படி பாரதியாரின் வாழ்க்கையில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
நீங்கள் இதுபற்றி ஏற்கனவே எனக்கு அறிவுறுதியிருக்கிற மாதிரி நினைவு. பாரதியின் வாழ்க்கையில் பையாசாக எழுதுவதற்கு வாய்ப்பு இருக்கிற ஏதாவது விஷயம் உங்கள் எதிர்பார்ப்பில் இருந்தால் சொல்லுங்கள். அந்தப் பகுதி வரும் பொழுது கவனத்தில் கொள்கிறேன்.. இந்தப் பகுதி நல்ல முறையில் அமைய வேண்டும் என்ற உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி, ஜிஎம்பீ சார்.
@ தி. தமிழ் இளங்கோ
தாங்கள் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி, நண்பரே! புத்தக அமைப்பைக் கவனத்தில்
கொண்டு அதற்கேற்பவான வடிவில் தான் எழுதிக்கொண்டு வருகிறேன். அதே விஷயத்தை அடிக்கோடிட்டுச் சொன்னமைக்கும் தங்கள் விருப்பத்திற்கும் ஆசிக்கும் நன்றி, நண்பரே!
பாரதியார் பற்றிய தங்களின் பிற வாசிப்பு நூல்களிலிருந்து இந்தத் தொடரில் பிறழ்வான செய்தி ஏதும் தெரிந்தால், அல்லது விவரமாகச் சொல்ல வேண்டியது சுருக்கப்பட்டாலோ அருள் கூர்ந்து தெரிவியுங்கள், ஐயா. அதை கவனத்தில் கொள்கிறேன். நூலின் சிறப்பு கருதி நம் இருவருக்கும் அந்த அக்கறை இருப்பதால் இந்த வேண்டுகோளைத் தங்களிடம் வைக்கிறேன். மிக்க நன்றி, நண்பரே!
பாரதியாருக்கு சில வழக்கங்கள் உ-ம் போதைப் பொருள் உட்கொள்ளல் போன்றவை இருந்ததாக அங்கும் இங்கும் கோடி காட்டப் படித்த நினைவு உண்மையைத் தெரிந்து கொள்ளவே எழுதினேன் பையாஸ் என்றால் பாரதியின் இமேஜுக்கு பங்கம் வரக் கூடாதென்று அவற்றை மறைக்கமுயல்வது
@ ஜிஎம்பீ
அந்தப் பகுதி வரும் பொழுது நிச்சயம் அதுபற்றி எழுதுவேன். குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி.
//பையாஸ் என்றால் பாரதியின் இமேஜுக்கு பங்கம் வரக் கூடாதென்று அவற்றை மறைக்கமுயல்வது..//
பாரதியை கவிஞனாகப் பார்ப்பவர்கள் உண்டு; தேசிய உணர்வு கொண்டவர்கள் அவனைத் தேசியக் கவிஞனாகப் பார்க்கிறார்கள். சிலர் வரலாற்று நாயகனாகப் பார்க்கிறார்கள்.
என்னைப் பொருத்த மட்டில் இந்தப் பகுதியில் நான் பாரதியை ஒரு மானுடனாகப் பார்க்கிறேன். நம்மிடையே வாழ்ந்த சகல ஆசாபாசாங்களும் கொண்ட மானுடன்.
அவனது தேசப்பற்றும், கவியுணர்வும் பின்னிக் கலந்து அவனை நம்மால் மறக்க முடியாத மானுட நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவன் கவிதைகளை மனத்தில் இருத்திக் கொண்டவர்கள் மனித இயல்பை மீறிய மானுடத் தன்மையைப் பெறுவர்.
கண்ணதாசன் மது அருந்துவார் என்று அவரைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். இந்தத் தனிப்பட்ட பழக்கம் அவர் கவிதைச் சிறப்பிற்கோ, அல்லது அவரைப் பற்றி நாம் கொள்ளும் மனித வார்ப்புக்கோ எந்த பங்கமும் ஏற்படுத்தியதில்லை. அவர் உடல் நலத்திற்கு பங்கம் ஏற்படுகிறதே ஏற்படுகிறதே என்று தான் அவர் சமகாலத்து கவிஞர்கள் ஒருசேர மனக்கவலை கொண்டார்கள்.
பெரும் புகழ் கொண்ட யாரையாவது குறைத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரே இதையெல்லாம் பெரிது படுத்தி அவர் கொண்ட புகழுக்கு எதிராக நிறுத்துவர். பண்டித நேருவைப் பற்றி எழுதும் பொழுது எம்.ஓ. மத்தாய் எழுதியவற்றை வேண்டுமென்றே சிலர் நினைவு கொள்வர். ஆனால் நேருவோ இதெயெல்லாம் தாண்டி உயர்ந்திருப்பவர்.
போதை பழக்கம் கொண்டிருந்தார் என்ற நிலையெல்லாம் தாண்டி உயர்ந்தெழுந்தது பாரதியின் இமேஜ். அதனால் அதையெல்லாம் சொல்வதால் அவர் வாழ்ந்த வாழ்க்கை உயர்வுக்கு-- அவையெல்லாம் தன்னாலே வாசிப்பவர் கருத்தில் கொள்ளாது விலகிப் போகும்.
//அங்கிலேயரை இந்த நாட்டை விட்டுத் துறத்துவதில்//
இரண்டு திருத்தங்கள் தேவை இந்த வரியில்... பல்வேறு இடங்களிலிருந்தும் கிடைத்தவற்றைத் தொகுத்து இங்கு எழுதி வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.
@ ஸ்ரீராம்
ஒன்றைத் திருத்தி விட்டேன்.
துறத்துதல் -- வல்லின 'ற' தானே சரி?..
பாரதியார் பற்றி பொதுவாக நாம் அறியாத செய்திகளை பல்வேறு வழிகளில் தேடி எடுத்து சுவையாகத் தர வேண்டும் என்கிற பணி இது. ஆங்கில வழித் தகவல்களிலிருந்தும் தேடி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பாரதியார் பற்றி பிரசுரமாகாத நூல்களா?.. இருப்பினும் இந்த நூலை அந்த மாதிரிகள் மாதிரி இல்லாமல் புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற ஆவல்.
'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' மாதிரி இந்த நூலும் சிறப்பாக அமைய வேண்டுவதற்கான முயற்சியே இது.
தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
துறத்தல் - ஒன்றைத் துறப்பது, விடுவது. துறவி என்பது போல
துரத்துதல் - விரட்டுதல் துறத்தல் இரண்டு இடங்களில் வந்திருக்கிறது ஸார். இந்த வரிக்கு முன்னரே ஒரு வரியிலும் வந்திருக்கிறது.
நிறைய தகவல்கள் அறிந்ததே இல்லை இதுவரை. குறிப்பாக பாரதியின் தங்கை பற்றி இப்படியான ஒன்றுக்குள் ஒன்று குடும்பக் கல்யாணங்கள் பற்றி எல்லாம் உங்கள் பதிவின் மூலம் தான் அறிகிறோம்...
தொடர்கிறோம்...அண்ணா
கீதா
@ ஸ்ரீராம்
திருத்தி விட்டேன், ஸ்ரீராம். நன்றி.
@ கீதா
எனக்கும் தெரியாது. இந்தத் தொடருக்காக ஓர் ஆய்வு நடத்துகிற மாதிரி பல புத்தகங்களை refer பண்ணும் பொழுது தெரிந்தது.
இந்த மாதிரி நிறைய விஷயங்கள்.
ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். வாசிப்பதற்கு நன்றி.
Post a Comment