அத்தியாயம்--20
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கும் தென்காசிக்கும் இடையே இருக்கும் ஊர் கடையம். நெல்லையிலிருந்து 50 கி.மீ.
கடையம் செல்லம்மா பிறந்து வளர்ந்த ஊர். ஊரில் வீட்டுக்குப் பக்கத்தில் இராமர் கோயில். இராமர் கோயிலுக்குப் பக்கத்தில் போஸ்ட் ஆபிஸ். கடையத்தில் இருந்த முந்தைய காலகட்டத்தில் பத்திரிகை பிரசுரத்திற்கான விஷயஙகளைை இந்த தபால் நிலையத்தின் மூலமாக செல்ல மகள் தங்கம்மாளிடம் கொடுத்து பாரதி அனுப்புவது வழக்கம். தன் தந்தை பற்றி தங்கம்மாள் எழுதிய புத்தகம் ஒன்றில் இதைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கிறார்.
'காக்கைச் சிறகினிலே, நந்தலாலா'. 'காயிலே புளிப்பதென்ன, கண்ணபெருமானே' 'மங்கியதோர் நிலவினிலே'-- முதலிய பாடல்கள் அவரது கடைய வாழ்க்கையில் புனையப்பட்டதாக முனைவர் ச..கணபதி ராமன் அவர்கள் அவரது 'கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்' என்ற நூலில் கூறுகிறார்..... முனைவர் அவர்கள் 'உதிர்ந்த படையல்களை' 'உதித்த படைப்புகளாக'வானும் புத்தகத் தலைப்பில் மாற்றம் கொண்டிருக்கலாம் என்பதைத் தவிர இந்த நூல் பற்றிச் சொல்ல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
'மங்கியதோர் நிலவினிலே' பாடலைப் புனையும் மனநிலையில் பாரதியின் பிற்காலத்திய கடையம் வாழ்க்கை இல்லாது போனது பெரும் சோகம். கடலூர் சிறை விடுதலைக்குப் பின் கடையம் வந்திருக்கும் பாரதி இப்பொழுது நினைத்தாலும் தன் பத்திரிகைகான தனது படைப்புகளை சுதந்திரமாக அனுப்ப முடியாது. காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார்வைக்கு அனுப்பி அவரின் அனுமதிக்குப் பிறகே அவை பத்திரிகைகளுக்குப் போய்ச் சேர வேண்டும். அந்தத் தபால் நிலையத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் பாரதி இந்தக் கட்டுப்பாடு குறித்து குமைந்து போயிருப்பார் என்றாலும் அவரது விடுதலைக்கு ஏற்பாடு செய்தவரும் அவரின் மேல் மிகுந்த நம்பிக்கைக்கு கொண்டவருமான காவல்துறை அதிகாரிக்கு தான் கொடுத்த உறுதிமொழிக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவராய் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்.
இன்று கூட ஊர் மாப்பிள்ளைக்கு கடையத்தில் ஏகப்பட்ட மரியாதை. அந்த ஊரின் ஆரம்ப, நடுத்தர, மேல்நிலைப் பள்ளிகளுக்கெல்லாம் பாரதியாரின் பெயர் தான். கடையத்தில் ஒருகாலத்தில் வெள்ளமாக ஓடிய ஜம்பு நதி இப்பொழுது ஓடையாகியிருக்கிறது. இந்த ஊர் நித்ய கல்யாணி அம்மன் கோயில், கோயிலைச் சுற்றியுள்ள மேற்கு மலைத் தொடர்ச்சி எல்லாம் பாரதி கவிதை பாடித் திரிந்த இடங்கள். இந்த நித்ய கல்யாணி அம்மன் கோயிலுக்கு அருகிலிருக்கும் தட்டப்பாறையில் அமர்ந்து தான் 'காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்று பாரதி பாடினார் என்பார்கள். பாரதியின் நவராத்திரி பாடல்களில் வரும் 'உஜ்ஜெயினீ நித்யகல்யாணீ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி' வரிகளையும் இஙுகு நினைவு கொள்ளலாம். கடையத்திற்கு அருகிலிருக்கும் தோரணமலை ஸ்ரீீீீ முருகபெருமானை 'குகையில் வளரும் கனலே' என்று பாரதியார் மனமுருகப் பாடியுள்ளார்.
கடையம் வந்து சேர்ந்த பாரதி அவரது மைத்துனர் அப்பாதுரை வீட்டில் தங்கியிருந்தவர், சில நாட்களில் ராமர் கோயிலுக்கு வடக்கே பட்டர் வீடு என்ற ஒட்டு கட்டிடத்தில் குடியேறுகிறார். இந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்னால் இந்த வீடு பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் தமது நெருங்கிய நண்பர் வெங்கடேச ரெட்டுத் தேவருக்கு எழுதிய கடிதம் ஒன்று காணக்கிடைக்கிறது. பாரதியாரின் அன்றைய வறுமை நிலை பற்றியும் குறிப்பிடும் கடிதம் அது:
கடையம்
30 ஜனவரி 1919
ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்.
இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதை செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின் மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையாததாக இருக்கிறது.
இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும் உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்திற்கு ஸ்ரீமதி சின்னமா சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.
உனக்கு மஹாசக்தி அமரத்தன்மை தருக.
உனதன்புள்ள
சி. சுப்பிரமணிய பாரதி
கடிதத்தை வாசிக்கையிலேயே மனம் நொந்து போகிறது.
'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்று பாடிய பாரதி கடையம் வீதியில் செல்லம்மாவின் கைகோர்த்துப் போவாராம். 'என்ன இது, அநியாயம்' என்று பதைபதைக்கும்அக்கிரஹாரத்து மக்கள் தெருக்கதவு அடைத்து வீட்டினுள் புதைவாராம். பாரதியின் புதுமைக் கருத்துக்கள் பழைய பழக்க வழங்களில் தோய்ந்திருந்த ஜனசமூகத்திற்கு வேம்பாய் கசந்தன. இது ஒரு பக்கம் என்றால் பாரதியின் வாழ்க்கை நெறியின் நேர்மையை உபயோகப்படுத்திக் கொண்டு அவரது சொந்த வாழ்க்கையை சீண்டிப் பார்க்கவும் சிலர் முயன்றனர்.
முக்கியமாக தனது படைப்புகளை அச்சில் கொண்டு வரும் முயற்சிகளுக்கு கடையம் வாழ்க்கை பாரதிக்கு சிரமங்களைக் கொடுத்தன. புத்தக பிரசுரத் தொடர்பாக பரலி சு. நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதுகிறார். நெல்லையப்பரும் பாரதியை நேரில் சந்திக்க கடையம் வருகிறார். பாரதியார் எட்டையபுரம் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டு எட்டையபுரம் விரைந்து அங்கே பாரதியை சந்தித்தும் விடுகிறார். பாரதியாரால் 'தம்பி' என்றழைக்கும் பேறு பெற்ற நெல்லையப்பர், பாரதியின் சில பாடல்களை 'கண்ணன் பாட்டு' என்கிற தலைப்பில் 1917-லேயே 2000 பிரதிகள் பதிப்பித்தவர். முதன் முதல் நூல் வடிவில் வெளிவந்த பாரதியின் படைப்பு இது தான். பின்னால் பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு, நாட்டுப்பாட்டு என்ற தலைப்பில் நெல்லையப்பர் பாரதியின் நூல்களைக் கொண்டு வந்தார். எட்டையபுரத்தில் பாரதியை சந்தித்த பிறகு இதே நூல்களை மீள் பிரசுரம் செய்தார் என்று தெரிகிறது.
தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிட ஆர்வம் கொண்டு அதற்காக பொருளுதவி கேட்டு பலருக்கும் கடிதங்கள் எழுதி தோல்வி கண்ட மனம் பாரதியாரது. கடிதங்கள் என்றால் தபால் கார்டில் தான். அதற்காக போஸ்ட் ஆபிஸ் சென்று நிறைய தபால் கார்டுகளை வாங்கி கைவசம் வைத்திருப்பாராம்.
செட்டி நாட்டு கானாடுகாத்தானில் வயி.சு. சண்முகம் செட்டியார் என்று ஒரு பாரதி அன்பர் இருந்தார். பாரதியின் பாடல்களில் மிகுந்த பிரேமை கொண்டவர் அவர். செல்வந்தர். பாரதி கடையத்திற்கு வந்த சேதி கேள்வி பட்டு பிப்ரவரி 1919-ல் செட்டியார் பாரதியை தன் ஊருக்கு கையோடு அழைத்துப் போக கடையத்திற்கே வந்து விட்டார். பாரதியாரோடு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தங்கி பரவசப்பட்டார். உடனே அவரோடு கானாடுகாத்தான் செல்ல பாரதியார் அப்பொழுது தயார் நிலையில் இல்லை. இருந்தும் எட்டு மாதங்கள் கழித்து அக்டோபர் 1919 வாக்கில் கானாடு காத்தான் சென்று செட்டியார் மாளிகையில் 9 நாட்கள் தங்கியிருந்தார். கடையம் திரும்பிய பிறகு நவம்பரில் செட்டியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
ஸ்ரீமான் வயி.சு. சண்முகம் செட்டியாருக்கு ஆசிர்வாதம். பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள். தஙகளுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதி அனுப்புகிறேன். நீண்ட முகவுரையும் எழுதுகிறேன். ஆங்கில கவிகள், நூலாசிரியர்களின் காவியங்களும், கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப்படுகின்றனவோ அப்படியே நூல்கள் நாம் இங்கு அச்சிட முயல வேண்டும்' -- என்று பாரதியின் அளப்பரிய ஆசைகளை அக்கடிதம் வெளிப்படுத்துகிறது.
மறுபடியும் 1920 ஜனவரியில் செட்டியாரின் அன்பு அழைப்பில் பேரில் கானாடுகாத்தான் வந்து தங்கினார். சண்முகம் செட்டியார் தன் மாளிகையில் பாரதியாரை தன்னோடையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனாலும் பாரதியின் புத்தக வெளியீடு ஆர்வங்கள் கனிந்து வரவில்லை என்பது ஒருபுறமிருக்க, கானாடுகாத்தானில் தங்கியிருக்க செல்லம்மாளுக்கு விருப்பமில்லை என்று தெரிந்து பாரதி கடையத்திற்கே திரும்புகிறார்.
இருந்தும் பாரதியின் புத்தக வெளியீடு ஆசைகள் கருகிப் போய்விடவில்லை. நண்பர் மதுரை ஸ்ரீனிவாசனுக்கு ஆங்கிலத்தில் ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார்.
அன்பு நண்பரே,
எனது எழுத்துப்பிரதிகள் யாவும் --என்னுடைய பன்னிரண்டு வருஷ அஞ்ஞான வாசத்தின் பலன்கள்-- புதுவையிலிருந்து இங்கு வந்து சேர்ந்து விட்டன. அவற்றை 40 தனிப்புத்தகங்களாகப் பிரிக்க வேண்டும். முதல் பதிப்பாக ஒவ்வொரு புத்தகத்திலும் 10000 பிரதிகள் நான் அச்சிடப் போகிறேன். இந்த வேலைக்கு ஆரம்பத்தில் ரூ. 20000/- மூலதனம் தேவைப்படும். புத்தகங்கள் வெளிவந்த ஒரு வருஷத்தில் அதிகமானால் இரண்டு வருஷங்களுக்குள் செலவெல்லாம் போக நிகர லாபமாக ஒன்றரை இலட்சம் ரூபாய் அடைவது நிச்சயம்.." என்று வறுமை படுத்திய பாடு, புதிய பாரதியாய் எழுதுகிறான்.
அதே நேரத்தில் தனது புத்தக வெளியீட்டிற்காக தமிழ்ச்சாதியினரிடம் ஒரு கடன் திட்டத்தைப் பற்றியும் பிரஸ்தாபிக்கிறான். 'புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவிற்காக உங்களால் முடிந்த அளவு தொகையை தயவுசெய்து கடனாக அனுப்பி வையுங்கள். உங்களிடமிருந்து குறைந்தபட்சம் 100 ரூபாயவது எதிர்பார்க்கிறேன். அருள் கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது இதே மாதிரியோ அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி வேண்டுகிறேன். உங்களிடமிருந்தும் உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்களுக்கு ஸ்டாம்பு
ஓட்டி புரோ நோட்டு எழுதிக் கொடுக்கிறேன். எனக்குக் கிடைக்கக் கூடிய அபரிதமான லாபத்தை முன்னிட்டு மாதம் 2 சதவீதம் தாராளமாகவே வட்டி தருகிறேன். உஙள் அன்பான பதிலையும் உங்கள் தரப்பிலிருந்து ஏராளமான மணியாடர்களையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும், தஙளுக்கு நீடித்த ஆயுளும் இன்பகரமான வாழ்க்கையும் அளிக்குமாறு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்,
தங்களன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி என்று கையெழுத்திட்டு முடிக்கிறான்.
பாரதிக்குத் தான் தமிழ்ச் சமுதாயத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை..
நல்லவேளை, பாரதியின் அந்த நம்பிக்கைப் பொய்த்துப் போகிறது.
{வளரும்}
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

8 comments:
வளரட்டும் நண்பரே வாழ்த்துகள்...
கதையை நாங்களும் வாசித்து வருகிறோம்...
//என்று வறுமை படுத்திய பாடு, புதிய பாரதியாய் எழுதுகிறான்.//
படிக்கவே மனது கஷ்டபடுது.
//தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிட ஆர்வம் கொண்டு அதற்காக பொருளுதவி கேட்டு பலருக்கும் கடிதங்கள் எழுதி தோல்வி கண்ட மனம் பாரதியாரது. கடிதங்கள் என்றால் தபால் கார்டில் தான். அதற்காக போஸ்ட் ஆபிஸ் சென்று நிறைய தபால் கார்டுகளை வாங்கி கைவசம் வைத்திருப்பாராம்.//
அந்தக் காலத்தில் தனது படைப்புகளை வெளி கொண்டுவர எவ்வளவு கஷ்டபட்டு இருக்கிறார் பாரதி! இப்போது அவர் அவர்கள் தங்கள் படைப்புகளை புத்தகம் ஆக்கி வருகிறார்கள். காலம் எவ்வளவு மாறி விட்டது.
படித்தேன், தொடர்கிறேன்.
@ A.S. Joseph
வாசித்து முடித்ததும் ஏதாவது பகிர்ந்துகொள்ளத் தோன்றியிருக்குமே?
தொடர்ந்து வாருங்கள்.
@ கோமதி அரசு
நல்ல மனங்களின் இயல்பு பிறர் படும் துன்பம் பொறுக்காது தான். என்ன செய்வது?
தொடர்ந்து வாருங்கள்.
@. கோமதி அரசு
ஆமாம். பாரதியின் படைப்புகள் பொருளாதார ரீதியாக அவரை உற்சாகப்படுத்தத் தவறி அவை தேசியமயமாக்கப் பட்டதும் இவர்-அவர் என்ற வேறுபாடின்றி சகலருக்கும் வாரி வழங்கியிருக்கின்றன. இன்றும் பாரதியின் படைப்புகள் தமிழர்களின் ஆதரவில் விற்பனையில் உச்சம் தான்.
@ ஶ்ரீராம்
சந்தோஷம் ஶ்ரீராம்.
Post a Comment