'எப்படி எழுதக் கூடாது?' என்ற சுஜாதாவின் தொடரின் நான்காவது பகுதியை வாசிக்க நேர்ந்தது.
பிற்காலத்து சுஜாதா அல்லாத எழுத்தின் சாயல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை போலும். அதனால் தான் இந்தப் பகுதியின் முதல் பகுதி போல் அல்லாமல் சுஜாதா எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து எடுத்து எழுதுவது போல ரொம்பவே அந்தப் பகுதியைக் குறுக்கி விட்டார்கள்.
குறுக்கியது தெரியாமல் இருக்க, சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதையான 'ஒரு பெரிய மனிதரும், பிக்பாக்கெட்டும்' கதையை அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள். 1962-ஆம் வருடத்திய டிசம்பர் 27
'குமுதம்' இதழில் பிரசுரமான கதை இது. 'லதா'வின் அட்டைப்பட குமுதம் இதழ் அது.
சுஜாதா தனது முதல் கதையான 'அதிர்ச்சி'யை எஸ்.ஆர். ராஜன் என்ற பெயரில் எழுதியிருந்தார் என்றால், இரண்டாவது கதையான ஒ.பெ.ம.பி. கதையை எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
ரொம்ப சாதாரணமான கதை. ஆரம்ப கால ரங்கராஜன் எதிர்கால சுஜாதாவாக எப்படி வளர்ந்து உருவானவானார் என்று இந்தக் கதையைப் படித்து தாராளமாக வியக்கலாம். 'எப்படி எழுதக் கூடாது' என்பதை விட 'எப்படியும் எழுதலாம்' என்பதைக் கற்றுக் கொடுப்பது தான் சுஜாதா விட்டுச் சென்ற எழுத்துப் பாணி சாகசமாகத் தெரிகிறது.
முக்கியமாக இந்தக் கதை சம்பந்தப்பட்ட விவரங்களிலிருந்து ஆச்சரியமான சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஹைதராபாத்திலிருந்து கனமான ஒரு பெட்டி நிறைய விஸ்கி பாட்டில்களை கடத்தி வர கதைநாயகன் ஒப்புக் கொள்கிறான்.
ஒரு சின்ன வெள்ளிக் கிண்ணியின் விலை வெறும் பத்து ரூபாய்!
1962-ம் வருடத்திய குமுதம் இதழின் விலை 25 காசுகள். ஆக 40 குமுதம் இதழ்களின் விலை ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு சமம். அல்லது 40 குமுதம் இதழ்களை வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு வெள்ளிக் கிண்ணி வாங்கி விடலாம்!
கட்டக் கடைசியாக வழக்கம் போல புதிர் இல்லாவிட்டால் எப்படி?..
இந்த வார 'எப்படி எழுதக் கூடாது?' தொடரை வைத்து ஒரு சின்ன புதிர்.
அன்றைக்கு ராத்திரியே அவசர அவசரமாய் 'ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும்' கதையை எழுதி காகிதம் உலர்வதற்குள் குமுதம் அலுவலகத்துக்கு போஸ்ட் செய்தேன்.
'அ'வோ, 'ர'வோ, 'சு'வோ அது கையில் கிடைத்தவுடனே, கவரைக் கூடப் பிரிக்காமல், பரணில் தூக்கிக் கடாசி விட்டார்கள்.
-- சுஜாதா
'அ'வோ, 'ர'வோ, 'சு'வோ என்றால் என்ன?
இதான், புதிர்! சொல்லுங்கள், பார்க்கலாம்.
இந்தப் புதிரில் ஒரு மிஸ்ஸிங்கும் உண்டு. அதையும் சேர்த்துச் சொல்பவர்கள் உண்மையில் தமிழ் பத்திரிகை வாசகர் உலகில் கில்லாடிகள் தாம்!...