அத்தியாயம்-- 18
பாரதியாரின் 39 வருட ஆயுட்காலத்தில் பத்து ஆண்டுகள் புதுவையில் கழிந்தது. அடுத்து நடக்கப் போவது என்ன என்று தெரியாத ரகசியம் போலத் தான் பாரதியாரும் புதுவை வந்து சேர்ந்தார். சென்னையிலிருந்து நேரடியாக அவர் புதுவைக்கு வரவில்லை என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பாரதியாரின் ஒட்டு மொத்த வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதே பல நெருக்கடிகளுக்கு நடுவே தான் அவர் செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியும். சொல்லப் போனால் அந்தந்த நேரத்து நெருக்கடிகளே அவரது அடுத்தடுத்த செயல்பாட்டிற்கான உந்தித் தள்ளுதலாக இருந்திருக்கிறது.
1
நண்பர்களால் அவர் புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதின் தலையாய காரணம் அவரையும் இந்தியா பத்திரிகையும் பிரிட்டிஷாரின் ஆளுகை எல்லையைத் தாண்டி செயல்படுவதை நிச்சயப்படுத்தவே. இந்தியா பத்திரிகைக்காக பாரதியா, பாரதிக்காக இந்தியா பத்திரிகையா என்பது பிரித்துப் பார்க்க முடியாத கலவையான ஒன்று. இரண்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்தப் போராட்டக் களத்தின் நெருங்கிய வட்டாரத்தில் பிரஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரிக்கு பாரதியாரை அனுப்பி வைப்பது என்றும் இந்தியா பத்திரிகையைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாரதியார் புதுவைக்கு வந்து சேர்ந்த பொழுது அவர் மனைவி செல்லம்மா நிறை கர்ப்பிணியாக இருந்தார்.
அதனால் செல்லம்மாவை கடையத்தில் தனது மைத்துனர் அப்பாதுரையின் பாதுகாப்பில் விட்டு விட்டு மாறுவேடத்தில் பாரதி புதுவை வந்து சேர்ந்தார். தேசபக்தி மிகுந்த குடும்பத்தில் இதெல்லாம் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயல்களாகத் தீர்மானிக்கப்பட்டு வெகு இயல்பாக நடக்கிறது. அப்பாதுரை பிற்காலத்தில் அவரது தேசிய நடவடிக்கைகளுக்காக அவர் பார்த்து வந்த போஸ்ட் மாஸ்டர் உத்தியோகத்தைப் பறிகொடுத்திருக்கிறார். கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1911-ல் சிறை தண்டனையையும் அனுபவிக்கிறார் இந்த அப்பாதுரை.
இவ்வளவுக்கும் இடையே பாரதியோ இந்த மாதிரியான பயங்கரவாதச் செயல்களில் துளியும் நம்பிக்கையற்றவராய் தன் கருத்தை இந்தியா பத்திரிகையில் தெள்ளத் தெளிவாய் பதிகிறார். மனைவி-கணவனாய் ஒரு சேரத் தம்பதியரைப் பார்த்தால் பார்வதி--பரமேஸ்வரர் போல என்று பாரதியாருக்குத் தோன்றும்.. அப்படியாகத் தான் கலெக்டர் ஆஷூம் அவர் மனைவியும் அவருக்குத் தெரிகிறார்கள். அவர்கள் தம்பதியராய் தங்கள் விடுமுறையைக் கழிக்க கொடைக்கானல் செல்கிற வழியில் மணியாச்சி ஜங்கஷனில் வைத்து இப்படி ஒரு கொலை நடந்தது பாரதிக்கு மிகுந்த மனவேதனை தருகிறது. கொலையைத் தாண்டி பாரதியாரின் பார்வையில் புலப்படும் பரிதாபம் என்னவெனில்--- கணவன் மனைவியாய் சந்தோஷமாய் விடுமுறையைக் கழிக்க வந்த பொழுது இது நடந்தது என்பது. இனம், மொழி, நாடு கடந்து பெண்களின் பால் பாரதி கொண்டிருந்த அன்பு பெண் இனத்தின் மீதான பக்தியாக அந்த சமயத்தில் கலெக்டர் ஆஷ் கொலை வழக்குத் தொடர்பாக அவர் எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்றில் வெளிப்படுவதைக் காணலாம்.
எதற்கு இந்த இடத்தில் இதைச் சொல்ல நேர்ந்தது என்றால் நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவியை விட்டு விட்டு கடமையும் நாட்டுப் பற்றும் கைப்பற்றி அழைக்க பாரதி புதுவை போனானே, அந்த நேரத்தில் அவன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்ததினால் தான். 3
மகாகவி காளிதாசனின் சாகுந்தலத்தை மிகுந்த பிரேமையுடன் பாரதி புதுவையில் இருக்கையில் படித்து வந்த பொழுது கடையத்தில் அவர் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த சேதி கிடைக்கிறது. உடனே தன் குழந்தைக்கு சகுந்தலா என்று பெயர் வையுங்கள் என்று மைத்துனருக்கு பாரதி கடிதம் எழுதுகிறார். ஆறே மாதத்தில் மனைவியையும் குழந்தையையும் தன்னுடன் இருக்க புதுவைக்கு
அழைத்துக் கொண்டு விடுகிறார்.
4
புதுவையில் பாரதியின் நண்பர் குழாம் மிகப் பெரிது. பாபு என்று அவர் செல்லமாக அழைத்த அரவிந்தரின் அருகாமை பாரதியின் வாழ்க்கையில் அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்தது. வ.வே.சு. அய்யரின் சுதந்திர ஆவேசம் பாரதியின் அரசியல் போராட்ட வாழ்வை கனல் கக்கச் செய்தது. பரலி சு. நெல்லையப்பர், வ.ரா, பாரதிதாசன், குவளைக் கண்ணன் என்று பாரதியார் வார்த்தையாடி மகிழ எந்நேரமும் சுற்றியிருந்த நண்பர்கள். சிட்டி குப்புசாமி ஐயங்கார், சுந்தரேச ஐயர், கிருஷ்ணசாமி செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை, வீட்டு வேலைகள் செய்த அம்மாக்கண்ணு என பாரதியாரின் நலனில் கண்ணும் கருத்துமாக இருந்த அணுக்கத் தோழர்கள். இந்த மனமிசைந்த சூழல் தான் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் என பாராதியாரின் பெயர் சொல்லும் படைப்புகள் அவரிடமிருந்து வெளிப்படக் காரணமாக இருந்தன.
5
திருநெல்வேலி மாவட்ட தாழையூத்துக்கும் மானூருக்கும் இடைப்பட்ட கிராமம் பரலிக்கோட்டை. தம் பிறப்பால் இந்தக் கிராமத்திற்குப் பெருமை சேர்த்தவர் பரலி. சு. நெல்லையப்பர். வ.உ.சி.யுடனும் பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். இவரும் வ.ரா.வும் அடுத்தடுத்த நாட்களில் பிறந்த அரிய ஒற்றுமை கொண்டவர்கள். நெல்லையப்பர். வ.ரா.வுக்கு ஒரு நாள் மூத்தவர். வ.ரா. பிறந்தது 1989 செப்டம்பர் 18 என்றால் நெல்லையப்பர் பிறந்தது 1989 செப்டம்பர் 19-ம் தேதி. இந்த இருவரும் பாரதியாருக்கு நெருக்கத் தோழர்களாய் இருந்தது காலம் செய்த அதிசயம். எந்நேரமும் பாரதியார் நெல்லையப்பரை தம்பீ என்றே அழைத்துப் பழக்கப்பட்டவர்.
பாரதியாரின் பல படைப்புகளை அச்சாக்கம் செய்து மகிழ்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், இதழியலாளர், பதிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகம் கொண்டவர் நெல்லையப்பர். பரலியாரின் அண்ணனும் தம்பியும் வ.உ.சி.யின் சுதேசி கப்பல் இயக்கத்திற்குத் துணையாக இருந்து அருந்தொண்டாற்றியவர்கள்.
புதுவை வாழ்க்கையில் பாரதிக்கு நெருக்கமாக இருந்து அவர் முகக்குறிப்பு அறிந்து பல உதவிகள் செய்தவர். இந்தியா பத்திரிகை சென்னையிலிருந்து வெளிவந்த காலத்திலேயே புதுவையிலிருந்து அதை வாசித்துக் களித்தவர் சுந்தரேசய்யர். பொருளாதார வசதி கொண்டவர் இல்லை. மணிலாக்கொட்டை வியாபாரக்கடை குமாஸ்தா தான் சுந்தரேசய்யர். இருந்தும் பாரதியின் மேல் கொண்ட பிரேமையால் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்.
பாரதியைச் சந்தித்ததிலிருந்து இறுதிக்காலம் வரை பாரதிக்கு பாதுகாவலாராக இருந்து சரீர உபகாரத்தை சளைக்காமல் செய்தவர் குவளைக் கண்ணன். குவளைக் கண்ணனுக்கும் பாரதியாருக்குமான நெருக்கம் 'இந்தியா' பத்திரிகையை நிலைக்களனாக வைத்தேத் தொடங்குகிறது. அது ஆங்கில பத்திரிகைகளே பொதுவாக பத்திரிகை வாசிப்போருக்கிடையே பழக்கமாக இருந்த காலம். குவளைக் கண்ணனுக்குத் தெரிந்த ஒருவர் கையில் 'இந்தியா' பத்திரிகையைப் பார்த்து விட்டு, 'அட, தமிழ்ப் பத்திரிகை கூட வாசிக்கக் கிடைக்கிறதா என்று பிரமித்து, 'தாங்கள் வாசித்தப் பிறகு, எனக்கும் வாசிக்க தருவீர்களா?" என்று கு. கண்ணன் கேட்கிறார். "இது வேறொருவருக்குச் சொந்தமானதால், அப்படித் தருவதற்கில்லை.." என்கிறார் அவர். "யார் பத்திரிகை இது?.. சொன்னீர்களானால் நானும் அவரிடமே வாங்கிப் படிப்பேன்.." என்று குவளைக்கண்ணன் கேட்க, சுந்தரேச அய்யரைப் பற்றித் தெரிந்து அவரைப் போய்ப் பார்த்து, பின்னால் குவளைக்கண்ணனுக்கும் இந்தியா வாசிக்கக் கிடைக்கிறது.
புதுவை பெருமாள் கோயில் தெருவில் குவளையின் மைத்துனி வீடு இருந்தது. ஒருநாள் முன்னிரவு ஏழு மணி இருக்கும். அந்தத் தெரு வழியாக வந்த குவளை மைத்துனியின் பக்கத்து வீட்டுத் திண்ணையில் யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்து, "யார் நீங்கள்?" என்று கேட்க
அவர் தமக்கு ஊர் சென்னை என்றும் புதுவைக்கு தான் புதிது.." என்றும் சொல்கிறார். குவளை அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அவர் "இந்த ஊரில் இந்தியா பத்திரிகையை யார் வாங்கிப் படிக்கிறார்கள், தெரியுமா?" என்று கேட்கிறார். "தெரியுமே.." என்ற குவளை அந்த நபரை சுந்தரேசய்யர் வீட்டுப் பக்கம் அழைத்துச் செல்கிறார். சுந்தரேசய்யரோ இன்னும் மணிலா கொட்டை கிடங்கிலிருந்து வீட்டிற்குத் திரும்ப வில்லை. "வாருங்கள், அவர் வேலை செய்யும் இடத்திற்குப் போய் பார்க்கலாம்.." என்று தாம் சந்தித்த புதிய நபரை கிடங்கு பக்கம் கூட்டிப் போகிறார். புதிய நபரை கிடங்குக்கு வெளியேயே நிறுத்தி விட்டு உள்ளே போய் சுந்தரேசய்யரை வெளியே கூட்டி வருகிறார். அந்தப் புதிய நபரிடம் "இவர் தான் இந்தியா பத்திரிகையை இந்த ஊரில் வாசிப்பது.." என்று அய்யரை அந்த நபரிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த புதிய நபரும் அய்யரும் கொஞ்சம் விலகிப் போய் இரகசியமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அன்று இரவு அய்யரிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பி விடுகிறார் குவளை. இரண்டு நாட்கள் கழித்து சுந்தரேசய்யரைப் பார்க்கும் பொழுது, "எங்கே ஐயா நான் தங்களிடம் அழைத்து வந்த அந்தக் கள்வன்?" என்று கேட்கிறார். "அவர் என் ஆதரவில் தான் இருக்கிறார்.." என்கிறார் சுந்தரேசய்யர் சொல்லி பிறகு ஒரு நாள் அந்தக் 'கள்வனை' நேரடியாகவே சந்திக்கிறார் குவளை. அந்தப் புதிய நபருடன் பழகத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். இருந்தாலும் ரொம்ப நாள் கழித்தே அவர் தான் பாரதியார் என்றே எனக்குத் தெரிய வந்தது.." என்று அசடு வழிய பாரதியாரைப் பற்றிய தனது கட்டுரையில் சொல்கிறார் குவளை...
பாரதியாருடன் அப்படியாக ஆரம்பித்த பழக்கம்,. தன் உயிருக்கு உயிராக அவரை நேசிக்கும் பழக்கம் ஆகிறது. குவளையைத் தாண்டித் தான் யாரும் பாரதியாரை நெருங்க முடியும்.. ஆஜானுபாகுவான அவர் எந்நேரமும் பாரதியாருக்கு பாதுகாவலரைப் போலவே இருந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த பொழுதும் குவளையும் தன் ஜாகையை திருவல்லிக்கேணிக்கே மாற்றிக் கொண்டார். திருவல்லிக்கேணி கோயில் யானை பாரதியைத் தூக்கிப் போட்ட போது தன் உயிரைத் துச்சமாக மதித்து யானை கால்களுக்கிடையே நுழைந்து குழந்தையை வாரி எடுப்பது போல தூக்கி அவரை வீடு சேர்த்தது குவளையே. அந்த கடைசிப் பயணத்தில் பாரதியாரை சுமந்து தோள் கொடுத்த நால்வரில் ஒருவரும் குவளைக் கண்ணனே.
பாரதி குவளையை நேசித்தது ஈடு இணை அற்றது. குவளையின் அன்பிற்காக அவர் ஒரு பாடலையையும் அர்ப்பணித்திருக்கிறார். அது இது:
"எங்கிருந்தோ வந்தான்..... இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்.. எங்கிருந்தோ வந்தான்....
குவளையை நினைக்கும் போதெல்லாம் கண்கள் பனிக்கின்றன..
பாரதிக்கு வாய்த்த நண்பரிகளில் எக்காலத்தும் முதல் மரியாதை குவளைக்குத் தான்....
=======================================================
1. பாரதியாரின் மைத்துனர் அப்பாதுரை
2. அப்பாதுரையின் குடும்பம். பாரதியாரின் மாமியார் மீனாம்பாள் அம்மாளும், செல்லம்மா பாரதியும், தங்கம்மாவும். தரையில் அமர்ந்திருப்பது சகுந்தலா.
2A. பாரதியின் தம்பி விஸ்வநாதனும் தங்கை லஷ்மியும்.
3. சுந்தரேச அய்யர்
4. குவளைக் கண்ணன்
5. பரலி சு. நெல்லையப்பர்

12 comments:
அருமை
// நெருக்கடிகடிகளே//
திருத்த வேண்டும்!
இந்தக் காலத்துப் பத்திரிகையாய் இருந்தால், ஆஷ் துரையின் மனைவிக்காக வருந்தும் பாரதியார் தேசத்துரோகி என்று சிலர் சொல்லி இருப்பார்கள்! இன்னும் சிலர் தன் மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு இவர் யோக்கியன் மாதிரி பேசுகிறார் என்பார்கள்!
பாரதியார் - குவளைக் கண்ணன் சந்திப்பு சுவாரஸ்யம்.
@ ஸ்ரீராம் (1)
திருத்தி விட்டேன். நன்றி.
@ ஸ்ரீராம் (2)
கேள்விகள் அப்படியாக இருந்தால் அதற்கான உங்கள் பதில் என்னவாக இருக்கும், ஸ்ரீராம்?..
@ ஸ்ரீராம் (3)
குவளைக் கண்ணனே சுவாரஸ்யமான மனிதர் தான்.
இடையில் சிலதை தவற விட்டுவிட்டேன்[அத்தியாயம்]. நிறையத்தகவல்கள் தெரிந்துகொள்கிறேன் உங்கள் பதிவில் இருந்து.
குவளைக் கண்ணன் அவர்களை பாரதி சினிமாவில் சிரிக்க வைக்கும் மனிதராக காட்டுவார்கள்.
ஆனால் பாரதிக்கு அன்பு, ஆறுதலும் கொடுத்தவர்.
விவரங்களும் படங்களும் அருமை.
@ அதிரா
அதிரா அவர்களை இங்கே பார்த்ததில் சந்தோஷம்.
தவற விட்ட அத்தியாயங்களை வாசித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே.. இந்தத் தொடர் எழுத ஆரமித்த பிறகு தான் நானும் இதற்கு முன்பு தெரிந்திராத தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன். வருகைக்கு நன்றிங்க.
@ கோமதி அரசு
நல்ல சினிமாக்களிலும் பொதுஜன விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக என்னன்னவோ
செய்து விடுகிறார்கள். சிரிப்புப் பாத்திரத்திற்கு அவர்களுக்கு குவளைக் கண்ணன் தான் கிடைத்தார் போலும். குவளை மாதிரியான மனிதர்களால் தான் மனிதத்துவம் வாழ்கிறது.
உணார்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி, கோமதிம்மா.
அண்மையில் படித்தேன் பாரதியின் பாடல்களால் நிறையப் பணம்பார்த்தவர் ஏவிஎம் செட்டியார் அவர்கள்தானாம் 1954ல் தான் தமிழக அரசு பாரதியின் பாடல் களை அர்சுடமை ஆக்கி எல்லோருமுபயோகிக்க ச் செய்ததாம் பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு ஏதாவது காப்பி ரைட் பணம்கொடுத்தார்களா தெரியவில்லை இறந்தபின் போற்றப் படுபவருள் பாரதியே முன் நிற்கிறார்
Post a Comment