கீழ்த்தளம் வாடகைக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும், வீட்டுக்குப் பக்கத்திலே மெயின் ரோடிலேயே என்பது பல விஷயங்களுக்கு ரொம்ப செளகரியமாகப் போயிற்று.
வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க வேண்டுமா, தண்ணீர் குழாய் ரிப்பேரா, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டதா, எலெக்டிரிக் வேலையா இல்லை எலெக்ட்ரானிக் வேலையா, கல்யாணத்திற்கு சத்திரம் ஏற்படா, சமையல் வேலையா எதுவென்றாலும் உடனடியான தீர்வுக்கு 'அ' முதல் 'ஒள'வைத் தொடர்பு கொண்டால் போதும், இரண்டு மணி நேரத்திற்குள் அட்டண்ட் செய்யப்படும் என்று விளம்பர நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
"நமக்குன்னு வாடிக்கையாளர்கள் அமைய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?" என்று உஷா தவித்தாள்.
"பேசாமல் உறுப்பினர் அட்டை வழங்கி விடலாம். அது வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும்" என்றாள் வித்யா.
"உறுப்பினர் அட்டை இலவசமாகக் கொடுத்தால், அதில் சுவாரஸ்யம் இருக்காது. குறைந்தபட்சமாக ஒரு தொகையை உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக வசூலித்து விடலாம்" என்றான் ரிஷி. "அது எளிய மக்களும் உறுப்பினராக சேருவதற்கு வசதியாக மிகக் குறைந்த தொகையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்களாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகப்படுத்திக் கொள்ள விருப்பமின்றி விலகும் பொழுது, அவர்கள் செலுத்தியிருக்கும் உறுப்பினர் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்" என்றான் அவன்.
உறுப்பினர் சேர்க்கைக் கட்டணத்தை ரூ.100/- ஆகத் தீர்மானித்தனர். பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களுக்கு 30% கமிஷன் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். சிறிய நிறுவனங்கள் 15% கொடுக்க சம்மதித்தார்கள். பெரிய வேலைகளுக்கு பெரிய நிறுவனங்களையும் சிறு சிறு வேலைகளுக்கு சிறிய நிறுவனங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானமாயிற்று. பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைக்கு 20%-ம், சிறிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைகளுக்கு 10%-ம் தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்குத் தந்து விட வேண்டுமென்று கொள்கை ரீதியாகவே முடிவெடுத்தார்கள். பெரிசோ, சிறிசோ செய்கிற வேலை நறுவிசாக இருக்க வேண்டுமென்றும், குறித்த காலத்தில் கொடுக்கப்பட்ட பணியை முடித்துக் கொடுப்பதில் இரண்டாவது கருத்து இருக்கக் கூடாது என்பதிலும் கறாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் உஷாவின் கணவர். ஒவ்வொரு கட்ட ஆலோசனையிலும் வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதிலும் அதில் எந்த சறுக்கலுக்கும் இடமில்லை என்பதில் மிக மிக கவனமாக இருந்தார்கள்.
நேரிலும் தொலைபேசி மூலமாகவும் உறுப்பினர்கள் 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பணி தொடங்கும் நாளில் மொத்த செலவில் 50% பட்டுவாடாவும், பணி முடிந்தவுடன் பாக்கி பணத்தில் அவர்களுக்கான தள்ளுபடி கழித்துக் கொண்டு செலுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள். எந்தப் பணியிலும் பணி முடிந்த பிறகு எந்தக் குறைபாடும் இருந்தால் அந்த குறைபாடு நிறுவனத்தின் செலவில் களையப்பட்டு வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழி, உறுப்பினர் விண்ணப்பப் படிவத்திலேயே கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து அதை உறுதிபட வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஒரு சுபயோக சுபதினத்தில் 'அ' முதல் 'ஒள' வரை நிறுவனத்தின் தொடக்க நாள் விழா, களைகட்டியது.
சந்தனப் பேலா நீட்டி பன்னீர் தெளித்து என்று வெளி போர்டு பார்த்து உள்ளே நுழைந்தவர்கள், கிடைத்த வரவேற்பில் நனைந்தனர். புதுமாதிரியான உபசரிப்பு, புது மாதிரியான அனுபவம், புது மாதிரியான உற்சாகம் என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் திட்டமிட்டு கலக்கியிருந்தாள் உஷா.
ஆரம்ப நாளன்றே அந்த அதிசயம் நடந்தது. காலையிலேயே பதினோறு மணியளவிலேயே முன்யோசனையாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை சுகிக்க உறுப்பினர் ஆனவர்கள் எண்ணிக்கை எழுபதைத் தாண்டியது.
"இது என்னங்க, புது மாதிரி கடை?"
"கடை இல்லை. பதிவு அலுவலகம்.. சொல்லப்போனால் சேவை நிறுவனம்"
"என்ன பதிவு பண்ணுவாங்க?"
"எல்லாம். தினம் பொழுது விடிந்தால் எத்தனை தேவை இல்லை நமக்கு?.. நியாயமான உங்களோட அனைத்துத் தேவைகளின் தீர்வுகளுக்கும் இங்கே அணுகலாம். நல்ல தரமான சேவை. விரைவான சேவை. குறைவான தொகையில். மொத்த கட்டணத் தொகையில் நிறுவனம் தன் அன்பளிப்பாகக் கொடுக்கும் தள்ளுபடியும் உண்டு."
"மெய்யாலுமேவா? இல்லை, சும்மாக்காச்சுமா?.."
"சும்மா இல்லை, நிஜமாவே! வீட்டிற்கு கலர் வாஷ்-- பளபள பெயிண்ட்! இவ்வளவுக்கும் எவ்வளவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்?.. உள்ளே வந்து விசாரியுங்கள். உறுப்பினர் ஆகுங்கள். உங்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் உண்மையான தள்ளுபடி உண்டு."
"அதுசரி, அது என்னங்க, புது மாதிரி பேரு? 'அ' முதல் 'ஒள' வரைன்னா"
"இங்கிலீஷ்லே சொல்லலையா, A to Zன்னு?.. அந்த மாதிரி தமிழ்லே! தமிழ் உயிரெழுத்திலே! அ முதல் ஒள வரைன்னு! உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் தீர்வு, ஒரே கூரையின் கீழே! வருக! வருக!"
ஓர் ஆணும், பெண்ணும் மாற்றி மாற்றி கேள்வியும் பதிலுமாய் பேசுவதை புதுவகை விளம்பரமாய் 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக வாயிலில் கட்டியிருந்த லவுட் ஸ்பீக்கர் சொல்லிக் கொண்டிருந்தது.... வாசகங்களை மாற்றி வெவ்வேறான வகையில் இப்படி நிறைய தயாரித்து வைத்திருந்தார்கள். கேட்பவர்களுக்கு சலிப்பேற்படுத்தாமல், ஆவலைத் தூண்டும் வகையில் அந்த தயாரிப்புகள் இருந்தன. மொத்தத்தில் தெருவில் சென்றவர்களின் முக்கால் வாசிப்பேர் கவனத்தை அந்த 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக விளம்பரம் கவர்ந்து கொண்டிருக்கையில்....
அந்த சமயத்தில் இரண்டு வாழைமர லோடோடு வாசல் பக்கம் டயர் வண்டி. ஒன்று வந்து நின்றது. வண்டிக்கு முன்னால் பைக்கில் வந்தவர், "சீட்டு வாங்கியாந்துடறேன். வெயிட் பண்ணு.." என்று வண்டியோட்டியிடம் சொல்லிவிட்டு, 'அ' முதல் 'ஒள' வரை அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
முன் அறையில் வித்யா கிடைத்தாள். வாழைமரங்கள் போய்ச்சேர வேண்டிய விலாச அட்டை கொடுத்து விளக்கினாள். "மேட்லி பிரிட்ஜ்ஜாண்டே திரும்பி கொஞ்ச தூரம் உள்ளார போனா கல்யாண சத்திரம் தெரியும்" என்று சத்திரத்தின் பெயரைச் சொன்னாள். சத்திர வாசல்லே பெரிய டிஜிட்டல் போர்ட்லே, திருவளர் செல்வி லஷ்மி - திருவளர் செல்வன் நாராயணன்-ன்னு பெயர்கள் பளபளக்கும். அதான் அடையாளம். பெரியசாமி இல்லத் திருமணம்ன்னு பெரிசா வளைவு கூட கட்டியிருப்பாங்க..
"சத்திரம் தெரியும்மா. சேர்த்திடறேன்."
"மணமகனுக்கு அப்பா பெரியசாமி. அவர் அங்கே தான் இருக்கார். அவர் கிட்டே கேட்டுகிட்டு, அவங்க சொல்றபடி வாழைமரங்களைக் கட்டிட்டு வாங்க.. கையோட மொபைல்லே அம்சமா ஒரு போட்டோவும் எடுத்திட்டு வாங்க" என்றாள். "பில் செட்டில்மெண்ட்லாம் இங்கே தான். அவங்க கிட்டே ஒண்ணும் கேட்கப்படாது. சரியா?.."
"சரிம்மா.."
அலுவலகம் ஆரம்பித்து முதல் பணியாக ஒரு கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளுமாக, அதுவும் நாராயணன்-லஷ்மி கல்யாண ஏற்பாடாக இருந்ததில் வித்யாவிற்கு ஏக குஷி.
அந்தக் கல்யாண சத்திரத்தில் தான் எழுத்துப்பட்டறையின் போது தான் பையன் ஜாதகத் தேவை பற்றி ஊர்மிளா வித்யாவிடம் பிரஸ்தாபித்தாள். அவள் கேட்டதற்கு அடுத்த நாளே நாராயணனின் ஜாதகத்தை வித்யா அந்த கல்யாணச் சத்திரத்தில் தான் ஊர்மிளாவிடம் கொடுத்தாள். எழுத்துப் பட்டறைக்குப் போகும் போது இந்த மணமகன் நாராயணனின் தந்தை பெரியசாமி தான் தன் ஆட்டோவில் இந்த கல்யாண சத்திரத்தில் தான் உஷாவையும் அவளையும் இறக்கி விட்டார். அப்பொழுது கூட, 'கல்யாண பேச்சு பேசிக் கொண்டே கல்யாண சத்திரத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.. உங்க பையனின் கல்யாணமும் இனிதே நடக்கட்டும்' என்று வித்யா பெரியசாமியிடம் சொன்னாள்.
இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட இந்தக் கல்யாண சத்திரத்திலேயே இவர்கள் கல்யாணமும்! என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்? உம்?..
எது தான் முன் கூட்டியே தெரிகிறது?..
பின்னால் எல்லாம் நடந்த பிறகு தான், முன்னால் நடந்ததெல்லாம் வரிசை வரிசையாக நினைவுக்கு வந்து 'அட, இதெல்லாம் முன்கூட்டியே தெரியாம போச்சே'ங்கற நினைப்பும் வர்றது.
நிகழ்வுகளின் வரிசைப்படுத்துதலில் இருக்கும் சூட்சுமமே அது தானோ என்று வித்யா நினைத்தாள்.
(நிறைவுற்றது)
ஒரு வாரமாக வித்யாவும் உஷாவும் யோசித்து யோசித்து எடுத்த முடிவு. முடிவு எடுத்தவுடன் அடுத்து செய்ய வேண்டியவைகளை விவரமாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டனர். குறித்துக் கொண்ட விஷயங்களில் தகுந்த இடம் கிடைப்பது தான் முக்கியமாகப் பட்டது. வல்லப கணபதி கோயிலுக்கு தரிசனத்திற்காகப் போயிருந்த பொழுது தான் புதுசாகக் கட்டிய அந்த கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் 'வாடகைக்காக' என்று போட்டிருந்த அறிவிப்பை வித்யா பார்த்தாள். அறிவிப்போடேயே தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பரும் இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் உஷாவிடம் முதல் வேலையாக விஷயத்தைச் சொன்ன பொழுது வேறு யாரும் முந்திக் கொள்வதற்குள் விஷயத்தை முடித்து விட வேண்டும் என்று அவள் துடியாய்த் துடித்தாள். அவள் கணவர் ஆபிஸூக்கு அன்று விடுப்பு போட்டிருந்தது நல்லதாகப் போயிற்று. அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் அவருக்குத் தெரிந்தவராய் இருந்தது, அடுத்த நல்லதாய் அவர்களுக்கு ஆயிற்று.. வித்யா ரிஷிக்கு போன் போட்டுச் சொன்னாள். ரிஷி, உஷாவின் கணவரிடம் பேசினான். அடுத்து உஷாவின் கணவர், இடத்திற்குச் சொந்தக்கார நண்பரிடம் பேச கிட்டத்தட்ட அந்த விஷயம் முடிந்த மாதிரியே ஆகிவிட்டது. அன்று மாலை எல்லோரும் உட்கார்ந்து பேசும் போது வாடகை விஷயமும் முடிவாகி அலுவலகத்தைத் தொடங்க நாளும் குறித்து விட்டார்கள்.;
'அ' முதல் 'ஒள' வரை-- என்று முதலிலேயே தீர்மானித்திருந்த பெயரில் எந்த மாற்றமும் இல்லாமல், போர்ட் எழுத ஆர்டிஸ்ட்டிடம் ஆர்டர் கொடுத்தார்கள். ஆர்டிஸ்ட் மிகவும் பழக்கப்பட்டவர். இரண்டே நாட்களில் அற்புதமாக வேலையை முடித்துத் தந்தார். தன்னையும் அவர்கள் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள விண்ணபித்தார். "நீங்களில்லாமலா?" என்று உஷா சொன்னதே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த வியாபாரத்திற்கான நெட் ஒர்க்கை வித்யாவும் உஷாவும் சேர்ந்தே தயாரித்தார்கள். நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் பல சங்கடங்கள் விசித்திரமானவை. ஒரு பக்கம் தேவைகள், மறுபக்கம் அந்தத் தேவைகளுக்கு தரமான முறையில் உடனடித் தீர்வுகள் காணமுடியாத தவிப்பு. அப்படியான அவர்களின் தேவைகளைக்க் குறிவைத்து ஒரு பெரிய பட்டியலையே அவர்கள் தயாரித்திருந்தார்கள். ப்ளம்பர் வேலையிலிருந்து கல்யாண ஏற்பாடுகள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை.. இன்னொரு பக்கம் அப்படியான தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யக் கூடிய நம்பகமான நபர்களைக் கொண்ட நிறுவனங்கள். கணக்கெடுத்ததில் அப்படியான நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக இருநூறுக்கும் மேலே தேறிற்று. நிறுவன உரிமையாளர்களிடம் பேசிப்பார்த்த பொழுது தான், அவர்களின் முயற்சி மிகப் பெரிய அளவில் வெற்றியடைவதற்கான வெளிச்சம் தெரிந்தது. நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்கும் இடையே இவர்கள் தொடங்கியிருக்கிற மாதிரியான ஒரு கம்பெனி இருந்தால் தங்கள் வேலை மிகச் சுலபமாக முடியும் என்று அபிப்ராயப் பட்டார்கள். ஒரு வேலைக்கு குறைந்த பட்சம் மூன்று நிறுவனங்கள் என்கிற விகிதாச்சாரத்தில் பட்டியலிட்டு முடித்த பொழுது முக்கால் வாசி வேலை முடிந்த மாதிரி இருந்தது.