மின் நூல்

Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தினம்



சர்வதேச மகளிர் தினம்!!





                                                     வாழ்த்துக்கள்




தொழிற் புரட்சி காலத்தில் ஒரு தேசத்தின் எழுச்சி மின் மயமாதலை ஆதாரமாகக் கொண்டிருந்தது.  பெண்களுக்கான  இன்றைய விடுதலை, குறிப்பாக ஏழ்மையில் உழலும் ஆகப்பெரிய பெண் வர்க்கத்தின் விடுதலை அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை நிச்சயப்படுத்துதலில் நிலை கொண்டிருக்கிறது.  பொருளாதார சுதந்திரம் கைப்படுகையில் அவர்களுக்கான சமூக சுதந்திரங்களும் நிச்சயப்படுத்தப்படும்..  இது தான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகும்.

ஆக,  அதற்கேற்ப பெண்ணியத்தைத் தூக்கிப்பிடிப்போரின் எழுத்தும் பேச்சும் இந்த நிச்சயப்படுத்தலை சாத்தியப்படுத்துவதை நோக்கிய எழுச்சியாக இருக்க வேண்டுமென்பது அதனை வாழ்த்துவோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
                                                       
                                                          ---  ஜீவி

                                                       

                                    















---  ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை
            மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்                               
            நூலில் எழுத்தாளர் அம்பை பற்றிய                                       
            கட்டுரையில் ஜீவி


சந்தியா பதிப்பகம்:   sandhjyapublications.com

தொலைபேசி:    044-  24896979

17 comments:

Geetha Sambasivam said...

என்னைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் பெண்களுக்கான தினங்களே. எந்த நாளாவது ஒரு பெண்ணின் துணை இல்லாமலோ பெண்ணின் இருப்பு இல்லாமலோ எதானும் செய்ய முடியுமா? எப்படியானும் பெண்ணின் இருப்பு தேவையே! தாய், சகோதரி, மனைவி, சிநேகிதி, மகள், பேத்தி என்று எப்படியாயினும் பெண் இருப்பு இல்லாமல் மனித குலமே இல்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

பதிவுலக மகளிர் அணியினர் அனைவருக்கும் ‘சர்வதேச மகளிர் தின’ நல்வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
பொருளாதரச் சுதந்திரம் கிடைக்கப் பெறுமாயின்
பிற சுதந்திரங்கள் நிழலாய்த் தானே தொடரும்

சிவகுமாரன் said...

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்றான்.பொருளாதர சுதந்திரம் ஒன்றே உண்மையான பெண் விடுதலைக்கு வித்து.
மிகச் சரியாய் சொன்னீர்கள்.

சிவகுமாரன் said...

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா என்றான்.பொருளாதர சுதந்திரம் ஒன்றே உண்மையான பெண் விடுதலைக்கு வித்து.
மிகச் சரியாய் சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

பொருளாதார சுதந்திரம் மட்டும் போதாது. மனத்தளவில் தன்னால் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் வளரவேண்டும்.

ஸ்ரீராம். said...

வல்லிமா கருத்தை வழிமொழிகிறேன்!

கோமதி அரசு said...

வல்லி அக்கா சொல்வது போல் மனவலிமை மிகவும் அவசியம்.
புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தங்கள் பார்வையில் தாங்கள் சொல்வது சரியே. யுக மாற்றங்களில் பார்வைகள் மாறுபடுவதும் உண்டு.

ஜீவி said...

@ வை.கோ.

க்ருத்திட்டமைக்கு நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ Ramani. S.

கரெக்ட். நிழல் உபயோகம் இன்னும் சிறப்பு கூட்டுகிறது. நன்றி.

ஜீவி said...

@ சிவகுமாரன்

பொருளாதார சுதந்திரம் ஏழ்மையில் உழலும் பெண்குலத்தினர் வாழ்வில் விடியலைக் கொண்டு வரும் என்று கொள்ள வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி, கவிஞரே!

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன், கோமதி அரசு, ஸ்ரீராம்

பொருளாதார சுதந்திரத்தைப் பொதுவில் வைக்கவில்லை.

'குறிப்பாக ஏழ்மையில் உழலும் ஆகப்பெரிய பெண்வர்க்கத்தின் விடுதலை அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை நிச்சயப்படுத்துதலில் நிலை கொண்டிருக்கிறது' -- என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்த தேசத்தின் ஏதுமில்லாத கோடிக்கணக்கான ஏழ்மைப் பெண்களின் இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு வெளிப்பட்ட வார்த்தைகள் இவை. விலைவாசிகள் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் கொண்டிருக்கும் சகிப்பு மனப்பானமையும், மனஉறுதியுமே அவர்களை வழிநடத்திச் செல்கிறது. அவர்கள் வாழ்விற்கான விடியலே மகளிர் தினத்திற்கு கூடுதலான அர்த்தம் கொடுக்கக் கூடியது.

-- என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறேன். பொதுவில் தாங்கள் சொல்லியிருக்கும் கருத்திற்கு நன்றி. .


ஜீவி said...

@ கோமதி அரசு

கோமதி அம்மா நலம் தானே?.. நெடுநாட்கள் கழித்து உங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. இனி அடிக்கடி வருவீர்கள்.

கோமதி அரசு said...

நலம் சார். மாயவரத்தை விட்டு மதுரை வந்து விட்டோம். அதனால் வீடு மாற்றும் வேலைகள். மதிரை வந்தபின் வீட்டை செட் செய்வது என்று இணையம் வர முடியாத நிலை. இனி வரவேண்டும்.

G.M Balasubramaniam said...

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்....!

கோமதி அரசு said...

சகிப்பு மனப்பானமையும், மனஉறுதியுமே அவர்களை வழிநடத்திச் செல்கிறது. அவர்கள் வாழ்விற்கான விடியலே மகளிர் தினத்திற்கு கூடுதலான அர்த்தம் கொடுக்கக் கூடியது.//

உண்மைதான் நீங்கள் சொல்வது. சகிப்புதன்மையும், மன உறுதியும் குறைந்து வருகிறது.

Related Posts with Thumbnails