'மனவாசம்' வார இதழ் வெள்ளிக்கிழமை கடைகளுக்கு வந்து விடும். வியாழக்கிழமை மதியமே வெள்ளிக்கிழமைக்கான டெலிவரிக்கு ஐம்பது இதழ்கள் கொண்ட பண்டல்களாக பத்திரிகைக் கட்டுகள் தயாராகிவிடும். டெஸ்பாட்ச் இலாகா தனியாக இருந்தது. ரங்கராஜன் தலைமையில் ஆறு பேர்கள். ஆறும் ஆறு சுறுசுறு எறும்புகள். விவரங்கள் விரல் நுனியில் இருக்கும். கணினி என்ட்ரி பார்த்து செக் பண்ணுவதெல்லாம் உபசாந்திக்கு. இந்த வேகம் இல்லையென்றால் பத்திரிகை தமிழகத்தில் வெள்ளிக்கிழமை எந்த நேரத்திற்குக் கடைகளில் கிடைக்கிறதோ, அதே மணிக்கு தில்லியிலும் திருவனந்தபுரத்திலும் கிடைக்கும். அந்த அளவுக்கு நெட் ஒர்க் திறமை.
டெஸ்பாட்ச் ரங்கராஜனுக்கு இணையாக விளம்பர இலாகா அய்யாசாமி. பத்திரிகையின் இந்த ஜீவநாடிப் பிரதேசம் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். 'மனவாசம்' இதழ் முன்பக்க பின்பக்க அட்டை விளம்பரங்களுக்கு ஆறேழு மாசங்களுக்கு முன்னாலேயே பதிவு என்று திமிலோகப்படும். ஒரு துண்டு புகையிலையை வாயில் அதக்கிக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஈடு கொடுப்பதில் அய்யாசாமி கில்லாடி. எந்த நெருக்கடியிலும் அசால்ட்டாக தீர்க்கமான முடிவெடுக்கும் இவர் சாமர்த்தியம் ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும். அந்த அவரது சாமர்த்தியத்தை பத்திரிகைக்குக் கிடைத்த அஸெட் என்பார் ஆசிரியர்.
"நீங்கள் எடுத்த முடிவுகளில் மிகவும் சாமர்த்தியமானது என்று எதை நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று ஆபீஸ் கேண்டினில் அய்யாசாமி குஷாலாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கையில் மோகன் ஒரு நாள் அவரிடம் கேட்டான்.
"என் இருபத்தாறாவது வயசில் நான் எடுத்த முடிவு.." என்று அவனைப் பார்த்து கண் சிமிட்டினார் அய்யாசாமி. "ரொம்ப நெருக்கடியான நேரத்தில் எடுத்த முடிவு அது. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தத்தளித்த நேரத்தில் எடுத்த முடிவு. கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று அப்போ நான் எடுத்த முடிவு இப்பவும் நினைத்துப் பார்க்க முடியாத சுதந்தரத்தையும் சந்தோஷத்தையும் எனக்குக் கொடுத்திருக்கிறது. என் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியக்காரணம் நான் திருமணம் செய்து கொள்ளாதது தான்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
மோகன் அவரை விநோதமாகப் பார்த்தான். இதுவரை இப்படி யார் சொல்லியும் அவன் கேட்டதில்லை என்பது அது பற்றி இன்னும் அவரிடம் கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு..
கேட்டான்: "சார். நான் கல்யாணம் ஆகாதவன். அட்வைஸ் மாதிரி கேக்கறேன். நானும் உங்களை மாதிரி இருந்திடலாம்ன்னு பாக்கறேன்."
"நோ.. நோ.." என்று அவசரமாக இடைமறித்தார் அய்யாசாமி. "வாழ்க்கையின் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி. எனக்கு சரிப்பட்டது உங்களுக்கும் சரிப்படும்ன்னு சொல்ல முடியாது. எந்த முடிவும் உங்கள் அனுபவத்திற்கு ஏற்ப நீங்களா எடுக்கற முடிவா இருக்கணும்." என்று சொன்னவர் ஒரு வினாடி கழித்து, "எதுக்காக நீங்கள் அப்படி ஒரு முடிவை எடுக்கணும்?" என்றார்.
"நீங்க சொன்ன காரணம் தான் சார். அந்த சுதந்திரமும் சந்தோஷமும். கல்யாணம் ஆனா அதெல்லாம் பறிபோய்டும் போல இருக்கு.."
"மோகன், நான் சொன்ன காரணம் எனக்கு சரிப்பட்டு வரலாம். உங்களுக்கும் அப்படின்னு இருக்காமலும் இருக்கலாம் இல்லியா? திருமணத்திற்கு பிறகும் உங்கள் சுதந்தரமும், சந்தோஷமும் நிச்சயப்படுத்தப்படலாம், இல்லியா?"
".............................."
"உங்கள் கதைகள் சிலதைப் படிச்சிருக்கேன். படிச்சு உங்க பேரையும் ஞாபகத்திலே வைச்சிண்டிருக்கேன். உங்கள் எழுத்துக்களைப் பார்த்தால் அப்படித் தெரியலேயே! உங்க எழுத்துக்கள்லே சிருங்கார ரசம் கொப்பளிச்சு வருமே! அட,ராமா! அத்தனையும் கற்பனையா?.. அப்கோர்ஸ், நீங்க சொல்லித் தான் தெரியும்.. நான் என்னடான்னா, நீங்கள் கல்யாணம் ஆகி எல்லாத்தையும் ரசிச்சுச் சுவைத்தவர்ன்னு நெனைச்சேன்.." என்று ஏதோ ஜோக்கை ரசித்துச் சிரிக்கறவர் மாதிரி அய்யாசாமி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
மோகனும் சிரித்தான். "தப்பா நினைக்கக் கூடாது, சார்! நீங்க இந்த பத்திரிகைகளுக்கு எழுதறவங்க சமாச்சாரத்தில் ரொம்ப அனுபவப்பட்டவர். அந்த அடிப்படைலே கேக்கறேன். எழுத்தாளர்கள் மனசை அவங்க எழுத்தைக் கொண்டு கண்டு பிடிச்சிடலாம்ங்கறீங்க?.."
பகபகவென்று சிரித்தார் அய்யாசாமி. "என் அனுபவத்லே பார்த்திட்டேன். கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிடலாம்ன்னே சொல்லலாம். ஆனா அப்படிக் கண்டுபிடிக்கறதுக்கு வாசிக்கறவனுக்கு கூர்மையான ரசனை வேணும். என்ன ரசனை இருந்தாலும், இதிலே பொழுது போக்குக்காக எழுதறவங்களைப் பத்தி ஒண்ணும் சொல்ல முடியாது. தன்னையே அவங்களுக்குத் தெரியாது. தனக்காக அவங்க எழுதறதில்லை; மத்தவங்களுக்காக ஆனதாலே அவங்க எழுத்தைப் போலவே பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரியே அவங்களும் இருப்பாங்க. ஆனா, தீவிரமா எழுதவறங்க, கொள்கைப் பிடிப்போட எழுதறவங்க, இவங்கள்லாம் தாங்க நினைக்கறதை தாங்க எழுதறதிலே சொல்லணும்ங்கறத்துக்காக எழுதறதாலே, அவங்க எழுத்திலே அவங்க இருக்கறதை பாக்கலாம். இந்தக் கணக்கு, அநேகமா தப்பினதில்லே."
மோகன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தான். எவ்வளவு ஆழமாக எல்லாவற்றையும் கவனித்திருக்கிறார் என்று அவனுக்குத் தோன்றியது. தும்பைப்பூ கதர் வேட்டியும், அரைக்கை கதர்சட்டையுமாய் வெளிப்பார்வை க்கு வெகு சாதாரணம் தான் அய்யாசாமி. தனக்கு நேரடியா சம்பந்தப்படாத விஷயங்களையும் எவ்வளவு ஆர்வத்துடன் கவனித்திருக்கிறார் என்று தோன்றியது. அதற்குக் காரணம் கூட, அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதாகத்தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டான்.
'இந்த எழுத்துத் துறையில் பெரிய ஆளாக வர வேண்டும்; இலட்சிய எழுத்தாளர்களைப் போல தன் ஆசைகள், அபிலாஷைகள், ஆர்வங்கள், எண்ணங்கள் எல்லாமும் தன் எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும்' என்று மோகன் எண்ணிக் கொண்டான். தானே தன் எழுத்தாக மாற வேண்டும் என்கிற அதீத ஆசை அவன் மனசுக்குள் முளைவிடுவதை அந்த ஷணம் அவனே உணருகிற மாதிரி இருந்தது.
ஆசிரியர் இலாகாவில் அவன் நுழைந்த பொழுது, "உன்னை எங்கேலாம் தேடிண்டிருந்தேன், தெரியுமா?" என்றார் ஜீ.
"கேண்டினுக்குப் போயிருந்தேன், சார்.. விளம்பர இலாகா அய்யாசாமி சாரோட பேசிண்டிருந்தேன். நேரம் போனது தெரிலே. என்ன சார் விஷயம்?" என்றான் மோகன்.
"யார், அந்த பீஷ்மர் கிட்டேயா பேசிண்டிருந்தே?" என்றார் ஜீ. ஜீயின் குரலில்
அய்யாசாமி அறிந்திராத ரகசியங்களெல்லாம் தான் அறிந்திருந்து விதவிதமாக அவற்றை ரசித்துப் பார்த்து கரைகண்டு விட்ட மாதிரியான சந்தோஷம் தெரிந்தது.
அதைப் பொருட்படுத்தாதவனாய், "என்னமானும் அவசர விஷயமா?என்னைத் தேடினேன் என்றீர்களே?" என்றான் மோகன்.
"130 பக்க பத்திரிகைலே ஆசிரியர் உனக்கும் ஒரு பாரம் ஒதுக்கச் சொல்லிட்டார். இது அடுத்த இதழுக்கு அடுத்த இதழ்லேந்து அமுலுக்கு வர்றது. வழக்கமான உன் தொடர்கதை சித்திரத்தையும் சேர்த்து எட்டுப் பக்கம் வந்ததுன்னா, மீதிப் பக்கங்களையும் நிரப்புவதற்கு நீ தான் பொறுப்பு. பல சமயங்களில் நீயே உன் பக்கங்கள்லே சிறுகதை ஏதாவது எழுதும் படியாவும் இருக்கும்ங்கறதாலே, தொடர்கதைக்குப் போட்ற உன் பேரையே, சிறுகதைக்கும் போட்டா நன்னா இருக்காதுங்கறதுனாலே முன்னாடி நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி ஒரு புனைப்பெயர் வைச்சிண்டாக வேண்டிய தேவை உனக்கு இப்போ வர்றது..என்ன புனைப்பெயர் வைச்சிக்கறேங்கறதை தீர்மானம் பண்ணிடு. அடுத்தாப்லே வர்ற இதழ்கள்லே அதை உபயோகிச்சிக்கலாம். அதுக்காகத்தான் தேடினேன். இப்போவே உங்கிட்டே சொல்லிட்டா நீயும் ஒரு புனைப்பெயரை தேர்ந்தெடுத்து வைச்சிருப்பே, இல்லியா?"
இந்த புனைப்பெயர் விஷயம் தன்னை விடாது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டான் மோகன். 'என்ன புனைப்பெயர் வைச்சிக்கலாம் என்று யோசித்த பொழுது, சற்று முன் ஜீ உச்சரிச்ச 'பீஷ்மர்'ங்கற பெயரையே புனைப்பெயராய் வைச்சிக்கலாமா'ன்னு தோன்றியது.. அந்தப் பெயர் வெறும் பெயர் என்பதைத் தாண்டி என்னத்தையோ சொல்ற மாதிரி தோன்றியதால், அந்தப் பெயரைத் தவிர்த்தான்.. 'வேறே பெயர் என்னவானும்' என்று சிந்தனை ஓடிய போது...
'ஐயே! ராஜான்னு நெனைப்போ?'ன்னு தன் கதையில் பாண்டியனைப் பார்த்து மங்கை சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்து, இந்த 'ராஜா' பெயரே நன்றாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.. அப்படித் தோன்றியதும் 'மங்கை! தேங்க்ஸ் மங்கை!' என்று அவனறியாமல் முணுமுணுத்துக் கொண்ட பொழுது, தன் கதாபாத்திரம் பாண்டியனாகவே ஆகிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றி, 'குபுக்'கென்று சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
"என்னப்பா, மோகன்! உனக்கு நீயே சிரிச்சிக்கறே?.. சொல்லிட்டுச் சிரிப்பா.. நானும் உன்னோட சேர்ந்திப்பேன்லே?" என்றார் ஜீ, அவன் முகப்போக்கை ரசித்தபடி.
"ஒண்ணுமில்லே, சார்! எனக்குள்ளே ஏதோ நினைப்பு.." என்று இழுத்தான்.
"தனக்குத் தானே சிரிச்சிக்கணும்ன்னா, அது பெர்ஸனலாய்த் தான் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்!" என்றார் ஜீ, பொடிடப்பாவில் இரு விரல்களால் தாளம் போட்டபடி. "உன் யோசனைக்கு நடுநடுவே உன் புனைப்பெயரையும் யோசிச்சு வைப்பா.. திடுதிப்புனு ஆசிரியர் கேட்டா சொல்லணும்.." என்றார்.
மோகன் ஜீயைப் பார்த்து மலர்ச்சியுடன் புன்னகைத்தான். "புனைப்பெயர் தானே?.. தீர்மானம் பண்ணியாச்சு, சார்.."
"என்ன அதுக்குள்ளையா?.. அவசரமில்லைப்பா.. மெதுவா.."
"அப்புறம் மாறிப்போகலாம். அதனாலே இப்பவே சொல்லிடறேன், சார்!"
"சரி. சொல்லு.." என்று ஆவலுடன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார் ஜீ.
"ராஜா.." என்றான் மோகன். "நல்லாயிருக்கா, சார்?"
"ஃபைன். ஜம்முனு இருக்கு.. " என்றார் ஜீ. "முதன் முதலா இந்தப் பெயர்லே எழுதற சிறுகதையும் ஜம்முனு இருக்கட்டும்.. யார் இந்த ராஜான்னு நம்ம வாசகர்கள் கேக்கற மாதிரி 'ராஜா' பேர்லே எழுதற எல்லாத்திலேயும் தனி கவனம் செலுத்து. மோகன்ங்கற பேர் தொடர்கதைக்கு மட்டும் தான். ராஜாங்கற பேர் சிறுகதைகளுக்கு. ராஜாக்கும் மோகனுக்கும் எழுத்து நடைலே வித்தியாசம் இருக்கற மாதிரி இருக்கணும். ரெட்டை குதிரை சவாரி மாதிரி ஆரம்பத்லே கொஞ்சம் தடுமாற்றமாத்தான் இருக்கும். அதுவே ஒரு த்ரில் தான்; போகப்போக எந்தக் குதிரையை அழுத்தி உசுப்பேத்தணும், எந்தக் குதிரையை தடவிக் கொடுக்கணும்ன்னு தெரிஞ்சிடும்.. ஜமாய்!" என்றார்.
"அனுபவிச்சு சொல்றீங்களே, சார்?.. இந்த மாதிரி நீங்க நிறைய ஜமாய்ச்சிருக்கீங்களோ?.."
"அதையேன் கேக்கறே.. ஒரு காலத்லே ஆறு பேர்லே வாசகர் மத்திலே உலாவியிருக்கேன். போதாக்குறைக்கு அதுலே ரெண்டு பெண்கள் பேர். அந்த ரெண்டும் ஆசிரியர் வைச்சது தான். ஆன்மீகம், அமானுஷ்யம், த்ரில், காதல், காதல்+ஒரு மாதிரி, நகைச்சுவைன்னு என்னத்தைச் சொல்றது, போ! என்னன்ன பேர்லே எழுதினேன்னு இப்போ நான் சொன்னாலும், 'அட நீங்களா, அது'ன்னு ஆச்சரியப்படுவே! இன்னிக்குத் தேதி வரை அந்த ஆறு பேர் ரகசியத்தைக் கட்டிக் காப்பாத்திண்டு வர்றேனாக்கும்.." என்றார் ஜீ.
மோகன் அவரை பிரமிப்புடன் பார்த்தான். அந்த பிரமிப்பில் மரியாதையும் கலந்து கொண்டது.
(வளரும்)

22 comments:
அட??? நம்ம ரா.கி.ர. நினைவுக்கு வராரே. கூடவே ஜ.ரா.சுந்தரேசனும் நினைவில் வரார். கதை குழப்பம் இல்லாமல் தெளிவான பாதையில் நடை போடுகிறது. கூடவே பத்திரிகை அலுவலகத்தின் வேலைகள் குறித்த தகவல்களையும் கதைப்போக்கிற்கேற்றாற்போல் சேர்த்திருப்பதும் சிறப்பு.
பொழுது போக்குக்காக எழுதறவங்களைப் பத்தி ஒண்ணும் சொல்ல முடியாது. தன்னையே அவங்களுக்குத் தெரியாது. தனக்காக அவங்க எழுதறதில்லை; மத்தவங்களுக்காக ஆனதாலே அவங்க எழுத்தைப் போலவே பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரியே அவங்களும் இருப்பாங்க. ஆனா, தீவிரமா எழுதவறங்க, கொள்கைப் பிடிப்போட எழுதறவங்க, இவங்கள்லாம் தாங்க நினைக்கறதை தாங்க எழுதறதிலே சொல்லணும்ங்கறத்துக்காக எழுதறதாலே, அவங்க எழுத்திலே அவங்க இருக்கறதை பாக்கலாம். இந்தக் கணக்கு, அநேகமா தப்பினதில்லே."
ஆழமான ஆர்வமான கவனிப்பு ஆச்சரியப்படவைத்தது..!
ஜீ படிக்கும்போது எனக்கும் ரா கி ர தான் நினைவுக்கு வந்தார். எழுத்தை வைத்து எழுத்தாளனின் குணத்தைக் கணிப்பது சுவாரஸ்யமான வேலை. ஆனால் எழுத்தாளனை நெருக்கமாக - பெர்சனலாக - அறியாத வாசகனுக்கு இதில் அக்கறை இருக்காது. அவனுக்கு எழுத்து போதும்.
சிறுவயதில் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியபோது வேறு வேறு பெயர்களில் இரண்டு மூன்று விஷயங்கள் நானே எழுதி 'வெளியிட்ட'போது குமுதம் போன்ற பிரபலப் பத்திரிகைகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதுவதாகத்தான் நினைத்திருந்தேன். அப்புறம்தான் பிரபலப் பத்தரிகைகளில் கூட இதே வேலைதான் என்று தெரிந்தது!
ஆன்மீகம், அமானுஷ்யம், த்ரில், காதல், காதல்+ஒரு மாதிரி, நகைச்சுவைன்னு என்னத்தைச் சொல்றது, போ! என்னன்ன பேர்லே எழுதினேன்னு இப்போ நான் சொன்னாலும், 'அட நீங்களா, அது'ன்னு ஆச்சரியப்படுவே//
புஷ்பா தங்கதுரை என்ற எழுத்தாளர் இப்படி பெண் பெயரில் காதல், திரில், அமானுஷ்யம் எழுதினார், ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீகம் எழுதினார் இல்லையா?
தேவன், பரணீதரன் எல்லாம் வேறு வேறு பெயரில் எழுதினார்கள்.
உங்கள் கதை உள்ளே கதை உத்தி, நிறைய பத்திரிக்கைதுறைப் பற்றிய செய்திகள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது.
//இந்த வேகம் இல்லையென்றால் பத்திரிகை தமிழகத்தில் வெள்ளிக்கிழமை..
intha variyil ennavo niraduraapula irukku.
raajaa rahasiyam inga varathukku ange setupaa? very nice.
@ Geetha Samhasivam
ஆறு புனைப்பெயர்கள் என்றதும் அமரர் ரா.கி.ர. நினைவுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. அநியாயம்!லைட்ஸ் ஆன் வினோத் கூட ரா.கி.ரங்கராஜன் தான் என்று ஒருகாலத்தில் தெரியவந்த போது அசந்தே போனேன்.
நகைச்சுவை என்றதினால்,ஜ.ரா.சு.வும் கூடவே நினைவுக்கு வந்திருக்கிறார். எனக்கு ஜராசு என்றதும் உடனே ஜலகண்டாபுரம் ஞாபகத்துக்கு வரும். அப்புறம் அவரது 'பாசாங்கு' குறுநாவல். அற்புதமான சிறுகதை எழுத்தாளர். கடைசியில் அப்புசாமி, சீதாபாட்டி தான் பிரபலத்திற்குக் காரணம் என்பது விசித்திரமான தமிழ் எழுத்துலக சித்தாந்தம்!
ரா.கி.ர.வின் நகைச்சுவை படித்தோமோ, பட்டுனு சிரித்தோமா ரகம் இல்லை. கொஞ்சம் அழுத்தமானது. புன்முறுவல் ரேஞ்சைத் தாண்டாது. என்ன சொல்கிறீர்கள்?..
இந்த மாதிரி ஒன்றைப் படித்ததும் இன்னொன்று நினைவுக்கு வருகிற மாதிரி இந்தக் கதையில் நிறைய வரும். எனக்கென்னடாவென்றால்,
மங்கை இன்னும் உங்கள் நினைவு களைக் கிளறவில்லையே என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
அடுத்த அத்தியாயம் வரை தான் கெடு.
இப்பவே சொல்லிட்டேன். :))
@ இராஜராஜேஸ்வரி
நீங்கள் இந்த வரிகளை எடுத்துக்காட்டிச் சொன்னது, எழுத்தில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைச் சொல்கிறது.
இந்த ஈடுபாடு தான் பார்த்து பார்த்து விவரங்களைக் கோர்த்து அழகுபடுத்தி சளைக்காது எழுதின ஆயிரம் பதிவுகளின் அடிநாதம்; அதற்கான வித்து. நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி கூட எழுதியிருக்கிறீர்களே!
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, மேடம்.
@ ஸ்ரீராம்
என்ன ஸ்ரீராம்! இப்போத்தானா அவர் நினைவுக்கு வந்தார்?.. 'வைதேகி' பற்றிச் சொல்லும் பொழுதே சொல்லி விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
//ஆனால் எழுத்தாளனை நெருக்கமாக - பெர்சனலாக - அறியாத வாசகனுக்கு இதில் அக்கறை இருக்காது. அவனுக்கு எழுத்து போதும்.//
அப்படியா சொல்கிறீர்கள்?.. எழுத்து போதும் என்று இருந்து விட முடியும்?
பெர்ஸனலாய் வேண்டாம், அந்த எழுத்தை நம்மை ஆகர்ஷிக்கற மாதிரி எழுதின அந்த ஆள் யார்ன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் கூட வராது என்கிறீர்கள்?.. எழுத்து விளைவிக்கும் தேடல் இல்லையா, இது?.. படித்து முடித்ததும், "ச்சே! பிச்சு உதறிட்டான்யா!" என்று சிலாகித்து புத்தகத்தை விசிறியடித்து விட்டு படித்ததை சுத்தமாக மனசிலிருந்து அலம்பி விட்டுவிட முடியும் என்றா சொல்கிறீர்கள்?.. படித்ததை மறக்காமல் நினைவில் கொண்டிருப்பது தான், அதை படைத்தவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலின் ஆரம்ப்ப்படி. வியாபார ரீதியில் இல்லாத அபிமானங்கள் அத்தனையுமே ஆசிர்வதிக்கப்பட்டவை.
@ யாரோ
//"யார், அந்த பீஷ்மர் கிட்டேயா பேசிண்டிருந்தே?" என்றார் ஜீ. ஜீயின் குரலில் அய்யாசாமி அறிந்திராத ரகசியங்களெல்லாம் தான் அறிந்திருந்து விதவிதமாக அவற்றை ரசித்துப் பார்த்து கரைகண்டு விட்ட மாதிரியான சந்தோஷம் தெரிந்தது.//
//அதனால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாரா? அவர் கதை வேறு இதில் வருமா?.. //
இல்லீங்க.. அய்யாசாமி 'மனவாசம்' பத்திரிகை விளம்பர இலாகா தலைமைப் பொறுப்போடு சரி. அவர் ஒரு 'ஆல்ரவுண்ட்' ரசிகர். அவ்வளவு தான்.
'யார் அந்த பீஷ்மர் கிட்டேயா பேசிண்டிருந்தே?" என்று அய்யாசாமியைக் குறிப்பிட்டு மோகனைக் கேட்டவர் ஜீ.
ஒரு கட்டை பிரம்மச்சாரி அறிந்திராத ரகசியங்கள் எல்லாம் திருமணம் ஆன தனக்கு அத்துபடி ஆகியிருப்பதான சந்தோஷம் அவர் குரலில் தெரிந்தது. அவ்வளவு தான்.
//அவங்க எழுத்திலே அவங்க இருக்கறதை பாக்கலாம்.//
எழுதுபவர்களின் தனிப்பட்ட குணங்களை ஆராய மாட்டார்கள் என்ற அர்த்தத்திலேயே நானும் சொன்னேன்! எழுத்து பிடித்து விட்டது என்றால் அதை அசைபோடாமலிருக்க முடியுமா?! :))))
@ கோமதி அரசு
//ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீகம் எழுதினார் இல்லையா? //
அவர் இயற்பெயர் அது தான். 'திருவரங்கன் உலா' தொடரைப் படித்ததினால், ஆன்மீகம் எழுதினார் என்று சொல்கிறீர்கள் போலிருக்கு.
@ கோமதி அரசு
//உங்கள் கதை உள்ளே கதை உத்தி, நிறைய பத்திரிக்கைதுறைப் பற்றிய செய்திகள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது.//
வாங்க, கோமதிம்மா.
'கதை உள்ளே கதை உத்தி' என்று நீங்கள் சொல்லியிருப்பதை படித்து விட்டு, 'மனவாசம்' பத்திரிகையில் , 'ராஜா' பெயரில் மோகன் எழுதவிருக் கிற முதல் சிறுகதையையும் இந்தத் தொடரிலேயே வெளியிட்டு விட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். 'கதை குழப்பம் இல்லாமல் தெளிவான் பாதையில் நடை போடுகிறது' என்று இப்பத் தான் கீதாம்மா சொல்லியிருக்காங்க. அவங்க கருத்துக்கு பங்கம் விளைவிப்பதாக போய்விடுமோ?.. எப்படியிருக்கும்?.. நீங்க தான் சொல்லுங்களேன்.
@ அப்பாதுரை (1)
வாங்க, அப்பாஜி!
'தமிழகத்தில் வெள்ளிக்கிழமை எந்த நேரத்திற்கு கடைகளில் கிடைக்கிறதோ, அதே நேரத்திற்கு' என்று எழுதியிருந் தால் அந்த நெருடல்
இருந்திருக்காதோ?.. 'நேரம்' மணியாகியிருக்கிறது; அவ்வளவு தான்.
நீங்கள் வெளிப்பட நிறைய இடங்கள் இருக்கையில், இந்த நெருடல் சந்தில் ஏன் மாட்டிக் கொண்டீர்கள்?..
@ அப்பாஜி (2)
//raajaa rahasiyam inga varathukku ange setupaa? very nice.//
இங்கே வர்றதுக்கு அங்கே இல்லை. அங்கே வந்ததினால் தான் இங்கே. இன்னும் சில இடங்களிலும் வர வேண்டும். ஒரு உளவியல் சோதனைக்கு உட்படுத்திப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
மனவாசம்' பத்திரிகையில் , 'ராஜா' பெயரில் மோகன் எழுதவிருக் கிற முதல் சிறுகதையையும் இந்தத் தொடரிலேயே வெளியிட்டு விட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். '//
ஒன்றால் ஒன்று கேடாமல் பார்த்துக் கொள்ளும் சமர்த்தர் அல்லவா நீங்கள்!
சிறுகதை படிக்க ஆவல்.
எழுத்தாளர் மனசை அவர் எழுதும் எழுத்துக்களைக் கொண்டு கண்டு பிடிக்க முடியுமோ என்னவோ, ஆனால் சில குணாதிசயங்களைக் கண்டு கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். புனைப் பெயரில் எழுதுபவர்கள் ஏதோ காரணத்துக்காக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள பயப்படுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரபலங்கள் பெயரை மாற்றி ஒரு முகமூடி போட்டு எழுதுவதும் ஒருவித ஏமாற்றுவேலைதானே.
ஸ்ரீ வேணுகோபாலனுக்கு "புஷ்பா தங்கதுரை" என்ற நாமகரணத்தில் கதைகளை எழுத தூண்டியது அமரர் சாவி தான். பல ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த உண்மை வெளியே தெரிய வந்தது. ஒரு பேட்டியில் "ஏன் இப்படி வெவ்வேறு பெயர்களில் எழுதுகிறீர்கள்" என்று அவரிடம் கேட்டதற்கு அற்புதமாக ஒரு பதிலை சொன்னார். "என்னுடைய வயிற்று பசிக்கு புஷ்பா தங்கதுரை என்று எழுதுகிறேன். என்னுடைய ஆன்ம பசிக்கு ஸ்ரீ வேணுகோபாலன் என்று எழுதுகிறேன்" என்றார்.
இந்த பதிவு பல நினைவலைகளை தூண்டி விட்டு விட்டது ஜீவி சார். செளதி பற்றி நான் எழுதும் ஆங்கில வலைப்பதிவுக்கு அந்த நாட்டில் பிரச்னை எதுவும் வராமல் என்னை பாதுகாத்து கொள்வதற்காக நானே ஒரு புனைப்பெயரில் தான் எழுதிக்கொண்டிருகிறேன். சில சமயம் நான் எழுதும் குப்பை பதிவுகளை அவற்றை நான் தான் எழுதினேன் என்று தெரியாமல் நண்பர்கள் படித்து திட்டும்போதும் சற்றே சுமாரான பதிவுகளை பாராட்டும்போதும் மனதுக்குள் என்னையே எடை போட்டுக்கொள்ள உதவும் ஒரு கருவியாக இந்த புனைப்பெயர் உதவுகிறது.
வழக்கம் போல அருமையான பதிவு. வாழ்த்துக்கள். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@ G.M. Balasubramaniam
//புனைப் பெயரில் எழுதுபவர்கள் ஏதோ காரணத்துக்காக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள பயப்படுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரபலங்கள் பெயரை மாற்றி ஒரு முகமூடி போட்டு எழுதுவதும் ஒருவித ஏமாற்றுவேலை தானே.//
இப்படிப் பாருங்கள். பாஸிட்டிவான ஒரு பார்வை.
ஒருவரே பல புனைப் பெயர்களில் எழுதுவதான நிர்பந்தம் பரிதாபப்படக் கூடியது. 'எவ்வளவு எழுதியிருக் கிறேன், பார்'. எதையெல்லாம் எழுதியிருக்கிறேன், பார்' என்று தான் படைத்ததை மனசார வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாத நிலை மிகவும் கொடுமையானது. (இதை உங்களால் உணர முடியும்) எந்த சூழ்நிலையிலும் தான் சொல்லி தன் புனைப் பெயர்களின் ரகசியம் தன்னால் வெளிப்பட்டு விடாதவாறு பார்த்துக் கொண்ட எழுத்துச் சிற்பிகள் மனசளவில் மிகுந்த பராகிரமசாலிகள். தன் பெருமையை பகட்டாக்கி வெளிச்சம் போட்டுக் கொள்ளாமல் அமைதியாக எழுத்துலகில் சாதனை நிகழ்த்தியவர்கள்.
பத்திரிகை உலகம் விசித்திரமானது. பல்வேறு வகையான தேவைகளை தன்னுள் அடக்கிக்கொண்டது. பெரும்பாலும் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக இருந்தவர்கள் தாம் இப்படி பல புனைப்பெயர்களில் எழுதியவர்கள். அந்த பத்திரிகையின் வாசகத்தன்மை க்கு ஏற்பவும், அதிக விற்பனை காரணங்களுக்காகவும் இப்படி ஒருவரே பல பெயர்களில் எழுத வேண்டிய நிலையோ தேவையோ ஏற்பட்டது.
ஏன் பல புனைப்பெயர்களில்?.. ஒரே பெயரில் பலவற்றை-- கதை, கட்டுரை, தொடர்கதை-- என்று ஒருவரே எழுதினால் வாசகர்கள் விரும்ப மாட்டார்கள். 'இவன் பெரிய பிஸ்த்தாவோ?' என்று நீங்களே கேட்பீர்கள். இது முழுக்க முழுக்க பத்திரிகையின் தேவை சம்பந்தப்பட்ட விஷயம். முகமூடி மாட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தமே தவிர, விரும்பி மாட்டிக்கொண்டதல்ல.
என்போன்றோருக்கு 'எழுதுவது எப்படி?' என்கிற கலையைக் கற்றுக் கொடுத்த குருமார்கள் ரா.கி.ரங்கராஜன் ஜ.ரா.சு. போன்ற சாதனையாளர்கள். அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.
புரிதலுக்கான பகிர்தலாக தங்கள் கருத்து அமைந்ததற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!
@ Expatguru
நெடுநாட்கள் கழித்து உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி, மெட்ராஸ் தமிழன் சார்!
ஒருவரையே இருவராகப் பார்த்த ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன்.
ஒருமுறை கவியரசரை புதுவையில் சந்தித்த பொழுது,"அரசியல் கண்ணதாசனை எனக்கு ஏனோ பிடிக்கவில்லை; ஆனால் இலக்கிய கண்ணதாசனை மனசாரக் காதலிக்கிறேன். அதனால் 'இலக்கிய கண்ணதாசன்' என்றே கையெழுத்திட்டுத் தாருங்கள்" என்று என் ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டினேன். புன்முறுவலுடன் என் தோளில் கைபோட்டுச் சிரித்த கவியரசர் அப்படியே கையெழுத்திட்டுத் தந்தார். பின்னால் 'குமுத'த்தில் அவரின் இந்தக் கையெழுத்து பிரசுரமானது.
இது நடந்தது 1964-ம் வருடம். ஒருவ்ரில் இருவர்! எப்படியிருக்கு, பாருங்க! படிப்பவனின் மனம் தான் படைப்பவரைத் தீர்மானிக்கிறது, போலும்!
பி.கு: ரா.கி.ரங்கராஜனும், கண்ணதாசனும் மிகமிக நெருங்கிய நண்பர்கள். அவர்களின் இளம் வயதிலிருந்து கடைசி வரை இந்த நட்பு பூத்துக் குலுங்கியது.
//"தீவிரமா எழுதவறங்க, கொள்கைப் பிடிப்போட எழுதறவங்க, இவங்கள்லாம் தாங்க நினைக்கறதை தாங்க எழுதறதிலே சொல்லணும்ங்கறத்துக்காக எழுதறதாலே, அவங்க எழுத்திலே அவங்க இருக்கறதை பாக்கலாம். இந்தக் கணக்கு, அநேகமா தப்பினதில்லே."//
மிக அருமையான வரிகள். :)
Post a Comment