13
புரந்தரதாசரை நேரில் பார்த்த மரியாதையில் சட்டென்று எழுந்து நின்று கைகுவித்தான் மோகன்.
பைஜாமாவும் அதன் மேல் முட்டி வரை ஜிப்பாவும் சந்தனக் கலரில். லேசாக நரைத்த குறுந்தாடி, சிகை கலைந்த தலை, கூர்மையான மூக்கைச் சுமந்த ஓவல் முகம், ரிம்லெஸ் கண்ணாடி, குறுகுறு பார்வை என்று வயசானாலும் களையாக இருந்தார் புரந்தரதாசர்.
"வாங்கோ.. நான் தான் புரந்தரதாசன்" என்று அவன் கைபற்றி அவர் குலுக்கிய போது அவரது தன்மையான அறிமுகமே மோகனுக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.. 'எவ்வளவு பெரிய ஜீனியஸ்?.. இப்படிச் சாதாரணமாய்..' என்று அவன் மலைத்த பொழுது, அவர் ஜீனியஸாய் இருப்பதால் தான் அலட்டல் இல்லாத வெகு சாதாரணமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை புத்திக்குப் பட்டது.
"உங்களைத் தான் பார்த்துப் போகலாமென்று வந்தேன்.." என்றவன் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான்.
"அப்படியா?" என்று கூர்ந்து அவனைப் பார்த்தவர், "பத்திரிகை பேர் என்ன சொன்னீங்க?" என்று கேட்டார்.
"'மனவாசம்'ங்கறது பத்திரிகை பேர். அதிலே, இப்போ 'இது ஒரு தொடர்கதை'ன்னு ஒரு தொடர்கதை எழுதிண்டு வர்றேன். அது சம்பந்தமாத்தான்.."
"தொடர்கதை சம்பந்தமாவா.. என்னையா?" என்று நம்பமுடியாதவர் போல் மோகனைப் பார்த்தார் அவர். "இந்தப் பத்திரிகை-- தொடர்கதைன்னாலே என் பெண்ணைத் தான் கேக்கணும்.. யூ நோ.. அவள் பயங்கர புத்தக ரசிகை.. ஒரு புத்தகமோ பத்திரிகையோ கையிலே இருந்திட்டா சோறு, தண்ணி வேண்டாம்" என்றவர், அந்த நொடியே, "வித்யா.." என்று அந்த வீடு முழுக்க கேட்கிற மாதிரி கூப்பிட்டார்.
"என்னப்பா.." என்று வீட்டினுள் எந்த இடத்திலிருந்தோ வீணை மீட்டல் மாதிரி குரல் குழைந்தது..
"இங்கே, வாம்மா.. சார் வந்திருக்கார், பாரு!" என்ற புரந்தரதாசர், மோகனைப் பார்த்து "என் பொண்ணைத் தான் பாக்க வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவ தான் இந்த பத்திரிகை, தொடர்கதை இதோடெல்லாம் தொடர்பு உள்ளவள்.." என்றார்.
வித்யாவை எதிரில் உட்காருகிற நெருக்கத்தில் இன்னொரு தடவை பார்க்கப் போவது சந்தோஷமாய் இருந்தாலும், அவள் இங்கு வருவதற்குள் விஷயத்தைச் சொல்லி விட வேண்டுமென்கிற அவசரத்தில், "உங்களைத் தான் சார் பார்க்கணும்ன்னு வந்திருக்கேன்.. அனந்தசயனம் சார் தான் உங்களைப் பத்திச் சொல்லி முகவரி கொடுத்தார்.. அதான்.." என்று இழுத்தான்.
"எந்த அனந்தசயனம்?....."
"அவரும் எங்க பத்திரிகைலே தான் எழுதறார். 'ஹலோ,தோழி'ன்னு எங்க பத்திரிகைலே ஒரு பகுதி.. அந்தப் பகுதியை குத்தகைக்கு எடுத்திருக்கறவர்."
"ஹலோ, தோழியா?.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க, யாரைச் சொல்றீங்கன்னு தெரியலே.. என் பொண்ணு வந்திடட்டும்.. எல்லாம் புரிஞ்சிடும்.." என்று தன் பெண்ணின் மீது அபார நம்பிக்கை வைத்தவராய் வீட்டின் உள்பக்கம் பார்த்தார். "வித்யா..." என்று மறுபடியும் ஒரு குரல்.. அந்தக் குரலில் அசாத்திய ஆண்மை படிந்திருப்பதை இப்பொழுது தான் மோகன் கவனித்தான்.
"என்னப்பா?.." என்று அழகுக் குவியலாய் ஆரஞ்சு ஜூஸ் குவளைகளை ட்ரேயில் தாங்கியபடி வந்தாள் அவர் செல்ல மகள்.
பார்த்தும் பார்க்காத மாதிரி அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான் மோகன். கருவிழியைச் சுழற்றி கொள்ளை கொண்டதற்கே ஆஸ்தி பூரா எழுதி வைத்து விடலாம் போலிருந்தது.
"வித்யா! சார் ஒரு எழுத்தாளர். பேர் மோகன்..." என்று சுறுசுறுப்பாக அறிமுகத்தை ஆரம்பித்தவர், சட்டென்று தயங்கி, மோகன் பக்கம் பார்த்து, "ஸாரி.. பத்திரிகை பேர் என்ன சொன்னீங்க?.." என்று கேட்டார்.
"நான் ரொம்ப சின்னவன்ங்க.. என்னைப் போய் 'ங்க..'லாம் போட்டு அழைக்க வேண்டாம்.." என்று மோகன் நெளிந்தான்.
"சரி.. இனி 'ங்க' கிடையாது.. சொல்லு, பத்திரிகை பேர் என்ன சொன்னே?" என்று சடாரென்று அவர் ஒருமையில் மாறியது இயல்பாக இருந்தது.
"தொடர்கதை பேரும், 'இது ஒரு தொடர்கதை' தாங்க.." என்று அவன் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தாள் வித்யா.. "பத்திரிகை பேர் 'மனவாசம்'ப்பா.. அதிலே தான் 'இது ஒரு தொடர்கதை'ன்னு ஒரு தொடர்கதை ஆரம்பிச்சிருக்கு.. அட! அந்தக் கதையை எழுதற மோகன் நீங்களா? ஓ வாட் எ சர்ப்ரைஸ்.." என்று அவனை விழுங்கி விடுபவள் போல பார்த்தாள் வித்யா. இது தனக்காக அல்ல, தன் எழுத்துக்கான பிரமிப்பு என்று அவன் மனம் சொல்லியது. உள் மனசோ, 'எதுக்கா இருந்தா என்ன, பிரமிப்பு பிரமிப்பு தானே, இப்போ எழுத்துக்காகன்னு ஆரம்பிக்கறதை, அந்த எழுத்தை எழுதற ஆசாமிக்காகன்னு மாத்தறது ரொம்ப சிரமமோ' என்று இடித்துச் சொல்கிற மாதிரி முனகியது.
"அப்படியாம்மா.." என்று இழுத்தார் புரந்தரதாசர். "இதுக்குத் தான் நீ வேணும்ங்கறது.. இப்போ சொல்லு.. ஏதோ 'ஹலோ, தோழி'ன்னு சொன்னாரே.. அதைப் பத்தித் தெரியுமாம்மா?"
"அனந்தசயனம் சார்ன்னா, அதை எழுதறார்.. அப்பாக்கு அவரைத் தெரியுமே?" என்று அவள் சொன்ன போது அவள் விழிகள் அளவாக விரிந்தன.
"எந்த அனந்தசயனம்,வித்யா?.. போர்ட் டிரெஸ்ட் அனந்தசயனமா?"
"சரியாப் போச்சு.. அனந்தசயனம்ன்னா அவர் ஒருத்தர் தானாப்பா? நம்ம அனந்து மாமாப்பா! ஆனாலும் இப்போ உனக்கு மறதி ரொம்ப அதிகமாயிடு த்து.. ஆனா, அப்படின்னு முழுசா சொல்லவும் முடிலே.. அது எப்படிப்பா உன்னோட ஆராய்ச்சி சமாச்சாரம்ன்னா அது மட்டும் டக்டக்ன்னு ஞாபகத்துக்கு வர்றது?.." என்று வித்யா வியந்தாள்.
மேற்கொண்டு தொடர ஒரு பிடி கிடைத்த மாதிரி இருந்தது மோகனுக்கு.. "நானும் அதுக்காகத்தான் சார் வந்தேன்.. உங்க ஆராய்ச்சி சம்பந்தமாத்தான்.. அனந்தசயனம் சார் சொல்லித் தான் தெரியும்.. இந்த பிரபஞ்சம், காந்தசக்தி.." என்று மோகன் சொன்னதும் புரந்தரதாசரின் முகம் மலர்ந்தது.
'சொல்லு, மகனே!' என்று கேட்கிற பரிவுடன் பார்வையில் வாத்சல்யம் குடிகொண்டது. "அனந்து என்ன சொன்னான்?" என்று ரொம்ப அக்கரையாகக் கேட்டார்.
அவர்கள் பேச்சில் தானும் சமயம் வாய்த்தால் கலந்து கொள்கிற தோரணையில் வித்யாவும் அவள் அப்பாவுக்கு பக்கத்தில்-- மோகனுக்கு நேர் எதிரில்-- உட்கார்ந்து கொண்டான். அவள் அங்கிருப்பது மேற்கொண்டு கேட்க வேண்டிய விஷயங்களைக் கேட்பதற்கு தடங்கலாக இருக்குமோ என்று திடீரென்று முளைத்த எண்ணத்தை மோகன் மறக்க முயற்சித்தான்.
"நிறையச் சொன்னார்,சார்." என்றவனுக்கு அனந்தசயனம் சொல்லி நினைவில் படிந்திருந்த அந்த OBE பற்றி இந்த சமயத்தில் நினைவுக்கு வந்தது. "அனந்தசயனம் சார், OBE-யை பத்தி உங்க கிட்டே கேட்டு ரொம்பவும் ஆச்சரியப்பட்டதாகச் சொன்னார். அப்புறம் பெயிண்ட் கம்பெனி.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து நாக்கைக் கடித்துக் கொண்டது போல பாதியில் நிறுதினான்.
அவன் கடைசியாகச் சொன்னதை அவர் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. "அப்படியா?.." என்று புருவங்களை உயர்தினார். "அனந்து கிட்டே எங்க வாலிப காலத்லே OBE-யைக் கத்துக்கோடான்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் மசியவே இல்லை. இதெல்லாம் எனக்கெதுக்குன்னு ஒதுங்கிட்டான். அதெல்லாம் இன்னும் ஞாபகம் வைச்சிண்டிருக்கான், பாரு!" என்று பழைய நினைவுகளில் ஆழ்கிற மாதிரி லேசாக பாதி விழிகளை மூடியவரின் முகத்தில் விகசிப்பு படர்ந்தது.
"அவர் மசியாட்டாப் போகட்டும். நான் மசியறேன். எனக்கு கத்துக்குடுக்கிறீங்களா, சார்?" என்று அவன் கேட்டதும் கலகலவென்று சிரித்து விட்டாள், வித்யா.

"பையா! எடுத்தவுடனே OBE-க்கெல்லாம் போகப்படாது. அதெல்லாம் யோகம் சித்திக்கறவங்களுக்கு தான் சித்திக்கும். அதெல்லாம் தெரிஞ்சிக்கறத்துக்கு நிறைய மனப்பக்குவம் அவசியம். அத்தனையும் படிப்படியாக் கத்துக்கற பயிற்சிகளின் அடிப்படையில் பழக்கத்துக்குக் கொண்டுவருவது" என்று அவர் பரிவுடன் சொன்னார். "அதுசரி, இதெல்லாம் எதுக்குக் கத்துக்கணும்ங்கறே?" என்று திடுதிப்பென்று குறுக்குக் கேள்வி கேட்டார்.
மோகனுக்கு சட்டென்று அவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. "கதை எழுதறதுக்கு உபயோகப்படுமேன்னு தான்.." என்று சொல்லி வைத்தான். அது தான் காரணம் என்றாலும் அப்படிச் சொல்வது வித்யாக்கும் பிடிக்கும் என்கிற எண்ணம் இருந்தது. அதனால் ஓரக்கண்ணால் அவள் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவர் முகம் சட்டென்று மாறியது. "ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ.." என்று குரல் மாற்றி கறாராகச் சொன்னார் புரந்தரதாசர். "இதெல்லாம் கத்துக்கறத்துங்கறது புஸ்தகத்தைப் படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கறதில்லே. எல்லாத்துக்கும் தன்வயப்பட்ட பயிற்சி வேணும். தன்வயப்பட்ட பயிற்சினா, தன்னை ஒண்ணுலே ஈடுபடுத்திக்கற பயிற்சி. அந்த மன ஈடுபாடு இல்லாம எது ஒண்ணும் சாத்தியப்படாது. அதனாலே ஒவ்வொண்ணையும் தான் அனுபவப்பட்டு தானே உணரணும். ஒருத்தர் சொல்லி பலர் கேட்டுக்கறதுங்கற மாதிரியான சமாச்சாரம் இல்லை, இது. அத்தனையும் யோகிகளின் முதிர்ந்த சிந்தனை. நானும் இப்போ முந்தி மாதிரி பயிற்சி வகுப்பெல்லாம் எடுக்கறதில்லை" என்று அவனிடமிருந்து கத்தரித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்.
அடுத்த வினாடியே அவன் மேல் இரங்கங்கொண்டர் போல அவர் குரல் குழைந்தது. "உனக்கு கதை எழுதறதுக்கு வேணா உபயோகப்படற மாதிரி சந்தேகம் எதுனாச்சும் இருந்தா கேளு. விவரமா உனக்குப் புரியமாதிரி சொல்றேன். குறிப்புகள் கொடுக்கறேன். அதோட திருப்தி படணும். சரியா?" என்று சம்மதம் கேட்டார்.
"ரொம்ப சந்தோஷம், சார்" என்றான் மோகன். "கோயிலுக்குப் போனா அதுவே எனக்குத் தனி அனுபவமா இருக்கு, சார். இறைவன் சன்னிதானத்தில் மனசு மிகவும் லேசாகிப் போறது. இறைவன் திருவுருவ முகத்தைப் பார்க்கும் பொழுது சந்தோஷம் கொப்பளிக்கறது. என்னை லட்சியம் செய்யாது மனம் மட்டும் குதூகலமா இறைவனோடு தனியாப் பேசற மாதிரி இருக்கு.." என்று அவன் சொன்ன போது இடைமறித்து, "உன் மனம்ங்கறது உன்னோடது இல்லியா?.. உன்னை லட்சியம் பண்ணாம அது மட்டும் தனியா இறைவனோட பேசறதுன்னு எப்படிச் சொல்றே?" என்று அவனை ஆழம் பார்க்கிற மாதிரி வினவினார் பு.தாசர்.
அவருக்கு புரியற மாதிரி அதை எப்படிச் சொல்லணும் என்பதற்கு மனசில் ரிகர்சல் பார்த்துக் கொள்கிற தோரணையில் தான் அடைந்த உணர்வுகளை வார்த்தைகளாக்கும் முயற்சியில் யோசிக்கும் பொழுது, "இதைத் தான் உங்க 'இது ஒரு தொடர்கதை' கதைலேயும் பாண்டியனின் அனுபவமா சொல்லியிருக்கீங்களா?" என்று வித்யா ஆர்வத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டது மோகனுக்கு ஆறுதலாக இருந்தது. "பேஸிக்கா என் உணர்வு அது. அதை ஒரு கதையைப் படிக்கற வாசகர்கள் என்ன விரும்புவாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சொல்லியிருக்கேன்.." என்றான் மோகன். உடனே புரந்ததாசர் பக்கம் பார்த்து சொன்னான். "கதை எழுதறதினாலேயோ என்னவோ எதை யோசிச்சாலும் மனம் தான் முன்னாடி ஓடி வர்றது. அது பாட்டுக்க நிறைய ஐடியாக்களைக் கொடுக்கும். நிறைய கற்பனைகள். இப்படி செஞ்சா என்ன அப்படிச் செஞ்சா என்னன்னு நிறைய. அதுக்காக இந்த அறிவும் சும்மா இருக்காது. அடுத்தாப்ல தான் இதோட வேலை ஆரம்பிக்கும். இது அந்த நிறையதுலே சிலதை ரிஜக்ட் பண்ணி அறிவுபூர்வமா பொருந்தற மாதிரி சிலதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். நான் மனம் சொன்னது, அறிவு திருத்தினதுன்னு ரெண்டையும் வைச்சிப்பேன். கூலா அறிவுக்கும் மனசுக்கும் நடந்த யுத்தம் கதையாயிடும். அறிவும் மனசும் எல்லா கேரக்டர்லேயும் கலந்து புரண்டு கதைங்கற ரூபம் கிடைச்சிடும்" என்றான்.
அவன் சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்த புரந்தரதாசர், "ஒண்டர்புல்.. நினைக்கறதை அருமையா நேரேட் பண்றே, பையா!" என்றார்.
அவருக்கு குஷி வந்து விட்டால் பையா என்று கூப்பிடுவார் என்று வித்யாவுக்குத் தெரியும்.. சமயத்தில் அவளைக் கூட அப்படிக் கூப்பிடுவார். அதை மனசுக்குள் குறித்துக் கொண்டே, மோகனைப் பார்த்து, "அப்புறம்?" என்றாள் அவனை உற்சாகப்படுத்துகிற மாதிரி.
"இதிலே வேடிக்கை பாருங்க, எனக்கு இந்த அறிவு- மனசு இந்த ரெண்டுக்கும் இடையேயான யுத்தம் வேண்டியிருக்கறதாலே, அந்த யுத்தம் தான் என் கதைங்கறதாலே, இந்த அறிவும் மனசும் ஒண்ணுக்கொண்ணு சமரசம் ஆயிடக்கூடாதுங்கறதிலே கண்ணும் கருத்துமா இருப்பேன். ரெண்டும் ரெண்டு சண்டை ஆடுகள் மாதிரி. ரெண்டையும் புஷ்டியா வளர்த்து வைச்சிருக்கேனாக்கும்!" என்றான் மோகன்.
"நிஜமாலுமா?.. அதை எப்படி வளர்க்கறது?" என்று வித்யா கேட்டதே ஒயிலாக இருந்தது.
"வளர்க்கறதுன்னா என்ன?.. படிக்கறது தான்.. நிறைய படிக்கறேன். அதான் தீனி, இந்த ரெண்டு ஆடுகளுக்குமே. இந்த தீனிக்காக இந்த ரெண்டும் எப்பவும் காத்திருக்கும். இப்போ கூட பாருங்க, இந்த தீனிக்காகத் தான் உங்கப்பா என்ன சொல்லப் போறார்ன்னு காத்திருக்கு" என்றான்.
"அட்டகாசம்ப்பா.." என்று எழுந்து மோகன் முதுகு பக்கம் கைவைத்து தட்டிக் கொடுத்தார் புரந்தரதாசர். "வெல்.. நீ சொல்றது புரியறது. எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன். நீ இப்ப உன்னோட அந்தக் கதை 'இது ஒரு தொடர்கதை' கதையைச் சொல்லு.." என்றார்.
"நான் சொல்றேம்ப்பா.." என்று தன்னிச்சையாக வித்யா முன் வந்த போது, மோகனின் முகம் மலர்ந்தது. அவன் மனம் சந்தோஷக் கொடியை அசைத்து அசைத்து அவனைக் குஷிப்படுத்தியது.
( இன்னும் வரும்)
12 comments:
தான் எழுதியதை இன்னொருவர் (அதைப் படித்தவர்) சொல்ல வருவது ஒரு சந்தோஷ நிகழ்வு. வித்யா மூலம் அது மோகனுக்கு வாய்க்கிறது! வித்யா மெத்தப் படித்தவளாக இருப்பார் என்பது என் அனுமானம்! (பெயர்க் குறிப்பு!) அது சரி! 'வித்யா' உங்கள் ஆஸ்தான மனம் கவர்ந்த பெயர்களில் ஒன்றா!
"இதெல்லாம் கத்துக்கறத்துங்கறது புஸ்தகத்தைப் படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கறதில்லே. எல்லாத்துக்கும் தன்வயப்பட்ட பயிற்சி வேணும். தன்வயப்பட்ட பயிற்சினா, தன்னை ஒண்ணுலே ஈடுபடுத்திக்கற பயிற்சி. அந்த மன ஈடுபாடு இல்லாம எது ஒண்ணும் சாத்தியப்படாது. அதனாலே ஒவ்வொண்ணையும் தான் அனுபவப்பட்டு தானே உணரணும். //
உண்மை. மன ஈடுபாடு இல்லாம எது ஒண்ணும் சாத்தியபாடாது தான்.
அப்புறம் பெயிண்ட் கம்பெனி.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து நாக்கைக் கடித்துக் கொண்டது போல பாதியில் நிறுதினான்.//
இங்கே எனக்கும் புரியலை. பழைய பதிவுகளையும் போய்ப் பார்த்தேன். எட்டு வரை. பெயின்ட் கம்பெனி பத்தி எங்கே வருதுனு புரியலை. மறந்திருக்கேன் போல! :(
வித்யா கதை முழுக்க வருவாளா? அல்லது ரசிகை ரசிகையாகவே இருக்கப் போறாளா?
அன்புள்ள ஜீவி. வணக்கம். இந்தக் கதையின் சில பகுதிகளைப் படிக்கும்போது , நான் எழுதிய பதிவு கடவுள் அறிவா உணர்வா -தான் நினைவுக்கு வந்தது. உங்கள் பின்னூட்டமே எனக்கு அப்போது தெரிவித்ததும் இந்த சப்ஜெக்ட்டை நான் கையாண்டவிதம் போதாது என்று நீங்கள் நினைத்ததுபோல் தோன்றியது. உணர்வு என்பதை மனம் புத்தி என்றெல்லாம் கூட எடுத்துக் கொள்ளலாம். தொடர்கிறேன்
பெயிண்ட் கம்பனி ஒண்ணுலே அக்கவுண்ட்ஸ் செக்ஷன்லே இருந்து ரிடையர் ஆனவர். பெயிண்ட் கம்பெனிக்கும் பிரபஞ்ச ஞானத்துக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு இவர்கிட்டே பேசிண்டிருக்கறச்சே எனக்குத் தோணும்.//
போன பதிவில் வரும்.
புரந்த்ரதாசர் பெயிண்ட் கம்பனி ஒண்ணுலே அக்கவுண்ட்ஸ் செக்ஷன்லே இருந்து ரிடையர் ஆனவர் என்று.
புரந்தரதாசர் கர்னாடக இசை மேதை.
அவரிடம் கொண்டுள்ள பற்றினால் தன் பெயரையும் புரந்தரதாசர் என்று மாற்றிக் கொண்ட இவர், தன் பெண்ணுக்கு வித்யா என்று பெயர் வைத்ததில் ஆச்சரியமில்லை. அந்த பெயர் கொண்டதற்கு பொருத்தமாக வித்யாவின் சிறப்புகள் பின்னால் வர இருக்கின்றன.
தொடர்வதற்கு நன்றி, ஸ்ரீராம்.
@ கோமதி அரசு
மன ஈடுபாடு இருந்தால் ஒரு செயலைச் செய்து முடிப்பதின் சிறப்பே தனி தான். இந்தமாதிரி பயிற்சிகளுக்கோ மன ஈடுபாடு தான் ஆதாரமே.புத்தியும் மனமும் முரண்பட்டாலும் இந்த இரு மாடுகளையும் பூட்டித்தான் எந்த செயல் சவாரியும் சாத்தியமாகும். அனுபவ பூர்வமாகச் சொல்லியிருக் கிறீர்கள். நன்றி, கோமதிம்மா.
@ Geetha Sambasivam
பெயிண்ட் கம்பெனி குறிப்பு பற்றி பின்னால் கோமதிம்மா சொல்லியிருக்கிறார்கள்.
//வித்யா கதை முழுக்க வருவாளா? அல்லது ரசிகை ரசிகையாகவே இருக்கப் போறாளா? //
வித்யா இஷ்டப்படி இருக்கட்டுமே!
ஈடுப்பாட்டோடு கதையைப் வாசித்து வருவதற்கு நன்றி, கீதாம்மா.
@ G.M. Balasubramaniam
எனது 'ஆத்மாவைத் தேடி' தொடரில் மனம்-புத்தி பற்றி நிறைய தகவல்கள் கொட்டிக்கிடக்கு. இவற்றின் பங்களிப்பு பற்றி நிறைய உபநிஷத்துக் கருத்துக்கள் நினைவிலாடுகின்றன.
'அறிவா- உணர்வா' என்று தர்க்கிப்பதை விடுத்து உணர்வால் அறியும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் கட்சி. எதுபற்றியும் படிப்பதினால் அறிவதையும், பார்த்ததினால் தெரிவதையும் நாமே உணர்ந்து அறியும் கட்டத்திற்குக் கொண்டு போனால் வாக்கினில் உண்மை ஒளிவீசும். (சொந்த பரிசோதனைச் சாலை சோதனை முடிவுகளுக்கு இருக்கும் மகத்துவமே அலாதி தான்.)
தொடர்ந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!
கதை முழுதும் பெயர் தேர்வு பிரமாதம்.
ஒரு இனிமையான உணர்வை வெளிப்படுத்த 'பயங்கர' என்ற சொல்லை ஏன் உபயோகிக்கிறோம்? பயங்கர ரசிகை, பயங்கரமா வாசிப்பா, பயங்கரமா பிடிக்கும்...
எழுத்தின் மீதான பிரமிப்பை எழுத்தாளர் மீதான பிரமிப்பாக நீளுவதில் இருக்கிறது.. ஆபத்து.
@ அப்பாதுரை
வாங்க, அப்பாஜி.
இன்னும் சில பெயர்கள் வரவிருக்கின்றன. அவற்றையும் பொருத்தமாக அமைக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது, உங்கள் பிரமாதத்தைக் கண்டதும்.
அடுத்த வரியிலேயே, பயங்கர சிந்தனையைக் கிளப்பியிருக்கிறீர்களே! உங்களுக்கு இது பற்றி என்ன தோன்றுகிறது?.. அறிய ஆவல்.
பிரமிப்புகள் எப்போதுமே ரசனையின் அடிப்படையில் தானே? ஆபத்து எனில் அதையும் ரசித்து பிரமிப்பாக்கி விட்டால் போச்சு.
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, அப்பாஜி.
Post a Comment