தமிழில் நமக்கு வெகுவாகப் பழக்கமான பழைய பத்திரிகைகளின் எழுத்துப் பொலிவு மங்க, புதுசாக சந்தைக்கு வந்திருக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் புதுப்பொலிவு பெறும் காலம் இது. அந்த வரிசையில் 'ஜன்னல்' ஒரு வரமாய் 'சமூகத்தின் சாரளம்' என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வெளிவருகிறது.
விற்பனைக்காக பெரும் பத்திரிகைகளின் சாயலிலும், பெரும் பத்திரிகைகள் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கிற முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தும் பாங்கிலும் இந்தப் புதுப்பத்திரிகைகளின் வரவு இன்றைய தமிழ் பத்திரிகைகள் சூழலில் பாலைவனச் சோலையாய் மனசுக்கு இதம் அளிக்கின்றன..
இதில் ஆக்கபூர்வமான விஷயம் என்னவென்றால் பழம் பெரும் பத்திரிகைகள் மறந்தே போய்விட்ட அல்லது ஒரு பக்கம்-அரைப்பக்கம் என்று அழித்தே விட்ட சிறுகதை பிரசுர முயற்சிகளில் இந்தப் புதுப்பத்திரிகைகள் மிகுந்த கவனம் கொள்கின்றன. இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. மிதமான சினிமா, அரசியல் செய்திகள்... பெரும் பத்திரிகைகளின் சலித்துப் போன உள்ளடக்கங்களுக்கு மாற்றாக இவை அமைவதால் இதன் வெற்றியான வாசகர் ஆதரவு பெரும் பத்திரிகைகளையும் கவர்ந்து இந்தப் பக்கம் திரும்பச் செய்யும். ஆக தமிழ் பத்திரிகை உலகில் ஒரு சுழற்சி ஏற்பட்டு மீண்டும் பெரும் பத்திரிகைகள் உருப்படியான உள்ளடகங்களுக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இதுவே 'ஜன்னல்' போன்ற புதுப் பத்திரிகைகளின் வெற்றியாகவும் தமிழ் பத்திரிகை உலகை பெருமைபடுத்தும் கைங்கரியமாகவும் எதிர்காலத்தில் கவனம் கொள்ளப்படும்,
நான் பார்த்த ஜன்னல் இதழில் 'இயல்பான தவறு' என்ற எஸ்.ரா.வின் சிறுகதை காணக்கிடைத்தது.. தலைப்பிற்கேற்பவான வெகு இயல்பான கதை. அரசாங்க இயந்திரத்தின் உதிரி பாகம் போன்ற இலாகாவொன்றில் வேலை செய்யும் அப்பாவி ராமசுப்புவிற்கு '12-ம் தேதி காலை பத்து மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆஜராக வேண்டும்' என்று சென்னை தலைமையகத்திலிருந்து கடிதம் ஒன்று வருகிறது. கடிதத்தைப் பிரித்துப் படித்த நிமிடத்திலிருந்து ராமசுப்புவின் நிம்மதி தொலைகிறது. அவன்
மனைவியின் நிம்மதியும் கூடத் தொலைகிறது. சென்னை செல்லவும் அங்கே எதிர்ப்பார்க்கிற பிற செலவுகளுக்காகவும் அவளின் கழுத்துச் செயின் அடமானம் வைக்கப்படுகிறது. எல்லா துன்பங்களுக்கும் காரணமான காரணத்தை வெகு சாதாரணமாக இதெல்லாம் இயல்பு தான் என்று தலைமை அலுவலகத்தில் வியாக்கியானம் செய்யப்படும் பொழுது ராமசுப்புவுடன் சேர்ந்து நாமும் கொதித்துப் போகிறோம். எஸ்.ரா.வின் இயல்பான நடையில் கதையும் நம் கவனத்தைக் கவர்கிறது. 'இதெல்லாம் இயல்பு தான் சார்!' என்று பல சமயங்களில் நாமும் பிறரால் சமாதானப் படுத்தப்பட்டிருப்போம். அப்படியான நிகழ்வுகள் எல்லாம் கதையை வாசித்து முடித்ததும் நம் நினைவில் படிந்து ராமசுப்புவும் நாமும் மனசளவில் ஒன்றாய்க் கலப்பது தான் எஸ்.ரா.வின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. கார்த்திக் புகழேந்தியின் வெட்டும் பெருமாள் இன்னொரு குறிப்பிட வேண்டிய சிறுகதை.
ஜெயமோகன் 'ஜன்னல்' பத்திரிகையில் 'தெய்வங்கள், தேவர்கள், பேய்கள்' என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். ஜன்னலின் பொங்கல் சிறப்பிதழில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆந்திரமுடையார் கோயில் பற்றியும் கிராமிய சிறு தெய்வமான ஆந்திரமுடையாரின் வரலாறு பற்றியும் எழுதியிருப்பதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பதினாறு பதினேழாம் நூற்றாண்டு தமிழகத்தின் அமைதியற்ற சூழலகளில் திக்கற்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் தெய்வங்களைப் பற்றிய அவரது அலசல் எதிலும் தீர்க்கமாகப் பார்க்கும் அவர் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது.
ராஜ்சிவாவின் 'அவர்கள்' தொடர் புதுசாக ஆரம்பித்த ஒன்று. அறிவியல் பார்வையில் அட்டகாசமாக செல்கிறது இந்தத் தொடர். விண்வெளியில் நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களில் ஒன்றான ஓஐஇ 8462852 பற்றி ராஜ்சிவா சொல்லும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. சுஜாதா 'கற்றதும் பெற்றதுமில்' செய்த மாதிரி ஊறுகாயாய் அறிவியல் தகவல்களைத்
தொட்டுக் கொள்ளாமல் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அர்ப்பணிப்பு உணர்வுடன் அதிலேயே ஆழ்ந்து விளக்குகிறார் ராஜ்சிவா. இறந்த காலத்திற்கு பயணிப்பது பற்றிய சாத்திய கூறுகளை இவர் அலசும் விதமும், ஓஐஇ 8462852 கோளில் வசிக்கும் அதிபுத்திசாலியான ஏலியன்கள் நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை பிர்மாண்டமான கட்டமைப்பு ஒன்றின் மூலம் தடுத்து, மகத்தான சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் அதிசயம் போன்ற வியத்தகு விஞ்ஞான தகவல்களை உள்ளடக்கி தன் கட்டுரைக்கு சுவையூட்டுகிறார் ராஜ்சிவா.
காற்றையும் காசு கொடுத்து வாங்கும் காலம் வந்து விட்டதை நினைத்து மலைக்கிறோம். சீனாவின் பெய்ஜிங்கில் குடுவையில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை வாங்கி சுவாசிக்கிறார்கள் என்று சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரபரத்தன. .சென்னையிலேயே சுத்தமான காற்று பத்து லிட்டர் பாட்டிலிருந்து நமது வசதிக்கேற்ப கிடைக்கிறது என்று ஜன்னலின் கட்டுரை ஒன்றிலிருந்து தெரிய வந்தது. செயற்கை சுவாசம் தேவைப்படுவோர், கடுமையான உடல் நலக்குறைவால் அவதிப்படுவோர் மருத்துவர் அறிவுரையுடன் ஆக்ஸிஜன் பாட்டில்களை பயன்படுத்தாலாமே தவிர மற்றவர்களுக்கு தேவையில்லை. இந்த மாதிரியான உபயோகம் நுரையீரலுக்குத் தீங்கிழைக்கும்' என்று மருத்துவதுறை சார்ந்த நிபுணரின் குறிப்பும் அறிவுரையாய் கட்டுரையில் காணப்படுகிறது.
'மதன்டூன்' என்று மதனின் கார்ட்டூன், ம.செ.,இளைய பாரதி, க.ரோ-- போன்ற ஓவியர்களின் உயிரோவியங்கள் பத்திரிகைக்கு தனிக் களையூட்டுகின்றன. ,
புதிய பகுதிகள், மக்கள் நலம் சார்ந்த செய்திகள் என்று ஜன்னலின் உள்ளாக பார்வையில் படுவது-- அளவுக்கு மீறிய சினிமாச் செய்திகள், அரசியல் என்று ஆகிப்போன தமிழ்ப்பத்திரிகைகளின் போக்குக்கு மாற்றாக இருக்கிறது..
'ஜன்னல்' மேலும் மேலும் சிறப்புகளை தனதாக்கிக் கொள்கிற வேகத்திலேயே மற்ற பிரபல பத்திரிகைகளையும் தன் பாதையில் இழுத்து வசப்படுத்துகிற சாகசமாய் தமிழ்ப் பத்திரிகையுலகம் புதுப்பாதையில் பயணிக்க ஆசை கொண்டு வாழ்த்துகிறோம்.
படங்களைத் தந்தவர்களுக்கு நன்றி.