அத்தியாயம்-- 16
மழை விட்டும் தூவானம் விடவில்லை. பிரஞ்சு போலீசாரிடம் சுதேசிகள் பதிவு செய்து கொண்டும் அவர்களை எப்படியாவது புதுச்சேரியிலிருந்து வெளியே கொண்டு வந்து கைது செய்து விடவேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சதித் திட்டம் தீட்டினர். என்ன விலை கொடுத்தும் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு தயாராக இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளில் சில இடங்கள் பிரிட்டிஷாருக்குச் சொந்தமாக இருந்தன. அந்த இடங்களில் சிலவற்றை பிரஞ்சு அரசுக்குக் கொடுத்து விட்டு ஒரு பண்டமாற்று போல புதுவையை தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஒரு யோசனையும் அவர்களுக்கிருந்தது. பிரஞ்சிந்தியா ஆட்சியாளர்களும் இந்த வலையில் சிக்கி விடுவார்கள் என்ற நிலையும் இருந்தது தான் பரிதாபம். அதற்கான உயர்மட்ட பேச்சு வார்த்தைளும் அரசு புரசலாக நடக்க ஆரம்பித்தன.
பாரீஸில் புகழ்பெற்றிருந்த புரூஸன், லா போர்த் போன்ற பிரமுகர்களுக்கு அரவிந்தர் கடிதமெழுதி இந்த ஏற்பாட்டை ஆரம்பத்திலேயே முறியடிக்க முயற்சி செய்தார். பாரதியாரின் அருமை நண்பர் பொன்னு முருகேசன் பிள்ளைக்கு பிரஞ்சு அரசியல் வட்டாரத்தில் சில தொடர்புகள் இருந்தன. வியாபார நண்பர்கள் சிலரின் உதவியையும் நாடி பிரிட்டிஷாரின் சூட்சிகளை முறியடிக்க முருகேசன் வெகுவாக முயன்றார்.
இந்த சமயத்தில் தான் தெய்வாதீனமாக அந்தக் காரியம் நிகழ்ந்து.. பிரஞ்சு மந்திரி சபையில் மிகப்பெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. ப்வாங்கரே என்றொரு புண்ணியவான் ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். இன்றைய சுதந்திர யுகத்தில் கூட 'நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுவாகத் தான் இருக்கும்' என்று சில அரசியல் வாதிகள் அறிவிப்பு செய்கிறார்கள் அல்லவா, அந்த மாதிரி சாகச அறிவிப்புகள் எல்லாம் செய்யாமலேயே பிரஞ்சு ஆட்சிப் பிரதேசங்களின் மேல் ஆழமான பிடிப்பு வைத்திருந்த ப்வாங்கரே ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்திய சுதேசிகளில் வயிற்றில் பால வார்க்கிற மாதிரி ஒரு காரியத்தைச் செய்தார்.
"பிரஞ்சுக் கொடி பறக்கும் எந்த நாட்டையும் எந்த
பரிவர்த்தனை என்ற பெயலும் இழக்க நான் சம்மதிக்கப் போவதில்லை.." என்று பிரஞ்சு பார்லிமெண்டில் ப்வாங்கரே சூளூரைத்தார்... "பிரஞ்சு வீரர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற பிரதேசங்கள் அவை. எங்களைப் பொறுத்த மட்டில் அந்த வீரர்களின் தியாகத்தில் கிடைத்த புனிதமான பூமி அது. அதுவும் எங்கள் போர்த்தளபதி துய்ப்ளெக்ஸ் உருவச் சிலை கம்பீரமாக கடற்கரையில் நிற்கும் புதுவை மண்ணை எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இழக்க நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்.." என்று வீராவேச பிரகடனம் செய்தார்.
ப்வாங்கரேயின் பிரஞ்சுப் பார்லிமெண்ட் உரை புதுவை சுதேசிகள் அத்தனை பேருக்கும் உவப்பான சேதியாக இருந்தது. புதுவைப் பிரதேச பிரான்சு அதிகாரிகளுக்கும் சுதேசிகளின் பால் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத ஒரு அந்நியோன்யம் நிலவ ஏதுவாயிற்று.
முத்தியாலுப்பேட்டை புதுவையைச் சார்ந்த ஒரு பகுதி.
கிருஷ்ணசாமி செட்டியார் என்றொரு இளைஞர் முத்தியாலுப் பேட்டையிலிருந்து பாரதியாரைப் பார்க்க அடிக்கடி வருவார். கிருஷ்ணசாமி அடிப்படையில் நெசவுத் தொழிலை மேற்கொண்டிருந்தார். அதோடு சேர்ந்து துணி வியாபாரமும் உண்டு. முத்தியாலுப்பேட்டையில் நிலபுலன்களும் அவருக்கு இருந்தன. இவர் பாரதியாரைப் பார்க்க வருவது மனசுக்குப் பிடித்த அன்பர் ஒருவரை தரிசிக்க வருவது போல இருக்கும்.
பாரதியாருக்கு இவர் மேல் நிரம்பப் பிரியம். தான் இயற்றிய பாடல்களை இருபது வயது இளைஞர் கிருஷ்ணசாமிக்கு பாடிக் காட்டுவதில் பாரதியாருக்கு அலாதியான சந்தோஷமும் திருப்தியும் உண்டு. ஆனால் கிருஷ்ணசாமியோ முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பாரதியார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்கிற மாதிரியான தோற்றம் கொண்டிருப்பார். பாரதியின் கவிதகளை கேட்பதற்கென்றே முத்தியாலுப்பேட்டை யிலிருந்து இங்கு வந்திருப்பவர் போலவும் சமயங்களில் காட்சி தருவார். பார்க்கிறவர்களுக்கு இந்த பாரதி இவரிடம் போய் ஏன் இவ்வளவு சாங்கோபாங்கமாக தன் கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றும்.
புதுச்சேரி வாசமே பாரதியாரின் கவிதா மனோபாவத்திற்கு சிறைவாசம் போல இருந்தது. பாரதியாருக்கு எந்த இடத்திலும் அடைந்து கிடப்பது பிடிக்காது. காலாற நடக்க வேண்டும். இயற்கையின் கொடையை செடி, கொடிகள், வயல், வரப்பு, கடற்கரை என்று ரசித்து புளகாங்கிக்க வேண்டும் என்று உள்ளக்கிளர்ச்சி கொண்டவர் அவர்.
முத்தியாலுபேட்டையில் கிருஷ்ணசாமிக்கு பச்சை பசேலென்று தோட்டம் ஒன்றிருந்தது. இந்த தோட்டத்திற்கு வந்து ஆனந்திப்பதில் பேரின்பம் கண்டார் பாரதி. உணர்வே இல்லாத இறுகிய முக மனிதர்களுடன் உரையாடுவதை விட கிளி, குருவி, குயில் என்று கொஞ்சுவது இயற்கையை
நேசித்த பாரதியாருக்கு இன்ப பொழுதாக இருந்தது. இதற்குள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தத் தோட்டத்தில் தான் பாரதி தனது இறவாப் புகழ் பெற்ற குயில் பாட்டை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.
பாரதியார் தம் கவிதைகளை எப்படி இயற்றுவார்?.. எழுதி வைத்துக் கொண்டு பாடுவாரா?.. எழுதி வைத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு யார் அவர் பாடுவதை எழுதி வைத்தார்கள்?.. எப்படி அவை நமக்குக் கிடைத்தன?-- போன்ற கேள்விகளை முந்தைய பதிவில் பெரியவர் ஜி.எம்.பீ. அவர்கள் எழுப்பியிருந்தார். பாரதியாருடன் கூடப் பழகி இருப்பவர்களுக்குத் தான் இதெல்லாம் தெரியும் என்ற அடிப்படை உண்மையில் வ.ரா. அவர்கள் இது பற்றி எழுதியிருப்பவற்றை இந்த இடத்தில் எடுத்துச் சொல்கிறேன். அவர் சொல்லியிருப்பதை அப்படியே இங்கு எடுத்தாண்டு விட்டால் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற கேள்வி எழாமலும் இருக்கும் தான்.
இதோ பாரதியார் பாடத் துவங்குவதை அதைப் பார்த்த அனுப்வத்தில் வ.ரா. எப்படி வர்ணிக்கிறார், பாருங்கள்:
ஸரிக-க-காமா என்று அவர் வாய்க்குள் சொல்லிக் கொண்டால், புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்வை வெளியே தள்ளி. தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்; ஸஸ்ஸ - ஸஸ்ஸ- ஸஸ்ஸ என்று மூச்சு விடாமல், உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம் போடுவார்; தவறிப் போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம்- மெளனம். "சொல் ஆழி வெண் சங்கே' என்ற கூக்குரல். கூப்பாடு. இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று. "மத்த கஜம் எனை வளர்த்தாய்" என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒரு முறை ஸரிக-க-காமா.
குழந்தையைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனை தான். உற்சாகமும், சோர்வும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு வெளி வருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனித உலகத்தோடு பாரதியாருக்கு அப்பொழுது உறவே கிடையாது என்று சொல்லி விடலாம். புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முறித்து விடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கீதங்களில் ரத்தப் பசை, ஜீவக்களை இருக்கிறது என்று சொல்லுவதில் பொய்யே கிடையாது.
கலைஞர்கள், மேதாவிகள் புதுக்கருத்துக்களை உலகத்துக்கு அறிவிக்கையில் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள முடியாது. புதுக்கருத்து ஒன்று--ஜீவ களை நிறைந்த கருத்து; மேதாவிகளின் உள்ளத்திலிருந்து வெளி வருவதற்குள் அதே உடல் முழுவதையும் குலுக்கி, நடுநடுங்கச் செய்து பிராணனை அரைகுறைப் பிராணனாகச் செய்து விடுகிறது. உலகத்துக்காக மேதாவிகள் ஒவ்வொரு நிமிஷமும் உயிரை விடுகிறார்கள் என்பது பல வகைகளிலும் உண்மை.
'நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை' என்ற உண்மையை எந்த மனிதன் உணர்கிறானோ, அவன் கவி. அவனுக்குப் பகைமை கிடையாது. எனவே, பலவீனம் துளிக் கூடக் கிடையாது. 'நோக்க நோக்கக் களியாட்டம்' அவனுக்கு ஏற்படுவதற்கு என்ன ஆட்சேபணையிருக்கிறது?
முத்தியாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே, நோக்கி நோக்கி களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போல- வெறி கொண்டவனைப் போல - சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார். இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாகப் பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும் பொழுது, அவர் ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா?.. குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுவதும் அபிநயம் தான். தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும்.
குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய், மண் தரையில் படுத்துக் கொள்வார். தலைக்குயரமாய் எதையும் வேண்டார். எதையும் கொடுக்க எங்களுக்குத் தைரியமும் உண்டானதில்லை, இயற்கைத் தாய் நர்த்தனம் செய்த உடலுக்கு இயற்கையான சயனந்தான் வேண்டும் போலும்!..
வ.ரா.வின் பார்வையே அலாதி தான். அதுவும் பாரதியாருக்கு அணுக்க நண்பராய் இருந்து அவரது சோர்விலும் சந்தோஷத்திலும் பங்கு கொண்டவர். பாரதியாரின் வாழ்க்கைச் சரிதத்தை வ.ரா.அவருக்குத் தெரிந்தவாறு உள்ளது உள்ளபடி எழுதி வைக்கவில்லை என்றால் இந்த சரித்திரமெல்லாம் நமக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது என்ற ஆற்றாமையில் மனம் நெகிழ்ந்து போகிறது.
(வளரும்)
படங்கள் அளித்தவர்களுக்கு நன்றி.

16 comments:
ஒரே உணர்ச்சிக்குவியல். உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்து
புறப்படும் ஜீவ ராகம்.
வ ரா அவர்கள் சொல்லி இருக்காவிட்டால் எப்படித்தெரிய வரும். கோடி நமஸ்காரங்கள்.
சொன்ன அவருக்கும் பதித்த உங்களுக்கும் ஜீவீ ஜி
அந்தக் களி நடனத்தைப் பார்த்து அனுபவித்திருக்கிறாரே.
புதுவையும் இந்தியாவின் ஒரு பகுதிதான், அதுவும் பிரிட்டிஷார் இல்லா விட்டாலும், வேறொரு அந்நியனிடம்தான் இருக்கிறது, அதையும் மீட்கவேண்டும் என்கிற எண்ணம் இங்கு, நம் எதிர்க்க வேண்டியது பெரிய இடம், என்கிற காரணத்தினால் இரண்டாம் பட்சமாகிப் போகிறது! நகைமுரண்!
முத்தியாலுப்பேட்டை கிருஷ்ணசாமி குணநலன்கள் பற்றிய வரிகள் சுவாரஸ்யம். குயில் பாட்டுக்குதானே இன்று வரை சரியான பொருள் சொன்னவர் இல்லை என்று சொல்வார்கள்?
பாரதியார் தனது பாடல்களைப் பிரசவிப்பது பற்றிய விவரங்களும் உணர்ச்சிமயமான சுவாரஸ்யம், ஜி எம் பி ஸாருக்கு நன்றி சொல்லவேண்டும். அவரால் அல்லவோ இந்த விவரம் இப்போதே வெளிவந்து விட்டது! பாடல் புனைந்து விட்டு ஓய்வெடுக்கும் பாரதி மனக்கண்ணில் தெரிகிறார்.
பாடல்கள் பிறந்து விட்டன அவற்றை எப்போது யார் கையேடாக்கினார்கள் என்னும் கேள்வியும் இருக்கிறதே
@ G.M. Balasubramaniam
//பாடல்கள் பிறந்து விட்டன அவற்றை எப்போது யார் கையேடாக்கினார்கள் என்னும் கேள்வியும் இருக்கிறதே//
புரிகிறது, சார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப்படாமலேயே இருக்கிறது என்பதும் புரிகிறது, சார். நானும் இதைத் தான் எதிர்பார்த்தேன்.
இதற்கு ஆதாரபூர்வமாய் பதிலும் சொல்ல முடியும். அதற்கு முன்னால்--
இன்றைக்கு பாரதியின் பெயரில் இருக்கும் கவிதைகளை பாரதி தான் எழுதினாரா என்பதற்கு என்ன அத்தாட்சி என்ற கேள்வி வரை நீளட்டும் என்று காத்திருக்கிறேன்.
@ ஸ்ரீராம்
//ஜி எம் பி ஸாருக்கு நன்றி சொல்லவேண்டும். அவரால் அல்லவோ இந்த விவரம் இப்போதே வெளிவந்து விட்டது!.. //
ஸ்ரீராம்! ஜிஎம்பீ சாரின் அடிப்படைக் கேள்வி பாரதியின் பாடல்களை எழுத்துருவாக்கியது யார் என்ப!து தான்.
இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.
@ வல்லிசிம்ஹன்
இது தான் ரசனை. ஒரு விஷயத்தை வாசித்தவுடன் வாசித்த அந்த விஷயம் நம்முள் எற்படுத்தும் தாக்கத்தின் விளைவான பிரதிபலிப்பு.
அந்த ஸ்மரணை கூட இல்லாத வாசிப்பினால் என்ன பயன்?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே?
நாராயணா என்னாத நாவென்ன் நாவே?
@ ஸ்ரீராம்
//பெரிய இடம், என்கிற காரணத்தினால் இரண்டாம் பட்சமாகிப் போகிறது! நகைமுரண்!//
வித்தியாசமான சிந்தனையோட்டம்
பிரிட்டிஷாரிடம் இருந்த பிரித்தாளும் கொள்கை, சூழச்சித் திறன், நம்மவரை வைத்தே நம்மவரை எதிர்க்க வைத்து குளிர் காய்ந்தது, வாரிசு இல்லாத அரசுக்களை கபளீர்கரம் செய்தது போன்ற பெரிய அண்ணனிடம் இருந்த அடாவடித்தனங்கள் சின்ன அண்ணனிடம் இல்லை.
சின்ன அண்ணன் விஷயமே தனி. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வுகளை அணையாத தீபமாக உலகெங்கிலும் ஏற்றியவன். அதற்காக பாடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிபி. நாடுகளைப் பிடித்தாளும் ஆசையில் பெரிய அண்ணன் அளவுக்கு சின்ன அண்ணன் வெறிபிடித்து அலைய வில்லை எனிலும், சின்னவன் விஷயத்தில் ஒரு நளினம் இருந்தது. பெரியவனைப் போல அல்லாமல் சின்னவன் இட்டது பொ0ன்விலங்கு.
பாரதியின் வரலாறு நன்றாகச் செல்கிறது. பின்னூட்டங்களும் அதனைத் தொடர்கின்றன.
பிரெஞ்ச் நாடு, பிரிட்டிஷாரை ஒப்பு நோக்கும்போது இன்னும் நல்ல உணர்வு கொண்டிருந்தது என்று நிச்சயமாகச் சொல்லலாம். தாங்கள் விட்டுவிட்டுச் சென்றபோதும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை கொடுத்தது பிரான்ஸ். இப்போதும் அப்படிப்பட்ட குடியுரிமையைக் கொண்டவர்கள் பல்லாயிரம் உண்டு. இது பிரிட்டிஷ் அரசு செய்யாதது.
@ நெ.த.
நெல்லை.. நீங்களாவது பாரதியாரின் கவிதைகளை எழுத்துருவாக்கியது யார் என்ற ஜிஎம்பீ சாரின் கேள்விக்கு பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஸ்ரீராம் தான் சொல்லவில்லை, நீங்களாவது சொல்லக் கூடாதா?
போகிற போக்கைப் பார்த்தால் புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து இதெல்லாம் எப்படி புத்தக உருக்கொண்டன?.. இதையெல்லாம் எழுதி வைத்தது யார் என்ற கேள்வி வந்து விடும் போலிருக்கிறதே!
பிரஞ்சுக்காரர்கள் கூட தாங்கள் போகும் போது புதுவைக் கடல்வெளியில் தாங்கள் போட்டிருந்த நீண்ட பாலத்தை தகர்த்து விட்டுத்தான் போனார்கள்.. கால்பகுதிக்கும் குறைவான பாலம் மட்டும் மிஞ்சியது. ரொம்ப நாளைக்கு அந்த டூப்ளே சியல் மட்டும் கடற்கரையில் இருந்தது. 1964 காலகட்டத்தில் அந்தச் சிலையும் எடுக்கப்பட்டு க்ரேன் வைத்து கப்பலில் ஏற்றி பிரான்ஸூக்குக் கொண்டு போகப்பட்டது. டூப்ளே சிலை இருந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை பிற்காலத்தில் வைக்கப்பட்டது.
எழுதிய பின்னூட்ட்டம் பப்லிஷ் ஆவதில்லைமீண்டும் வேர்டில் எழுதி பதிவிடுகிறேன்
போகிற போக்கைப் பார்த்தால் புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து இதெல்லாம் எப்படி புத்தக உருக்கொண்டன?.. இதையெல்லாம் எழுதி வைத்தது யார் என்ற கேள்வி வந்து விடும் போலிருக்கிறதே!/ வரக்கூடாதா என்ன /? அந்தக் காலத்தில் தமிழின் எழுத்துருவே வேற மாதிரி என்று தெரிகிறதுதொழில் நுட்பங்களும் இல்லாத காலம் வாய் வழிகேட்டு பரப்பப்பட்டபாடல்கள் சிதைந்து போகும் வாய்ப்பு உண்டு ஒரு வேளை ஆவல் காரணமாகக் கூடுதலாகவும் கூறும் வாய்ப்பும் உண்டு பாரதக் கதையே பலசுலோகங்கள் சேர்க்கப்பட்டுஇருக்கலாம் என்றும் வாசித்து இருக்கிறேன் .
ஏன் பாரதியின் கவிதைகளிலேயே பாடபேதம் இருக்கலாம் என்றும் சிலநூல்களில் குறிப்பு இருக்கிறது பாரதியின் கவி புனையுமாற்றல் பற்றி எந்த சந்தேகமும் இல்லை மடை திறந்தகவியானாலும் அவரே எழுதி வைத்துதான் இருப்பார் என்று தோன்று கிறது அப்படி நினைப்பது தவறாகத் தோன்றவில்லை பாரதியின் கவிகள் பலவும் அவரது ஆதங்கங்களின் வெளிப்பாடே என்றும் நான் நினைப்பதூண்டு
@ GMB
பாரதியின் கவிதைகளில் பல அவர் காலத்திலேயே அச்சுவாகனம் ஏறி விட்டன. கிட்டத்தட்ட ஏழெட்டு பத்திரிகைகளுடன் அவர் நேரடியானத் தொடர்புகளில் இருந்திருக்கிறார். இன்னொனறு. வெகுதிரள் மக்களின் எழுச்சிக்காக எழுதப்பட்ட எழுத்துக்கள் பரணில் தூங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாகவே மக்களுக்கு அந்நாளைய பத்திரிகைகள் மூலம் கிடைத்திருக்கின்றன.
சுவடிகளில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களே புத்தக உருப்பெற்றிருக்கும் பொழுது 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதி படைப்புகள் அச்சுறு கொண்டதில் வியப்பேதும் இல்லை.
'பாரதி என்ற பத்திரிகையாளர்' என்று ஒரு தலைப்பிட்டே அவர் பற்றி எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. மீனால் நீரில் தான் வாழ முடியும் என்பது போல பத்திரிகைகளே பாரதியின் வாழ்வுக்கு உயிர்மூச்சாக இருந்திருக்கின்றன. தன் சிந்தனைகளை வெளிப்படுத்த பத்திரிகைகளையும், பொதுக்கூட்ட மேடைகளையும் அவர் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆசுகவியாக நினைத்த மாத்திரத்தில் பாடும் திறன அவர் கொண்டிருந்தாலும் அவரே எழுதுறுவாக தன் கவிதைகளை யாத்திருக்கிறார் என்று கொள்ளலே தகும். சொல்லப்போனால் அவர் எழுத்துக்களின் ப்ரூப்புகளைக் கூட அவரே பிழைகளைக் களைந்து திருத்தியும் இருக்கிறார்.
அவர் முதல் கவிதை 'தனிமை இரக்கம்' விவேகபானு' இதழில் வெளிவந்தது. இது 1903-ம் காலத்திய செய்தி. திரு.வி. கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் 'சுதேச கீதங்கள்' என்ற பெயரில் பாரதியின் சில தேச எழுச்சிப் பாடல்களை இலவச விநியோகமாய் சிறு பிரசுமாக 1908-ல் கொண்டு வந்திருக்கிறார். பாரதியின் கன்னன் பாட்டு குயில் பாட்டு, பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் எல்லாம் 1912-லேயே அச்சு வடிவில் வெளிவந்து விட்டன. ' ஞானபானு' இதழில் பாரதியில் படைப்புக்கள் பல வெளிவந்திருக்கின்றன.
சுதேச மித்தரணைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 1917-ல் பரலி சு. நெல்லையப்பர் பாரதியின் கண்ணன் பாட்டு தொகுப்பின் முதல் பதிப்பை வெளியிடுகிறார்.
இதெல்லாம் பற்றி விரிவாக பின்னால் எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கு ஒரு யோசிப்பை ஏற்படுததவே இந்த விஷயத்தைக் கொஞ்சம் இழுத்தடித்தேன். மன்னிக்கவும். இந்த விளக்கத்திற்கான அவசியத்தை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி.
பாரதியின் கவிதைகள் உருக்கொண்ட விதம் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.
Post a Comment