17. தன்னில் உணர்ந்த தான்
மூளை என்பதே ஒரு மர்மச் சுரங்கம். நிறைய கேள்விகள் அதற்கான தகுந்த விடை கிடைக்கக் காத்திருக்கின்றன என்பதே உண்மை. உடல் சாத்திர ஆய்வுகளில் இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் நிரம்ப இருக்கின்றன என்பதே இன்றைய நிலை.
நரம்பியல் என்னும் ஆகப்பெரிய சாத்திரத்தின் ராஜா மூளையும் மூளை சார்ந்த உடலியக்க உன்னதங்களும். இதையெல்லாம் படைத்தவனைக் கோயில் கட்டி கொண்டாடுவதில் எந்த பிரமையும் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உடலின் சகல பகுதி உறுப்புகளையும் இயக்கத்தில் வைத்திருப்பது உயிர்ப்புள்ள மூளையின் சாகசமே என்று சென்ற பதிவில் பார்த்தோம். உறுப்புகள் மட்டுமல்ல சகல உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டு அறையில் பொருத்தி வைத்துக் கொண்டு லாக்கர் சாவியையும் தன் கைவசமே வைத்திருக்கும் மூளையின் உன்னத ஆற்றல் பற்றி நிறையவே சொல்லலாம்.
செம டிராஃபிக். இந்தக் குறுக்குப் பாதையைத் தவிர்த்திருக்கலாம். நுழைந்தது நுழைந்தாயிற்று. இனி பின்வாங்கவும் முடியாது. வண்டிகள் எறும்பு கூட்டம் போல ஊர்ந்து நகர்ந்தன என்ற நிலை. திடீரென்று தேசலாய் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதல் டெஸிபலில் (100 dB) வீரிட்ட ஆம்புலன்ஸ் சைரன் ஒலி அந்த ஊர்தலில் ஒரு பரபரப்பைத் தொற்ற வைத்தது. சட்டென்று நம் வாகனத்தைக் ஆம்புலன்ஸ் கடந்து செல்லும் பொழுது 'பாவம்.. யாருக்கு என்னவோ' என்ற பரிதாப உணர்வு பீரிடல்.. கடவுளே! அந்த சிக்னல் விழுவதற்குள் ஆம்புலன்ஸ் இந்த நாற்சந்தியைக் கடந்து விட வேண்டுமே என்ற எதிர்பார்ப்பின் தீவிரம் கூடக் கூட சைரனை லட்சியம் பண்ணாமல் குறுக்கே குறுக்கே முந்த முயற்சிப்போரின் மீது எரிச்சல்.. அப்பாடி.. ஆம்புலன்ஸ் நாற்சந்தியைக் கடக்கவும், சிக்னல் விழவும் சரியாக இருக்க... மனசுக்கு ஒரு நிம்மதி.. கொஞ்ச நேரத்திற்கு முன்பு சலிப்பாய் இருந்த ஊர்தல் இப்பொழுது அப்படி இல்லை; பரவாயில்லை.. பொறுத்துப் போகலாம் என்ற ஆசுவாசம்..
சலிப்பு, பரபரப்பு, பரிதாபம், எதிர்பார்ப்பு, எரிச்சல், நிம்மதி, ஆசுவாசம் என்று இரண்டே நிமிடங்களில் ஒன்று மாற்றி ஒன்று என்று எத்தனை உணர்வுகள்! இத்தனைக்கும் இடையே சைரன் ஒலி செவி வழியாய் கடத்தப் பட்டு அதற்கான உணர்வைக் கொடுத்து (ஆம்புலன்ஸ், ஆபத்தான நிலையில் நோயாளி, எவ்வளவு விரைவாக மருத்துவ மனை போக வேண்டுமோ அவ்வளவு விரைவாக என்றெல்லாம் நிகழ்வை உணர்த்தி) சொடுக்கு நேரத்தில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் அத்தனையும் மூளை என்ற படைப்பின் உன்னதம் நிகழ்த்திய அற்புதம் தான்! இந்த மாதிரி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள். மூளையின் மின் வேதியியல் (Electro chemical) சாத்தியப்பாடுகள் சாத்தியப்படுத்தும் சாகசங்கள்!
இப்பொழுது நான் யார் என்ற பழைய கேள்விக்கு வருவோம்.
நான் யார் என்றால் நான் இப்படியானவன் என்ற தன்னுடைய குண நலன்களைக் குறிப்பிட்டு சிலர் சொல்லலாம்.
நான் கோபக்காரன் என்று ஒருவர் சொன்னால் தான் கொள்ளும் கோபம் அவருக்கே தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.
தன்னைப் பற்றி தனக்கே தெரிந்திருப்பதை சுய விழிப்புணர்வு எனலாம். இந்த மாதிரியான தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்கள் தன்னை எந்த நேரத்தும் சரிப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பார்கள்.
அதாவது, தான் இப்படி இருப்பது தவறு; இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்தால் தான் நினைக்கிற படி தன்னை அமைத்துக் கொள்வது அவருக்கு எளிதான காரியமாக இருக்கும்.
கோப உணர்விற்கு ஆட்பட்ட ஒருவர் தனக்கு வாய்த்திருக்கிற கோபத்தை தனக்கான தகுதியாக எண்ணலாம். இல்லை, தகுதியின்மையாகவும் கருதலாம். அது அடுத்த கட்ட நிலை.
இந்த அடுத்த கட்ட நிலை பெரிய விஷயமில்லை. அதை எந்த நேரத்தும் தனக்கேற்ற மாதிரி அவர் சரிப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சுய பயிற்சிகள் எளிமையானவை.
அவை என்ன பயிற்சிகள் என்று பிறகு பார்க்கலாம்.
எந்த சார்பு நிலையும் இல்லாமல், தான் எப்படிப்பட்டவன் என்று தானே அப்பட்டமாக உணர்ந்து கொள்ளும் நிலை தான் முக்கியம். தன்னைப் பற்றி தன் சுய ரூபம் பற்றி தனக்கேத் தெரியாமல் குழப்பமாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது மன வளர்ச்சியற்ற நிலை. வாழ்க்கையில் நாம் எடுக்கும் பல முடிவுகளை அபத்தத்திற்கு அவை இட்டுச் செல்லும்.
நம்மைப் பற்றி நாமே கறாராக கணிக்கும் அறிவு நமக்கு வாய்த்தல் ஒரு வரம். அந்த உயர்ந்த நிலை வாய்க்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வது தான் இந்த தியானத்தின் முதல் படி. இதை சாத்தியப்படுத்த இரட்டை நிலை இல்லாத வாழ்க்கை முறை சித்திக்க வேண்டும்.
அது என்ன இரட்டை நிலை?..
அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
(வளரும்)