மின் நூல்

Friday, February 24, 2017

சாபம்

                                                                        1
ரம்பத்தில் என்னவோ பத்து மணிக்குத் தான் தில்லி போட்கிளப்பில் அந்த விஞ்ஞானிகளின் கூட்டம் கூடுவதாக இருந்தது.

ஆனால் ஆச்சரியம், ஒன்பதரை மணிக்கே இருக்கைகள் எல்லாம் நிறைந்து அத்தனை பேரும் ஆஜர். எல்லாத்துக்கும் காரணம் டேவிட் தான். அவன் புதிதாகக் கணினியியலில்  மகத்தான ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்து   அந்த ஆராய்சியின் அடிப்படையில்   கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்திருந்தான்.


அதுவும் அது சாதாரண கம்ப்யூட்டர் இல்லை.  அசாதாரணத் திறமைகள்
கொண்ட  காலக்கணினி  மாதிரி இருந்தது.  .  மனிதர்களை அதன் முன் நிறுத்தி, சம்பந்தப்பட்ட தகவல்களை உட்செலுத்தினால், அவர்களின் பிறவி  நிஜங்களைப் பிட்டு பிட்டு வைக்குமாம்.   முந்தையப் பிறவிகளில்  என்னவாக இருந்தார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்லும் கம்ப்யூட்டராம். . கூட்டத்திற்குக் கேட்க வேண்டுமா?..

ஆரமபத்தில் அவர்கள் அந்த இளம் விஞ்ஞானி டேவிட்   சொன்னதை நம்பத்தான் இல்லை.

ஆனால் அவன் தான் சொன்னதை அவர்களுக்குப் பரிசோதித்துக் காட்டியபொழுது அவர்களின் வியப்பு எல்லை மீறியது. நிஜமாகச் சொல்ல வேண்டுமானால், அவர்களுக்கு அவன் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில் டேவிட் அந்த கம்ப்யூட்டரின் தலைப் பாகத்தில் இருந்த நீலநிறப் பிடி ஒன்றைத் திருகியவுடன் அவன் செல்லக் குழந்தைக்கு உயிர்ப்பு வந்தது. தனது வெள்ளைத் திரையில் நீலநிற ஒளிபாய்ச்சித் தயாராகி விட்டது.

முதல் வரிசையில் முதல் நபர் விலங்கியல் பேராசிரியர் ஸ்மித்.

டேவிட்,  பேராசிரியர்  ஸ்மித்தை  மேடைக்கு அழைத்தான்.  தனது வயதுக்குச் சம்பந்தப்படாத நடவடிக்கை மாதிரி ஸ்மித் துள்ளி ஓடி வந்து ஆர்வத்துடன் மேடையேறினார்.  அவரைக் கைகுலுக்கி வரவேற்ற் டேவிட  லேசான புன்முறுவடன்  பேராசிரியரை தனது அதிசய தயாரிப்பின் முன்  நிறுத்தினான்.

 கீழே அமர்ந்திருந்த பேராசிரியர் ஸ்மித்தின்  நண்பர்களிடையே ஒரே ஆரவாரம்.  பேராசிரியரை நோக்கி  கை அசைத்து உற்சாகமூட்டினார்கள்.  மொத்தத்தில்  டேவிட்டின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்து  கொள்ளும் ஆர்வத்தில் மொத்த  கூட்டமும் மேடையையே விழி அசைக்காதுப்  பார்த்துக்  கொண்டிருந்தது.

ஸ்மித் தன் தலையைக் குலுக்கிக் கொண்ட மாதிரி  இருந்தது. ,  இனம் தெரியாத ஒரு விதிர்விதிர்ப்பு அவரை ஆட்கொண்டிருபபது வெளிப்படையாகத்  தெரிந்தது..  "டேவிட்! தங்களுடைய சமீபத்தியக் கண்டுபிடிபான இந்த நவீன கம்ப்யூட்டரைக் கண்டு நாங்கள் பிரமித்துப் போயிருக்கிறோம். .  உங்களுக்கு இந்த விஞ்ஞானப் பேரவையே நன்றி சொல்கிறது.  நம்  காலத்திய ஒரு  புகழ் வாய்ந்த கண்டுபிடிப்பாக  எதிர்காலத்  தலைமுறை  இதைச் சொல்லப்  போகிறது." என்றவர் லேசாக  நாவால் மேலுதடைத் தடவிக் கொண்டுத் தொடர்ந்தார்:

"இந்த அதிசய கம்ப்யூட்டர் பற்றி எங்களுக்கு வழங்கப்பட்ட விவரக் குறிப்புகளை சற்று முன் பிரமிப்புடன் வாசித்தேன்.  அந்தத் தகவல்கள் இப்படியெல்லாம் கூட  முடியுமா என்று எங்களுக்கு ஆச்சரியமூட்டியது. தொடர்ந்து  உங்களது இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் எங்களை பல வழிகளில் வியக்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிகிறது.   உங்களது முதல் நிகழச்சியில்  முதல் ஆளாக பங்கு  கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.." என்றவர்
அமைதி காத்த சபையை ஒரு தடவை கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார்:

"பல ஜென்மங்களாகத் தொடர்ந்து  வரும் இந்த பிறவிச் சங்கிலி பற்றி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் அமுங்க வைத்தன.  அந்தப் புத்தகத்தை வாசித்ததிலிருந்து முந்தைய ஜென்மத்தில் நான் என்னவாக இருந்தேன்,  என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விவரிக்கத் தெரியாத ஔவித உந்தல் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.  பொதுவாக இரவு உறங்கப் போகும் முன் இந்த நினைப்பு வந்து விட்டால், முன்னிரவு கழியும் வரை இதே நினைப்பில் மூழ்க்கிப் போகிறேன்.  அசதியில் தூங்கினால் தான் உண்டு.   இந்த நிலையில் உங்கள் ஆராய்ச்சியும் இந்தக் கம்யூட்டரும்  வானிலிருந்து குதித்து வந்த தேவனாக எனக்குத் தோன்றுகிறது. சமீப காலமாக என்னை வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடை கிடைக்கும் நேரம் வந்து விட்டதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. எல்லாம்  இறைவனின் அருளாக நினைக்கிறேன்.." என்று  அதற்கு மேல் பேச முடியாத உணர்ச்சி வசப்பட்டவர் போலக் காட்சியளித்தார் பேராசிரிய  ஸ்மித்.                                                                                              
                                                                   
                                                                                                         
"புரொபசர் ஸ்மித் சார்!  என்னால் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறேன்..  உங்கள் மனதில் இருப்பதைச் சொல்லுங்கள்.. முயற்சி செய்கிறேன்.." என்றான்  டேவிட்.  கொஞ்சம் கூட பதற்றமின்றி நிதானமாக இருந்தது அவன் குரல்.   நடுவில் சபையில் அம்ர்ந்திருப்பவர்களை எடை போடுவது போல தீர்க்கமான பார்வை வேறு.

"சொல்கிறேன்.." என்று லேசாகத்  தயங்கிச் சொன்னார் புரொபசர் ஸ்மித். . "    "எங்களுக்கு இப்பொழுது வழங்கப்பட்ட தகவல் குறிப்புகளில் நம் முந்தைய ஜென்ம வாழ்க்கையைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக இந்தக் கம்யூட்டர் சொல்லும் என்று சொல்லப்பட்டிருந்தது.  இப்படி ஒரு அதிசய கம்ப்யூட்டரை கண்டுபிடித்த உங்களுக்கு ஒரு சல்யூட்!   நான் மிகுந்த ஆர்வத்துடன்  உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால               போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்மத்தில் நான் என்ன செய்தேனென்று என் வாழ்க்கையிலிருந்து ஏதாவது நிகழ்ச்சி ஒன்றை இந்த கம்ப்யூட்டரின் துணை கொண்டு காட்டி என்னைப் பரவசத்தில் ஆழ்த்த முடியுமா, நண்பரே?" என்று அவர்  நெகிழ்ந்த குரலில் கேட்டது அந்த அமைதியான சபையில் அத்தனை பேருக்கும்  துல்லியமாகக் கேட்டது..

"ஓ," என்று டேவிட் சொன்ன உடனே அந்த ஹால் முழுக்க நிறைந்திருந்த விஞ்ஞானிகள், "யா,யா!" என்று மகிழ்ச்சியில் திளைத்தனர்.

"போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்மம் என்றால் இரண்டு ஜென்மங்கள் முந்தி, இல்லையா" என்றி ஏதோ தனக்குள் பேசிக் கொள்கிற  மாதிரி முணுமுணுத்த  டேவிட,  புரொபசர் ஸ்மித்தை அருகில் அழைத்து தன் அதிசய கம்ப்யூட்டரின் முன் நிற்க வைத்தான்.   இப்பொழுது தனக்கு எதிராக இருந்த அந்த  கம்ப்யூட்டரின் திரையை கனிவுடன் பார்த்த நிலையில் நின்றிருந்தார் ஸ்மித்.  'கம்ப்யூட்டரே!  உனக்கு வணக்கம்.  என் கடந்த ஜென்மம் பற்றிய தகவல்களை நல்லபடியாகக் காட்டு அதிசய  கம்ப்யூட்டரே!' என்று அந்த  கணிப்பொறியை அவர்  பரிதாபத்துடன் வேண்டிக் கொள்வது போல அவர் தோற்றம் இருந்தது.

தனது அதிசயக் கண்டுபிடிப்பான அந்தக் கணினியை உயிர்ப்பித்தான் டேவிட்.  ஸ்மித்திடம்   அவரது   இந்த ஜென்மத்துப் பிறந்த  தேதியைக் கேட்டு திரையின் மார்புப் பகுதியில் பதிந்தான்.  தொலைக்காட்சி பெட்டி போலிருந்த அந்தக் கணினியின்  கீழ்ப்பகுதி வலது பக்கத்தில்    அடைசலாக    நிறைய குமிழ்கள் இருந்தன.   அதில்   ஒரு குமிழைத் தொட்டு டேவிட் திருகியதும்  திரையில் 'தலைமுறை' என்ற எழுத்துக்கள் தோன்றின.  அந்த எழுத்துக்களின் கீழிருந்த பெட்டியில் 2  என்று ஸ்மித் விரும்பிக் கேட்ட ஜென்மத்தின் எண்ணை  பொறித்தான்.  உடனே அந்த அதிசயக் கணினி தன் தேடுதலைத் தொடர்வது திரையில் பளிச்சிட்டுத் தெரிந்தது.  சட்டென்று தேடுதல் வேலை முடிந்த மாதிரி திரையில் பனிப்படலம் போர்த்திய மாதிரி காட்சிகள் தென்படத் தொடங்கின.

ஸ்மித்தின் முகத்தில்    திடீரென்று பற்றிக்கொண்ட   பரவசம்.    அந்த பரவசம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி  தன்னுள் புதைந்து குழப்பம் மேலோங்குவது ஸ்மித்திற்கு நன்றாகவே தெரிந்தது..


(வளரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.

19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...


மேற்கொண்டு என்ன நடக்கும் .... என்ன நடக்கும் .... என்ற ஆர்வத்தினைக்கூட்டி .... வாசகர்களாகிய எங்களையும் ஏங்க வைக்கும் மிகவும் சுவாரஸ்யமான கற்பனை.

எதிர்பார்த்தபடியே மிகச்சரியான இடத்தில் ‘தொடரும்’ இல்லை ‘வளரும்’ போடப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சியே.

நன்கு வளரட்டும் இந்தக் கற்பனைக் கட்டுரை.

பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

அதிசயக் கணினி சொல்லும் உண்மைகளை தெரிந்துக் கொள்ள ஆவல்.
ஆனல் நல்லதை , கெட்டதை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமே !

வே.நடனசபாபதி said...

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் அறிவியல் கதைகளைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வு ஏற்படுகிறது தங்களின் இந்த தொடரைப் படிக்கும்போது. பேராசிரியர் ஸ்மித் அவர்களின் முகத்தில் தோன்றிய பரவசம் கொஞ்சம் கொஞ்சமாய் மங்குவதன் காரணம் அறிய காத்திருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

நல்லா வளருது கதை. முக்கியமான இடத்தில் தொடரும்னு போட்டிருக்கீங்க.

அந்தக் காலத்தில், நான் 6 படிக்கும்போது (அல்லது 5ஓ) ரேடியோவில் "பாதி சொல்வோம் மீதி என்ன" என்று ஒரு நிகழ்ச்சியில் இருந்தது. அதுமாதிரி வைத்திருந்தால் விதவிதமான கதைப்போக்குகள் கிடைத்திருக்கலாம்.

5 வருடங்களுக்கு முன், விஜய் டிவில, இரவில், பூர்வஜன்மங்களின் குறிப்புகளை, ஹிப்னாடைஸ் செய்து காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வமாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களைத் தெரிந்துகொள்ள நிகழ்ச்சியைப் பார்ப்போம். சிலர் புறாவாக இருந்தது, பாபிலோனா (நடிகை) ஆதிதொழிலில் இருந்தது போன்றவைகள் வெளிப்படும். ஆமாம் பூர்வ ஜென்மத்தைத் தெரிந்துகொள்வதில் என்ன சுவாரசியம் இருக்கமுடியும்? (கோபுசார் என்னிடம் 1000 வராகன் கடன் வாங்கியிருக்கிறார், இந்த இடத்தில் புதையலைப் புதைத்து வைத்திருக்கிறேன் என்ற சரியான செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியாவிட்டால்)

சீக்கிரம் அடுத்த பாகத்தை வெளியிடுங்கள்.

ஜீவி said...

@ வை.கோ.


//எதிர்பார்த்தபடியே மிகச்சரியான இடத்தில் ‘தொடரும்’ இல்லை ‘வளரும்’ போடப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சியே. //

தொடரும் போடுவதற்காகவே அப்படி ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுந்தது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்பதை அறிய மகிழ்ச்சி.

தொடரும் போடுவதற்காகவே அப்படி ஒரு இடத்தை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டி எழுதுவதுமுண்டு. அந்த சரியான இடத்திற்கு வாசிப்பவர் மத்தியில் இருக்கும் விறுவிறுப்பும் பரபரப்பும் அடுத்த பகுதி ஆரம்பத்தில் ஒன்றுமில்லாமல் சப்பிட்டுப் போய் 'ப்பூ' இவ்வளவு தானா என்று மதிப்பில்லாமல் போய் விடுவதுமுண்டு. அப்படியிருந்தாலும் அந்த அடுத்த பகுதியின் தொடரும்க்கு முன்னாடி இருக்கும் கடைசி பகுதி மீண்டும் விறுவிறுப்பை ஏற்றத் தவறாது. மர்மத் தொடர்களுக்கு வழக்கமான இந்த வித்தையை தனது சரித்திர கதைகளில் கையாண்டு விளையாடிக் காட்டியவர் சாண்டில்யன்.

ஜீவி said...

@ வை.கோ.

//நன்கு வளரட்டும் இந்தக் கற்பனைக் கட்டுரை. //

சிறுகதையின் ஆரம்பம் கட்டுரை போலத் தெரிந்தால் என் தவறு தான். அடுத்த பகுதியில் சரி செய்து விடலாம்.

Geetha Sambasivam said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

விஞ்ஞானக்கதை? தொடர்கிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

உங்கள் ஆவலைத் தூண்ட இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வாருங்கள், கோமதிம்மா.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அடுத்த பகுதியில் பேராசிரியர் ஸ்மித் முகபாவம் மாறியது பற்றித் தெரிந்து விடப் போகிறது ஐயா. தொடர்ந்து வாருங்கள்.


ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ஆமாம் பூர்வ ஜென்மத்தைத் தெரிந்துகொள்வதில் என்ன சுவாரசியம் இருக்கமுடியும்?//

சுவாரஸ்யமாகச் சொன்னால் எல்லாம் சுவாரஸ்யட்ம் தான். ஆடுவோர் ஆடினால் ஆடத் தோன்றும். கேட்ப்வர் சுவாரஸ்யத்தோடுக் கேட்கிறார் என்று தெரிந்து விட்டால் போதும்
சொல்வதில் சுவாரஸ்யம் அலாதியாகக் கூடும்.

இந்த ஜென்ம எதிரிகாலத்தைத் தெரிந்து கொள்வதை விட முந்தைய ஜென்மங்களில் தான் என்னவாக இருந்தோம் என்று தெரிந்து கொள்வதில் மனிதனுக்கு ஆவல் அதிகம். இது என்றைக்குமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்.

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//ஆவலுடன் காத்திருக்கிறேன்//

சுவாரஸ்யத்திற்கு நான் கியாரண்டி. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்திய மெய்ஞானமும் விஞ்ஞானம் தானே ஸ்ரீராம்?..

விஞ்ஞானம், மெய் ஞான்ம், எல்லாமே எழுத்தாளனின் பார்வையில் சமூக விஞ்ஞானத்தைச் சொல்லத்தான்.

தொடர்ந்து வாருங்கள்.

நெல்லை நாயகன்... said...

இன்று தான் என் முதல் வருகை. அறிவியல் சார்ந்த புனைகதைகள் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. கதைக்கு சாபம் என்ற தலைப்பு, டேவிடின் புதுக் கணினி ஒரு சுப கண்டுபிடிப்பு இல்லை என்பதை மனதில் பதிய வைக்கிறது.

எதிர்பார்ப்புகளுடன்...

ஜீவி said...

@ நெல்லை நாயகன்

வாங்க, நெல்லை நாயகன். நெல்லைத் தமிழரோடு நெல்லை நாயகனையும் க்ணடதில் மகிழ்ச்சி. தங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

//கதைக்கு சாபம் என்ற தலைப்பு, டேவிடின் புதுக் கணினி ஒரு சுப கண்டுபிடிப்பு இல்லை என்பதை மனதில் பதிய வைக்கிறது. //

கதைக்கு சாபம் என்ரு தலைப்பிட்டிருப்பதால் அந்தக் கணினியின் வரவில் வரம் ஏதுமில்லை என்று நினைக்கிறீர்கள், போலிருக்கு. தங்கள் நினைப்பும் நியாயமானதே.


அடுத்த பகுதியிலிரு9ந்து பாருங்கள். அந்தக் கணினியின் செயல்பாடு குறித்து சொல்லுங்கள். மிக்க நன்றி, நெல்லை நாயகன்.

Bhanumathy Venkateswaran said...

முதல் பந்திலேயே சிக்ஸர்! சதம் அடிக்காமல் விட மாடீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்கிறேன்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

எல்லாப் பந்தே சிக்ஸராய் அமைந்து விட்டால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் ஆடுவோருக்கு அதனால் கவலை கூடும். துவங்கிய வீச்சை தொடர்ந்து காப்பற்றுவது எப்படி என்ற பதட்டத்தில் இசகு பிசகாய் ஏதாவது நிகழ்ந்து ஆட்டம் இழக்க வாய்ப்புண்டு. வெற்றிக்கு வழிகோல்வது கலந்து கட்டிய நிதானமான ஆட்டம் தான் எனினும் நீங்கள் கைதட்டியது புரிகிறது. அது ஆரம்பித்த பிள்ளையார் சுழியின் அழகாகக் கொள்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். உற்சாகமூட்டிய பின்னூட்டத்திற்கு நன்றி, சகோ.

தி.தமிழ் இளங்கோ said...

இப்போதுதான் இந்த தொடரை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். தொடர்கின்றேன்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ.

நன்றி, நண்பரே! தொடர்ந்து படித்துச் சொல்லுங்க்ள்.

Related Posts with Thumbnails