'குமுதம்' பத்திரிகையில் 'இதுவரை எதிலும் வெளிவராத சுஜாதா எழுதிய அமர்க்களத் தொடர்' என்று ஆவலைத் தூண்டும் பில்டப் கொடுத்து இந்த வாரத்திலிருந்து சுஜாதாவின் தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.
தொடரை வாசித்ததில் அந்த சாவகாச எழுத்தைப் பார்த்து சுஜாதாவின் எழுத்துப் பாணியா இது என்று ஆச்சரியம் ஏற்பட்டது. அவரின் எழுத்து மயக்கத்தில் திளைத்த வாசக உள்ளங்களுக்குத் தான் வெளிச்சம்!..
இந்த வார அந்தத் தொடரை வைத்து சில சின்னச் சின்ன புதிர்கள்.
புதிர்--1: நான் எழுதிப் போட்ட மூன்று கதைகள் சு.அ.ப. போல உடனே திரும்பி வந்தன.
கேள்வி: அது என்ன சு.அ.ப.?..
சு.அ.ப. போல இன்னொன்று:
கி.போ.க.
(இதுவும் பத்திரிகை அலுவலங்களுக்கு
அனுப்பபடும் கதைகள் குறித்துத் தான்! )
புதிர்--2: எஸ். ரங்கராஜனாகிய நான் ஒரு தற்செயலாய்த் தான் சுஜாதா ஆனது போலத் தோன்றுகிறது.
கேள்வி: மேலே கண்ட வாக்கிய அமைப்பில் ஒரு பிழை உள்ளது. என்ன அது?..
தொடரின் இடுக்கில் சுஜாதாவின் வாக்குமூலம் போல அவரது அட்வைஸ் ஒன்று என்னைக் கவர்ந்தது.
அது இது:
"நான் பார்த்த வரைக்கும் என் திறமையெல்லாம் -- திறமை என்று ஏதாவது இருந்ததென்றால்-- அவாய்டிங் பேட் ரைட்டிங்!.. (தண்டமாய் எழுதுவதைத் தவிர்த்தல்) என்னுடையது நல்ல எழுத்து (குட் ரைட்டிங்) என்று நான் சொல்ல மாட்டேன். நல்ல எழுத்துக்கு முயற்சி செய்கிறேன். அவ்வளவு தான். ஆனால் மோசமான எழுத்தைத் தவிர்க்கிறேன்.
பத்திரிகைகள் நினைத்தால் எதையும் கவிதை என்று லேபிள் குத்தி உலா விடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.
எதுகை மோனை எல்லாம் கவிதையில் அநாவசியம் என்று சிலர் கருதுவது போலத் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ -----
எதுகை மோனை
இல்லையென்றால்
ஏது கவிதை
என்று தோன்றுகிறது.
இப்பொழுதெல்லாம் கவிதை
என்றால் இப்படித்தான் என்று
எழுதினாலும் என் பாணியில்
என் கவிதை ஒன்று:
ஒரு பார்வை:
அய்யோடி!... இந்தக் கிளிகளுக்குத் தான்
கொய்யா என்றால் எத்தனை ஆசை!
ஒரு கொத்து; ஒரு துளி கவ்வல்; நிமிர்ந்து
ஒரு பார்வை; இப்படி அப்படி தலை திருப்பல்
அடுத்து அடுத்த கொத்தல்; கவ்வல்; தலை திருப்பல்
கெளசல்யாவுக்கு கொய்யான்னா பிடிக்காது அதனால்
கொய்யா சாப்பிடும் கிளிகளும் பிடிக்காது!
பாமினியே ஒரு சுதந்திரப் பறவை. அதனால்
பறக்கும் கிளி தான் அவளுக்குப் பிடிக்கும்;
கூண்டுக்கிளியைப் பார்க்கவே சகிக்க மாட்டாள்.
ரம்யாவிற்கோ கிளியைப் பிடிக்காவிடினும் அதன்
கழுத்து வளையம் ரொம்பவும் பிடிக்கும்.
ஜெயத்திற்கோ ஓவியம் என்றால் உயிர்
கேட்டால் ஓவியக்கிளியின் ஒயில்
நிஜக்கிளிக்கு வருமா என்பாள்.
கிளியோ புலியோ எதுவோ ஒன்று;
அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே
அது தான் வேடிக்கை.
எழுத ஆரம்பித்து மூன்று தொடர்கள் அப்படியே அரைகுறையாக நிற்பது வருத்தமாக இருக்கிறது.
1. ஆத்மாவைத் தேடி...
2. இனி...
3. அழகிய தமிழ் மொழி இது!
முதலில் சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் எழுத முயன்ற 'அழகிய தமிழ் மொழி இது' தொடரை விரைவில் தொடர்ந்து முடித்து விடுவதாக இருக்கிறேன்.
அதற்கு அடுத்து இனி.. தொடரை தொடர ஆரம்பிக்க வேண்டும்.
கடைசியாகத் தான் 'ஆத்மாவைத் தேடி..' ஆனால் 'ஆத்மாவைத் தேடி..க்காகத் தான் தேடித் தேடி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த முப்பெரும் ப்ரொஜெக்ட்டும் ஒரு பக்கம் மனசில் அலை பாய்ந்து கொண்டிருக்க இடையில் தான் இந்தப் பதிவு மாதிரி ஜல்லியடித்தல் எல்லாம்..
பூவனம் தளப் பதிவுகளை சலிக்காமல் வாசித்து பின்னூட்டம் இடும் பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றி.
படங்கள் உதவிய நண்பர்களுக்கும் நன்றி.
தொடரை வாசித்ததில் அந்த சாவகாச எழுத்தைப் பார்த்து சுஜாதாவின் எழுத்துப் பாணியா இது என்று ஆச்சரியம் ஏற்பட்டது. அவரின் எழுத்து மயக்கத்தில் திளைத்த வாசக உள்ளங்களுக்குத் தான் வெளிச்சம்!..
இந்த வார அந்தத் தொடரை வைத்து சில சின்னச் சின்ன புதிர்கள்.
புதிர்--1: நான் எழுதிப் போட்ட மூன்று கதைகள் சு.அ.ப. போல உடனே திரும்பி வந்தன.
கேள்வி: அது என்ன சு.அ.ப.?..
சு.அ.ப. போல இன்னொன்று:
கி.போ.க.
(இதுவும் பத்திரிகை அலுவலங்களுக்கு
அனுப்பபடும் கதைகள் குறித்துத் தான்! )
புதிர்--2: எஸ். ரங்கராஜனாகிய நான் ஒரு தற்செயலாய்த் தான் சுஜாதா ஆனது போலத் தோன்றுகிறது.
கேள்வி: மேலே கண்ட வாக்கிய அமைப்பில் ஒரு பிழை உள்ளது. என்ன அது?..
தொடரின் இடுக்கில் சுஜாதாவின் வாக்குமூலம் போல அவரது அட்வைஸ் ஒன்று என்னைக் கவர்ந்தது.
அது இது:
"நான் பார்த்த வரைக்கும் என் திறமையெல்லாம் -- திறமை என்று ஏதாவது இருந்ததென்றால்-- அவாய்டிங் பேட் ரைட்டிங்!.. (தண்டமாய் எழுதுவதைத் தவிர்த்தல்) என்னுடையது நல்ல எழுத்து (குட் ரைட்டிங்) என்று நான் சொல்ல மாட்டேன். நல்ல எழுத்துக்கு முயற்சி செய்கிறேன். அவ்வளவு தான். ஆனால் மோசமான எழுத்தைத் தவிர்க்கிறேன்.
பத்திரிகைகள் நினைத்தால் எதையும் கவிதை என்று லேபிள் குத்தி உலா விடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.
எதுகை மோனை எல்லாம் கவிதையில் அநாவசியம் என்று சிலர் கருதுவது போலத் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ -----
எதுகை மோனை
இல்லையென்றால்
ஏது கவிதை
என்று தோன்றுகிறது.
இப்பொழுதெல்லாம் கவிதை
என்றால் இப்படித்தான் என்று
எழுதினாலும் என் பாணியில்
என் கவிதை ஒன்று:
ஒரு பார்வை:
அய்யோடி!... இந்தக் கிளிகளுக்குத் தான்
கொய்யா என்றால் எத்தனை ஆசை!
ஒரு கொத்து; ஒரு துளி கவ்வல்; நிமிர்ந்து
ஒரு பார்வை; இப்படி அப்படி தலை திருப்பல்
அடுத்து அடுத்த கொத்தல்; கவ்வல்; தலை திருப்பல்
கெளசல்யாவுக்கு கொய்யான்னா பிடிக்காது அதனால்
கொய்யா சாப்பிடும் கிளிகளும் பிடிக்காது!
பாமினியே ஒரு சுதந்திரப் பறவை. அதனால்
பறக்கும் கிளி தான் அவளுக்குப் பிடிக்கும்;
கூண்டுக்கிளியைப் பார்க்கவே சகிக்க மாட்டாள்.
ரம்யாவிற்கோ கிளியைப் பிடிக்காவிடினும் அதன்
கழுத்து வளையம் ரொம்பவும் பிடிக்கும்.
ஜெயத்திற்கோ ஓவியம் என்றால் உயிர்
கேட்டால் ஓவியக்கிளியின் ஒயில்
நிஜக்கிளிக்கு வருமா என்பாள்.
கிளியோ புலியோ எதுவோ ஒன்று;
அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே
அது தான் வேடிக்கை.
எழுத ஆரம்பித்து மூன்று தொடர்கள் அப்படியே அரைகுறையாக நிற்பது வருத்தமாக இருக்கிறது.
1. ஆத்மாவைத் தேடி...
2. இனி...
3. அழகிய தமிழ் மொழி இது!
முதலில் சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் எழுத முயன்ற 'அழகிய தமிழ் மொழி இது' தொடரை விரைவில் தொடர்ந்து முடித்து விடுவதாக இருக்கிறேன்.
அதற்கு அடுத்து இனி.. தொடரை தொடர ஆரம்பிக்க வேண்டும்.
கடைசியாகத் தான் 'ஆத்மாவைத் தேடி..' ஆனால் 'ஆத்மாவைத் தேடி..க்காகத் தான் தேடித் தேடி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த முப்பெரும் ப்ரொஜெக்ட்டும் ஒரு பக்கம் மனசில் அலை பாய்ந்து கொண்டிருக்க இடையில் தான் இந்தப் பதிவு மாதிரி ஜல்லியடித்தல் எல்லாம்..
பூவனம் தளப் பதிவுகளை சலிக்காமல் வாசித்து பின்னூட்டம் இடும் பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றி.
படங்கள் உதவிய நண்பர்களுக்கும் நன்றி.
20 comments:
சு எ ப
சுவரில் அடித்த பந்து!
நான், தற்செயலாகத்தான் என்று வந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.. "ஒரு" அங்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்!
கவிதைகள் இப்போதெல்லாம் இப்படித்தான் விகடன் உட்பட எல்லா வார இதழ்களிலும் வருகின்றது!
சுவற்றில் அடித்த பந்து, "ஒரு" வரக்கூடாது "தற்செயலாய்த்தான்" ஓகே. மீதிக்கு அப்புறம் வரேன்
//மோசமான எழுத்தைத் தவிர்க்கிறேன்.//
அவர் சொல்வது அருமை.
நல்ல எழுத்தை எழுத வில்லையென்றாலும் மோசமான எழுத்தைத் தவிர்க்கலாம்.
//அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே//
சுஜாதா சொல்வது போல் ஏதோ ஒன்று கிடைத்தால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏற்படும்.
மூன்று தொடர்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.
வாராந்தரிகள் படிப்பதே இல்லை என்பதால் உங்கள் கேள்விகள் புரியவில்லை. ரொம்ப நாள் கழிச்சுப் பதிவிட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.
@ ஸ்ரீராம்
ஸ்ரீராம், சு.அ.ப. சரி.
அப்போ, கி.போ.க.?
தொடர்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். அவ்வப்போது மாற்றத்திற்காக இதுபோன்ற பதிவு தேவையே.
கிணற்றில் போட்ட கல்
"மூன்று தொடர்கள் அப்படியே அரைகுறையாக நிற்பது " - ஆமாம் ஜீவி சார். தொடர்கள் பாதியில் அம்போ என்று இருக்கின்றன, இடைவெளியும் மிக மிக அதிகம். கண்ணி விட்டுப் போனதுபோல் ஆகிவிடுகிறது.
இருந்தபோதும், "அழகிய தமிழ் மொழி", மற்றவைகளும் அந்த அந்த இடுகைகளும் தனித் தனியாகப் படித்து இன்புற முடியும். வாராந்திரத் தொடர்கதைபோல் ஒரு சஸ்பென்ஸுடன் நிறுத்தியிருந்தால்தான் தொடர்ச்சி இல்லாமல் கஷ்டமாக இருக்கும்.
மீண்டும் வாரம் ஒரு இடுகையாவது இந்தத் தலைப்புகளில் இப்போதிலிருந்து இடுவது என்று வைத்துக்கொண்டு ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்.
தொடர் என்றால் பழைய பதிவுகளையும் நினைப்பூட்ட வேண்டும் இல்லை என்றால் படித்த நிறைவு இருக்காது விஷ் யூ லக்
குமுதம் வாங்காததால் நீங்கள் கேட்ட புதிர் 1 க்கான பதில் தெரியவில்லை. புதிர் 2 க்கான சரியான பதிலை திரு ஸ்ரீராம் சரியாக சொல்லிவிட்டார்.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். எழுதுவது பற்றி அவர் சொன்ன அறிவுரை என்னையும் கவர்ந்தது.
எதுகை மோனை இல்லாக் கவிதை கரை இல்லாத கால்வாய்/ஆறு போன்றது. இருப்பினும் புதுக்கவிதைப் பாணியில் எழுதியுள்ள கவிதையும் நன்றாகவே இருக்கிறது.
விட்டுப்போன மூன்று தொடர்களையும் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தொடரவும்.
பெ ட.
@ நெல்லைத் தமிழன்
ஸ்ரீராம் -- சுவரில் அடித்த
நெ.த. -- சுவற்றில் அடித்த
எது சரி?..
ஆமாம். ஒரு வரக்கூடாது. சுஜாதா இந்த 'ஒரு'வை சகட்டு மேனிக்கு உபயோகிக்கும் வழக்கம் கொண்டவர்.
@ கோமதி அரசு
//அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே//
//சுஜாதா சொல்வது போல் ஏதோ ஒன்று கிடைத்தால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏற்படும்.//
'ஏதோ ஒன்று கிடைத்தால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏற்படும்'-- என்பது நான் சொன்னது கோமதிம்மா.
'பத்திரிகைகள் நினைத்தால்'.. என்று ஆரம்பிப்பதிலிருந்து வேறு பகுதி ஆரம்பிக்கிறது.
அதற்காகத் தான் அந்த 'ப'-வை கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறேன்.
@ கீதா சாம்பசிவம்
வார இதழ்கள் படிப்பதற்கும் இந்தப் புதிர்களுக்கும் சம்பந்தமே இல்லை.
சுவரில் அடித்த பந்து -- அடித்த பக்கமே திரும்பி வரும்.
கிணறில் போட்ட கல் -- அப்படியே தண்ணீருக்கும் ஆழ்ந்து அமிழ்ந்து கிடக்கும்.
பத்திரிகைகளுக்கு படைப்புகள் அனுப்பினால் சில நாட்களில் நமக்கே திரும்பி வந்து விடும். அல்லது அனுப்பிய படைப்பு பற்றி மாதக்கணக்கில் நமக்கு எந்தத் தகவலும் தெரியாது இருக்கும்.
எழுத்தாளர் அகிலன் தனது 'பாவை விளக்கு' நாவலில் கதை நாயகன் தணிகாசலம் வாயிலாக சு.அ.ப பற்றியும் கி.போ.க. பற்றியும் சொல்லியிருப்பதாகப் படித்த நினைவு.
எனக்கும் இப்படியான அனுபவங்கள் நிறைய உண்டு.
திரும்பி வரும் கதைகளில் கதையின் முதல் பக்கத்தில் பத்திரிகை பத்திரிகை அலுவலகத்தின் முத்திரை குத்தி அச்சடித்த ஒரு துண்டு சீட்டில், தங்கள் படைப்பு
பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு வருந்துகிறோம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். ஆ.வி. மட்டும் இதைக் குறிப்பிட்டு தங்கள் படைப்பின் தகுதி பற்றி முடிவாக இதைக் கொள்ளக்கூடாது என்கிற மாதிரி ஒரு வரி சேர்த்திருப்பார்கள்.
நான் என்ன செய்வேன் என்றால் அந்த முதல் பக்கத்தை மட்டும் எடுத்து விட்டு வேறு காகிதத்தில் அந்த முதல் பக்க விஷயத்தை எழுதி வேறு பத்திரிகைக்கு அனுப்பி வைத்து அவை அந்தப் பத்திரிகையில் பிரசுரமான அனுபவங்களும் உண்டு.
எந்தப் பத்திரிகைக்கு எந்த மாதிரியான விஷயம் ஒத்து வரும் என்பதை புரிந்து கொள்வதே தனிக் கலை.
சுஜாதா தன் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குமுதத்திற்கு பக்தி சம்பந்தமான கதை- கட்டுரை அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பார்.
சன் டீவியில் பக்தி சம்பந்தமான விஷயங்களுக்கும் தனி நேரம் ஒதுக்கி ஒளிபரப்புவது மாதிரி குமுதத்திலும் பக்தி சம்பந்தமான பகுதிகள் எக்கச்சக்கம். கல்யாணராமன் அந்தப் பகுதிகளை விசேஷ கவனத்துடன் கவனித்துக் கொள்கிறார்.
இதெல்லாம் தமிழகத்தில் ஆன்மீக ஆர்வம் மக்களிடம் கூடியிருப்பதற்கு எடுத்துக் காட்டுகள்.
'மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்பது போல் மக்களின் ஆர்வம் எப்படியோ அப்படியே தான் பிரசுர, ஒளிபரப்பு விஷயங்கள் எல்லாமே.
தங்கள் வாசிப்பிற்கும் வருகைக்கும் நன்றி.
@ Dr. B.J.
நன்றி, ஐயா. தாங்கள் சொல்வது சரியே. அந்தக் காலத்தில் பஸ் நிலையங்களில் பல் பொடி, மூலிகை சமாச்சாரங்கள் விற்க வருபவர் பாம்பு--கீரி துவந்த யுத்தம் நடக்கப் போவதாக போக்குக் காட்டி தன் விற்பனைக்கு ஆட்கள் சேர்க்கிற மாதிரி தான் இதெல்லாம்.
இதிலேயே ஆழ்ந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையும் உண்டு.
@ நெல்லைத் தமிழன்
சபாஷ், நெ.தமிழன்!.. சரியான பதிலைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
@ நெல்லைத் தமிழன்
கை விட்டதால் நிர்க்கதியாய் நிற்கும் நிலை தான் அம்போ.
இந்தத் தொடர்கள் அப்படி அல்ல. எந்நேரமும் என் மனதில் கனன்று கொண்டே தான் இருக்கின்றன.
ஒவொன்றும் வெவ்வேறு சப்ஜெக்ட். சமூகம், சரித்திரம், ஆன்மீக ஆராய்ச்சி என்று.
வேண்டும் என்றே சிக்கல்களில் தலை கொடுத்தது. அப்படி தலை கொடுத்தலிலும் சொல்லவொண்ணா ஒரு சுகம் இருக்கிறது. அந்த சுகத்தை தீரத் துய்ப்பதற்கும் தீர்மானமான அவகாசம் வேண்டியிருக்கிறது. அதான் நடந்து கொண்டிக்கிறது.
ஆச்சா போச்சா வேலை இல்லை. எனக்கு முழு திருப்தி என்றால் தான் பரிமாறுவேன்.
பரிமாறுவது பிரமாதமாக இருக்கும் என்பதற்கு நான் கியாரண்டி. அதனால் தான் நீங்கள் சொல்லும் அந்த 'இருந்த போதும்' சாத்தியமாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
தாங்கள் சொல்லியிருப்பதற்கு முயற்சிக்கிறேன். நன்றி.
@ வே. நடனசபாபதி
//எதுகை மோனை இல்லாக் கவிதை கரை இல்லாத கால்வாய்/ஆறு போன்றது. இருப்பினும் புதுக்கவிதைப் பாணியில் எழுதியுள்ள கவிதையும் நன்றாகவே இருக்கிறது.//
எதுகை மோனையுள்ள இந்தக் கால கவிதைக்கு எடுத்துக்காட்டாகத் தானே எனது அந்தக்
கவிதையை எடுத்துப் போட்டிருக்கிறேன்.
எழுதுவது பற்றி அகிலன், ரா.கி.ரங்கராஜன், இப்போதைக்கு சுஜாதா என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார்கள். சுஜாதா சொல்லியிருப்பதை
பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே தவிர மொத்தத்தில் இலக்கியம் படைப்பது எப்படி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிகிறது. ஆனால் சுவாரஸமாக எழுதுவது எப்படி என்பதற்கு சுஜாதா தான் அதாரிட்டி.
அதில் அவரை விஞ்ச ஆளில்லை.
இந்தத் தொடருக்கு 'எப்படி எழுதக் கூடாது?' என்று தலைப்புக் கொடுத்திருப்பது தான் ஹைலைட்! எதிர்மறை மூலமாக நேர்மறைக்கான ஒரு முயற்சி.
தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி, சார்.
@ Durai.A.
//பெ ட //
அன்பு அப்பாஜியின் முத்திரை.
@ GMB
//தொடர் என்றால் பழைய பதிவுகளையும் நினைப்பூட்ட வேண்டும் இல்லை என்றால் படித்த நிறைவு இருக்காது..//
நினைப்பூட்ட வேண்டும் என்ற அவசியமே இருக்காது, ஜிஎம்பீ ஐயா.
'பூவனம்' தளத்தின் வலது பக்க ஓரம் 'தலைப்புகள்' என்ற தலைப்பின் கீழ் நான் தொடரப் போகும் தொடர்கள் முந்தைய அத்தியாயங்கள் வரிசையாகக் காணக் கிடைக்கின்றன. அவற்றை அவ்வப்போது ரெஃப்ர் பண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.
சந்தேகம் ஏற்பட்டால் நீங்களும் அப்படிச் செய்ய வேண்டுகிறேன்.
Post a Comment