மின் நூல்

Monday, September 30, 2019

மனம் உயிர் உடல்

10.  தியானம் வேண்டுவோருக்கு


காதலர்களுக்கு மட்டுமல்ல கவிஞர்களுக்கும் இதயம்  தான் மனதைக் குறிப்பிட்டுச் சொல்லும் சொல்லாகப் போயிற்று.  இதயம் என்பது இரத்த சுத்திகரிப்பு நிலையம்.  அவ்வளவு தான் அதன் வேலையே.  இருந்தும் என்ன காரணத்தினாலோ  அல்லது  காரணம் ஏதுமில்லையாயினும்  எப்படியோ இதயம் மனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொல்லாயிற்று. 

மனத்திற்கும் இதயத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை என்பதினால் அறிவியலின் வழிகாட்டலில் மனம் என்பதின் இருப்பிடம் இதயம் அல்ல என்ற துணிபிற்கு வருவோம்.

சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில்  'தியானம் சொல்லித் தரவங்க  மனசு புத்தி இரண்டும் வெவ்வேறுன்னு சொல்றாங்க' என்று  மனம்--புத்தி பற்றி நெல்லைத் தமிழன் பிரஸ்தாபித்திருக்கிறார்.  மனம், புத்தி இரண்டையும் ஒரே புள்ளியில் நிறுத்த முடிந்தால் தியானத்தில் நாம் முழுமையாகி விட்டோம் என்று அர்த்தம் என்றும் சொல்லியிருக்கிறார்.

மனம் என்பது  தான்  என்ன?..  மனம் என்பது மூளைப் பகுதிக்குச் சொந்தமான  சதைக் கோளம்.  மடிப்பு மடிப்பாக இருக்கும் சதைப்  பிரதேசம்.  மனம் என்பதனை  MIND  என்ற ஒரே சொல்லில்   அடைத்து விட்டனர்    மேல் நாட்டினர்.     ஆனால் நாமோ   மனம் செயல்படும்   செயல்பாடுளை விரிவாக்கி   மனம், புத்தி, சித்தம் என்றெல்லாம் வேறு படுத்திச் சொல்கிறோம்.  அதனால் மனம், புத்தி என்பதெல்லாம் வெவ்வேறல்ல என்று தெளிவோம்.  விரல்கள் என்பவை கை  என்ற  ஒற்றைச் சொல்லில் அடக்கம் மாதிரி.

சரி,  தியானம் என்றால்  தான் என்ன?..                           

சதா எதையாவது நினைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது மனத்தின்  இயல்பு.  போஷாக்கான மனதிற்கு அறிகுறியும் அது தான்.   யானை நின்று கொண்டிருக்கும் பொழுது லேசா அசைந்து கொண்டே இருக்குமே அதைப் போல.   யானை அப்படி அசையவில்லை என்றால் தான் கோளாறு என்பது போல.

அந்த அல்லாட்டலை ஒருமுகப்படுத்தும் முயற்சியைத் தியானம் என்று சொல்கிறார்கள்.  ஒருமுகப்படுத்துதல் என்ற பெயரில் மனத்தின் அந்த அசைவோட்டத்தை நிறுத்துவதல்ல.  இங்கு ஒருமுகப்படுத்துதல் என்பது எண்ணத்தை.  பல்வேறு விஷயங்களில் அலைபாயும் எண்ணத்தை சீர்படுத்திக் கூர்மையாக்குவது.    பஞ்சை தரையில் வைத்து விட்டு  அதற்கு சற்று மேலாக ஒரு குவிலென்ஸை அதன்  மேல் சூரிய ஒளி படும்படி பிடித்தால் என்னவாகும்?..   சூரிய ஒளியின் வெப்பம் லென்ஸால் ஒருமுகப்படுத்தி குவிக்கப்பட்டு அந்த வெப்பம் பஞ்சைத் தாக்கி பஞ்சு பற்றி எரியும்.  தியானத்தில் நடப்பதும் இது தான்.

உள்ளிழுக்கும், வெளிவிடும் சுவாசத்திற்கும் மன அமைதிக்கும் சம்பந்தம் இருப்பதாக தியானத்தைப் பரிந்துரைப்போரின் கருத்து.   அந்த மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் பொழுதும் வெளிவிடும் பொழுதும்  வேகமாக அல்லது மெதுவாக என்று இல்லாமல் ஒரே சீராக ஆக்கிக் கொள்வது தான் தியானத்தின் முதல் படி.

 எதாவது ஒன்றின் மீது மனதை நிலைப்படுத்தும் பொழுது மனம் ஒருமுகப் படுகிறது.   அப்படி நிலைப்படுத்துவதற்கு பலருக்கு  கடவுள் கிடைத்திருக்கிறார்.

தியானம் என்பது ஏதோ கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் மாதிரி ஒரு தவறான புரிதல் பலரிடம் உண்டு.  கடவுள் தயவு வேண்டாதவர்கள்  தங்களுக்கு மிகவும் பிரியமான அல்லது மரியாதை கொள்கிற எதை வேண்டுமானலும் தீட்சண்யமாக மனத்தால் ஓர்ந்து மனதை ஒருமுகப்படுத்தலாம்.  தியானிக்க ஒரு புள்ளியில் ஆழ்ந்து கவனம்  கொள்ள வேண்டும்.  அவ்வளவு தான்.    தியானத்தின்  மீதான அதீத ஈடுபாட்டில் நாளாவட்டத்தில் நம்மை மீறிய ஒரு சக்தியின் மீது ப்ரேமை ஏற்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல.   :))

எதை வேண்டுமானாலும் கடவுளுடன் பிணைத்து அறிவு பூர்வமான விஷயங்களை ஒதுக்குவது  தமிழக இன்றையச் சூழலில் வெகு சுலபமாக இருப்பதால் ஒதுக்குபவர்களிடமிருந்து எப்படி ஒதுங்க வேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருந்தது.  அடுத்த வெறுப்பு சமஸ்கிருத வார்த்தைகள் மீது.   தியானம் என்ற சமஸ்கிருத  வார்த்தை பிடிக்கவில்லை அல்லது உச்சரிக்க அசெளகரியமாக இருக்கிறது என்றால் 'சும்மா இருத்தல்'  என்று கொள்ளுங்கள்.

'சும்மா இரு' என்பது முருக பெருமான் குருவாக அருணகிரியாருக்கு வாய்த்து உபதேசித்த தெய்வ வாக்கு என்பார்கள்.

'சும்மா இருக்கும் திறம் அரிது' என்று தாயுமானவரே சொல்வார்.

'சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்' என்பது பட்டினத்தார் சொன்னது.

'சும்மா இருக்கும் சுகம்' என்று அனுபவித்துச் சொல்வார் வள்ளலார்.

சுயமாகவே  மனிதனின் இயல்பு  சாந்தியும் சந்தோஷமும் ஆகும்.  இந்த தனித் தன்மையான அந்த இயல்பு தான்  அதன் சொரூபமும் கூட.  இயல்பாக இருக்க வேண்டிய அவனது சாந்தியையும், சந்தோஷத்தையும் அனாவசியமான சிந்தனைகள் கலைக்கின்றன.  அல்லது ஒரு  மூடு திரை போட்டு மறைத்து அவ்வப்போது  சிந்தையில் உருவாகும் எண்ணங்களுக்கு ஏற்ப  இயல்பான இயல்பை  மாற்றி  கூத்தாட வைக்கின்றன.   அந்தக் கூத்தாடல்களுக்கு ஏற்ப உள்ளிழுக்கும் வெளிவிடும் மூச்சுக் காற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  அந்த மாற்றம்  தலையிலிருந்து கால் வரை பரவி விரவிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்ட சீர்மையில் பாதிப்பு உண்டாக்குகிறது.   இரத்த ஓட்டத்தில் ஏற்படும்  மாற்றப் போக்கு இதயத்தின் லப்டப்பிலும் பிரதிபலிக்கிறது.

சும்மா இருத்தலான   தியானம் என்பது  இன்றைக்குப் பிரபலமாக இருக்கும்  வார்த்தைப் பிரயோகமான யோகா அல்ல.    ஆசனங்களும்,  உடற்பயிற்சி சார்ந்த கைகால் அசைப்புகள் இவையெல்லாம் தியானம் அல்ல.  தியானம் என்பது  இவற்றையெல்லாம் விட தீவீரம் கொண்டது.    தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)

19 comments:

G.M Balasubramaniam said...

/
தியானம் என்பது ஏதோ கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் மாதிரி ஒரு தவறான புரிதல் பலரிடம் உண்டு. .\ எதையும் கடவுள் சம்பந்தப்பட்டதாகவே பேசுவோரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்

டிபிஆர்.ஜோசப் said...

அருமையா சொல்றீங்க சார். இத பத்தி நானே எழுதணும்னு நினைத்ததுண்டு. ஆனால் இந்த அளவுக்கு விரிவாக அதே சமயம் எளிமையாக எழுதியிருக்க முடியுமா எனறு தெரியவில்லை.

நெல்லைத்தமிழன் said...

மனம், புத்தி இரண்டும் வெவ்வேறு என்றுதான் நான் நினைக்கிறேன். மனது அலைபாயும். எது அதனை ஒரு புள்ளியைநோக்கித் திருப்பும்? அதே மனதா?

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ GMB

கடவுள் சம்பந்தப்படாதவைகளைப் பற்றிப் பேசுவோர் இந்த பூவுலகில் இல்லவே இல்லை ஆதலால், இவர்கள் தான் கடவுள் சம்பந்த்ப்பட்டதாக பேசுவோர் என்று யாரையும் தனிப்படக் குறித்துச் சொல்ல முடியவில்லை, சார். என்ன சொல்கிறீர்கள்?..

நான் சொல்ல வந்தது வேறே. தியானம் என்று பேசப்பட்டதாலே இது ஏதோ கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம், நமக்கு சம்பந்தமில்லை என்று பலர் ஒதுங்கி விடுகிறார்கள் என்பதற்காகச் சொன்னேன்.

ஜீவி said...

@ டி.பி.ஆர். ஜோசப்

வாங்க, ஜோசப் சார்! தங்கள் வாசிப்புக்கு நன்றி. இனி தொடர்ந்து ஒருவரை ஒருவர் வாசித்துக் கொள்ளலாம். நன்றி, சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

மனம், புத்தி என்று இந்த இரண்டையும் வெவ்வேறு (உருப்புகள் மாதிரி) என்று நமக்குக் கற்பிக்கப்பட்டதால் ஒவ்வொன்றும் ஒரு காரியத்தைச் செய்கிற மாதிரி உங்களுக்குத் தோன்றுகிறது. அவ்வளவு தான்.

மனதை ஒரு டி.வி.ரிமோட் மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு பட்டனும் ரிமோட் என்ற மொத்த உருவில் அடக்கம் தானே?..

என்னளவில் மனத்தின் ஆற்றலுக்கு மிகவும் மரியாதை கொடுக்கிறேன். ஒரு மனிதனைப் பிரதிநிதித்துவப் படுத்துவதே அது தான் நினைக்கிறேன்.

அதனால் தான் மனதை கூறு கூறாகப் பிரித்துப் பார்க்க என் மனம் ஒப்பவில்லை.

நெல்லை, புத்தகங்களில் வாசிப்பதை அறிவதை மனசில் ஓட்டிப் பாருங்கள். உரையாசிரியர்கள், கட்டுரையாளர்கள் (நான் உட்பட) சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளாதீர்கள். மனத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகள் பற்றி எண்ணிப்பாருங்கள்.
எந்த சந்தேகத்தையும் நாம் நமக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு உண்மையைத் தேடி அறியலாம். சரியா?..

வல்லிசிம்ஹன் said...

ஜீவி சார்,
தியானம் பலவிதங்களில் மனதுக்கு வடிகாலாக
இருக்கிறது.
தூக்கத்தில் திடீரென்று விழிப்பு ஏற்பட்டால்
மனதைத் தியான வழியில் செலுத்தினால்
அமைதி தானாக வந்தடைகிறது. யானையை
அடக்கும் பட்டு அங்குசமாக அதைப் பயன் படுத்தலாம்.
மிக அருமையாகச் சிந்திக்கக் கொடுத்திருக்கிறீர்கள்.

மனம் இரண்டு வழியிலும் சிலசமயம் பேசும். அப்போதுதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

சும்மா இருத்தலின் கஷ்டம் பற்றி பல கதைகள் உண்டே...


மூச்சுக்கும் தியானத்துக்கு உள்ள சம்பந்தம் பற்றிச் சொல்லியிருப்பது சிறப்பு.  சாதாரணமாக நான் கோபம் வரும்போது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வேன். நிதானமாக மூச்சை விட முயற்சிப்பேன்.  தண்ணீர் எடுத்து நிதானமாக குடிப்பேன்.   சின்ன வயதில் எங்கோ படித்தது!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தியானம் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பால் என்பதே உண்மை.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

தியானத்தால் உடலையும், பிராணனையும் சீர் படுத்திக் கொள்ளலாம்.
தியானத்தால் மன அமைதி, மனஒருமுகப்பாடு கிடைக்கும். மனம் கோடான கோடி எண்ணங்களை வைத்துக் கொண்டு அல்லாடுகிறது.
அதை சரி செய்ய தியானம் கை கொடுக்கும்.

வே.நடனசபாபதி said...

//ஆசனங்களும், உடற்பயிற்சி சார்ந்த கைகால் அசைப்புகள் இவையெல்லாம் தியானம் அல்ல. தியானம் என்பது இவற்றையெல்லாம் விட தீவீரம் கொண்டது.//


“நாம் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் போது நம்மை அறியாமலே நாம் மூச்சை நன்கு உள்ளிழுக்காமல் மேலோட்டமாகச் சிறு மூச்சுகளாக இழுத்து விடுவோம். நெஞ்சில் பாரமாய் உணர்வோம். நம்முடைய உடலும் மூச்சும் இப்படி எளிதாக, இயல்பாக இயங்க முடியாத போது நம் எண்ணங்களும் செயல்களும் கூட பாதிக்கப்படுகின்றன.
நம் எண்ணங்களையும் செயல்களையும் நிதானப்படுத்தினால் நம் செயல்களும் விளைவுகளும் நன்மையாக அமையும்.
நிதானமான, ஆழ்ந்த, மூச்சு விடுதல் மன உளைச்சலினால் ஏற்படும் தவறான உடல் மாற்றங்களைத் தவிர்க்க உதவுகிறது..
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி இரத்த ஓட்டத்தை விரைவாக்கித் தசைகளைத் தளர்த்தி உடலையும், மனத்தையும் இறகுபோல இலகுவாக்கி சமன் படுத்துகிறது.
.உடலையும் மனத்தையும் இறுக்கம் தளர்த்தி இலகுவாக்கக் கூடிய பயிற்சிகளில் மூச்சுப்பயிற்சி மிக எளிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.”

என்கிறார்கள் மருத்துவர்கள்.

தங்களின் கருத்துப்படி மூச்சுப் பயிற்சி தியானத்தில் சேர்ந்ததா இல்லையா என்பதை விளக்க வேண்டுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

மனம் என்பது தான் என்ன?.. மனம் என்பது மூளைப் பகுதிக்குச் சொந்தமான சதைக் கோளம். மடிப்பு மடிப்பாக இருக்கும் சதைப் பிரதேசம். மனம் என்பதனை MIND என்ற ஒரே சொல்லில் அடைத்து விட்டனர் மேல் நாட்டினர். ஆனால் நாமோ மனம் செயல்படும் செயல்பாடுளை விரிவாக்கி மனம், புத்தி, சித்தம் என்றெல்லாம் வேறு படுத்திச் சொல்கிறோம். அதனால் மனம், புத்தி என்பதெல்லாம் வெவ்வேறல்ல என்று தெளிவோம். //

ஆமாம். இரண்டுமே மூளைக்குள்தான். அதன் செயல்பாட்டில்தான் வித்தியாசம். நம் மூளையின் மேற்பரப்இல் உள்ளது இப்போதியய செயல்கள். சிலவை ஆழ்மனதில் பதிந்திருக்கும் . இவை எல்லாம் முட்டி மோதும் போதுதான் நம் உள் மனம் ஒன்று சொல்லும்...வெளி மனம் வேறு சொல்லும்...

அன்பு பாசம் எல்லாம் மனம் என்று பேசப்படுவது ஆனால் அவையும் நம் வளர்ப்பு, அனுபவம், நம் கற்றல் இவை சார்ந்து மூளையின் ஒரு பகுதியில் பதிவது...அதன் படிதான் நாம் இயங்குகிறோம்...

மனம் பிறழ்பவர்கள், சித்தம் கலங்குபவர்கள் எல்லாமே மூளைக்குள் நடப்பவைதான் இதில் சைக்கியாற்றி, நியூரோ எங்கு வித்தியாசப்படும் என்பது பற்றிப் பேச நிறைய உண்டு...

உங்கள் தொடர் முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன் அண்ணா...

இப்போதைக்கு இவ்வளவே..

கீதா

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

வல்லிம்மா. தொடர்ந்து வாருங்கள். புதுசாக ஏதாவது தெரிந்தாலோ, தெரிந்ததைத் தவறாக வியாக்கியானப் படுத்தியிருந்தாலோ சொல்லுங்கள். அதுப் பற்றி அலசலாம்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

//தியானம் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பால் என்பதே உண்மை..//

வானம் வசப்பட்டால் அது கைகெட்டிய தூரமாகும் என்பதும் உண்மை, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

//அதை சரி செய்ய தியானம் கை கொடுக்கும்.//

நான் யார் என்று தெரிந்து கொள்ள தியானம் வழி காட்டாதா, மோமதிம்மா?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//சும்மா இருத்தலின் கஷ்டம் பற்றி பல கதைகள் உண்டே...//

அத்தி வரதரை ஆயிரத்தெட்டு கஷ்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக தரிசித்து விட்டு வந்தவர்கள் பட்ட கஷ்டங்களை மறந்தே போனார்கள், அன்லது அவற்றை சீந்தவே இல்லை என்பதைத் தான் கண்ணாறக் கண்டோமே!

//சாதாரணமாக நான் கோபம் வரும் பொழுது... //

கேட்கும் பொழுதே பயமாக இருக்கிறது. கோபம் வரும் பொழுது காதை செவிட்டாக்கிக் கொள்ளுங்கள். நம்மையல்ல; வேறு யாரோ பற்றி பேசுகிறார்கள் என்று கவனத்தை வேறு பக்கம் -- நமக்கெல்லாம் தான் அடுத்த பதிவு என்று ஒரு அருட் பிரசாதம் இருக்கிறதே-- திருப்புங்கள். கோபம் பஸ்பமாக இதுவே சிறந்த வழி..

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

மருத்துவர்கள் எதைத் தான் சொல்லவில்லை?.. அவர்கள் எதற்கும் பிரிஸ்கிரிப்ஷன் கொடுப்பதில் கில்லாடிகள்! அனுபவ பூர்வமாக மட்டும் எதையும் அப்பியசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்! மன உளைச்சல் என்றால் ஒரு மாத்திரையை வாயில் போட்டு விழுங்குபவர்கள்!

ஆளாளாளுக்கு எத்தனையோ தியானங்கள்!

புராண காலத்து ரிஷிகள் தங்கள் மீது புற்றுமண் பூத்ததே உணர்வற்று தியானம் செய்திருக்கிறார்களே! தியானம் என்பது இந்த காலத்து விளக்கங்கள் மாதிரி அவ்வளவு சல்லிசானதா?...

//தங்களின் கருத்துப்படி மூச்சுப் பயிற்சி தியானத்தில் சேர்ந்ததா இல்லையா என்பதை..//

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?..

தியானம் - மூச்சுப் பயிற்சி
தியானம் + மூச்சுப் பயிற்சி

எல்லாவற்றையும் பார்த்து விடலாம்! சரியா?..

தியானம்

ஜீவி said...

@ தி. கீதா

//ஆமாம். இரண்டுமே மூளைக்குள்தான்.. //

அப்ப, மனம், புத்தி என்று இரண்டு அயிட்டங்களா?

//உள் மனம் ஒன்று சொல்லும்.. வெளி மனம் வேறு சொல்லும்..//

ஹப்பாடி!.. என்ன அவசரம்?.. மெதுவாக வாருங்கள்.. தீர்மானமாகப் பேசலாம்!

Related Posts with Thumbnails