அத்தியாயம்-- 30
'
'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்தேன்; அதனால் உயிரையும் வளர்த்தேனானேன்'.. என்ற அர்த்தத்தில் யோகி திருமூலரின் வரி ஒன்று பத்தாம் திருமுறையில் உண்டு.
உடம்பும் உயிரும் வெவ்வேறு இல்லையாயினும் உடம்பை ஓம்பும் வழிமுறைகளை அனுசரிக்கவில்லை எனில், அதுவே மொத்த இயக்க சக்தியையும் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு போய் விடுகிறது.
பாரதியாரின் உள்ளத்தில் திண்மை இருந்தாலும் அதற்கேற்பவான உடல் ஒத்துழைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.
ஆந்திர கேசரி ஸ்ரீமான் டி.பிரகாசம் அவர்களின் தம்பி டி. ஜானகிராமன் என்ற ஹோமியோபதி மருத்துவர் தான் அவ்வப்போது பாரதியாரின் வீட்டுக்கு வந்து மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தார். நாளடைவில் மருந்து சாப்பிடுவதை அறவே வெறுத்தார் பாரதியார். மருத்துவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாரதியார் மசிந்து கொடுக்கவில்லை. மருந்துகளை மறுப்பதைப் பிடிவாதமாகக் கொண்டிருந்தார். ஆகாரம் கஞ்சி தான். கஞ்சியும் வற்புறுத்தி கொடுக்க நேர்ந்தது. அதுவும் கொஞ்சமே கொஞ்சம் தான் எடுத்துக் கொள்வதாக இருந்தது.
1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி. அன்றைய இரவு வழக்கம் போல் வரும் இரவுகள் மாதிரி அந்தக் குடும்பத்திற்குத் தெரியவில்லை. "சகுந்தலா! நீ மருந்து கொடுத்தால் ஒருவேளை கோபிக்காமல் அப்பா சாப்பிடுவார்.." என்று என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கச் சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாஸில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அப்பாவிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ என் கையிலிருந்த கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார். 'பாப்பா! நீ கொடுத்தது மருந்து இல்லைம்மா.. கஞ்சி..." என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டார். எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. அப்படியே வெளியே வந்து கூடத்தில் படுத்தேன். தூங்கிவிட்டேன் போலும்.." என்று பாரதி பெண் சகுந்தலா 'பாரதி என் தந்தை' என்ற தம் நூலில் சொல்கிறார்.
பாரதியின் மூத்த மகள் தங்கம்மா தன் பெரிய தாயாரின் பராமரிப்பில் காசியில் வளர்ந்தவர். அவருக்கு இளமையிலேயே திருமணம். மைசூரில் குடும்பத்துடன் இருந்தார்.
பாரதி இறுதி காலத்தில் அருகில் இருக்க முடியாது போன இன்னொருவர் யதுகிரி; பாரதியின் அருமை நண்பர் ஸ்ரீநிவாச்சாரியாரின் மகள். சிறுமியாக இருந்த யதுகிரிக்கு பாரதி தந்தையே போலவாகிறார்.
தந்தை போலவாகிறார் என்றதும் நினைவுக்கு வருகிறது. யதுகிரிக்கு திருமணமாகி மைசூரிலிருந்த புகுந்த வீட்டிற்குப் புறப்படும் போது யதுகிரிக்கு ஆசி கூறி தந்தை ஸ்தானத்திலேயே பாரதி சொல்கிறார்:

"யதுகிரி! நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போலப் பிரகாசிக்க வேண்டும். இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். பழகியபின் வழக்கமாகி விடும். கேவலம், அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு; புத்தி உண்டு ; ஸ்வந்திரம் உண்டு. தலைநிமிர்ந்து நட. உன் இருபுறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார். நேர்ப் பார்வையில் பார். கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே. தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நிமிர்ந்து பார். இவர்களைக் கடைக் கண்ணில் பார்க்காதே... நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு; தைரியமாகப் பேசு. இதில் கற்பு கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.'
பாரதியின் இந்த உபதேசம் கூட யதுகிரி சொல்லி நமக்குத் தெரிந்தது தான். ஒரு சிறுமியின் சிந்தனையில் ஒரு மகாக் கவிஞனைக் காணும் கிளாசிக் படைப்பு 'பாரதி நினைவுகள்' என்ற இவரது புத்தகம். பாரதி பற்றி எழுதித் தாருங்கள் என்று யாரோ கேட்க 1939-ல் யதுகிரி எழுதிய நூறு பக்கங்களுக்குக் குறைவான இநதப் புத்தகம் அதற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது. இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது யதுகிரியும் உயிரோடில்லை.
யதுகிரியிடம் செல்லம்மா சொல்வதாக இந்தப் புத்தகத்தில் சில செய்திகள் வருகின்றன. 'யதுகிரி! அவர் பிராணன் போகுமுன் கூட, 'செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்?' என்று விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாகச் சொன்னேன். 'எவ்வளவு குழந்தைகள்?' என்று கேட்டார். நம்மைப் போல் இரண்டு பெண்கள் என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருப்பதாகச் சொல்லி விட்டு, 'அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும். காலை சீக்கிரம் சமைத்து விடு. எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸுக்குப் போக வேண்டும்' என்றார்.
அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தார் பாரதியார். நடுவில் மித்திரனிலிருந்து யாரோ பார்க்க வந்திருந்த பொழுது கூட நான் இரண்டு மூன்று நாட்களில் அலுவலகத்திற்கு வந்து விடுவேன் என்று நிச்சயமாகச் சொல்லியிருக்கிறார் பாரதியார்.

பாரதி தீர்க்கதரிசி. இன்றும் அவன் நம்மிடையே தான் உலா வருகிறான். கவிதை, கட்டுரை, காதல், தேசப்பற்று, சுதந்திர உணர்வு, தமிழின் செம்மாந்த நடையழகு என்று எதைத் தொட்டுப் பேசவோ, எழுதவோ நினைத்தாலே பாரதி நம்மைத் தொட்டுக் கொண்டு பக்கத்தில் அமர்ந்து விடுவான். முண்டாசும் மீசையுமாய் அவனது ஆசை முகம் நமக்கு மறக்கவே மறக்காது. நெஞ்சில் நினைவுகளில் பதிந்தவனை மறப்பதும் சாத்தியமில்லாத விஷயம். அவன் சிரஞ்ஜீவித்துவத்தின் மகிமை அது.
பாரதி புகழ் ஓங்குக..
பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் சிந்தனைகள் வளர்க! வளர்கவே!
=======================================================
பாரதியின் படைப்புகளைத் தேடித் தேடித் தொகுத்து தந்த பாரதி அன்பர் ஸ்ரீமான் சீனி. விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி. பாரதிப் பயிலகம் தஞ்சை வெ. கோபாலன் அவர்களுக்கு நன்றி.
பாரதியின் ஆக்கங்களின் மேல் தீராத காதல் கொண்டுள்ள
பாரதி அன்பர்களுக்கு நன்றி.
'
'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்தேன்; அதனால் உயிரையும் வளர்த்தேனானேன்'.. என்ற அர்த்தத்தில் யோகி திருமூலரின் வரி ஒன்று பத்தாம் திருமுறையில் உண்டு.
உடம்பும் உயிரும் வெவ்வேறு இல்லையாயினும் உடம்பை ஓம்பும் வழிமுறைகளை அனுசரிக்கவில்லை எனில், அதுவே மொத்த இயக்க சக்தியையும் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு போய் விடுகிறது.
பாரதியாரின் உள்ளத்தில் திண்மை இருந்தாலும் அதற்கேற்பவான உடல் ஒத்துழைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.

1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி. அன்றைய இரவு வழக்கம் போல் வரும் இரவுகள் மாதிரி அந்தக் குடும்பத்திற்குத் தெரியவில்லை. "சகுந்தலா! நீ மருந்து கொடுத்தால் ஒருவேளை கோபிக்காமல் அப்பா சாப்பிடுவார்.." என்று என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கச் சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாஸில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அப்பாவிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ என் கையிலிருந்த கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார். 'பாப்பா! நீ கொடுத்தது மருந்து இல்லைம்மா.. கஞ்சி..." என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டார். எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. அப்படியே வெளியே வந்து கூடத்தில் படுத்தேன். தூங்கிவிட்டேன் போலும்.." என்று பாரதி பெண் சகுந்தலா 'பாரதி என் தந்தை' என்ற தம் நூலில் சொல்கிறார்.
பாரதியின் மூத்த மகள் தங்கம்மா தன் பெரிய தாயாரின் பராமரிப்பில் காசியில் வளர்ந்தவர். அவருக்கு இளமையிலேயே திருமணம். மைசூரில் குடும்பத்துடன் இருந்தார்.
பாரதி இறுதி காலத்தில் அருகில் இருக்க முடியாது போன இன்னொருவர் யதுகிரி; பாரதியின் அருமை நண்பர் ஸ்ரீநிவாச்சாரியாரின் மகள். சிறுமியாக இருந்த யதுகிரிக்கு பாரதி தந்தையே போலவாகிறார்.
தந்தை போலவாகிறார் என்றதும் நினைவுக்கு வருகிறது. யதுகிரிக்கு திருமணமாகி மைசூரிலிருந்த புகுந்த வீட்டிற்குப் புறப்படும் போது யதுகிரிக்கு ஆசி கூறி தந்தை ஸ்தானத்திலேயே பாரதி சொல்கிறார்:

"யதுகிரி! நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போலப் பிரகாசிக்க வேண்டும். இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். பழகியபின் வழக்கமாகி விடும். கேவலம், அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு; புத்தி உண்டு ; ஸ்வந்திரம் உண்டு. தலைநிமிர்ந்து நட. உன் இருபுறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார். நேர்ப் பார்வையில் பார். கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே. தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நிமிர்ந்து பார். இவர்களைக் கடைக் கண்ணில் பார்க்காதே... நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு; தைரியமாகப் பேசு. இதில் கற்பு கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.'
பாரதியின் இந்த உபதேசம் கூட யதுகிரி சொல்லி நமக்குத் தெரிந்தது தான். ஒரு சிறுமியின் சிந்தனையில் ஒரு மகாக் கவிஞனைக் காணும் கிளாசிக் படைப்பு 'பாரதி நினைவுகள்' என்ற இவரது புத்தகம். பாரதி பற்றி எழுதித் தாருங்கள் என்று யாரோ கேட்க 1939-ல் யதுகிரி எழுதிய நூறு பக்கங்களுக்குக் குறைவான இநதப் புத்தகம் அதற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது. இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது யதுகிரியும் உயிரோடில்லை.
யதுகிரியிடம் செல்லம்மா சொல்வதாக இந்தப் புத்தகத்தில் சில செய்திகள் வருகின்றன. 'யதுகிரி! அவர் பிராணன் போகுமுன் கூட, 'செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்?' என்று விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாகச் சொன்னேன். 'எவ்வளவு குழந்தைகள்?' என்று கேட்டார். நம்மைப் போல் இரண்டு பெண்கள் என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருப்பதாகச் சொல்லி விட்டு, 'அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும். காலை சீக்கிரம் சமைத்து விடு. எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸுக்குப் போக வேண்டும்' என்றார்.
அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தார் பாரதியார். நடுவில் மித்திரனிலிருந்து யாரோ பார்க்க வந்திருந்த பொழுது கூட நான் இரண்டு மூன்று நாட்களில் அலுவலகத்திற்கு வந்து விடுவேன் என்று நிச்சயமாகச் சொல்லியிருக்கிறார் பாரதியார்.

பாரதி தீர்க்கதரிசி. இன்றும் அவன் நம்மிடையே தான் உலா வருகிறான். கவிதை, கட்டுரை, காதல், தேசப்பற்று, சுதந்திர உணர்வு, தமிழின் செம்மாந்த நடையழகு என்று எதைத் தொட்டுப் பேசவோ, எழுதவோ நினைத்தாலே பாரதி நம்மைத் தொட்டுக் கொண்டு பக்கத்தில் அமர்ந்து விடுவான். முண்டாசும் மீசையுமாய் அவனது ஆசை முகம் நமக்கு மறக்கவே மறக்காது. நெஞ்சில் நினைவுகளில் பதிந்தவனை மறப்பதும் சாத்தியமில்லாத விஷயம். அவன் சிரஞ்ஜீவித்துவத்தின் மகிமை அது.
பாரதி புகழ் ஓங்குக..
பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் சிந்தனைகள் வளர்க! வளர்கவே!
=======================================================
பாரதியின் படைப்புகளைத் தேடித் தேடித் தொகுத்து தந்த பாரதி அன்பர் ஸ்ரீமான் சீனி. விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி. பாரதிப் பயிலகம் தஞ்சை வெ. கோபாலன் அவர்களுக்கு நன்றி.
பாரதியின் ஆக்கங்களின் மேல் தீராத காதல் கொண்டுள்ள
பாரதி அன்பர்களுக்கு நன்றி.
7 comments:
பாரதியின் கதையை பதிவ்டுவதற்கு நீங்கள் நிறையவே மெனக்கேட்டு இருப்பீர்கள் யார் எப்படியானாலும் மறைந்தவர்கள் பற்றின எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதுஇல்லை ந்நிங்களும் எக்செப்ஷன் அல்ல பதிவில் பல அறியாத செய்திகள் பாராட்டுகள்
பாரதியின் மீதான உங்கள் பற்று பதிவை எழுதுவதில் உள்ள சிரமங்களை மறக்கடித்திருக்கும். அபார முயற்சி. பாரதி புகழ் ஓங்குக.
இடைவிடாத உழைப்பு எல்லாப் பதிவுகளிலும் தெரிகிறது.
எத்தனை படங்கள். எத்தனை விவரங்கள்.
அவர் துயரப்பட்டாலும் நமக்கு இனிமை கொடுத்திருக்கிறார். என்றும் வாழ்க
அவர் நினைவு.
பாரதியைப் பற்றி யதுகிரி அம்மா எழுதிய புத்தகம் என்னிடம் இருக்கிறது.
யதுகிரி அவர்களுக்கு பாரதி சொன்ன அறிவுரை அருமை.
கடைசி காலத்திலும் மகளின் நினைவு வருவது போல் யதுகிரி அவர்களை நினைத்து கொண்டது அவர் மேல் உள்ள பிரியம் தெரிகிறது.
//பாரதி புகழ் ஓங்குக..
பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் சிந்தனைகள் வளர்க! வளர்கவே!//
பாரதி புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
அருமையான படைப்பு.
அருமையாக நாங்கள் படிக்க தொகுத்து தந்த உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
தொடர் முழுவதும் வாசித்தோம். யதுகிரி பற்றியவை எல்லாம் புதிய தகவல்கள். அது மட்டுமல்ல பல விஷயங்களை உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். உங்கள் உழைப்பு அளப்பிற்கரியது.
மிக மிக அருமையான தொடர்.
பாரதியின் புகழ் ஓங்குக!!
துளசிதரன், கீதா
தொடர்ந்து எழுதுவது என்பது மிகவும் சிரமம். அதனைக் கோர்வையாக, ரசிக்கும்படி தருவது இன்னும் சிரமம். உங்கள் எழுத்து அனாயாசமாக மிகவும் எளிமையானதாக உள்ளது. நன்றி.
Post a Comment