மின் நூல்

Monday, May 12, 2008

இயற்கையே நீ தானே அம்மா!....


எடுப்பு

புவனேஸ்வரி தாயே
புதுகையில் அபயவரம் அனுகிரகித்தாயே.....

(புவனேஸ்வரி)

தொடுப்பு

புவனம் விழித்ததம்மா--உன்கருணை
பூவாய் குலுங்குதம்மா
பறவைக் கூட்டம் பாடிப் பறக்குதம்மா
கறவைப் பசுக்கள் கழுத்துமணி ஒலிக்குதம்மா..

(புவனேஸ்வரி)

புவனேஸ்வரி தாயே
புவனத்தை சிருஷ்டித்தாயே
இகம் பரமெலாம் உன் ஆட்சிதானே
இன்முகம் காட்டி இரட்சித்தாயே

இயற்கையே நீதானே அம்மா
இதயாகாசத்தில் ஒளிர்ந்தாயே
மாயை மறைந்ததே; மெஞ்ஞானம் தெரிந்ததே
தாயே தெய்வமே தடுத்தாட் கொள்வாயே

(புவனேஸ்வரி)

முடிப்பு

இத்தனை படைப்பும் உன் எழில்தானே அம்மா---அம்மா
இதை உணரத்தான் இப்பிறவியோ அம்மா

(புவனேஸ்வரி)

10 comments:

jeevagv said...

எல்லாம் செய்விப்பவனாக இருந்தாலும், அவன் ஏதையும் தானக செய்யாத பிரம்மமாக இருப்பதால், நிகழ்வன எல்லாவற்றுக்கும் இயற்கைக் காரணியாகவும், இயற்கையாகவும் விளங்கும் சக்தியின் தரிசனம், கவியின் வடிவில் கசிந்திருப்பது பிரமாதம்!

Anonymous said...

பக்திக்கும் ஞானத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தியதுபோல இருக்கிறது பாடல்!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//எல்லாம் செய்விப்பவனாக இருந்தாலும், அவன் ஏதையும் தானக செய்யாத பிரம்மமாக இருப்பதால், நிகழ்வன எல்லாவற்றுக்கும் இயற்கைக் காரணியாகவும், இயற்கையாகவும் விளங்கும் சக்தியின் தரிசனம், கவியின் வடிவில் கசிந்திருப்பது பிரமாதம்!//

வாருங்கள், ஜீவா!
நீங்கள் சொல்வது சரியே.
அதை இப்படியும் சொல்லலாம்:

மாதா புவனேஸ்வரியே இயற்கை அல்லது பிரகிருதி. இயற்கையின் படைப்புகளின் சலனம் தான் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, அவற்றில் பிரம்மம் மறைந்திருப்பது மாயை நீங்கி மெஞ்ஞானம் புரிந்தால் தான் புலப்படும். அதனால், அன்னை புவனேஸ்வரியைப் போற்றி வணங்கினால், மாயை நீங்கி, மெஞ்ஞான சித்தி கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

லலிதா சகஸ்ரநாமத்தில்,
"புருஷார்த்த ப்ரதா பூர்ணா யோகினி புவனேஸ்வரி" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜீவி said...

நாடோடி said...
//பக்திக்கும் ஞானத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தியதுபோல இருக்கிறது பாடல்//

இரண்டும் சேரின் பரவச நிலை தானே?
பிறவி எடுத்த புண்ணியம் அடைந்த நிலைதான்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ஐயா!

jeevagv said...

//மாதா புவனேஸ்வரியே இயற்கை அல்லது பிரகிருதி. இயற்கையின் படைப்புகளின் சலனம் தான் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, அவற்றில் பிரம்மம் மறைந்திருப்பது மாயை நீங்கி மெஞ்ஞானம் புரிந்தால் தான் புலப்படும்.//
ஆகா, அருமையான விளக்கம்!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//மாதா புவனேஸ்வரியே இயற்கை அல்லது பிரகிருதி. இயற்கையின் படைப்புகளின் சலனம் தான் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, அவற்றில் பிரம்மம் மறைந்திருப்பது மாயை நீங்கி மெஞ்ஞானம் புரிந்தால் தான் புலப்படும்.//
ஆகா, அருமையான விளக்கம்!//

சக்தி தத்துவத்தை, தச மகா வித்யா என்ற பத்து வடிவங்களாகப் பாவித்து வணங்கும் வழக்கம் உண்டு. புவனங்களை சிருஷ்டி செய்து, பூக்கச் செய்து, பசு, பட்சி உற்பத்தி செய்து உருவமும் பெயரும் அளித்து ரட்சிப்பவள் புவனேஸ்வரி என்று சொல்வார்கள். ஸ்ரீபுவனேஸ்வரியை வழிபடுபவர்களுக்கு சரஸ்வதி கடாஷ்ம், லஷ்மி கடாஷம், ஏற்படுவதுடன் உலகப்பற்று என்ற மாயை அகன்று மெய்ஞானம் ஏற்படும் என்று பெரியோர் குறிப்பிடுகின்றனர்.

வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி,ஜீவா!

Kavinaya said...

என் அன்னை புவனேஸ்வரியின் அதே படம்! :))

//இத்தனை படைப்பும் உன் எழில்தானே அம்மா---அம்மா
இதை உணரத்தான் இப்பிறவியோ அம்மா//

உண்மைதானே. மனிதப் பிறவிதானே பக்தியை அனுபவிக்கச் சிறந்தது! அருமையான பாடல். தெரியப்படுத்திய ஜீவாவிற்கு நன்றிகள்.

ஜீவி said...

கவிநயா said...
//என் அன்னை புவனேஸ்வரியின் அதே படம்! :))

//இத்தனை படைப்பும் உன் எழில்தானே அம்மா---அம்மா
இதை உணரத்தான் இப்பிறவியோ அம்மா//

உண்மைதானே. மனிதப் பிறவிதானே பக்தியை அனுபவிக்கச் சிறந்தது! அருமையான பாடல். தெரியப்படுத்திய ஜீவாவிற்கு நன்றிகள்.//

வருகைக்கும், தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி, க்விந்யா!

சிவகுமாரன் said...

புதுகை புவனேஸ்வரியின் பக்தன் நான்.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எப்படி பாடுவது என்றுதான் தெரியவில்லை.

ஜீவி said...

@ சிவகுமாரன்

மகிழ்ச்சியை உணர்தலே பேறு.

//எப்படி பாடுவது என்றுதான் தெரியவில்லை..//

இறையின் பெருமையை எப்படிப் பாடினால் தான் என்ன?.. 'எப்படிப் பாடினாரோ, அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன், சிவனே!' எனும் சுத்தானந்த பாரதியாரின் பாடல் பிரசித்தம் இல்லையா?..

சஞ்சய் சுப்ரமணியன் போன்ற தமிழ்க் கீர்த்தனைகள் பாடுவோர் கையில் (குரலில்) சிக்கினால், நெக்குருகி
கேட்டுக் கொண்டேயிருக்கலாம்!

வருகைக்கு மிக்க நன்றி, சிவகுமாரன்!

Related Posts with Thumbnails