பெரும்பான்மையான கேள்விகள் இலக்கியமும் இலக்கியம் சார்ந்ததுமானது. .
வேண்டுமென்றே சுலபமாகக் கேள்விகள் தயாரிக்கப் பட்டிருக்கின்றன.
பதில்களுக்கு சிரமப்பட வேண்டும் என்றில்லை. கடைசியில் காணபடும் க்ளூக்கள் பதிலை சுலபமாகக் கண்டுபிடிப்பதற்காகவே கொடுக்கப் பட்டிருக்கின்றன. முயற்சித்துத் தான் பாருங்களேன்..
=====================================================================
1) கேள்வி: பிப்ரவரி 28 கல்கி இதழில் பிப்ரவரி 29 என்ற சிறுகதை எழுதியவர் யார் தெரியுமா?
2) கேள்வி: பாம்பு ஏணி படமெல்லாம் இருக்கும் இந்த விளையாட்டில்; என்ன விளையாட்டு?
3) கேள்வி: குருபிரசாத்தின் கடைசி தினம் கதை படித்திருக்கிறீர்களா? யார் எழுதிய கதை அது?
4) கேள்வி: திருக்குறளின் முதல் குரள் நமக்கெல்லாம் மனப்பாடம். குறளின் கடைசிக் குறள் என்ன?
5) கேள்வி: தந்தையைக் குளிர்க் கண்ணாடி (Cooling glass) இல்லாமல் பார்த்தவர்கள் அரிதினும் அரிது. அவரின் திருமகனாரும் குளிர்க் கண்ணாடி. இரண்டு பேருமே எழுத்தாளர்கள். தந்தையாரின் பெயர் என்ன?
6 கேள்வி: முரசொலிக்கட்டும்; நம் நாடு தழைக்கட்டும்; மன்றத்திலே எங்கள் மக்கள் கூட்டம் திரளட்டும்,... என்று தொடர்ந்து பத்திரிகைகள் பெயர்களை எடுத்தாண்ட வசனம் தூக்குமேடை காட்சியில் வரும் திரைப்படம். இந்த படத்திற்கு வசனம் எழுதியது யார்?..
7) கேள்வி: சாணக்கியராக தம் நாடகத்தில் வாழ்ந்து காட்டியவர். .
8) கேள்வி: தமிழின் முதல் சிறுகதையின் பெயர் என்ன தெரியுமா?
9) கேள்வி: இராம காதையில் அனுமனின் சாகசங்களுக்காகவே ஒதுக்கப் பட்ட காண்டம் எது?
10) கேள்வி: இந்த நாவல் முழுதாக கல்கி அவர்களால் எழுதப்படவில்லை. தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவரின் நாவல் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவர் மகள் நாவலை முழுதாக எழுதி முடித்தார். அந்த நாவலின் பெயர் என்ன?
11) கேள்வி: பாக்கியம் ராமசாமி என்பது புனைப்பெயர் என்று தெரியும். அவரது இயற் பெயரின் 'ஜ' எந்த ஊரைக் குறிக்கிறது?..
12) கேள்வி: மறக்க முடியாத இந்த மராத்தி எழுதாளரின் நிறைய கதைகள் தமிழில் வெளியாகி பின் மராத்தியில் மொழிபெயர்க்கப் பட்ட அதிசயம் நடந்திருக்கிறது. இவரது பிரபல நாவலகளில் ஒன்று யயாதி. யார் அவர்?
13) கேள்வி: இவருக்கு 2015 ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அளிக்கப்படடது. திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு முக்கிய தெருவை நிலைக்களனாகக் கொண்டு இவர் நிறைய எழுதியிருக்கிறார். அந்தத் தெருவின் பெயர் என்ன?
14) கேள்வி: போர்க்களத்தில் 'இன்று போய் நாளை வா' என்று தன்னைக் குறித்துச் சொன்னதை நினைத்து நினைத்துத் துடித்தவன்.
15) கேள்வி: அந்தக் காலத்திலேயே வானவூர்தி இருந்தது என்பதற்கு அடையாளமாகத் திகழ்வது இந்த ஐம்பெருங்காப்பிய படைப்பு.
க்ளூக்கள்:
1) காளை ராசி 2) வீடு பேறு 3) கதை சொன்ன வாத்தியார் 4) ஊடுதலும் கூடுதலும்
5) சங்கர்லால் 6) தென்றல் 7) ஒரு திரைப்படத்தின் பெயரில் ஓரளவு ஒளிந்துள்ளவர் 8) மரங்களுக்கு அரசன் 9) அழகு 10) விண்மீன் 11) நீர்
12) கா.ஸ்ரீ.ஸ்ரீ. 13)ரோடு 14) தசமுகன் 15) பணம்-- ஆங்கிலத்தில்.
-------------------------------------------------------------------------------
1) நீங்களே சுதந்திரமாக மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளலாம்.
2) எல்லா விடைகளும் சரியென்றால் ஆஹா..
3) பத்து விடைகள் சரியென்றால் பிரமாதம்
4) எட்டு விடைகள் சரியென்றால் பரவாயில்லையே..
5) அதற்குக் கீழே இந்த மாதிரி இன்னும் நாலு வினாத்தாட்கள் முயற்சி செய்தால் பிரமாதத்திற்கு வந்து அதற்குப் பின் ஆஹா-வை அடையலாம். சலிக்காது முயற்சி செய்யுங்கள்.
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment