அது எப்படித்தான் அவளுக்கு விழிப்பு ஏற்பட்டதோ தெரியவில்லை. கரெக்டாக அந்த நேரத்திற்கு விழித்துக் கொண்டிருக்கிறாள்.
மெல்ல என் தோள் அசைக்கப்பட, "என்ன?.." என்றேன், அசுவாரஸ்யமாக, கொட்டாவியினூடே.
கிசுகிசு குரலில், "மணி நாலரைங்க.." என்றாள்.
"அதுக்கென்ன?"
"அவன் வர்ற நேரங்க..எப்படியோ எனக்கு 'டக்'ன்னு முழிப்பு வந்திடுத்துங்க.."
"அதெல்லாம் அனிச்சைசெயல். நேற்றைக்கு, அதுக்கு மொதநாள், இதே நேரத்துக்கு முழிச்சிண்டிருக்கேல்யோ, அதான் இன்னிக்கும்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "உஷ்--" என்று என் வாயைப் பொத்தினாள் உஷா.
"ரெண்டு நாள் தான் என்ன சொல்றான்னு கேட்காமத் தவறவிட்டாச்சு; இன்னிக்கானும் என்னன்னு உத்துக் கேளுங்க..லேசா எனக்கு குடுகுடுப்பை சத்தம் கேக்கறது. சாந்தி வீட்டு வாசல்லே இருக்கான்னு நெனைக்கிறேன்..இன்னும் ரெண்டு நிமிஷத்லே இங்கே வந்திடுவான்.."
உஷாவின் நெருங்கிய தோழி சாந்தி வீடு, எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு முன்னால் இருந்தது.
அங்கே தான் இருக்கான்..எஸ்.. இப்பொழுது எனக்கும் தெளிவா அந்த குடுகுடுப்பை சப்தம் கேட்டது. எங்கள் வீட்டுக்கு முன் வீட்டுக்கு வந்து விட்டான்.
எங்கள் வீட்டுப்படுக்கை அறை ரோடு பக்கம் பார்த்த மாதிரி இருந்தது. இந்த அறைக்கு வெளிப்பக்கம் ஒரு சின்ன திண்ணை. திண்ணையைத் தாண்டி ரோடு. அவ்வளவு தான்.
"என்ன செய்யட்டும், உஷா?.. ஜன்னல் கதவை லேசா தொறந்து பாக்கட்டுமா?.."
"நோ.." என்று அடிக்குரலில் அதிர்ந்தாள் அவள்."இந்த நேரத்லே அவனைப் பாக்கக்கூடாது..." அவள் குரலில் பதற்றம் மேலோங்கியிருந்தது. "அவன் சொன்னது பலிக்க வரம் வாங்கிண்டு, நேரே சுடுகாட்லேர்ந்து வர்றதா சொல்லுவாங்க.."
"எந்தக் காட்டிலேர்ந்து வந்தா என்ன?..இப்போ என்னை வேறு எழுப்பி.." எரிச்சலாக வந்தது எனக்கு. அந்த எரிச்சலுக்கு ஊடே இன்னொரு கொட்டாவி.
"உஷ்.. இதோ வந்திட்டாங்க, நம்ம வீட்டு வாசல்லேயே..என்ன சொல்றான்னிட்டு உத்துக் கேளுங்க..அது போது.." உஷா முடிக்கக்கூட இல்லை, லேசான ஆனால் உறுதியான குடுகுடுப்பை ஒலி ஈன ஸ்வரத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டு வந்தது.
தூக்கக் கலக்கம் போன இடம் தெரியவில்லை.
சடாரென்று நான் படுக்கையிலிருந்து எழுந்து விட்டேன். உஷா தடுத்தும் கேளாமல், படுக்கை அறையிலிருந்து வெளிவந்து, வாசல் பக்க மெயின் டோர் நோக்கி சத்தமில்லாமல் நகர்ந்து,கதவு பக்கம் காது வைத்து, அந்த குடுகுடுப்பைக்காரன் என்ன சொல்கிறான் என்று கேட்க முனைந்தேன்...
"நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது..." இது எல்லோரும் சொல்றது தான் என்று நினைக்கையிலேயே, தொடர்ந்து 'குடுகுடு'வென்று உடுக்கை ஒலி... தொடர்ந்து, அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க நான் முனைகையிலேயே, ஸ்பஷ்டமாக அவன் குரல் கேட்டது..."இந்த வூட்டு சாமிக்கு நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது..அம்மணி அரச மரம் சுத்த வேண்டாம்; அரசன் வரப் போறான் ஆறிரண்டு மாசத்திலே...நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.."
இதற்கு மேல் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்கும் ஆவலில் காதைத் தீட்டிக் கொண்டேன்.
'குடுகுடு' சப்தம் நிறுத்தி அவன் சொல்ல ஆரம்பித்தது தெளிவாக உள்பக்கம் எனக்குக் கேட்டது. "கச்சி மூதூர் கைலாசநாதனே..இச்செகத்து நாயகனே.. இடும்பை தீருமய்யா, உன் தயவாலே.."
மீண்டும் 'குடுகுடு'. ஒருநிமிடம் ஒலி நிறுத்தித் தொடர்ந்தான்: "ஐயிரண்டு திங்கள் அம்மணி அவனைச்சுமந்து..அழகான குழந்தை அய்யா பேர்சொல்ல...இது கைலாசநாதன் கருணை மறக்க வேண்டாம்..." தொடர்ந்து 'குடுகுடு' சப்தம். சற்று நேரத்தில் சப்தம் கொஞ்சமாகக் குறைந்து...
அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு தாண்டிவிட்டான் போலும்.
அந்த இருட்டிலும் முகம் பிரகாசிக்க படுக்கை அறைக்குத் திரும்பினேன். உள்ளுக்குள் கொப்பளிக்கும் உற்சாகம்.
உஷாவும் கதவு மூடிய ஜன்னல் பக்கமிருந்து வந்தது அந்த லேசான இருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது.
"என்ன நீயும் கேட்டயா,அவன் சொல்றதை?"
"ஆமாங்க..ரொம்ப சந்தோஷமா இருக்கு.."
அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொள்ளும் பொழுது அவள் உடல் படபடப்பை உணர்ந்தேன். "கூல்.." என்று அவளை ஆசுவாசப்படுத்தினேன்.
என் அணைப்பிற்கிடையே, "என்ன தெளிவாச் சொன்னான் கேட்டீங்களா?" என்று பரவசத்துடன் கேட்டாள்.
"எனக்கென்னவோ, அவன் சொன்னது அரைகுறையாகத் தான் கேட்டது" என்றேன், காது கவ்வி. அவன் சொல்லியதை அவள் சொல்லிக் கேட்க வேண்டுமெனற ஆசை.
"தெரியுமே,எனக்கு! முக்கியமான சமயத்லே கோட்டை விட்டு விடுவீங்கன்னு.."
"எல்லாம் நீ இருக்கும் தைர்யம் தான்..நீ தான் சொல்லேன் என்ன சொன்னானுட்டு."
என்னிடம் இருந்து லேசாக விலகி, என் மாரில் சுட்டுவிரலால் அழுத்தினாள்.."அய்யாவுக்கு அய்யாவைப் போலவே அழகான..."
"அழகான..?"
"க்குங்.." என்று சிணுங்கினாள். அந்த சிணுங்கலூடேயே,"குட்டிப்பாப்பா வந்துக் குதிக்கப் போகுதாம்.."என்று உஷா சொல்லி முடித்து வெட்கத்தில் என் கழுத்து கட்டிக்கொண்டாள்.
"அப்படியா சொன்னான், அவன்?.."
"பின்னே? நீங்க கேட்கலயா, அவன் சொன்னதை?" என்று ஏமாற்றம் காட்டினாள்.
"பின்னேவா? பின்னாடி என்ன?" என்று அப்பாவியாய் அவள் முதுகு திருப்பினேன்.
"ம்?..குத்தினேனா, பாரு.."என்று பொய்க்கோபத்தில் உஷா தன் வலக்கை குவித்து என் நெஞ்சு நோக்கிச் செலுத்துகையில், அவள் ரொம்பவும் குழைந்திருப்பதாக மனசுக்குப் பட்டது. போதாக்குறைக்கு அதிகாலைக் குளிர் வேறு கொஞ்சம் கூடவே உள்ளறையிலும் உரைத்து சிலிர்ப்பேற்படுத்தியது. போர்வையை இழுத்து மூடிக்கொள்கையில், உள் கதகதப்பும் உடலுக்கு இதமாக இருந்தது. எப்பொழுது தூங்கினேன் என்றே நினைவில்லை.
காலையில் எழுந்திருக்க முயற்சிக்கையிலேயே மணி எட்டுக்கு மேலாகிவிட்டது.
ஒலிநாடாவில் ஒலித்துக் கொண்டிருந்த சுப்ரபாதம் தான் விழிப்பேற்படுத்தியிருக்கிறது.
எழுந்து குளித்து விட்டு வருகையில், பூஜை அறையில் ஊதுபத்தி மணத்திற்கிடையே உஷா கைகுவித்து ஆண்டவனிடம் ஐக்கியமாகியிருந்தாள். தலையில் சுற்றியிருந்த டர்க்கிடவல், அவள் தலைக்குக் குளித்திருந்ததைத் தெரிவித்தது.
பல் விளக்கிக் குளித்து விட்டு வருகையில், உஷா புன்முறுவலுடன் எதிர்ப்பட்டாள்.
இன்றைக்கு வழக்கத்துக்கு மீறி அழகாகக் கண்களுக்குத் தென்பட்டாள். "டிபன் ரெடி. சாப்பிடறத்துக்கு முன்னாடி, நீங்களும் சாமி ரூம் போய் கும்பிட்டு வந்திடுங்க" என்றாள்.
"ததாஸ்து.." என்று நானும் பூஜை அறைக்குள் நுழைந்தேன். வழக்கமாகச் சொல்லும் தினப்படி ஸ்லோகங்களைச் சொல்லி, கும்பிட்டு, தலைநிமிறும் போது தான், நிவேதனமாக வைத்திருந்த பழத்தட்டில், இரண்டாக மடிக்கப்பட்டிருந்த அந்த பேப்பரைப் பார்த்தேன்.
'என்னவாயிருக்கும்' என்று மனசு நினைத்தாலும் உஷாவிடம் கேட்டுக்கொண்டால் போயிற்று என்று பூஜை அறைவிட்டு வெளிவந்தேன்.
டிபன் சாப்பிடும் பொழுது உஷாவே சொன்னாள்: "காலைலே எழுந்ததும் முதல் வேலை என்ன தெரியுமா?.. நேத்து ராத்திரி அந்த குடுகுடுப்பாண்டி சொன்னது அத்தனையும் வரிக்கு வரி ஞாபகப்படுத்திண்டு, அட்சரம் பிசகாம அப்பிடியே ஒரு பேப்பரில் எழுதிட்டேன்..அவன் சொன்னது மறக்காதுன்னாலும் பின்னாடி எதுவும் தப்பு நேர்ந்திடக்கூடாது, பாருங்கள்"
"எழுதி, பூஜை ரூம்லேயும் வைத்து ஆண்டவன் கிட்டேயும் இத்தனை நாள் மனசிலே வேண்டிண்டதை இப்போ எழுத்து ரூபமா எழுதி, உன் கோரிக்கையை சமர்ப்பித்து விட்டேயாக்கும்." என்று சிரித்தேன்.
"க்குங்.." குஷிவந்து விட்டால் சொல்லும் அந்த 'க்குங்'கைச் சொல்லி, கன்னம் குழிவிழச் சிரித்தாள் உஷா.

இடையே இரண்டு மாதங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை.
ஒருநாள் உஷாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. "ஒண்ணுமில்லை; சரியாய் போயிடும்" என்று சொல்லச் சொல்ல மறுத்தவளை வற்புறுத்தி டாக்டரிடம் கூட்டிப்போனேன்.
டாக்டர் சொன்ன சேதி கேட்டு, ரெண்டு பேரும் ரெக்கை கட்டிக்கொண்டுப் பறந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.
உஷாவின் உயிருள் இன்னொரு உயிர் வளர்கிற செய்தியை போன்போட்டு அம்மாவுக்குச் சொன்னேன். செய்தி கேட்டு தம்பி வீட்டுக்குப் போயிருந்த அம்மா முகம் நிறைய சந்தோஷத்தைப் பூசிக்கொண்டு ஓடோடி வந்து விட்டாள்.
தலைக்குனிந்து நமஸ்காரம் பண்ணின மருமகளை, கைதூக்கி வாரி அணைத்துக் கொண்டாள்.
"சந்தோஷமா இருக்குடி,அம்மா..எனக்கொரு பேரனையோ, பேத்தியையோ பெத்துக் குடுத்திட்டியானா, அதுபோதும்.." என்று மனங்குளிர ஆசிர்வதித்தாள். உஷாவுக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய்விட்டது. தலைகுனிந்து 'க்குங்.'.
"உஷா..எந்த பயமும் நீ மனசுலே வைச்சிக்க வேண்டாம்..அதான் நான் வந்திட்டேன்லே?" என்று ஆதுரத்துடன் சொன்ன அம்மாவைக்காண எனக்குப் பெருமையாக இருந்தது.
குடுகுடுப்பைக்காரன் விஷயத்தை அம்மாவிடம் சொன்னபொழுது ஆச்சரியப்பட்டாள். "அன்னிக்கு காலம்பற இப்படிச்சொன்னானென்று சொன்னியே?..அப்புறம் அவன் வந்தானா?" என்று ஆர்வத்தோடு விசாரித்தாள்.
"இல்லேம்மா..பொதுவா குடுகுடுப்பைகாரர்களெல்லாம் நாடோடிகள் மாதிரி ஒருஊர்ன்னு நிலையில்லாம, ஊர் ஊராச் சுத்துவாங்க..எந்த ஊருக்குப் போனாலும், நாலைஞ்சு பேர்ன்னு ஒரேஇடத்திலேதான் தங்கியிருந்து, தங்களுக்குள்ளே தெருதெருவா பிரிச்சிக்கிட்டு குறிசொல்லப் போவாங்கன்னு எங்க ஆபிஸ்லே ஒருத்தர் சொன்னார். எங்கேயாவது அவனைப்பிடிச்சு, அவன் சொன்ன நல்ல சேதிக்கு ஒரு நூறு ரூபாவது கொடுத்திடணும்னு இதே வேலையா அலைஞ்சேன், அம்மா!.. எங்கேயும் தட்டுப்படலே..இவங்களைப் பத்தி விஷயம் தெரிந்த ஒருத்தர், இந்த மாசம் அவங்க வெளிலேயே வரமாட்டாங்களேன்னு வேறு சொன்னார்..எனக்கு ஒண்ணுமே புரியலை, அம்மா.."
"நானும் அதான் நெனைச்சேண்டா..எல்லாம் அந்த கைலாசநாதர் கருணைதாம்பா..நாம்ப ஒருதடவை காஞ்சீபுரம் போய், அந்த கைலாசநாதர் சந்நதிலே வேண்டிண்டு, கோயில் உண்டில்லே, அந்தப் பணத்தைச் சேர்த்திடலாம்..நீ கவலைப்படாதே.." என்று தேற்றி, என் மனக்கவலைக்கு ஒரு மருந்தும் சொன்னாள். அம்மாவின் யோசனை எனக்கும் ஒருவிதத்தில் நிம்மதி ஏற்படுத்தியது.
(வளரும்)
6 comments:
கதை நல்லா இருக்கு ஜீவி.. இப்பவும் இந்த மாதிரி குடுகுடுப்பைக்காரங்க இருக்காங்களா???.. ஆனா எனக்கென்னமோ இவங்களைப்பார்த்தா ஒரு எதிர்மறை உணர்வுதான் வரும் (தப்புத்தான் ஆனா ஒத்துகணும் இல்லையா)
அருமையா தொடங்கி இருக்கு. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்!
கிருத்திகா said...
//கதை நல்லா இருக்கு ஜீவி.. இப்பவும் இந்த மாதிரி குடுகுடுப்பைக்காரங்க இருக்காங்களா???..//
இருக்காங்க, கிருத்திகா!
கிராமமும் இல்லாமல், பெருநகரமாகவும் இல்லாத பகுதிகளில் இன்றும் தங்கள் வாழ்க்கைப்பாட்டிற்காக குறிசொல்லி வாழ்ந்து வருகிறார்கள்.
பொலபொலவென்று விடிவற்கு முன்னாடியான உஷத் காலத்தில் வீடுவீடாக வாசல் நின்று நல்லனவையாக நான்கு சொற்களைச் சொல்லிவிட்டுச் செல்வார்கள்..பிறகு பத்துமணி வாக்கில் வந்து கொடுத்ததை வாங்கிச் செல்வார்கள்.
காலை நேரத்தில் நல்ல சொற்களை செவிமடுத்தால், நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டு நல்லவை நடக்கும் என்பது உளவியல் ரீதியான உண்மையும் கூட.
தொடர்ந்து படிக்கும் பொழுது நிகழ்ச்சிகளின் தொடர்புகள் புரியும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
ஜீவா (Jeeva Venkataraman) said...
//அருமையா தொடங்கி இருக்கு. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்!//
வாருங்கள், ஜீவா!
பொதுவாக சிறுகதைகளை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பதே சுகம் தரும். இருந்தாலும் படிக்கும் வசதிக்காக துண்டு துண்டாக எழுத நேரிட்டது.
இன்னும் இரண்டு மூன்று பகுதிகளில் முடித்து விடுகிறேன்.
வருகைக்கும் காத்திருத்தலுக்கும் மிக்க நன்றி.
இப்பத் தான் படிக்க வாய்ப்பு கிட்டியது. தொடர்ச்சியா படிச்சுக்கிட்டு வர்றேன். :-)
குமரன் (Kumaran) said...
//இப்பத் தான் படிக்க வாய்ப்பு கிட்டியது. தொடர்ச்சியா படிச்சுக்கிட்டு வர்றேன். :-)//
அப்படியா, குமரன்!
உங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து படித்து விட்டுச் சொல்லுங்கள்.
Post a Comment