மின் நூல்

Thursday, March 24, 2016

சும்மா சுவாரஸ்யத்திற்காக

பெரும்பான்மையான கேள்விகள் இலக்கியமும் இலக்கியம் சார்ந்ததுமானது.   .
வேண்டுமென்றே சுலபமாகக் கேள்விகள் தயாரிக்கப் பட்டிருக்கின்றன.

பதில்களுக்கு சிரமப்பட வேண்டும் என்றில்லை.  கடைசியில் காணபடும் க்ளூக்கள் பதிலை சுலபமாகக் கண்டுபிடிப்பதற்காகவே கொடுக்கப் பட்டிருக்கின்றன.  முயற்சித்துத் தான் பாருங்களேன்..

=====================================================================

1) கேள்வி:   பிப்ரவரி 28  கல்கி இதழில்  பிப்ரவரி 29  என்ற சிறுகதை எழுதியவர் யார் தெரியுமா?

2) கேள்வி:  பாம்பு ஏணி படமெல்லாம் இருக்கும் இந்த விளையாட்டில்;  என்ன விளையாட்டு?

3) கேள்வி:  குருபிரசாத்தின் கடைசி தினம்  கதை படித்திருக்கிறீர்களா?  யார் எழுதிய கதை அது?

4) கேள்வி: திருக்குறளின் முதல் குரள் நமக்கெல்லாம் மனப்பாடம்.  குறளின் கடைசிக் குறள் என்ன?

5) கேள்வி:  தந்தையைக் குளிர்க் கண்ணாடி (Cooling glass) இல்லாமல் பார்த்தவர்கள் அரிதினும் அரிது.   அவரின் திருமகனாரும் குளிர்க் கண்ணாடி.  இரண்டு பேருமே எழுத்தாளர்கள்.  தந்தையாரின் பெயர் என்ன?

6 கேள்வி:  முரசொலிக்கட்டும்; நம் நாடு தழைக்கட்டும்; மன்றத்திலே எங்கள் மக்கள் கூட்டம் திரளட்டும்,... என்று தொடர்ந்து பத்திரிகைகள் பெயர்களை எடுத்தாண்ட வசனம் தூக்குமேடை காட்சியில் வரும் திரைப்படம்.   இந்த படத்திற்கு வசனம் எழுதியது யார்?..

7) கேள்வி: சாணக்கியராக  தம் நாடகத்தில் வாழ்ந்து காட்டியவர். .


8) கேள்வி:  தமிழின் முதல் சிறுகதையின்  பெயர் என்ன தெரியுமா?

9) கேள்வி:  இராம காதையில் அனுமனின் சாகசங்களுக்காகவே ஒதுக்கப் பட்ட காண்டம் எது?

10) கேள்வி: இந்த நாவல் முழுதாக கல்கி அவர்களால் எழுதப்படவில்லை. தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவரின் நாவல் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவர் மகள் நாவலை முழுதாக எழுதி முடித்தார்.  அந்த நாவலின் பெயர் என்ன?

11) கேள்வி: பாக்கியம் ராமசாமி என்பது புனைப்பெயர் என்று தெரியும். அவரது இயற் பெயரின் 'ஜ' எந்த ஊரைக் குறிக்கிறது?..

12) கேள்வி: மறக்க முடியாத இந்த மராத்தி எழுதாளரின் நிறைய கதைகள் தமிழில்  வெளியாகி பின்  மராத்தியில் மொழிபெயர்க்கப் பட்ட அதிசயம் நடந்திருக்கிறது.  இவரது பிரபல நாவலகளில்  ஒன்று யயாதி.  யார் அவர்?

13) கேள்வி: இவருக்கு 2015 ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அளிக்கப்படடது.  திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு முக்கிய தெருவை நிலைக்களனாகக் கொண்டு இவர் நிறைய எழுதியிருக்கிறார்.  அந்தத் தெருவின் பெயர் என்ன?

14) கேள்வி: போர்க்களத்தில் 'இன்று போய் நாளை வா'  என்று தன்னைக் குறித்துச் சொன்னதை நினைத்து நினைத்துத் துடித்தவன்.

15) கேள்வி:  அந்தக் காலத்திலேயே வானவூர்தி இருந்தது என்பதற்கு அடையாளமாகத் திகழ்வது இந்த ஐம்பெருங்காப்பிய படைப்பு.


க்ளூக்கள்:

1)  காளை ராசி   2) வீடு பேறு  3) கதை சொன்ன வாத்தியார்  4) ஊடுதலும் கூடுதலும்

5)  சங்கர்லால்  6) தென்றல்  7) ஒரு திரைப்படத்தின்  பெயரில் ஓரளவு ஒளிந்துள்ளவர்  8) மரங்களுக்கு அரசன்  9) அழகு  10) விண்மீன்  11) நீர்

12)  கா.ஸ்ரீ.ஸ்ரீ.   13)ரோடு   14)  தசமுகன்  15)   பணம்-- ஆங்கிலத்தில்.

-------------------------------------------------------------------------------


1) நீங்களே சுதந்திரமாக மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளலாம்.

2) எல்லா விடைகளும் சரியென்றால் ஆஹா..

3) பத்து விடைகள் சரியென்றால்  பிரமாதம்

4) எட்டு விடைகள் சரியென்றால்  பரவாயில்லையே..

5) அதற்குக் கீழே இந்த மாதிரி இன்னும் நாலு  வினாத்தாட்கள் முயற்சி செய்தால் பிரமாதத்திற்கு வந்து அதற்குப் பின் ஆஹா-வை அடையலாம்.  சலிக்காது முயற்சி செய்யுங்கள்.


 படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.23 comments:

Geetha Sambasivam said...

1. ரிஷபன்

2. பரமபதம்

3. சுஜாதா

4. புலத்தில் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து“

5. திரு தமிழ்வாணான், லேனா தமிழ்வாணன்

6. கருணாநிதி (?)

7. ஆர்.எஸ்.மனோகர்

8. அரசமரத்தடிப் பிள்ளையார்

9. சுந்தர காண்டம்

10. அமரதாரா

11.ஜலகண்டபுரம்

12.வி.எஸ்.காண்டேகர்

13. ஆ.மாதவன் (?)

14.ராவணன்

15.மணிமேகலை

Geetha Sambasivam said...

தப்பானதுக்கு உள்ள பொற்காசுகளைக் குறைச்சுக்கிட்டுக் கொடுங்க! போதும்! :)

G.M Balasubramaniam said...

திருமதி கீதா சாம்பசிவத்தின் பதில்களோடு எனக்குத் தெரிந்ததும் ஒத்துப் போகிறது ஆறாவதாக அண்ணாதுரை என்றிருக்க வேண்டுமோ

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் சொந்த முயற்சியில் இவற்றில் ஏதோ ஐந்துக்கு மட்டுமே சரியான விடைகள் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

Yaathoramani.blogspot.com said...

கொஞ்சம் சராசரிக்குக் கீழேதான் வந்தது
அடுத்து முயற்சிக்கிறேன்

ஸ்ரீராம். said...

ரிஷபன், பரமபதம், சுஜாதா, ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். தமிழ்வாணன், கண்ணதாசன், ஆர் எஸ் மனோகர், வவே சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம், , சுந்தரகாண்டம், நட்சத்திரம் (யூகம்), ஜலகண்டபுரம், எம் வி வி, நாஞ்சில் நாடன், ராவணன், சீவக சிந்தாமணி? ஆனால் இது ராமாயனத்துக்குத்தானே பொருந்தும்?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரிசல்ட் எப்ப சார் வரும்?

ஜீவி said...

@ Geetha Samhasivam

கேள்வித் தாளை வாங்கினதுமே கிடுகிடுன்னு எழுதி பரிட்சைத் தாளைக் கொடுத்திட்டீங்களே?
இன்னும் கொஞ்சம் நிதானமா கேள்விகளைக் கவனிச்சிருந்தா சில தவறுகளைத் திருத்தியிருக்கலாமே?

ஜிஎம்பீ சார் வேறே உங்களை வழிமொழிஞ்சிருக்கார். :))

ஜீவி said...

@ GMB

ஜிஎம்பீ சார்! உங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ். கீதா மேடம் சொல்லியிருக்கறதிலே 6-ம் எண்ணுக்கான பதிலைத் தவிர வேறே என்னமானும் உங்களுக்கு மாற்றம் உண்டா?..

ஜீவி said...

@ அ/ முஹம்மது நிஜாமூத்தீன்

யாராவது எல்லாத்துக்கும் சரியான விடையைச் சொல்லிட்டா அவங்க சொன்னதையே ரிசல்ட்டா சொல்லிடலாம்ன்னு இருக்கேன்.

க்ளூக்கள் ஆனாலும் வெளிப்படை. முதல் கேள்வி தான் ட்ஃப்பான கேள்வின்னு நினைச்சுத் தான் அதோட க்ளூவை இவ்வளவு சுலபப்டுத்தினேன்.

கீதாம்மாவின் பதிலையும் ஸ்ரீராமின் பதிலையும் அலசினா எல்லாத்துக்கும் சரியான விடை கிடைத்து விடும் போலவும் இருக்கு.

பார்க்கலாம். ஆல் ரைட் யாருன்னு பாக்கலாம்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், வழக்கம்போல் அவசரக்குடுக்கையாப் பதில் சொல்லி இருக்கேனோ? ஶ்ரீராமின் பதில்களைப் பார்த்ததும் தான் புரிகிறது! ம்ம்ம்ம் எம்.வி.வெங்கட்ராம் சௌராஷ்டிரர். ஆகையால் அவராக இருக்காது என்று நினைத்தேன். ஆறாவதாகக் கண்ணதாசன் சரியாக இருக்கலாம். சினிமா விஷயத்தில் எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை! :)

Geetha Sambasivam said...

ஸ்கூல்லே எங்க டீச்சர் சொல்றாப்போல் நீங்களும் சொல்லி இருக்கீங்க ஜீவி சார். நிதானமா எழுதினா முதல் ராங்க் வருவேனு சொல்வாங்க! வந்ததில்லை! :(

ஜீவி said...

@ Geetha Samhasivam

நன்றாகப் படிக்கிற குழந்தை அவசரப்படாமல் எழுதினால் இன்னும் சிறக்கச் செய்யுமே என்கிற
அக்கறையில் டீச்சர் சொல்லியிருப்பாங்க. :)) நான் நினைத்துச் சொன்னதும் இந்த அடிப்படையில் தான்.

G.M Balasubramaniam said...

கீதா மேடத்தின் பதில்களோடு எனக்குத் தெரிந்தது ஒத்துப் போகிறது என்று தானே சொல்லி இருக்கிறேன் எனக்கு எல்லாபதில்களும் தெரியும் என்று சொல்லவில்லையே

ஜீவி said...

இப்போ விடைகளைப் பார்க்கலாம்.

1) ரிஷபன்
2) பரமபதம்
3) சுஜாதா
4) ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்
(இன்பத்துப் பாலில் வரும் 1330-வது கடைசிக் குறள் இது)

5) தமிழ்வாணன் (இராமநாதன் என்று எழுதியிருந்தாலும் சரியே)
(தமிழ்த் தென்றல் திரு.வி.க. சூட்டிய பெயரைப் புனைப்பெயராகக் கொண்டார்)

6) கண்ணதாசன் (இந்த வசனம் வரும் படம்: சிவகெங்கைச் சீமை)

மருது சகோதரர்களின் கதை. சின்ன மருதுவாக நடித்த எஸ்.ஏஸ். இர்ரஜேந்திரன் முழங்கிய வசனம்.

"முரசொலிக்கட்டும், நம்நாடு தழைக்கட்டும், மன்றத்திலே மக்கள் கூட்டம் திரளட்டும், மலரட்டும் விடுதலை மலரட்டும், தவழட்டும் தென்றல் தவழட்டும், திராவிடநாடு வாழட்டும்".

(முரசொலி, நம்நாடு, மன்றம், விடுதலை, தென்றல், திராவிட நாடு-- இதெல்லாம் அந்நாளைய திராவிட இயக்க பத்திரிகைகளின் பெயர்கள். 'தென்றல்' கண்ணதாசனின் பத்திரிகை.

7) ஆர்.எஸ். மனோகர்
8) குளத்தங்கரை அரசமரம் (வ.வே.சு. அய்யர் எழுதியது)
9) சுந்தர காண்டம்
10) அமரதாரா (கல்கியின் திருமகளார் ஆனந்தி தொடர்ந்து எழுதினார்)
11_) ஜலகண்டாபுரம் (ஜலகண்டாபுரம் ராமசுவாமி சுந்தரேசன்-- ஜ.ரா.சுந்தரேசன்)
12) வி.எஸ். காண்டேகர் (Vishnu Sakharam Khandekar)
13) சாலைத் தெரு (திருவனந்தபுரத்தில் இருக்கும் பிரபலமான கடை வீதி. இந்த கடை வீதியில் ஆ.மாதவன் 'செல்வி ஸ்டோர்' என்று கடையும் கொண்டிருந்தார். இந்தக் கடை வீதி இவரது பல கதைகளுக்கு நிலைக்களனாக ஆகியிருக்கிறது)
கேள்வி, தெருவின் பெயர் என்ன என்று தான். :))

14) இராவணன்

15) சீவக சிந்தாமணி. (திருத்தக்கத் தேவர் யாத்த அற்புதமான விருத்தப்பாடல்களைக் கொண்ட காப்பியம். சமண இலக்கியம். கி.பி. 9-ம் நூற்றாண்டு காலத்தது. கம்பராமாயண காலத்திற்கு முற்பட்டது. இந்த நூலில் வானவூர்தி பற்றிய தகவல் வருகிறது. உ.வே.சாமிநாத ஐயர் சேகரம் செய்து பதிப்பித்த நூற்களில் ஒன்று)


அப்பாதுரை said...

பதினஞ்சுக்கு ரெண்டு! பதிலையும் புதிரா இல்லே போட்டிருக்கீங்க?

வல்லிசிம்ஹன் said...

அனைவரும் எழுதிவிட்டார்கள். கடைசிக் குறள் எனக்குத் தெரியாது. மிக நல்ல பதிவு ஜீவி சார்.

ஜீவி said...

@ வல்லி ஸ்ம்ஹன்

வாங்க, வல்லிம்மா. உங்கள் பார்வையில் பதிவு பட்டது சந்தோஷம். பதில்கள் என்பதைத் தாண்டி கூடுதல் தகவல்கள் கொடுப்பதற்காக கேள்விகள் எழுந்தன. தங்கள் வருகைக்கு நன்றி.

கோமதி அரசு said...

நான் தாமதமாய் வந்து விட்டேன். விடையை பார்க்காமல் நினைத்துக் கொண்டு சரியா என்று கடைசியில் பார்த்துக் கொண்டேன். ஐந்து சரி. மீதி தெரிந்து கொண்டேன்.
இப்படி அடிக்கடி பதிவு போடலாம். நன்றாக இருக்கிறது.

Bhanumathy Venkateswaran said...

2. பரமபதம்
3.சுஜாதா
5. தமிழ்வாணன்
7. ஆர்.எஸ்.மனோகர்
8. ஏதோ அரச மரம் என்று வருமே..? குளத்தங்கரை அரச மரம்
9. சுந்தர காண்டம்
10.அமரதாரா
11.ஜலகண்டபுரம்
12.காண்டேகர்
14.இராவணன்
15.கம்ப ராமாயணம், ஆனால் இடு ஐம்பெரும் காப்பியங்களில் வராதே..?

Bhanumathy Venkateswaran said...

2. பரமபதம்
3.சுஜாதா
5. தமிழ்வாணன்
7. ஆர்.எஸ்.மனோகர்
8. ஏதோ அரச மரம் என்று வருமே..? குளத்தங்கரை அரச மரம்
9. சுந்தர காண்டம்
10.அமரதாரா
11.ஜலகண்டபுரம்
12.காண்டேகர்
14.இராவணன்
15.கம்ப ராமாயணம், ஆனால் இடு ஐம்பெரும் காப்பியங்களில் வராதே..?

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் வருகைக்கு நன்றி, கோமதிம்மா. தொடர வேண்டிய தொடர்கள் நிறைய குவிந்து போய்க் கிடக்கின்றன. அப்பப்போ கொஞ்சம் தொய்வு ஏற்படும் பொழுதெல்லாம் இப்படிப் போடலாம்.

ஜீவி said...

@ வி. பானுமதி

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. நிறைய விடைகள் சரியாக இருப்பதில் சந்தோஷம்.
அடிக்கடி வாருங்கள்.

Related Posts with Thumbnails