மின் நூல்

Monday, April 30, 2012

பார்வை (பகுதி-43)

ர்மிளாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. "சொல்லு, வேணி! மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள்லாம் வந்திட்டுப் போயிட்டாங்களா?" என்றாள்.

"அதுக்குத்தாங்க அக்கா கூப்பிட்டேன்.  அவங்கள்லாம் வர்றப் போறாங்கங்கறது உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும்.  ஜோதி சொன்னா.. என்னாச்சு?.."

"அக்காவை அவங்களுக்கெல்லாம் பிடிச்ச மாதிரி தான் தெரியுது, அக்கா!  ஆனா எது ஒண்ணும் நிச்சயமா சொல்லாம போயிருக்காங்க.. அவங்களுக்கு ஊர் வேலூராம். மெட்ராஸ்லே பொண்ணு எடுத்தா, கல்யாணம் கட்டிக்கிட்டு மெட்ராஸ்லேயே தான் வேலை பாத்துக்கலாம்ன்னு கட்டிக்கப் போறவர் நெனைக்கறாராம்.  அதுலே அவங்க கண்டிஷனா இருக்காங்க-- மெட்ராஸிலே வேலை கிடைச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம்ங்கறதிலே.  பொண்ணு பாக்க வந்தவங்க மெட்ராஸ் வேலையைப் பத்தியே பேசிகிட்டு இருக்காங்க.. அவங்க பேசறதைப் பாத்தா, நாம முயற்சி எடுத்து இங்கே ஒரு வேலையை வாங்கித் தரணும்ங்கற மாதிரியும் இருக்கு.  அவருக்கு இங்கே ஒரு வேலை கிடைச்சிருச்சுன்னா அக்கா கல்யாணம் முடிஞ்சிட்ட மாதிரி தான். ஆனா, நீங்களே சொல்லுங்க அக்கா, வேலை கிடைக்கறதுங்கறது அவ்வளவு ஈஸியாவா இருக்கு? "

"அதெல்லாம் சரி, வேணி!..அவர் இப்போ அங்கே என்ன வேலைலே இருக்கார்?"

"ப்ரஸ்லே அக்கா.  ஆறு வருஷ சர்வீஸாம்.  பிரிண்ட்டிங் வேலைலாம் அல்லாம் தெரியுமாம்."

"அப்போ கவலையை விடு.  நம்ம பதிப்பகத்திலேயே பாத்துக்கலாம்.  எதுக்கும் பெரியவர்கிட்டே சொல்லி வைக்கிறேன்" என்று தன்னாலே ஊர்மிளாவிடமிரு ந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.

"அப்படியாக்கா?.. அது கூட முடியுமாக்கா?.. இது கூட என் புத்திலே படலேயே!இப்போத் தான் தெரியுது.. நான் பதிப்பகத்திலே வேலை செய்யறது தெரிஞ்சு தான் எங்க வீட்லே பொண் பாக்கவே வந்திருப்பாங்களோ?"

"ரொம்ப போட்டுக் குழப்பிக்காதே..  முயற்சிக்கலாம்.  கிடைச்சா சரி, இல்லேன்னாலும் சரின்னு இந்த மாதிரி விஷயங்கள்லே போக வேண்டியது தான்.  இங்கே வேலை இல்லேனா, எங்க வீட்டுக்காரர்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன்.  பாக்கலாம்.  எல்லா பிரச்னைக்கும் அந்த பிரச்னை அடிப்படையிலேயே ஒரு தீர்வு இருக்கும். எப்படிப் போனா சரியா இருக்கும்ன்னு பாக்கலாம்.  சரியா?.."

"சரிக்கா..  ரொம்ப தேங்க்ஸ்க்கா.  அம்மாக்கு இப்போ இந்தக் கவலை தான்.  அம்மாகிட்டே சொல்றேன்."

"இப்போ அவங்க கிட்டே சொல்ல வேண்டாம்.  வேலை நிச்சயம்ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்.  நீ எத்தனை நாள் லீவு?.."

"லீவு இன்னிக்கு மட்டும் தான் அக்கா.   திங்கட்கிழமை வேலைக்கு வந்திடுவேன்."

"எங்கிருந்து பேசறே?"

"வீட்டுப் பக்கத்லே ஒரு போன் பூத் இருக்கு.  அங்கேயிருந்து அக்கா.."

"பூத்லேந்தினா?.. ரொம்ப நேரம் விவரமா பேசமுடியாது.. சனி, ஞாயிறு போகட்டும்.  திங்கட்கிழமை வந்திடுவேல்யோ?..  நேரே பேசிக்கலாம். சரியா?"

"சரிக்கா..." என்று வேணி சொன்னதில் தெரிந்த நம்பிக்கையை ஊர்மிளா உணர்ந்தாள்.

கிருஷ்ணவேணியின் அக்கா லஷ்மியை பெண் பார்க்க வருகிறார்கள் என்கிற விஷயம் ஜோதியின் மூலம் இன்று காலைதான் அவளுக்கேத் தெரியும். மதியம் தான் ஆகியிருக்கிறது.  அதற்குள் அந்தக் கல்யாணம் நடக்க வேண்டியதற்கான முக்கிய பொறுப்பொன்றை தான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒரு மாசத்திற்கு முன்னால் இப்படி நடக்கும் என்று தெரியாது. ரிஷிக்கு லஷ்மணனுடான அறிமுகம், இன்று ரிஷி 'காதல் தேசம்'ன்னு தொடர்கதையை பத்திரிகைலே எழுதுகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கு. இடையிலே புதுப்புது அறிமுகங்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று வாழ்க்கையின் இந்த 'நெட் ஒர்க்'கை நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. 'எனக்கு இந்தக் குழந்தைக்கு தலைவாரி, நெத்திக்குப் பொட்டு இட்டு, பூச்சூட்டி ஸ்கூலுக்கு அனுப்பனும்ன்னு குடுத்து வைச்சிருக்குன்னா'ன்னு அம்மாவை எல்லாம் தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பறச்சே தாத்தாகிட்டே பாட்டி சொல்வாளாம். ஊர்மிளாவுக்கு எல்லாம் அவள் அம்மா சொல்லித் தெரிந்தது.  'பாட்டி சொன்னது கரெக்ட்! குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பற பாக்கியம் இன்னும் கிடைக்கலேனாலும், பாட்டி சொன்ன மாதிரி நாம செய்யறதுக்குக் கொடுத்து வைச்சிருக்கற மாதிரி தான் ஒவ்வொண்ணையும் பாக்கறச்சே தோண்றது' என்று நினைத்துக் கொண்டாள்.

ஊர்மிளா பெரியவளாகி காலேஜ் போகறத்தே கூட 'இப்படி பாட்டி சொல்லுவா, இந்த நேரத்திலே பாட்டி இப்படி நடந்துப்பா'ன்னு அவள் அம்மா, பாட்டியைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா.  தன்னோட அம்மாவைப் பத்தி தன்னோட பொண்ணு கிட்டே எது ஒண்ணு சொல்றத்தேயும் அம்மா முகத்திலே அலாதியா ஒரு களை வந்து உக்காந்துக்கும்.  அதைப் பாத்து பாத்து மனசிலே அம்மாவோட அந்த செளந்தர்யம் அப்படியே படிஞ்சு போயிடுத்து.  பாட்டியைப் பத்தி நெனைச்சாலே அம்மாவோட அந்த முக தரிசனமும் கூடவே ஞாபகத்துக்கு வரும்.  'உன்னோட அம்மாவைப் பத்தியே சொன்னா எப்படின்னு இவ தான், அப்பாவோட அம்மாவைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே'ன்னு ஒருநாள் கேட்டதுக்கு 'நான் வாக்கப்பட்டக் கதையைக் கேக்கறையா'ன்னா..  'நான் செஞ்சு போட்டாத்தான் என் பிள்ளைக்குப் பிடிக்கும்'ன்னு தன்னோட கடைசி காலம் வரை என்னை சமையல் அறைக்குள்ளேயே நுழைய விடலை, உன்னோட இந்தப் பாட்டி..  நல்ல வேளை, அடுக்களை பத்தி அத்தனையையும் என் அம்மாகிட்டேயே தெரிஞ்சிண்டேனோ, பிழைச்சேனோ!' என்றாள்.

ஊர்மிளாவுக்கு அப்பாவைப் பெத்த அம்மா பற்றி அதிகம் தெரியாது.  வீட்டு ஹாலுக்கு உள்ளடங்கி முன் ரூம் ஒண்ணு உண்டு.  அதிலே அப்பாவோட பொருள்கள் தான் நிறைய அடைஞ்சு கிடக்கும்.  அப்பா டிரஸ் இருக்கற டிரங்க் பெட்டி, கேஷ் அலமாரி, சட்டை- பேண்ட் மாட்டியிருக்கற கோட் ஸ்டாண்ட், அப்பாவோட வாட்ச், ஆபீஸ் பைல்ன்னு எல்லாம் அப்பாவோடதா தான் இருக்கும்.  அந்த ரூம்லே இந்தப் பாட்டியோட சின்ன புகைப்படம் ஒண்ணு சுவத்திலே ஆணி அடிச்சு மாட்டியிருக்கும்.   ஆபிஸுக்குப் போறத்துக்கு முன்னாடி அப்பா இந்த ரூமுக்கு வந்து போட்டோ முன்னாடி தியானம் பண்ற மாதிரி கொஞ்ச நேரம் நின்னு கும்பிட்டுட்டுப் போவார்.  ஊர்மிளாவுக்கு இந்தப் பாட்டியைப் போட்டோலே பாக்கறச்சேயே பாவமா இருக்கும்.  நார்மடிப் புடவை முட்டாக்கு போட்டுண்டு, நெத்திலே வீபூதிக் கீத்தோட சாந்தமான மூஞ்சி.  இந்தப் பாட்டியைப் பத்தி எனக்குச் சொல்றவாளே யாருமில்லையான்னு துக்கம் தொண்டையை அடைக்கும்.  அடக்க முடியாம ஒரு நாளைக்கு அப்பாகிட்டேயே அதைக் கேட்டுட்டாள்.

அவள் கேட்டதும் அப்பாவுக்கு ஏனோ திடுக்குன்னது.   தொண்டை கமறி, தழைஞ்ச குரல்லே, "அந்தப் பாட்டி ஒரு தெய்வம்மா.."ன்னு சொன்னப்போ அவர் கண் கலங்கித்து.  "உன்னோட அம்மா தானேப்பா..  அந்தப் பாட்டியைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே!" என்றாள். "என்னோட அம்மாவை நெனைச்சாலே எனக்கு அதாம்மா ஞாபகம் வர்றது.."ன்னு கம்பிச் சார்பு போட்டிருந்த ரேழி முத்தத்திலே விழுந்த நிழலைப் பாத்திண்டே அப்பா சொன்னார். "உன்னோட தாத்தா -அதான் என்னோட அப்பா- ரொம்ப முன் கோபக்காரர். எப்பப்பாத்தாலும் தாம்தூம்ன்னு குதிச்சிண்டே இருப்பார்; மூஞ்சிலே செவசெவன்னு ஒரு ரெளத்திரம் பூசி மெழுகியிருக்கும். வீட்லே இருந்தார்ன்னா அதிகாரம் தூள் பறக்கும். அப்பாவைப் பாத்தாலே பயம்; நான் பெட்டிப் பாம்பா அடங்கிடுவேன்.  காதைப் பிடிச்சுத் திருகினார்ன்னா செவந்து போய் ரெண்டு நாளைக்கு வலிக்கும்.  பாத்தா அப்பா மாதிரியே இருக்காது; ஏதோ ராட்சஷன் நிக்கற மாதிரி..

"ஒரு நாளைக்கு என்ன நடந்தது தெரியுமா?..  அன்னிக்கு ஸ்கூலுக்கு லீவு.  பக்கத்து வீட்டு வாசல் திண்ணைலே கேரம் ஆடிட்டு ரொம்ப நேரமாச்சேன்னு அப்பாக்கு பயந்திண்டே வீட்டுக்குள்ளே நுழையறேன்.  அப்பா குரல் கர்ண கடூரமா சமைக்கற உள்ளுலே கேக்கறது.  பதுங்கிண்டே அந்தப் பக்கம் போனேன். "என்னடி சாதம் வடிச்சிருக்கே?.."ன்னு அம்மாகிட்டே உருமிண்டு இருக்கார். அம்மா சப்த நாடியும் ஒடுங்கி நிக்கறா. சடார்ன்னு இலை முன்னாடி உக்காந்திருந்தவர் எழுந்து நிக்கறார்.  அம்மாவை அடிச்சிடுவாரோன்னு எனக்கு பயம்.  பாவம், அம்மான்னு நெனைசிண்டிருக்கறச்சேயே, "பாத்து வடிச்சிருந்தா, இப்படியா குழைஞ்சு போயிருக்கும்"ன்னு அப்படியே நின்ன வாக்கிலேயே சாதத்து வெங்கலப் பானையை எட்டி உதைக்கறார்.  சிப்பல் தட்டோட உருண்டு போன வெங்கலப் பானை.. சிந்திச் சிதறின சாதம்..  பயந்து போன அம்மா.. ராட்சஷனாய் நின்ன அப்பா.. எல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து..  பாவம், அம்மா.. கணுக்கால் பக்கம் வெந்து போய் ஒரு வாரம் கால்லே தேங்காய் எண்ணையைத் தடவிண்டு விசிறிண்டு இருந்தா.. அம்மாவை பாக்கறச்சேலாம் எனக்கு நெஞ்சு அடைச்சிக்கும்.. ரொம்ப வலிக்கறதாமான்னேன்.  என் தலையைக் கோதிண்டே "இல்லேடா.."ன்னா.  அது எனக்காகத்தான் சொல்றான்னு தெரியும். இதான் என்னோட அம்மா!  ஊர்மிளா,, இப்போ சொல்லு.. உன் பாட்டியைப் பத்தி என்னத்தைச் சொல்றது?.."ன்னு அப்பா எப்பவோ சொன்னதை இப்போ நினைத்துப் பார்க்கறத்தேயும் ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.

அடுத்த வாரமாவது லஷ்மணனைக் கூட்டிக் கொண்டு பெற்றவர்களைப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று ஊர்மிளா நினைத்துக் கொண்டாள். அவர்களும் ரொம்ப தூரத்தில் இல்லை; பக்கத்து திருவான்மியூரில் தான்.  திருவான்மியூர் வீட்டிலே அதே ரூமிலே அதே இடத்திலே பாட்டி படம் மாட்டியிருக்கிறது.  இப்பவும் ஊர்மிளா அங்கே போனாளானால், முதலில் அந்த ரூமுக்குப் போய் பாட்டி போட்டோவைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருப்பாள்.  சாந்தமான அந்த முகம் அவள் நெஞ்சில் படிந்து அவளை ஆசிர்வதிப்பது போல இருக்கும்.  அந்த உணர்வோடேயே ஹாலுக்கு வந்து அப்பா-அம்மாவை நிறுத்தி வைத்து நமஸ்கரிப்பாள்.

ஊர்மிளாவுக்கு அவளோடேயே ஊறிப்போன ஒரு பழக்கம் உண்டு.  எந்த வேலையையும் கை பாட்டுக்க செய்து கொண்டிருக்கும் மனம் பாட்டுக்க வேறொண்ணை நினைத்துக் கொண்டிருக்கும்.  இரண்டுக்கும் சம்பந்தம் இருக்காது.  இது பாட்டுக்க தனி; அது பாட்டுக்க தனிங்கற மாதிரி மனசிலேயே ரெட்டை பாட்டை போட்டு வைத்துக் கொண்டு வேலை நடக்கும்.  சொல்லப் போனால் இந்த இன்னொரு சிந்திப்பு இல்லை என்றால் மெயின் வேலை தடுமாறும்.   அந்த தடுமாற்றத்தைப் போக்கவே எப்படியானும் இந்த இன்னொரு நினைப்பு வந்து சேர்ந்து கொண்டு தனக்கென்று தனிப்பாதை போட்டுக் கொண்டு பயணிக்கும்..

என்றைக்கும் மாதிரி இன்றைக்கும் அலுவலகப் பணி ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தது. 'எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வும் எழுத்தும்' என்று பதிப்புக்காக காத்திருந்த கையெழுத்துப் பிரதியை படிக்க படிக்க ஊர்மிளாவுக்கு மனம் கசிந்தது..  'மணிக்கொடி' எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம், ஜரிகைத் தொழிலில் சம்பாதித்த காசையெல்லாம் முடக்கி 'தேனி' என்கிற பத்திரிகையை அச்சிட்டு வெளியிட பட்டபாட்டிற்கு இடையே தொழிலும் நலிவடைந்து, சொத்துக்களையும் விற்ற உண்மைக்கதை பரிதாபமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தனது காதுகளில் ஒரு வினோத ஒலி கேட்க அவஸ்தைப்பட்டவர், தனக்கேற்ப்பட்ட உணர்வுகளை 'காதுகள்' என்கிற நாவலாய் உருவாக்கிய சரிதம் மனம் பதைபதைப்பதாய் இருந்தது.  தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்றோருடன் எம்.வி.வி. கொண்டிருந்த நட்பு கும்பகோணத்துச் சூழலில் வர்ணிக்கப்பட்டிருந்தது அற்புதமாக இருந்தது.  தி.ஜானகிராமனின் மறைவின் பொழுது 'யாத்ரா' இதழில், 'ஜானகிராமனுக்காக ஒரு கதை' என்று எம்.வி.வி. எழுதியிருந்த கட்டுரையும் சேர்க்கப்பட்டிருந்தது.  அதைப் படித்த பொழுது ஊர்மிளாவின் கண்கள் கலங்கிவிட்டன.  எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுதே மனம் மருகிப் போனது. பக்கம் பக்கமாக படித்துக் கொண்டே வருகையில் அச்சுக்குப் போவதற்கு முன்,  முன் பின்னாக இருந்த சில செய்திகளை கோர்வை படுத்த வேண்டுமென்று ஊர்மிளாவுக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில் வாசிக்கும் பொழுதே சிவப்பு பென்ஸிலால் அடையாளத்திற்காக கோடு போட்டு வைத்திருந்தாள்.  அதையெல்லாம் அந்த அந்த நிகழ்வின் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி கணினியில் குறிப்பெடுக்க ஊர்மிளா ஆயத்தமான பொழுது கேபின் போன் கணகணத்தது.

"ஹலோ..." என்றாள்.

"நான் தான் அக்கா..."

"சொல்லு, வேணி...  எச்.ஆர். சுந்தரி சொந்த வேலையா வெளிலே போயிருக்கா. பர்மிஷனாம்.  முதல்லே பிரிண்டிங் ஆபிஸ்ல்லே காலி இடம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். அதுக்குத் தான் சுந்தரி. இருந்ததுன்னா சின்னவர் கிட்டேயே மேட்டரைக் கொண்டு போகலாம்ன்னு இருக்கேன்."

"அதுக்கு தாங்க அக்கா கூப்பிட்டேன்."

"சொல்லு. என்ன விஷயம்?"

"இப்போ பாத்தா எங்கக்கா இந்த இடம் வேணாங்குது. அதான்."

 "ஏனாம்?"

"எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு, அக்கா... கடனை உடனை வாங்கி நான் இருக்கறச்சேயே ஒங்கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னா, ஏண்டி உன் புத்தி இப்படிப் போர்றதுன்னு அம்மா அக்காவைக் கோவிச்சிக்குது."

"உங்கக்கா என்ன சொல்றா?"

"என்னத்தைச் சொல்லுதோ?.. அது சொல்றது யாருக்குப் புரியிது?.. 'இந்த இடம் வேணாம்ன்னு என் மனசுக்குத் தெரியுது. அதுனாலே வேணாம்'ங்கறது. என்ன மனசோ?.. யாருக்குத் தெரியுது?..  அதுவே வேணாங்கும் போது, நாம என்னத்தை அக்கா செய்யுறது?  அதான் அம்மாக்கு வருத்தம்."

"அப்போ அந்தாளு வேலை விஷயமா ஒண்ணும் முயற்சிக்க வேணாம்ங்கறே? அதுக்குத் தான் போன் பண்ணினியா?"

"ஆமாக்கா.  ரெண்டு நாள் போகட்டும்.  நா திங்கட்கிழமை ஆபிஸூக்கு வருவேன்லே.. அப்போ நேர்லே சொல்றேங்க்கா.. உங்களுக்குத் தான் சிரமம் கொடுத்திட்டேன். ஸாரிக்கா."

"இதுக்கெல்லாம் எதுக்கு ஸாரி, வேணி?.. உங்கக்கா சொல்றதிலே ஏதானும் காரணம் இருக்கும்.. அதைச் சொல்லி உங்கம்மாவை கோபிக்காம இருக்கச் சொல்லு.. மத்ததை நேர்லே பேசிக்கலாம்.சரியா? வைச்சிடட்டுமா?"

"சரிக்கா.."


(இன்னும் வரும்)


17 comments:

அப்பாதுரை said...

கதையினூடே எம்விவி திஜா என்று நெகிழும்படியான விவரங்களை நுழைத்திருக்கிறீர்கள். ரசித்தேன்.
தெய்வீக அம்மா பற்றிப் படித்ததும் சட்டென்று எங்கோ புதைந்திருந்த எலும்புத்துண்டு மேலே வந்தது. எனக்கும் ஒரு ராட்சச அப்பா இருந்தார். நல்லவேளை, இறந்தார்.

ஸ்ரீராம். said...

காரணமில்லாமல் மனதில் படும் நிறைய எச்சரிக்கைகள் (எல்லோரையும் போல) எனக்கும் வருவதுண்டு. வேணியின் அக்கா மனதை மீறி நடந்தால் ஊர்மிளாவின் பாட்டி போன்ற வாழ்க்கையும் கிடைக்கலாம். சில சமயம் நேர்மாறாக நல்ல வாழ்க்கையும் அமைந்து விடலாம். எதிராளியின் மனதிலும் மாற்றங்கள் நடந்து கொண்டேயிருக்க வாய்ப்புகள் உள்ளதே...!

ஸ்ரீராம். said...

அப்பாக்கள் ராட்சசர்கள் என்ற வழக்கமான பார்வையிலிருந்து மாறியிருக்கலாமோ....

கோமதி அரசு said...

ஊர்மிளாவின் உதவும் குணம், ஊர்மிளாவின் பாட்டியின் பண்பு, ஊர்மிளாதன் அம்மாவின் அம்மாப் பற்றி நினைப்பது, அப்பாவின் அம்மா பற்றி தெரிந்து கொள்ள நினைப்பது எல்லாம் அருமை.
தன் பெற்றோர்களை நினைத்து வணங்குவது எல்லாம் அருமை.

புதுப்புது அறிமுகங்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று வாழ்க்கையின் இந்த 'நெட் ஒர்க்'கை நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. 'எனக்கு இந்தக் குழந்தைக்கு தலைவாரி, நெத்திக்குப் பொட்டு இட்டு, பூச்சூட்டி ஸ்கூலுக்கு அனுப்பனும்ன்னு குடுத்து வைச்சிருக்குன்னா'ன்னு அம்மாவை எல்லாம் தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பறச்சே தாத்தாகிட்டே பாட்டி சொல்வாளாம். ஊர்மிளாவுக்கு எல்லாம் அவள் அம்மா சொல்லித் தெரிந்தது. 'பாட்டி சொன்னது கரெக்ட்! குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பற பாக்கியம் இன்னும் கிடைக்கலேனாலும், பாட்டி சொன்ன மாதிரி நாம செய்யறதுக்குக் கொடுத்து வைச்சிருக்கற மாதிரி தான் ஒவ்வொண்ணையும் பாக்கறச்சே தோண்றது' என்று நினைத்துக் கொண்டாள்.//

நாம் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்க்காக படைக்க பட்டு இருக்கிறோம்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது தெரிகிறது.

'நான் செஞ்சு போட்டாத்தான் என் பிள்ளைக்குப் பிடிக்கும்'ன்னு தன்னோட கடைசி காலம் வரை என்னை சமையல் அறைக்குள்ளேயே நுழைய விடலை, உன்னோட இந்தப் பாட்டி.. நல்ல வேளை, அடுக்களை பத்தி அத்தனையையும் என் அம்மாகிட்டேயே தெரிஞ்சிண்டேனோ, பிழைச்சேனோ!' என்றாள்.//

அன்பான பாட்டி ஏன் மருமகளை சமைக்க விட வில்லை? பாட்டியின் கணவர் சாதம் வடித்த முறைக்கு கோபம் பட்டது காரணமாய் இருக்குமோ!

அப்பா மாதிரியே இருக்காது; ஏதோ ராட்சஷன் நிக்கற மாதிரி..//

ஊர்மிளா அப்பா தன் அப்பாவைபற்றி சொல்வதை கேட்கும் போது வருத்தமாய் இருக்கிறது.

ஊர்மிளாவுக்கு அவளோடேயே ஊறிப்போன ஒரு பழக்கம் உண்டு. எந்த வேலையையும் கை பாட்டுக்க செய்து கொண்டிருக்கும் மனம் பாட்டுக்க வேறொண்ணை நினைத்துக் கொண்டிருக்கும்.//

ஊர்மிளாவின் இந்த பழக்கத்தால் எங்களுக்கு எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்று எழுத்தார்களின் பெருமையைப் ப்ற்றி தெரிந்து கொள்ள முடிகிறது!

ஒரு கதையில் எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

தொடர்ந்து வந்து விட்டேன்.....
விஜி, ரிஷி, உஷா, வித்யா, ஊர்மிளா இதில் சிலர் எழுத்தாளர்கள். சிலர் தம் எண்ண ஓட்டத்தை அழகாய் கோர்க தெரிந்தவர்கள். இவர்களை எல்லாம் மிக மிக மிக சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்திய ஜீவி என்ற எழுத்தாளர் தான் எங்களின் ஃபேவரிட் :)

பாச மலர் / Paasa Malar said...

ராட்சத அப்பாக்கள் ...ம்ம்ம்....

பாட்டி மற்றும் ராட்சத அப்பா குறிப்புகள் அந்தப் பாத்திரங்களையும் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்தது....
காட்சிப்படுத்தப்பட்ட எழுத்து...பாராட்டுகள்...

G.M Balasubramaniam said...

உறவுகள் பற்றிய விஷயங்கள் பெரும்பாலும் தாய் மூலம்தான் தெரியவரும். ஒரு மாற்றத்துக்கு தந்தை மூலம் தாத்தாவின் குணம் அறிமுகப் படுத்தப் படுவது, அதிலும் ஒரு ராட்சதனாக சித்தரிக்கப்படுவது கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதோ என்று தோன்றுகிறது. இதுவே ஒரு பெண்ணின் கருத்தாக இருந்திருந்தால் சகஜமாகத் தோன்றி இருக்கும். பெண்களுக்கு எப்பவுமே அவர்கள் உறவுதான் முக்கியம்.

ஜீவி said...

@ அப்பாதுரை

மனத்தில் எங்கோ புதைந்திருக்கும் சம்பவங்கள், கேள்விப்பட்டவை இதெல்லாம் நினைவுக் க்யூ வரிசையில் முன்னாடி வந்து நின்று கதை எழுதும் பொழுது தானும் வந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. மனம் கனத்தது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, அப்பாஜி சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அந்த 'எல்லோரையும் போல' கூட ஒரு எச்சரிக்கை பின்னால் சொல்வது போலிருக்கிறது :))

ஊர்மிளாவின் அப்பாவிற்குத் தான் ராட்சசனாகத் தெரிந்ததே தவிர,
பாட்டியைக் கேட்டால், "என்ன செய்யறது? கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி; அவரோட சுபாவம் அது!" என்பார்! பிறரிடம், கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுவதும் ஒரு சுபாவமாவே இருந்தது ஒரு காலத்தில்! நீங்கள் சொல்கிற மாதிரி எதிராளி தனக்கே உறைத்து, தானே திருந்திய கதைகளும் உண்டு.

வேணியின் அக்காவுக்கென்றால்...
ஒரு சில அத்தியாயங்களுக்குப் பிறகு சொல்லி விடுகிறேனே!

ஆனால், ஒன்று ஸ்ரீராம்! அந்த மனத்தில் படும் எச்சரிக்கைகள் விவகாரமே அலாதி தான்! அதையெல்லாம் வைத்து நிறைய எழுத வேண்டுமென்று ஆசை தான்!

அப்புறம், அந்த அப்பாக்களைப் பற்றி!
வழக்கமான பார்வை என்றா சொல்கிறீர்கள்?.. இப்பவும் கூட அப்படி இருக்கிறார்களா, என்ன?.. இல்லை, சினிமாக்களில் வாழ்கிறார்களா?..

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கோமதி அரசு

நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

//அன்பான பாட்டி ஏன் மருமகளை சமைக்க விட வில்லை? பாட்டியின் கணவர் சாதம் வடித்த முறைக்கு கோபம் பட்டது காரணமாய் இருக்குமோ! //

இல்லை. கணவர் காலமானதும் பிள்ளையை வளர்த்து ஆளாக்க்கியது
அம்மாதான். பிள்ளையின் உணவுப் பழக்கத்தையும் சுவையையும் அறிந்தவள், அதற்கேற்ப பிள்ளைக்கு சமைத்துப் போட வேண்டும் என்று விரும்புகிறாள். வெண்டைக்காயை கறியாகச் செய்வதை விட குழம்பில் போட்டால் அவனுக்குப் பிடிக்கும்" என்று சொல்வாள். பிள்ளையிடம், "இன்னிக்கு சனிக்கிழமை; எண்ணைய்க் குளியல். மறந்திடாதே" என்பாள். இப்படி..இவ்வளவுக்கும் பிள்ளை அச்சாக அவன் அப்பா ஜாடை!

இப்படியெல்லாம் பிள்ளையின் செளகரியத்தைப் பார்த்து பார்த்து வளர்த்தெடுத்தது, பிள்ளையின் திருமணத்திற்குப் பிறகும் அவன் செளகரியத்திற்கு நெல்முனையளவும் எந்தக் குறையும் வந்து விடக்கூடாது என்று எண்ணி செயல்படுகிறது.

மற்றபடி மருமகள் மீது ஏகப்பட்ட அன்பு. தான் பட்ட கஷடம் மருமகளுக்கு வந்து விடக் கூடாது என்று நினைத்தவள்.

பாட்டி மாதிரி அந்தக் காலப் பெரியவர்கள் உயர்ந்த குண நலத்துடன் நடமாடியவர்கள். இறுதி மூச்சு வரை ஆயிரம் உடல் உபாதைகளுக்கிடையே ஓய்ந்து மூலையில் உட்கார்ந்து விடாமல்,
தன்னால் என்ன முடியுமோ அந்த உழைப்பை குடும்பத்திற்குக் கொடுத்தவர்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

ஜீவி said...

@ Shakthiprabha

ஆஹா.. நினைத்துக் கொண்டே இருந்தேன். சேர்ந்து கொண்டு விட்டீர்களே! நானும் ஒருதடவை கோர்வையாகப் படித்து, விடுபட்ட விஷயங்களைச் சேர்த்து முழுமையாக்க வேண்டும்! எப்படி இருந்தது?.. இன்னும் நாலைந்து அத்தியாயங்களில் நிறைவு செய்து விடலாமா?..

ஏனென்றால், எப்பொழுதோ நீங்களும் சொன்னது தான். 'ஆத்மாவை தேடி..' காத்துக் கொண்டிருக்கிறது.
விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும்.

அப்புறம்.. இன்னொன்று. சொல்ல மறந்து விடப் போகிறேன். ரிஷியின் மாமா சுந்தரவதனன் சேலத்துக்காரர். ரிஷி படித்ததெல்லாம் சேலத்தில் தான்.

சில தூங்கும் நினைவுகளை தட்டி எழுப்புவதில் எனக்கும் எழுத்தில் வடித்து விட்ட நிறைவு தான்!

தங்கள் அன்பான ரசனைக்கு மிக்க நன்றி, ஷக்தி!

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ பாசமலர்

அப்பாதான் ஒரு குடும்பத்தின் ஹீரோவாக இருக்க வேண்டும்.

ஊர்மிளாவின் அப்பாவைப் பற்றியும் சொல்ல வேண்டும். அவரின் சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் அவர். விதவைத் தாயாரால் வளர்க்கப் பட்டவர்.

தனது சின்ன வயதில் அவர் அடுக்களையில் பார்த்த அப்பாவின் ஆர்ப்பாட்டம் அந்த சின்ன வயதில் மனத்தில் படிந்த உருவகமாய் ஒரு ராட்சசனாய் அப்பாவை நினைக்க வைத்திருக்கிறது. அப்பாவையும் பறிகொடுத்துவிட்டதில், அந்த சிறு வயது ராட்சச நினைப்பே தொடர்ந்து வந்திருக்கிறது..

மிகச் சிறு வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரபத்திரரின் பிர்மாண்டத்தை உற்றுப் பார்த்து பயந்திருக்கிறேன். அதுவே வளர்ந்த பருவத்தில் சாதாரணமாகத் தோன்றி சின்ன வயசில் பார்த்த தோற்றம் எப்படி காணாமல் போயிற்று என்று திகைத்திருக்கிறேன்.

தங்கள் தொடர்ந்து வாசிப்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ G.M. Balasubramanian

ஊர்மிளாவின் தாய் வழித் தாத்தா என்றால், அவள் அம்மா அவரைப் பற்றிச் சொல்லலாம். அவளின் தந்தை வழித் தாத்தா பற்றி அவள் அப்பா தானே சொல்ல வேண்டும்?.. கணவரின் அப்பாவை ஊர்மிளாவின் தாயாரும் பார்த்ததில்லை.

உண்மையில் ஊர்மிளா தன் அப்பாவின் அம்மாவைப் பற்றித் தான் தன் தாயிடம் கேட்கிறாள். அதற்கு அவள் தாய் சொன்ன பதில் நீங்கள் படித்ததே.
கணவரின் தாயைப் பற்றிக் கேள்வி இருக்கையில் அவளுக்கு தன் தாயின் அருமை பற்றி ஒரு வரி வருகிறது.

பெரும்பாலும் பெண்கள் எப்பவும் தங்களை முன்நிறுத்தியே தங்களுடனான பிற உறவுகளைக் கணிப்பவர்கள். தன்னுடன் அவர்களுக்கான உறவு தான் அவர்களுக்கு முக்கியம். அந்த அடிப்படையிலேயே அவர்கள் கணிப்பு இருக்கும். வெட்டிக்கொள்வதும் ஒட்டிக் கொள்வதும் அப்படியானவர் களுக்கு ரொம்ப ஈஸி ஆதலால், அப்படியானவர்களுக்கு யார் பற்றி எந்தக் கணிப்பும் தீர்மானமாக இருக்காது. அவ்வப்போது மாறுதல்களுக்கு உள்ளாவது அது. அதுவும் வாழவந்த வீட்டின் உறவுகளைப் பற்றி என்றால் கேட்கவே வேண்டாம். தாமரை இலைத் தண்ணிர் மாதிரி பட்டும் படாமலும் தான்.

ராட்சசன் என்பது அவள் தந்தையின் சிறு வயதுப் பார்வை. தாயிடம் தந்தை நடந்து கொண்டது அப்படித் தான் அந்தப் பிள்ளையை நினைக்க வைத்தது. சில விஷயங்களுக்கு அனலைஸ் பண்ணி விளக்கம் சொல்ல முடியாது.ஒருவரின் மனத்தில் படிந்து விட்ட எண்ணத்தின் பிரதிபலிப்பு; அவ்வளவே என்று எடுத்துக் கொள்வதே சரி.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

கோமதி அரசு said...

தான் பட்ட கஷடம் மருமகளுக்கு வந்து விடக் கூடாது என்று நினைத்தவள்//

அதைதான் சார் நான் நினைத்தேன்

தன் கணவர் மாதிரி தன் மகன் கோபபடாமல் இருக்க தன் மகனுக்கு எல்லாம் அவரே செய்கிறாரா? என்பது தான் என் கேள்வி.
உங்கள் பதில் அருமை.

அருமையான தாயார்., அருமையான மாமியார்.
அன்பு உள்ளங்கள் வாழ்க!

Geetha Sambasivam said...

எந்த வேலையையும் கை பாட்டுக்க செய்து கொண்டிருக்கும் மனம் பாட்டுக்க வேறொண்ணை நினைத்துக் கொண்டிருக்கும். இரண்டுக்கும் சம்பந்தம் இருக்காது. இது பாட்டுக்க தனி; அது பாட்டுக்க தனிங்கற மாதிரி மனசிலேயே ரெட்டை பாட்டை போட்டு வைத்துக் கொண்டு வேலை நடக்கும். சொல்லப் போனால் இந்த இன்னொரு சிந்திப்பு இல்லை என்றால் மெயின் வேலை தடுமாறும். அந்த தடுமாற்றத்தைப் போக்கவே எப்படியானும் இந்த இன்னொரு நினைப்பு வந்து சேர்ந்து கொண்டு தனக்கென்று தனிப்பாதை போட்டுக் கொண்டு பயணிக்கும்..//

அட? ஊர்மிளாவும் என்னைப் போலவா? :))))

ராக்ஷத அப்பாக்கள் இன்னமும் இருக்கிறார்கள்; இருப்பார்களும் தான். ஆனால் எல்லாரும் அல்ல. நல்ல அப்பாக்களும் இருக்கிறார்கள். மெஜாரிட்டி நல்ல அப்பாக்களே. :))))

பெண்கள் தங்களை முன்னிறுத்தியே எல்லாவற்றையும் கணிப்பார்கள் என்பது எனக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை. ஏனெனில் இங்கே ஊர்மிளாவின் தந்தைவழிப் பாட்டி செய்தது ஒரு கோணத்தில் சரியாகவே இருந்தாலும் தன் கணவனுக்குத் தான் செய்ய வேண்டும் என்ற நியாயமான ஆசை ஊர்மிளாவின் அம்மாவுக்கும் இருக்கும் இல்லையா? குறைந்த பக்ஷமாக அந்தத் தாய் தன் சமையல் முறையை மருமகளுக்குச் சொல்லிக் கொடுத்துத் தன் மேற்பார்வையில் செய்யச் சொல்லி இருக்கலாம். இது என் கோணம்.

என் மருமகளிடம் இப்படித் தான் நடந்து கொள்கிறேன். சொல்லப் போனால் பையருக்குத் தேநீர் தயாரிப்பது என்றால் கூட மருமகள் வேலையாக இருந்தால் அவளைக் கேட்டுக்கொண்டு நான் போட்டுக் கொடுக்கவா? எனக் கேட்டே செய்வேன். சாப்பாடு பரிமாறுவதும் அப்படித்தான். அவங்களே போட்டுக்கொண்டு சாப்பிடறோம்னா என் வேலையைக் கவனிக்கப் போயிடுவேன். இது என் சுபாவம். எல்லாரும் இப்படி இருக்கணும் என்பது அவசியம் இல்லை. :)))))))))

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

அதையே நீங்களும் நினைத்துச் சொல்லியிருப்பதை உணர்ந்தேன், கோமதிம்மா!

மறுவருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ Geetha Sambasivam

//ராக்ஷத அப்பாக்கள் இன்னமும் இருக்கிறார்கள்; இருப்பார்களும் தான்//

அம்மாக்களை விட்டுவிட்டீர்களே! :))

மற்ற கருத்துப் பகிர்வுக்களுக்கும் நன்றி, கீதாம்மா.

ஆயிரம் வாசல் இதயம்; அதில் ஆயிரம் 'எண்ணங்கள்' உதயம்!

Related Posts with Thumbnails