அத்தியாயம்-- 27
யானை தும்பிக்கை தள்ளி கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் சில நாட்களில் ஆறத் தொடங்கின. விழுந்த அதிர்ச்சி தந்த உடல் நலக்குறைவும் சுமாராக சீராகத் துவங்கியதுமே பாரதிக்கு வீட்டில் தங்க உடல் இருப்பு கொள்ளவில்லை. 'சுதேச மித்திரன்' அலுவலகம் செல்லத் துவங்கினார்.
தமிழுக்கு மொழிமாற்றம் செய்யக் கூடிய கட்டுரைகள் அவரது பணி நேரத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தன. சுதேசமித்திரன் அந்த நேரத்தில் 'கதாமாலிகா' என்று சிறுகதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டது. அந்தத் தொகுப்பில் பாரதியின் பல சிறுகதைகள் சக்தி தாசன், காளிதாசன் என்ற பாரதியின் புனைப்பெயர்களில் வெளியாகியிருக்கின்றன.குதிரைக் கொம்பு, கதவு, கடற்கரையாண்டி, விடுதலை முத்தம்மா கதை, கடல், ஆவணி அவிட்டம், மலையாளம், வேணு முதலி, பிங்கள வருஷம் போன்ற பாரதியின் கதைகள் கதாமாலிகாவில் காணக் கிடைக்கின்றன. புத்தகத்தின் விலை ரூ.1/-. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பாரதியின் காலத்தில் அவர் படைப்புகளுடன் வெளியான கடைசி நூல் கதாமாலிகா தான். பாரதியாரை பெரும்பகுதி மக்கள் கவிஞர் என்றே அறிந்திருக்கின்றனர். அவர் மிகச் சிறந்த கதாசிரியர் என்பது பலருக்கு இன்றளவும் அதிகம் தெரியாமலேயே இருக்கிறது. அதுவும் அந்தக் காலத்திற்கு மிகவும் தேவையாக இருந்த முற்போக்கான சீர்திருத்த கதைகளைப் பின்னுவதில் பாரதி மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அவர் கதைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. விதவா மறுமணத்தை வரவேற்று பாரதி எழுதிய 'சந்திரிகையின் கதை' அந்நாட்களின் அரிய முயற்சி. கதையின் நாயகி விசாலாட்சியின் பாத்திரப்படைப்பு அற்புதமாக இருக்கும். பாரதிக்கு இந்த நாவலை முழுதாக எழுதி முடிக்க முடியாமலேயே போய்விட்டது. பின்னாட்களில் கல்கிக்கு நேர்ந்தது தான் பாரதிக்கும் நேர்ந்தது. 'அமரதாரா' நாவலை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே கல்கி காலமாகி
விடுகிறார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கல்கியின் அருமைப் புதல்வி ஆனந்தி 'அமரதாரா' நாவலை முழுதாக எழுதி முடித்தார். ஆனால் பாரதிக்கு அப்படி யாரும் அமையவில்லை. 'சந்திரிகையின் கதை' பாதியிலேயே நிற்கிறது. சந்திரிகையின் கதை, கதை மாதிரியே தோன்றாமல் தத்ரூபமாக நடந்த நிகழ்வு போலவே இருக்க பாரதியும் வெகுவாக முயற்சித்திருக்கிறார். பிற்காலத்தில் 'சந்திரிகையின் கதை' பொதிகை தொலைக்காட்சியில் தொடராக வந்ததாக கோமதிம்மா சொல்லத் தெரிந்தது.
வேளாண்குடி என்ற கிராமத்தில் ஒரு பூகம்ப இரவில் பிறந்தவள் சந்திரிகை. பூகம்பத்தைத் தொடர்ந்து பிடித்துக் கொண்ட அடைமழைச் சூழலில் கைக்குழந்தை சந்திரிகையின் பெற்றோர் இறந்து விடுகின்றனர். குழந்தை சந்திரிகையின் தந்தை மகாலிங்கத்தின் தங்கை விதவை விசாலாட்சியின் ஆதரவில் சந்திரிகை வளர்கிறாள். விசாலாட்சி பாத்திரப் படைப்பின் மூலம் விதவா மறுமணத்தை ஆதரித்து எழுத பாரதி அந்நாட்களிலேயே துணிகிறார். வேத விசாரங்களையும் பிரஸ்தாபித்து நிறைய வாதங்களை வைக்க பாரதி இந்நாவலில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்.
பாரதி எழுதிய நாவலா இது என்று துணுக்குறும்படியும் சில காட்சிகளும் சொல்லாடல்களும் உண்டு. 9-ம் அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே நாவல் அரைகுறையாக நிறுத்தப் பட்டிருக்கிறது. " ......... இப்படியிருக்கையில் ஒருநாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி, "நாளை ஞாயிற்றுக் கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட் வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும் ....." என்று அடுத்து எழுத வேண்டிய வார்த்தைகளை எழுதி வரியைப் பூர்த்தி கூட செய்ய முடியாமல் இந்த சந்திரிகை நாவல் அப்ரப்ட்டாக முடிந்திருப்பது என்னவெல்லாமோ யோசிக்க வைக்கிறது.. தன் வாழ்வில் எந்தக் காலப்பகுதியிலேயோ எழுதத் துவங்கியதை மேற்கொண்டு எழுதப் பிடிக்காமல் நிறுத்தி வைத்திருந்தானோ?.. இளமையில் எழுதிய கதையின் தொடர்ச்சியாய் சில பகுதிகளை சேர்த்தும், நீக்கியும் மீதிப் பகுதியை பிரசுரத்திற்காக எழுதும் பொழுது தொடர முடியாமல் போயிற்றோ?.. அந்த 9-ம் அத்தியாயத்திற்கு சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு என்று தலைப்பிட்டிருப்பதும் கவனத்திற்குரியது.
1920-ல் சுதேசமித்திரனில் வெளிவந்த 'சந்திரிகை கதை'யை பாரதி பிரசுரலாயம் 1925-ல் தனி நூலாக வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. பாரதியின் படைப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பாரதி அன்பர் ரா.அ. பத்மனாபன் 1982-ல் பாரதி புதையல் பெருந்திரட்டு' என்ற நூலை வெளியிடுகிறார். அதில் இந்த சந்திரிகை கதையும் இடம் பெற்றிருக்கிறது. பா.பு. பெருந்திரட்டில் 9 -ம் அத்தியாயம் நிறைவுற்று 10-ம் அத்தியாயத்தோடு கதை நிறைவடைகிறது. பாரதியின் கற்பனையில் இருந்த சந்திரிகை கதையாக அது பூரணத்துவம் பெறாது விசாலாட்சியின் கதையைச் சொல்லி நிறைவுறுகிறது. அரைகுறையாக இல்லாமல் பாரதி எழுதத் தொடங்கிய ஒரே ஒரு சமூக நாவல் நிறைவுப் பகுதியோடு காணப்படுவதில் மனசுக்குத் திருப்தியே.
காரைக்குடி-- பாரதியார் என்றாலே கானாடுகாத்தான் வயி.சு. சண்முகம் செட்டியார் நினைவுக்கு வந்து விடுவார். செட்டியாருக்கு பாரதியாரின் கவிதைகளில் அப்படியொரு மோகம். வயி.சு.ச.வுக்கு கானாடு காத்தானில் இன்ப மாளிகை என்ற பெயரில் நிஜமான மாளிகையன்ன வீடு இருந்தது. செட்டியாருக்கோ கானாடுகாத்தானிலேயே பாரதி குடும்பத்தோடு அவர் மாளிகையில் தங்கி கவிதைகள் எழுதி வரலாம் என்று ஆசைப்பட்டார். தங்கிவிடலாம் என்று பாரதியும் ஒரு புறம் நினைத்தாலும் அவர் குடும்ப சூழ்நிலையும் மனைவியின் எண்ணமும் வேறாக இருந்தது. அக்டோபர் 1919 வாக்கில் செட்டியாரின் அன்பு அழைப்பைத் தட்டாமல் கானாடுகாத்தான் சென்று அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிவிட்டு சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பாரதியார் திரும்பினார் என்று தெரிகிறது. ரவண சமுத்திரம், பொட்டல்புதூர், திருவனந்தபுரம் என்றெல்லாம் சென்று கூட்டங்களில் பேசியிருக்கிறார் என்றாலும் ஈரோடு கருங்கல் பாளைய கூட்டத்திற்கு பாரதி சரிதையில் தனியே ஒரு இடம் உண்டு. அது தான் அவர் உரையாற்றிய கடைசிக் கூட்டம்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் பாரதியை உயிருக்கு உயிராய் நேசித்த தங்கப்பெருமாள் பிள்ளை என்ற வழக்குரைஞர் இருந்தார். சிறந்த தேசபக்தரான அவர் கருங்கல் பாளையத்தில் வாசகசாலை ஒன்றை நடத்தி வந்தார். அந்த வாசகசாலையின் வருடாந்திர விழாவில் பேசுவதற்காகத் தான் பாரதியாரை அழைத்திருந்தார்.
பாரதி ஈரோடுக்கு ரயிலில் போகிறார். பாரதியை ரயிலடியில் வரவேற்றுக்கு கூட்டி வர தங்கப்பெருமாள் இளைஞர் ஒருவரை அனுப்பி வைக்கிறார். அந்த இளைஞர் தான் பிற்காலத்து ச.து.சு. யோகியார். முண்டாசு கட்டி கருகரு
மீசையுடன் வருவார் என்று பாரதியைப் பற்றிய அடையாளமாக அந்த இளைஞருக்குச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அப்படி யாரும் வராததால் இளைஞர் திரும்பி விடுகிறார். திரும்பி வந்தவர் வக்கீலுக்கு எதிரே புதியவர் ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார். முண்டாசை பாரதி கட்டியிருக்கவில்லை என்பதே அந்த இளைஞருக்கு பாரதியை அடையாளம் காண முடியாமல் போயிற்று என்பது இளைஞருக்கு புரிகிறது. பாரதி என்ன செய்தார் என்றால் யாரையும் எதிர்பார்க்காமல் ரயில் நிலையத்திலிருந்து மாடு பூட்டிய கட்டை வண்டி பிராயணத்தில் நேராக கருங்கல் பாளையம் வந்து சேர்ந்து விட்டார்.
சென்னை திரும்பி வந்ததும் 'என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4-ம் தேதிய சுதேச மித்திரனில் ஜூலை 31=ல் நடந்த ஈரோடு கூட்டம் பற்றி பாரதி கட்டுரை எழுதுகிறார் அந்தக் கட்டுரையே அவரது கருங்கல் பாளையம் உரை பற்றி அறிந்து கொள்ள ஆவணமாகத் திகழ்கிறது.
'... அந்த வாசகசாலையின் வருஷோத்ஸ்வக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம் தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.
'மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தருக்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையை தக்க ஆதாரங்களுடன் ருஜூப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்..' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி
ஹிரண்யன் தன் மகன் பிரகலாதனிடத்தில் 'சொல்லடா, ஹரியென்ற கடவுள் எங்கே?' என்று கேட்டதையும் அதற்குப் பிரகலாதன், "நாராயணன் தூணிலும் உள்ளான்; துரும்பிலும் உள்ளான்" என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டு விட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தாராம் பாரதி.
'வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை; மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை; சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குருசிவமென்று எடுத்துரைத்து, "அத்வைத நிலை கண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன். காண்பீர்.." என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிடுகிறார் பாரதி.
"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போம்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துக்கின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர். மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டு தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன.." என்று சாவிற்கான இன்னொரு காரணத்தையும் குழந்தைக்கும் புரியுமாறு விளக்குகிறார் பாரதியார்.
"அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்து விட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெயதல் கொடுமையன்றோ?" என்று கேட்போரை யோசிக்க வைக்கும் திறத்தில் போரில்லா உலகத்தின் மேன்மை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் பாரதி.
"'நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்' என்று விஞ்ஞானியான ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இது தான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம். கொடுங்கோபம் பேரதிர்ச்சி. அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்து போகும். கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடலே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்.." என்று ஞானபுருஷனுக்கான மேதாவிலாசத்துடன் அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கிறார் பாரதி.
"மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ?.. பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை.. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு.. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாள் தோறும் முயன்று நலிந்து சாவான்.." என்று கேட்போர் மனதில் பதியும் பாங்கில் எடுத்தியம்புகிறான் பாரதி.
'எல்லா மதங்களின் சாரமும் இதுவே. ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம். 'கோபத்தைக் கொல்லுக. அன்பே அரியும் அரனும் ஆகும். ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம்; இருப்பினும் யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே; அதுவே அன்பெனும் அடிநாதம்..' என்ற பொருளில் அமைந்திருந்த தன் உரையை முடிக்கிறார் பாரதி.
'மோதி மிதித்து விடு, பாப்பா-- அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' பாரதிக்கும் இந்த பாரதிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று நாம் திகைக்கிறோம். 'அக்னிக் குஞ்சொன்று கண்டேன்.. அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.. வெந்து தணிந்தது காடு..' பாரதியாரா இந்த பாரதியார்?.. ஆமாம், எல்லா பாரதியும் ஒரே பாரதி தான்!
அதுதான் ஆகப்பெரிய கவிஞனின் இலட்சணம், இலக்கணம் எல்லாம்! எந்த நேரத்தில் எந்த உணர்வில் மீக்கூர்ந்து தான் இருக்கிறானோ, அந்த நேரத்தில் அந்த உணர்வை மிகச் சரியாக தன்னில் பிரதிபலிப்பவன் தான் கவிஞன்! இப்பொழுதோ, வெந்ததெல்லாம் தணிந்த காட்டின் நிலை பாரதிக்கு! புறநானூற்றில் பிசிராந்தையார் சொல்கிறாரே, 'ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்' என்று, அந்த நிலையை 38 வயதிலேயே சித்தன் பாரதி கைவரப் பெற்றான் என்று தெரிகிறது.
(வளரும்)

14 comments:
//'என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4-ம் தேதிய சுதேச மித்திரனில் ஜூலை 31=ல் நடந்த ஈரோடு கூட்டம் பற்றி பாரதி கட்டுரை எழுதுகிறார் அந்தக் கட்டுரையே அவரது கருங்கல் பாளையம் உரை பற்றி அறிந்து கொள்ள ஆவணமாகத் திகழ்கிறது.//
உரையை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
உரை அருமை.
பொதிகையில் 'சந்திரிகை கதை வந்தது.
சொர்ணமாலயா நடித்து இருந்தார். பார்த்த நினைவு இருக்கிறது.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் தொடர்பிலிருந்த அந்த நாட்களில் அடிக்கடி சொல்கிற வார்த்தை "கவியுள்ளம் காணப் பழக வேண்டும்!" பாரதியின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் கூட அப்படியொரு பழக்கத்தைப் பழகிக் கொள்ள வேண்டுமென்பது உங்களுடைய தொடரை வாசிக்கும் போது, அடிக்கடி தோன்றுகிறது ஜீவி சார்!
இந்தத் தொடரை வாசிக்கிற ஒவ்வொருவருமே கவியுள்ளம் காணப் பழகுகிறவர்களாக ஆகிவிட வேண்டுமென்று பராசக்தி திருவுள்ளம் இசையட்டும்!
எல்லா மதங்களின் சாரமும் இதுவே. ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம். 'கோபத்தைக் கொல்லுக. அன்பே அரியும் அரனும் ஆகும். ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம்; இருப்பினும் யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே; அதுவே அன்பெனும் அடிநாதம்..' என்ற பொருளில் அமைந்திருந்த தன் உரையை முடிக்கிறார் பாரதி.//
நிறைவான முடிவு.
அன்பெனும் அடிநாதம் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்.
அன்பு வாழ்க!
பாரதியார் எழுதிய ஓரிரண்டு கதைகள் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கின்றன.
பாரதியார் இராமாயணக்கதையை பக்டி ச்டெய்து எழுதியது என்று நான் நினக்கும் குதிரைக்கொம்பு என்னும் கதையை நான் என் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்
துளசிதரன்: பாரதியைக் குறித்த பல தகவல்கள் அறியமுடிகிறது. இது வரை இத்தனை அறிந்திராதது.
கீதா: பாரதியாரின் உரை அருமை! //'எல்லா மதங்களின் சாரமும் இதுவே. ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம். 'கோபத்தைக் கொல்லுக. அன்பே அரியும் அரனும் ஆகும். ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம்; இருப்பினும் யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே; அதுவே அன்பெனும் அடிநாதம்..' என்ற பொருளில் அமைந்திருந்த தன் உரையை முடிக்கிறார் பாரதி.//
அருமை. உரையிலுள்ள அவர் கருத்துகள் அத்தனையும் அர்த்தம் பொதிந்தது மட்டுமல்ல வாழ்வியல் கருத்துகள். இதுவரை அவரது இப்படியான உரைகளை வாசித்ததில்லை. அவர் எழுதிய கதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது
பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது உங்கள் பதிவு. நன்றி.
@ வெங்கட் நாகராஜ்
பாரதி பற்றி பரவலாகத் தெரியாத தகவல்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்தத் தொடரையே எழுத ஆரம்பித்தேன். அதை உங்கள் பின்னூட்டம் பிரதிபலித்தற்கு நன்றி. தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.
@ கோமதி அரசு
சந்திரிகையின் கதை பொதிகைலே வந்ததா?.. எனக்கு இது புதுதகவல்.
தகவலுக்கு நன்றி, கோமதிம்மா. உங்கள் அனுமதியுடன் பதிவிலே சேர்த்துடறேன்.
பாரதியாரின் அந்தக் கடைசி உரை (ஈரோடு வாய்க்கால் கரை உரை) எங்காவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
கிடைத்தால் பிரசுரிக்கிறேன்.
@ ஸ்ரீராம்
சில வேடிக்கை கதைகள் என்று பாரதியார் ஒரு பக்க கதைகள் மாதிரி நிறைய குட்டி குட்டி கதைகள் எழுதியிருக்கிறார். விகடன்னா அந்தக் காலத்தில் நகைச்சுவை தானே! அந்த மாதிரி கதைகளைப் போட்டிருப்பார்கள். பாரதியாரின் காக்காய் பார்லிமெண்ட் கதையை விகடனில் பார்த்த மங்கிய நினைவு இருக்கிறது.
ஞான்ரதம்
நவதந்திர கதைகள்
சந்திரிகையின் கதை
சின்ன சங்கரன் கதை
ஆறில் ஒரு பங்கு
ஸ்வர்ண குமாரி
-- இதெல்லாம் பாரதியின் குறுநாவல் போன்ற கதைகள். ஜெயகாந்தனுக்காகவே ஆனந்த விகடனில் குறுநாவல் பிரசுரம் தொடங்கியது என்று நினைக்கிறேன்.
@ துளசிதரன். தி.
இருவரும் வாசித்து விட்டதில் மகிழ்ச்சி.
வர்த்தமானன் பதிப்பகம், (தி.நகர்) பாரதியாரின் வரலாறு (வ.ரா. எழுதியது) பாரதியார் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று தொகூப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். தனித்தனியாகவும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
@ ஜிஎம்பீ
குதிரைக் கொம்பு கதையை நான் பகடியாக நினைக்க்வில்லை.
குதிரைக்கு கொம்பு இல்லை தானே?.. அது மாதிரி இராமாயணத்தின் ஒரு பகுதி கதையை எடுத்துக் கொண்டு 'அப்படியில்லை' என்கிற மாதிரி இல்லாத விஷயங்களை இந்தக் கதையில் ஒன்று சேர்த்து குதிரைக் கொம்பை பாரதி விளக்குகிறார் போலிருக்கு.
அடுப்படியில் வெப்பம் சிலுசிலுக்கிற குளிராய் இருந்தது.
ஐஸ்கிரீம் தொண்டையைத் தொட்டதும் சுட்ட சூட்டில் நாக்கே வெந்து விட்டது.
இந்த மாதிரி...
வாசித்து வருவதற்கு நன்றி, சார்.
Post a Comment