ஒரு வாழ்வியல் தொடர்
முந்தைய பகுதி: http://jeeveesblog.blogspot.in/2017/08/blog-post_7.html
3. தன்னம்பிக்கை என்னும் யானை பலம்.
நம்பிக்கை கொள்ளுதல் என்பது வாழ்க்கையின் ஆதாரசுருதி. தன்மீது, தன் செயல்களின் மீது தனக்குத் தானே நம்பிக்கைக்கொள்ளுதல் தன்னம்பிக்கை எனலாம். இந்த நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைத்தேவை.
தன்னம்பிக்கையில்லாதவன் எதையும் சுயமாகச் செய்ய துணிவில்லாது போவான். எதற்கும் இன்னொருவரை எதிர்பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளபடுவான். தன்னால் இதைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியாமல், அதைச் செய்து முடிக்கவே இன்னொருவர் தயவை நாடுவது நாளாவட்டத்தில் எதுவென்றாலும் பிறரை எதிர்பார்க்கிற நிலைக்குக் கொண்டு போய்விடும்.
தனக்கு நெருங்கியவர்களிடம் ஏற்படும் பிரமிப்பும் சில நேரக்களில் ஒருவனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, எவ்வளவு அருமையாக அவர்கள் நினைத்ததை எழுத்தில் வடித்து அதை வாசிக்கும் நமக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படும்.
பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும். பொதுவாக ஆரம்ப முயற்சிகள் அவ்வளவு சிறப்பாக அமையாது. இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காமல் திருப்பித் திருப்பி முயற்சிக்கும் பொழுது நாளாவட்டத்தில் தானே மகிழும் அளவுக்கு எடுத்த முயற்சி அமையும் பொழுது அதுவே அலாதியான சந்தோஷத்தை இயல்பாகவே கொடுக்கிறது.
எனக்கு சாரங்கன் என்றொரு நண்பர் இருந்தார். இராணுவத்தில் 'ஹவில்தாராக' இருந்தவர். ஓய்வு பெற்று வந்துவிட்டார். வாழ்க்கைப் பாட்டிற்கு ராணுவ பென்ஷன் தான். எங்கள் நண்பர்
குழாமில் அவரை 'சவடால் சாரங்கன்' என்றே அழைப்போம். அப்பா....மனுஷன் என்ன பேச்சு பேசுவார், தெரியுமா?..அவர் செய்த ஒவ்வொரு காரியமும், ஷூக்கு பாலீஷ் போட்டார் என்றால் கூட, ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தோடு, யாருமே எதிர்கொள்ளாத பிரச்னைகளைத் தான் எதிர்கொண்டமாதிரி, அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் பேச்சில் பண்ணுவார்.
கொஞ்சம் கொஞ்சமாக நாளாவட்டத்தில் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவர் ஒரு ஹீரோ ஆகிவிட்டார். வீட்டு விசேஷத்திற்கு வாழைமரம் வாங்கிக் கட்டவேண்டுமா, கல்யாணச் சாப்பாட்டிற்கு அருமையான கேட்டரிங் ஏற்பாடு பண்ண வேண்டுமா, தாசில்தார் ஆபிஸில் மனுகொடுக்க வேண்டுமா, அடுத்த நாள் ரயிலுக்கு அவசர ரிசர்வேஷனா, பஸ் பாஸூக்கு ஏற்பாடா, பாஸ்போர்ட்டுக்கு அப்ளிகேஷனா---சாரங்கனிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் 'ஆச்சு காரியம்' என்பதில் ஆரம்பித்து,கிணற்றில் தோண்டி விழுந்துவிட்டால் எடுக்க சாரங்கன், வீட்டில் கரண்ட் சப்ளை போய்விட்டால் ப்யூஸ் ஒயர் போடக் கூட சாரங்கன் என்பது வரை தெருவே சாரங்கனைத் தேட ஆரம்பித்து விட்டது.
இதில் கோடிவீட்டு கோதண்டம் ரொம்ப மோசம்; பிளாஸ்டிக் மூடிதிறக்க அடம்பிடிக்கும் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தக்கூட சாரங்கனைத் தேடுவான். சாரங்கனும், 'நான் ஆஜர்' என்று சொல்கிறமாதிரி காலையில் 'காப்பி' குடித்துவிட்டு வீட்டுத்திண்ணையில் 'ஹாயாக' உட்கார்ந்திருப்பான். யார் வீட்டில் எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று தெரியாது.
சின்னச் சின்ன வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த சாரங்கன் இப்பொழுது அயனாவரத்தில், 'A--Z' என்று 'அ'விலிருந்து 'ஒள'வரை எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுக்கும் சேவைநிலையம் ஒன்றை ஆரம்பித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தில் உள்ள அத்தனை பேரும் அவனுக்குப் பழக்கம். அவனால், ஆகமுடியாத வேலை இல்லை. மீச்சுவல் பண்டிலிருந்து மைலாப்பூர் மியூசிக்கல் ஸ்டோர்களில் வயலின் வாங்குவது வரை பிட்டு பிட்டு வைத்து இலவச ஆலோசனை சொல்வான். அவன் சொன்னது எதுவும் சோடை போனதில்லை. எல்லாம் தன்னம்பிக்கை அவனுக்குக் கொடுத்த தைரியம்!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அவன் செய்த உதவிகளின் அனுபவங்களை அஸ்திவாரமாகக் கொண்டது அவனது இன்றைய வளர்ச்சி என்பது அவனை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
எந்த வேலையிலும் சுயமாகத் தான் ஈடுபடுவதே தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரம். எந்தப் புதுவேலையும், செயலும் தொடங்குகையில பிரமிப்பாகத்தான் இருக்கும். சிக்கு விழுந்த நூல்கண்டு மாதிரி. நுனி கண்டுபிடித்து பொறுமையாக முயற்சித்தால், எல்லாம் வெற்றியோ வெற்றிதான்! ஆரம்பத்தில் உடனடியான வெற்றி இல்லையென்றாலும், இதற்கு இப்படி என்று ஒரு வழியாவது தெரியுமல்லவா?..
ஏதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டுமானால், 'இதுக்கெல்லாம் அவன் தான் லாயக்கு' என்று 'ரெடிமேடாக' ஒரு சிலர் பதில் வைத்திருப்பார்கள். இவர்கள் எதற்கும் லாயக்கில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.
எல்லா விஷயங்களையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். ஆன்லைனில் பண பரிவர்த்தனை, ஆதார் அட்டை எண்-- பான் அட்டை எண் இணைப்பு, இவை இரண்டையும் வருமான வரிக் கணக்கோடு இணைப்பது என்று தொடங்கி எந்த விஷயமும் நம்மிடமிருந்து அந்நியமாகிப் போய் விடாமல் வெகுதிரள் மக்களின் அன்றாட நடவடிக்கையாகிப் போயிருக்கிறது.
வங்கிகளில் பணம் எடுக்க செலுத்த வங்கி ஊழியர்கள் இருந்த காலம் மங்கி வருகிறது. மனிதர்கள் போய் மிஷின்களோடு உறவுப் பிணைப்பு ஏற்பட்டிருக்கும் காலம் இது. நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு பாடமாகப் போதித்திருக்கிறது.
வாழ்க்கையின் இன்றைய அமைப்பும் வாழும் முறையும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு நாள்தோறும் வெவ்வேறான பயிற்சிகளைப் பெறுவதற்கு நம்மை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. இது தகவல் தொழில் நுட்ப உலகம். எந்த விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளாத தகவல் குறைச்சலும் நம்மைப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது.
எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம். தன்னம்பிக்கை இழப்பு என்பது ஒரு மனநோயாக உருவாகக் கூடிய சாத்திய கூறுகள் நிறைய உண்டு. தன்னம்பிக்கை இழப்பு தாழ்வு மனப்பான்மையை நாளாவட்டத்தில் உள்ளத்தில் விதைத்துவிடும்.
எந்த உடல் உபாதையையும் விடக்கொடியது, இந்த உள்ள உபாதை. உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் மருந்து என்றால், இந்த உள்ள உபாதை ஒழிய மனப்பயிற்சி அவசியம்.
நீந்த வேண்டுமானால், தண்ணீரில் இறங்குவதுதான் வழி.
வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவித்தவர்களெல்லாம், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும். வாழ நேரிட்ட வாழ்க்கையே அவர்களின் வாழ்க்கை வெற்றிக்கான பாடத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து வெற்றி வாகை சூட வைத்திருக்கிறது..
தளராத உழைப்பும், தடுமாறாத செயல்களுமே வெற்றிக்கனி பறிக்க அவர்களை வல்லவர்களாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.
(வளரும்)
தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை அளித்த நண்பர்களுக்கு நன்றி.