மின் நூல்

Sunday, December 10, 2017

பாரதியாரின் கதை



                                         



                                                               



தென் பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம்.  இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகிற காரணம் எளிமையானது.  நெல்வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்திருந்ததினால், அவ்வூர் திருநெல்வேலி என்று  பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால்  ஜில்லா என்று அழைக்கப்பட்டது.  திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.




                                                         விரைவில்  ஆரம்பம்


                                 இதுவரை பரவலாகத் தெரியாத பல  தகவல்களுடன்



                                              பாரதியாரின்  கதை

                                                                                   
                           
                                                             (நெடுந்தொடர்)         






12 comments:

நெல்லைத் தமிழன் said...

தொடரை வரவேற்கிறேன். எப்போதும்போல் நன்றாக ஆராய்ச்சி செய்து பல தகவல்களோடு வருவீர்கள். வாய்ப்பு இருப்பின் விஷயதானம் செய்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

திருநெல்வேலி என்றவுடன் நாலு விஷயங்கள்தான் (தற்காலத்தில்) ஞாபகத்துக்கு வரும். தென்காசி குற்றாலம், நெல்லை காந்திமதி, எட்டயபுரம் பாரதி, நெல்லை அல்வா. (Compare பண்ணவேண்டாம்) இது நான்கும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

நாட்டில் எப்போதும் திறமையானவர்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் அந்தத் திறமையைக் கொண்டு தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். ஒரு சிலரே அந்தத் திறமையினால், பொதுஜனங்கள் பலன் பெறும்படியான செயலைச் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது, தாங்கள் கஷ்டப்படுவதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. நாம் அவர்களை, 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்று சுலபமாகக் கடந்துபோய்விடுகிறோம். அல்லது மறைந்த அத்தகைய பெரியோர் இப்போதும் மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால், 'சே.. இதுக்காகவா நாம் அவ்வளவு கஷ்டப்பட்டோம்' என்று நினைக்கும்படியாகத்தான் நாம் நடந்துகொள்கிறோம்.

பாரதி வரலாறு கிட்டத்தட்ட வெளிப்படையானது. என்ன என்ன அறியாத செய்திகளைத் தரப்போகிறீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

G.M Balasubramaniam said...

பாரதி என்மதிப்பு மிக்க கவிஞன் போற்றும் குணங்கள் நிறைந்தவனானால் சில போற்ற முடியாத குணங்களும் இருந்ததாகக் கேள்வி அவன்கதையைப் பகிரும்ப்[ஓதுசீர் தூக்கும் கோலுடன் எழுத வேண்டுகிறேன் வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

காத்திருக்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம். மகிழ்ச்சியான செய்தி. பாரதி பற்றிய உங்கள் தொடரை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். ( எனது டேஷ் போர்டில் மட்டுமே இந்த அறிவிப்பை பார்த்தேன். நீங்கள் உங்கள் வலைத்தளத்தை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா? )

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

நன்றி, நெல்லை. வாசித்து வாருங்கள்..

ஜீவி said...


@ நெல்லைத்தமிழன் (2)

//பாரதி வரலாறு கிட்டத்தட்ட வெளிப்படையானது. என்ன என்ன அறியாத செய்திகளைத் தரப்போகிறீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

தொடர் ஆரம்பித்தாயிற்று. அறியாத செய்திகள் எவை என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஜீவி said...

@ ஜீஎம்பீ

//போற்றும் குணங்கள் நிறைந்தவனானால் சில போற்ற முடியாத குணங்களும் இருந்ததாகக் கேள்வி அவன்கதையைப் பகிரும்ப்[ஓதுசீர் தூக்கும் கோலுடன் எழுத வேண்டுகிறேன் வாழ்த்து

போ.குணங்கள், போ.மு.கு. இரண்டையும் நம்மை அளவுகோலாக வைத்துக் கொண்டு தான் தீர்மானிக்கிறோம். அதனால் இதற்கான எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட
அளவுகோல் யாரிடமும் இல்லை.

பாரதியார் காலத்தில் நாம் வாழ்ந்ததும் இல்லை. இருப்பன எல்லாம் அவரது படைப்புகளும், அவர் காலத்து வாழ்ந்தவர்கள் அவர் பற்றி எழுதிய குறிப்புகளும் தாம்.
நமக்கு மிகவும் தேவையான குறிப்புகளான தரவுகள் கிடைக்காமலும் இருக்கின்றன.
இந்த விஷயத்தில் அவர் படைப்புகளையே நம்பத் தகுந்த தரவுகளாகக் கொள்ளலாம். அவற்றை மறுப்பார் இல்லை.

பாரதி என்ற தனிமனிதர் ஒரு காரியத்திற்காக செயல்பட்ட தனி மனித நியாயங்களை நாம் அறியோம். அதனால் நீங்கள் சொல்வதை கறாராகச் செய்ய முடியாது. செய்ய முடிந்தால் அது அந்த தனிமனிதருக்கு நாம் செய்கிற அநீதியாக முடிந்து விடும்.

சமூக நலன்களைப் பாதிக்காத தனி மனித சுதந்தரம் மிகவும் முக்கியமானது. இல்லையா?..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

தொடர் ஆரம்பித்தாயிற்று, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

தங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியானது. தொடர் ஆரம்பித்தாயிற்று. தாங்கள் தொடரலாம்.


பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் மணத்தில் இணைந்திருந்தேன். எழுதுவோர் சுதந்தரத்தில் அளவுக்கு மீறி தலையிடுவதும், குழு மனப்பான்மையும் அதிகம் இருந்த காலம் அது.
அப்பொழுது விலகியது தான். அதற்குப் பின் தமிழ்மணம் பக்கமே தலை காட்டியது இல்லை.

இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை. ஜி+லும், முகநூலிலும் இணைக்கிறேன். உங்கள் டேஷ் போர்டில் கிடைப்பதால் கவலையே இல்லை. தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

நமக்கு முக்கியம் பாரதியாரின் நமக்குத் தெரிந்த வரலாறு. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத முயல்கிறேன். தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். தவறுகள் தெரிந்தால் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி, நண்பரே!

வே.நடனசபாபதி said...

‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’யின் கதையை தொடர்ந்து படிக்க இருக்கிறேன். கடினாமான பணியை ஆரம்பித்திருக்கும் தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!


ஜீவி said...

@ வே. நடனசபாபதி

தங்களது வாழ்த்து எனது பொறுப்பைக் கூட்டியிருக்கிறது. ஆகப் பெரிய சத்தியபுருஷனைப் பற்றி எழுதப் போகிறோம் என்ற உணர்வு வேறு.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails