மின் நூல்

Monday, March 15, 2021

மொழி

                                                           9

ங்க இலக்கிய காலம் என்பது கி.மு. 500-லிருந்து கி.பி.200 வரை உள்ள காலப்பகுதியில் உருவான செவ்வியல் தமிழ் இலக்கிய படைப்புகளைக் குறிப்பிடும் கால கட்டமாகும்.  தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்  என்ற நம் வசதிக்காக மூன்றாகப் பிரித்த மன்றங்கள் வளர்த்த தமிழின் மேன்மையான காலம் இது.  

தலைச்சங்க காலத்தில்  சகோதரிகள் போல சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றாய் உறவாடிய மொழிகள் என்றும் அதற்கு ஆதாரங்களாய் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் அதங்கோட்டு ஆசானின் பங்கு, தொல்காப்பிய பாயிரம் சொல்லும் தகவல்கள் என்றெல்லாம்  பார்த்தோமில்லையா?

சமஸ்கிருத -- தமிழ் உறவுகளை சகிக்காத சிலர்  இந்த சரித்திர உண்மைகளை புறந்தள்ளும் முனைப்பில் தலையாவது, இடையாவது,   தமிழ்ச் சங்கம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று தீர்மானமாக மறுத்தனர்.  அதற்கு அவர்கள் சொன்ன காரணம் வேடிக்கையானது.

சங்கம் என்ற வார்த்தை தமிழிலேயே இல்லையாம்.  சங்கம் என்ற வார்த்தையே தமிழில் இல்லாத பொழுது தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆகப்பெரிய கண்டுபிடிப்பாய் மனமறிந்த பொய்யை உண்மை போலச் சொல்லத் துணிந்தனர்.

அதற்கு ஆதாரமாய் தொல்காப்பியத்தையே துணைக்குக் கொண்டது தான் வேடிக்கை.   சங்கம் என்ற வார்த்தையின் முதல் எழுத்து,  'ச' என்ற எழுத்து இல்லையா?..  இந்த 'ச' முதல் எழுத்தாய் இருந்து தொடங்கும் சொற்களுக்கு சில வரையறைகள் உண்டு என்பதற்கு தொல்காப்பிய எடுத்துக்காட்டு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டனர்.

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஒள எனும்  மூன்றலங் கடையே
        
                                           (தொல்காப்பியம்  62)

அ ஐ ஒள என்னும் மூன்று எழுத்துகளோடு சேர்ந்து சகரம் முதலெழுத்தாக வராது.  (உதாரணம்: ச, சை, செள) இந்த மூன்றைத் தவிர்த்தப்  பிற ஒன்பது  உயிர்களுடன் சேர்ந்து முதலெழுத்தாய் வரும் என்பது கருத்து.

சகரக் கிளவி பற்றிய  தொல்காப்பியரின் இந்த நூற்பாவிற்கு 
உரையாக இளம்பூரணர் இரண்டு காரணங்களைச் சொல்வார்:

அ ஐ ஒள -- என்னும் மூன்று எழுத்துக்களோடு சேர்ந்து 'ச' என்ற எழுத்து முதலெழுத்தாக வருகின்ற சூழல்களில் அது சமஸ்கிருத எழுத்தின் பாதிப்பில் இருக்கும் என்பது இளம்பூரணர் கருத்து.  இரண்டாவதாக இன்னொன்றையும் சொல்கிறார் அவர்.  'கடி சொல் இல்லை, காலத்து படினே'  (சொல்லதிகாரம் - 56) என்ற வரியை எடுத்துக் காட்டாகச் சொல்லி அவ்விதிப்படி அவை அமையும்' என்கிறார்.  

நச்சினார்கினியர் கருத்தும் இதுவே.  சட்டி, சகடம் -- ஆகிய சொற்கள்  தமிழ்ச் சொற்களே என்று தன் காலத்து வழக்கில் இருக்கும் சொற்களையும் இவர் எடுத்துக் காட்டுகிறார்.

வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகுமே

                                              (தொல். சொல்லதிகாரம். 5)

என்பதும் தொல்காப்பியர் காட்டிய வழிதான்.

சமஸ்கிருத மொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் வடசொல் என்று தொல்காப்பியரே இலக்கணம் வகுத்து,  சங்கம் என்ற சொல்லின் இருப்பிற்கு நியாயம் வழங்கியிருக்கையில்  முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல  தலைச்சங்கம், இடைச்சங்கம் இவையெல்லாம் இருந்ததே இல்லை, எல்லாம் நம் கற்பனை என்றால் எப்படி?..  அந்த இரண்டு சங்கமும்  கடற்கோளில் மூழ்கிப் போயிருக்கலாம்.  ஆனால் அந்த இரண்டு சங்கங்களிலும் படைக்கப்பட்ட இலக்கியங்கள், ஆகச்சிறந்த தொல்காப்பியம் இருக்கிறதே என்றால்...  இருக்கும் அந்த இலக்கியங்களின் தொன்மை குறித்து  கேள்வி எழுப்புவதில் கொண்டு போய் முடிக்கிறார்கள்.

ஆயிரம் இருந்தும் என்ன,  சங்கம் என்ற ஒன்று இருந்ததே இல்லை, அது முழுக் கற்பனை என்ற வாதததை முன் வைத்கும் அளவுக்கு சமஸ்கிருத ஒவ்வாமை கொண்டிருந்தது உறுத்தலாகத் தான் இருக்கிறது.

புறப்பொருள் வெண்பா மாலை என்றொரு நூல் உண்டு.  அந்த நூலில் தமிழ்க்குடியின் மூத்த வரலாற்றைக் கொஞ்சமே உயர்வு நவிற்சியுடன் குறிப்பிடும் பாடல் ஒன்றுண்டு.

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர்  --  கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,  வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

                  (பு.வெ. மாலை -- கரந்தைப் படலம்)

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,  வாளொடு முன் தோன்றிய மூத்த குடி இது'  என்ற குரல் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்து அரசியல் மேடைகளில் ஒங்கி ஒலித்த குரல்...  

அந்தக் காலம் வேறே!  இந்தக் காலம் வேறே!  இந்தக் கால மாற்றத் கோளாறுகளையும் இந்தப் பாடலின் முதல் வரி படம் பிடித்துக் காட்டுவது இன்னும் அதிசயம்! ஆதித்தமிழ் மொழிக்கு புகழ்மிகு புலவர்கள் சூட்டிய கிரீடங்களான  சங்க இலக்கியக்களை பயிலாமலும்,  பயின்ற சிலரும் மறந்தே போவோம் என்று சூளுரைத்த மாதிரி மெளனம் பயில்வதும்  மனம் போன போக்கில் மாற்றி வரலாற்றை திசைதிருப்ப முயல்வதுமான காலம் இது!  

சங்க இலக்கியங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழும்பிய தமிழ் மொழியின் இயல்பான வளர்ச்சி பிற்காலத்தில் எப்படியெல்லாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்கலாம்.  

அகப்பொருளையும் இலக்கண வரையறைகளுக்கு உள்ளடக்கிய கி.பி. காலத்து நூலான இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு அக்காலத்துப் புலவரான நக்கீரர் என்பவர் எழுதிய உரையில் மூன்று சங்கங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.   

ஒரு பருந்துப் பார்வையில் சங்க காலம் பற்றிய அடிப்படை குறிப்புகளை நம் நினைவில் கொள்வோம்:

தலைச்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில்செயல்பட்டது.  தலைச் சங்கத்தைத் தோற்றுவித்து பெருமை கொண்டவன்  காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன்.   தலைச்சங்க கால கட்டத்தின் இறுதியில் ஆட்சி புரிந்தவன்  கடுங்கோன் என்ற பெயரிய பாண்டியன்.  இந்த நீண்ட காலத்தில் ஏறத்தாழ 449 புலவப் பெருந்தகைகள் மன்றத்தை அலங்கரித்ததாகத் தெரிகிறது.

அக்காலத்து முக நாரை,  முதுகுருகு, கனரியாவிரை, பரிபாடல் போன்ற நூல்களை  பற்றி பிற்காலத்து இறையனார் களவியல் தெரியப்படுத்துகிறது. தலைச்சங்க காலத்து முக நாரை என்ற இசைப் பற்றிய நூல் தான் தமிழின் முதல் படைப்பாக்கம். 

 அகத்தியரின்  அகத்தியம் தலைச்சங்க காலத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இலக்கண நூல் .  இடைச்சங்க காலத்தில் அகத்தியத்தோடு தொல்காப்பியமும் சேர்ந்து கொள்கிறது.   

காற்று வந்ததும் கொடி அசைந்ததா, இல்லை,  கொடி அசந்ததும் காற்று வந்ததா போன்ற சிக்கலான கேள்வி,  இலக்கியம் தோன்றியதும் தோன்றிய நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டதா,  இல்லை  இலக்கண வழி காட்டல்களின்  அடிப்படையில் இலக்கியம் உயிர்ப்பு கொண்டதா என்பது.
இலக்கண அடிப்படையில் இலக்கியம் உருவானதாகக் கொள்வோம்.

ட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் தான் சங்க நூல்களில் காலத்தால் முற்பட்டது.  தலைச்சங்க காலத்து பழம்பெரும் சொத்து இது.  

'முதலூழி யிருதிக்கண் தென் மதுரையகத்து  தலைச்சங்கத்து அகத்தியனாரும்,  இறையனாரும்,  குமர வேளும், முரஞ்சியூர் முடி நாகராயனாரும், நிதியின் கிழவனும்  என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்பர்  எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும்,  முதுகுருகும், களறியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து..' என்ற அடியார்க்கு நல்லாரின் உரை பரிபாடலின் தலைச்சங்க காலத்துத் தொன்மையை உரைக்கும். 

ஆயிரம் விரித்த அணங்குடை  அருந்தலை
தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேயுயிற் பணைமிசை எழிற்வேழம் ஏந்திய
வாய் விளங்கும் வளை நாஞ்சில் ஒருகுழை ஒருவனை...

-- என்று தொடங்கும் 70 பாடல்களைக் கொண்ட பண்ணிசை இலக்கியம் பரிபாடல்.    பரிகள் கால்களைப் பரிந்து விரைவது போல பண்ணிசை வரிகளால் பாக்கள் ஆனதால் பரிபாடல் என்று காரணப் பெயர் பெற்றது.  'பாய் பரிப் புரவி'  என்று மதுரைக் காஞ்சி  பரிபாடலின் புகழ் பாடும்.

பரிபாடல் அமைந்த அழகைப் பார்ப்போம்:

திருமாலுக்கு எட்டு பாடல்கள்,  மால் மருகனுக்கு 31 பாடல்கள், கொற்றவை காளி தேவிக்கு பாடல் ஒன்று, வையை நதிக்கு 26 பாடல்கள், பழம் பெருமை கொண்ட மதுரைக்கு நான்கு பாடல்கள் மொத்தம் எழுபது பாடல்கள் கொண்ட பழம்பெரும் நூலென்று இளையனார் களவியல்  எடுத்தோதும்.

அழிந்து படும் நிலையிலிருந்த ஓலைச்சுவடி பரிபாடல் பாடல்களை ஐயந்திரிபற சோதித்து 1889-வாக்கில் அச்சு வடிவம் ஏற்றியவர் தன்னேரில்லா தமிழர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள்.


(தொடரும்)

11 comments:

ஸ்ரீராம். said...

படித்து வருகிறேன்.  இதில் இடையில் பேச ஒன்றும் இல்லை என்பதால், ஆனால் ஒரு வாசகன் வந்து படித்துப் போனான் என்கிற தேவைகள் தெரியவேண்டுமே என்று தகவல் சொல்லிச் செல்கிறேன்.  அடுத்த பகுதிக்காய்க் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

இந்தப் பகுதி இனி வரப் போகிற பகுதிகளுக்கு முன்னுரை மாதிரி. இந்தப் பகுதியில் தான் அதற்கான அடித்தளம் போட்டிருக்கிறேன். நான் சொல்ல வருவது புரிகிற மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரிவர இந்தப் பகுதியில் வெளிப்படவில்லை என்றால் சொல்லுங்கள். விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜீவி said...

இந்தப் பகுதி இனி வரப் போகிற பகுதிகளுக்கு முன்னுரை மாதிரி. இந்தப் பகுதியில் தான் அதற்கான அடித்தளம் போட்டிருக்கிறேன். நான் சொல்ல வருவது புரிகிற மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரிவர இந்தப் பகுதியில் வெளிப்படவில்லை என்றால் சொல்லுங்கள். விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜீவி said...

இந்தப் பகுதி இனி வரப் போகிற பகுதிகளுக்கு முன்னுரை மாதிரி. இந்தப் பகுதியில் தான் அதற்கான அடித்தளம் போட்டிருக்கிறேன். நான் சொல்ல வருவது புரிகிற மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். அது சரிவர இந்தப் பகுதியில் வெளிப்படவில்லை என்றால் சொல்லுங்கள். விளக்கமாகச் சொல்கிறேன்.

ஸ்ரீராம். said...

அப்போது வேண்டுமானால் பின்னர் மறுபடி இந்தப் பகுதியை வந்து படித்துக் கொள்ளலாமே...

ஜீவி said...

சொல்லலாம் தான். ஆனால் சிறந்த வாசகரான உங்களிடமிருந்து அபிப்ராயம் பெறலாம் இல்லையா? அதற்காகத் தான்.

ஜீவி said...

சங்க இலக்கியங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழும்பிய தமிழ் மொழியின் இயல்பான வளர்ச்சி பிற்காலத்தில் எப்படியெல்லாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்கலாம்.

-- இது தான் இந்தத் தொடர் எழுதுவதற்கான நோக்கம், ஸ்ரீராம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சங்க இலக்கியங்களைப் படிக்கும் ஆவலை மிகுவித்தது இப்பதிவு. தொடர்ந்து வாசிக்கிறேன்.

ஜீவி said...

Dr. Jambulingam, Asst. Regtr. (Retd) Tamil University.

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி, ஐயா. நன்றி.

தனிமரம் said...

தொடருங்கள்.

ஜீவி said...

@ தனிமரம்

ஊக்கம் அளிப்பதற்கு நன்றி. தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails