9
புரண்டு படுத்த பொழுது விழிப்பு வந்து விட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆனதால் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு எழுந்திருக்க செளகரியமாக இருந்தது. தூக்கம் கலைந்தவுடன் படுத்த வாக்கிலேயே தலை நிமிர்த்தி வால்கிளாக்கில் மணி பார்த்தான் பாண்டியன். மணி ஐந்தாகியிருப்பது உணர்வில் படிந்த அடுத்த வினாடி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான்.
சமையலறையிலிருந்து மிக்ஸி சப்தம் கேட்டு அடங்கியது. இவன் அந்தப் பக்கம் போய்ப் பார்த்த பொழுது மங்கை மிக்ஸியின் மேல் ஜாரை நீக்கி உள்ளே அரைபட்டிருப்பதை கரண்டியில் எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.
இவன் எழுந்து வந்ததைப் பார்த்தவள், "என்ன காப்பி கலக்கட்டுமா?" என்றாள்.
"மணி அஞ்சாச்சு பார்.. எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்? எழுப்பக்கூடாது?" என்று குறைப்பட்டுக் கொண்டான் பாண்டியன்.
"எவ்வளவு நேரம்?.. மூணறைக்குத் தானே படுத்தீங்க.. அசந்து தூங்கறச்சே எழுப்ப மனசு வருமா?.. லீவு நாள் தானே?.. இருக்கவே இருக்கு, விடிஞ்சா ஆபீசுக்கு கிளம்பற ரொட்டீன் வேலை ஆரம்பிச்சிடும்.. என்ன, கேட்டேனே, காப்பி கலக்கட்டுமா?"
"உம்.." என்றவன், "நீ மட்டும் என்ன?.. எனக்கு முன்னாடியே கிளம்ப வேண்டியிருக்கும். எனக்கானும் சனிக்கிழமை லீவு. உனக்குன்னா சனிக்கிழமையிலும் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு அரை நாள் அதிலே போய்டுது.. ம்.. என்ன செய்துகிட்டு இருக்கே?" என்று உள்பக்கம் வந்தான். பொட்டு பொட்டாக அவள் முகத்தில் வியர்த்திருந்தது, அவள் மீதான பரிதாபத்தைக் கூட்டியது.
கணவனின் கரிசனம் இன்னும் இவனுக்கு நிறைய வகைவகையாய் செய்து போட வேண்டும் என்கிற ஆசையைக் கூட்டியது. "வாழைக்காய் இருந்தது.. பொடிமாஸுக்கு பொடி செய்து வைச்சிருக்கேன்." என்றவாறே பிரிட்ஜிலிருந்து எடுத்த பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சத் தொடங்கினாள் மங்கை.
"எனி ஹெல்ப்?.. ஸிங்க்லேயே அதெல்லாம் போட்டுடு. நான் வந்து தேய்ச்சு வைக்கிறேன்.." என்று முகம் கழுவி வரத் திரும்பினான்.
"சரியாப் போச்சு.. இப்படி ஆம்பிளை இருந்தா, பொண்ணுங்க சதை போட்டு பெருத்துடுவாங்க.. தஸ்ஸு புஸ்ஸூன்னு அப்புறம் அவங்களுக்குத் தான் சிரமம்.."
"என்ன நீ கூட இப்படி பேசறே.. நம்ம வீட்டு வேலையைச் செய்யறதுலே கூட ஆம்பளை-பொம்பளை பாகுபாடா?.. பகிர்ந்திண்டாத்தான் ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருக்கும். மனசிலே ஆயி?.." என்று பாண்டியன் புன்னகைத்தான்.
அவள் மிதமாக கொதித்திருந்த பாலில் பெரும்பகுதியை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஒதுக்குப்புறமாக வைத்து விட்டு, மீதியிருந்த பாலில் டிகாஷனைக் கலந்து அடுப்பில் வைத்தாள். "என்ன பெரிய தொலையாத வேலை?..நாம ரெண்டு பேர் தானே?" என்று ஷெல்பிலிருந்து சர்க்கரை டப்பாவை எடுத்தாள். 'நாம ரெண்டு பேர் தானே' என்று சொன்னதில் அவளை அறியாமலேயே வார்த்தைகளில் விழுந்த அழுத்தத்தின் அர்த்தம் இரண்டு பேருக்குமே புரிந்தது.
"ரெண்டு பேர் தான். இருந்தாலும் நச்சு நச்சுனு ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு இருக்கில்லியா?.. அதுக்காகச் சொன்னேன்.." என்றான் பாண்டியன்.
"முதல்லே போய் முகமெல்லாம் கழுவிகிட்டு ப்ரஷ்ஷா வாங்க.." என்று அவன் முதுகுப் பக்கம் கைவைத்து லேசாகத் தள்ளி விட்டாள். "இப்போலாம் என்ன தனியாகவே கோயிலுக்கு கிளம்ப ஆரம்பிச்சாச்சா?" என்று கேள்வி பின்னாடி கேட்டது..
"வந்து சொல்றேன்.." என்று வாஷ்பேசினுக்குப் போனான் பாண்டியன். முகம் துடைத்து, காப்பி குடித்து எல்லாம் ஆகியும் அவனே சொல்லாததினால், மங்கையே முன்னால் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்டாள். "விபூதி- குங்குமப் பொட்டலம் கொண்டு வந்து கொடுத்ததினால் தெரிந்தது. சாயந்தரம்ன்னா நானும் கூட வந்திருப்பேன்லே?"
"திடீர்ன்னு நின்ற சீர் நெடுமாற நாயனாரைப் பாக்கணும் போல இருந்தது. அதனாலே கிளம்பிட்டேன். வேணும்னா ரெண்டு பேரும் சேர்ந்து சாயந்தரம் போனால் போச்சு.." என்றான் பாண்டியன்.
அவள் பதில் ஒன்றும் சொல்லாததினால், "அந்த ராஜா விஷயம், நீ சொன்னது சரிதான்.." என்றான்.
மங்கைக்கு கணவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. அதனால், "எந்த ராஜா விஷயம்?" என்றாள்.
"ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்னு அன்னிக்கு நீ சொன்னது என்னைத் துறத்திண்டே வர்றது, மங்கை!"
"ராஜான்னு பெயர் வைக்கலையே தவிர, யார் சொன்னாலும் சொல்லாட்டா லும் நீங்க ராஜாதான்!" என்று மங்கை புன்னகைத்தாள்.
"நான் சொல்ல வந்தது என்னன்னா, நீ அப்படிச் சொல்லிச் சொல்லி இன்னிக்கு அந்த பாண்டிய ராஜா சிலை முன்னாடி நிக்கறச்சே, ராஜா மிடுக்குன்னு சொல்லுவாங்களே, அந்த மிடுக்கு உணர்வு எனக்கும் தொத்திண்ட மாதிரி இருந்திச்சு.."
"எந்த ராஜா? மாறவர்மன் அரிகேசரியையாச் சொல்றீங்க?" என்று குறும்பாய் மங்கை பாண்டியனைப் பார்த்தாள்.
"சரியாப் போச்சு.. ஏதோ அடுத்த தெரு அம்மணியைப் பத்திக் கேக்கற மாதிரி ரொம்ப சகஜமாக் கேக்கறே?.. அரிகேசரி இல்லே; நின்ற சீர் நெடுமாற நாயனார்! போச்சுடா.. எல்லாத்தையும் மறந்தாச்சா?"
"மறக்கலே. அவர் தான் இவர். இவர் தான் அவர்" என்று மங்கை சொன்ன போது பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. "நீங்களும் வெளியே போயிருந்தீங்களா?.. அடுப்படி வேலையெல்லாம் முடிச்சிட்டு, சும்மா இருக்க பிடிக்கலே. பழைய புஸ்தகங்களையெல்லாம் எடுத்து வைச்சிகிட்டு இந்த பாண்டிய ராஜாவைப் பத்தி என்னலாம் தகவல் கிடைக்கும்ன்னு தேடிகிட்டு இருந்தேன். அப்போத் தெரிஞ்சது தான் இது. இது மட்டுமில்லே. இன்னும் சிலதும் தெரிஞ்சது.. அறுபத்து மூணு பேர் இருக்க, இந்த நாயனார் விசேஷமா உங்க கண்ணுக்குத் தட்டுப்பட்டதே எனக்கு ஆச்சரியமா இருக்கு.." என்று மங்கை சொன்ன போது, பாண்டியன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அது என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல், அவன் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஒரு கதை கேட்கும் ஆவலில், "ஏன் நிறுத்திட்டே?.. சொல்லு, மங்கை.." என்று அவள் முகத்தையே பார்த்தான்.
"அந்த ராஜாக்கு அமைஞ்ச ராணி பேரு இன்னும் விசேஷம். மங்கையர்க்கரசிங்கறது அவங்க பேரு. மங்கையர்க்கரசிங்கறதை கூப்பிடற வசதிக்காக மங்கைன்னு கூப்பிடலாமில்லியா?"
'குபுக்'ன்னு பிரவாஹமெடுத்த சந்தோஷத்திற்கு பாண்டியனால் அணை போடமுடியவில்லை. "ஓஹோஹோ.." என்று கைதட்டிக் கொண்டாடினான் .. "உன்னோட விவர சேகரிப்பு அற்புதம், மங்கை!" என்று மகிழ்ச்சியில் ஆரவாரித்தான்.. "ராஜாங்கறச்சே, எனக்கு அவ்வளவா சுவாரஸ்யப்படலே. ஆனா இப்போ ராணி பேரைத் தெரிஞ்சிக்கிட்டதும், இந்த ஒற்றுமையை நெனைச்சுப் பாத்தா என்ன சொல்றதுன்னு தெரிலே.." என்று பரபரத்தவன் திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்த நிலையில், "மங்கை.. நீ மட்டும் இல்லே. என்னோட பாட்டி பேரு கூட மங்கை தான்.. அந்த பாட்டி பத்தி என்னிக்கானும் அத்தை சொல்லியிருக்காங்களா?" என்று திகைத்துக் கேட்டான்.
"சொல்லியிருக்காங்க.. உங்க தாத்தா பேரு தெரியுமோ?" என்று அவளுக்கு அது தெரியும்ங்கற தோரணையில் கேட்டாள்.
"தெரியுமே! அவரு பேரு பராங்குசம், இல்லை?"
"கரெக்ட்! இந்தப் பேருலே இன்னொரு ஆச்சரியம் என்னன்னா, நம்ம நாயனார் ராஜோவோட பட்டப்பேரும் பராங்குசன்ங்கறது தான். கொஞ்சம் டீப்பா பாத்தீங்கன்னா, நம்ம ரெண்டு பேர் குடும்பத்து பெரியவங்க பேரெல்லாம் இப்படி மாத்தி மாத்தியே வர்றது... எங்க அப்பாவோட அம்மா பேரு நங்கை. அவங்க நினைவாத் தான் எனக்குக் கூட நங்கைன்னு பேரு வைச்சாங்க.. என்னை ஸ்கூல் சேக்கறச்சேத் தான் அந்த நங்கை, மங்கையா மாறிப் போயிடுச்சி.. " என்று சிரித்தபடி மங்கை நினைவுகளில் தோய்ந்தாள்.
"அத்தையும் மாமன் பையனைத் தானே கல்யாணம் செய்துகிட்டாங்க?.. அதனாலே அந்த ஒட்டும் உறவுக்கும் கூடவே சேர்ந்து இந்த பெயர் தொடர்ச்சியும் வந்திருக்கு.." என்ற பாண்டியன், "நம்ம குடும்ப மரம் -- பேமலி ட்ரீ-- படம் போட்டுப் பாத்தா மங்கையும் நங்கையும் பாண்டிய ராஜா பேர்களும் கிளை கிளையாய் இருக்கும்.." என்று சொல்லிச் சிரித்தான்.
"தாத்தாலாம் திருநெல்வேலி தானே?.. அப்பாரு காலத்லே தான் உத்தியோகம், டிரான்ஸ்வர்ன்னு மழபாடி போனோம். மழபாடி-பட்டீஸ்வரம் தானே சோழர் காலத்து பழையாறை?.. பழையாறை தான் மங்கையர்க்கரசி அம்மா அவதரிச்ச ஊர். சுத்தி சுத்தி உங்க நாயனார் ராஜா கதைக்கே வந்திட்டம் பாருங்க.."
பாண்டியன் ஆச்சரியத்தில் பதில் சொல்ல முடியாமலிருந்தான்.
"அம்மா ஒரு பழைய குடும்ப போட்டோ ஆல்பம் கொடுத்து இருக்காங்க, இல்லே?.. அதுலே பாருங்க. முப்பது, நாப்பது பேர் தேறும்.. ஒண்ணா உக்காந்திருக்கற ஒரு படம் இருக்கு, பாருங்க.. எத்தனை ராஜா, ராணிங்க?.. இப்போ பாத்தாலும் சிரிப்பா வரும்.. டிரங்க் பெட்டிலே தான் வைச்சிருக்கேன்.. எடுத்தாறவா?" என்ற மங்கை "அட, ஆறரை ஆச்சே?.." என்று எழுந்து வாசல் பக்கம் போய் விளக்கைப் போட்டாள். வழிப்பாதை, முன்னறை, பக்க அறை, கூடம் என்று எல்லாப் பக்கமும் குழல் விளக்குகள் ஒளி உமிழ்ந்தன.
பூஜை அறை விளக்கைப் போட்டு, குத்து விளக்கேற்றினாள். சிமிழிலிருந்து எடுத்து குங்குமம் இட்டுக் கொண்டாள். சாமி கும்பிட்டு விட்டு ஒரு ஸ்தோத்திர புத்தகம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
"நீங்களும் ரெடியாகுங்க.. இதோ, ஒரு அரை அவர்லே கிளம்பிடலாம். கோயிலுக்கு போய்ட்டு வந்து ராத்திரி டிபனுக்கு ரெடி பண்ணலாம்" என்ற மங்கைக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது பாண்டியனுக்கு. கோயிலுக்குப் போகும் வழியில் சொல்லிக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டான்.
(இன்னும் வரும்)