9
புரண்டு படுத்த பொழுது விழிப்பு வந்து விட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆனதால் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு எழுந்திருக்க செளகரியமாக இருந்தது. தூக்கம் கலைந்தவுடன் படுத்த வாக்கிலேயே தலை நிமிர்த்தி வால்கிளாக்கில் மணி பார்த்தான் பாண்டியன். மணி ஐந்தாகியிருப்பது உணர்வில் படிந்த அடுத்த வினாடி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான்.
சமையலறையிலிருந்து மிக்ஸி சப்தம் கேட்டு அடங்கியது. இவன் அந்தப் பக்கம் போய்ப் பார்த்த பொழுது மங்கை மிக்ஸியின் மேல் ஜாரை நீக்கி உள்ளே அரைபட்டிருப்பதை கரண்டியில் எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.
இவன் எழுந்து வந்ததைப் பார்த்தவள், "என்ன காப்பி கலக்கட்டுமா?" என்றாள்.
"மணி அஞ்சாச்சு பார்.. எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்? எழுப்பக்கூடாது?" என்று குறைப்பட்டுக் கொண்டான் பாண்டியன்.
"எவ்வளவு நேரம்?.. மூணறைக்குத் தானே படுத்தீங்க.. அசந்து தூங்கறச்சே எழுப்ப மனசு வருமா?.. லீவு நாள் தானே?.. இருக்கவே இருக்கு, விடிஞ்சா ஆபீசுக்கு கிளம்பற ரொட்டீன் வேலை ஆரம்பிச்சிடும்.. என்ன, கேட்டேனே, காப்பி கலக்கட்டுமா?"
"உம்.." என்றவன், "நீ மட்டும் என்ன?.. எனக்கு முன்னாடியே கிளம்ப வேண்டியிருக்கும். எனக்கானும் சனிக்கிழமை லீவு. உனக்குன்னா சனிக்கிழமையிலும் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு அரை நாள் அதிலே போய்டுது.. ம்.. என்ன செய்துகிட்டு இருக்கே?" என்று உள்பக்கம் வந்தான். பொட்டு பொட்டாக அவள் முகத்தில் வியர்த்திருந்தது, அவள் மீதான பரிதாபத்தைக் கூட்டியது.
கணவனின் கரிசனம் இன்னும் இவனுக்கு நிறைய வகைவகையாய் செய்து போட வேண்டும் என்கிற ஆசையைக் கூட்டியது. "வாழைக்காய் இருந்தது.. பொடிமாஸுக்கு பொடி செய்து வைச்சிருக்கேன்." என்றவாறே பிரிட்ஜிலிருந்து எடுத்த பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சத் தொடங்கினாள் மங்கை.
"எனி ஹெல்ப்?.. ஸிங்க்லேயே அதெல்லாம் போட்டுடு. நான் வந்து தேய்ச்சு வைக்கிறேன்.." என்று முகம் கழுவி வரத் திரும்பினான்.
"சரியாப் போச்சு.. இப்படி ஆம்பிளை இருந்தா, பொண்ணுங்க சதை போட்டு பெருத்துடுவாங்க.. தஸ்ஸு புஸ்ஸூன்னு அப்புறம் அவங்களுக்குத் தான் சிரமம்.."
"என்ன நீ கூட இப்படி பேசறே.. நம்ம வீட்டு வேலையைச் செய்யறதுலே கூட ஆம்பளை-பொம்பளை பாகுபாடா?.. பகிர்ந்திண்டாத்தான் ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருக்கும். மனசிலே ஆயி?.." என்று பாண்டியன் புன்னகைத்தான்.
அவள் மிதமாக கொதித்திருந்த பாலில் பெரும்பகுதியை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஒதுக்குப்புறமாக வைத்து விட்டு, மீதியிருந்த பாலில் டிகாஷனைக் கலந்து அடுப்பில் வைத்தாள். "என்ன பெரிய தொலையாத வேலை?..நாம ரெண்டு பேர் தானே?" என்று ஷெல்பிலிருந்து சர்க்கரை டப்பாவை எடுத்தாள். 'நாம ரெண்டு பேர் தானே' என்று சொன்னதில் அவளை அறியாமலேயே வார்த்தைகளில் விழுந்த அழுத்தத்தின் அர்த்தம் இரண்டு பேருக்குமே புரிந்தது.
"ரெண்டு பேர் தான். இருந்தாலும் நச்சு நச்சுனு ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு இருக்கில்லியா?.. அதுக்காகச் சொன்னேன்.." என்றான் பாண்டியன்.
"முதல்லே போய் முகமெல்லாம் கழுவிகிட்டு ப்ரஷ்ஷா வாங்க.." என்று அவன் முதுகுப் பக்கம் கைவைத்து லேசாகத் தள்ளி விட்டாள். "இப்போலாம் என்ன தனியாகவே கோயிலுக்கு கிளம்ப ஆரம்பிச்சாச்சா?" என்று கேள்வி பின்னாடி கேட்டது..
"வந்து சொல்றேன்.." என்று வாஷ்பேசினுக்குப் போனான் பாண்டியன். முகம் துடைத்து, காப்பி குடித்து எல்லாம் ஆகியும் அவனே சொல்லாததினால், மங்கையே முன்னால் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்டாள். "விபூதி- குங்குமப் பொட்டலம் கொண்டு வந்து கொடுத்ததினால் தெரிந்தது. சாயந்தரம்ன்னா நானும் கூட வந்திருப்பேன்லே?"
"திடீர்ன்னு நின்ற சீர் நெடுமாற நாயனாரைப் பாக்கணும் போல இருந்தது. அதனாலே கிளம்பிட்டேன். வேணும்னா ரெண்டு பேரும் சேர்ந்து சாயந்தரம் போனால் போச்சு.." என்றான் பாண்டியன்.
அவள் பதில் ஒன்றும் சொல்லாததினால், "அந்த ராஜா விஷயம், நீ சொன்னது சரிதான்.." என்றான்.
மங்கைக்கு கணவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. அதனால், "எந்த ராஜா விஷயம்?" என்றாள்.
"ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்னு அன்னிக்கு நீ சொன்னது என்னைத் துறத்திண்டே வர்றது, மங்கை!"
"ராஜான்னு பெயர் வைக்கலையே தவிர, யார் சொன்னாலும் சொல்லாட்டா லும் நீங்க ராஜாதான்!" என்று மங்கை புன்னகைத்தாள்.
"நான் சொல்ல வந்தது என்னன்னா, நீ அப்படிச் சொல்லிச் சொல்லி இன்னிக்கு அந்த பாண்டிய ராஜா சிலை முன்னாடி நிக்கறச்சே, ராஜா மிடுக்குன்னு சொல்லுவாங்களே, அந்த மிடுக்கு உணர்வு எனக்கும் தொத்திண்ட மாதிரி இருந்திச்சு.."
"எந்த ராஜா? மாறவர்மன் அரிகேசரியையாச் சொல்றீங்க?" என்று குறும்பாய் மங்கை பாண்டியனைப் பார்த்தாள்.
"சரியாப் போச்சு.. ஏதோ அடுத்த தெரு அம்மணியைப் பத்திக் கேக்கற மாதிரி ரொம்ப சகஜமாக் கேக்கறே?.. அரிகேசரி இல்லே; நின்ற சீர் நெடுமாற நாயனார்! போச்சுடா.. எல்லாத்தையும் மறந்தாச்சா?"
"மறக்கலே. அவர் தான் இவர். இவர் தான் அவர்" என்று மங்கை சொன்ன போது பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. "நீங்களும் வெளியே போயிருந்தீங்களா?.. அடுப்படி வேலையெல்லாம் முடிச்சிட்டு, சும்மா இருக்க பிடிக்கலே. பழைய புஸ்தகங்களையெல்லாம் எடுத்து வைச்சிகிட்டு இந்த பாண்டிய ராஜாவைப் பத்தி என்னலாம் தகவல் கிடைக்கும்ன்னு தேடிகிட்டு இருந்தேன். அப்போத் தெரிஞ்சது தான் இது. இது மட்டுமில்லே. இன்னும் சிலதும் தெரிஞ்சது.. அறுபத்து மூணு பேர் இருக்க, இந்த நாயனார் விசேஷமா உங்க கண்ணுக்குத் தட்டுப்பட்டதே எனக்கு ஆச்சரியமா இருக்கு.." என்று மங்கை சொன்ன போது, பாண்டியன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அது என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல், அவன் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஒரு கதை கேட்கும் ஆவலில், "ஏன் நிறுத்திட்டே?.. சொல்லு, மங்கை.." என்று அவள் முகத்தையே பார்த்தான்.
"அந்த ராஜாக்கு அமைஞ்ச ராணி பேரு இன்னும் விசேஷம். மங்கையர்க்கரசிங்கறது அவங்க பேரு. மங்கையர்க்கரசிங்கறதை கூப்பிடற வசதிக்காக மங்கைன்னு கூப்பிடலாமில்லியா?"
'குபுக்'ன்னு பிரவாஹமெடுத்த சந்தோஷத்திற்கு பாண்டியனால் அணை போடமுடியவில்லை. "ஓஹோஹோ.." என்று கைதட்டிக் கொண்டாடினான் .. "உன்னோட விவர சேகரிப்பு அற்புதம், மங்கை!" என்று மகிழ்ச்சியில் ஆரவாரித்தான்.. "ராஜாங்கறச்சே, எனக்கு அவ்வளவா சுவாரஸ்யப்படலே. ஆனா இப்போ ராணி பேரைத் தெரிஞ்சிக்கிட்டதும், இந்த ஒற்றுமையை நெனைச்சுப் பாத்தா என்ன சொல்றதுன்னு தெரிலே.." என்று பரபரத்தவன் திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்த நிலையில், "மங்கை.. நீ மட்டும் இல்லே. என்னோட பாட்டி பேரு கூட மங்கை தான்.. அந்த பாட்டி பத்தி என்னிக்கானும் அத்தை சொல்லியிருக்காங்களா?" என்று திகைத்துக் கேட்டான்.
"சொல்லியிருக்காங்க.. உங்க தாத்தா பேரு தெரியுமோ?" என்று அவளுக்கு அது தெரியும்ங்கற தோரணையில் கேட்டாள்.
"தெரியுமே! அவரு பேரு பராங்குசம், இல்லை?"
"கரெக்ட்! இந்தப் பேருலே இன்னொரு ஆச்சரியம் என்னன்னா, நம்ம நாயனார் ராஜோவோட பட்டப்பேரும் பராங்குசன்ங்கறது தான். கொஞ்சம் டீப்பா பாத்தீங்கன்னா, நம்ம ரெண்டு பேர் குடும்பத்து பெரியவங்க பேரெல்லாம் இப்படி மாத்தி மாத்தியே வர்றது... எங்க அப்பாவோட அம்மா பேரு நங்கை. அவங்க நினைவாத் தான் எனக்குக் கூட நங்கைன்னு பேரு வைச்சாங்க.. என்னை ஸ்கூல் சேக்கறச்சேத் தான் அந்த நங்கை, மங்கையா மாறிப் போயிடுச்சி.. " என்று சிரித்தபடி மங்கை நினைவுகளில் தோய்ந்தாள்.
"அத்தையும் மாமன் பையனைத் தானே கல்யாணம் செய்துகிட்டாங்க?.. அதனாலே அந்த ஒட்டும் உறவுக்கும் கூடவே சேர்ந்து இந்த பெயர் தொடர்ச்சியும் வந்திருக்கு.." என்ற பாண்டியன், "நம்ம குடும்ப மரம் -- பேமலி ட்ரீ-- படம் போட்டுப் பாத்தா மங்கையும் நங்கையும் பாண்டிய ராஜா பேர்களும் கிளை கிளையாய் இருக்கும்.." என்று சொல்லிச் சிரித்தான்.
"தாத்தாலாம் திருநெல்வேலி தானே?.. அப்பாரு காலத்லே தான் உத்தியோகம், டிரான்ஸ்வர்ன்னு மழபாடி போனோம். மழபாடி-பட்டீஸ்வரம் தானே சோழர் காலத்து பழையாறை?.. பழையாறை தான் மங்கையர்க்கரசி அம்மா அவதரிச்ச ஊர். சுத்தி சுத்தி உங்க நாயனார் ராஜா கதைக்கே வந்திட்டம் பாருங்க.."
பாண்டியன் ஆச்சரியத்தில் பதில் சொல்ல முடியாமலிருந்தான்.
"அம்மா ஒரு பழைய குடும்ப போட்டோ ஆல்பம் கொடுத்து இருக்காங்க, இல்லே?.. அதுலே பாருங்க. முப்பது, நாப்பது பேர் தேறும்.. ஒண்ணா உக்காந்திருக்கற ஒரு படம் இருக்கு, பாருங்க.. எத்தனை ராஜா, ராணிங்க?.. இப்போ பாத்தாலும் சிரிப்பா வரும்.. டிரங்க் பெட்டிலே தான் வைச்சிருக்கேன்.. எடுத்தாறவா?" என்ற மங்கை "அட, ஆறரை ஆச்சே?.." என்று எழுந்து வாசல் பக்கம் போய் விளக்கைப் போட்டாள். வழிப்பாதை, முன்னறை, பக்க அறை, கூடம் என்று எல்லாப் பக்கமும் குழல் விளக்குகள் ஒளி உமிழ்ந்தன.
பூஜை அறை விளக்கைப் போட்டு, குத்து விளக்கேற்றினாள். சிமிழிலிருந்து எடுத்து குங்குமம் இட்டுக் கொண்டாள். சாமி கும்பிட்டு விட்டு ஒரு ஸ்தோத்திர புத்தகம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
"நீங்களும் ரெடியாகுங்க.. இதோ, ஒரு அரை அவர்லே கிளம்பிடலாம். கோயிலுக்கு போய்ட்டு வந்து ராத்திரி டிபனுக்கு ரெடி பண்ணலாம்" என்ற மங்கைக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது பாண்டியனுக்கு. கோயிலுக்குப் போகும் வழியில் சொல்லிக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டான்.
(இன்னும் வரும்)

19 comments:
ஆஹா, நான் நினைச்ச திக்கிலே தான் பயணம்! இங்கே ஒரு சின்னப் பகிர்வு. முதல் முதல்லே எனக்கும் என் கணவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்தப்போ, என் அப்பா தஞ்சாவூர்க்காரங்க, அதோட பிள்ளைக்கு வேலை புனேயில் அவ்வளவு தள்ளி எல்லாம் கொடுக்க மாட்டேன்னு வைச்சுட்டார்.
ஆனால் எங்க மாமியார் வீட்டிலே பார்த்தப்போ என்னோட பெயரே, (சீதாலக்ஷ்மி ஜாதகப் பெயர்) அவங்களைக் கவர்ந்திருக்கு. அவங்க குடும்பத்திலேயும் இதே போல் என் மாமனாரின் தாத்தா சாம்பசிவ ஐயர், பாட்டி சீதாலக்ஷ்மி னு இருந்திருக்காங்க. அந்தப் பாட்டி அசப்பில் என்னை மாதிரியே இருப்பாங்களாம். அதே போல் ஜாதகம் பொருத்தம் பார்த்ததுமே அவங்க ஜோசியரும் இதைச் சொல்லி இருக்கார். பின்னர் நடந்ததெல்லாம் பதிவா எழுதிட்டேன். :))))
இதனால் தானோ என்னவோ என்னால் இந்தக் கதையின் போக்கை யூகிக்க முடிந்ததுனு நினைக்கிறேன். :)))))
பின்னூட்டப் பதிவாயிடுச்சோ! :)))))
இந்தப் பெயர்ப்பொருத்தம் எல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. கீதா மேடம் சொல்லும் விஷயங்களும் கூடுதல் ஆச்சர்யம்.மங்கையர்க்கரசி என்கிற மங்கை! ஆனால் 'அங்கே' வந்திருப்பது வேறு மங்கைதான்!
@ Geetha Sambasivam
என் சொந்த விஷயங்களை இதுவரைப் பகிர்ந்து கொண்டதில்லை. இதான் முதல் தடவை. நீங்கள் சொன்னதும் என் மனம் இதைச் சொல்லச் சொன்னது. அதனால் தான், இது:
என் மாமனாரின் பெயர்: சீதாராமன்
மாமியாரின் பெயர்: சீதாலஷ்மி
இவர்களின் ஒரு மகன் பெயர்: ஜெயராமன்.
மூன்று பெண்களின் கணவன்மார்களின் பெயர்கள்: கோதண்டராமன், சங்கர ராமன், வெங்கட்ராமன்.
மாமனாரின் தந்தை பெயர்: சிவராமன்.
ராமன், எத்தனை ராமனடி, குடும்பம்!
உங்கள் பதிவுகளில் சின்னச் சின்ன விஷயங்களையும் சுவையாகப் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் நயம் பிடித்திருக்கிறது.நீங்கள் சொல்வதுபோல் சொந்தத்தில் திருமணம் நடக்கும் பலருக்கும் இந்த மாதிரியான பெயர் பொருத்தங்கள் அமைவதுண்டு. பெரும்பாலும் தாத்தா பாட்டி பெயர்கள் இல்லாத குடும்பங்களைக் காண்பதே அரிது. என் அப்பா பெயர் மஹாதேவன், அவரது முதல் மனைவி பெயர் பார்வதி. இரண்டாம் மனைவி பெயர் தாக்ஷாயணி....!
நாம ரெண்டு பேர் தானே' என்று சொன்னதில் அவளை அறியாமலேயே வார்த்தைகளில் விழுந்த அழுத்தத்தின் அர்த்தம் இரண்டு பேருக்குமே புரிந்தது. //
வார்த்தைகளின் அழுத்தம் எங்களுக்கும் புரிந்தது.
என்ற மங்கைக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது பாண்டியனுக்கு. கோயிலுக்குப் போகும் வழியில் சொல்லிக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டான்.//
என்ன சொல்ல போகிறார் பாண்டியன்
என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
காச்சின பாலில் பாதியை எடுத்து வைப்பதிலிருந்து அசார்டெட் சாக்லெட் டப்பாவைத் திறக்கும் மர்ம சந்தோஷமாய் பெயர்ப் பொருத்த வரலாற்றுச் செய்திகள் வரை.. கதையைச் சீக்கிரம் படிக்கலாம்னா நடையின் சின்ன சின்ன விஷயங்கள் அப்படியே கட்டிப்போட்டு விடுகின்றன. மிகவும் ரசித்தேன்.
கீதாம்மா சொன்னதை வியந்தால் ஜிஎம்பி ஒரு ஸ்டெப் மேலே.
இதே மாதிரி பெயர் பொருத்தம், ராசிப் பொருத்தம் பத்திப் படிச்சு தெரிஞ்சுகிட்டு ஒருத்தரிடம் விவரமாகச் சொன்னேன் - அதுக்கு அவங்க, "எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு.. வேறே ஆளைப்பாரு"னு சொல்லிட்டாங்க.
ராமன் எத்தனை ராமனடி.. திட்டமிட்டதா தானாகவே அமைந்ததா? சுவாரசியம்.
என் ப்ரென்ட் வீட்டில் பிள்ளைகளுக்கு 'நாராயணன்' அல்லது 'விஷ்ணு' மரபுப் பெயர்கள், பெண்களுக்கு 'மகாலக்ஷ்மி' மரபுப் பெயர்கள் என்று எத்தனையோ தலைமுறையாகத் திட்டமிட்டுப் பெயர் வைத்து வருகிறார்கள்.
மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு குட்டித்தூக்கம்.. ஆகா, சுகம்!
//நீங்கள் சொல்வதுபோல் சொந்தத்தில் திருமணம் நடக்கும் பலருக்கும் இந்த மாதிரியான பெயர் பொருத்தங்கள் அமைவதுண்டு. //
நாங்க சொந்தம் இல்லை என்பதோடு முன், பின் அறியாதவர்களும் கூட! எனக்கு என் கணவர் ஜாதகம் வரும்வரையும் அப்படி ஒருத்தர் இருக்கிறார் என்பதே தெரியாது. என் அப்பாவோ வடக்கே திருச்சி தாண்டியோ, தெற்கே திருநெல்வேலி தாண்டியோ கொடுக்கப் போறதில்லைனு சொன்னவர். :))))
அவங்க வீட்டிலேயும் என் மாமனாருக்குச் சொந்தத்தில் தான் மருமகள் வரணும்னு ஆசை. ஆனால் மேலே இருக்கிறவன் (அப்பாதுரை, கவனிக்க) முடி போட்டதை யாராலும் மாத்த முடியலை! :)))))))))))
@ ஸ்ரீராம்
சரி, ஸ்ரீராம்.
@ G.M. Balasubramaniam
வாங்க, ஜிஎம்பீ சார்!
உங்களுக்கு பிடித்திருப்பது குறித்து ரொம்ப சந்தோஷம். இனியும் நிறைய பிடித்தங்கள் வரும், பாருங்கள்.
சொல்லப்போனால் இந்த மாதிரி பிடித்தப் பூக்களைத் தேர்ந்து தொடுத்துக் கட்டும் பொழுது அது கதை மாலை ஆகிறது; அவ்வளவு தான்.
//என் அப்பா பெயர் மஹாதேவன், அவரது முதல் மனைவி பெயர் பார்வதி. இரண்டாம் மனைவி பெயர் தாக்ஷாயணி.... //
ஆஹா..என்ன பொருத்தம் பாருங்கள்! நடக்கும் பொழுது இயல்பாய்த் தான் நடக்கிறது. ஆனால் நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு சட்டத்திற்குள் அதை அடைத்துப் பார்க்கும் பொழுது தான் அது ஆச்சரியமாகிறது போலும்!எதற்கும் ஏதாவது ஒரு சட்டம் கிடைக்கப்பெறும் என்று தான் நினைக்கிறேன். இது பற்றி கொஞ்சமே யோசித்தீர்களேயானாலும் அது ஒரு பதிவைப் பதிவதில் கொண்டு போய் விட்டு விடும் என்றும் நினைக்கிறேன். இப்பொழுதிய ஸீஸன் வழக்கப்படி தொடர் பதிவுச் சுழலில் மூழ்கடிக்காமல் இருந்தால் சரி. :))
@ கோமதி அரசு
//வார்த்தைகளின் அழுத்தம் எங்களுக்கும் புரிந்தது.. //
எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு விதையைத் தூவி வைச்சிருக்கேன்.
பார்க்கலாம். அதுவும் ஒரு ராஜா
இல்லை ராணிக்கிளை ஆகிறதோ, என்னவோ!
@ அப்பாதுரை
நீங்கள் ரசிக்காவிட்டால் தான் ஆச்சரியம்.
//அதுக்கு அவங்க, "எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு.. வேறே ஆளைப்பாரு"னு சொல்லிட்டாங்க.//
இதற்குத் தான் அப்பாஜி குறும்பு என்று பெயர்.
'எனக்கும் கூட' என்று நீங்கள் சொல்லியிருக்க மாட்டீர்களே!
@ அப்பாதுரை (2)
தானாகவே அமைந்தது. அப்படி அமைந்தது ரியல் ஆச்சரியம்!
திட்டமிட்டு அமைந்தது, வேறே!
எங்களுக்கு பையன் பிறந்தால் ஜீவா என்று பெயர் வைப்பதாயும், பெண்ணாயிருந்தால் கவிதா என்றும் தீர்மானித்திருந்தேன்.
முதலில் பையன், அடுத்த மூன்று வருடங்களில் பெண். தீர்மானித்த படியே பெயர்கள் சூட்டியாயிற்று.
ஜீவி - ஜீவா
கீதா - கவிதா
jeevagv.blogspot.in ஜீவாவின் வலைப்பூ.
@ அப்பாதுரை (3)
சுகத்திலுறும் பயன் கொலஸ்ட்ராலோ!
ஆயினும்--
தூக்கத்திற்கு முன்பு தெரியாத,
தூக்கத்தின் போதும் தெரியாத,
தூங்கி விழித்த பின்னே தெரியும்
அந்த சுகத்தின் சுகந்தம்.. ஆவ்!
@
//என் அப்பாவோ வடக்கே திருச்சி தாண்டியோ, தெற்கே திருநெல்வேலி தாண்டியோ கொடுக்கப் போறதில்லைனு சொன்னவர். :))))//
கீதாம்மா! அதனால் தான் இப்பொழுதும் திருச்சி தாண்டாமல் திருச்சியிலேயே ஸ்ரீரங்கம் என்று இப்பொழுதிய வசிப்பிடம் ஆயிற்றோ!
இப்படியே தேடிப் பாருங்கள், அம்பத்தூருக்கும் ஏதாவது காரணம் இருக்கும்! நிஜமாகவே!
/ஆஹா..என்ன பொருத்தம் பாருங்கள்! நடக்கும் பொழுது இயல்பாய்த் தான் நடக்கிறது. ஆனால் நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு சட்டத்திற்குள் அதை அடைத்துப் பார்க்கும் பொழுது தான் அது ஆச்சரியமாகிறது போலும்!எதற்கும் ஏதாவது ஒரு சட்டம் கிடைக்கப்பெறும் என்று தான் நினைக்கிறேன். இது பற்றி கொஞ்சமே யோசித்தீர்களானால்..?/யோசித்தேனே
பலனாகஒரு பதிவும் எழுதி இருக்கிறேன்.” முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்”படிக்க:
gmbat1649.blogspot.in/2011/03/blog-post_14.html
அன்பு ஜீவிக்கு, என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி. இம்மாதிரி எழுத உங்களை மாதிரியான discerning வாசகர்களால்தான் முடியும். மீண்டும் நன்றி.
Post a Comment