மழமழவென்று மரத்தினால் இழைத்து சின்ன பெட்டி ஸைஸில் இருந்தது கூடு. எல்லாப் பக்கமும் சுற்றி வெள்ளை வெளேர் தகடு அடிக்கப்பட்டு தூக்கிக் கொண்டு செல்வதற்கு வாகாக மேல்பக்கம் வளையம் மாட்டி சின்ன சங்கிலி கோக்கப்பட்டிருந்தது. சிறைக் கம்பிகள் மாதிரி தகடில் சின்ன தடுப்புக் கம்பிகள். கம்பிக் கதவு திறக்க அது வழியாகத் தான் அந்த பச்சைக் கிளி வெளிவந்து ஜோசியக்காரனிடம் சீட்டு எடுத்துக் கொடுத்து அந்த காரியத்திற்குக் கூலியாக அவன் தந்த நெல்மணியை சீட்டு கொடுத்த மூக்காலேயே வாங்கிச் சென்றது.
அது சீட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், இவன் அந்த நொடியே நெல்மணி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம் போல நடந்து கொண்டிருந்தது. வாலாயமாய் நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இருபக்கமும் இது வரை மீறினதாகத் தெரியவில்லை. அதனால் வெளிக்குத் தெரியாத ஒரு அன்யோன்யம் இரு பகுதியிலும் இருப்பது தெரிந்தது. உன்னை நம்பி நானும், என்னை நம்பி நீயும் என்பது மாதிரியான ஒரு யதார்த்த பிடிப்பு.
ஈஸ்வரன் கோயில் தெருவில் கீழிறங்கி மேலேறிய மேம்பாலம் தாண்டித் திரும்பிய திருப்பத்தில் அந்த ஜோசியக்காரன் ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்தான். செம பிஸியான ரோடு. இருந்தும் இவனையும் இவன் கிளிக்கூண்டையும் பார்த்த சிலர் இவனைத் தாண்டிப் போக மனமில்லாமல் விரித்திருந்த கோணியின் உட்கார்ந்து ஜோசிய தாகம் தீர்த்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.
சற்றுத் தள்ளி சாத்தியிருந்த ஒரு கடையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தபடி மூன்றாம் மனிதனாக இங்கு நடப்பனவற்றை நோட்டமிடுவது பாண்டியனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.. அந்தக் கிளியும் இவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. எவ்வளவு கார்யார்த்தமாக அது செயல்படுகிறது என்பதைப் பார்க்க பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது. ஜோசியம் பார்க்க ஆள் வந்து இவன் கூண்டுக் கதவு திறந்ததும் ஒயிலாக அந்தக் கிளி நடந்து வந்து அடுக்கியிருக்கும் சீட்டுக்கற்றையிலிருந்து ஒரு கவரை மட்டும் பாங்காக இவனிடம் எடுத்துத் தந்து விட்டு மெஜஸ்டிக்காக நெல்மணி வாங்கி என் அடுத்த வேலை கூண்டுக்குள் நுழைந்து சிறைபடுத்திக் கொள்வது தான் என்கிற மாதிரி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்க்காமல் தன் வேலை முடிந்த ஜோரில் கூடு நோக்கி விரைவதும், இனி மேல் என் வேலை ஆரம்பிச்சாச்சு என்கிற மாதிரி கிளி எடுத்துக் கொடுத்த சீட்டு உறையை உதடால் ஊதிப் பிரித்து உள்ளிருக்கும் ஜோசியப்பலன் கவிதையை பாட்டாக ராகம் போட்டுப் படித்து இவன் நடக்கப் போவதை விவரிப்பதும்...
பாண்டியன் சுற்றுப்புற சூழ்நிலையே மறந்து போனவனாய் கிளி ஜோசியக் காரனைச் சுற்றி நடப்பதில் மனம் மயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ஆள் வந்து பலன் பார்த்துப் போனதும், அடுத்தாற் போல் வரப்போகிற ஆளை எதிர்பார்த்து சுற்றி நடந்து போகும் ஜனங்களை ஜோசியக்காரன் ஏக்கத்துடன் பார்க்கும் பொழுது பாண்டியன் கிளியைப் பார்த்தான். அதுவும் வெளியே வந்து அடுத்த சீட்டை எடுத்துக் கொடுக்க படபடப்புடன் காத்துக் கிடக்கிற மாதிரியான பாவனையில் அடுத்த ஆளுக்காக எதிர்பார்த்திருப்பது போல...
இதுவரை ஆறு பேர் வந்து பலன் பார்த்துக் கொண்டு போய்விட்டனர். கிட்டத் தட்ட எல்லாருக்கும் நல்ல பலன்களாகவே அமைந்திருந்தலில் வந்தவர் களின் சந்தோஷம் அவர்கள் முகச்சிரிப்பில் தெரிந்தது. விநாயகர், சுப்ரமணியர், திருப்பதி பெருமாள், அம்மையப்பனின் கைலாச காட்சி, கஜலஷ்மி, ஐயப்பன் என்று ஜோசிய சீட்டில் இது வரை வந்த தெய்வ வரிசையை வரிசை தப்பாமல் பாண்டியன் நினைவு கூர்ந்தான். ஒருதடவை எடுத்த சீட்டை மறுமுறை எடுக்காத கிளியின் கவனத்தையும் நினைத்துக் கொண்டான்.
படத்துக்குக் கீழே அந்தந்த தெய்வங்களை போற்றி பாடுகிற வாழ்த்துப்பா மாதிரி இருக்கும் போலிருக்கு. அதை ராகம் போட்டு வாசித்து வணங்கிய பின்னே கி.ஜோ. லேசாக மாற்றிய வேறுபட்ட குரலில் வந்தவர்களுக்கு குறிபலன் சொல்வது போல அச்சடித்திருந்த விவரங்களை அனுபவித்துச் சொன்னான். சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்.
லேசாக வெளிச்சம் கவிந்ததும் இது போதும்ங்கற மாதிரி கிளிஜோசியன் எழுந்திருந்தான். எழுந்திருந்த வாகிலேயே அப்பொழுது தான் பாண்டியனைப் பார்த்தது போல முகம் மலர்ந்து, சிகரெட்டை வாயில் நுழைத்தபடி, தீப்பெட்டி இருக்கிறதா என்று கேட்கிற பாவனையில் கைமுட்டி மேல் விரல் உரசிக் காண்பித்தான்.
பாண்டியனும் எழுந்திருந்து அவன் அருகாமையில் நகர்ந்து "வத்திப் பெட்டி வைச்சிக்கற பழக்கம் இல்லீங்க.." என்று சொன்னதைக் கேட்டு ஜோசியக் காரன் அவனை விநோதமாகப் பார்த்தான். 'இல்லேனா, இல்லைன்னு சொல்லிட்டுப் போறது தானே, தான் கேட்டதுக்கு பதில் சொல்ற மாதிரி அவனைப் பத்தியும் சொல்வானேன்' என்று ஜோசியக் காரனுக்கு தோன்றியிருக்க வேண்டும். ஏதோ காட்டமாகச் சொல்ல வந்தவன் சமாளித்த தோரணையில், "கோயிலுக்கு வந்தீகளாக்கும்?" என்று பக்க வாட்டில் சற்றுத் தள்ளி பிர்மாண்டமாக நிமிர்ந்திருந்த கோயில் கோபுத்தை காட்டிக் கேட்டான்.
"ஆமா. கோயிலுக்குத் தான். கொஞ்சம் பொழுது சாயட்டுமேன்னு பாத்திருந்தேன். இன்னிக்கு தீப அலங்காரமில்லியா?.. இருட்டினாத்தானே அழகாயிருக்கும்..?"
"ம்..ம்.." என்று அவனுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தான் கிளி ஜோசியன்.
சொல்லப்போனால் பாண்டியனுக்கு ஜோசியனை விட அந்தக் கிளியை ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பார்த்தபடி, அதற்கு ஒரு 'பை..' சொல்கிற தோரணையில் குனிந்து கையசைத்தான்.
அந்த பொல்லாத கிளியும் அந்த நேரத்தில் "கீக்கீ.." என்று ஓசை கிளப்ப, அதுவும் அதன் பாஷையில் தனக்கு 'பை' சொல்கிறதாக்கும் என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன். அந்த மகிழ்வில் லேசாக நடையை எட்டிப் போட்டான்.
மங்கை சொல்லியிருப்பது நினைவில் நின்றது. கோவில் வாசல் பக்கம் காளியண்ணன் கடை இருக்குலே? அங்கணே அர்ச்சனை தட்டு வாங்கிக் கங்க.. சிவன் கோவில் இல்லியா?.. அப்படியே வில்வ இலை கொஞ்சம் கேட்டு வாங்கி தட்டோட வைச்சிக்கங்க.. ஜோட்டை அண்ணன் கடைலேயே சொல்லிட்டு ஒதுக்குப்புறமா விட்டிடுங்க. உள்ளாற போனதும் அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கங்க.. மறந்திடாதீங்க.. சீட்டு இல்லாம அர்ச்சனை கிடையாது. தெரியுமிலே?"
அவனுக்கு அது தெரியும் என்று மங்கைக்கும் தெரியும். இருந்தாலும் அப்படி கேள்வி கேட்டு உரையாடுவது அவள் பாணி..
அவனுக்கும் அது தெரியும். இருந்தாலும் முறைப்பான். "இது என்ன ஒவ்வொண்ணும் குழந்தைக்குச் சொல்ற மாதிரி?.. இப்பத்தான் புதுசா முதல் தடவையா நான் கோவிலுக்குப் போற மாதிரி.."
"எப்பவும் நாம ரெண்டு பேரும் சேந்து தானே போற பழக்கம்?.. இன்னிக்குத் தான் குளிச்சேங்கறதாலே நீங்க மட்டும் போறதா ஆயிடுச்சி.. சிவராத்ரி அர்ச்சனை புண்ணியமுங்க.. கிளம்புங்க.."
"அதில்லே. இவ்வளவு டீடெயில்டா.. குழந்தைக்குச் சொல்ற மாதிரி.."
"யார் கேட்டா?.. குழந்தை தான்.. குழந்தை இல்லாம பெறவு என்ன?.. எப்பவும் எதுனாச்சும் நெனைப்பு.. சொல்றதை காதுலேயே ஏத்திக்காத போக்கு.. நமக்கு சம்பந்தம் இருக்கோ, இல்லியோ எதையும் பராக்கு பாக்கற புத்தி.. குழந்தைன்னா குழந்தையாய்த் தான் இருக்கணும்ன்னு இல்லே. குழந்தைத் தனம் இருந்தாலே போதும். தெரியுமிலே?"
"தெரியும்.. தெரியும்.." என்று சிரித்து வெளிக்கதவு தாண்டி படியிறங்கிய அந்தக் குழந்தை, மங்கை சொன்ன காளியண்ணன் கடையைக் கடந்த நொடியில் அர்ச்சனைத் தட்டு நினைப்பு வந்து திரும்பியது.
(இனி வரும்)

16 comments:
பாண்டியனுக்கு ஜோசியனை விட அந்தக் கிளியை ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பார்த்தபடி, அதற்கு ஒரு 'பை..' சொல்கிற தோரணையில் குனிந்து கையசைத்தான்.
கிளி கொஞ்சும் காட்சி ..!
/ சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்./நல்ல அவதானிப்பு.!ஒரு முறை என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டம் குறித்து நான் எழுதியது”உங்கள் கருத்துரை இந்தக் கிளிக்கு ஒரு நெல்”
ஒருமுறை எடுத்த சீட்டை மறுமுறை எடுக்காத கிளியின் சாமர்த்தியம் ஆச்சர்யம்தான்! ஒருவேளை அதற்கும் ஏதாவது டிரெய்னிங் இருக்குமோ என்னவோ! சீட்டு எடுத்தால்தான் நெல்லா... இல்லையென்றால்?
beautiful.. that solitary word doesn't do justice for nearly poetic flow. will return when i have proper internet access. enjoyed every word.
மிகவும் அழகாயிருக்கிறது உங்கள் எழுத்து நடை. தொடரும் என்று போட்டிருந்தாலும் - இந்தப் பதிவே ஒரு தனிக்கதை படித்த திருப்தி தருகிறது.
@ இராஜராஜேஸ்வரி
கதை அச்சில் வருகையில் வரைய வேண்டிய சித்திரத்திற்கான காட்சியைத் தேர்ந்தெடுத்து தந்தமைக்கு நன்றி, இராஜி மேடம்.
@ GMB
கிளிக்கு பழத்தை விட நெல் தான் என்று பிரசித்தமாகியிருக்கிறது, பார்த்தீர்களா?
உங்களை கிளியாக உருவகித்துச் சொன்னதும் எழுதுபவனின் இதய தாபத்தை எடுத்துச் சொல்வதாக இருந்தது. இந்தத் தொடரை வாசிக்க ஆரம்பித்திருப்பதற்கு நன்றி, சார்.
@ ஸ்ரீராம்
ஒரு முறை எடுத்த சீட்டை ஜோசியக் கிளி மறுமுறை எடுத்து நீங்கள் கூடப் பார்த்ததில்லையா, ஸ்ரீராம்?..
ஆச்சரியம் தான்.
@ அப்பாதுரை
பரஸ்பர உணர்வு. நன்றி அப்பாஜி.
@ மோ.சி. பாலன்
தங்கள் முதல் வரவுக்கு மிக்க நன்றி, மோ.சி.பாலன்.
நீங்கள் சொன்னவுடன் தான் நானும் படித்துப் பார்த்தேன். நீங்கள் சொன்னது சரியென்றே உணர்ந்தேன்.
பரஸ்பரம் பேசிக் கொள்வதற்கு கதை ஒரு வடிவம். பேசுவதற்கு நிறைய இருப்பதினால், கதையும் நீள்கிறது. அவ்வளவு தான்.
தங்கள் ரசனைக்கு மனம் கனிந்த நன்றி. அடிக்கடி சந்திக்கலாம், மோ.சி.பா. அன்பு வணக்கம்.
இந்தக் கிளி இங்கே வந்திருப்பதையே இன்னிக்குத் தான் பார்த்தேன். அப்டேட்டே ஆகலை. யதேச்சையா வந்தா, இரண்டாம்பகுதினு போட்டிருக்கு. முதல் பகுதியைத் தேடிப் படிச்சேன்.
கிளிக்கும் பாண்டியனுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரிஞ்சுக்க ஆவல். எனக்கும் கிளியைப் பழக்கி இருப்பது ஆச்சரியமாத் தான் இருக்கும். இன்னமும் ஆச்சரியமா இருக்கு. :)))
கிளியின் செய்கை மிக ஆச்சரியமாய் இருக்கும், அடுக்கி வைத்து இருக்கும் புத்தகங்களை வந்து ஒன்று ஒன்றாய் கொத்தி கீழே தள்ளி விட்டு ஒன்றை தேர்ந்து எடுத்து கொடுப்பது.
அழகாய் அதை கவனித்து கதைக்கு சேர்த்த விதம் அருமை.
கிட்டத் தட்ட எல்லாருக்கும் நல்ல பலன்களாகவே அமைந்திருந்தலில் வந்தவர் களின் சந்தோஷம் அவர்கள் முகச்சிரிப்பில் தெரிந்தது.//
நல்லதாய் சொல்லிவிட்டால் சிரிப்புதான்.
குழந்தைன்னா குழந்தையாய்த் தான் இருக்கணும்ன்னு இல்லே. குழந்தைத் தனம் இருந்தாலே போதும். தெரியுமிலே?"//
ஆமாம் உண்மை.கள்ளமில்லா குழந்தைதனம் இருந்தால் போதும் தான்.
கதை இனி என்ன என்று ஆவலை தூண்டுகிறது.
அது சீட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், இவன் அந்த நொடியே நெல்மணி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம் போல நடந்து கொண்டிருந்தது. வாலாயமாய் நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இருபக்கமும் இது வரை மீறினதாகத் தெரியவில்லை. அதனால் வெளிக்குத் தெரியாத ஒரு அன்யோன்யம் இரு பகுதியிலும் இருப்பது தெரிந்தது. உன்னை நம்பி நானும், என்னை நம்பி நீயும் என்பது மாதிரியான ஒரு யதார்த்த பிடிப்பு.
சம்பவங்களை ஒன்றுவிடாமல் அழகாக எடுத்துக்கூறியுள்ள எழுத்து நடை அருமை.
‘இனி’ மேலும் என்ன? என ஏங்க வைக்கிறதே !
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
இனி தொடர்வதில் மகிழ்ச்சி.
Post a Comment