அத்தியாயம்-- 12
பாண்டிச்சேரியின் நகர அமைப்பே அற்புதமானது. மிகப் பெரிய சதுரத்தில் கொஞ்சம் கூட கோணலில்லாத குறுக்கும் நெடுக்குமாக நேர்கோடுகள் போட்ட மாதிரியான வீதி அமைப்பு. குறுக்குக் கோட்டின் முடிவு கடற்கரையில் முடிகிற மாதிரி வடிவமைக்கப் பட்ட நேர்த்தி.
பாரதியை புதுவைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்டயம் சீனிவாச்சாரியாரும் பின்னாடியே புதுவைக்கு வந்து விட்டார். டூப்ளே வீதியில் (ரூ துய்ப்ளெக்ஸ்) இந்தியா பத்திரிகை வெளிவருவதற்காக பார்த்து வைத்திருந்த இடத்தில் அச்சகமும், அலுவலகமும் அமைந்தன. இந்த நேரத்தில் தான் அது நடந்தது. பாரதி புதுவைக்கு தப்பிய விவரங்கள் அத்தனையும் தெரிந்திருந்தும் பிரிட்டிஷ் இந்தியாவில் பாரதிக்கு வாரண்டு பிறப்பிக்கப் பட்டது.
1
பாரதி புதுவைக்குத் தப்பித்தது கூட தெரிந்திருந்தும் 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என்ற கண்ணன் பாட்டில் வரும் வரிகள் தாம் பிரிட்டிஷாரின் கண்களை உறுத்தியிருக்கின்றன. 'எங்கள் அடிமையின் மோகம்' என்ற வரிகள் பொது ஜனங்களுக்கும் கோபமேற்படுத்தியதாக வ.ரா. குறிப்பிடுவார். இந்தக் கோபத்திற்காக சாமர்த்தியமாக தூபம் போடப்பட்டதா என்று தெரியவில்லை. எது எப்படியோ ஜனங்களின் அதிருப்தியும் கலந்து கனிந்து வரும் சாதகமான சூழ்நிலையில் பாரதிக்கும் பிரித்தானிய இந்தியாவில்
பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. 2
இந்த சமயத்தில் பாரதியார் புதுவையில் தாம் குடியிருந்த வீட்டை சில காரணங்களுக்காக காலி செய்து விட்டு, ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியில் இருந்த விளக்கெண்ணைய் செட்டியார் வீட்டுக்கு குடி போகிறார். இந்த தங்கமான செட்டியாரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்.
பாரதியாருடன் சேர்ந்து சில காலம் புதுவையில் வாசம் செய்த வ.ரா. சொல்லித் தான் வி.செட்டியாரைப் பற்றியதான அறிமுகம் ஓரளவுக்காவது நமக்குக் கிடைக்கிறது. வ.ரா. செட்டியார் பற்றிச் சொல்லியிருப்பதை என் வார்த்தைகளில் சொன்னால் செட்டியாரின் குணாதிசியங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் வ.ரா. செட்டியார் பற்றிச்சொல்லியிருப்பதை வரி வரி மாற்றமில்லாமல் அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்:
* 'நானறிந்து செட்டியார் பாரதியாரை வாடகைப் பணம் கேட்டதே இல்லை. செட்டியார் வருவார், பாரதியார் பாடிக் கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார். பிறகு மெளனமாக வெளியே போவார். பாரதியார் பேச்சுக் கொடுத்தாலொழிய செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார். செட்டியார் வருவார், நிற்பார், போவார். வீட்டுக்குச் சொந்தக்காரர் வடகைக்காக, அதுவும் ஆறுமாத வாடகைக்காக, கால் கடுக்க நின்று கொண்டிருப்பது அதிசயமல்லவா?..
'விளக்கெண்ணை செட்டியார் வீடு சங்கப்பலகை. கான மந்திரம், அபய விடுதி, சுதந்திர உணர்ச்சிக் களஞ்சியம், அன்னதான சத்திரம், மோட்ச சாதன வீடு, ஞானோபதேச அரங்கம். இத்தனைக் காரியங்களும் அங்கே நடபெற்றன என்று சொல்வது மிகையாகாது. இவைகள் நடைபெறும் காலங்களில், பாரதியார் எல்லாவற்றிற்கும் சாசுவதத் தலைவர். வோட் எடுத்து தலைமைப் பதவி பெறவில்லை. மணித்திரு நாட்டின் தவப்புதல்வர் அவர் என்ற உரிமை ஒன்றே போதாதா?' என்று விளக்கெண்ணை செட்டியார் வீட்டில் நடக்கும் வைபவங்களை விவரிக்கிறார் வ.ரா.
இதற்கிடையில் பிரிட்டிஷ் இந்தியாவில் என்னன்ன நடந்தன என்பதையும் பார்த்து விடலாம்.
4
பாரதியாரின் அருமை நண்பர் சுரேந்திரநாத் ஆர்யாவைப் பற்றி ஏற்கனவே இந்தத் தொடரில் பிரஸ்தாபித்திருக்கிறோம். தனகோடி ராஜூ நாயுடு என்பாரின் திருமகனார். இவர் 1897-ல் வங்கம் சென்ற பொழுது வங்கத்து பிரபல புரட்சியாளர் சுரேந்திர நாத் பானர்ஜியின் தீவிர நடவடிக்கைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு கொள்கை வயப்பட்ட அன்பால் தன் பெயரை சுரேந்திர நாத் ஆர்யா என்று மாற்றிக் கொள்கிறார். 1906-வரை வங்கத்தில் பல புரட்சிகர நடவடிக்கைகளில் பயிற்சி பெற்று சென்னை திரும்பிய போது தான் பாரதியாரின் மேல் பேரன்பு கொண்டு அவர் நட்பு வட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். 15-8-1908-ல் எஸ்.என். திருமலாச்சாரியார் 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் தம்மை பதிவு செய்து கொண்ட மூன்றே நாட்கள் கடந்த நிலையில் 18-8-1908-ல் சுரேந்திரநாத் ஆர்யா ராஜதுரோக வழக்கொன்றில் மாட்டப்பட்டு கைதாகிறார். ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்படுகிறார். இப்படியான ஒரு கைது பாரதிக்கும் நீடிக்கும் என்று தான் நண்பர்கள் கூடி பாரதியாரை பிரன்ஞ் ஆதிக்கத்திலிருந்த புதுவைக்கு அனுப்பி வைக்க தீர்மானித்தனர். சென்னையிலிருந்து கடையத்திற்குச் சென்று கருவுற்றிருந்த தன் மனைவியை கடையத்தில் விட்டு விட்டு பாரதி புதுவை மண்ணை 26-8-1908-ல் மிதிக்கிறான்.
பாரதியாரை புதுவைக்கு அனுப்பி வைத்து இக்கட்டான நேரத்தில் 'இந்தியா' பத்திரிகையின் சகல பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்வது ஒரு புறம் இருக்கட்டும், எந்த நடவடிக்கை தன் மேல் பாய்ந்தாலும் அதை எதிர்கொள்ள துணிச்சலாய் தயாராகிய திருமலாச்சாரியாரின் தைரியம் இந்திய பத்திரிகை வரலாற்றில் தன்னேரில்லாத தைரியம். அதுவும் பாரதியாரை பத்திரமாக புதுவைக்கு அனுப்பி வைத்த பின் தனியொருவராக சமாளித்த தைரியம். 3
கல்கத்தாவில் பிறந்து லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் உயர் கல்வி பெற்ற ஸ்ரீஅரவிந்தர் தாயகம் திரும்பியதும் 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழக்கமிட்ட பாலகங்காதர திலகரின் போராட்ட யுக்திகளால் கவரப்பெற்று திலகருடன் கைகோர்த்து சுதந்திரப் போராட்டங்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்கிறார். குஜராத் மாநில வதோதராவில் சுதந்திரத்திற்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார். பின் கல்கத்தா திரும்பியவர் 'வந்தேமாதரம்' என்று பெயர் சூட்டிய நாளிதழைத் தோற்றுவிக்கிறார். நாட்டு சுதந்திரத்திற்கான வேள்வியில் அனல் கக்கும் அரவிந்தரின் கட்டுரைகள் பல பிரிட்டிஷாருக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
அரவிந்தரை ஒடுக்க வேண்டும் என்று தீர்மானித்த பிரித்தானிய அரசு அலிப்பூரில் நடந்த ஒரு வெடிகுண்டு வீசல் வழக்கில் அவரை இணைத்து ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையில் **அலிப்பூர் சிறைக்கு அனுப்புகிறது.
சிறைவாசத்தின் போது 'சுப்ராபாத்' என்னும் வங்க மொழிப் பத்திரிகையில் இவரது படைப்புகள் பல வெளியாயின. சிறை வாழ்க்கையை ஓர் ஆசிரமம் போல உபயோகப்படுத்திக் கொண்ட அரவிந்தர் விடுதலையாகிற சமயத்தில் தனது ஆன்ம ஒளி வழிகாட்டலில் புதுவைக்கு வருகிறார்.
1910 ஏப்ரல் நாலாம் தேதி அரவிந்தர் புதுவைக்கு வந்து சேருகிறார். கல்கத்தாவிலிருந்து புதுவைக்கு அவர் படகில் வந்ததாகச் சொல்வார்கள். அரவிந்தர் புதுவைக்கு வருகிறார் என்று கசிந்த செய்தியை நம்பியும் நம்பாமலும் புதுவையிலிருந்த புரட்சியாளர் குழு (பாரதி, கிருஷ்ணமாச்சாரியார், ஸ்ரீநிவாசாச்சாரியார்) சர்க்கரை செட்டியார் வீட்டில் அரவிந்தர் தங்குவதற்காக முன் கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தனர்.
அரவிந்தரை பாபு என்று தான் பாரதியார் அழைப்பார். அவர்களின் நட்பு வட்டாரத்தில் அரவிந்தரும் சேர்ந்து கொண்டதில் ஏக குஷி பாரதியாருக்கு.
"ஆதிசிவன் மேலிருக்கும் நாகப்பாம்பே -- எங்கள்
அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே
ஜோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய் - அந்த
சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்"
-- என்று மிகவும் நம்பிக்கையுடன் ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்.
ஆமாம், அரவிந்தரின் புதுவை வருகையும், நட்பும் பாரதியார் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது தான் வரலாறு சொல்லும் உண்மை.
=======================================================================
*வ.ராமஸ்வாமி: தமது மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு நூலில்.
வ.ரா. சில காலம் பாரதியாரோடு கூடவே புதுவையில் இருந்து நெருக்கமாக பழகியவர். அக்கிரஹாரத்து அதிசய மனிதர் என்று அண்ணாவால் குறிப்பிடப்பட்டவர்.
** சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிறைவாசத்திற்கு அலிப்பூர் சிறை பெயர் பெற்ற ஒன்று. 1910-ல் இதற்காகவே கட்டப்பட்டது போல பெருத்த பாதுகாப்புடன் கட்டப்பட்ட மிகப்பெரும் சிறை. சுபாஷ் சந்திர போஸை இங்கு காவலில் வைத்தார்கள். 1930ல் ராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜரும் அலிப்பூர் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார்.
1 புதுவையில் இந்தியா அச்சகமும் அலுவலகமும்
2 பாரதி தங்கியிருந்த விளக்கெண்ணை செட்டியார் வீடு
3 கலவை சங்கர செட்டியார் வீட்டு மாடியில் அரவிந்தர் தங்கியிருந்தார்.
4 சுரேந்திரநாத் ஆர்யா.
( படங்கள் 1-லிருந்து 4 வரை-- நன்றி: திரு. ரா.அ. பத்மநாபன் அவர்களின் சித்திர பாரதி )
படங்கள் அளித்த அன்பர்களுக்கு நன்றி.

12 comments:
// இந்தக் கோபத்திற்காக சாமர்த்தியமாக தூபம் போடப்பட்டதா என்று தெரியவில்லை.//
அப்போதே இது போல உண்டா?!!
எத்தனை முறை வந்து நின்றாலும் அவர் வாடகைக்குத்தான் நிற்கிறார் என்று அறிந்து பாரதி இழுத்தடித்ததும் தப்புதானே!!! பாவம் வி.செ!
அலிப்பூர் வழக்கு பற்றியும் மேலும் சில வழக்குகள் பற்றியும் நான் படித்ததிலிருந்து கொஞ்சம் எழுதவேண்டும் என்று நெடுநாட்களாக எண்ணம் வைத்திருக்கிறேன். சமயம் வரமாட்டேன் என்கிறது!
பாரதியார் பற்றி எவ்வளவு விசயங்கள்..
//எத்தனை முறை வந்து நின்றாலும் அவர் வாடகைக்குத்தான் நிற்கிறார் என்று அறிந்து பாரதி இழுத்தடித்ததும் தப்புதானே!!! பாவம் வி.செ!//
ஸ்ரீராம், பாரதியாரிடம் பணம் இருந்தால் தானே கொடுக்க
பராசக்தி பணம் கொடுக்கவில்லையே!
பாரதியும் புதுவையும் என்று நிறைய விஷ்யங்கள் இருக்கிறது இல்லையா ?
தொடர்கிறேன்.
தொடர்ந்து வாசிக்கிறேன். அரிய பல செய்திகளை அறிகிறேன்.
பாரதியரைப் பற்றிய புதிய தகவல்கள். விளக்கெண்ணெய் செட்டியாரை விழுந்து வணங்கத் தோன்றுகிறது.
@ ஸ்ரீராம்
என்னைக் கேட்டால் 'அப்போதே' தான் 'இப்போதே'வாகவும் இருக்கிறது.
பிரிட்டிஷார் கற்றுக் கொடுத்த பிரித்தாளுதல் கலை இன்றைய அரசியலிலும் கால் பதித்திருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கக் கூடாது என்பது அரசியல் அரிச்சுவடியாக காலம் பூராவும் தொடர்ந்தே வருகிறது.
ஆளுகிற வர்க்கம், ஆளுபவருக்கு நெருங்கிய வர்க்கம், அவர்களை அண்டிப் பிழைப்போர் வர்க்கம், சேவை செய்வதற்காகவே பிறந்த வர்க்கம், நமக்கேன் வந்தது என்று எதிலும் பட்டும் படாமலும் காலம் தள்ளும் வர்க்கம், செய்தித்தாட்கள் செய்திகளையே உண்மை என்று நம்பி எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு விமரித்துக் கொண்டிருக்கும் கூட்டம் -- என்று 'அப்போதே' தான் 'இப்போதே'தாக இருக்கிறது.
பாரதி புதுப்பேய் என்றுஒரு கதை எழுதி இருந்தார் அதை நானும் சுட்டு பதிவாக்கி இருக்கிறேன் அதில் வரௌமெலிக் குஞ்சு செட்டியாரும் இதில்வரும் செட்டியாருமொருவரா
@ ஸ்ரீராம் (3)
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கை மணிக்டோலா சதித்திட்டம் என்று வரலாறு குறிப்பிடுகிறது.
நாசிக் சதித்திட்டம், லாகூர் சதித்திட்டம், பனாரஸ் சதித் திட்டம், சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கு, டல்ஹொவுசி சதுக்க வெடிகுண்டு வழக்கு, டாக்கா சதித் திட்டம், ராஜேந்திரபுர் ரயில் கொள்ளை வழக்கு, கயா சதித் திட்டம், பர்மா சதித் திட்டம்
என்று இந்திய சுதந்திரப் போர் சந்தித்த வழக்குகள் எக்கச்சக்கம்.
ஒவ்வொரு வழக்கு பற்றிய விவரங்களைத் தொகுத்து எழுதத் தொடங்கினால், 'தண்ணீர் விட்டா வளர்த்தோம், சர்வேசா?" என்று நெஞ்சம் விம்மித் தணியும்.
@ athiraமியாவ்
பாரதி வாழ்ந்த 39 வருட வாழ்க்கையை மூன்றாகப் பிரித்தால் இப்பொழுது இரண்டாம் பகுதிக்கு வந்திருக்கிறோம் என்று சொல்லலாம். புதுவையில் பாரதியின் ஆன்மீக வாழ்க்கைக்கான வெளிச்சம் பளீரிடுகிறது. மூன்றாவது பகுதி திருவல்லிக்கேணி.
@ கோமதி அரசு
பாரதியும் புதுவையும் இரண்டே வார்த்தைகளில் கோடி காட்டி விட்டீர்கள். ஏறத்தாழ பத்து ஆண்டுகால சரித்திரம்.
பாரதி தனது கடைசி சொற்பொழிவை ஈரோட்டு கருங்கல்பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார். பேச எடுத்துக் கொண்ட பொருள், "மனிதனுக்கு மரணமில்லை".
Post a Comment