பகுதி--2
சாதாரணமாக வயதானவர்கள் தான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன்' என்று
சொல்வார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்று அந்தப் பெரியவர் கேட்டது யதார்த்ததிற்கு ஒத்துப் போகிற ஒன்று தான்.
நானும் நினைத்துப் பார்க்கிறேன். இள வயசில் இப்படியெல்லாம் யோசித்ததே இல்லை. ஒவ்வொரு வயசுக்கும் ஏற்பவான அனுபவிப்புகள் அந்தந்த வயதுகளில் நம்மை மூழ்கடித்து விடுகின்றன.
வந்ததிலிருந்து போவதற்கு இடையிலான இடமாக இங்கு தங்கியிருக்கும் காலத்தில் ஏகப்பட்ட சமாசாரங்களின் சுழலில் சிக்கி மூச்சு முட்டத் தவிக்கிறோம்.
ஒரேயடியாக துன்பம், ஒரேயடியாக இன்பம் என்றில்லாமல் இங்கு தங்கியிருக்கும் காலம் ரொம்பவும் சாகசமாகப் பின்னப்பட்டிருக்கிறது. அந்தப் பின்னல்களில் நாமே விரும்பி மாட்டிக் கொள்கிற மாதிரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஈர்ப்பு இருக்கிறது.
இந்த ஈர்ப்பு தான் இங்கைய தங்கலை சுவாரஸ்யமாக ஆக்குகிற விஷயம். இந்த சுவாரஸ்யங்களை தாமரை இலைத் தண்ணீர் மாதிரி பட்டும் படாமலும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.
இந்த ஈர்ப்பும் பெரிசாய்ப் போய் விட்டால் ஆபத்து. ஒவ்வொரு ஈர்ப்பிலும் அதைத் தொடர்ந்து ஒரு துன்பம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் விஷம் கலந்த பால் போலான அந்தந்த ஈர்ப்பில் அதிகபட்ச ஈடுபாடு ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காப்பாற்ற அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் போய்ச் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட நம்மைத் தயார்படுத்துவதற்காக இவை அமைகின்றன.
அந்தத் தயார்படுத்துதல்களில் தலையான ஒன்று தான் இறை வழிபாடு.
மனித மனம் ஒன்றை விஞ்சி ஒன்று இருந்தால் அதை விரும்ப பழக்கப்படுத்தப் பட்டுள்ளது. இதுவும் சமத்காரமான ஒரு ஏற்பாடு தான். இந்த ஏற்பாடு இல்லையென்றால் ஒன்றை விட்டு இன்னொன்றுக்கு மனித மனம் நகராது. அதனால் தான் எல்லையற்ற இன்பம் எதுவானாலும் அதைத் சுகிக்க மனிதன் அலைந்து கொண்டிருக்கிறான்.
எல்லா சுகங்களையும் தாண்டிய எல்லையற்ற நித்ய சுகம் ஒன்றை மனிதனுக்கு அறிமுகப்படுத்தத் தான் இறை வழிபாடு வந்தது. நிலையான நித்யமான அமைதி (eternal peace) கிடைக்க இறை வழிபாடு துணை செய்யும். இந்த நித்யமான அமைதியில் ஆழ்வது தான் இறைவழிப்பாட்டின் தலையாய அனுபவம். (ultimate goal)
நேரடியாக எல்லையற்றது இது என்று ஒன்றைச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு சுகத்திலும் அதன் அனுபவிப்பில் அது தான் பரமாந்தமானது என்கிற மாதிரியான மயக்கமும் கலந்திருக்கிறது.
எல்லா இன்பமும் இன்பமல்ல; எந்த இன்பத்தின் முடிவிலும் ஒரு துன்பம் முடிச்சு போடப்பட்டு தான் இருக்கிறது.. அதே மாதிரி எல்லாத் துன்பங்களின் முடிவிலும் இன்பத்திற்கான வாசல் திறக்கிறது. இரவு-- பகல் மாதிரி இன்ப துன்பங்கள் ஒன்றின் தொடர்ச்சியாய் இன்னொன்றும் நம் வாசல் கதவைத் தட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இக உலக இன்பங்கள் அத்தனையும் அதனைத் துய்க்கும் நம் உணர்வுக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் நம்மைச் சுற்றி நடப்பனவற்றை இப்படியாக வகுத்துக் கொள்கிறோம்.
எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்த்தவனுக்குத் தான்
எல்லையற்றதையும் தீர்மானிக்க முடியும். அதனால் தான் துன்பம் இணைந்த எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் துன்பம் கலக்காத இறை இன்பத்தை உணரும் பொழுது அதைப் பற்றிக் கொள்கிறான்.
'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே, இம்மையே உன்னைச் சிக்'கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே' என்று மாணிக்க வாசகர் கண்களில் நீர் தளும்பி உருகிச் சொன்னது இதைத்தான்.
துன்பம் நெருங்காத இறை இன்பத்தையும் துன்பமாக்கிக் கொள்கிறவர்கள் உண்டு. எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொள்கிறவர்கள் இவர்கள்.
இவ்வுலகில் எதை நுகர்வதற்கும் பயிற்சி தேவை. இறை இன்பத்தை சிந்தாமல் சிதறாமல் உணர்வதற்கும் பயிற்சி தேவை. இன்னொருவர் அனுபவப்பட்டு நாம் பெறுவதல்ல இது. சொந்த அனுபவத்தில் விளைவது.
அதனால் தான் போக வேண்டிய அந்த இடத்தை நித்ய அமைதிக்கான இடமாக்கி இறைவனின் வாசஸ்தலமாக ஆக்கினார்கள்.
அந்த இடத்திற்கு சொர்க்கலோகம் என்று கற்பனையில் பெயர் சூட்டினார்கள்.போக வேண்டிய இடத்திற்குப் போனவரை இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார் என்றார்கள்.
சொல்கிறவர்களை வைத்து சில நேரங்கள் சொல்லப்படும் விஷயமும் தீர்மானமாகும். ஒரு மாற்று ரசனை குறைந்தவர்கள் அவ்விடத்தில் எந்நேரமும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்றும் இன்ப லாகிரியில் அமிழ்த்த தூண்டில் போட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று அழகுப் பதுமைகளை நடமாட நடனமாட விட்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் அதற்கான காரணங்கள் உண்டு.
ஒரு ஆழ்ந்த வெளிப்பாடு என்னவென்றால் எல்லாவற்றிற்கும் இது இதனால் என்று எடுத்துக்காட்டுகிற மாதிரியான காரண காரியங்களை இறை வழிப்பாடு சார்ந்த புராணங்களில் இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.. சொல்லப் போனால் காரண காரியமில்லாமல் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை என்கிற தெளிந்த உண்மையைச் சொல்ல வந்தது தான் புராணக் கதைகளே.
களை களைந்து பயிரைக் காப்பாற்றுவது போல இறை இன்பத்தை நுகர விலக்குவனவற்றை விலக்கி மனசில் போற்றித் துதிக்க போக வேண்டிய இடத்திற்கான பாதை மனசிலேயே போடப்படும்.
பாதை என்றால் அதில் முள்ளும் கல்லும் கிடக்கும் தான்; அதுவும் நம் நோக்கம் நித்ய அமைதி என்றால் கேட்கவே வேண்டாம். பாதையில் விரவிக் கிடக்கும் முள்ளையும் கல்லையும் விலக்கிச் சீர்செய்வதே அந்த நீண்ட பயணத்திற்கான பயிற்சியாகிப் போகும்.
இந்தப் பயணம் சுலபமானதல்ல. இன்னொன்று. பயணத்திற்கான பயிற்சி, வந்ததிற்கும் போகப்போவதற்கும் இடைப்பட்ட தங்கல் இடத்தில் தான்.
பயிற்சிக்கான அட்டவணைகள் நிறைய. பயிற்சியில் ஈடுபட்டவர்கள், . ஈடுபட்டவர்களைப் பார்த்தவர்கள், பார்த்தவர்கள் சொல்லக் கேட்டவர்கள் என்று ஏகப்பட்ட அட்டவணைகள் இதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப அட்டவணையில் காணப்படும் பயிற்சி முறைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.
பயிற்சி முறைகள் கடுமையாக இருந்த காலத்தில் வனங்களில் இக உலகு மறந்து இறை தியானத்தில் ஈடுபடுதல் போன்ற உடலை விரும்பி வருத்திக் கொள்ளும் பயிற்சிகள் இருந்தன. ஜடாமுடி வளர்ந்து தொங்க, கரையான் புற்று சுறறி ஆளையே மறைத்தும் நோக்கத்தில் தீவிர ஈடுபாடு பற்றிக் கொண்டதினால் மெய்வருத்தம் பாராமல் கருமமே கண்ணாக இருந்த ரிஷிகள் வாழ்ந்த நாடு இது.
(தொடரும்)
சாதாரணமாக வயதானவர்கள் தான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன்' என்று
சொல்வார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்று அந்தப் பெரியவர் கேட்டது யதார்த்ததிற்கு ஒத்துப் போகிற ஒன்று தான்.
நானும் நினைத்துப் பார்க்கிறேன். இள வயசில் இப்படியெல்லாம் யோசித்ததே இல்லை. ஒவ்வொரு வயசுக்கும் ஏற்பவான அனுபவிப்புகள் அந்தந்த வயதுகளில் நம்மை மூழ்கடித்து விடுகின்றன.
வந்ததிலிருந்து போவதற்கு இடையிலான இடமாக இங்கு தங்கியிருக்கும் காலத்தில் ஏகப்பட்ட சமாசாரங்களின் சுழலில் சிக்கி மூச்சு முட்டத் தவிக்கிறோம்.
ஒரேயடியாக துன்பம், ஒரேயடியாக இன்பம் என்றில்லாமல் இங்கு தங்கியிருக்கும் காலம் ரொம்பவும் சாகசமாகப் பின்னப்பட்டிருக்கிறது. அந்தப் பின்னல்களில் நாமே விரும்பி மாட்டிக் கொள்கிற மாதிரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஈர்ப்பு இருக்கிறது.
இந்த ஈர்ப்பு தான் இங்கைய தங்கலை சுவாரஸ்யமாக ஆக்குகிற விஷயம். இந்த சுவாரஸ்யங்களை தாமரை இலைத் தண்ணீர் மாதிரி பட்டும் படாமலும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.
இந்த ஈர்ப்பும் பெரிசாய்ப் போய் விட்டால் ஆபத்து. ஒவ்வொரு ஈர்ப்பிலும் அதைத் தொடர்ந்து ஒரு துன்பம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் விஷம் கலந்த பால் போலான அந்தந்த ஈர்ப்பில் அதிகபட்ச ஈடுபாடு ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காப்பாற்ற அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் போய்ச் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட நம்மைத் தயார்படுத்துவதற்காக இவை அமைகின்றன.
அந்தத் தயார்படுத்துதல்களில் தலையான ஒன்று தான் இறை வழிபாடு.
மனித மனம் ஒன்றை விஞ்சி ஒன்று இருந்தால் அதை விரும்ப பழக்கப்படுத்தப் பட்டுள்ளது. இதுவும் சமத்காரமான ஒரு ஏற்பாடு தான். இந்த ஏற்பாடு இல்லையென்றால் ஒன்றை விட்டு இன்னொன்றுக்கு மனித மனம் நகராது. அதனால் தான் எல்லையற்ற இன்பம் எதுவானாலும் அதைத் சுகிக்க மனிதன் அலைந்து கொண்டிருக்கிறான்.
எல்லா சுகங்களையும் தாண்டிய எல்லையற்ற நித்ய சுகம் ஒன்றை மனிதனுக்கு அறிமுகப்படுத்தத் தான் இறை வழிபாடு வந்தது. நிலையான நித்யமான அமைதி (eternal peace) கிடைக்க இறை வழிபாடு துணை செய்யும். இந்த நித்யமான அமைதியில் ஆழ்வது தான் இறைவழிப்பாட்டின் தலையாய அனுபவம். (ultimate goal)
நேரடியாக எல்லையற்றது இது என்று ஒன்றைச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு சுகத்திலும் அதன் அனுபவிப்பில் அது தான் பரமாந்தமானது என்கிற மாதிரியான மயக்கமும் கலந்திருக்கிறது.
எல்லா இன்பமும் இன்பமல்ல; எந்த இன்பத்தின் முடிவிலும் ஒரு துன்பம் முடிச்சு போடப்பட்டு தான் இருக்கிறது.. அதே மாதிரி எல்லாத் துன்பங்களின் முடிவிலும் இன்பத்திற்கான வாசல் திறக்கிறது. இரவு-- பகல் மாதிரி இன்ப துன்பங்கள் ஒன்றின் தொடர்ச்சியாய் இன்னொன்றும் நம் வாசல் கதவைத் தட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இக உலக இன்பங்கள் அத்தனையும் அதனைத் துய்க்கும் நம் உணர்வுக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் நம்மைச் சுற்றி நடப்பனவற்றை இப்படியாக வகுத்துக் கொள்கிறோம்.எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்த்தவனுக்குத் தான்
எல்லையற்றதையும் தீர்மானிக்க முடியும். அதனால் தான் துன்பம் இணைந்த எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் துன்பம் கலக்காத இறை இன்பத்தை உணரும் பொழுது அதைப் பற்றிக் கொள்கிறான்.
'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே, இம்மையே உன்னைச் சிக்'கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே' என்று மாணிக்க வாசகர் கண்களில் நீர் தளும்பி உருகிச் சொன்னது இதைத்தான்.
துன்பம் நெருங்காத இறை இன்பத்தையும் துன்பமாக்கிக் கொள்கிறவர்கள் உண்டு. எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொள்கிறவர்கள் இவர்கள்.
இவ்வுலகில் எதை நுகர்வதற்கும் பயிற்சி தேவை. இறை இன்பத்தை சிந்தாமல் சிதறாமல் உணர்வதற்கும் பயிற்சி தேவை. இன்னொருவர் அனுபவப்பட்டு நாம் பெறுவதல்ல இது. சொந்த அனுபவத்தில் விளைவது.
அதனால் தான் போக வேண்டிய அந்த இடத்தை நித்ய அமைதிக்கான இடமாக்கி இறைவனின் வாசஸ்தலமாக ஆக்கினார்கள்.
அந்த இடத்திற்கு சொர்க்கலோகம் என்று கற்பனையில் பெயர் சூட்டினார்கள்.போக வேண்டிய இடத்திற்குப் போனவரை இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார் என்றார்கள்.
சொல்கிறவர்களை வைத்து சில நேரங்கள் சொல்லப்படும் விஷயமும் தீர்மானமாகும். ஒரு மாற்று ரசனை குறைந்தவர்கள் அவ்விடத்தில் எந்நேரமும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்றும் இன்ப லாகிரியில் அமிழ்த்த தூண்டில் போட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று அழகுப் பதுமைகளை நடமாட நடனமாட விட்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் அதற்கான காரணங்கள் உண்டு.
ஒரு ஆழ்ந்த வெளிப்பாடு என்னவென்றால் எல்லாவற்றிற்கும் இது இதனால் என்று எடுத்துக்காட்டுகிற மாதிரியான காரண காரியங்களை இறை வழிப்பாடு சார்ந்த புராணங்களில் இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.. சொல்லப் போனால் காரண காரியமில்லாமல் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை என்கிற தெளிந்த உண்மையைச் சொல்ல வந்தது தான் புராணக் கதைகளே.
களை களைந்து பயிரைக் காப்பாற்றுவது போல இறை இன்பத்தை நுகர விலக்குவனவற்றை விலக்கி மனசில் போற்றித் துதிக்க போக வேண்டிய இடத்திற்கான பாதை மனசிலேயே போடப்படும்.
பாதை என்றால் அதில் முள்ளும் கல்லும் கிடக்கும் தான்; அதுவும் நம் நோக்கம் நித்ய அமைதி என்றால் கேட்கவே வேண்டாம். பாதையில் விரவிக் கிடக்கும் முள்ளையும் கல்லையும் விலக்கிச் சீர்செய்வதே அந்த நீண்ட பயணத்திற்கான பயிற்சியாகிப் போகும்.
இந்தப் பயணம் சுலபமானதல்ல. இன்னொன்று. பயணத்திற்கான பயிற்சி, வந்ததிற்கும் போகப்போவதற்கும் இடைப்பட்ட தங்கல் இடத்தில் தான்.
பயிற்சிக்கான அட்டவணைகள் நிறைய. பயிற்சியில் ஈடுபட்டவர்கள், . ஈடுபட்டவர்களைப் பார்த்தவர்கள், பார்த்தவர்கள் சொல்லக் கேட்டவர்கள் என்று ஏகப்பட்ட அட்டவணைகள் இதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப அட்டவணையில் காணப்படும் பயிற்சி முறைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. பயிற்சி முறைகள் கடுமையாக இருந்த காலத்தில் வனங்களில் இக உலகு மறந்து இறை தியானத்தில் ஈடுபடுதல் போன்ற உடலை விரும்பி வருத்திக் கொள்ளும் பயிற்சிகள் இருந்தன. ஜடாமுடி வளர்ந்து தொங்க, கரையான் புற்று சுறறி ஆளையே மறைத்தும் நோக்கத்தில் தீவிர ஈடுபாடு பற்றிக் கொண்டதினால் மெய்வருத்தம் பாராமல் கருமமே கண்ணாக இருந்த ரிஷிகள் வாழ்ந்த நாடு இது.
(தொடரும்)