நாஞ்சில் நாடனும் ஒரு பாம்புக் கதை எழுதியிருக்கிறார்.
பாம்பு கதையைத் தீண்டியதா, கதை பாம்பைத் தீண்டியதா என்று லேசில் கண்டுபிடிக்க முடியாத அழகான கதை அது.
'காலக்கணக்கு'ன்னு கதைக்குப் பெயர். ஆற்றங்கரையை அடுத்திருந்த தோப்பு, வயல் பற்றி, வயலில் விளையும் பயிர்கள் பற்றி, இயற்கையின் எழில் பற்றி என்று கதையில் இடையிட்டு வரும் அளவான வர்ணனைகளுக்கு இடையே பாம்பு ஊர்தல் போன்று கதையும் சரசரவென்று நகர்கிறது.
"யப்பா.. பாம்பு.. யப்பாவ் பாம்பு..." என்றான்.
"எங்கேலே.." என்றவாறு ஓடி வந்தார்.
முன்பு கண்டதோ, அதன் கூடப்பியந்துகளில் ஒன்றோ தெரியவில்லை. இரண்டு சாண் நீளம் இருக்கும். சங்கு சக்கரம் தெரிந்தது. மண்வெட்டிப் படத்தின் வெளியே சீறியது. குட்டிச் சீறல்.
ஓடி விலகி நின்று கொண்டு, அதன் தலையில் போட பெரிய கல்லொன்று தேடினான். காணோம். ஓரத்தில் நின்ற பூவரசின் கம்பொன்றை ஒடிக்கப் போனான்.
"தள்ளி நின்னுக்கலே.. மம்பிட்டியை எதமா வாங்குனா ஓடிரும்.."
"நிண்ணுப்பா.. கொண்ணூரலாம்.."
"வேண்டாண்டா.. வால்லதான் லேசாப் பட்டிருக்கும். பொழச்சுக்கிடும்."
"நல்ல பாம்பை அடிச்சு கொல்லாம விடப்பிடாதுப்பா.."
"நாம வேணும்ணாடா செய்தோம்? ஒண்ணும் செய்யாது.
நீ அங்கணயே நில்லு.. பயப்பிடாம.."
இப்படியாக மகனுக்கும் தந்தைக்கும் நடக்கும் உரையாடலில் பத்தாவது படிக்கும் மகனின் பயத்தையும், தந்தையின் பாம்பு பற்றிய இரக்க மனநிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறார். அம்மா சாபக்குற்றம் என்று தீவிரமாக நம்புகிறாள். எப்படியும் ஆவணி மாத ஞாயிறுகளில் விரதம் இருக்க வேண்டும் என்கிறாள். கோயிலுக்குப் போய் நாகூருக்கு உப்பும் நல்ல மிளகும் போட்டு நாகப்பனுக்கு பாலூற்ற வேண்டும் என்கிறாள்.
இந்த நம்பிக்கைகளுக்கு இடையே 'இந்த ஆவணிக்கு ஞாயிறு நான்கா, ஐந்தா என்று காலண்டரில் பார்க்க வேண்டும்' என்ற நினைப்புகளின் வீச்சுக்கு நாஞ்சில் நாடன் உயிர் கொடுத்திருப்பார் பாருங்கள், அற்புதம்!..
"சனிக்கிழமை விரதம் இருந்தா பாம்பு வராதாப்பா?"
"பாம்பு என்னடா செய்யப்போகு?.. அரணை, ஓந்தான், எலி போல அதுவும் ஒரு சீவராசி. வயக்காட்டிலே கெடந்தா நமக்கு நல்லது தான். எலி உபத்திரவம் இருக்காது. அது வழிக்கு நாம போகலேண்ணா அது நம்ம வராது. .."
"பயமா இருக்குலாப்பா?.."

No comments:
Post a Comment