மின் நூல்

Thursday, August 15, 2024

வெங்கட் சாமிநாதன் நினைவில்...

ரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் பலவற்றை பிரமிப்புடன் படித்திருக்கிறேன்.

இலக்கியம்,இசை,நடனம்,நாடகம்,ஓவியம்,சிற்பம்,சினிமா என்று எதையும் விட்டுவைக்காமல் நிறைய எழுதியிருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பேசப்படுபவபற்றி தன் கருத்து என்ன என்பது பற்றி கொஞ்சம் கூட ஒளிவு மறைவோ, எவ்வித சார்போ இன்றி பதிந்தவர் விமரிசனக் கலைஞர் வெங்கட் சாமிநாதன் அவர்கள்.

சமீபத்தில் அவரது நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002 லிருந்து 2004 வரை என்று கூடச் என்று சொல்லலாம், பல்வேறு இலக்கிய பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. "கலை உலகில் ஒரு சஞ்சாரம்" என்பது புத்தகத்தின் பெயர். சென்னை சந்தியா பதிப்பகத்தார் நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்திலிருந்து 'கலை உணர்வுகளும் எதிர்வினைகளும்' என்னும் தலைப்பிட்ட ஒரு கட்டுரையின் சில பகுதிகள் இவை. ஆற்றொழுக்காக அவர் விவரிப்பதை தொடர்ச்சி குலையாமல் படிப்பதே ஓர் அனுப்வம். என் வார்த்தைகளில் அதை எடுத்துச் சொல்லப் போய் அந்த அழகு கெட்டு விடுமோ எங்கிற அச்சத்தில் அப்படியே அவர் உணர்ந்ததை வரிக்கு வரியாய், உங்கள் ரசனைக்கு...

இனி வெங்கட்சாமிநாதன் அவர்களின் வார்த்தைகளில்:


"பிக்காஸ்ஸோவின் கலைப்பயணம், நிறைந்த மாறுதல்களைக் கொண்டது. முற்றிலும் வித்தியாசமானது எனத்தோன்றும் எண்ணற்ற கட்டங்களைக் கொண்டது. தன் கலை உண்டு தானுண்டு என்று இருந்தவர் போலத்தோன்றினாலும் நாட்டின் நிகழ்வுகள், சரித்திர மாற்றங்கள் அவரை வெகுவாகப் பாதித்ததுண்டு. அப்பாதிப்புகளுக்கு அவரது அங்கீகாரமும் நிராகரிப்பும் அவரது வாழ்க்கைச் செயல்பாடுகளில், கலைப்படைப்புகளில் தடம் பதிக்கும். அவரது நிலைப்பாடு வெளிப்படையானது. பதிவு பெற்றது. தான் பிறந்த ஸ்பெய்ன் நாட்டில் ஜெனரல் ஃப்ராங்கோ இருக்கும் வரை காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்றவர். அந்நாளைய கம்யூனிஸ்ட் பார்ட்டியோடு அனுதாபம் கொண்டவர் என்றாலும், அவருடைய கலை உலகத்திற்கும்,கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கலைக்கொள்கைகளுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது. இரு தரப்பாருக்கும் இதில் சமரசம் சொல்லப்படாது நிர்ணயித்துக் கொள்ளப்பட்டது.

க்யூபிஸம் என்ற பெயர் ஓவிய உலகில் பிரஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னாலேயே 1907-ல் Demoiselles d'Avignon தீட்டப்பட்டது.(இதைத் தமிழ் எழுத்துக்களில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. நானும் கஷ்டப்படவில்லை) அதற்கு முன்னர், பாரிஸ்க்கு தன் 18-19வது வயதில் வருவதற்கு முன்னர் அவர் பல கட்டங்களை கோயா போலவும், வ்ளாமிங்க் போலும் வண்ணங்களை, ரூபங்களைக் கையாண்டார். இம்ப்ரெஸனிஸமும் தலைகாட்டியதுண்டு. நலிந்த, அசிங்கப்பட்ட மனிதர்கள், விலைமாதர்கள், பிச்சைக்காரர்கள் இவரது சித்திரங்களில் நிறைந்திருந்தனர். அது தாண்டி நீல வண்ணக்கட்டம் என ஒரு காலம். பின் சுமார் 10 ஆண்டுகள் 1905 லிருந்து 1915 வரை, மிகுந்த மாற்றங்கள். பாரிஸ் கலைச்சூழலிலும் பிக்காஸோவின் கலைச்செயல்பாடுகளிலும் நிகழ்ந்தன. பல சைத்ரிகர்கள், ஒன்றிணைந்தும், ஒன்று கூடியும் (நட்புறவிலும், தம் கலை அணுகுமுறைகளிலும்) எண்ணற்ற மாற்றங்களை நிகழ்வித்தனர். அப்போது இவர்கள் எல்லோருக்கும் ஆதரவாக இருந்தவர் அபோலினேர் என்ற கவிஞர். அக்காலகட்டத்தில் அவரும் ஒரு சக்தி. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பிரிந்த இணைந்த சைத்ரிகர்கள் எல்லோருக்குமாக அவர் வாதிடுபவர்.

ஆனால் அவர் முதன்முறையாக பிக்காஸோவின் சித்திரத்தின் முன் நின்றபோது அதோடு தன் ரசனையை உறவுபடுத்திக்கொள்ள தடுமாறினார். அவர் பழகியது, ரசனையை வளர்த்துக் கொண்டது, பழைய கட்டடங்களில் வளர்ந்த ஓவியங்களோடு. இப்போது டிலானே, லெகர் பிக்காஸோ போன்றோர் ஓவியங்களின் ரசனையை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஒரு புறம் இந்த ஓவியங்கள் அவரைக் கவரவும் செய்தன. ஆனால் அவர் வளர்த்துக்கொண்ட ரசனைக்கு அவை சவாலாகவும் இருந்தன.

ஆனால் அடிப்படையான விஷயம், சவால் இருந்தாலும், அவை அபாலினேவைக் கவர்ந்தன. ஏன், எப்படி, எந்தக் கோட்பாட்டுப் பார்வையில் என்ற கேள்விகள் எழாமல் சட்டென அவர் Sensibilityக்கு உறவு கொண்டவை ஆயின.

ஆனால் இது ஒரு ஓவியம். முதலில் எதிர்கொள்ளும் ஒரே ஒரு ஓவியம் பற்றி அடைபட்டுப் போகும் விஷயம் அல்ல. தொடர்ந்து பிக்காஸோ, தன் வரைந்த மாற்றங்களால், ஒவ்வொரு முறையும் அபாலினேரின் மாறிவரும் ரசனைகளுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் பிக்காஸோ சவாலாகவே இருந்து வந்தார். இது ஒரு தொடர்ந்த ஓட்டப்பந்தயம் போல பிக்காஸோ முன் ஓட இவர் பின்னால் தொடர்வது போல, பிக்காஸோ அந்த பத்துவ்ருடங்களில் செய்துள்ள மாற்றங்களை கொணர்ந்த் புதுமைகளைத்தான் பின் வந்த அறுபது எழுபது வருடங்கள் மெல்ல மெல்ல ஜீரணித்துக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள். 1907-ல் இன்றும் வந்திராத க்யூபிஸித்தின் தன் காலைப் பதித்த பிக்காஸோ பின் அதை விட்டு சீக்கிரம் நகர்ந்துவிட்டார். ஆனால் பாரிஸூம் ஐரோப்பிய ஓவிய உலகமும் ஓவியர்களும், க்யூபிஸத்திலே வெகு வருடங்கள் தொடர்ந்தனர். தன் நீலவண்ண கட்டத்தைத் தவிர, வேறு எந்த கட்டத்திலும் பிக்காஸோ வெகுகாலம் தொடர்ந்து இருந்ததில்லை.

ஓவியர்கள் தமக்குள் தமது ஓவிய அணுகுமுறை பற்றி சண்டை இட்டுக்கொள்வார்கள். பத்திரிகை விமர்சகர்கள் தாக்குவார்கள். ஆனால் தானே இந்த மாறிவரும் சூழலுக்கு ஈடுகொடுத்து வர இயலாத நிலையிலும் தமக்குள் சண்டை இடும் இவர்கள் எல்லோர் சார்பிலும் நீங்கள் எப்படி பரிந்து பேச முடிகிறது? என்ற கேள்வி அபாலினேரைத் தாக்கியதுண்டு. அவர் சொல்வார்: "அவர்கள் நியாமற்றுத் தாக்கப்படுகிறார்கள். அதனால்தான் நான் அவர்களுக்காக வாதாடுகிறேன்" என்பார்.

புதிய சோதனைகள் புரிந்து கொள்ளபடாமல் இருக்கலாம். ஆனால் அவை ஒரு தளத்தில் உறவு கொள்கின்றன. Sensibility என்ற தளத்தில். அதனால் தான் எவ்வளவு மாற்றங்கள் எவ்வளவு விரைவாக நிகழ்ந்தாலும்,தன் புரிதலுக்கு எவ்வளவு சவாலாக இருந்தாலும் அபாலினேர் அவர்களோடு உறவு கொள்ள முடிந்தது. ஓவிய உலகிலும், சுற்றியுள்ள சூழலிலும் நிகழும் மாற்றங்களையும் அவாலினேர் தன் கவிதைகளிலும் பிரதிபலிக்க முடிந்திருக்கிறது.

இந்த புரிதல் என்ற முரண்படும் தளமும், கலை உணர்வு என்ற உறவுபடும் தளமும் உடன்படுதல் ஒரு விசித்திரமும் புதிரும் ஆன விஷயம்.

இப்போது சில நாட்களுக்கு முன் தினத்தாட்களில் அடிபட்ட பெயர் த்யேப்மேஹ்தா என்னும் ஓவியரது எந்த இந்திய ஓவியத்திற்கும் கிடைக்காத ஒரு பெரிய தொகை த்யேப் மேஹ்தாவின் பழைய ஓவியம் ஒன்றிற்குக் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கோடியோ, மூன்று கோடியோ எனக்கு சரியாக ஞாபகமில்லை. அது கோடிக்கணக்கில் என்பது மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நான் பத்து ரூபாய்க்கும் வித்திருக்கிறேன். கோடிக்கணக்கில் உலகச்சந்தையில் விற்பனையான அந்த ஓவியம் தீட்டிய காலத்தில் என்று சொன்னார இல்லை இந்த ஓவியம் தான் ரூ.10க்கு அவர் ஒரு காலத்தில் விற்றாரா தெரியவில்லை. அந்த ஓவியத்தின் சொந்தக்காரர், ஏலம் போன சமயம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 3 கோடி ரூபாய் யாருக்குப் போகும்? தெரியாது.

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. நான் த்யேப் மேஹ்தாவை அறியவந்தது அறுபதுகளின் கடைசி வருடங்களில் என்று ஞாபகம். அப்பொழுது அவரது ஓவியங்கள் கருப்பு அல்லது dark grey. மனிதக்கூட்டங்கள், பட்டினியால் வாடி மெலிந்த உருவங்கள், சோகம் பீடித்த முகங்கள், குவிந்த புருவங்கள், கீழ்நோக்கிய கண் இமைகள், ஒருகண மகிழ்ச்சி அறியாத ஜிவன்கள் -- "கூடல்" என்ற பெயரில் ஒரு documentary--யும் தயாரித்திருந்தார். நான் தாமதமாகப் போனதால் படம் பார்க்க முடியவில்லை. ஆனால் இம்மாதிரியான கண்காட்சி முழுதிலும் சோகம் அப்பிய முகங்களையே ஓவியங்களாகத் தீட்டியிருந்த த்யேப் மேஹ்தா பற்றி இப்ராஹீம் அல்காஷி சொன்னார்: "இவற்றில் நாம் இன்றைய வியத்நாமைப் (60s) பார்க்கலாம். பஞ்சத்தில் வாழும் பிஹார் மக்களைப் பார்க்களாம். த்யேப் மெஹ்தாவின் குரல் உலக்மெங்கிலும் வதைபடும் மக்களின் சோகக்குரல். த்யேப் மேஹ்தா பேசும் மொழி உலக மொழி" என்ற ரீதியில் தன் விளக்கங்களைத் தந்தார். உடன்படலாம். படவேண்டும். அந்த உருவங்களும், ஓவியங்களும் தீட்டப்பட்ட வண்ணங்களும் அல்காஹியின் பார்வையை சாட்சியப்படுத்தின.

ஆனால் த்யேப் மேஹ்தாவின் இன்றைய ஓவியங்கள் அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்து வந்து விட்டன. இப்போது அவர் ஓவியங்கள் மென்மையான,கண்களுக்குக் குளிமை தரும் வண்ணங்கள்.ஆனால் உருவங்கள் கொடுத்த உருவங்களானாலும், சிதைந்த உருவங்கள் நிலைகொள்ளாது தடுத்துவிடும் உருவங்கள். அந்தரத்தில் பறக்கும் கால்பாவாத உருவங்கள். மனித ஜீவனின், இன்றைய மனிதனின் இயல்பின் முழுமை பெறாதவையும் கூட என்கிறார் த்யேப் மேஹ்தா. சரி புரிகிறது. ஆனால் ஓவியத்தின் மிருதுவான, கண்ணைக் குளிர்விக்கும் வண்ணங்கள்?.. இவ்வண்ணங்கள் எப்படி மனித ஜீவனின் தவிப்பைச் சொல்லும்? என்று கேட்டால், த்யேம் மேஹ்தா, தன் ஆரவாரமற்ற மெல்லிய ஸ்வாபீகமான குரலில், "ஒரு ஓவியனின் வண்ணத் தேர்வு அவனுடைய உரிமை. இதற்கு இணை வர்ணம் தான் என்று ஏதும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. இது என் தேர்வு" என்கிறார்.

"நான் சந்தைக்காக ஓவியம் தீட்டவில்லை.என் ஓவியங்கள் சந்தையில் இவ்வளவு மதிப்பு பெறும் என்று நினைக்கவில்லை. என் இயல்பில் என் இஷ்டத்திற்கு ஓவியங்கள் வரைகிறேன். பின் நிகழ்வுகளை முன் தீர்மானித்து நான் செயல்படுவதில்லை" என்கிறார். அதுவும் உண்மை.

இருப்பினும், வண்ணங்களின் மொழியும், உருவங்களின் மொழியும் நாம் இதுகாறும் வளர்த்துக்கொண்ட ரசனையில் முரண்படுவது ஏன்?

இங்கு நிறையவே ஏன்?களைக் கேட்டுவிட்டேன்."

--என்று முடிக்கிறார் வெங்கட் சாமிநாதன்

--இப்படி திரு. வெங்கட்சாமிநாதன் பலதுறைகளில் கண்டுணர்ந்த அர்த்தபூர்வமான அனுபவங்களை இப்பொழுது படிக்கையிலும் நாமும் அந்தக் காலத்திற்கும், சம்பவங்களுக்கும் இழுத்துச் செல்லப்படுவது மட்டுமில்லை, நம்மையும் அவ்வுணர்வுகளுக்கு ஆட்படுத்தும் சக்தி வெங்கட்சாமிநாதனின் எழுத்துக்களில் படிந்திருப்பதையும் உணரலாம்.

நன்றி: வெங்கட்சாமிநாதனின் "கலை உலகில் ஒரு சஞ்சாரம்"

புத்தகம் கிடைக்குமிடம்:

சந்தியா பதிப்பகம்,
நீயூடெக் வைபவ் பிளாட்ஸ்
77, 53வது தெரு,
அசோக் நகர். சென்னை-- 600 083
தொலைபேசி: 24896979/ 5585570
இணைய தளம்: www.sandhyapublications.com

16 comments:

Jayakumar Chandrasekaran said...

நூல் அறிமுகம் நன்று. ஆனால் எல்லோரும் இணையத்துக்கு தாவி விட்ட நிலையில், பாட நூல் தவிர அச்சுப்புத்தகங்கள் விலை கொடுத்து வாங்க தயங்கும் வேளையில் புத்தகத்தை வாங்குவோர் அரிது.
வெங்கட் சாமிநாதனுக்காக தனி சிற்றிதழ் துவக்கி அவரது படைப்புகளை வெளியிட்ட தஞ்சை பிரகாஷ் பற்றி தெரியும் அல்லவா?

ஸ்ரீராம். said...

சில க்ளீஷே வார்த்தைகளைக் கேட்டால் ஒரு ஒவ்வாமை மனதுள் ஏற்படுகிறது!  அதில் ஒன்று 'ஆற்றொழுக்காய்'!  அந்த வார்த்தைக்கான அர்த்தம் எல்லாம் தெரியும்.  ஆனாலும்....!

ஸ்ரீராம். said...

அந்த வார்த்தையை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை என்னும் நேர்மை பிடித்திருக்கிறது.  அதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல்லை உடைக்கும் வார்த்தைகளில் எழுதாமல் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்திருப்பது சிறப்பு.

ஸ்ரீராம். said...

ஓவியங்களிலோ ஓவியர் விவரங்களிலோ உங்களுக்கு சுவாரஸ்யம் உண்டா, தெரியவில்லை.  நீங்கள் வெங்கட் சாமிநாதன் எழுத்துகளுக்காக படித்திருக்கலாம்.  நான் நீங்கள் பகிர்ந்ததற்காக படித்தேன்!!!  ஆனால் இதற்கான ஓரளவு பதில் 'ஓவியர்கள் தமக்குள்ள' என்கிற பாராவில் இருக்கிறது!

ஸ்ரீராம். said...

//அந்த ஓவியத்தின் சொந்தக்காரர், ஏலம் போன சமயம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 3 கோடி ரூபாய் யாருக்குப் போகும்? தெரியாது.//

இந்த வரி தெளிவற்று இருப்பது போல இருப்பது போல தோன்றுவது எனக்கு மட்டும்தானா?  எனக்கு புரியவில்லையோ?

ஸ்ரீராம். said...

த்யேப் மேஹ்தாவை நான் அறிய மாட்டேன்.  ஒருவேளை அவர் ஓவியங்களை பார்த்தால் 'ஓ..  பார்த்திருக்கிறேனே' என்று தோன்றலாம்.

ஸ்ரீராம். said...

அவரது ஓவியங்கள் இருக்கும் பக்கத்தின் சுட்டி


https://tinyurl.com/4dprpynx

ஜீவி said...

@ ஜெ.கே.ஸி

வாங்க,ஸார். எனக்கும் அதான் ஆச்சரியம். கேரளத்தில் நூல் வாசிப்பு அதிகம் இருப்பினும் விலை கொடுட்து வாங்க்கும் விஷயட்தில் எப்படி என்று டெரியவில்லை. அங்கேயெல்லால்
நூலகங்கள் தேவைக்காக நூல்களை வாங்கும் விஷயங்களில் அரசின் ஆதரவும் எப்பாடி என்று தெரியவில்லை. இதெல்லாம் பற்றி நீங்கள் சொன்னால் அறிவேன்.

தமிழகதைப் பொறுத்த மட்டில் இந்த இரண்டு விஷயங்களிலும்
பெருத்த ஆதரவு என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் புத்தகத் திருவிழாவில் நூல் விற்பனை கொடிக்கட்டிப் பறப்பதாகச் சொல்கிறார்களே தவிர உண்மை நிலவரம் தெரியாது. முக நூல்களில் காணப்படும் சில எழுத்தாளர்களின் புத்தகப் பிரசுரங்கள் பிரமிப்பேற்படுத்துகின்றன. புரியாத ஆனந்தங்கள் பல உண்டு. அவற்றில் நூல்கள் பிரசுரமும் எழுத்தாளர்களின் சந்தோஷமும் இரு கோடுகள் தத்துவம் தான் என்றே சொந்த அனுபனத்தில் உணர்கிறேன்..

ஜீவி said...

மன்னிக்கவும். PC--யில் தட்டச்சு. விரல்கள் ஒத்துழைப்பு இன்மையால் நிறைய பிழைகள். கைப்பேசியில் இனி தட்டச்சு செய்து பார்க்கிறேன்.

ஜீவி said...

@ ஜெகேஸீ

திஜா 'நடந்தாய் வாழி காவிரி' நூல எழுதும் பொழுது த.பி. அவர் கூட இருந்து ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். த.பி. எழுத்து சுகம் பற்றி அவ்வளவாக அறிந்திலேன். தங்கள் இன்றைய செவ்வாய் எபி போஸ்டிங்கும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் அல்ல. இல்ளையா?

ஜீவி said...

பார்த்தேன்.. சிரித்தேன்.. நீங்கள் சுட்டி கொடுத்த காரணம் நினைத்து.

ஜீவி said...

பார்த்தது தான் பார்த்தீர்கள், என்ன தோன்றியது என்று சொல்லக் கூடாதா?

ஜீவி said...

ஒரிஜனல் புத்தகம் சென்நையில் இருக்கிறது.
பார்த்தால் தான் தெரியும்.

ஜீவி said...

கரெக்ட்டாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஜீவி said...

அதானே,!

ஜீவி said...

என்ன ஆனாலும்?

ஆற்றொழுக்குக்கு ஈடான இன்னொரு வார்த்தையை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து சந்தோஷப்பட்டால் போச்சு!

Related Posts with Thumbnails