மின் நூல்

Wednesday, December 28, 2011

பார்வை (பகுதி-18)

                   அத்தியாயம்--18

து எப்படின்னு அவளுக்கே கூடத் தெரியாது.  எல்லாம் உத்தேசமான குத்துமதிப்பு தான்.  அதுக்காக அவ அப்படி ஒண்ணும் சிரமப்பட்ற மாதிரியும் தெரியாது.  பார்த்திண்டு இருக்கறச்சேயே அடுத்தது அடுத்ததுன்னு ஒவ்வொண்ணா கச்சிதமா முடிஞ்சிடும்..   இப்படித்தான் தனி ஒரு ஆளா இழுத்துப் போட்டுண்டு விருந்துக்காக அத்தனையும் செஞ்சது அற்புதமா அமைஞ்சு அத்தனை பேரும் பாராட்டினப்போ சுசீலாவுக்கு மனசு இலேசாகித் தான் போயிருக்கும்..

விவேகானந்தனின் வருகையை எதிர்பார்த்து ஏதேதோ பேசுகிற சாக்கில், கொஞ்சம் நேரம் கடத்தினது வாஸ்தவம் தான்.  சாப்பாட்டுக்கும் நேரம் ஆய்டவே, சங்கரியைக் கூப்பிட்டு டாக்டர் சாந்தி எல்லோருக்கும் இலையைப் போடச் சொல்லிட்டார்.   விவேகானந்தனையும் வரச்சொல்லி சொல்லியிருந்தது விஸ்வநாதனின் குடும்பத்திற்குத் தெரியாமல் போனது நல்லதுக்குத்தான்னு ஆயிற்று.

சாப்பிட்டானதும் எல்லாரும் ஹாலில் உக்கார்ந்து பேசிண்டிருக்கறச்சே, புரொபசர் மித்ரா மேற்பார்வைலே நாளைலேந்து எனக்கு செய்யப்போற 'ம்யூசிக் தெரபி' வைத்தியம் பத்தி டாக்டர் சாந்தி நிறையச் சொன்னார்.. நான் ஒண்ணும் சொல்லாம கம்முனு அவர் சொல்றதைக் கவனமாக் கேட்டிண்டி- ருந்தேன். விஸ்வநாதனுக்குத் தான் சந்தோஷமான சந்தோஷம் போலிருக்கு.  "டாக்டரம்மா.. என்ன சொல்றதுன்னே தெரியலே;  அண்ணாக்குப் பார்வை திரும்பறத்துக்கு நீங்க படற சிரமத்திற்கு உங்களை கோயில்லே வைச்சுத்தான் கும்பிடணும்.."ங்கறான்.

அவங்களோ, "அப்படில்லாம் சொல்லி என்னை தெய்வமாக்கிடாதீங்க.. நான் மனுஷி சார்! இந்தக் காரியம் நல்லபடி நிறைவேற நம்மையெல்லாம் அந்த தெய்வம் தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்குன்னு வேணும்னா சொல்லுங்கோ.."ங்கறாங்க.

இதான் டாக்டரம்மா கிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது.  எப்பவும் இப்படித் தான்.
எந்த சமயத்திலேயும் நெலைகுலையாத அடக்கம்.  எந்த ஒயரத்துக்குப் போனாலும், அவங்க கால் தரைலே தான் பாவி நிக்கும். தன்னாலே எதுவும் நடக்கலைங்கற ஆழ்ந்த நம்பிக்கை அடிநாதமா அவங்க செய்யற, பேசற அத்தனைலேயும் படிஞ்சு இருக்கும்.  இப்படிப்பட்டவங்களோட பழகற, பேசற பாக்கியம் நமக்கும் கிடைச்சிருக்கேன்னு அப்பப்ப நெனைக்கத் தோணும்.

"காலைலே ஒரு பத்து மணிக்கு இங்கே இருக்கற மாதிரி அல்லாரும் வந்திடுங்கோ.  வாத்தியம் வாசிக்கறவங்க அவங்க அவங்க வாத்தியத்தோட இங்கே வந்திட்டா நல்லது"ங்கறார் புரொபசர்.  புரொபசர் குரல் ரொம்ப இதமா மென்மையா இருக்கு.  குரலை வைச்சு அவர் எப்படி இருப்பார்ன்னு நெனைக்கற நெனைப்பைப் புறந்தள்ளி, அவர் என்ன சொல்றார்னு கவனமா கவனிக்கறேன்..

"நான் வயலின்.  என் பொண்ணு வாய்ப்பாட்டு.  இனிமே எங்களுக்கு ஞாபகம் எல்லாம் இந்த வைத்தியத்திலே தான்.  எப்படா பொழுது விடியும்னு பாத்திருப்பேன். விடிஞ்சதும் இங்க வர்ற நினைப்பிலேயே எல்லாக் காரியமும் இருக்கும்.  பத்துக்கு மின்னாடியே வந்திட்றோம்" என்று விஸ்வநாதன் குழந்தை மாதிரி சொன்னப்போ, அவன் வெகுளித்தனத்தை நெனைச்சு வெளிக்குத் தெரியாம மனசிலேயே சிரிச்சுக்கறேன்.

"நீங்கள்லாம் உங்க செளகரியப்படி வாங்கோ. நான் பத்துக்கெல்லாம் இங்கே ரெடியா இருப்பேன்.  கரெக்டா நேரத்திற்கு வர்றது, லெசனை ஆரம்பிக்கறது ன்னு ரெண்டு நாள் போனா எல்லாருக்குமே ஒவ்வொண்ணா பழக்கமாயிடும்.  இன்னது தான் இதுன்னு இந்த வைத்தியமும் ஓரளவு தெரிஞ்சிடும்.  அது தெரிஞ்சிட்டா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க என்ன செய்யணும்னும் பிடிபட்டுப் போயிடும்.  என்ன, நான் சொல்றது?" என்கிறார் மித்ரா.

இத்தனையும் எனக்காகத் தான்.  எனக்காகத் தான் அத்தனை பேர் பாடும்.  அதையெல்லாம் கேட்டுண்டு நா மட்டும் பொம்மை மாதிரி ஒக்கார்ந்திருக்க முடியலே. எனக்கு என்ன பொறுப்பு ஒதுக்கியிருக்குன்னு தெரிஞ்சிக்கற ஆவல், மனசில் பாரசூட்டாய் குடைவிரிக்கறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்திட்டு எனக்கான வேலை பத்தி புரொபசர் ஒண்ணும் சொல்லாததினால், சடாரென்று கிளர்ந்தெழுந்த ஆவேசத்தில், "நான் என்ன செய்யணும்?.. எனக்கு ஒரு வேலையும் இல்லையா?.." ங்கறேன்.

"ஏன் இல்லாம?.. நீங்க தான் மொத்த வேலையும் செய்யப்போறீங்க.. உங்களைச் சுத்தி தான் அத்தனையும் நடக்கப் போறது. அப்படி நடக்கறச்சே சும்மா இருந்திட முடியுமா உங்களாலே?.. நீங்க இருக்க நெனைச்சாலும், உங்க மனசு உங்களை சும்மா இருக்க விடாது. என்ன, நான் சொல்றது?" என்கிறார் மித்ரா.

"பெரிப்பா.. நான் பாடறச்சே தப்பு இருந்தா திருத்தி நீங்க தான் கரெக்ட் பண்ணிப் பாடனும்.. ஓ.கே..வா?" என்று கேட்கிறாள் சங்கரி.

"டபுள் ஓ.கே.."ன்னு நான் சொன்னதும், அந்த ஹாலே சிரிப்லே அதிர்றது.

சங்கரியின் குரலைக் கேட்டதும் விவேகானந்தனின் நெனைப்பு தன்னாலே வருது. இந்தக் குழந்தைக்கு எல்லாம் நினைக்கற மாதிரி நல்லபடியா நடக்கும்னு ஒரு தெம்பு. அதே சமயத்தில் 'என்ன இந்த பையனை இன்னும் காணோம்?'ன்னு மனசிலே இன்னொரு பக்கத்திலே ஒரு குடைச்சல் வேறே.

"போனவாரம் அண்ணி கச்சேரிலே சங்கரியும் கூடப் பாடினாளே.. தெரியுமா, டாக்டர்?" என்று விஸ்வநாதன் கேட்பது மெதுவா கேக்கறது..

"தெரியுமே?"ங்கறார் டாக்டர் சாந்தி. "விவேகானந்தன் தானே அன்னிக்கு பிடில்?.. அந்தப் பையனும் நன்னா வாசிச்சானே?"

"அந்தக் கச்சேரி தான்.. அது ரொம்ப நன்னா அமைஞ்ச ஒண்ணு.. அதுசரி, அந்தப் பையனுக்குச் சொல்லலியா?..   இந்த க்ரூப்லே அவனும் இருந்தா, அற்புதமா இருக்குமே?"ன்னு கேக்கற தம்பியோட குரல்லே ஆசை ததும்பி வழியறது.

'தம்பி! அவன் தான் உனக்கு மாப்பிள்ளை ஆகப்போறான், தெரிஞ்சிக்கோ'ன்னு சொல்ல உதடு வரை வார்த்தை வந்திடுச்சு.   கஷ்டப்பட்டு அடக்கிக்கறேன்.   "அந்த விவேகானந்தனுக்கும் சொல்லிடுங்க, டாக்டர்..  விஸ்வநாதனோட சேர்ந்து ரெட்டை வயலின் ஆச்சு.."ங்கறேன்.

"எத்தனை ரெட்டை பாருங்க..  சங்கரியும் நானும் பாட்டு.  மச்சினரும், விவேகானந்தனும் வயலின்" என்று சுசீலாவின் குரல் கேட்டதும், 'என்ன, என்னை உங்க லிஸ்ட்லே சேர்த்துக்க மாட்டீங்களா!"ன்னு கொஞ்சம் சத்தமாவே நான் முணுமுணுத்ததைக் கேட்டு, "எஸ்.." என்று புரொபசர் மித்ரா சொன்னதும் எனக்காக என்ன வேலை சொல்லப் போறாரோ என்றிருந்தது..

"நீங்க இல்லாமலா? நீங்க தான் மெயின்.  ஆனா ஒண்ணு.  நீங்க ஸோலோவா பாடினா இன்னும் எஃபெக்டிவ்வா இருக்கும்.  எஃபெக்டிவ்னு நான் சொன்னது இன் தெ ஸென்ஸ் ஆஃப் க்யூர்.  மியூசிக்கே மருந்தா ஒர்க் பண்ணப் போறது தான் இந்த ட்ரீட்மெண்டோட எஸ்ஸன்ஸ். மத்தவங்களோடு சேர்ந்து இல்லாம தனியா நீங்களே பாட்றதுங்கறது அந்த ஸ்வர கற்பனை சஞ்சாரத்தில் மெய்மறந்து பயணிக்கலாம்ன்னு ஒரு அட்வாண்டேஜ் உங்களுக்கு கெடைக்கறது, இல்லையா.?.. அதுக்காகச் சொன்னேன்.  இந்த மாதிரி அப்பப்ப சமயம் கிடைக்கும் போதெல்லாம், உங்களை நீங்க மறக்கறதும் நல்லது..  மறக்கறதுன்னா தெரிஞ்சே நைஸா இந்த உலகத்தோட பிணைச்சுக் கட்டியிருக்கற சங்கிலிலேந்து விடுபட்டுக்கறது..  அப்படி உங்களை மறக்கற அருமையை இதுக்கு முன்னாடி நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க.. அதனாலே சொல்றேன்..  ஸோலோ தான் உங்களுக்கு பெஸ்ட்..என்ன, நான் சொல்றது?" என்கிறார் புரொபசர்.

"நா என்னை மறக்கற நேரத்லே என் மனசை உங்க பிடிலே எடுத்துக்கப் போறீங்க, இல்லையா, டாக்டர்?"

அவசர அவசரமாக எனக்கு மறுப்பு சொல்கிற தொனியில், "நோ.."ங்கறார்  புரொபசர். "அப்படிப்பட்ட மெஸ்மரிஸமெல்லாம் இல்லை. திஸ் ஈஸ் ப்யூர்லி சயின்ஸ்"ங்கறார்.  "இப்போ பாருங்க.. ஸாரி.. கொஞ்சம் உன்னிப்பா கேளுங்க.. வெளிப்பக்கம் இருக்கற அந்த வேப்ப மரத்தின் கிளையொண்ணு இந்த ரூம் ஜன்னல் கதவு மேலே காத்திலே உரசி உரசி விடுபடறது, கேக்கறதா.. அப்படி உரசரதும், விடுபடறதும் மாத்தி மாத்தி நடக்கறச்சே அந்தக் காரியமே 'ரிதமா'  இசை புரிபடற மனசுக்கு புரியறச்சே ஒரு புல்லரிப்பு ஏற்பட்றது.  ஒருதடவை அந்த மரக்கிளை ஜன்னல் கதவிலே உரசி விடுபட்டதும் அடுத்த உரசலை எதிர்பார்த்து மனசு காத்திருக்கு..  காத்து வீசாம அந்த உரசல் நடக்கலேனா, ஏன் இந்த தாமதம்னு மனசு ஏங்கும்.  'காத்தே வீசு; அந்த மரக்கிளையை அசக்கு'ன்னு கூட மானசீகமா மனசு காத்தை இறைஞ்சும்.   என்ன நான் சொல்றது?" என்கிறார் புரொபசர்.

"நீங்க சொல்றதை அனுபவிக்கறேன், புரொபசர்! ப்ளீஸ் கன்ட்னியூ."

"வீசற காத்து, ஓசையோட எழுந்து கரைக்கு படிஞ்சு வந்து திரும்பிப் போற சமுத்திர அலை, 'ஹோ'ன்னு மேலேந்து கீழே சரிஞ்சு குதிக்கற நீர்வீழ்ச்சி, சடசடன்னு பெய்ற மழைன்னு, உன்னிப்பா கவனிக்கற அத்தனை உலக நடவடிக்கையிலும் ஒரு ரிதம் இருக்கு. அந்த ரிதத்தை அனுபவிக்கறதிலே ஒரு சுகம் இருக்கு. அந்த சுகம் தான் மருந்தா செயல்படறது.  இப்போதைக்கு இது போதும்.  மத்ததை அடுத்த சந்திப்பில் வைச்சிக்கலாம்.  இப்போ வார்த்தைலே சொன்னா கற்பனைலே அந்தக் காட்சியைக் கொண்டுவந்து அதெல்லாம் நடக்கும் போது இதுக்கு முன்னாடி அனுபவிச்ச அனுபவிப்புகளை நினைவிலே மீட்டிப் பார்த்து ரசிக்கத் தெரிந்தவங்களைத் தவிர மத்தவங்களுக்கு அவ்வளவா புரிபடாது.  ஆனா அதை அனுபவிக்கறத்தே தெரியும்.. இதுக்கு முன்னாடியும் அதையே நீங்க அனுபவிச்சிருப்பீங்க.. ஆனா, அப்பல்லாம் அதன் அருமை தெரியாத அனுபவிப்பு.  இப்போத்தான் முதல் தடவையா அது தன்னோட அருமையை உங்களுக்குத் தெரியப்படுத்தப் போறது.. என்ன, நான் சொல்றது?"ன்னு புரொபசர் சொல்வது, எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புக்கு என்னை ஏங்க வைக்கிறது.

"தெரியப்படுத்தப் போறதா? விளங்கலியே புரொபசர்?"

"தெரியப்படுத்தப் போறதுன்னா? ம்ம்.. ஐ மீன், நீங்க உணரப்போறீங்கன்னு வைச்சிக்கங்களேன்.. என்ன, நான் சொல்றது?"

இப்போ தான் தெளிவா அதைக் கவனிச்சேன்.  இந்த புரொபசர் தான் எதைச் சொன்னாலும், 'என்ன, நான் சொல்றது?'ன்னு கேட்டுத்தான் தான் சொல்றதை முடிக்கிறார்ங்கறதை கவனிச்சேன்.  இன்னும் அதை நிச்சயப்படுத்திக்க அடுத்த தடவை அவர் பேசறச்சே அதை உன்னிப்பா கவனிக்கணும்னு மனசிலே நெனைச்சிக்கறேன்.

திடுதிப்பென்று "நானும் உங்களோட கலந்துப்பேன்.  நாளைக்கு நான் வர்றச்சே என்னோட ப்ளூட்டோட வர்றேன்."ங்கறார் புரொபசர்.

எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்.  புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்த புரொபசர்.  கற்பனையில் என் மனசில் எழுதிப் பார்த்த இந்த வார்த்தைத் தொடரே ஒரு வினோத கிளர்ச்சியை கிளப்பறது.

"புரொபசர்!.  நீங்கள் புல்லாங்குழல் வாசிப்பீங்களா?..  ஓ. ஃபைன்!எனக்கு அதன் மேல் ஏகப்பட்ட கிரேஸ்.. நாளைக்கு நீங்க அவசியம் வாசிக்கணும்.. அதுக்காக நான் காத்திருப்பேன்.."ன்னு எனக்கே புரிபடாத ஒரு அவசரத்தில் பரபரக்கிறேன்.

"நிச்சயம்.."என்கிறார் புரொபசர். "அடிப்படையில் நானும் ஒரு இசைக்கலைஞன் தான்.  அந்த இசை என்னில் ஏற்படுத்திய அதிர்வுகள் தான் இந்த வைத்தியத்தின் பக்கமே என்னை இழுத்து வந்தது. யார் யார் இந்த இசை கைப்பட்டு எப்படி எப்படி ஆனார்கள்ங்கறதை நாளைக்கு விவரமா பகிர்ந்துக்கலாம். என்ன, நான் சொல்றது?"ன்னு புரொபசர் சொன்ன போது புரிகிறது.  அந்த 'என்ன, நான் சொல்றது'க்கு அர்த்தம் நான் சொல்றது புரியறதா, நான் சொல்றது பத்தி உங்களுக்குச் சொல்ல ஏதாவது இருக்கான்னு அர்த்தம்ன்னு இப்போ நன்னாத் தெரியறது.

இன்னிக்கு என்னாச்சுன்னு எனக்கே தெரியலே.  சிறுபிள்ளை விளையாட்டு மாதிரி இருக்கு.  நானும் புரொபசருமே மாத்தி மாத்தி ரொம்ப நேரம் பேசிண்டிருந்திருக்கோம்னு தெரியறது.  குறுக்கே யாருமே பேசலைங்கறது இப்போ எனக்கு உறுத்தறது.  யாரானும் குறுக்கிட்டு ஏதானும் சொல்ல வந்ததையும் ஜாடை காட்டி இவரே தடுத்தும் இருக்கலாம். என்னை நிறைய பேச வைக்கறத்துக்கான 'டிரிக்'கா இருக்கலாம்.

இதுவே புரொபசர் செஞ்ச ஒரு ஏற்பாடோன்னும் தோண்றது.  இல்லை, இதுவும் இவர் செய்யப் போற வைத்தியத்தின் ஒரு பகுதியோ தெரியலே.  எதுவானாலும் ஆரம்பத்திலேயே தெரிஞ்சிக்க விரும்பற என்னோட பிறவி குணத்தை கொஞ்சம் கொஞ்சமா மட்டுப்படுத்திண்டு அறவே அதை விட்டொழிக்கணும்னு இந்த சமயத்லே நெனைச்சிக்கறேன்.

விவேகானந்தன் என்ன ஆனான்னு தெரியலே.  இந்த 'மியூசிக் தெரபி' ஒரு பக்கம் இருக்கட்டும்.  அவன் இங்கே வரப்போக இருந்தான்னா, மேற்கொண்டான நடவடிக்கைகளை துரிதப் படுத்த அது உதவும்ன்னு தோண்றது.  எப்படியும் இப்பவானும் அந்தப் பேச்சை ஆரம்பிச்சாத்தான்
அடுத்த சித்திரையிலாவது சங்கரி திருமணத்தை முடிக்கத் தோதா இருக்கும்னு நெனைச்சிக்கறேன்.

"என்ன, எந்த லோகத்லே சஞ்சாரம்?.. சொன்னது காதுலே விழலையா?" என்று சுசீலாவின் குரல் கிசுகிசுப்பா பக்கத்தில் கேட்கிறது.

"ஆங்!.. சொல்லு, சுசீலா! என்ன, விஷயம்?"

"ஒண்ணுமில்லே..  அவனை இன்னும் காணோம்.  அதைத் தான் சொல்ல வந்தேன்."

"நானும் அதைத்தான் நினைச்சிண்டு இருக்கேன்.  என்னாச்சுன்னு தெரியலியே?.. பாக்கலாம்.  வந்துட்டான்னா நல்லது."

அரைமணி ஆச்சு; அப்புறம் ஒருமணியும் ஆச்சு.   வந்தவர்கள் எல்லாம் கிளம்பிப் போயும் ஆச்சு.  தம்பியும் சங்கரியும் மட்டும் இங்கேயே தங்கி விட்டார்கள்.  அடுத்த நாள் மாலைக்கு மேல் அவர்களிடத்திற்குப் போவதாக ஏற்பாடு.

இப்பவாவது விவேகானந்தன் வருவானோ என்று நப்பாசை.  ஆனால் கடைசி வரை அவன் வரவே இல்லை.


(இன்னும் வரும்)




















13 comments:

G.M Balasubramaniam said...

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளறி விடுகிறது இந்த ம்யூசிக் தெராபி. மேலும் எதிர்பார்க்காத எதற்கோ விதை இடப்படுவதாகவும் தோன்றுகிறது.கொஞ்சம் கூடுதல் விறுவிறுப்பும் இருக்கும் என்றும் நம்ப வைக்கிறது ஜீவி.

Geetha Sambasivam said...

வெளிப்பக்கம் இருக்கற அந்த வேப்ப மரத்தின் கிளையொண்ணு இந்த ரூம் ஜன்னல் கதவு மேலே காத்திலே உரசி உரசி விடுபடறது, //

நல்லாக் கேட்கிறது, இங்கிருந்தே கேட்டுட்டு இருக்கேன். எங்க வீட்டு வேப்பமரம் போடும் மர்மர சப்தத்தை! :))))

என்ன ஆச்சு விவேகாநந்தனுக்கு?????:(

Shakthiprabha (Prabha Sridhar) said...

ப்ரொஃபெஸர் சொல்ல போற விஷயத்துக்காக நாங்களும் காத்திருக்கோம். ஒரு விதமான இனம் புரியாத, த்ரில் இந்த பகுதில இருக்கு. "என்ன தான் நடக்க போகுது"னு தெரிஞ்சுக்கற க்யூரியாசிடியை கிளப்பி விடறது.

தன்னிலையில் செல்வதாலேயே இந்தக் கதையை வெகுவாக ரசிக்க முடிகிறது.

//குரலை வைச்சு அவர் எப்படி இருப்பார்ன்னு நெனைக்கற நெனைப்பைப் புறந்தள்ளி, //

நாங்களும் :)

// விஸ்வநாதன் குழந்தை மாதிரி சொன்னப்போ, அவன் வெகுளித்தனத்தை நெனைச்சு வெளிக்குத் தெரியாம மனசிலேயே சிரிச்சுக்கறேன்.

//

:)

//சடாரென்று கிளர்ந்தெழுந்த ஆவேசத்தில், "நான் என்ன செய்யணும்?.. எனக்கு ஒரு வேலையும் இல்லையா?.." ங்கறேன்.

//

ரசிச்சேன் :)
///


//யாரானும் குறுக்கிட்டு ஏதானும் சொல்ல வந்ததையும் ஜாடை காட்டி இவரே தடுத்தும் இருக்கலாம். என்னை நிறைய பேச வைக்கறத்துக்கான 'டிரிக்'கா இருக்கலாம்.

இதுவே புரொபசர் செஞ்ச ஒரு ஏற்பாடோன்னும் தோண்றது. இல்லை, இதுவும் இவர் செய்யப் போற வைத்தியத்தின் ஒரு பகுதியோ தெரியலே. //

ஏனோ இந்த் இடம் மட்டும் கண்ணில் நீர் வரவழைத்தது.

கதையுடன் நாங்களும் ஒன்றிவிட்டோம் என்றால் அது மிகையல்ல.

கோமதி அரசு said...

நீங்க ஸோலோவா பாடினா இன்னும் எஃபெக்டிவ்வா இருக்கும். எஃபெக்டிவ்னு நான் சொன்னது இன் தெ ஸென்ஸ் ஆஃப் க்யூர். மியூசிக்கே மருந்தா ஒர்க் பண்ணப் போறது தான் இந்த ட்ரீட்மெண்டோட எஸ்ஸன்ஸ். மத்தவங்களோடு சேர்ந்து இல்லாம தனியா நீங்களே பாட்றதுங்கறது அந்த ஸ்வர கற்பனை சஞ்சாரத்தில் மெய்மறந்து பயணிக்கலாம்ன்னு ஒரு அட்வாண்டேஜ் உங்களுக்கு கெடைக்கறது, இல்லையா.?.. அதுக்காகச் சொன்னேன். இந்த மாதிரி அப்பப்ப சமயம் கிடைக்கும் போதெல்லாம், உங்களை நீங்க மறக்கறதும் நல்லது.. மறக்கறதுன்னா தெரிஞ்சே நைஸா இந்த உலகத்தோட பிணைச்சுக் கட்டியிருக்கற சங்கிலிலேந்து விடுபட்டுக்கறது.. அப்படி உங்களை மறக்கற அருமையை இதுக்கு முன்னாடி நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க.. அதனாலே சொல்றேன்.. ஸோலோ தான் உங்களுக்கு பெஸ்ட்..என்ன, நான் சொல்றது?" என்கிறார் புரொபசர்.//

அவருக்கு இசை மருந்தாய் வேலை செய்யப் போவதால் தன்னை மறந்து லயித்து பாடும் போது இசை மருந்தாய் வேலை செய்யும்.

இதை தான் டாக்டர் எதிர்பார்க்கிறார்.
அது தான் ஸோலோ தான் இங்களுக்கு பெஸ்ட் என்கிறார்.

சதாரண வயிற்று வலி, த்லை வலிக்கே இசையை கேட்டால் வலி மற்க்கும் போது , தன் குறையை மறந்து பாடும் போது கண் நரம்புகளில் இரத்த ஓட்டம் நன்கு ஏற்பட்டு கண் நன்றாக தெரியும் என நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

// கொஞ்சம் உன்னிப்பா கேளுங்க.. வெளிப்பக்கம் இருக்கற அந்த வேப்ப மரத்தின் கிளையொண்ணு இந்த ரூம் ஜன்னல் கதவு மேலே காத்திலே உரசி உரசி விடுபடறது, கேக்கறதா.. அப்படி உரசரதும், விடுபடறதும் மாத்தி மாத்தி நடக்கறச்சே அந்தக் காரியமே 'ரிதமா' இசை புரிபடற மனசுக்கு புரியறச்சே ஒரு புல்லரிப்பு ஏற்பட்றது. ஒருதடவை அந்த மரக்கிளை ஜன்னல் கதவிலே உரசி விடுபட்டதும் அடுத்த உரசலை எதிர்பார்த்து மனசு காத்திருக்கு.. காத்து வீசாம அந்த உரசல் நடக்கலேனா, ஏன் இந்த தாமதம்னு மனசு ஏங்கும். 'காத்தே வீசு; அந்த மரக்கிளையை அசக்கு'ன்னு கூட மானசீகமா மனசு காத்தை இறைஞ்சும். என்ன நான் சொல்றது?" என்கிறார் புரொபசர்.//

நீங்கள் சொல்வது உண்மை . ஒரு முறை கேட்ட இசையை மறுமுறை கேட்க மனம் விரும்பும்.

தென்னை மரம் காற்றில் சல சலக்கும் போது ரசித்து இருக்கிறேன்.

ஜீவி said...

@ G.M. Balasubramanaiam

முதல் இது ஓக்கே. நானும் இதைப் பற்றி இப்பொழுது தான் படித்துக் கொண்டிருப்பதால், நானும் உங்கள் நிலையில் தான் இருக்கிறேன்.

//மேலும் எதிர்பார்பார்க்காத எதற்கோ விதை இடப்படுவதாகவும் தோன்றுகிறது.//

எல்லாமே நாம் நினைக்கிற வேகத்தில் முடிந்து விடுவதில்லை. பல சமயங்களில் சில விஷயங்கள் முடிய வேண்டி நமக்கிருக்கிற ஆவலின் அடிப்படையில் நாம் படுகிற அவசரங்களே, நடக்க வேண்டிய நிகழ்ச்சிப் போக்குகளின் இயல்பான
Process-ஐ பொறுமையாக கடக்க முடியாமல் தவிக்கிறோமோ என்று தோன்றுகிறது. போன அத்தியாயம் எழுதும் பொழுது கூட நானும் இப்படியெல்லாம் போகும் என்று எதிர்பார்க்கவில்லை.

படித்தவுடன் மனத்தில் படிந்ததைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

அமெரிக்காவிலிருந்து அம்பத்தூர் நினைப்பா? பின்னே, இருக்காமல் போகுமா?

விவேகானந்தனைக் கேட்டால், "பொறுமை, பொறுமை" என்கிறார்.

விசாரிப்புக்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

//கதையுடன் நாங்களும் ஒன்றிவிட்டோம் என்றால் அது மிகையல்ல.//

மிக உன்னதமான வாசிப்பனுபவம் பெற்றிருக்கிறீர்கள். 'படிப்பதினால் ஆய பயன் என் கொல்?' என்று யாராவது என்னைக் கேட்டால், இந்த மாதிரியான அனுபவப்படுவதைத் தான் சொல்வேன்.

மிக்க நன்றி, ஷக்தி!

ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்கள் சொல்வது தான் அடிப்படை.
ஆனால் மித்ரா அதை எப்படி செயல்படுத்துகிறார் என்பதை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
ஸோலோவுக்கான காரணத்தையும் மிக சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தொடர் வருகைக்கும், நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி, கோமதிம்மா.

சிவகுமாரன் said...

எதிர்பார்ப்புகளை கிளிப்பி விடுகிறீர்கள். அதிருக்கட்டும்.
இப்படி ஒரு சிகிச்சை கிடைக்குமென்றால் நோயாளியாய் இருப்பது கூட சந்தோசமாய் இருக்கும் போலத் தோணுகிறது..

பாச மலர் / Paasa Malar said...

//"நீங்க சொல்றதை அனுபவிக்கறேன், புரொபசர்! ப்ளீஸ் கன்ட்னியூ."//

இடையில் வரும் இந்தச் சொற்களைத்தான் இந்தப் பகுதிக்கு மறுமொழியாகத் தரமுடிகிறது..ஒன்றி அனுபவிக்கிறேன்....

விவேகானந்தனுக்காய் காத்திருக்க வேண்டுமா..சரி...

ஜீவி said...

@ சிவகுமாரன்

இந்தக் கதை சம்பந்தப்பட்டவர்கள் இசையில் மனத்தைப் பறி கொடுப்பவர்கள். அதனால் தான் அவர்களுக்கு இலாயக்கான ஒரு சிகித்சையான மியூசிக் தெரபி வந்தது.
இந்த சிகித்சை பற்றி சமீபத்தில் நான் படித்த விவரங்கள், இந்தக் கதைக்குப் பொருத்தமாக பொருந்தி வந்தது.

மற்றபடி இசையில் ஆர்வமில்லாமல் யாரேனும் இருப்பின் அவர்களுக்கு இந்த சிகித்சை முறை எப்படி பலனளிக்கும் என்று தெரியவில்லை.

அந்த 'தெரபி' என்கிற வார்த்தை அப்படிப்பட்ட தெரபி தேவைப்படுவோருக்கு மட்டுமே; இசையின்பத்தைப் பருக நோயாளியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை, அல்லவா?

"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இசை இன்பத் தேனை அள்ளும்..

"துன்பக் கடலில் தோணியாவதும் கீதம்......"

-- பட்டுக்கோட்டையார்

கவிஞருக்குத் தெரியாததல்ல; சும்மா நினைவுக்கு வந்த பாடலைச் சொன்னேன்.

அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சிவகுமாரன்!.

ஜீவி said...

@ பாசமலர்

அழகான பின்னூட்டம்.

ஒரு சின்ன சிக்கல். 20-வது அத்தியாயம் வரை விவேகானந்தன் வருவதாகத் தெரியவில்லை. சீக்கிரம் கதையை முடித்து விடலாமா என்று தோன்றுகிறது; ஆனால் அதற்கு மனம் தான் வரவில்லை. முடிக்க நினைத்து விட்டால், 'இதோ..' என்று விவேகானந்தனும் வந்து விடுவார்!

தங்கள் ரசிப்பிற்கு நன்றி, பாசமலர்!

Related Posts with Thumbnails